November 22, 2005

பீகார் தேர்தல் உணர்த்தும் பாடம்!
திருந்துவார்களா! மதச்சார்பின்மை பேசுபவர்கள்!!



பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்திய தேசத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த பாசிச பா.ஜ.க. - சங்பரிவார் வகையாறாக்கள் குஜராத்தில் பாசி°ட் நரேந்திர மோடி தலைமையில் சிறுபான்மை மக்களை நரவேட்டையாடியதை மறக்க முடியாது. நவீன ஜனநாயக உலகில் எங்கும் கண்டிராத கோரமான படுகொலையை இந்திய தேசம் சந்தித்தது. அத்துடன் தேசத்தின் இறையாண்மையை அடகு வைக்கக்கூடிய வேலையிலும் வாஜ்பாய் அரசு ஈடுபட்டது. உலகமயமாக்கல் கொள்கையை மிக வேகமாக அமலாக்கி இந்திய மக்களை ஓட்டாண்டிகாளக்கியது. பொதுத்துறையை சீரழித்தது; வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க சார் நிலையெடுத்து இந்திய சுயச்சார்பை அடகு வைத்தது. இப்படி எத்தனையோ பிரச்சினைகள் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது.



கடந்த பாராளுமன்றத் தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது” என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பதவியேற்றது. இந்திய மதச்சார்பின்மை தத்துவம் காப்பாற்றப்பட்டு, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் “உணவுக்கு வேலைத் திட்டம்”, “கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம்”, “தகவல் அறியும் உரிமை”... என சரியான பார்வையில் ஒடிக் கொண்டிருக்கிறது தற்போதைய மத்திய அரசு.



தற்போது பீகார் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சங் பரிவாரங்கள் இந்திய நாட்டில் பெரும்பான்மை மக்களின் மத உணர்வை பயன்படுத்திட தீவிரமாக முனைந்து வரும் வேலையில், இந்த வெற்றியின் மூலம் அவர்களது இரத்த தேரோட்டத்தை தொடங்குவதற்கான களமாக பீகார் அமைந்து விட்டது. எந்த பீகாரில் அத்வானி ரத்த யாத்திரை நடத்தியபோது, மதச்சார்பின்மையை பாதுகாக்க கைது செய்யப்பட்டாரோ, அந்த இடத்தில் மீண்டும் அவர்களுக்கு ஆட்சியதிகாரம் கையில் சென்றது, மீண்டும் ஒரு குஜராத்திற்கு அடித்தளமிட்டதாக அமைந்து விட்டது.



“ராம்விலா° ப°வான், இந்திய கம்யூனி°ட் கட்சி போன்ற மதச்சார்பற்ற கட்சிகளின் தவறான - சுயநல நிலைபாட்டால், மதச்சார்பின்மை என்ற கொள்கை அடிப்படையிலான நிலைபாட்டிற்கு பின்னடைவை ஏற்பட்டுள்ளது.” இந்திய நாட்டில் உள்ள பாசிச அபாயத்தை முதலாளித்துவ - முற்போக்கு கட்சிகள் மனதில் கொள்ளாமல் ஹீரோயிசம் செய்ய முனைந்தால், இந்திய நாட்டில் முசோலினிகளும், ஹிட்லர்களும் தோன்றுவதை தவிர்க்க முடியாது! இனியாவது திருந்துவார்களா!



2006ஆம் ஆண்டு மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி என இந்திய தேசத்தின் மிக முக்கியமான மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. பாசி°ட் பா.ஜ.க. பெரும் பின்னடைவை சந்தித்து உள்ள இந்த நேரத்தில் பீகார் தேர்தல் டானிக்காவே அமைந்து விட்டது. மேற்கண்ட மாநிலத்தில் உள்ள ஜனநாயக கட்சிகள் - பீகார் அனுபவத்தை உணர்ந்து செயல்பட்டால்தான் உண்மையான மதச்சார்பின்மையை பாதுகாக்க முடியும். நிறைவேற்றுவார்களா! மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

No comments: