பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தன்னை இடதுசாரிகள் கொத்தடிமை போல நடத்த முயன்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுவாக அடிமையாகவோ அல்லது கொத்தடிமையாகவோ இருப்பவர்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி மீள்வது வழக்கம். ஆனால் மன்மோகன் என்ன செய்தார்?
தன்னை அடிமைப்படுத்த முயன்ற இடதுசாரிகளிடம் இருந்து விடுதலைப் பெறுவதற்காக அவர்களிடம் தங்களுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு கூறினாரா? அல்லது உங்கள் ஆதரவு வேண்டாம் என்று கூறினாரா? இல்லையே!
இடதுசாரிகள்தான் மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிமைத்தனத்தை கண்டு - அணு சக்தி என்ற பெயரால் இந்த நாட்டையும் - நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் துரோகத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்து ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
தற்போது இதனை தலை கீழாக பேசி கயிறு திரிக்கிறார் மன்மோகன். நாட்டு மக்களை சந்திக்காமல் புறவழியாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்கும் மன்மோகனுக்கு எப்படி நாட்டு மக்கள் மீது மரியாதையோ, விசுவாசமோ இருக்கும்? என்ற கேள்விதான் எழுகிறது!
மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இவர்களது சந்தர்ப்பவாத கூட்டும் - ஊழலும் நாட்டு மக்களை வெட்கித் தலைக் குனிய வைத்துள்ளது. நாட்டு மக்களின் நம்பிக்கையை மன்மோகன் இழந்து விட்டார்!
3 comments:
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பர். கம்யூனிசமும் அளவுக்கு அதிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அழிவே மிஞ்சும். ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போதோ நடைமுறை உண்மையை உணர்ந்து மாறிக்கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் மட்டும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
நன்பர் ராபின் வணக்கம்.
பழமொழி நன்றாக உள்ளது. விசயம்தான் புரியவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் எதை அளவுக்கு அதிகமாக அமலாக்கி விட்டார்கள் என்று தெரிவித்தால் அதன் மீது கருத்துக் கூறலாம்! அதே போல் எந்த விசயத்தில் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று காலாக நின்றார்கள்? இதனை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கும் எதிர்த்தரப்போடும் வைத்துப் பார்க்கவும். உதாரணம் : அணு சக்தி ஒப்பந்தம் அமலாக்கப்பட்டால் இந்தியாவிற்கு அதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இடதுசாரிகள் கூறுகின்றனர். காங்கிரரோ எது நடந்தாலும் பரவாயில்லை நாங்கள் அமலாக்கியே தீருவோம் என்று நின்றனர். இதில் யாருக்கு பிடிவாதம்? எந்த பிடிவாதம் சரியானது? என்பதை நிதானமாக இரண்டு பக்கத்தில் உள்ள நியாங்களையும் அறிந்து நோக்குவது பொருத்தமாக இருக்கும். நன்றி.
santhippu
pm selected from rajiyasabha on 2004. Why aru criticise now. did u knew while support last 4 yrs
robin
r u understand the reason for falling communism in that countries
Post a Comment