July 11, 2008

123 பிரகாஷ் காரத் சிறப்பு பேட்டி


நாட்டின் நலன்களைக் காவு கொடுத் துள்ள மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் வாக்களிக் கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்திய - அணுசக்தி ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப் படுவதைத் தடுத்திட, இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் பிரகாஷ்காரத் கூறி னார். மதவெறி சக்திகள் வளர்ந்து வருவ தைக் கட்டுப்படுத்தவும் கையாலாகாத நிலையில் காங்கிரஸ் உள்ளதாகக் குற் றஞ்சாட்டிய பிரகாஷ் காரத், இந்துத்துவா மற்றும் மதவெறி சக்திகளை எதிர்த்து முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியும் ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து செயலாற்றும் என்றார்.


ஐமுகூ அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஏடுகளின் செய்தியாளர்களுக்கு பிரகாஷ்காரத் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்திட்ட பதில் களும் வருமாறு:


இன்றைய இக்கட்டான சூழ்நிலை யில் இடதுசாரிக் கட்சிகள் அர சுக்கு அளித்து வந்த ஆதரவை ஏன் விலக்கிக் கொண்டுள்ளன?


பிரகாஷ்காரத்: மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்காமல் தடுத் திட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவளிக்கத் தீர்மானித்தன. ஆனால், பிரதமரும் காங்கிரஸ் தலை மையும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற் கான நடவடிக்கைகளில் இறங்கிடத் தீர் மானித்திருக்கின்றன. இதுதொடர்பாக 2007 நவம்பரில் இடதுசாரிக் கட்சிக ளுக்கு அவர்கள் அளித்திட்ட உறுதி மொழியையும் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். அதாவது, சர்வதேச அணு சக்தி முகமையிடம் பேச்சு வார்த்தை களுக்காகச் செல்வோம், பின் திரும்பி வந்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை இடதுசாரிக் கட்சிகள் முன்வைப்போம், இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்தால், அர சாங்கம் தொடர் நடவடிக்கையை மேற் கொள்ளாது என்று உறுதிமொழி அளித் திருந்தார்கள்.


மன்மோகன்சிங் அரசாங்கம் அமெரிக் காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற் படுத்திக் கொள்ள முன்வந்திருப்பதுதான் அதற்கு அளித்து வந்த ஆதரவை இடது சாரிக் கட்சிகள் விலக்கிக் கொள்வதற்கு முதல் முக்கிய காரணமாகும். இதற்கு அணுசக்தி ஒப்பந்தம் ஒரு திறவுகோல். இத்தகைய கூட்டணியானது நம்முடைய நாட்டின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கைக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவை அமெரிக்கா வுடனான ராணுவக் கூட்டணிக்குள் சிக்கவைத்திடும் சூழ்ச்சியே இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமாகும். நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும் கூட இனி அமெரிக்காவின் கட்டளை களுக்கிணங்கவே மேற்கொள்ளப்படும்.


அமெரிக்காவில் இதுவரை இருந்து வந்த ஜனாதிபதிகளிலேயே, புஷ் மிக கொடூரமான ஏகாதிபத்தியவாதி என்ப தை மெய்ப்பித்திருக்கிறார். இத்த கையவ ரின் தலைமையில் உள்ள அரசாங்கத் துடன் கூடிக் குலாவ மன்மோகன் சிங் அர சாங்கம் ஆர்வம் காட்டுவதற்கான கார ணங்கள் என்ன? புஷ் தற்போது ஈரா னைத் தாக்கப்போவதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு இந்தியாவும் துணைபோகப் போகிறதா? அமெரிக்கா வின் நிர்ப்பந்தத்தின் விளைவாக இப் போது மத்திய அரசு இஸ்ரேலுடன் நெருக் கமான இராணுவ உறவுகளை மேற் கொண்டுள்ளது. அரசின் இத்தகைய கொள்கைகளுக்கு இடதுசாரிகள் ஆதர வினை அளித்திட முடியாது.


இந்த அரசானது விலைவாசி உயர் வையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத் திட முழுமையாகத் தவறிவிட்டது என் பது ஐமுகூ அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதற் கான இரண்டாவது காரணமாகும். கடந்த ஓராண்டு காலமாக அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்து அத்தியா வசிய உணவுப் பொருள்களின் விலை களும் கடுமையாக உயர்ந்துள்ளதைப் பார்க்கிறோம். இதன் விளைவாக சாமா னியர்களின் வாழ்வில் தாங்கமுடியாத அளவிற்கு துன்பதுயரங்களை ஏற்படுத்தி யுள்ளது. நவீன தாராளமயக் கொள்கை களை பின்பற்றும் இந்த அரசாங்கமானது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற் குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட மறுக்கிறது. பொது விநியோக முறையை விரிவாக்கிட அது தயாராக இல்லை. இப்போதும் அது போலித்தனமான மற்றும் மோசடியான வறுமைக் கோட்டுக்கு மேலே / கீழே என்று பாகுபடுத்தியுள்ள குடும்ப அட் டைகளையே (ரேஷன் கார்டுகளையே) பயன்படுத்தி, நாட்டு மக்களில் பெரும் பாலோரை பொது விநியோக முறையிலி ருந்து அப்புறப்படுத்திடும் சூழ்ச்சியையே தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்திட இடதுசாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் அது நிராகரித்துவிட்டது. அத்தியாவசிய உண வுப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்த கத்தை அது ஏன் தடை செய்ய மறுக்கிறது? ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பாராது அடைந்திடும் கொள்ளை லாபத்தொகை (றiனேகயடட யீசடிகவை) யின் மீது வரி விதிக்க ஏன் மறுத்துக் கொண்டிருக்கிறது?


பிரதமரை இடதுசாரிக் கட்சித் தலை வர்கள் சந்தித்தபோது, ‘‘விலைவாசி உயர் வால் மக்கள் கடும் துன்பத்திற்காளாகி யிருக்கிறார்கள்’’ என்று சொன்னபோது, அதற்குப் பிரதமர் ‘‘மக்களின் துன்ப துய ரங்களை அரசியல்கட்சிகள் அரசியலாக் கக் கூடாது’’ என்று எங்களிடம் கூறி னார். மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளாமல் வேறு எதனை அரசியல் கட்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்? இதுதான் இந்த அரசாங்கத்தின் சிந்தனையோட் டமாக இருக்கிறது.


மன்மோகன் சிங் அரசாங்கம் கடைப் பிடித்திடும் நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகளின் விளைவாகத் தான் அதனால் விவசாய நெருக்கடியை யும் விவசாயிகளின் வாழ்வு சூறையாடப் படுவதையும் தீர்த்து வைக்க முடிய வில்லை.


முந்தைய தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசாங்கம் கடைப்பிடித்து வந்த வலதுசாரி பொருளாதாரக் கொள்கை களை, ஐமுகூ அரசாங்கமானது முழுமை யாக முறித்துக் கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் எதிர்பார்த் தன. அதன் அடிப்படையில்தான் மக்கள் ஆதரவு கொள்கைகள் சிலவற்றை குறைந்த பட்ச பொதுச் செயல்திட்டத் தின் மூலம் பரிந்துரைத்தன. ஆனால் எதற்கெடுத்தாலும் வாஷிங்டன்னையும், உலக வங்கியையும் சர்வதேச நிதியத் தின் கட்டளைக்காகவும் காத்துக் கொண் டிருப்பவர்கள் மக்கள் நலன்சார்ந்த கொள் கைகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.


அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சனை யில் இடதுசாரிக் கட்சிகள் தனி மைப்பட்டு விட்டனவா?


பிரகாஷ்காரத்: 2005 ஜூலையில் பிரதமர் வாஷிங்டன் சென்றிருந்த சமயத் தில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக முதல் அறிவிப்பு வந்தபோதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் அமெரிக்காவுடனான இராணுவக் கூட்டையும், அணுசக்தி ஒப்பந்தத்தை யும் எதிர்க்கத் தொடங்கி விட்டோம். இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து எவ்விதப் பிசிறுமின்றி இவற்றை எதிர்த்து வந்ததன் காரணமாகத்தான், இன்றைக்கு நாட்டின் இறையாண்மையை அச்சுறுத் தக்கூடிய இத்தகைய பிரச்சனைகள் நாடு முழுதும் பிரதானமான விவாதப் பொருளாக முன்னுக்கு வந்துள்ளன. இப் பிரச்சனை மீது தனிமைப்பட்டிருப்பது நாமல்ல, மாறாக இந்த அரசாங்கம்தான். 2007 நவம்பர் - டிசம்பரில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நடை பெற்ற விவாதம், இப்பிரச்சனையில் இந்த அரசுக்கு எதிராகவே பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை நாட்டுக்குக் காட்டியது.


இப்பிரச்சனையை முன் வைத்து அடுத்த தேர்தலை சந்தியுங்கள் என்று காங்கிரஸ் கட்சியிடமும் நாம் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் நிலை பாட்டை மக்கள் நிராகரிப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.


அணுசக்தி ஒப்பந்தம் இப்போது நிறைவேறிவிடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?


பிரகாஷ்காரத்: இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைப்படுத் தப்படக் கூடாது என்பதற்காக நாம் ஒவ் வொரு கட்டத்திலும் எதிர்த்து வந்திருக் கிறோம். தற்சமயம், சர்வதேச அணுசக்தி முகமையுடனான பாதுகாப்பு ஒப்பந்தத் தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளையும் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் வாசகங்களை இந்த அரசாங்கம் ஏன் ரகசியமாக வைத்திருக்கி றது? காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள சமயங்களில் எல்லாம் இதனை வழக்கமாகவே வைத்திருக்கிறது. 1991இல் நர சிம்மராவ் அரசாங்கத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த சமயத்தில் இந்திய அரசாங்கமானது சர்வதேச நிதி யத்துடன் 5 பில்லியன் டாலர் கடன் ஒப் பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. அந் தக் கடனைப் பெறுவதற்காக அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகள் என்ன என்று கேட்ட போது, ஒப்பந்தத் தின் வாசகங்களை வெளியிட அரசாங் கம் மறுத்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான் அதனை வாஷிங்டன் னிலிருந்து பெற்று அதன் முழு வாசகங் களையும் வெளி யிட்டது.


பாதுகாப்பு ஒப்பந்தம் மூலமாக நாம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறோம் என்று அரசாங்கம் சவடாலடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை யில் நாம் எதுவுமே பெறவில்லை என் பதே நம்முடைய புரிதலாகும். சர்வதேச அணுசக்தி முகமை என்பது ஒழுங்கு முறை குழுமமாக செயல்படும் ஓர் அமைப்பு. அவ்வளவுதான், அது எப்படி எரிபொருள் விநியோகம் தொடர்பாக உறுதிமொழிகளை அளித்திடும்? இந்தி யாவுடன் முழுமையான அளவில் ராணு வம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு என்ப தைச் சட்டப்படி செல்லாததாக்கக்கூடிய ஹைடு சட்டத்தின் அனைத்து ஷரத்துக் களும் இன்றளவும் நடைமுறையில் இருக்கின்றன.


மன்மோகன் சிங் அரசாங்கத்தின் ஆயுள்காலத்தில் இந்த ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்படாதிருந்திட நாம் தொடர்ந்து போராடுவோம்.


மக்களவையில் நம்பிக்கை வாக் கெடுப்பில் வெற்றி பெற்றுவிடு வோம் என்று காங்கிரஸ் நம்பிக் கையுடன் இருக்கிறதே? ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிகள் ஆதரவினை விலக்கிக்கொண் டுள்ள நிலையில் அரசியல் நிகழ்ச் சிப்போக்குகள் எப்படி இருந் திடும்?


பிரகாஷ்காரத்: இடதுசாரிக் கட்சிகள் ஆதரவை விலக்கிக்கொண்ட அந்தக் கணமே ஐமுகூ அரசாங்கமானது ஆட்சி யில் நீடிக்கக்கூடிய சட்டரீதியான தார்மீக உரிமையை இழந்துவிட்டது. அது மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப் பில் வெற்றிபெற்றாக வேண்டும். மற்ற வர்கள் என்ன நிலைபாடு எடுக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல். நாட்டின் நலன்களுக்குத் துரோகம் இழைத்துவிட்ட இந்த அரசாங்கத்திற்கு எதிராக இடதுசாரிகள் வாக்களிப்பார்கள்.


காங்கிரசும் ஐமுகூ அரசாங்கமும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வருவ தை எவரும் மறந்துவிடக்கூடாது. மார்க்சிஸ்ட் கட்சியின் சமீபத்திய அகில இந்திய மாநாடு இத்தகைய மதிப்பீட்டிற்கு வந்திருக்கிறது. காங்கிரசுடன் இணை வதன் மூலம் எவராவது தங்கள் எதிர் காலத்தை சூன்யமாக்கிக் கொள்ள விரும்பினால் அது அவர்கள் விருப்பம்.


இடதுசாரிகளின் நிலைபாடு, பாஜகவிற்கும் மதவெறி சக்திக ளுக்கும்தான் உதவிடும் என்று காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின் றனவே, இதற்கு உங்கள் பதில் என்ன?


பிரகாஷ்காரத்: மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடுதான் இத்தனை ஆண்டு காலமும் ஐமுகூ அரசாங்கத் திற்கு ஆதரவினை அளித்து வந்தோம். ஆனால், 2007 தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி மதவெறி சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திட ஒரு துரும்பைக்கூட அசைக்காததை நாம் பார்த்துக்கொண்டுதான் வந்திருக்கி றோம். மாநிலங்களில் நடைபெற்ற ஒவ் வொரு தேர்தலிலுமே, காங்கிரஸ் கட்சி பாஜகவினால் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஏன் இவ்வாறு நடக் கிறது? இதற்கு அடிப்படையான காரணம் என்னவெனில், எங்கெல்லாம் காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்தனவோ அங்கெல் லாம் அது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் பொருளாதாரக் கொள்கை களையே கடைப்பிடித்து வந்தன. அதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி பாஜக அங்கெல்லாம் மீண்டும் ஆட்சியில் அமர வசதி செய்து கொடுத்து விட்டது. மேலும், இடதுசாரிக் கட்சிகள் மேற்கொள்வதைப்போல காங்கிரஸ் கட்சியானது பாஜக-விற்கு அரசியல் ரீதியாகவோ அல்லது தத்துவார்த்த ரீதியா கவோ எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மேலும் மத்தியில் பாஜக ஆட்சியிலிருந்த போது கடைப்பிடித்த அதே கொள்கை களைத்தான் காங்கிரசும் பின்பற்றுகிறது. அது ஏகாதிபத்தியத்திற்கு வெண்சாமரம் வீசும் அயல்துறைக் கொள்கையாக இருந்தாலும் சரி அல்லது பொருளாதாரக் கொள்கைகளாக இருந்தாலும் சரி, இந்த இரு கட்சிகளுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இந்துத்துவா மற்றும் மதவெறி சக்திகளை எதிர்த்து முறியடித்திட தொடர்ந்து போராடும்.


மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


பிரகாஷ்காரத்: இடதுசாரிக் கட்சிகள், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதற்கான காரணங் களை விளக்கி நாடு முழுவதும் பிரச்சாரத்தில் இறங்கப் போகிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு மற்றும் இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கான மக்கள் விரோதக் கொள்கைகளை மக்கள் மத்தியில் விளக்கிடுவோம். காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் - மாறாக ஒரு மூன்றாவது மாற்று தேவை என்று உணர்கிற மற்ற ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளை அணிசேர்ப்ப தற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவோம்.


இப்பிரச்சாரத்தின்போது, நாட்டின் எரிசக்தித் தேவையை ஈடுசெய்திட மாற்று வழிகள் என்னென்ன இருக்கின் றன என்பதையும் , விவசாயிகள் - கிராமப்புற ஏழைமக்கள், தொழிலாளர்கள் மற் றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவின ருக்கும் கேடு விளைவித்துள்ள தற்போ தைய பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் அதற்கு முற்றிலும் வேறுபட்ட மாற்றுப் பொரு ளாதாரக் கொள்கையையும் மக்கள் மத்தி யில் எடுத்துச் செல்ல உள்ளோம்.


இப்போது மூன்றாவது மாற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதா?


பிரகாஷ்காரத்: சமீபத்தில் நடை பெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட் டில், மூன்றாவது மாற்று குறித்த நம் புரிந் துணர்வை மிகத் தெளிவாக்கி இருக்கி றோம். அது ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்திட வேண்டும், காங்கிரஸ் மற்றும் பாஜக- கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கு மாற்றாக இருந்திட வேண்டும், அவற்றை வென்றெடுக்க கூட்டுப் பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் மூலமாக உருக்கு போன்று உருவாக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி போன்ற உருவாக்கம் எல்லாம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பதை அனுபவம் வாயிலாக நாம் உணர்ந்திருக் கிறோம். மாற்றுக் கொள்கைகளின் அடிப் படையில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்துப் போராடுவதன் வாயிலாகவே இடதுசாரி மற்றும் இதர சக்திகளை ஒன்றுபடுத்துவதன் மூலமே ஒரு மூன்றாவது மாற்று உருவாகி வலுப்பெற முடியும். தேர்தல் அல்லது மற்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக அத்தகைய மாற்று உருவாவதுடன் இதனை இணைப்பது பிழையாகிவிடும். தளம் மிக விரிவானது. மற்ற சக்திகளை ஒருங்கிணைத்து இதனை வார்த்தெடுத்திட இடதுசாரி கட்சிகள் முன்முயற்சி எடுப்பார்கள்.

3 comments:

PROLETARIAN said...

சந்திப்பு அவர்களே , ஏற்கனவே நீங்கள் கன்டறிந்த மூன்றாம் அணி (சமஜ் வாடி) பணத்துக்காக எதிரி கிட்ட சரணடைந்து விட்டது. அப்படிப்பட்ட மொல்லமாறிகளை தான் இத்தனை நாளா மாட்று சக்தி சொன்னீங்க ? இப்ப மீதி இருக்கற கட்சிகளை கூட்டணி வச்சி வோட்டு கேட்டு ஜெயிச்சிடறீஙன்னு வையுங்க ? அவனும் இதே மாதிரி நாட்டை கூட்டி குடுத்தா திரும்ப 2014 இல் யாருடன் கூட்டணி வைப்பீங்க? சரி இப்போ உங்களை (சி.பி.ஐ, சி.பி.எம்) பேச்சை கேட்டு தி.மு.க, பா.ம.க , ம.தி.மு.க, கங்கிரசு க்கு வோட்டு போட்டவன் எல்லாம் என்ன கேனையனா? எந்த மூஞ்ச்சிய வச்சி கிட்டு மறுபடி வோட்டு கேட்க போறிங்க ?

ஊரெல்லாம் உங்க பொழைப்பு சிரிப்பா சிரிக்குது. சந்திர பாபு என்ன நல்லவனா? அவன் கூட கூட்டணி? மக்கள் கிட்ட எங்கேயும் போய் சி.பி.எம் பற்றி கேட்டால் காறி துப்புவாங்க ?

கடைசியா என்ன சொல்ல போற ?

சந்திப்பு said...

அன்புத் தோழர் பசி வணக்கம்.

உங்களது அரசியல் ஆர்வம் போற்றத்தக்கது. சி.பி.ஐ.(எம்) இதுவரை எந்த மூன்றாவது அணியையும் ஏற்படுத்தவில்லை. சி.பி.ஐ.(எம்) - இன் 19வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானத்தில் இத்தகைய மூன்றாவது அணி குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். கொள்கை அடிப்படையில்தான் மூன்றாவது அணி அமைக்கப்படும். அது மக்கள் பிரச்சினைகள் மீதான போராட்ட அணியாக இருக்க வேண்டும். தற்போதைய சுழலில் அத்தகைய அணி எதுவும் உருவாகவில்லை என்பதே உண்மை.

இந்தியா போன்ற ஒரு பின்தங்கிய நாட்டில் ஒரு முற்போக்கான அரசியல் சூழலை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் அதற்கான முயற்சிகளை - தேடலை சி.பி.ஐ.(எம்)மேற்கொண்டு வருகிறது.

அடுத்து முலாயம் காங்கிரசுடன் போனது அவரது அரசியல் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது. இதுதான் வர்க்க அரசியல் என்பது. இவர்களது உண்மையான கூட்டு பெரு முதலாளிகளுடன். எனவே அந்தக் கூட்டு உறுதியாக இதுபோன்ற தருணங்களில் மட்டுமே வெளிப்படும். சி.பி.ஐ.(எம்)-பை பொறுத்தவரையில் கருணாநிதி, முதலாயம், லாலு, நாயுடு போன்றவர்களை மதவாத எதிர்ப்பு என்ற உயரிய ஆயுதத்தை எடுப்பதற்கு பயன்படுத்துகிறது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

எனவே உங்களைப் போன்ற அரசியல் ஆர்வம் மிக்கவர்கள் நாட்டின் நலன் எந்த திசையில் போக வேண்டும் என்பதை எண்ணி அதற்கான பாதையில் பயணிக்க முயற்சிப்பதுதான் முலாயம் போன்றவர்களை வழிக்கு கொண்டு வரும். பார்வையாளராக அரசியல் பேசுவது பயனற்றது.

சி.பி.ஐ.(எம்) மிகக் குறைவான எண்ணிக்கையில் சீட்டை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்திற்குள் நின்றும் - மக்கள் மன்றத்திற்குள் நின்றும் மத்திய மற்றும் மதவாத ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி வருகிறது. இன்றைக்கு அணு சக்தி ஒப்பந்தம் தேசத்திற்கு விரோதமானது என்ற பார்வையை நாட்டு மக்களிடம் கொண்டுச் சென்றதில் இடதுசாரிகளுக்கு மகத்தான பங்குள்ளது. அதே போல் மதவாதிகளை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தியதிலும் இடதுசாரிகளுக்கு பங்குள்ளது.

ஆனால். காங்கிரஸ் உட்பட பெரியாரியவாதிகள் உட்பட பலரும் மதவாதிகளுடனும், சந்தர்ப்பவாதிகளுடனும் குலாவுவது நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இவர்களை வழிக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் நாட்டு மக்கள் ஈடுபட வேண்டும்.

அன்புக்குரிய நன்பரே நான் எதையும் சொல்லப்போறதில்ல!

சி.பி.ஐ.(எம்) சீட்டுக்காக அரசியல் நடத்தவில்லை என்பதை மட்டும்தான் சொல்றன்.

நாட்டில் சில பேருக்கு மல்லாந்து படுத்துக் கொண்டு துப்பினால்தான் துப்புவதுபோல் இருக்கும்! அத்தகைய அரசியல்வாதிகளை உங்களைப் போன்ற அறிவு ஜீவிகள்தான் திருத்த வேண்டும்.

PROLETARIAN said...

OK. Could your party paople announce that Karunanidhi, Ramadoss all are Traitors of Indian Nation in your Daily "theekathir".

you have to survive So you are not putting simple word against Karunanidhi here. But you says Congress is Traitor.

You announce your enemies first ?
Do not confuse people again by making alliance with ramaining capitalist parties.

I read an articel about CPM Tirupur MLA Govindasamy. Is it true ?