August 15, 2008

கமலாலய காவிக் கம்பத்தில் தேசிய கொடி!

நம் தேசத்தின் 61வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வரும் வேளையில், தேசிய கட்சியான பா.ஜ.க.வின் மாநில அலுவலகமான கமலாலயத்தில் இன்று காவிமயமான (காவி - பச்சை நிறக் கம்பம்) பா.ஜ.க. கொடி கம்பத்திலேயே தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். அதன் மாநிலத் தலைவர் இல. கணேசன் உட்பட பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
தேசிய கொடியை உபயோகிப்பது குறித்து 2002 ஆம் ஆண்டு 'இந்திய கொடிச் சட்டம் 2002' கொண்டுவரப்பட்டது. அதாவது, தேசிய கொடியை அதற்கே உரிய கண்ணியத்தோடும், விசுவாசத்தோடும், மரியாதையோடும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளது. குறிப்பாக அதனை கண்ட நேரத்தில், கண்ட இடங்களில் எல்லாம் பயன்படுத்தக்கூடாது என்றும், ஏன் சட்டையின் டிசைனாகவோ அல்லது நிறுவனங்களின் விளம்பரங்களிலோ பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளதோடு, அது ஏற்றப்படும் கொடிக்கம்பம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
தேசிய கொடியை பயன்படுத்துவது சம்பந்தமான சட்டத்தை கீழ்க்கண்ட இணையதளத்தில் படித்துக் கொள்ளலாம்.
http://india.gov.in/outerwin.htm?id=http://mha.gov.in/pdfs/flagcodeofindia.pdf
ஆறு ஆண்டுக்காலம் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதுதான் இந்த சட்டமே கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழக பா.ஜ.க. தலைமை இது குறித்து எந்தவிதமான கவலையும் படாமல் பா.ஜ.க. கொடி கம்பத்திலேயே தேசிய கொடியை ஏற்றியுள்ளது. தேசிய கொடியை அவமதித்த பெரும் குற்றமாகும்!
இந்த தேசிய கொடியை அவமதித்த குற்றத்திற்காக பா.ஜ.க. தலைமை மீது நம்முடைய நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்குமா? எடுக்க வேண்டும்!


அகண்ட பாரத இந்து தேசியம் பற்றி மட்டுமே கனவு கண்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் அருமை தெரியுமா? என்ற கேள்விதான் எழுகிறது!

4 comments:

Anonymous said...

அதோடு காங்கிரஸ் கட்சிகாரனுவ கொடியையும் மாத்த சொல்லணும். சில சமயம் ஒரே கன்பியூனாயிடுது.

சந்திப்பு said...

Thanks anony

பாபு said...

நம் நாட்டிலேயே சில இடங்களில் தேசிய கோடியை ஏற்ற முடியவில்லை அதை பற்றி எழுதுவீர்களா??

சந்திப்பு said...

நம் நாட்டிலேயே சில இடங்களில் தேசிய கொடியை ஏற்ற முடியவில்லை என்று குறிப்பிடும் நீங்கள் அதற்காக இதனை நியாயப்படுத்தப் போகிறீர்களா? பரவாயில்லை இவர்கள் ஏற்றவாவது செய்தார்களே என்று! இல்லை. ஏற்றாமல் இருந்தால் கூட பரவாயில்லை அவமதிக்க கூடாது. பெயருக்கு ஏற்றக் கூடாது. இவர்களுக்கு இருப்பது இந்திய தேசிய பற்றல்ல. இந்துத்துவ பற்று. எனவே இவர்களிடம் பாசிச அரை கோணல் புத்திதான் இருக்கும்.

மற்ற இடங்களில் ஏற்றாமல் இருப்பதற்கு நாம் இந்தியர்களாக நடந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். அவர்களை இந்தியர்களாக மாற்றுவதில் தோல்வியுற்றுள்ளோம் என்று அர்த்தம். எனவே நமது உயர்ந்த ஜனநாயகம் அனைத்து பகுதி மக்களையும் சமமாக பாவிக்கவும் - அவர்களுக்கு ஆதரவாக நிற்கவுமானதாக மாற்ற வேண்டும். இந்துத்துவவாதிகளைப் போல் இசுலாமியர்களையும், கிறித்துவர்களையும் தேச விரோதிகளைப் போல் அணுக கூடாது.