July 16, 2008

அம்பானிகள் முன்னேற்றக் கூட்டணி அரசு

மத்திய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்ட பின்னர். இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியும் அதன் எடுபிடிகளும் எடுக்கும் முயற்சிகள் நாட்டு மக்களை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. பெரும்பான்மையை நிருபிப்பதற்காக எம்.பி.க்கள் 30 கோடி முதல் 50 கோடி வரை விலை பேசுவதும், ஆட்சிக்கு ஆதரவு தருவதற்காக மற்ற சிறிய மற்றும் சுயேச்சைகள் தங்களது சுயநல கோரிக்கைகளை முன்னுக்கு வைத்து மிரட்டுவதும் வேடிக்கையாக அல்ல; வேதனையாக உள்ளது.

இந்திய ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் கூட தற்போதைய குதிரை வியாபாரத்தை கண்டு வெட்கித் தலைகுனிகின்றனர். ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக தங்கள் கொள்கை - கோட்பாடுகள் என அனைத்தையும் கைவிடத் தயாராகி விட்டனர் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும்.

இது ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்கையில் முகேசு அம்பானியும் - அனில் அம்பானியும் அடிக்கும் கூத்தைப் பார்க்கும் போது. இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் அசுரர்களாக - சர்வ வல்லமைப் படைத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் ஏதோ இந்த இரண்டு பேருக்கும் நிகழும் குடும்பச் சண்டைப் போல இதனை காட்டி திசை திருப்பி இவர்கள் மீது ஒரு கரிசனத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். உண்மை என்ன? கடந்த 10 ஆண்டு காலமாக இந்த அம்பானிகளின் சொத்து மதிப்பு பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இருவருமே உலகப் கோட்டீசுவர்களின் வரிசையில் 10 இடத்திற்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அனில் அம்பானி சமாஜ்வாடியைப் பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றுகிறார். மறுபுறம் முகேசு அம்பானி மன்மோகனை பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றுகிறார். இருவரும் செய்வது என்ன? இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதுதான் இருவரின் நோக்கமும். ஆனால் ஏதோ திசை மாறிச் செல்பவர்கள் போல ஒரு காட்சி இங்கே பரப்பப்பப்படுகிறது. இந்த பெரு முதலாளிகள் இந்திய மக்களின் இரத்தத்தை அட்டைப் போல் உறிகின்றனர். இந்தியாவின் முக்கிய கேந்திரமான தொழில்களில் கொடி கட்டிப் பறப்பது இந்த அம்பானிகள்தான். செல்போன் சேவை, தொலைத் தொடர்புத்துறை, பெட்ரோலியப் பொருட்கள், மளிகை வியாபாரம் முதல் மாடு பிடிக்கும் வியாபாரம் வரை இந்த அம்பானிகளின் கைகளிலேயே உள்ளது.

சமீபத்தில் இந்த பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டிய இந்த அம்பானிகள் மீது வரி விதிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தியபோது மத்திய மன்மோகன் பே.. பே... என்று முழித்தார். என்ன காரணம்? தற்போதைய இவர்களது மாடு பிடி வியாபாரத்திற்கு பின்புலமாக இவர்கள் இருக்க வேண்டும் என்று எண்ணுவதே. மொத்தத்தில் தற்போதைய அ.மு.கூ. அரசு அம்பானிகள் முன்னேற்றக் கூட்டணி அரசாகத்தான் செயல்படுகிறது. தலைமை நிர்வாகியாக மன்மோகன் செயல்படுகிறார் அவ்வளவுதான்.

5 comments:

தியாகு said...

மக்கள் ஆட்சியின் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பது அரசியல்வாதியும் அம்பானி போன்ற முதலாளிகளும் தான்

PROLETARIAN said...

OK What about the Best Parliamentarian Somnath Chatterjee?
Is he communist or CongressMan in Communist Party?
Is he really work for people or for the position,fame ?

Dear santhipu i think you CPM allowed Reliance Fresh in Kerala, West Bangal Is n't ?

சந்திப்பு said...

நன்றி தியாகு. தங்கள் கருத்து 100 சதவிகிதம் உண்மையானது.

சந்திப்பு said...

பசி வணக்கம்.

சபாநாயகர் பதவி விலகல் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்குப் பிறகும் கட்சி சார்பற்ற முறையில் நடுநிலைமையோடு உயரிய பதவி வகிக்கும் சோம்நாத் குறித்து மீடியாக்கள் கட்டவிழ்த்து விடும் அவதூறுகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற நம்பாசையே காரணம்.

ரிலையன்ஸ் பிரஸ்ஸை அனுமதித்துள்ளது மத்திய அரசே தவிர மாநில அரசு அல்ல. எங்களதுப் போராட்டம் வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது. அதே சமயம் ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.

Anonymous said...

முகேஷ் அம்பானி மேற்கு வங்க முதல்வரை சந்தித்தால் அது சரி,
அவர் மன்மோகன் சிங்கை சந்த்தித்தால் அது தவறு.அரசு பிழைத்துவிடும் என்ற அதிர்ச்சி
தாங்க முடியாமல் இடதுசாரிகள்
பிதற்ற துவங்கி விட்டனர்.

வால்மார்ட் சீனாவில் இருக்கிறது,சீனப் பொருட்களை வாங்கி தன் கடைகள் மூலம் விற்கிறது.
அது போல் இந்தியாவிலும் கடை
திறக்கட்டும், இந்தியப் பொருட்களை
வாங்கி தன் கடைகள் மூலம் விற்கட்டும். இதனால் நமக்கு நன்மைதான்.
சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள்
அணு உலை நிறுவுகின்றன.சீனாவும்
அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம்
போட்டிருக்கிறது. அது குறித்து
இடதுசாரிகள் வாய் திறக்கமாட்டார்கள்.
மொத்தத்தில் இடதுசாரிகள் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.
அவர்களுக்கு தேர்தலில் மக்கள் ஆப்பு வைப்பார்கள்.2009ல்
பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.
அப்போதுதான் பைத்தியம் தெளியும்.