July 28, 2008

பயங்கரவாதத்தின் மூன்று முகங்கள்!


பெங்களுரைத் தொடர்ந்து அஹமதாபாத்திலும் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அடுத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு குறி வைத்திருப்பதாக பயங்கரவாதிகள் மிரட்டுகின்றனர். தமிழகத்தில் கூட திருநெல்வேலியில் ஒருவர் பிடிபட்டுள்ளார். இந்த பயங்கரவாதச் செயல்களுக்கு இந்திய முஜாஹீதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அவர்கள் கூறும் போது 1992ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று கூறுகின்றனர்.
பயங்கரவாதிகள் எந்தப் பெயரில் வந்தாலும் அது மக்களுக்கு எதிரானதே! குறிப்பாக சாதாரண - ஏழை எளிய உழைப்பாளி மக்கள்தான் இதுபோன்ற செயல்களால் உயிர் பலியாகின்றனர். அப்பாவி மக்களை இவ்வாறு கொல்வதன் மூலம் பயங்கரவாதிகள் எதைச் சாதிக்க விரும்புகின்றனர்? இசுலாமிய மத அடிப்படைவாதம் - குறிப்பாக ஜீகாதி - புனிதப் போர் என்ற பெயரில் மக்களைக் கொல்வதில் இன்பம் கான்பதை இசுலாமிய மதம் அனுமதிக்கிறதா என்பதுதான் சாதாரண மக்களின் கேள்வி? எந்த மதமும் இதனை அனுமதிக்காது! எனவே மத அடிப்படைவாதிகள் உள்நாட்டு - வெளிநாட்டு பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு நமது நாட்டின் ஒற்றுமையை துண்டாடுவதையே அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகும். இதற்கு மதச் சாயம் என்பது மிகவும் எளிதில் தீப் பிடிக்கும் மருந்தாகிறது அவ்வளவுதான்.
பயங்கரவாதம் எந்த முகத்தோடு வந்தாலும் அதனை நாம் முறியடிக் வேண்டும். அதனை வேறுடன் பிடுங்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம் - இது இந்து மத உணர்வை பயன்படுத்தி சுயநல அரசியல் ஆதாயம் அடையும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக கலகத்தை தூண்டி விட்டு படுகொலையை நிகழ்த்துகிறது. இந்துத்துவ பயங்கரவாத்தின் உச்ச கட்டம்தான் குஜராத் மோடித்துவ பாசிசம்தான். இந்த இந்துத்துவ பாசிசம் துவக்கி வைத்த பயங்கரவாத விளையாட்டு இந்தியாவை பல்வேறு வடிவங்களில் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முறியடிக் வேண்டிய பயங்கரவாதத்தில் முதன்மையானது பெரும்பான்மை இந்துத்துவ பயங்கரவாதமே!
அடுத்து, இந்த இந்துத்துவ பயங்கரவாதத்தை காரணமாகக் கூறிக் கொண்டு பழிக்கு பழி வாங்குவதாக புனிதப் போர் என்ற பெயரில் இந்திய மக்கள் மீது மறைமுகப் போரைத் - குண்டு வெடிப்பு கலாச்சரத்தை நிகழ்த்தும் இன்னொரு பாசிசம் இசுலாமிய மத அடிப்படைவாத பாசிசம்! குறிப்பாக சமீப காலத்தில் இந்த இசுலாமிய மக்கள் மதச்சார்பற்ற - ஜனநாயக சக்திகளுக்கு அணி திரள்வதற்கு மாறாக மத அடிப்படைவாத கண்ணோட்டம் என்ற அமைப்பின் பின்னால் அணி திரள்வதும் - அதனைத் தொடர்ந்து இந்த வாலிபர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டு இத்தயை வெட்கம் கெட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடச் செய்வதும் கோழைத்தனத்தின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம். இத்தகைய இசுலாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதத்தையும் நாம் உறுதியாக முறியடிக்க வேண்டும்.
அடுத்து உலகளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா செய்யும் அட்டூழியம். இந்த பயங்கரவாதிகள் பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் தற்போது ஈரானையும் குறி வைத்து செயல்பட்டு வருகின்றனர். ஆப்கானும் - ஈராக்கும் முழுமையாக கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏகாதிபத்திய பயங்கரவாதம் என்பது அனைத்து பயங்கரவாத்திற்கும் தலைமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கூட இந்துத்துவ - சங்பரிவார கும்பல் யாருடன் சுகமான கூட்டு வைத்துள்ளது இந்த ஏகாதிபத்திய அமெரிக்காவுடன்தான் அவர்கள் கூட்டு வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களைத்தான் அவர்கள் உற்ற நன்பர்களாக கருதுகிறார்கள். இத்ன் மூலம் இவர்களுக்கான பாடத்தை வழங்குவது அமெரிக்க பயங்கரவாதம்தான்.

மொத்தத்தில் இன்றைய இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய பயங்கரவாதம் ஆகியவற்றை உறுதியாக முறியடிக்க வேண்டும். இவைகள் ஒன்றுடன் ஒன்று மறைமுகமாகவும், நேரடியாகவும் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது சுயநல அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. எனவே ஜனநாயக சக்திகள் - இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போர்த் தொடுக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்திற்கு முழுமையான விடுதலை கிடைக்கும். மேலும் இந்த பயங்கரவாதம் என்பது தற்போதைய அரசியல் பிரச்சினைகளைக் கூட உணர்வு ரீதியாக பின்னுக்குத் தள்ளும் கருவியாக ஆளும் வர்க்கத்திற்கு பயன்படுகிறது. மக்கள் ரொட்டிக்கும், கூழுக்கும் ஆளாய்ப் பறக்கையில், விலை வாசி உயர்வு என்ற பிரச்சினையால் வதைபட்டு இருக்கையில், அணு சக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய மக்களின் கழுத்தில் பெரிய சுருக்கைப் போடும் மத்திய அரசுக்கு எதிரான போக்கை கண்டுக்கும் தருவாயில் இந்த பயங்கரவாம் நம்மை அச்சுறுத்துகிறது. எனவே பயங்கரவாதம் உழைக்கும் மக்களின் அடிப்படை எதிரி இதை அனுமதிக்கக் கூடாது! இதனை உறுதியாக முறியடிப்போம்!

15 comments:

Anonymous said...

இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாகத்தானே தஸ்லீமாவை துரத்தினீர்கள்.அவர்களுக்கு ஆதரவாக
புஷ் இந்தியா வந்த போது முஸ்லீம்களின் கூட்டத்தில் பேசினீர்கள். கேரளாவில் மதானியின்
ஆதரவைக் கோரிப் பெற்றீர்கள். அவர்கள் கேரளாவில் குண்டு வைப்பார்கள் என்ற உடன் இப்படி
இடதுசாரிகள் எழுதுவீர்கள், அதை
நாங்கள் நம்ப வேண்டும்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஆதரவாளர்களான இடதுசாரிகள் அதை
எதிர்ப்பது போல் நடிக்கிறீர்கள் என்பது
எங்களுக்குத் தெரியும். பாஜக இல்லாத இடங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கிறதே. இந்தோனிஷியாவில்,
லண்டனில் என உலகின் பல பகுதிகளில் இருக்கிறதே அதற்கு என்ன
காரணம்.

Anonymous said...

அப்சல் குரு விவகாரத்தில் சிபிஎம் அவரை தூக்கில் போடு என்று ஏன் சொல்லவில்லை.

சந்திப்பு said...

அனானி சங்பரிவார நன்பரே!

இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு பனிந்து நாங்கள் தஸ்லீமாவை வெளியேற்றவில்லை. அது எங்கள் வேலையும் அல்ல. தஸ்லீமா வங்கதேசத்தை சார்ந்த முற்போக்கு எழுத்தாளர். அவர்கள் இங்கு தங்குவது சம்பந்தமாக மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அவரது பாதுகாப்புக்கும் அவர்கள்தான் முழுப்பொறுப்பு. உண்மை என்ன? தஸ்லீமாவை மேற்குவங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி மமதா - இந்துத்துவா - இசுலாமிய - நக்சலிசவாதிகள் ஆகியோர் கூட்டாக மேற்குவங்க அரசுக்கு எதிராக சதி செய்ய ஆரம்பித்தனர் என்பதுதான் உண்மை. எப்படியாவது, எந்த வழியிலாவது மேற்குவங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மேற்கண்டவர்களின் நப்பாசை. அதற்கு தஸ்லீமாவே இடம் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முன்வரும் அமைப்புகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். அதற்காக மத அடிப்படைவாதிகளோடு குலாவுவதில்லை. அவர்களுடன் இணைந்து இயக்கம் நடத்துவம் இல்லை. உங்களைப் பொறுத்தவரை முஸ்லீம்கள் என்றாலே மதவாதிகள் என்று சித்தரித்து குளிர் காய்வதுதான்.

கேரளாவில் மட்டுமல்ல; நாட்டின் எந்த மூலையில் இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக உறுதியாக போராடுவோம்.

அமெரிக்க பாசிச வெறியர்களோடு கூட்டுக் களவானித்தனம் செய்யும் உங்களுக்கு இடதுசாரிகளைப் பார்த்து எதையும் கூற முடியாவிட்டால் இப்படி அவதூறு கிளப்புவீர்கள்.

இந்தேனேஷீயாவிலும், லண்டனிலும் உங்களது பங்காளி அமெரிக்கா செயல்படுகிறதே! மொத்தத்தில் நீங்கள் மூன்று பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அதாவது மக்களைக் கொள்ளும் பயங்கரவாதிகள்தான்.

Naina said...

ஐயா! அன்பானவர்களே!
மனித குல விரோதிகளுக்கு சமுதாய அடையாளம் கொடுப்பதை நாம் முதலில் விட வேண்டும். நிச்சயமாக இஸ்லாமோ, இந்து சமயமோ கிருஸ்துவமோ அல்லது இன்ன பிற சமய சமுதாயங்களோ மனித உயிர்களை கொன்றொழிக்க சொல்லவில்லை. இச் சமுதயாங்களிலிருந்து களையாக உருவான இரத்த வெறிபிடித்த காட்டேறிகளால் பொதுமக்கள் சொல்லெண்ணா துயரத்தை சந்திக்கிறோம். இக்கயவர்களை சமுதாய அடையாளம் கொண்டு பார்க்காமல், தனிமைபடுத்தபட வேண்டும். இஸ்லாத்தின் பெயர் உச்சரித்து உயிர்களை பலிவாங்குபவனும், இந்து சமயத்தின் பெயர் உச்சரித்து உயிர்களை பலிவாங்குபவனும் ஒரே இனத்தை சார்ந்தவர்கள். அந்த இனம் மனித குலத்துக்கு விரோதியான இனம். இந்த உலகில் நொடிப் பொழுது வாழக் கூடிய தகுதியற்ற இனம். தொற்று நோய் அபயாம் உருவாகும் போது, அதனை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கின்றோமோ அதனை விட பலநூறு மடங்கு முயற்சிகளை மேற் கொண்டு இந்த இனத்தை வேரறுக்க வேண்டும்.

இந்த இனத்தின் முகம் ஒன்றே. எண்ணம் ஒன்றே. சிந்தனை ஒன்றே.

சகோதரத்து வாசஞ்சை நம்மில் தழைத்தோங்கிட வேண்டும் என்ற தனியாத ஆசையில்...............
நெய்னா முஹம்மது

சந்திப்பு said...

அப்சல் குருவை தண்டிப்பது சம்பந்தமாக சி.பி.எம். தன்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறது. அதனுடைய 19வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானத்தில் 2.3-இல் இவ்வாறு கூறியிருக்கிறது. அதாவது, சட்டத்தின்படி அப்சல் குரு மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்துத்துவா கருத்துப்படி முஸ்லீம் என்பதனாலேயே எந்த சட்டத்திற்கும் உட்படாமல், விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதல்ல எங்கள் கருத்து. மன்னிப்பு கோரி அப்சல் குரு மேல் முறையீடு செய்திருந்தாலும் அது கூட சட்டத்திற்கு உட்பட்டுதான் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே சி.பி.எம். கருத்தாகும். இது இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் பொருந்தும். (பா.ஜ.க. பரிவாரங்களுக்கும் பொருந்தும்)

Anonymous said...

'இந்தேனேஷீயாவிலும், லண்டனிலும் உங்களது பங்காளி அமெரிக்கா செயல்படுகிறதே!'

இந்தோனிஷியாவில் இருப்பது மக்கள் ஆட்சி.அமெரிக்கா அங்கு இல்லை.லண்டனிலும்
அமெரிக்கா இல்லை.
உங்கள் கட்சி தஸ்லீமாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது
உலகறிந்த உண்மை. அதை
ஏன் மறைக்கிறீர்கள். எந்த அடிப்படையில் மதானியின்
கட்சியின் ஆதரவைப் பெற்றீர்கள்.
தமிழ்னாட்டில் உங்கள் தேர்தல்
கூட்டாளி தமுமுக.இப்படி வகுப்புவாத அடிப்படைவாத
அமைப்புகளுடன் கூட்டு வைத்துக்
கொண்டு மதவாதத்தினை
எதிர்க்கிறீர்களா.முஸ்லீம்
ஒட்டுக்களுக்காக முஸ்லீம்களுக்கு
ப்டஜெட்டில் 15% ஒதுக்கச் சொன்ன
கட்சிதானே உங்கள் கட்சி.அதைவிட
பச்சையான வகுப்புவாதம் வேறு
உண்டா?
இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்பட
வேண்டியதுதான். அத்துடன் அதற்கு
நேரடி,மறைமுக ஆதரவு தரும் அனைத்து சக்திகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

சந்திப்பு said...

பாராளுமன்றத்தில் லாலு கேட்ட கேள்வியையும் பரிவார கும்பலுக்கு பரிந்துரைக்கிறேன்.


தீவிரவாதம் குறித்து, அப்சல் குரு பற்றி பேசுகிறது பாஜக. உலகின் மிகப் பெரிய தீவிரவாதியான அஸார் மசூதை ஆப்கானி்ஸ்தானில் போய் விட்டுவிட்டு வந்தது யார்?.

Anonymous said...

குருவின் மீதான தூக்குதண்டனையை
உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது.அதை நிறைவேற்ற
வேண்டுமா கூடாதா என்பதுதான்
கேள்வி.அதற்கான பதிலை ஏன்
உங்கள் கட்சியால் நேரடியாக
கூற முடியவில்லை.
‘அதாவது, சட்டத்தின்படி அப்சல் குரு மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்துத்துவா கருத்துப்படி முஸ்லீம் என்பதனாலேயே எந்த சட்டத்திற்கும் உட்படாமல், விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதல்ல எங்கள் கருத்து.'.

யாரும் தீர்ப்பு வரும் முன் அவரை
தூக்கில் போடச் சொல்லவில்லை.
கேள்வியை எதிர்கொள்ள தைரியமற்ற
கோழைகளின் கட்சி சிபிஎம்.ஒன்று
தூக்கில் போடு என்று சொல்ல வேண்டும், இல்லை தூக்கில் போட
வேண்டாம், மன்னிப்பு வழங்கு
என்று சொல்ல வேண்டும்.
இரண்டில் ஏதோ ஒன்றுதான் தீர்வு.
முஸ்லீம்களின் ஒட்டிற்காக இப்படி
ஒரு தீர்மானம். நாங்கள்
தூக்கில் போட வேண்டும் என்று
சொல்லவில்லை என்று முஸ்லீம்களிடம் இதை வைத்து
பிரச்சாரம் செய்யலாம்.
வெட்கங்கெட்ட கட்சி உங்கள் கட்சி.

சந்திப்பு said...

நெய்னா முஹம்மது

தங்கள் கருத்தை வரவேற்கிறேன். மக்களின் பினங்களின் மீது பிழைப்பு நடத்தும் பாசிஸ்ட்டுகளுக்கு இது தேவைப்படுகிறது சுயநலத்துக்காக. அத்தகைய இனத்தினரை நீங்கள் சுட்டியிருப்பது போல் ஒழிக்க வேண்டும்.

சந்திப்பு said...

சங்பரிவார அனானி!

அப்சலுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி விட்டது எனவே தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள். இந்தியாவில் இதே போல் 22 பேருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு கருணை மனுவாக ஜனாதிபதியிடம் அப்பீலுக்கு சென்றுள்ளது. ஏன் இவர்கள் எல்லோரையும் தூக்கிலிட வேண்டும் என்று கோருவதில்லை என்று கேட்கலாமா? மேலும் அப்சல் குரு மீதான விசரணை முறையாக நடந்ததா என்ற சந்தேகத்தை நாட்டு மக்கள் எழுப்புகின்றனர். எனவே இதற்கெல்லாம் விடைத் தேடாமல் மத அடிப்படையில் இப்படிப்பட்ட பூச்சாண்டி காட்டுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அது சரி பாபர் மசூதியை இடித்த வழக்கில் அத்வானி விடுவிக்கப்பட்டுள்ளார். எப்படி? அத்வானிக்கு இந்த சட்ட எல்லைகள் உட்படாததா? இந்திய மக்களின் ஒற்றமையை சீர்குலைத்த இந்த பாசிச வெறியனுக்கு ஒரு சட்டம்? இன்னொருவருக்கு ஒரு சட்டம் என்றால்? இது யாரை ஏமாற்றுவதற்கு?

மேலும் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கைள கொன்ற நரேந்திர மோடி குற்றவாளியில்லையா? சட்ட ரீதியாக சாட்சியில்லையே தவிர மொத்த குற்றத்திற்கும் அடிப்படையாக இருந்தவர் இந்த பாசிச வெறியன் நரேந்திர மோடிதானே? இவனை எப்படி தண்டிக்கலாம்? என்று சேர்த்து ஆலோனை கூறுங்களேன்.

Anonymous said...

மேலும் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கைள கொன்ற நரேந்திர மோடி குற்றவாளியில்லையா? சட்ட ரீதியாக சாட்சியில்லையே தவிர மொத்த குற்றத்திற்கும் அடிப்படையாக இருந்தவர் இந்த பாசிச வெறியன் நரேந்திர மோடிதானே? இவனை எப்படி தண்டிக்கலாம்? என்று சேர்த்து ஆலோனை கூறுங்களேன்.


உங்கள் கட்சி மோடி மீது வழக்குத்
தொடர்ந்து தண்டனை வாங்கித்
தர வேண்டியதுதானே?. நந்திக்கிராமில் நடந்த கொலைகளுக்கும்,வன்முரைக்கும்
புத்ததேவ் பட்டாச்சாரியாவை தண்டிக்கலாமா? மோடியை விட கொடியவர்களான,
லட்சக்கணக்கானோர் சாவிற்கு காரணமான ஸ்டாலின்,
மாவோ வை யார் தண்டித்தார்கள்?.

'மேலும் அப்சல் குரு மீதான விசரணை முறையாக நடந்ததா என்ற சந்தேகத்தை நாட்டு மக்கள் எழுப்புகின்றனர். '

குஜராத்தில் கோத்ராவில் முஸ்லீம்கள்,
இந்துக்களை எரித்ததுதான் குஜராத்
வன்முறைக்கு காரணம் என்று குஜராத் மக்கள் கூறுகின்றனர். அதை
ஏற்கிறீர்களா.

Anonymous said...

அது சரி பாபர் மசூதியை இடித்த வழக்கில் அத்வானி விடுவிக்கப்பட்டுள்ளார். எப்படி?

அத்வானி யாரையும் இடி என்று கூறவும் இல்லை, இடிக்கவும் இல்லை,அதற்கு உதவும் இல்லை.
அப்சல் குருவையும்,அத்வானியையும்
ஒப்பிட முடியாது.

பி.எஸ்.ஆர் said...

வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.

அப்பாவிகளை குறிவைக்கும் கபோதிகள் கட்டாயம் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அதுஇச்லாமிய முஜாஹிதினாக இருந்தாலும் சரி, இந்துத்துவ மோடித்துவமாக இருந்தாலும் சரி, அமரிக்க எதேச்சதிகாரமாக இருந்தாலும் சரியே.

சந்திப்பு, உங்கள் கட்டுரை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

///அத்வானி யாரையும் இடி என்று கூறவும் இல்லை, இடிக்கவும் இல்லை,அதற்கு உதவும் இல்லை.///

இது நகைச்சுவையாக அனானி எழுதினாரா தெரியாது. ஆனால் இந்த இடத்தில் நகைச்சுவையாகக்கூட பொருந்தவில்லை.

ஏன்னா, இதைத்தான் அப்சல்குருவும் தன் விசியத்தில் சொல்லிட்டிருக்கிறானாம்.

அப்புறம், இந்தியா ஏன் சரப்ஜித்சிங்கின் விடுதலைக்கு காய் நகர்த்த வேண்டும்?

சந்திப்பு said...

நன்றி பி.எஸ்.ஆர். மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். இந்த இந்துத்துவ பாசிச வெறியர்கள் மனித மான்புகளுக்கு அப்பாற்பட்ட தன்மைக் கொண்டவர்களாக மாற்றி விட்டது இந்துத்துவம்.

Anonymous said...

pls see the related article at
http://vinavu.wordpress.com