April 17, 2008

பயங்கரவாதிகள் கொடுக்கும் பயங்கரவாத பட்டம்!

ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. - இ.பொ.க.-மா.லெ.) இந்திய சுதந்திரத்தை எப்படி அணுகுகிறது என்று பார்ப்போம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவை விடுதலை செய்வதற்காக காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - முஸ்லீம் லீக் மற்றும் நவஜவான் பாரத் சபா போன்ற பல்வேறு மிதவாத - தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து போராடி பிரிட்டிஷ் அரசை இந்தியாவிலிருந்து அகற்றியது. இதற்காக எண்ணற்ற இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை இந்திய மண்ணிலும் - அயல்நாட்டிலும் தியாகம் செய்த வரலாறு அனைவருக்கும் தெரியும்! இந்த சுதந்திரப்போராட்ட தியாகிகளின் கனவுகள் தற்போதைய இந்திய அரசில் நிறைவேறாமல் போயிருக்கலாம். இருப்பினும் இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை விரட்டியடித்த பெருமை இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்திய - மகத்தான தியாகங்களை செய்த இந்திய மக்களையேச் சாரும்.

இந்த தியாகங்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி கொச்சைப்படுத்தியுள்ளது ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. குருட்டு கும்பல். மேலும் அவர்களுக்கு குட்டி முதலாளித்துவவாதிகள் என்ற நாமகரணத்தையும் சூட்டியுள்ளது. ம.க.இ.க. திட்டம் கீழ்க்கண்டவாறு கூறுவதைப் பாருங்கள்

“நாட்டுப் பற்று என்னும் உள்ளுணர்வால் உந்தப்பட்ட புரட்சிகர அறிவுத்துறையினரும் குட்டி முதலாளிய இளைஞர்களும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் - அதாவது கொடுங்கோலர்களான ஆங்கிலேயே நிர்வாகிகளைத் தனித்தனியே அழித்தொழிப்பதின் மூலம் - வெறுக்கத்தக்க காலனிய ஆட்சிக்கு முடிவுகட்ட முனைந்தார்கள்.....” மேலும், “...நாட்டு விடுதலைக்குப் பரந்துபட்ட மக்களை அவர்கள் சார்ந்து நிற்கவுமில்லை..” தொடர்ந்து, “....இவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து நமது மக்கள் மதிப்பிட முடியாத படிப்பினைகளைப் பெற்றார்கள்... “

23 வயதில் தூக்குமேடைய ஏறிய பகத்சிங், சுகதேவ், சந்திரசேகர் ஆசாத், இன்னும் உத்தம்சிங், கொடிகாத்த குமரன், கல்பனாதத்.... போன்ற எண்ணற்ற இளைஞர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு உட்பட பல்வேறு அரக்கக்கத்தனத்திற்கு அவர்கள் பாணியிலேயே விடைகொடுக்க முனைந்தனர். இது இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த வீரதீரமிக்க செயல்கள். மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டியடிப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்தனர் நமது தியாகிகள் குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தை ஆரம்பித்து பாசிச ஜப்பான் உதவி உட்பட அனைத்தையும் நாடினார். இதற்காக அவரை பாசிஸ்ட் ஆதரவாளர் என்று முத்திரை குத்த முடியுமா? இந்திய விடுதலைப் போரின் ஈட்டி முனையாக இளைஞர்களின் தியாகம் - இந்திய மக்களை வீறு கொண்டு எழச் செய்தது. இத்தகைய தியாகத்தை இவர்களது நாலாந்தர அரசியல் முடிவை எட்டுவதற்காக பயங்கரவாதம் என்று சித்தரித்து பின்லேடனுக்கு இணையாக காட்சிப்படுத்துவது இவர்களின் சீரழிந்த அரசியல் பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறது.

மேலும் அந்த தியாகப்பூர்வமான இளைஞர்கள் பரந்துப்பட்ட மக்களை சார்ந்து நிற்க வில்லையாம்! இதிலிருந்து நமது மக்கள் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்று முடிக்கிறார்கள். உண்மையில் இவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? நக்சலிசம் பேசும் இந்த திண்ணை வேதாந்திகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்தியா முழுவதும் காட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருப்பதை தவிர வேறு என்ன? மேலும் இவர்களது வெகுஜன அரசியல் நடவடிக்கை என்ன? வெட்டிப்பேச்சும் - வாய்ஜாலமுமே! அடுத்து இணையத்தில் குப்பை கொட்டுவது. நக்சலிசம் இன்றைய தினம் வர்க்கப்போராட்டம் நடத்துகிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான சாதாரண கூலி உழைப்பாளிகளையும் - தலித் மக்களையும் ஆள்காட்டிகள் என்ற பெயரால் கொன்றதைத் தவிர வேறு என்ன கிழித்தது! எத்தனை கிராமத்தை விடுவித்துள்ளது? தமிழகத்தில் எந்த கிராமத்தையாவாது இவர்கள் இந்திய ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து சுகபோக வாழ்க்கையை கொடுத்துள்ளார்களா? இவர்களது பயங்கரவாத செயல்களில் தினந்தோறும் பலியாவது உழைப்பாளிகள்தானே! இந்த ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. கும்பலுக்கும் வெகுஜன மக்களுக்கும் என்ன தொடர்பு! இவர்கள் எப்போதும் இணையத்தில் அடிக்கடி கூறும் வேதம் என்ன தெரியுமா? நாங்கள் எண்ணிக்கையில் நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல என்று சொல்லுவதுதான்! இந்த வேதாந்திகள்தான் கூவுகிறார்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தீரமிக்க இளைஞர்களுக்கு பரந்துபட்ட மக்களுடன் தொடர்பு இல்லையாம்?

தற்போதைய சுதந்திர இந்தியாவைப் பற்றிய இவர்களது கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? இது பெயரளவிற்கான சுதந்திரம் மட்டுமே; அதாவது இன்னும் இந்தியா அரை அடிமை நாடாக இருக்கிறது! பிரிட்டிஷ் இந்தியாவிடம் அடிமைப்பட்டிருந்த நமது நாடு தற்போது நான்கு நாடுகளிடம் அடிமைப்பட்டிருக்கிறதாம்! அதாவது, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா. அதெப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனியை மற்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் பங்கிட்டுக் கொண்டது? மேலும் ரஷ்யாவை இவர்கள் சமூக ஏகாதிபத்தியம் என்று அழைப்பார்கள். தற்போது அந்த சோசலிச சோவியத் யூனியனே இல்லை? ஆனால் இவர்களது திட்டம் அதையே வேதம் ஓதிக் கொண்டிருகிறது. எ°.ஓ.சி. கும்பல் இதனை பக்தி சிரத்தையோடு விமர்சனமின்றி மனப்பாடம் செய்துக் கொண்டு திரிகிறது. மொத்தத்தில் நாம் நான்கு நாட்டு அடிமைகள்! இந்த நான்கு நாட்டு அடிமைத்தளையிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக இவர்கள் ஏந்தக் கூடிய ஆயுதம் என்ன தெரியுமா? புல் - பூண்டுகள்தான்....
அமெரிக்காவுக்கு மட்டும்தான் உண்டா பின்லேடன் போன்றவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் உரிமை? எங்களுக்கு இல்லையா என்று அதற்கு மொத்த உரிமையை குத்தகை எடுத்துக் கொண்டு நமது அளப்பரிய தியாகிகள் மீது பயங்கரவாத முத்திரையை குத்தியுள்ளது ம.க.இ.க. கும்பல்.

11 comments:

ஏகலைவன் said...

எமது கட்சி அறிக்கையிலிருந்து இங்கே உம்மால் மேற்கோள்காட்டப்பட்டிருக்கும், இந்த வரிகளில் நீர் கீழே குறிப்பிட்டுள்ள எந்தவொரு தியாகிகளின் பெயர்களாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா? /////“நாட்டுப் பற்று என்னும் உள்ளுணர்வால் உந்தப்பட்ட புரட்சிகர அறிவுத்துறையினரும் குட்டி முதலாளிய இளைஞர்களும்''///// என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை அல்ல. மேலும் இவர்களையொத்த தோரனையோடு, ஆனால் பிற்போக்கு இந்துத்துவ மனோநிலையில் களத்தில் நின்றவர்களைக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டப்பட்டவைதான் இவ்வரிகள்.

'விடுதலைப் போரின் வீர மரபு' என்ற தலைப்பில் சிறப்பிதழ் ஒன்று எங்கள் புதிய கலாச்சாரத்தின் சார்பில் வெளியிடப்பட்டு, இருபதிப்புகளும் அச்சிடப்பட்டு தமிழகமெங்கும் விற்றுத்தீர்ந்தும்விட்டது. இந்நிலையில் நீ இங்கே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடமுயல்வது நகைப்பைத் தான் ஏற்படுத்துகிறது. இது போலிகளின் வழக்கமான செயல்முறைதான் என்றாலும், இது சந்திப்பை கோமாளித்தனத்திலிருந்து மீட்டெடுக்க சிறிதும் உதவப்போவதில்லை.

பகத்சிங்கின் வாரிசுகளாக எங்களை அறிவித்துக் கொண்டு, இன்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கங்களுடன் எந்தவிதமான சமரசமுமின்றி களத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருகையில் தியாகி பகத்சிங்கையும் மறுகையில் முதலாளிய கைக்கூலி, துரோகி காந்தியையும் உயர்த்திப்பிடித்துக் கொண்டு பித்தலாட்ட நாடகம் நடத்திக் கொண்டிருப்பவர் யார் என்று இங்கே அனைவருக்கும் தெரியும். இதைவிட பகத்சிங் போன்ற தோழர்களை நேரிடையாக அசிங்கப்படுத்துவது வேறெதுவும் இருக்கமுடியாது.

பகத்சிங் தூக்குமேடை ஏறாதிருந்திருந்தால், தொடர்ந்து தமது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் நிறைந்த களத்தில் நின்றிருந்தால், இன்றைய இந்தியாவின் இத்தகைய அவலநிலை நீடித்திருக்காது என்பதையும், மிகத் திண்ணமாக வெளியிட்டுள்ள அமைப்பு எம்முடையது. பகத்சிங் படத்தை வைத்துக் கொண்டு எப்படி வாக்கு சேகரிப்பது என்பதான கீழ்த்தரமானவேலையே உம்முடையது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஏகாதிபத்திய முதலாளிகளின் கைப்பாவையாக மாறிப்போகும் சி.பி.எம். துரோக கும்பலுக்கு இவ்விஷயங்களைப் பற்றி விவாதிக்கவே அருகதையில்லை.

வழக்கமாக எம்முடைய எந்த பிண்ணூட்டங்களையும் பதிப்பிக்கத்துப்பில்லாத இந்த விவாதப் புலி இந்த பிண்ணூட்டத்தையும் பதிப்பிக்கப்போவதில்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஏகலைவன்

Anonymous said...

ம.க.இ.க.வின் இரட்டை வேடத்தை - பச்சோந்திதனத்தை நன்றாக அம்பலப்படுத்தியுள்ளீர்கள். எதற்கும் ஜாக்கிரதை.... மிரட்டல் கைப்பேசி... சகிக்க முடியாத அர்ச்சனைகள் எல்லாம் வரும்!

ஏகலைவன் said...

இருந்தாலும் இந்த அனானி நண்பர் நம்ம சந்திப்புக்காக ரொம்ப கவலைப்படுகிறார்.

வலைதளங்களில் வரும் பதில்களை முறையாகப் பதிவிடாத இந்த தொடைநடுங்கியப்போயி, யாராவது தொரத்தித்தொரத்தி தொலைபேசி மிரட்டல் விடுபார்களா? அந்த அளவுக்கு வேலையற்றவர்களாக நாங்கள் ஒருபோதும் இல்லை. இணையத்தில் பதிலலிப்பதே ரொம்ப அதிகம் என்பதுதான் இந்தக் கேணையைப் பற்றிய எமது மதிப்பீடு.

பதில்களாக வரும் பின்னூட்டங்களை பதிப்பிக்க முடியாத, எத்தனையோ கேள்விகளுக்கு புறமுதுகிட்டு ஓடி ஒளிந்து கொண்ட கோழை சந்திப்பு, சிறிதும் வெட்கமின்றி மீண்டும் மீண்டும் இணையத்தில் வலம் வருவது, அவருடைய வாசகர்களை(!?) அவமதிக்கும் விதமாகத்தான் தோன்றுகிறது.

இவ்வாறாக சி.பி.எம்.மிடமிருந்து வாங்கும் 'வேஜ்'க்கு குறைந்த பட்ச நன்றியோடு நடந்து கொள்ள முனையும் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு இரங்குகிறோம்.

சந்திப்பு said...

)குறிப்பிடப்பட்டிருப்பது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை அல்ல. மேலும் இவர்களையொத்த தோரனையோடு, ஆனால் பிற்போக்கு இந்துத்துவ மனோநிலையில் களத்தில் நின்றவர்களைக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டப்பட்டவைதான் இவ்வரிகள்.

ஐயா ஏகலைவன் நீங்கள் ஏமாற்றும் கலையில்கூட வல்லவராக இருப்பதுதான் இதன் மூலம் தெரிகிறது. உங்களது கட்சித் திட்டத்திற்கு இனிமேல் நீங்கள் கோனார் நோட்ஸ் எழுதியாவது வெளியிடுங்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் கட்சித் திட்டத்தையே சரியாக படித்திருக்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன். உங்களுக்கு அதையெல்லாம் அவர்கள் காட்டியிருக்க மாட்டார்கள். எந்த இடத்திலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோன்ற எந்தவிதமான வியாக்கியானமும் அங்கே இல்லை!

பகத்சிங் படத்தை வைத்துக் கொண்டு எப்படி வாக்கு சேகரிப்பது என்பதான கீழ்த்தரமானவேலையே உம்முடையது.

பகத்சிங்கை நீங்கள் விஜயகாந்த் அளவில்தான் பார்க்கிறீர்கள் போலும். அதனால்தான் அவரை வாக்கு சேகரிக்கும் வசிகரிக்கும் தோற்றத்தோடு காண முற்படுகிறீர்கள்.

பகத்சிங் இந்திய இளை"ர்களின் எழுச்சிகர அடையாளம். அவனது ஏகாதிபத்திய எதிர்ப்பு இன்றைக்கும் இளை"ர்களை எழுச்சியூட்டக்கூடியதாக அமைந்துள்ளது. மேலும் பகத்சிங் ஒரு சோசலிஸ்டாக - கம்யூனிஸ்ட்டாக பரிணமித்து வந்தவன். இந்த ஒரே காரணத்திற்காக முதலாளித்துவ சீரழிந்த அரசியல்வாதிகள் பகத்சிங்கின் புரட்சிகர போராட்டத்தை எப்போதும் மறைத்தே வந்துள்ளனர். எனவேதான் நீங்களும் பகத்சிங் போன்ற புரட்சிகர இளை"ர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளீர்கள். அவர்களுக்கு மக்களிடம் எந்தவிதமான செல்வாக்கும் இல்லை என்று அவர்களது வழிமுறையை கொச்சைப்படுத்தியுள்ளீர்கள். உங்களது மொன்னைத்தனம்தான் இதில் வெளிப்படுகிறது!

ஏகாதிபத்திய முதலாளிகளின் கைப்பாவையாக மாறிப்போகும் சி.பி.எம். துரோக கும்பலுக்கு இவ்விஷயங்களைப் பற்றி விவாதிக்கவே அருகதையில்லை.

உங்களை விமர்சிப்பவர்கள் ஏகாதிபத்திய கைப்பாவை என்றால் - நீங்கள் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஏகாதிபத்திய கைக்கூலியாக சித்தரித்துள்ளீர்களே உங்களது பாரம்பர்யம் எங்கிருந்து துவங்குகிறது! இப்போதும் உங்களது பிரதான எதிர்ப்பு சி.பி.எம். மற்றும் இடதுசாரிகளை நோக்கியதாகத்தானே இருக்கிறது. பா.ஜ.க. செய்ய வேண்டியதை நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறது. இதுதான் புரட்சிகர சீரழிவுவாதம்! நீங்கள் நவீன இந்துத்துவ பார்ப்பனிய ஏகாதிபத்திய சேவையைத்தானே வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் அமைப்பு என்ற ஒன்றைக் கட்டாமலே வெறும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன? 1976 முதல் நீங்கள் சென்னையில் கிழித்தது என்ன?

சந்திப்பு said...

சி.பி.எம்.மிடமிருந்து வாங்கும் 'வேஜ்'க்கு குறைந்த பட்ச நன்றியோடு நடந்து கொள்ள முனையும் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு இரங்குகிறோம்.

இணையத்தில் தங்களதுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை வார்த்தைகளால் பந்தாடிய வரலாறு அனைவருக்கும் தெரியும். சரி அதை விடுவோம்! அதுதான் உங்கள் பாணி!

அப்படியென்றால் ம.க.இ.க. மற்றும் எஸ்.ஓ.சி. கும்பலில் உள்ள முழுநேர புரட்சியாளர்கள் (புரட்டர்கள்) யாருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்துங்கள். உங்களது வாக்கு மூலமே நீங்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள் - சீர்குலைவுவாதிகள் என்பதை தெளிவுபடுத்துகிறது.
சி.பி.எம்.யிடம் வாங்கும் வேஜ்வாங்குவதற்காக நாங்கள் சந்தோசமே அடைகிறோம். இதனை வெளிப்படையாக சொல்வதில் எந்த தயக்கமும் இருக்க வேண்டியதில்லை.

ஏகலைவன் said...

////உங்களது கட்சித் திட்டத்திற்கு இனிமேல் நீங்கள் கோனார் நோட்ஸ் எழுதியாவது வெளியிடுங்கள்.////
கட்சித்திட்டத்தில் உள்ளவரிகளே அனைவருக்கும் தெளிவாகப் புரியும்போது தனியாக கோணார் உரை எழுதுவது தேவையில்லை என்றே தெரிகிறது. அது உம்மைப் போன்ற கூமுட்டைகளுக்குத்தான் புரியாது.

////எந்த இடத்திலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோன்ற எந்தவிதமான வியாக்கியானமும் அங்கே இல்லை! ////
உம்முடைய வியாக்கியான கட்டுரையில், நீ குறிப்பிட்டுள்ள அவதூறுகள் எங்கெங்கே இருக்கின்றன என்று சொல்லமுடியுமா?

////பகத்சிங்கை நீங்கள் விஜயகாந்த் அளவில்தான் பார்க்கிறீர்கள் போலும். அதனால்தான் அவரை வாக்கு சேகரிக்கும் வசிகரிக்கும் தோற்றத்தோடு காண முற்படுகிறீர்கள்.////

விஜயகாந்தின் முகம் எப்படி ஆள்சேர்க்க பயன்படுத்தப்படுகிறதோ, அதே அடிப்படையில்தான் இ.ஜ.வா.சங்கத்தின் மூலமாக சி.பி.எம்.கட்சிக்கு ஆள்சேர்க்க பகத்சிங் பயன்படுத்தப்படுகிறான்.

''நாடாளுமன்றத்தில் குண்டுவீசுபவன்தான் புரட்சிக்காரனா?" என்று எவனாவது சி.பி.எம்.மேடையிலேயே பேசிவிட்டுபோவான் அதைக்கேட்டு விரல்சூப்பிவிட்டு வரும் உமது கட்சி நிர்வாகிகளைப் போயி கேளு, பகத்சிங் அவமதிக்கப்பட்டது குறித்து.

////மேலும் பகத்சிங் ஒரு சோசலிஸ்டாக - கம்யூனிஸ்ட்டாக பரிணமித்து வந்தவன். இந்த ஒரே காரணத்திற்காக முதலாளித்துவ சீரழிந்த அரசியல்வாதிகள் பகத்சிங்கின் புரட்சிகர போராட்டத்தை எப்போதும் மறைத்தே வந்துள்ளனர்./////
இதில் எமக்கும் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அதனால்தான் கேட்கிறேன், மேற்கண்ட உமது வரிகளில் காந்தியினுடைய துரோகம் எத்தகையது என்று?, அதற்கு பதில் சொல்ல மறுக்கும் உமது பித்தலாட்டத்தனம்தான் உமது பதிலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

////இப்போதும் உங்களது பிரதான எதிர்ப்பு சி.பி.எம். மற்றும் இடதுசாரிகளை நோக்கியதாகத்தானே இருக்கிறது.////
இவ்வரிகளில் விமர்சனங்களைக் கண்டு தொடைநடுங்கும் உமது இயலாமையே வெளிப்படுகிறது. உம்மை நோக்கி வரும் எமது விமர்சனங்கள், உமது சக ஓட்டுக்கட்சிகளின் விமர்சனங்களை போல் இல்லையே என்பதுதான் உமது கவலையாக இருக்கிறது போலும்.

////பா.ஜ.க. செய்ய வேண்டியதை நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறது. இதுதான் புரட்சிகர சீரழிவுவாதம்! நீங்கள் நவீன இந்துத்துவ பார்ப்பனிய ஏகாதிபத்திய சேவையைத்தானே வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.////
கேரளாவில் உமது கட்சி ஊழியர்களைக் கொன்று குவித்த மதவெறி பா.ஜ.க.வைச் சேர்ந்த அத்வானியை விருந்துக்கு அழைப்பதுவும், சங்கராச்சாரிக்கு அடிபனியும் உமது அரசு நடவடிக்கைகளும், இ.எம்.எஸ். என்ற சங்கரன் நம்பூதிரி வெளியிட்ட பார்ப்பனீய ஆதரவுக் கருத்துக்களும், இன்னும் என்னற்ற இந்துத்துவ அடையாளங்களைக் கொண்டிருக்கும் நடைமுறைப் பாசிஸ்டுகளான உமக்கு இப்படிப்பட்ட கேள்விகள் கேட்க எந்த யோக்கியத்தையும் கிடையாது.

////மேலும் அமைப்பு என்ற ஒன்றைக் கட்டாமலே வெறும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன? 1976 முதல் நீங்கள் சென்னையில் கிழித்தது என்ன?////
1920 முதல் கட்சி நடத்தி, பலகோடி உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகப் பீற்றிக் கொள்ளும் போலிகளான நீங்கள் சாதித்ததைவிட, சொற்ப எண்ணிக்கையிலான நாங்கள் நிச்சயமாக பெரிதாக நாங்கள் களத்தில் சாதித்திருக்கிறோம்.

ஏகலைவன்.

சந்திப்பு said...

உம்முடைய வியாக்கியான கட்டுரையில், நீ குறிப்பிட்டுள்ள அவதூறுகள் எங்கெங்கே இருக்கின்றன என்று சொல்லமுடியுமா?

அறிவுக் கொழுந்து - தத்துவப் புலி ஏகலைவா! இன்னும் உங்களுக்கு எஸ்.ஓ.சி. கட்சித் திட்டத்தை கண்ணில் காண்பிக்கவில்லை என்பதைத்தான் உணர முடிகிறது. முதலில் உங்கள் தலைமைக்கு விசுவாசமாக நடந்து காண்பித்து கட்சித் திட்டத்தின் தரிசனத்தை காண முயலுங்கள்.

''நாடாளுமன்றத்தில் குண்டுவீசுபவன்தான் புரட்சிக்காரனா?" என்று எவனாவது சி.பி.எம்.மேடையிலேயே பேசிவிட்டுபோவான் அதைக்கேட்டு விரல்சூப்பிவிட்டு வரும் உமது கட்சி நிர்வாகிகளைப் போயி கேளு, பகத்சிங் அவமதிக்கப்பட்டது குறித்து.

ஏகலைவா இங்கே நீங்கள் வாத்துமுட்டையாகிப் போனதைக் கண்டு வருந்தத்தான் முடிகிறது. எல்.எல்.சி. நூலக கட்டிடத்தில் "நான் மனு விரோதன்" இரண்டாவது புத்தக வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தது சி.பி.எம். அல்ல. கீற்று இணையதளம் என்பதையாவது முதலில் தெரிந்துக் கொண்டு பேசியிருக்கலாம். இதிலிருந்தே தெரிகிறது உங்களுக்கு காமாலைக் கண் வியாதி இருக்கிறது என்று. சரி விடுவோம். மேலும் அங்கே பலதரப்பட்ட சிந்தனைப் போக்கு கொண்டவர்கள் இருந்த மேடை. குறிப்பாக தலித் மக்கள் விடுதலைக்கான வழியைத் தேடும் மேடையாக இருந்தது. புனிதப் பாண்டியனின் பேச்சு சரியான திசைவழியில் செல்லவில்லை. குறிப்பாக பகத்சிங் குறித்து போகிற போக்கில் பேசியது மேடை நாகரீகமும் அல்ல. இருப்பினும் அது அவருடைய பாணி. அதற்காக அந்த மேடையிலேயே விட்டேனா பார் என்று ம.க.இ.க. மாதிரி கடப்பாறையை தூக்கும் அமைப்பல்ல நாங்கள். பேச்சுக்கு பேச்சு... எழுத்துக்கு எழுத்து முட்டிக் கொண்டு நிற்பதற்கு. தலித் மக்கள் தொடர்பான விசயங்களுக்கு சி.பி.எம். நிலை குறித்து அங்கே பதில் தரப்பட்டது. உங்களுக்கு எப்போதும் தலையை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதுதான் வழக்கும். இதுதான் முழுமையான மொன்னைத்தனம் என்பது.


காந்தியினுடைய துரோகம் எத்தகையது என்று?, அதற்கு பதில் சொல்ல மறுக்கும் உமது பித்தலாட்டத்தனம்தான் உமது பதிலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.


பகத்சிங்கிற்கு தூக்கு தண்டனை உறுதியான சமயத்தில் காந்தியின் வட்டமேஜை மாநாட்டு நிகழ்வுகள் நாடு முழுவதும் கண்டனத்திற்கு உள்ளானது. காந்தியின் முதலாளித்துவ சந்தர்ப்பாவத அரசியலை கம்யூனிஸ்ட்டுகள் 1920 முதலே கண்டனம் செய்து வருகிறார்கள் என்ற வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. நீங்கள் எல்லாம் திடீரென்று வானத்திலிருந்து குதித்த புரட்சியாளர்கள்!



நடைமுறைப் பாசிஸ்டுகளான உமக்கு இப்படிப்பட்ட கேள்விகள் கேட்க எந்த யோக்கியத்தையும் கிடையாது.



உங்களது தத்துவ பாசிசம் குறித்து மெளனம் சாதிப்பது ஏனோ?


அது சரி ஏகலைவா திசை திருப்பல் வாதம் என்று சொல்வார்களே அது இதுதானா? உங்கள் கட்சி திட்டத்தின் மாயாவாத - கற்பனாவாத அட்டைக் கத்தி புரட்சி பற்றி - அதன் திருகுத்தாளங்கள் குறித்து இங்கே விமர்சிக்கும் போது அதைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் திசைத் திருப்பல் வேறு.... தூ.... மானங்கெட்ட பொழப்பு... (மன்னிக்கவும் இதையெல்லாம் கத்துக் கொடுத்தது சாட்சாத் ம.க.இ.க. தத்துவார்த்தவாதிகள்தான்)

Anonymous said...

அன்பு ஏகலைவன்,

விடுதலைப்போரின் வீரமரபு என்று சிறப்பிதழ் போட்டுத்தான் தங்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை காட்டியாக வேண்டிய நிலையில் உள்ள நீங்கள்,முதிர்ந்த நிலையில் உள்ள ஏராளமான சுதந்திரபோராட்டவீரர்களையும்,தெலுங்கானா ஆயுதப்போராட்ட வீரர்,வீராங்கனையும்
கட்சியின் தலைமையாக கொண்டுள்ள எங்களைப் பார்த்து......................?

போங்க சார்! சிபிஎம்ஐ விமர்சித்து விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக ஏதேனும் வேலை செய்யுங்க சார்!

Anonymous said...

அன்பு ஏகலைவன்,
விடுதலைப்போரின் வீரமரபை சிறப்பிதழ் போட்டுத்தான் தங்களின்
ஏகாதிபத்திய உணர்வை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ள நீங்கள்,முதிர்ந்த நிலையில் உள்ள,
ஏராளமான சுதந்திர போராட்டவீரர்களையும்,தெலுங்கானா வீரர்,வீராங்கனைகளையும்
கட்சியின் தலைமையாக கொண்டுள்ள எங்களைப் பார்த்து..........................?

சிபிஎம்ஐ விமர்சித்து விளம்பரம் தேடிக்கொள்ளுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமா,ஏதேனும்
வேலையை செய்யுங்க சார் போங்க!

bala said...

ஏகலைவன் அய்யா,

ம க இ க கும்பலை சேர்ந்தவர்கள் "சொறி பிடித்த வெறி நாய்களா" அல்லது "வெறி பிடித்த சொறி நாய்களா" என்று புரியாமல் எளியவர்களான எம் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்."நீங்களெல்லாம் வெறி பிடித்த சொறி நாய்கள் தான்" என்று உங்கள் வாயாலேயே தீர்மானமாக சொல்லி எம் மக்களின் குழப்பத்தை போக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

பாலா

சந்திப்பு said...

நன்பர் பாலாவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் தத்துவார்த்த குழப்பத்தின் உச்ச கட்டத்தில் உள்ளனர். தங்களது கருத்துதான் சிறந்தது என்பதை கூறுவதற்காக மற்றவர்கள் மீது பிராண்டிக் கொண்டே இருப்பார்கள். அவ்வளவுதான்.