November 23, 2005

தலிபான் தீவிரவாதிகள் வெறிச்செயல் : இந்தியர் படுகொலை



இந்திய நாட்டைச் சேர்ந்த டிரைவர் மணியப்பன் என்பவரை ஆப்கானி°தான் தலிபான் தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தலிபான் தீவிரவாதிகளின் வெறிச்செயல் இந்திய உள்ளங்களை மட்டுமல்ல; உலக மக்களின் நெஞ்சங்களையும் அதிர்வடையச் செய்துள்ளது.


தலிபான் இயக்கம் ஒரு மதவாத இயக்கம், மத அடிப்படையில் இயங்கக்கூடிய மத அடிப்படைவாத இயக்கம். இவ்வியக்கத்தின் நோக்கமே! மத அடிப்படையிலான ஆட்சி என்பதே இவர்களின் குறிக்கோள்: இவர்கள் ஆப்கானி°தானில் ஆட்சியில் இருந்தபோது உலகப்புகழ்பெற்ற பாமியான் புத்தர் சிலைகளைக் கூட வெடி வைத்தும், பீரங்கிகளைக் கொண்டும் தாக்கி அழித்தவர்கள். மதச் சகிப்புத் தன்மையோ அல்லது சுதந்திர சிந்தனைகளையோ கிஞ்சிற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஆப்கா°தானில் உள்ள இ°லாமிய சகோதரிகளின் பாதங்கள் கூட தெரியக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகளை விதித்தவர்கள்.


இத்தகைய மத அடிப்படைவாதிகளுக்கு மக்களின் உயிர்கள் மிக துச்சமானது. இதை நாம் இந்திய நாட்டிலும் கண்டோம். ஆர்.எ°.எ°. - வி.எச்.பி. - பஜ்ரங்தள் - சிவசேனா - பா.ஜ.க. போன்ற மதவாத இயக்கங்கள் இந்திய நாட்டில் இ°லாமியர்களின் புனித °தலமான பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதையும், அதேபோல் குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடியதையும் இதயமுள்ள இதயங்களில் இருந்து இன்னம் அகல வில்லை.


இன்றைக்கு அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகலாவிய போர்” என்ற பெயரில் போராடுவதாக கூறிக் கொண்டு எண்ணெய்வள நாடுகளை ஆக்கிரமித்து வருவதையும், மறுபக்கம் சங்பரிவார் - தாலிபான் - போன்ற மனித கொலைகளைப் புரியும் பயங்கரவாதிகளோடு கொஞ்சிக்குலாவுவதையும் உலக மக்கள் நன்றாகவே அறிந்து வருகிறார்கள்.


நமது கருத்தியல் போர் மக்களை கொல்லும் இத்தகைய மதஅடிப்படைவாதிகளுக்கு எதிரானதாக அமையட்டும்! மதச்சார்பின்மை - மனிதநேயம் - சுரண்டலுக்கு எதிராக தொடர்ச்சியான கருத்தியல் போரை நடத்துவதன் மூலம் மட்டுமே இவர்களின் கருத்தாக்கத்தை வேறோடு கிள்ளியெறிய முடியும்!

6 comments:

முத்துகுமரன் said...

தலாபான்களின் இந்த செயல் கடும் கண்டணத்திற்குரியது. அடிப்படைவாதம் உலகின் மூலையில் இருந்து வந்தாலும் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்கப்பட வேண்டும்...

மாற்று மதத்தவர்களிடையே பரஸ்பர புரிதல்கள், மற்றவர் நம்பிக்கைகளை மதிக்கும் பாங்கு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்க்கிற போதுதான் இது போன்றவற்றை வேரடிமண்ணோடு சாய்க்க வேண்டும்......


உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் வருகிறேன். நல்ல பதிவுகளாகத்தான் இருக்கின்றது. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்........

ENNAR said...

//இந்திய நாட்டைச் சேர்ந்த டிரைவர் மணியப்பன் என்பவரை ஆப்கானிஸ் தான்//
செல்வப்பெருமாள், அந்த டிரைவர் பெயர் ராம்குட்டியில்லையா?
நன்றாக எழுதியுள்ளீர்கள்

Muthu said...

என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

யாத்ரீகன் said...

விளக்கமாரையும், செருப்பையும் கண்டதுக்கெல்லாம் தூக்கும் கும்பல் தலைவர், இதெல்லாம் பற்றி வாய் திறப்பதில்லையே...

ENNAR said...

// விளக்கமாரையும், செருப்பையும் கண்டதுக்கெல்லாம் தூக்கும் கும்பல் தலைவர், இதெல்லாம் பற்றி வாய் திறப்பதில்லையே...//
கேரளமக்கள் இங்கு வந்து ஓட்டு போடமுடியாதே, இவர்களும் அங்கு போய் தேர்தலில் நிற்கமுடியதே!

முத்துகுமரன் said...

உயிரழந்தவர் குடும்பத்திற்கு எனது இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன்

யாத்ரீகன் உங்கள் நகைச்சுவை உணர்வை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.....

புத்திசாலித்தனமான கேள்வி என்று நீங்கள் நினைத்து கொண்டால் அதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....