January 20, 2009

மூட நம்பிக்கைக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும்: குஷ்பு






அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிபுதுப்பட்டு கிராமத்தில் ஒரு சிறுமிக்கும் தவளைக்கும் திருமணம் நடைபெற்றது. ஊர் நலன் கருதியே இந்தத் திருமணத்தை நடத்தி வைத்ததாக அந்த கிராமத்தினர் கூறியிருந்தனர்.

இதற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளம் பெண் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் குஷ்பு பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் நடத்தப்பட்ட திருமணத்தைப் பத்திரிகைகள் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஊர் நன்மைக்காகவும் ஊரில் உள்ளவர்களை நோய் தாக்காமல் இருப்பதற்காகவும் இந்தத் திருமணத்தை நடத்தியதாகக் கூறியிருக்கிறார்கள்.

விஞ்ஞானம் வளர்ந்து சந்திரயான் ராக்கெட்டைப் பறக்க விட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இதுபோன்று ஒரு திருமணம் நடந்திருப்பது மக்கள் இன்னும் மூட நம்பிக்கைகளில் சிக்கியுள்ளதையே காட்டுகிறது. இளம் தலைமுறைப் பெண்கள் பல துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ரஜினியை வைத்து அவர் மகளே படம் எடுக்கிறார். இப்படி எவ்வளவோ வளர்ச்சிகள் ஏற்பட்டாலும் மக்கள் இன்னும் மூடப் பழக்க வழக்கங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற மூடப் பழக்க வழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பெண்கள் போராடினால்தான் சமுதாயத்தில் மாற்றம் வரும்.

Thanks: www.dinamani.com

----------------------------------------------------------------

தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம்

Saturday, 17 January, 2009   12:58 PM

.

விழுப்புரம், ஜன.17: விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிப்புதுப் பாட்டு கிராமத்தில் நேற்று இரவு தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ளது பள்ளிப்புதுப் பட்டு கிராமம். இந்த கிராமத்தில் பழங்காலத்தில் காலரா நோய் பரவியதாகவும், அப்போது சிவன் தவளை உருவும், அம்மன் சிறுமி உருவும் எடுத்து அவர்களுக்கு திருமணம் நடத்தினால் காலரா நோய் குணமாகும் என்றும் மேலும் பரவாமல் இருக்கும் என்றும் கூறியதைத் தொடர்ந்து தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதாக கூறப்படுகிறது.

 இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக ஆண்டுதோறும் அந்த கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும்  வினோத திருமணம் நடத்தி வருகிறார்கள்.  இந்நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7.30மணிவரை நடந்தது.

 திருமணத்தையொட்டி பள்ளிப்புதுப் பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும், மாமன் முறை குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாராகவும் கருதப்பட்டனர் மாப்பிள்ளைவீட்டார் என்று கூறப்படும் தவளை சார்பில் சீர்வரிசையுடன் மாலை 4 மணிக்கு பெண் பார்க்க ஊர்வலமாக சென்று பெண்ணை பார்த்தனர்.

 பெண்ணுக்கு நகை, சீர்வரிசை மற்றும் வரதட்சணை குறித்து பேசினார்கள். இந்த திருமணத்திற்கு பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமுவின் மகள் விக்னேஸ்வரி (வயது 8) திருமணப்பெண்ணாக பெரியோர்களால்  நிச்சயிக்கப்பட்டார்.

 பின்னர் மாப்பிள்ளையான தவளையை தேடும் படலம் நடந்தது. கோவில் குளத்தில்  அதிக நேரம் தேடி ஒரு தவளையை பிடித்தனர்.அந்த தவளையை மாப்பிள்ளையாக கருதி மணமேடையில் வைத்தனர்.

 பெண்வீட்டார் சிறுமியை மணப்பெண்ணாக அலங்கரித்து தெருக்களில் அழைத்து வரப்பட்டு மண மேடைக்கு கிராம மக்கள் அழைத்து வந்தனர்.

 பள்ளிப்புதுப்பட்டு கிராம ஆரம்ப பள்ளி அருகில் அமைக்கப்பட்டு இருந்த மணமேடையில் மணமகன் தவளை, மணமகள் சிறுமி அமரவைக்கப்பட்டனர்.

 திருமண முறைப்படி மந்திரங்கள் ஓத  கிராம மக்கள் இரவு 7.30மணிக்கு தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்தது. தவளை சார்பில் பூசாரி சிறுமிக்கு தாலி கட்டினார். தாலி கட்டியபிறகு பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

 தவளைக்கும் பெண்ணுக்கும் இருவீட்டார் சார்பில் மொய்பணம் மற்றும் நகைகள் வரிசை வைக்கப் பட்டன. அப்போது கிராம மக்கள் வரிசைவைத்து நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு  விருந்து பரிமாறப்பட்டது.

 திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை தவளையை மறுபடியும் குளத்தில் விட்டுவிட்டனர்.  இந்த திருமணம் பற்றி கிராமத்தினர் கூறுகையில் காலம் காலமாக இவ்விதம் திருணம் நடந்துவருகிறது என்றார். மேலும் தவளை திருமணம் நடக்கவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் எந்த விதத்திலாவது தீங்கு ஏற்படும். அவ்வாறு நடக்காமல் இருக்கவும், நோயின்மை ஏற்படவும் இந்த திருமணம் நடத்திவருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

 அதோடு மட்டுமல்ல கடும் நோய் உள்ள சிறுமிக்கு இவ்விதம் திருமணம் நடத்தினால் நோய் தீர்ந்து விரைவில் திருமணம் நடக்கும்என்பதும் கிராம மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

24 comments:

சந்திப்பு said...

ஒரு அனானி பிற்போக்குவாதியின் இழிவான - காட்டுமிராண்டித்தனமான கமெண்ட் இங்கே வெளியிடப்படவில்லை. இதுபோன்ற கமெண்டுகளால் எந்தப் பயனும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட அனானி உணர வேண்டும்.

Anonymous said...

குஷ்பு சொல்லுரத கேட்டு நடங்கப்பா !!! சிவப்பா இருக்கிரவ பொய் சொல்லமாட்டா !!

சந்திப்பு said...


குஷ்பு சொல்லுரத கேட்டு நடங்கப்பா !!! சிவப்பா இருக்கிரவ பொய் சொல்லமாட்டா !!


இதுபோன்ற மூட நம்பிக்கைகளை விதைப்பதே மேற்கண்ட கமெண்ட் எழுதியுள்ள அனானி போன்ற ஆசாமிகளே! இவர்கள்தான் இதற்கு வடிகால்கள்... எனவேதான் குஷ்பு சொன்ன கருத்தின் மீது தனது கருத்தை பதியாமல்... அவர் சிவப்பு... கருப்பு என்று பிதற்றுகிறார்... இவர்கள் சமூகத்தை பின்னுக்கு இழுக்கும் ஒட்டுண்ணிகள்.

Anonymous said...

அப்புறம் ஏண்டா ங்கொய்யால செருப்பையும், தொடப்பகட்டையும் எடுத்துக்கொண்டு தெருத்தெருவா குஷ்பூவுக்கு எதிரா போராட்டம் நடத்தினீங்க. கேஸ் போட்டு அவமான படுதுநீங்க

சந்திப்பு said...

ங்கொய்யா அனானி இடம் மாறி இங்க வந்து பதிவிடுறீங்கன்னு நினைக்கிறேன். நீங்கள் விரும்பும் கருத்தை பின்னுட்டம் இடுவதற்கு உங்களுக்கு ஏற்ற சரியான வலைப்பதிவை நாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அடுத்து என்னுடைய முதல் பதிவே! குஷ்பூ மீதான தாக்குதலுக்கு எதிரானது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். கீழ்க்கண்டட லிங்கை அழுத்தி படிக்கவும்.




http://santhipu.blogspot.com/2005/11/blog-post.html

தாமிரபரணி said...

நான் இதனை ஆதரிக்கவில்லை
இருந்தாலும் குசுப்புகாகான எனது பதிப்பு
உனக்கு சில நடிகைகளுக்கும் கோயில் கட்டும் போது
அமைதியா பொத்திகொண்டு இருந்த, அப்ப எங்க போச்சி உன்னுடைய கோபம், எல்லாதுக்கும் மேல பாலுணர்வை தூண்டுகின்ற வேடங்களில் நடித்த நடிகை நீ எல்லாம் தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்ல வந்துட்ட போடி போ,
காசக்காக அடுத்தவனை கட்டிபுடிப்பதும், முத்தம்மிடுவதும்
தன் அங்கத்தை அங்கம் அங்கமாக காட்டுவதும்
இவை அனைத்தையும் செய்து முடித்துவிட்டு வெறும் நடிப்பு என்று பிதற்றுவது, அதுபோல இதையும் ஒரு நாடகமாக நினைத்து மறந்திரு இதை தடுக்க காவல் துறை உள்ளது பல சங்கங்கள் உள்ளது நீ ஒன்னும் கொதிக்க வேண்டாம்

Anonymous said...

ஒ நீ குஷ்பூவோட கோ.ப.சே.வா சாரிபா.. கோவிச்சுக்காத. மேர்சலாயிட்டன்.வுட்டுரு.

Anonymous said...

மூடநம்பிக்கைகளைப் பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள். பாரதியை படிப்பீர்கள்...பராசக்தியை எதிர்ப்பீர்கள்...கம்பராமாயணம் படிப்பீர்கள் ...ராமர் பாலம் பொய் என்பீர்கள்....விவேகானந்தரை ஆதரிப்பீர்கள்... இந்துமதத்தை எதிர்ப்பீர்கள்...
அவ்வளவு ஏன் உங்க சிஐடியு வை ஆயுதபூஜை கொண்டாடாமல் இருக்க சொல்லுங்கள்... ஊருக்கு உபதேசம் பண்ணுவதற்கு முன்னால்...

Anonymous said...

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!

இந்த அவமானத்தை ஆதரிப்பவர்களுக்காக...
சென்னை மாஹாணச் சட்ட மன்றம்:
பொட்டுக்கட்டி பெண்களை கோவிலில் விடுவதைத் தடுக்கும் சட்டம் இய்ற்ற முயற்சி நடக்கிறது.

சத்தியமூர்த்தி:அரசாங்கத்தின் சட்டத்தை மீறினாலும் மீறுவேனே தவிர சாஸ்த்திர சம்பிரதாயங்களை மீற மாட்டேன்.
டாக்டர் முத்து லட்சுமி அம்மையார்:
இது வரை எங்கள் பெண்கள்தான் பொட்டு கட்டி கோவில்களுக்கு விடப்பட்டார்கள்.அதை வேண்டாம் என்கிறோம்.திருவாளர் சத்திய மூர்த்தி அவர்கள் அவரது பெண்களைப் பொட்டு கட்டி விட விரும்பினால் அது அவர் விருப்பம்!

சந்திப்பு said...

அனானி நன்பரே நான் குஷ்பு சொன்ன "கருத்துக்கு" கொ.ப.செ.தான்.

உங்களைப் போன்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்கள் சொன்னால்தான் கேட்பீர்கள் போலும்.

சந்திப்பு said...

காமாலைக் கண்ணணுக்கு கண்டதெல்லாம் ம;"சள் என்பார்கள். அது உங்களைப் போன்ற ம.க.இ.க. காரர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். அதனால்தான் முற்போக்கு மற்றும் விடுதலைக் கவியான பாரதி உங்களுக்கு கசக்கிறார். கம்பராமாயணம் படிப்பதாலேயே ராமர் பாலம் இருக்கிறது என்று கூறவேண்டும் என்ற உங்களது சிந்தனை அபாரமானதுதான். மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கட்சியை நடத்துகிற குழுவினரிடம் இதுபோன்ற சிந்தனைகளைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. சி.ஐ.டி.யு. ஆயுத பூஜை கொண்டாடாது. ஆனால் சி.ஐ.டி.யு.வில் உறுப்பினராக உள்ளவர்கள் கொண்டாடினால் அதனைத் தடுக்காது. அது ஒரு வெகுஜன அமைப்பு. அதில் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் பங்கேற்பர். 30 ஆண்டுகளாக கிணற்றுத் தவளையாக கத்திக் கொண்டிருப்பதால் புரட்சி நடக்காது அன்பரே!

சந்திப்பு said...

சமூகப் பணியாற்றும் சக்திகளிடம் கூட பிற்போக்கு கருத்துக்கள்தான் முதுகில் சுமந்து வருகிறது. அதையும் சேர்த்து ஒழிக்க வேண்டிய கடமை இந்த சமூகத்தல் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உள்ளது. அதற்கு சத்தியமூர்த்தியும் விதிவிலக்கல்ல.

சந்திப்பு said...

வெற்று அலம்பல்களை விவாதம் என்பதா? வேடிக்கையாக இருக்கிறது கலைவேந்தன். கேட்ட கேள்வியையே ஊர்ல இருக்கிற அத்தனை தளத்திலும் பதிவும் உங்களது வெட்டி வேலை சிறப்பானதுதான். ஆனால் இதுவரை தங்களது கட்சி திட்டம் குறித்தும் அதன் செயல்பாடும் குறித்து மட்டும் வாயே திறப்பதில்லையே! அனானி கட்சியல்லவா அப்படித்தான் இருக்கும். அதுவும் நீங்கள் இணையத்தின் மூலமே ஆட்சியைப் பிடிப்பதற்கு பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர்கள்தானே. அதுவும் கார்ப்பரேட் விளம்பரதாரர்கள் போல!

vimalavidya said...

On issues the 'anonymous' should say his opinion.Merely writing anything expose their inability clearly.So 'sandhippu' shall delete these comments and pave the way for healthy discussions/arguments..Their writings creating vomiting sensations.It will not help them to do their propaganda..If they are capable they must come for healthy arguments and discussions.>>They should think it will take only few minutes to write comments in such a way in their blogs,vinavu and BJP/Advani. Dont spoil the blogs>>any blogs>> by your third rated comments Anonymous.Dont expose your dryness Anonymous>>vinavu>>RSS/BJP/..vimalavidya

Anonymous said...

தோழர் சந்திப்பு,

மிக சிறந்த பதிப்பு. அனாமிகளும் ம.க.இ.க கண்மணிகளும் இப்படி வசவுகளை கொண்டும், குதர்கமான கேள்விகளைகொண்டும் தங்கள் இருப்பை காட்டிகொள்ள வேண்டிய கட்டாயத்திர்கு தள்ள பட்டுள்ளனர்.

Anonymous said...

இத்தகைய மனித நாகரீகத்தக்கு மாறான பிற்போக்குத் தனங்கள் களையப்பட வேண்டும். சிறுமிகள் மீதான இத்தகைய நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சாந்தி

Anonymous said...

அதெல்லாம் கெடக்கட்டும்னா.. ..நீங்க பேப்பர் வாங்கறேளா..
இந்த Srilanka issue வுக்காக ஒரு பையன் உயிர மாச்சுண்டதா
தகவல் வர்றதே.. நீங்க சித்த என்னன்னு கேட்டு எழுதப்படாதா..
நன்னாஇருக்கு போங்கோ..

சந்திப்பு said...

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குரனின் செயல் கடும் வருத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றே. எனினும், தனிநபரின் இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட முடிவு... மேலும் சில உணர்வுகளை கிளறிவிடப் பயன்படலாம்! முற்போக்கு விதை தூவப்பட்ட மண் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழகத்தில் இவ்வாறான அரசியல் தற்கொலைகளும் மூடப்பழக்கத்தின் ஒரு வடிவமாகவே கருதுகிறேன். அரசியல் ரீதியாக - தனது கருத்துக்கு ஆதரவாக மக்கள் எழாதபோது ஏற்படும் விரக்தி கலந்த - உணர்ச்சி இதனை நோக்கி தள்ளியதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. கொள்கை ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் - தத்துவார்த்த ரீதியாகவும் விவாதங்கள் இல்லாதபோது வெறும் இனவாத உணர்ச்சி மட்டுமே மேலிடும். இத்துடன் தனிநபர் வழிபாடும் மேலோங்கியிருப்பதைதான் அவ்வப்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றது. அடுத்து நம்முடைய கலர் கலரான அரசியல்வாதிகள் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வினை ஒன்றுபட்ட குரலோடு முன்வைப்பதற்கு மாறாக, தங்களது இனவாத அடையாள அரசியலுக்கு தூபம் போடுவதைத்தான் தமிழகத்தில் பார்க்க முடிகிறது. இலங்கையில் இனவாத பிரச்சனை கொழுந்து விட்டு எரிகிறது என்றால் தமிழகத்தில் தங்களது அடையாள அரசியலின் நெருக்கடியின் மணம் வீசுவதைத்தான் பார்க்க முடிகிறது. எனவே இலங்கை தமிழ் மக்களின் அரசியல் - பொருளாதார - சமூகப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனி ஈழம் என்று முழக்கம் வைப்பதும், அதற்கு பயங்கரவாதத்தையே தனது தொழிலாய் மாற்றிக் கொண்ட எல்.டி.டி.இ.தான் தலைமை தாங்கும் என்று அதனை ஆதரிப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதுமாகவும், அங்கு சிங்கள இனவாதம் பேசினால் நாங்கள் என்ன குறைந்தவர்களா? என்று தமிழ் இனவாதம் பேசுவதும்தான் நடைபெறுகிறது. ஆனால் இதே எல்.டி.டி.இ.தான் இசுலாமிய தமிழ் மக்களுக்கும், மலையக தமிழ் மக்களுக்கும் எதிராக நின்றது என்பது மட்டுமல்ல அம்மக்கைளுயம் வேட்டையாடிது. அத்துடன் சக போராளி அமைப்பின் தலைவர்களையும் வேட்டையாடி தனது பயங்கரவாத குணத்தை வெளிக்காட்டியது. இதில் ராஜுவ் படுகொலையும் - 14 பேர் உட்பட பத்மநாப கொலையையும் தமிழ் மண்ணில் அரங்கேற்றியவர்கள்தான் இந்த பயங்கரவாதிகள் என்பதையெல்லாம் மறந்து விட்டு இன்றைக்கு கரடி போல் கத்துவதால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது. சந்தடி சாக்கில் புரட்சிகர அமைப்புகள்கூட மிகவும் பக்குவமாக தமிழ் இன அடையாளத்தை முன்வைத்துக் கொள்கிறது. பார்ப்பனீயம் எல்லாம் பேசி... தனது அணிகளை புல்லரிக்க வைக்கிறது. இந்த விசயத்தில் இதற்கான தீர்வு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கான மாநில சுயாட்சியும் - இதில் அரசியல் - பொருளாதார - சமூக உரிமைகளை உள்ளடக்கியதாகவும் விரிவானதாகவுமான ஒரு அரசியல் தீர்வே பொருத்தமானது. இதனை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் இந்த போரில் தமிழ் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்ற வேண்டும். எல்.டி.டி.இ. தொடர்ந்து தமிழ் மக்களின் ஆதரவை இழந்து... அம்மக்களை ஆயுத முனையில் கவசமாக முன்வைத்து செல்வதிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு இவ்விசயத்தில் ராஜீய ரீதியில் தலையிட்டு - ஒரு அரசியல் தீர்விற்கான முன்முயற்சியை எடுத்திட வேண்டும். இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க அலறும் இந்த அரசியல் கட்சிகள்தான் இத்தகைய போதையூட்டும் வெறித்தனத்திற்கு தூபங்களைப் போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தங்களையும் இணைத்துக் கொண்டு குளிர் காய்பவர்கள் பலரும் உள்ளனர்...

Anonymous said...

if i am belongs to RSS, can i join your CITU.

Anonymous said...

did you read bharathy

சந்திப்பு said...

அனானி நன்பரே! நீங்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் சி.ஐ.டி.யூ.வில் இணையலாம். ஒரே விசயம். அந்த அமைப்பின் அமைப்பு விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதற்கு நீங்கள் தயாராக இருந்தால் சி.ஐ.டி.யூ. நிச்சயம் உங்களை வரவேற்கும்.

சந்திப்பு said...

Yes I read

Anonymous said...

pls answer the question directly

சந்திப்பு said...

சேரலாம்