November 26, 2005

அணு சக்தி அரசியல்!
நாட்டாண்மை செய்யும் அமெரிக்கா!




உலகளவில் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருப்பது “ஈரான் அணு சக்தி பிரச்சினை” ஈரான் அரசு தங்களது நாட்டு வளர்ச்சிக்கு - மின்சாரத் தயாரிப்பு உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்திட திட்டமிட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்° உட்பட வலரசு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவர்களது எதிர்ப்புக்கு காரணம் ஈரான் அணு சக்தியை பயன்படுத்தி அணு ஆயுதங்களை தயாரிக்கும் என்ற அச்சமே! உண்மை என்ன?
உலகில் முதன் முதலில் அணு குண்டை பயன்படுத்தி ஜப்பானிய நகரங்களான ஹீரோஷிமாவையும் - நாகாசாகியையும் கூண்டோடு அழித்து, 3.5 இலட்சம் மக்களை புல் பூண்டாக்கியது அமெரிக்கா என்பதை உலக மக்கள் நன்கு அறிவர். மேலும் இன்றைக்கு உலகில் சூப்பர் பவராக வலம் வந்துக் கொண்டிருக்கக்கூடிய அமெரிக்காதான் உலகிலேயே அதிக அளவிலான அணு ஆயுதங்களையும், அணுக் குண்டுக்களையும் வைத்திருக்கிறது. இதுமட்டுமின்றி இ°ரேலுக்கும் இத்தகைய தொழில்நுட்பத்தை கொடுத்து மத்திய ஆசியாவில் இ°ரேலை வைத்து மற்ற நாடுகளை மிரட்டி வருகிறது. ஏற்கனவே வடகொரியாவை மிரட்டிய அமெரிக்கா அதனிடம் தோற்றுப் போனது.
இந்நிலையில் ஈராக்கிடம் பேரழிவு மிக்க ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி, ஈராக் நாட்டையும் - அதன் எண்ணெய் வளத்தையும் கொள்ளை கொண்டுள்ள அமெரிக்காவும் - புஷ்ஷூம் தற்போது “கடவுள் ஆணையிட்டதால்தான் ஈராக்கை தாக்கினேன்” என்று புதிய பொய்க்குண்டை போட்டுள்ளார்.
இதேபோல் ஈரான் மீதும் பொல்லாத நாடு என்ற பொய்ப்பிரச்சாரத்தை பரப்புவதன் மூலம், ஈரானையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் அமெரிக்காவின் கனவு!



அமெரிக்காவின் இந்த கெடு புத்திக்கு நமது இந்திய அரசும் இறையாகிப் போனதுதான் வெட்கப்பட வேண்டியது! அமெரிக்காவின் பொருளாதார - கடன் ஆசைக்காக இந்தியா இதுவரை பெற்றிருந்த நடுநிலை நாடு என்ற நிலையில் இருந்து மாறி அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக மாறிட துடித்துக் கொண்டதன் ஒரு பகுதியாகத்தான் ஈரானுக்கு எதிராக அணு சக்தி கவுன்சில் முன் வாக்களித்தது! தற்போது இப்பிரச்சினை பாராளுமன்றத்தில் பெரும் விவாதமாக முன்னுக்கு வந்துள்ள நிலையில் அமெரிக்காவின் தீவிர ஆதரவாளர்களான வாஜ்பாய் - அத்வானி வகையாறாக்கள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் - ஜனநாயகத்தின் குரல்வளையை மறைமுகமாக நெறித்து வருகின்றனர்.



நம்முடைய இந்திய நாடும், சகோதர நாடான பாகி°தானும் அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றன! ஏற்கனவே அமெரிக்கா நாம் அணு குண்டு சோதனை செய்தபோது, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததையும் நாம் மறக்க முடியாது!



விதி என்று சொன்னால் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவிற்கும் - ஐரோப்பாவிற்கும் இது வேறாக இருக்கிறது. உலகில் எந்த நாடும் மனித குலத்தை அச்சுறுத்தும் அணுகுண்டுகளை வைத்திருக்கக்கூடாது! இத்தகைய அணுகுண்டுகளை அழித்து விட வேண்டும். இதனை முதலில் நிறைவேற்ற வேண்டியது அமெரிக்காதான்!



அணுசக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் எந்தவொரு நாட்டிற்கும், தடைஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உலக மக்களின் கருத்தினை திரட்டுவதே இன்றைய நமது கடமையாக இருக்கும்.

2 comments:

Amar said...

It has been ten years since The Government of India stopped recieving any financial aid as a part of foreign aid from the Federal US Government.

I can see that you are a Communist.

Does Beijing pay you? Just like they pay Gurudas Das Gupta to destroy Japanese investments in Inda?

Shameless Communists!

Amar said...

Who forced Iran to sign the NPT ?
They signed it.