சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், புதிய தகவல் தொழில்நுட்பப் பொருளா தாரத்தில் இதுநாள்வரை வெளியில் தெரி யாது நடைபெற்றுவந்த ஊழல்களில் மாபெரும் கொள்ளையாகும். நிறுவனத் தின் கணக்குகள் பல ஆண்டுக் காலம் எவ்விதமான ஆய்வுக்கும் உட்படுத்தப் படாமல் மிகைப்படுத்தப்பட்டு காட்டப் பட்டிருப்பது நம்பமுடியாததாகும். இதன் பிரதானமான உரிமையாளர், நிறுவனத் தின் வருவாய் மற்றும் லாபம், கணக்குப் புத்தகங்களில் மிகப்பெரிய அளவில் மிகைப்படுத்திக் காட்டப்பட்டு வந்திருக் கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதானது, இந்நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் கொள்ளை நடந் திருப்பதை மூடி மறைக்கும் விதத் திலேயே இருந்திருக்கிறது.
பிரதமர், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத் தில் நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரணை செய்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ‘மோசமான மோசடிகள் புலனாய்வு அலுவலகத்தை’ (ளுகுஐடீ-ளுநசiடிரள குசயரன ஐnஎநளவபையவiடிn டீககiஉந) கோரியிருக் கிறார். இவ்வாறு இதனைச் செய்திடும் அதே சமயத்தில், இதன் மூலம் மேற் கொள்ளப்படும் புலனாய்வானது, இந் நிறுவனத்தில் மோசடியாக செய்யப்பட்ட கணக்குகளை ஆய்வுசெய்வதோடு நின்றுவிடாது, மோசடி தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். சத்யம் நிறுவனத்தின் உரிமையாளரான ராம லிங்க ராஜு நிறுவனத்தில் வருவாய் அளவு 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள நிலையில், அவை கணக்குப் புத் தகங்களில் 24 சதவீதம் என்கிற அளவில் காட்டப்பட்டது என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறார். இவ்வாறாக சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இந்நிறுவனத்தில் மோசடி நடைபெற்றி ருக்கிறது.
இந்நிறுவனத்தின் நிதிநிலைமை குறித்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட கணக்கு பொய்யாக வெளி உலகுக்குத் தெரியப் படுத்தப்பட்டதால், இந்நிறுவனத்தின் பங் குகளின் விலைகளும் பங்குச்சந்தையில் உயர்ந்த அளவில் இருந்திட வகை செய் தது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் பங் குகள் அதிக விலை போனது. இவ்வாறு மிகைப்படுத்தப்பட்ட விலைகளால் கிடைத்திட்ட லாபத்தைக் கொண்டு உண்மையான சொத்துக்களையும் வாங்கியிருக்க முடியும். 2001க்கும், நிறுவ னத்தில் மோசடி நடந்துள்ளது என்று வெளி உலகுக்குத் தெரியவந்த 2008 செப் டம்பருக்கும் இடையில் சத்யம் நிறு வனத்தில் ராஜு குடும்பத்தினர் பெற்றி ருந்த பங்குகள் 25.6 சதவீதமாக இருந் தது, 8.65 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. ராஜு குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு முன், 2009 ஜனவரியில் இது மேலும் வீழ்ச்சியடைந்து 5.13 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
சத்யம் நிறுவனத்தின் நிதிநிலைமை மிகைப்படுத்தப்பட்டதன் மூலம், ராஜு குடும்பத்தைச் சேர்ந்த மற்ற எட்டு கம்பெ னிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்திருக் கிறார்கள். மேய்டாஸ் பிராபர்டிஸ் மற்றும் மேய்டாஸ் இன்ஃப்ரா நிறுவனங்களும் இதில் அடங்கும். அவையும் புலனாய் வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சத்யம் நிறுவனத்தின் தணிக்கை நிறுவனமான பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தின்(இந்நிறுவனம் இதற்கு முன் மாபெரும் ஊழல் - மோசடி யில் மாட்டிக்கொண்ட குளோபல் டிரஸ்ட் வங்கிக்கும் தணிக்கை நிறுவனமாகும்) பங்களிப்பும் மேற்படி ‘மோசமான மோசடி கள் புலனாய்வு அலுவலகத்தால்’ புல னாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் விசாரணையானது சத்யம் நிறு வனத்தில் முதலீடு செய்யப்பட்ட பொதுப் பணம் எப்படி ராஜு குடும்பத்தினரால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வு செய்திட வேண்டும். மேலும் ராஜு குடும்பத்தினருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் அரசாங்கம் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் அரசாங்க நிலத்தைத் தாரை வார்த்திருக்கிறது. அது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் எதிர்கால நலன் சம்பந்தமாக கேள்விக் குறி உருவாகியிருப்பது இயற்கையே. ஊழியர்கள் தொடர்ந்து ஊதியம் வாங்கு வதை உத்தரவாதப்படுத்தக் கூடிய வகையில் அரசாங்கத்தால் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் சில பரிசீலனை செய்யப்படுவதாக அறிக்கைகள் வெளி யாகியிருக்கின்றன. ஊழியர்களின் நலன் காக்கப்படுவது அவசியம்தான். அதற் காக அரசு, மக்கள் வரிப்பணத்தை முத லீடு செய்திடக் கூடாது. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிற பட்டியலில் காட்டியுள்ளபடி, ராஜு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கம்பெனிகளுக்கு ரியல் எஸ்டேட் சொத்துக்கள் 17 ஆயிரம் ஏக் கருக்கு மேல் இருக்கின்றன. இவற்றை அரசு பறிமுதல் செய்து பணமாக மாற்றி அதன் மூலமாக ஊழியர்களின் நலன் களை பாதுகாக்க வேண்டும்.
உலக அளவில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சத்யம் நிறுவனமானது 2002ஆம் ஆண்டு ஒரு முறையும் இப்போது 2008ஆம் ஆண்டு இரண்டாம் முறையும், “தங்கமயில் விருது” வாங்கியிருப்பது உலக அளவி லான பன்னாட்டு நிறுவன அமைப்பு களின் மகா மோசடி செயல்பாடுகளுக்கு மற்றுமோர் உதாரணமாகும்.
கடந்த காலங்களில் ஹர்சத் மேத்தா, யுடிஐ, கேத்தான் பரேக், ஜிடிபி போன்ற மெகா ஊழல் மோசடிகள் நடைபெற்ற ஒவ்வொரு சமயத்திலும் அரசாங்கமா னது முதலீட்டாளர்களைப் பாதுகாக்கி றோம் என்ற பெயரில் சில நடவடிக்கை களை மேற் கொண்டன. அத்தகைய ஊழல் மோச டிகளில் ஈடு பட்ட நபர்க ளின் சொத் துக்கள் மீது என்ன நட வடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டன என்று எந்தத் தகவல்களும் கிடையாது. சத்யம் நிறுவன ஊழலில் முதலீட்டாளர் களைப் பாது காக்கிறோம் என்ற பெய ரில் அரசாங்கம் மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்திடக் கூடாது. சத்யம் நிறுவனத்தைக் காப் பாற்றிட பொதுத்துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டால், அந்த வங்கிகளுக்கு, அதற்கேற்ற வகையில் சத்யம் நிறுவனத் தின் பங்குகள் அளிக்கப்பட வேண்டும். எப்படிப் பார்த்தாலும், ராஜு குடும்பத்தாரின் கம்பெனிகளின் சொத்துக்களைப் பறி முதல் செய்து, அவற்றின் மூலம் ஊழியர் களைப் பாதுகாத்திடவும், இந்த மாபெரும் கொள்ளையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும் நடவடிக்கைகள் மேற்கொள் வதே சாலப் பொருத்தமானதாகும்.
இறுதியாக, பிரதமரும் திட்டக் கமிஷ னில் உள்ள அவரது நெருங்கிய சகாக் களும் இனி வருங்காலங்களிலாவது, முதலாளித்துவ அமைப்பை உயர்த்திப் பிடிப்பதை விட்டொழித்திட வேண்டும். சத்யம் நிறுவனம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும், ‘நயவஞ்சகமே, உன்பெயர் தான் முதலாளித்துவமா’ என்பதை மீண் டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக் கிறது.
ஆந்திர அரசாங்கத்தால் சத்யம் மற் றும் அதன் குடும்ப உறுப்பினர்களுக்கு அளித்துள்ள நிலங்களின் விவரம்.
கம்பெனி இடம் ஓதுக்கப்பட்ட நிலத்தின் அளவு
சத்யம் பகதூர் பள்ளி, ரங்கா ரெட்டி 10.5 ஹெக்டேர்
ஹைடெக் சிட்டி,மாதாபூர் 12 ஹெக்டேர்
தொட்லகொண்டா 20 ஹெக்டேர்
விசாக் 6.7 ஏக்கர்
காபுலபடா 50 ஏக்கர்
மேய்டாஸ் கோபன்பள்ளி, ரங்காரெட்டி 15.96 ஹெக்டேர்
பிராபர்டிஸ் குண்ட்லா போச்சாம்பள்ளி,
ரங்காரெட்டி 14.15 ஹெக்டேர்
பச்சாபள்ளி, ரங்காரெட்டி 29.9 ஹெக்டேர்
மேய்டாஸ் ஹைதராபாத் மெட்ரோ ரயில் 269 ஏக்கர்
இன்ப்ஃரா ஸ்டேஷன்கள். டிப்போக்கள்
மசூலிப்பட்டினம் போர்ட் ஆரம்பத்தில் 412 ஏக்கர்
பிராஜக்ட் கொடுக்கப்பட்டது. மொத்தம் ஒதுக்கப்பட்ட நிலத்தின் அளவு
2172 ஏக்கர்
மொத்தம் 17.408.53 ஏக்கர்கள்
தமிழில்: ச. வீரமணி
|
3 comments:
மே.வங்கக்த்திலும்,கேரளாவிலும் இதே முதலாளித்துவ கம்பெனிகளுக்கு
வரவேற்பு கொடுத்து முதலீடு செய்யுங்கள் என்று கெஞ்சுவது யார்.
அம்பானிகள் செய்யாத மோசடியா?.
அந்த அம்பானிகள் மே.வங்கத்தில்
முதலீடு செய்ய வேண்டும் என்று
கோரியது பு.பட்டாச்சார்யா.அப்போது
பீப்ள்ஸ் டெமாகரசி எங்கே போனது.
ஊழல் பணத்தில் உருவான
இந்தோனேஷிய சலீம் குழுமம்
மே.வங்கத்தில் முதலீடு செய்யும் போது எந்த விமர்சனமும் கிடையாது.
வா வா என்று மே.வ சிபிஎம் வரவேற்றதை மறுக்க
முடியுமா.நயவஞ்சமே உன் இன்னொரு பெயர் சிபிஎம்.
மேற்குவங்கத்திலும், கேரளத்திலும் இருப்பது ஒரு சோசலிச ஆட்சியல்ல என்ற பட்டறவு கூடவா உங்களுக்கு இல்லை! அதுவொரு முதலாளித்துவ சமூக அமைப்பிற்குள் இருக்கும் மாநில அரசு மட்டுமே! இன்னும் சொல்லப்போனால் அது ஒரு பெரிய முனிசிபாலிட்டி அவ்வளவுதான். சட்ட வரையரைக்கு உட்பட்டு மக்களுக்கு பல நன்மைகளை இந்த அரசுகள் வழங்கி வருகிறது. மேலும் மார்க்சிஸ்ட்டுகள் தலைமையில் இருக்கும் மேற்கண்ட அரசுகள் அங்குள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவதும் தலையாய கடமையாகிறது. அந்த அடிப்படையிலேயே பல முதலாளித்துவ நிறுவனங்களை தொழில் முதலீடு செய்வதற்கு அழைக்கிறது. அது தேவையும் கூட... இன்னும் தொடரும்... ஆனால் அப்படியான தொழில் வாய்ப்பு எதுவும் அந்த மக்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் மமதாவும் - நக்சல் மற்றும் பா.ஜ.க. கூட்டணியினரும் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அதையே நீங்கள் இங்கே தொடர்ந்து வாந்தியெடுத்துக் கொண்டு இருக்கீறீர்கள். 30 ஆண்டுகளாக வெறும் எழுத்து வியாபாரம் செய்ததை தவிர வேறு எதை செய்தீர்கள். சீர்குலைவு செய்து புரட்சி செய்யலாம் என்பது உங்களது கனவு. அது நடக்காது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக உங்கள் அமைப்புகள் சிதுற தேங்காய்களாக நாளுக்கு நாள் போய்கொண்டிருக்கிறது.
முதலாளித்துவ நிறுவனங்களின் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு எதிரகாவும் - ஊழல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. அதுவும் நடக்கும். உங்களைப் போல் எதையும் செய்யாமல் வாயில் அசைப் போட்டுக் கொண்டேயிருப்பதால் எதுவும் நடக்காது. அது சரி ஏதோ நீங்கள் புதிய ஜனநாயக புரட்சி நடத்தப்போவதாக கூறுகிறீர்களே அந்த அப்படி ஏதாவது நடந்தால் அந்த ஆட்சியில் தனியார் முதலாளிகளே இருக்க மாட்டார்களா? (மன்னிக்கவும் உங்களுக்கு சொந்தமாக உருப்படியான திட்டம் இல்லை என்பது வேறு விசயம்) இருப்பினும் கேள்வி எழுகிறது. குறைந்தபட்சம் உங்களால் ஏதோவது ஒரு கிராம வார்டையாவது பிடிக்க முடியுமா? உங்களுக்குத்தான் மக்களைக் கண்டாலே அலர்ஜீயாச்சே!
தோழர் சந்திப்பு,
மிக அருமையான பதிப்பு.
ம.க.இ.க கண்மணிகள் யதார்த்த உலகில் இல்லை. கற்பனையில் புரட்சி செய்து கொண்டிருப்பவர்கள். எதை பதிந்தாலும் கீறல் விழுந்த ரிக்கார்டு போல் பேசுவதே அவர்களின் வாடிக்கை.நாம் கூறாதவற்றை கூறியே ஆகவேண்டுமென்று (அவர்கள் விரும்பும் பதில்) அடம் பிடித்து அதர்க்காக எல்லா கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி பதிவிடுவதுதான் அவர்களின் விவாத நேர்மை.
Post a Comment