January 06, 2009

தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயம்!

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தற்போது தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் முத்திரைப் பதித்து வருகின்றனர். 1990களுக்குப் பிறகு தலித்திய அமைப்புகள் எழுச்சிகரமாய் ஏற்றம் பெற்று வருகின்றன. சாதிய இழிவுகளுக்கு எதிராகவும் - சனாதன மனு (அ)நீதிக்கு எதிராகவும் இவர்களது குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் உடனடியாக சமூக மாற்றம் யாருக்குத் தேவையோ இல்லையோ தலித் மக்களுக்கு இது அடிப்படையாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது. எனவே, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முதல் தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் வரை நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துக் கொண்டு சாதிய நிலவுடைமைய அமைப்பை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர். எனவே நமது போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவது என்பதோடு - முதலாளித்துவத்திலும் புரையோடிப் போய் கொண்டிருக்கக்கூடிய சாதியத்தையும் சேர்த்து வீழ்த்த வேண்டியுள்ளது. இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலம் தொட்டு சாதிய விடுதலைக்கான முழக்கத்தையும் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கீழ்வெண்மணி இன்றைக்கும் அதற்கு சாட்சியமாய் நின்றுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கீரிப்பட்டி முதல் உத்தப்புரம் வரை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வரும் போராட்டம் சாட்சியமாய் விளங்குகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்முயற்சி எடுத்து செயலாற்றி வருகிறது. தலித் மக்கள் மட்டுமல்ல அடுக்கப்பட்ட மக்களில் அட மூட்டைகளாய் மாறிப்போன அருந்ததிய மக்கள் வரை... அவர்களுக்கான பிரச்சனைகளை முன்னின்று செயலாற்றி வருகிறது.

இதற்காக விரிவான அளவில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திற்கு முன்வரக்கூடிய பெரும் பகுதியினரை அணி திரட்டுவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீவிரமாய் செயலாற்றி வருகிறது. அமைப்புகள் உருவாவதும், அமைப்புகள் காணாமல் போவதும் சமகாலத்தில் நிகழக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுகள் என்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வர்.

இந்நிலையில் வளர்ந்து வரும் தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.) கும்பல். தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது ஏதோ வாக்கு வங்கி அரசியல் நடத்துவதற்காக துவங்கப்பட்டதாக கொச்சைப்படுத்துகிறது. இவ்வாறு குற்றம் சுமத்துவது ஆட்சியாளர்கள் அல்ல. அவர்கள் கூட இவ்வாறு சொல்லத் துணிய மாட்டார்கள். சொல்வது புரட்சியை (தமிழகத்திலோ - இந்தியாவிலோ) கொண்டு வருவதற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அமெரிக்காவில் வாங்கி வந்திருக்கும் ம.க.இ.க. தொடை நடுங்கிகள்தான். (பார்க்க வினவு-ஏகலைவன் கமெண்ட்)
இவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததியர் பேரவை... என்று அனைத்து தலித் அமைப்புகளையும் முதலாளித்துவ அமைப்புகளாகவும் - சாதிய அமைப்புகளாகவும் பார்க்கும் சனாதன - பார்ப்பனீய மனோபாவத்தின் வெளிப்பாடே! மொத்தத்தில் இந்த ம.க.இ.க. குழு தலித் மக்களின் எதிரியே! இதனை ஏமாற்றுவதற்காகவே தலித் அடையாளத்தோடு பவனி வருகிறது ம.க.இ.க.

உண்மை என்ன? இவர்களது சுய முகம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய அவசியமான ஒன்று... இந்த ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. தொடை நடுங்கி நக்சலிச) புரட்சியாளர்களின் உண்மை முகம் என்ன என்று யாருக்கும் தெரியாது? நான் தொடர்ந்து குற்றம் சுமத்தும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இவர்கள் யாருக்கும் சொந்தப் பெயர் இல்லை. எல்லாம் போலிப் பெயரில் - போலி முகமூடியுடன் செயலாற்றுவதுதான்.
அது தலைமை முதல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள் வரை.... சரி இதில் உள்ள மற்றொரு ரகசியத்தையும் இங்கே சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஏதோ இவர்கள் பார்ப்பனீத்தை எதிர்ப்பதற்கு பிறந்தவர்கள் போல் பேசுவார்கள்... ஆனால் அது நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புவதற்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களது தலையே ஒரு பார்பனீயத் தலைமைதான். குறிப்பாக வல்லபேச என்கின்ற பார்ப்பனர் மருதையனாகவும், ரெங்கராஜன் என்கின்ற பார்ப்பனர் வீராச்சாமியாகவும் மாறியது ஏன்? அதுவும் மருதையன், வீராச்சாமி எல்லாம் தலித் அடையாளத்துடன் கூடிய பெயர்கள் என்பதை மறக்கக் கூடாது? இதுதான் மர்மம். ஏதோ தாங்கள் எல்லாம் தலித் மக்களின் நண்பர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலி மனோபாவம். உத்தப்புரத்திலாகட்டும்... கல்கேரியாகட்டும்... எந்தக் கிராமத்திலாவது தலித் மக்கள் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் போது அங்கே களத்தில் நின்று போராடிய வரலாறு இவர்களுக்கு உண்டா? இல்லை! மாறாக பிரச்சாரத்திற்காக சிதம்பரத்தை எடுப்பார்களே தவிர களத்தில் இறங்க மாட்டார்கள் இந்த போலி புரட்சியாளர்கள்.

இதேபோல்தான் இவர்கள் கியூபாவையும், கியூப புரட்சியும் எப்படி நடந்தது என்று போகிற போக்கில் கேள்வி எழுப்புவார்கள். தங்களை நக்சலிசத்தின் உண்மை வாரிசாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் கியூப வழியில் கடந்த 30 ஆண்டு காலமாக களத்தில் என்ன செய்தார்கள்? புதிய ஜனநாயகம் பேசி சிறு பத்திரிகைகளோடு மோதுவதும் - சி.பி.எம்.க்கு எதிராக அவதூறு பேசி ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரிவதைத் தவிர! இவர்களது தொழில் பேசுவது நக்சலிசம் ஆனால் சீர்குலைப்பது வர்க்கப் போராட்டத்தை!

அடுத்து இந்த தொடை நடுங்கி புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தை பன்னித் தொழுவம் என்று தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கி என்பார்கள்! இதன் மூலம் இவர்கள் செய்வது என்ன? இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் என்று திட்டுவதுதான். கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்களோ அங்கெல்லாம் செயல்படுவார்கள்! இது இவர்களுக்கு பொறுந்தாது! ஏனென்றால் இவர்கள் சி.ஐ.ஏ.-வால் உருவாக்கப்பட்ட சீர்குலைவு என்.ஜீ.ஓ. கம்யூனிஸ்ட்டுகள். அதனால்தான் இவர்கள் நக்சலிசம் பேசி - அதற்காக தங்களது போராடிக் கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் தியாகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருப்பவர்கள்!

இந்த மகஇக என்.ஜீ.ஓ.க்கள் தற்போது இணையத்தின் மூலம் புரட்சியை நடத்துவதற்கு கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தங்களது அணிகளுக்கு இணையத்தில் எப்படி செயல்படுவது என்று வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 டசன் ம.க.இ.க. போலி புரட்சியாளர்கள் தற்போது இணையத்தில் செயலாற்றி வரும் புதிய எழுத்தாளர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை இணையத்தில் இருந்தும் - எழுத வருவதிலிருந்தும் வெளியேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதாவது இணையத்திலும் ஆள் புடிக்கிறேன் பேர் வழி என்று கிளம்பி... எல்லாத்துக்கும் நான் சொல்றதுதான் சரி! என்கிற பார்ப்பனீய பாசிச மனோபாவத்தில் அடாவடி அடித்துக் கொண்டிருக்கும் வினவு மற்றும் ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. தொடை நடுங்கிகளை அடையாளம் காண்பீர்! இவர்கள் தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயத்தின் மறுவடிவ புரட்டர்களே என்பதை!

23 comments:

விடுதலை said...

”எப்பவும் இடது சீர்குலைவு செய்ய வேண்டும்..
அமெரிக்கா பணம் தடையிலலாம தரவேண்டும்”
பணத்திற்கும் அமெரிக்காவிற்கு சேவகம் செய்வதற்கு இந்த மகஇக கசுமாலங்கள் அலைந்துதிரிந்துகிடக்கன்றன.
இவர்கள் முழுமையான தலீத் விரோத .மார்க்சிய விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Anonymous said...

சி.ஐ.ஏ எஜெண்ட், அமெரிக்க ஏகாதிப்பத்திய எடுபிடி இப்படி நீங்கள்
முத்திரை குத்தியவர்களில் க.நா.சுப்பிரமண்யம்,வெங்கட் சாமிநாதன் போன்றவர்களும் உண்டு.
ம.க.இ.கவினர் உங்களை நன்றாக
கேள்வி கேட்கிறார்கள்.நீங்களும் பதிலுக்குக் கேளுங்கள்.இருவரின் வண்டவாளமும் தண்டவாளத்தில்
ஏறட்டும்.அப்போதுதான் இருவரும்
போலி கம்யுனிஸ்ட்கள் என்பது
புரியும்.

சந்திப்பு said...

யார் மார்க்சியத்திற்கு எதிராக தொடர்ந்து பேசுகிறார்களோ? செயல்படுகிறார்களோ அவர்கள் இறுதியில் அடையக்கூடிய பாதை பாசிசம். அதனால்தான் இவர்கள் போல்பாட்டிஸ்ட்டுகள் என்று அழைக்கிறோம்.

சந்திப்பு said...

சுப்பிரமணிய சுவாமி முதல் பலரும் சி.ஐ.ஏ. ஏஜண்டாகத்தான் செயல்படுகிறார்கள். சி.ஐ.ஏ. எந்த ரூபத்திலும் செயல்படும். அதன் ஒரே நோக்கம் கம்யூனிஸ்ட்டுகள் தலையெடுக்கக் கூடாது. அவ்வளவுதான். அதைத்தான் இந்த மகஇக.வினர் செய்துக் கொண்டுள்ளனர். இதனால்தான் இவர்களை அமெரிக்காவின் தன்னார்வக்குழு என்று அழைக்கிறோம்.

Anonymous said...

அண்ணே.. இப்ப புதுசா ஒருத்தர் சி.ஐ.ஏ வில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.. மேற்கு வங்கத்தை சேர்ந்த அவர் பெயர் அசோக் மித்ரா..

http://www.revolutionarydemocracy.org/rdv14n1/yournot.htm

இங்கே அவர் சி.ஐ.ஏ வில் வாங்கிய கூலிக்கு மாரடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்து, அவரையும் ஒரு காட்டு காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலை said...

மகஇக என்.ஜி.ஓவா மாறி போச்சுது…” அப்படீன்னு ஒரு பாட்டு உண்டு.

திருத்தம்:
“…இப்போ மகஇக தேய்ஞ்சி, தேய்ஞ்சி, இரண்டு கோஷ்டியா போனதுங்க…”

,,மகஇக = குழப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி வார்த்தை அரசியல்

திருத்தம்:
முக்கியானத வுட்டேன்.
மகஇக = பார்ப்பனீயம் + குழப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி வார்த்தை அரசியல்

Sempulam said...

மகஇக என்.ஜி.ஓவா மாறி போச்சுது…” அப்படீன்னு ஒரு பாட்டு உண்டு.

முழு பாட்டையும் போடுங்கண்ணே அப்பத்தான் கள கட்டும்....
அதையும் நம்ம வழக்கமா செய்யுற மாதிரி அவங்க மெட்டையே சுட்டு அவங்களுக்கே ஆப்படிப்போம்....
அப்பத்தான் அவங்களுக்கு புத்திவரும்!!!

சந்திப்பு said...

ம.க.இ.க. என்.ஜீ.ஓ.வா மாறிப்போச்சு அப்படின்னு ஒரு பாட்டு இருந்தால் அதை நீங்களே அனுப்பி வையுங்கள் நன்பரே! அதாவது எல்லாத்துலயும் நாங்கள்தான் பிஸ்தா என்று கூறும் ம.க.இ.க. தொணிதான் இதிலும் தெரிகிறது. அடுத்து மகஇக பாடல்களுக்கு பேடண்ட் வாங்கிக் கொள்ளுங்கள். அப்புறம் உங்களத் தவிர வேறு யாரும் உபயோகப்படுத்த மாட்டாங்க!

கலைவேந்தன் said...

தோழர் சந்திப்பு அவர்களுக்கும் மற்ற சிபிஎம் கட்சியினைச் சார்ந்து இங்கு கருத்து பதிந்துள்ள தோழர்களுக்கும்.....

சமீபகாலமாக மகஇக தோழர்கள் சிபிஎம் கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்களை முறையாக, தெளிவாக, அழுத்தமாக பதிந்து வருகின்றனர். அவர்கள் வைக்கின்ற விமர்சனங்கள் யாவும் சரியானவையாகத்தான் இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களை உங்களுடைய எதிர்வினைகளே நிரூபிக்கின்றன.

குறிப்பாக மகஇக வை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு உங்களுக்கு போதுமான அறிவு இல்லை என்பதே எனது கருத்து. சும்மா போகிற போக்கில் வசைபாடுவது, புழுதிவாறித் தூற்றுவது போன்ற செயல்களையும் அடக்கவொன்னா ஆத்திரத்தையும் தவிர உங்களது எதிர்செயல்களில் எதுவுமில்லை.

உதாரணமாக இங்கே நீங்கள் லிங்க் கொடுத்திருக்கும் வினவு வலைதளத்தின் கட்டுரையிலும் அதன் பின்னூட்டங்களிலும் முன்னிறுத்தப்பட்டுள்ள சிபிஎம் மீதான விமர்சனங்களுக்கு உங்களுடைய இந்த பதில் எதிர்வினையேதும் புரியவில்லை.

”கீரிப்பட்டி முதல் உத்தபுரம்வரை” ‘தலித்’ மக்களுக்காகப் போராடுவதாக சிபிஎம் பற்றி நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அதே பாப்பாபட்டிக்கு ‘உண்மை கண்டறியும் குழுவில் சென்று வந்த’ தமுஎசவின் முக்கியத் தலைவர் மேலாண்மை பொண்ணுச்சாமி என்பவர் தெரிவித்த கருத்து ஒன்றை அதே வினவு தளத்தின் பின்னூட்டமொன்றில் ஏகலைவன் என்பவர் பதிந்திருக்கிறார். அதற்கான உங்களது எதிர்வினை எங்கே? மேலாண்மை பொண்ணுச்சாமி சொன்னது உண்மைதானே?

அடுத்து அவர்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களில் கவனிக்க வேண்டியது சிபிஎம் கட்சியின் தேவர் அரசியல் தான்.

முத்துராமலிங்கம் என்கிற சாதிவெறியை ஊட்டி வளர்த்த ஒரு சமூகவிரோதியின் நினைவுநாளுக்கு எல்லா ஓட்டுக்கட்சிகளுடன் நீங்களும் போயி மலர்வளையம் வைத்து வழிபடுவது எந்த வகையிலான அரசியல்? முத்துராமலிங்கத்தை சிபிஎம் எந்த அளவு கோலில் அளந்து நியாயப்படுத்துகிறது?

சாதிவெறியன் முத்துராமலிங்கத்துக்கு மலர் வளையம் வைத்துவிட்டு சாதியை ஒழிக்கப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்வது எத்தனை கேவலமானது?

வினவு தளத்தில் பதியப்பட்டுள்ள, நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த பின்னூட்டத்தில் உள்ள கேள்விக்கு ஏன் உங்க்ளால் பதில்களைத் தரமுடியவில்லை, மாறாக ஆத்திரத்தையும் அவதூறுகளையும் பதில்களாகத் தெரிவிப்பது நேர்மையான அரசியல் அல்லவே!

///////வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்து வருவது பற்றி எந்த ஒருவிமர்சனமும் இல்லாமல், தலித்தியமா அதையும் சேர்த்துக்குவோம்; பெண் உடலை, காமத்தை வெளிப்படையாகப் பேசுவதும், ஓரினப்புணர்ச்சி மூலம் பெண்விடுதலை என்றும் பேசும் கழிசடை பெண்ணியவாதம் மேலெழுந்து வந்தால் அதையும் சேர்த்துக்குவோம்; இதுதான் த.மு.எ.ச.வின் கொள்கையாக உள்ளது ./////////

இவ்வரிகளும் அதே வினவு வலைதளத்தின் பதிவிலிருந்ததுதான். இதற்கு மறுப்பு சொல்லும் விதமாக உங்களது பதில் இருக்கிறதா என்பதை மறுபடியும் ஒருமுறை கவனித்துப் பாருங்கள்.

கடுமையாக வசைபாடிக்கொள்வதில் எனக்கு விருப்பமேதுமில்லை. இதில் இருதரப்பினரின் மீதும் எனக்கு அதிருப்தி உண்டு. அதே வேளையில் என்னுடைய இந்த பின்னூட்டத்தை முறையாகப் பதிப்பித்து நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் தோழர்களே திருத்திக் கொண்டு விவாதிக்கலாம்.

- கலைவேந்தன்.
elamperiyar@gmail.com

சந்திப்பு said...


குறிப்பாக மகஇக வை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு உங்களுக்கு போதுமான அறிவு இல்லை என்பதே எனது கருத்து. சும்மா போகிற போக்கில் வசைபாடுவது, புழுதிவாறித் தூற்றுவது போன்ற செயல்களையும் அடக்கவொன்னா ஆத்திரத்தையும் தவிர உங்களது எதிர்செயல்களில் எதுவுமில்லை.


நன்பர் கலைவேந்தனுக்கு வணக்கம்.

முதலில் ஒரு விசயம், மகஇக ஒரு அரசியல் கட்சியும் அல்ல - புரட்சிகர அமைப்பும் அல்ல. அது நேரடி அரசியலிலும் ஈடுபடும் அமைப்பும் அல்ல. அது ஒரு கலை - இலக்கிய அமைப்பு அவ்வளவுதான். ஆனால், இது தொடைநடுங்கி நக்சலிச அமைப்பின் வாலாக செயல்படுகிறது என்பதுதான் என்னுடைய விமர்சனம். இதுவரை இந்த தொடைநடுங்கிகள் தங்களது கட்சி பெயர் இதுதான் என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்வரவில்லை. மேலும், அவர்களது அன்றாட அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் மகஇக பெயரிலேயே நடைபெறுகிறது. தங்களது அரசியல் கட்சியை வெளியே சொல்லுவதே கிடையாது. அதனால்தான் சொல்கிறோம் இது புரட்சிகர அமைப்பு அல்ல சீர்குலைவு அமைப்பு என்று. இதனை அரசியல் ரீதியாக இப்படித்தான் விமர்சிக்க முடியும். அடுத்து, இது ஒரு என்.ஜீ.ஓ. அமைப்பு என்பதே என்னுடைய விமர்சனம். இதற்கான நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமா? கிடையாது!

அடுத்து சி.பி.எம். முத்துராமலிங்கத் தேவருக்கான குருபூசை நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை என்பதே எங்களது அரசியல் ரீதியான முடிவு.

மேலும் தமுஎச குறித்து அவர்களது கருத்து முற்றிலும் தவறானது. தமுஎச என்பது முற்போக்கு கலை - இலக்கிய கருத்துக்ளை தமிழகத்தில் பரவலான பாமர மற்றும் படித்த மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அது வருடத்திற்கு ஒரு பஜனை கச்சேரி நடத்தும் ம.க.இ.க. போல் செயல்படுவதில்லை. மாறாக தமுஎச மக்கள் மத்தியில் ஆழமாக வேறுன்றியுள்ளது. இது ஒரு வெகுஜ மேடை. இந்த வெகுஜன மேடையை கட்சி மேடையாக மாற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டுள்ளது ம.க.இ.க கும்பல். அதாவது. அதைதான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். கட்சிக்கும் - வெகுஜ இயக்கத்திற்கும் வித்தியாசம் இல்லாத செயல்பாடு. அதாவது இதற்குள் ஒளிந்துக் கொண்டு.... எனவே அவர்களது இழிவான விமர்சனத்தை முகம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றே சொல்ல வேண்டும். அவர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

இறுதியாக நன்பர் கலைவேந்தர் அவர்களே! முடிந்தால் நீங்களே அவர்களது அரசியல் திட்டம் என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக - பகிரங்கமாக விமர்சிக்க முடியுமா என்று கேளுங்கள். உங்களையும் போலீசு உளவாளியாக மாற்றி விடுவார்கள்.

Senthil said...

மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கும் சிபிம் கும்பல் தான் தமிழினத்தின் முதல் எதிரிகள்.முல்லை பெரியாறு,பாலக்காடு ரயில்வே கோட்டம் ஆகிய பிரச்சினைகளில் செய்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது...

சந்திப்பு said...


மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கும் சிபிம் கும்பல் தான் தமிழினத்தின் முதல் எதிரிகள்.முல்லை பெரியாறு,பாலக்காடு ரயில்வே கோட்டம் ஆகிய பிரச்சினைகளில் செய்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது...


மாநிலமே இல்லாத நீங்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம்!

தளபதி said...

போல்பாட் ஐ நீங்கள் மட்டும் ஏன் பாசிஸ்ட் எனக் கூறுகிறீர்கள் நிஜமாகவே அவர் ஹிட்லரை விட மோசமா. அப்படி எதுவும் கேள்விப்படவில்லையே.

மது said...

//சுப்பிரமணிய சுவாமி முதல் பலரும் சி.ஐ.ஏ. ஏஜண்டாகத்தான் செயல்படுகிறார்கள். //

ஜெயல்லிதா பற்றி உங்களின் மதிப்பீடு என்ன?

தளபதி said...

நேரடி அரசியலில் ஈடுபடும் அமைப்பு என்றால் என்ன

சீர்குலைவு அமைப்பு என்று ஒரு அமைப்பை சிபிஎம் எவ்வாறு வரையறை செய்கின்றது
கட்சி திட்டத்தின் ஒரு அங்கம்தானே வெகுஜன அரங்கு.

கலைவேந்தன் said...

முதலில் ஒரு விசயம், மகஇக ஒரு அரசியல் கட்சியும் அல்ல - புரட்சிகர அமைப்பும் அல்ல. அது நேரடி அரசியலிலும் ஈடுபடும் அமைப்பும் அல்ல. அது ஒரு கலை - இலக்கிய அமைப்பு அவ்வளவுதான்.

இப்படி ஒரு பிதற்றலை நான் உங்களைத்தவிர வேறு யாரிடத்திலிருந்தும் இதுவரை கேட்டதில்லை. பொதுபுத்தியிலுள்ள சாதாரண, கடைநிலை மனிதன்கூட இத்தனை அறிவிலித்தனமாக (மன்னிக்கவும் வேறு வழியில்லை) எழுதமுடியாது.

அரசியலும் கலை இலக்கியமும் வேறு வேறானவையா? தமுஎச வைத்திருக்கும் கலை இலக்கியத்திற்கு எந்த அரசியலும் இல்லை என்பதுதான் இங்கு பதியப்பட்டுள்ள முக்கியமான குற்றச்சாட்டு. அதன் பொருட்டான உங்களது பதில் தெளிவாக இல்லையே.

மகஇகவை புரட்சிகர அமைப்பு இல்லை என்று வரையறுப்பதற்கு முதலில் சிபிஎம் கட்சிக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?

தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறுவதும், சமூகவிரோத ஓட்டுப் பொறுக்கிக் கும்பலுடன் வெட்கமின்றி கூட்டனிகளைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைமுறையாகக் கொண்டுள்ள கட்சியில் இருந்து கொண்டு வேறொரு அமைப்பை “புரட்சிகர கட்சி இல்லை” என்று நீங்கள் விமர்சித்து வருவது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் வகையிலேயே இருக்கிறது.


ஆனால், இது தொடைநடுங்கி நக்சலிச அமைப்பின் வாலாக செயல்படுகிறது என்பதுதான் என்னுடைய விமர்சனம். இதுவரை இந்த தொடைநடுங்கிகள் தங்களது கட்சி பெயர் இதுதான் என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்வரவில்லை. மேலும், அவர்களது அன்றாட அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் மகஇக பெயரிலேயே நடைபெறுகிறது. தங்களது அரசியல் கட்சியை வெளியே சொல்லுவதே கிடையாது. அதனால்தான் சொல்கிறோம் இது புரட்சிகர அமைப்பு அல்ல சீர்குலைவு அமைப்பு என்று. இதனை அரசியல் ரீதியாக இப்படித்தான் விமர்சிக்க முடியும். அடுத்து, இது ஒரு என்.ஜீ.ஓ. அமைப்பு என்பதே என்னுடைய விமர்சனம். இதற்கான நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமா? கிடையாது!

இது முழுக்க முழுக்க முதலாளித்துவ கைக்கூலிகளின் மொழியாகும்.

வீழ்த்தப்பட வேண்டிய எதிரியைக் கொண்டு அரசியல் நடைமுறையை நேக்குகின்ற புத்தியினை உங்கள் கட்சி கொண்டிருக்க வில்லை என்பதனை இந்த பதில் தெளிவாகத் தோலுறிக்கிறது.

காந்தி வெள்ளையனின் கையிலிருந்த ஆயுதத்தைக் கண்டிக்காமல், எதிர்த்துப் போராடும் குழுக்கள் வைத்திருந்த ஆயுதத்தை மட்டும் கண்டித்த அசிங்கத்தைப் போன்றது இது. உங்கள் கட்சியினைச் சார்ந்த உறுப்பினர்கள் நந்திகிராம மக்களுக்கு எதிராக கடுமையான ஆயுதங்களுடன் பொறுக்கித்தனம் செய்யவில்லையா?

நந்திகிராம போராட்டம் வர்க்கப் போராட்டம் என்றால், சிபிஎம் எந்த வர்க்கத்துக்காக அன்று களத்தில் நின்றது. அது எதிர்த்து நின்ற வர்க்கம் எது?

நக்சல்பரி புரட்சியாளர்களை ஒழிப்பதற்காக அரசும் முதலாளீகளும் ஸ்பான்சர் செய்து நடத்தும் சல்வாஜூதும் என்கிற குண்டர்படையினை ஆதரித்து பேசும் உங்களுக்கு எந்த ஒரு நக்சல்பரி அமைப்பையும் விமர்சிக்கும் தகுதி இல்லை.

இதற்கெல்லாம் மேலாக,
மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும் தலைமறைவு அமைப்பு இல்லை என்று சொல்லி முகவரியினையும் தொடர்புகொள்ள வேண்டிய நபரையும் அவரது தொலைபேசி எண்களையும் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டுவருவது அனைவருக்கும் தெரியும்.

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்கள் காடுகளிலிருந்து வெளியிடப்படுவது கிடையாது. அவை தகுந்த முகவரியிலிருந்துதான் வெளியிடப்படுகிறது.

இங்கு பிரச்சினை வெளிப்படையாக இயங்குவதா அல்லது மறைமுகமாக இயங்குவதா என்பது அல்ல.
ஜெயலலிதாவின் பாதணிகளையும் கருணாநிதியின் பாதணிகளையும் கம்யூனிசத்தின் பெயரில் தாங்குவதா என்பதுதான் பிரச்சினை.

இத்தகைய அரசியல் அசிங்கத்தைக் கண்டிப்பவரை, தக்க பதில்களால் எதிர்கொள்ளாமல் அவர் தலைமறைவானவரா வெளிப்படையானவரா என்று நீங்கள் வைக்கும் பதில்கள் மிகவும் மலிவாக இருக்கிறது. உங்களது அறிவு நாணயத்தை அது கேள்விக்குள்ளாக்குகிறது தோழரே!

கலைவேந்தன் said...

அடுத்து சி.பி.எம். முத்துராமலிங்கத் தேவருக்கான குருபூசை நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை என்பதே எங்களது அரசியல் ரீதியான முடிவு.

இந்த ஒரு பதில் போதும் நீங்கள் பதிகின்ற கருத்துக்கள் அனைத்தும் சுத்த மோசடி என்பதற்கு.

உங்களுடைய கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராசன் தேவர் நூற்றாண்டுவிழாவில் குருபூசையில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்ததை பத்திரிக்கையில் வெளிவந்த புகைப்பட ஆதாரங்களைக் கொண்டே என்னால் இங்கு நிரூபிக்க முடியும்.

அவர் முத்துராமலிங்கத்தின் குருபூசையில் கலந்து கொண்ட செய்தியினை தீக்கதிரிலிருந்தே என்னால் எடுத்துக்காட்ட முடியும். ஏனென்றால் அந்தக் கேவலம் நடந்தபோது நான் சிபிஎம் கட்சியின் ஆதரவாளராகத்தான் இருந்தேன். அந்த அசிங்கம் பொறுக்காமல்தான் வெளியேற முடிவெடுத்தேன்.

சிபிஎம், சிபிஐ கட்சிகள் தேவர் அரசியலில் எந்த அளவுக்கு தரம்தாழ்ந்து நடந்து கொண்டார்கள் என்பதை முதுகுளத்தூர் கலவரம் எனும் நூலில் தினகரன் திரைகிழித்திருக்கிறார். நேரமிருந்தால் படித்துபாருங்கள் தோழரே!

கலைவேந்தன் said...

தமுஎச குறித்து அவர்களது கருத்து முற்றிலும் தவறானது. தமுஎச என்பது முற்போக்கு கலை - இலக்கிய கருத்துக்ளை தமிழகத்தில் பரவலான பாமர மற்றும் படித்த மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அது வருடத்திற்கு ஒரு பஜனை கச்சேரி நடத்தும் ம.க.இ.க. போல் செயல்படுவதில்லை. மாறாக தமுஎச மக்கள் மத்தியில் ஆழமாக வேறுன்றியுள்ளது. இது ஒரு வெகுஜ மேடை. இந்த வெகுஜன மேடையை கட்சி மேடையாக மாற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டுள்ளது ம.க.இ.க கும்பல். அதாவது. அதைதான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமுஎசவை “மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது” என்றும் மகஇக நடத்துகின்ற தமிழ் மக்கள் இசைவிழாவை பஜனைக் கச்சேரி என்று மதிப்பிடுகின்ற அளவுக்கு உங்களது காழ்புணர்ச்சி மேலோங்கியிருக்கிறது. இதைத்தான் வெறும் வசைகள் என்றும், புழுதிவாரித்தூற்றுவது என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

உங்கள் அரசியலில் உள்ள தொய்வையே அது காட்டுகிறது. தமிழ் மக்கள் இசைவிழாவை நீங்கள் வழக்கமாக “கும்பமேளா” என்று குறிப்பிட்டு இழிவுபடுத்துவது வழக்கம். அதன் பிறகு அந்த ‘கும்பமெளா’வைப் பார்க்க வேண்டும் என்று எண்ணித்தான் மகஇக தோழர்களை நான் முதன் முதலில் அனுகினேன்.

அவர்கள் தமிழ் மக்கள் இசை விழாவின் நேரடி வீடியோவை எனக்குக் கொடுத்தார்கள். அதைப் பார்த்த பிறகுதான், தமுஎச நடத்துகின்ற கலை இரவுக் கூத்துக்கள், சினிமாக் கேவலங்கள் நிறைந்த மேடைகள் அனைத்தையும் குறித்து ஒரு ’நல்ல’ முடிவுக்கு வர முடிந்தது. இப்போது கலை (இழந்த) இரவு விளம்பரங்களைக் கண்டாலே குமட்டலெடுக்கிறது.

வெகுஜென இயக்கங்களுக்கு அரசியல் ஏதும் இருக்கக் கூடாது என்று நீங்கள் இங்கு புலம்புவதிலிருந்து தமுஎச குறித்த எனது மதிப்பீடு மேலும் உறுதியடைந்துள்ளது. இத்தகைய கேவலங்களைத்தான் தோழர் மதிமாறன் ஏற்கெனவே “தமுஎச லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற மனமகிழ் மன்றம்தான்...” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விவரத்தையறிய கீழ் கண்ட லிங்க்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
http://mathimaran.wordpress.com/2008/08/04/article104/

தமுஎச தொடர்பான எனது கேள்விக்கு சிபிஎம் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ‘திருவாளர்’டி.கே.ரெங்கராசன் அவர்கள் அளித்த பதிலைக் கீழ்கண்ட லிங்கில் சென்றால் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

http://mathimaran.wordpress.com/2008/10/09/article-127/

தோழர் சந்திப்பு அவர்களின் பதில்களைத் தொடர்ந்து பிற விடயங்களையும் குடைய வருகிறேன்.

எங்களது தோழர்கள் சந்திப்பின் மீது வைக்க்கின்ற முதன்மையான குற்றச்சாட்டு என்பது பின்னூட்டங்களை நேர்மையாகப் பதிப்பிப்பதில்லை என்பதுதான். ஆனால், எனது பின்னூட்டத்தை நேர்மையாக பதிப்பித்து விவாதித்துக் கொண்டிருக்கும் தோழர் சந்திப்பிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்...

- கலைவேந்தன்.

கலைவேந்தன் said...

தோழர் சந்திப்பு அவர்களுக்கு,

எனது கமெண்ட்டுகளைப் பதிவிட்டதற்காக கோடானு கோடி நன்றிகள்!

இதற்கு முன்னதாக நான் கடைசியாக அனுப்பிய கமெண்ட் ஒன்று உங்கள் கடைக்கண்ணில் பட்டு பதிப்பிக்கப்படாமல் கிடப்பிலிருக்கிறது. அதையும் தயவுசெய்து பதிப்பித்துவிடுங்கள்.

அதில் அநாகரீகமான சொற்கள் எதுவும் இருக்கவே இருக்காது. அப்படி ஏதேனும் இருந்தாலும் இங்கே பதிவிட்டு கேள்வி எழுப்புங்கள், பதில் சொல்ல கடமைப் பட்டவனாக இருப்பேன் தோழா!

- கலைவேந்தன்

விடுதலை said...

ஆனால், இது தொடைநடுங்கி நக்சலிச அமைப்பின் வாலாக செயல்படுகிறது என்பதுதான் என்னுடைய விமர்சனம். இதுவரை இந்த தொடைநடுங்கிகள் தங்களது கட்சி பெயர் இதுதான் என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்வரவில்லை. மேலும், அவர்களது அன்றாட அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் மகஇக பெயரிலேயே நடைபெறுகிறது. தங்களது அரசியல் கட்சியை வெளியே சொல்லுவதே கிடையாது. அதனால்தான் சொல்கிறோம் இது புரட்சிகர அமைப்பு அல்ல சீர்குலைவு அமைப்பு என்று. அடுத்து, இது ஒரு என்.ஜீ.ஓ. அமைப்பு என்பதே என்னுடைய விமர்சனம். இதற்கான நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமா? கிடையாது!


அன்ணே கார்வேந்தன் நீ என்னமோ யோக்கியன் மாதிரி பதில் சொல்ற மொதல்ல மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் என்ன?
உண்மையா உங்க கட்சி பெயர் என்ன?
கட்சி பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை

விடுதலை said...

//காந்தி வெள்ளையனின் கையிலிருந்த ஆயுதத்தைக் கண்டிக்காமல், எதிர்த்துப் போராடும் குழுக்கள் வைத்திருந்த ஆயுதத்தை மட்டும் கண்டித்த அசிங்கத்தைப் போன்றது இது.//

மகஇக அம்பிகள் மட்டும் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் ?

//சிபிஎம் எந்த வர்க்கத்துக்காக அன்று களத்தில் நின்றது. அது எதிர்த்து நின்ற வர்க்கம் எது?//

சிபிஎம் ஆதரவு மக்களையும் தோழர்கள் 42 பேரையும் கொண்று குவித்து உங்களுக்குக்கு கட்டுரை எழுத காசு கொடுத்தப்போது அதைவாங்கிக்ககொண்டு எந்த வர்க்கத்திற்காக மகஇக போராடியது.

கலைவேந்தன் said...

மதிப்பிற்குரிய தோழர் செல்வப்பெருமாள் அவர்களுக்கு,

நான் பல முறை வேண்டுகோள்கள் விடுத்திருந்தும் நீங்கள் நேர்மையாக எனது பின்னூட்டங்கள் சிலவற்றை இன்னும் பதிப்பிக்காமல் இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கும் மேலாக நீங்கள் மவுனம் சாதித்து வருவதால் இனியும் தாமதிக்க நான் தயாராக இல்லை.

நீங்கள் இழிவாகக் கடைபிடித்து வரும் செயல்களான மகஇக வின் மீது புழுதிவாறித் தூற்றும் போக்கு, போலிஸ்காரர்களுக்கு ஆட்காட்டி வேலை செய்வது, ‘நக்சலைட்’ என்று பீதியூட்டி தீக்கதிரில் எழுதுவது போன்ற செயல்களோடு, நான் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரிலேயே மோசடியாக வலைதளத்தை உருவாக்கி அவதூறுகளையும் பதிந்து வருகிறீர்கள்.

இந்நிலையில் உங்களை மேலும் கூடுதலாக கவனம் செலுத்தி உங்கள் கட்சியிலுள்ள நேர்மையான தோழர்களிடமிருந்து தனிமைப் படுத்த வேண்டும் என்கிற நோக்கில் கீழ்கண்ட வலைதளம் ஒன்றைத் தனிப்பட்ட வகையில் தொடங்கியிருக்கிறேன்.

வினவு தளத்திலும் பிற தோழர்களது தளங்களிலும் எமது பத்திரிக்கைகளிலும் அவ்வப்போது பதியப்படுகின்ற விமர்சனங்களைப் பார்த்தே தொடைநடுங்கிக் குமைந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த வலைதளம் கூடுதல் சவாலாக இருக்கும் என்பதனை மிகவும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் பதியப்பட்ட பல்வேறு சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களும் இத்தளத்தில் தொகுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். தமுஎசவில் என்னோடு பணியாற்றிய பல்வேறு தோழர்களின் ஆதரவோடுதான் இத்தளத்தைத் தொடங்கியிருக்கிறேன்.

விவாதங்களை நேர்மையாக பங்கேற்க பயந்து அவதூறுகளையும் வசவுகளையும் மட்டும் பதில்களாகத் தந்து என்னை இந்த வலைதளத்தைத் தொடங்க வைத்த உங்களுக்கும் (சந்திப்பு (எ) செல்வப் பெருமாள்), சிபிஎம் கட்சியின் யோக்கியதையை அப்படியே காட்டும் கண்ணாடியைப் போன்று இணைய பக்கங்களில் எழுதிவரும் ‘விடுதலை’ என்கிற ரமேஷ்பாபுவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- கலைவேந்தன்.
http://policommunists.blogspot.com/

இதுவரையிலான பதிவுகளின் தலைப்புகள் உங்கள் பார்வைக்காக.....

1. “போலி(கம்யூனிஸ்டு)கள்” தளத்திற்கான தேவை பற்றி...

2. பாசிஸ்ட் சிபிஎம் கட்சியும்! லெனின் சொல்லும் ஜனநாயகப் புரட்சியும்!!

3. அணுசக்தி ஒப்பந்த பேரம்! இந்திய-அமெரிக்க கூட்டுப்பயிற்சிக்கு சோரம்!! - போலிகம்யூனிஸ்ட் சிபிஎம்மின் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பாருங்கள்!!!

4. டாட்டாவும் ஆர்.எஸ்.எஸ்.சும் பங்காளிகள்! எதிர்த்துக் கேட்கும் புரட்சியாளர்கள் ஜென்ம விரோதிகள்!! - சிபிஎம் கட்சியின் ‘குண்டர் கொள்கை’....

இன்னும் இன்னும் தொடரும்......

Anonymous said...

பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா?

எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான்.

பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச் சித்தன் பாட்டு 'வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன்.