January 06, 2009

புத்தகம் பேசுது... புத்தகம் பேசுது.... புத்தகம் ஏதோ பேசத் துடிக்குது!

எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் கிராமப்புற மக்களின் இதய வாசல் திறக்கப்பட்டது 1995-1998களில். அறிவொளி இயக்கப் பாடல்கள் எழுத்தறிவற்ற மக்களின் பார்வைகளையும் - சிந்தனைகளையும் திறந்துவிட்டது. புதிய வாசல்களும் - வெளிச்சமும் அவர்கள் வாழ்வில் இடம் பெற்ற காலம் அது. அறிவொளி இயக்கம் சென்ற கிராமங்களில் எல்லாம் - தன்னார்வம் மிக்க தொண்டர்களும் - சமூகத்தின் விடியலுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தயார் என்று முன்னுக்கு வந்த மாணவர்களும் - மாணவிகளும் ஏராளம்! ஏராளம்!... இன்று அதன் மூலம் விழிப்புணர்வு பெற்றவர்கள் தங்களது வாசிப்புத் தளத்தை விரிவாக்கியுள்ளனர். இதில் களப்பணியாளர்களாக பணியாற்றியவர்கள் இந்த சமூகத்தின் ஆல விருட்சமாய் தலைவர்களாய் உயர்ந்துள்ளனர்...

அந்த இயக்கத்தின் பாடல்களில் ஒன்றுதான்
புத்தகம் பேசுது...
புத்தகம் பேசுது...
புத்தகம் பேசுது...

புத்தகம் ஏதோ பேசத் துடிக்குது
உன்னிடம் வந்து இருக்கத் துடிக்குது...

ஆ... ஆ.... இ.... ஈ.... படி படி
அது முன்னேற்றத்தின் முதல்படி...

என்று உயிர் எழுத்துக்களுக்கு உயிர்ப்பூட்டியது அறிவொளி இயக்கம் என்றால், தற்போது தலைவர்களாய் - சமூக மாற்றத்திற்கான போராளிகளாய் களத்தில் நின்று அரசியல், தத்துவம், பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், மார்க்சியம், தலித்தியம், பின்நவீனத்துவம், பெண்ணியம்... என்று இந்த சமூகத்தின் தோற்றுவாய்களாய் மலர்ந்துள்ள கருத்துக்களை எதிர்கொண்டு - ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைத்து இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நமக்கு வழிகாட்டியாய்... படிக்கத் தூண்டும் தூண்டு கோலோய் எழுந்து நிற்கிறது புத்தகம் பேசுது மாத இதழ்.



அறிவுத்துறை பெருக்கத்திற்கு ஏற்ப - மக்கள் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு விடை தேடும் புத்தகங்கள் நாள்தோறும் ஏராளமாய் வந்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு தொழில்நுட்பமும் ஒரு காரணம். தமிழகம் முழுவதும் எண்ணற்ற பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் வெளியீடுகளை செழுமைப்படுத்தி வருகிறது. புதிய புதிய இளம் எழுத்தாளர்களின் சிந்தனையோட்ட மலர்களாய் புத்தகங்கள் பூத்துக் குலுங்குகிறது. எதை வாங்குவது... எதை விடுவது? எந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று அத்தனையும் அறிந்து கொள்ள வழிகாட்டுகிறது புத்தகம் பேசுது.

அது மட்டுமா? ஒவ்வொரு இதழிலும் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்கள் - அரசியல்வாதிகள் - ஆய்வாளர்கள் - சிந்தனையாளர்கள் என்று அவர்களது பேட்டிகளையும் சுமந்து வருகிறது புத்தகம் பேசுது. இதனால் நமக்கு வழிகாட்டிகளாய் உள்ள தலைவர்கள் பதித்த பாதைகளையும் - அவர்கள் படித்த புத்தகங்களையும் நாம் அறிந்து கொள்ள முடிவதோடு... அவர்களது உள்ளத்தை தொட்ட புத்தகங்களையும் - மாற்றத்தை கொடுத்த புத்தகங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதுதான் புத்தகம் பேசுது இதழின் மிகச் சிறந்த சிந்தனை.

உள்ளூர் சிந்னையாளர்கள் மட்டுமல்ல; உலகச் சிந்தனையாளர்களின் படைப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது புத்தகம் பேசுது இதழ்.

அது மட்டுமல்ல எந்த பதிப்பகம் என்ன மாதிரியான புத்தகங்களை வெளியிடுகிறது? வெளியிட்டுள்ளது என்று அறிந்து கொள்வதற்கு மாதந் தோறும் விலைப் பட்டியலுடன் - புத்தகப் பட்டியலையும் நமக்காக சுமந்து வருகிறது புத்தகம் பேசுது.

சிந்தனையை கூர் தீட்டிக் கொள்வோர்க்கு சொர்க்கவாசல் திறப்பது போல் திறக்கவுள்ளது 32வது சென்னை புத்தக கண்காட்சி, (செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, பச்சையப்பன் கல்லுரி எதிரில், சென்னை) வருகிற ஜனவரி 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில்...

சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு - பாரதி புத்தகாலயம் சார்பில் வெளிவரும் புத்தகம் பேசுது இதழுக்கான ஆண்டு சந்தா சிறப்புச் சலுகையுடன் வழங்க உள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்டு முழுவதும் புத்தகங்கள் நம்முடைய பேசுவதற்கு ஒரே வழி புத்தகம் பேசுது இதழை உங்கள் இல்லத்தின் விருந்தினராக அல்ல உறுப்பினராக மாற்றுங்கள்...

புத்தகம் பேசுது
மாத இதழ்
ஆண்டுச் சந்தா ரூ. 75
(வழக்கமான ஆண்டு சந்தா தொகை ரூ. 120)

புத்தக கண்காட்சியில் கடை எண் : S-32

இந்த சந்தா சென்னை புத்தக கண்காட்சி நடைபெறும் காலம் வரை மட்டுமே என்பதால் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு புத்தகம் பேசுது இதழின் உறவினராக நீங்கள் மாறலாம்.
சந்தா அனுப்ப வேண்டிய முகவரி
புத்தகம் பேசுது
411, அண்ணா சாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600 018.
தொலைபேசி : 24332424
நாகராஜன் : 94449 60935

டி.டி. அல்லது மணி ஆர்டர் "bharathi puthakalayam" என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.

4 comments:

venu's pathivukal said...

Dear Comrade,

Very well done!
You have done a nice thing by provoking interest and inspiration in readers towards subscribing to our Puthakam Pesuthu magazine..
There is a small printing error in the word எந்த பதிப்பம். Kindly correct. See you in the Book fair. Hope you went through the January issue of the magazine...eagerly looking forward to your views on the review article by me (on Kuzhanthaikalai kondaduvom book) and by Dr P V Venkataraman (on Thoongamal thoongi book).

s v venugopalan

சந்திப்பு said...

Dear Comrade Venu...

Thanks for your comment. I have corrected as you findout. I cound not get BWU.

Anonymous said...

Dear Com,

Good approach to promote Puthagam Peasudhu. Really the contents and articles are incredible, which makes us to preserve the each and every issue. All the best. Keep going...

N.NARAYANAN
ARUPPUKOTTAI

சந்திப்பு said...

Thankyou Thiru. Narayanan. Absolutely correct. Each and every has a rich content. All issues speak to us something forward.