July 25, 2006

சபரிமலை சாமியாரின் அயோக்கியத்தனம்!

சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மோகனரு திடீரென அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கும் விபச்சாரப் பெண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு குற்றம் சாட்டியுள்ளது.

ஐயப்பன் கோவில் கருவறைக்குள் நடிகை ஜெயமாலா நுழைந்தது தொடர்பாக உன்னி கிருஷ்ண பணிக்கர் கிளப்பிய சர்ச்சைக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு ஏற்பட்டு வருகிறது. அதற்காக தென் கேரளா முழுவதும் பரிகார பூஜைகளை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இந் நிலையில் சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மோகனரு மீது புதிய புகார் எழுந்துள்ளது. விபச்சார அழகிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கொச்சியில் விபச்சாரிகள் இருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அடிக்கடி போகும் பழக்கம் உடையவர் கண்டரரு. இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை அவர் சென்றுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுக்கு, அதை மறைக்க தலா ரூ. 20,000 வரை பணத்தைக் கொடுத்துள்ளார் கண்டரரு. கண்டரரு பலமுறை இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வந்துள்ளதாகவும், விபச்சாரப் பெண்களின் வீட்டுக்குப் போய் வந்ததாகவும் கூறினார்.

மேலும் கண்டரருவின் கார் நம்பரையும் கொடுத்தார். கண்டரருவுடன் புகைப்படத்தில் இருக்கும் பெண் விபச்சாரம் செய்ததற்காக ஏற்கனவே தண்டனை பெற்றவர் என்றார் பத்மகுமார். கண்டரரு மோகனரு மீதான இந்தப் புகார் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐயப்பன் கோவில் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கண்டரரு மீதான புகாரைத் தொடர்ந்து அவரை உடனடியாக தந்திரி பொறுப்பிலிருந்து நீக்கி திருவாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டது. அவர் கோவிலுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய தந்திரியாக மோகனருவின் தந்தை கண்டரரு மகேஸ்வரரை நியமித்துள்ளது. அவர் உடனடியாக பொறுப்பேற்க மறுத்துள்ளார். மோகனரு மீதான விவகாரத்தில் முடிவு தெரிந்த பின்னரே தந்திரியாக பொறுப்பேற்பேன் என்று கூறிவிட்டார்.
இதற்கிடையே தன்னை தந்திரி பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லாது என்று மோகனரு கூறியுள்ளார். கொச்சி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட அவரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.

அப்போது அவர் கூறுகையில், எனக்கு எதிராக சதி நடக்கிறது. பாரம்பரியமாக வகித்து வரும் பதவி தந்திரி பதவி. அந்த உரிமையைப் பறிக்க தேவசம் போர்டால் முடியாது என்றார்.

ஜெயமாலா விவகாரத்தில் உன்னி கிருஷ்ண பணிக்கருடன் தந்திரி மோகனரு கடுமையாக மோதியது குறிப்பிடத்தக்கது. பணிக்கரும் ஜெயமாலாவும் சேர்ந்து கோவில் பூசாரிகள், நிர்வாகத்துக்கு எதிராக நாடாகமாடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில் விபச்சார சிக்கலில் மாட்டியுள்ளார் மோகனரு.

ஒரு பெண் ஐயப்பனை தொட்டுவிட்டார் என்பதற்காக பரிகார பூஜைகளை நடத்தும் தேவசம் போர்டு. இவ்வளவு நாளாக பல பெண்களுடன் விபச்சார தொடர்பு இந்த அயோக்கியருக்காக எத்தனை முறை பரிகார பூஜை நடத்தும்?

இந்து சனாதனம் - மனுதர்மம் பெண்ணை மனித பிறவியாகவே கருதவில்லை. அவர்களை நாயினும் கீழாகத்தான் பார்க்கிறது. சுத்த சுயம்புவாக ஆண்களை கருதும் ஆணாதிக்க மனோபாவம்தான் இந்து மதத்தில் தொடர்கிறது. அதிலும் பல அயோக்கித்தனங்களை செய்யும் பூஜாரிகளை வைத்திருப்பது புனிதமாக கருதப்படுகிறது. இதற்காக வக்காலத்து வாங்கும் இந்துத்துவவாதிகளிடம் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்து மதத்தை மீட்டெடுக்கும் முயற்சியை எதிர்பார்க்க முடியுமா? நிச்சயம் முடியாது. அவர்களது நோக்கமெல்லாம் இந்தியாவை மீண்டும் மனுவின் காலடியில் வைப்பதுதான். ஆனால், கோடிக்கணக்கான இந்துக்கள் - அந்த மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும், தீண்டாமையையும் தங்களது அனுபவத்தில் உடைத்தெறிந்து மீண்டு வருகின்றனர் புதிய மாற்றங்களை நோக்கி. இதில் குழப்பத்தை விளைவிப்பதுதான் இந்துத்துவவாதிகளின் கொடூர புத்தி.

12 comments:

அருண்மொழி said...

நம்ம சுப்பிரமணி காத்து அங்கேயும் வீச ஆரம்பித்துவிட்டது போலிருக்கின்றது :-).
ஐயப்பன் matter எழுதி இருக்கின்றீர்கள். சாபம் விடும் (ஆ)சாமிகள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம்.

சரவணன் said...

// ஒரு பெண் ஐயப்பனை தொட்டுவிட்டார் என்பதற்காக பரிகார பூஜைகளை நடத்தும் தேவசம் போர்டு. இவ்வளவு நாளாக பல பெண்களுடன் விபச்சார தொடர்பு இந்த அயோக்கியருக்காக எத்தனை முறை பரிகார பூஜை நடத்தும்? //
சரியாக சொன்னிர்கள்.
நன்றிகள் பல...

சந்திப்பு said...

நன்றிகள் அருண்மொழி, மாயுரம் சரவணன்.
பாவம்! அவர்களது சாபத்திற்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை! :)

மனதின் ஓசை said...

//ஒரு பெண் ஐயப்பனை தொட்டுவிட்டார் என்பதற்காக பரிகார பூஜைகளை நடத்தும் தேவசம் போர்டு. இவ்வளவு நாளாக பல பெண்களுடன் விபச்சார தொடர்பு இந்த அயோக்கியருக்காக எத்தனை முறை பரிகார பூஜை நடத்தும்?//

என் மனதிலும் இதே கேள்விதான் அந்த செய்தியை பார்த்ததும் எழுந்தது....அதிலும் அவர் பூசாரியாக பணியாற்றியுள்ளார்...எத்தனை மாதம்/வருடம் பரிகாரம் தேட வேண்டுமோ..இந்த தீட்டு கழிவதற்கு..
பார்க்கலாம்..

அருண்மொழி said...

தந்திரி குடுத்த புகார்.

"என்னிடம் இருந்து 18 பவுன் தங்க செயின், 15 பவுன் தங்க பிரேஸ்லெட், 5 மோதிரங்கள், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். இந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்கள். நான் ரூ.30 லட்சம் தர ஒப்புக்கொண்டதின் பேரில் என்னை அங்கிருந்து விடுவித்தனர்."(நன்றி தினத்தந்தி)

சாமிக்கு ஏராளமான சொத்துக்களும், நகைகளும் இருக்கலாம். ஆனால் (ஆ)சாமிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது. இதுவும் "அவன்" திருவிளையாடலோ?

சந்திப்பு said...

மனதின் ஓசை நன்றி.
அருண்மொழி ஆசாமிகள் கடவுளை தரிசிக்க அனுமதிக்கும் நேரடி புரோக்கர்கள் (சாரி!) கடவுளின் பிம்பங்கள். தந்திரி ஒருவேளை தன்னையே கடவுளாக கருதியிருப்பார்...

Anonymous said...

சமீபகாலமாக காஞ்சியிலிருந்து குருவாயூர் வரை பரவியுள்ள "பக்தி" -கேட்கப் மயிர்கூச்செறிகிறது.அதுவும் "ஆ" சாமிகளின் பக்தி. நம்ம மதம் எங்கோ போகுது. இனியும் மனிதன் கோவிலுக்குப் போவானா???
யோகன் பாரிஸ்

Anonymous said...

சமீபகாலமாக காஞ்சியிலிருந்து குருவாயூர் வரை பரவியுள்ள "பக்தி" -கேட்கப் மயிர்கூச்செறிகிறது.அதுவும் "ஆ" சாமிகளின் பக்தி. நம்ம மதம் எங்கோ போகுது. இனியும் மனிதன் கோவிலுக்குப் போவானா???
யோகன் பாரிஸ்

Anonymous said...

சமீபகாலமாக காஞ்சியிலிருந்து குருவாயூர் வரை பரவியுள்ள "பக்தி" -கேட்கப் மயிர்கூச்செறிகிறது.அதுவும் "ஆ" சாமிகளின் பக்தி. நம்ம மதம் எங்கோ போகுது. இனியும் மனிதன் கோவிலுக்குப் போவானா???
யோகன் பாரிஸ்

Anonymous said...

சமீபகாலமாக காஞ்சியிலிருந்து குருவாயூர் வரை பரவியுள்ள "பக்தி" -கேட்கப் மயிர்கூச்செறிகிறது.அதுவும் "ஆ" சாமிகளின் பக்தி. நம்ம மதம் எங்கோ போகுது. இனியும் மனிதன் கோவிலுக்குப் போவானா???
யோகன் பாரிஸ்

அசுரன் said...

என்னவோய் சந்திப்பு ஆரம்பிச்சுட்டேரையா உம்ம வேலையை....பெண்பிள்ளைகளை கருவறைக்குள் அனுமதிக்காதது சம்பிரதாயம்...அதில் அடிமைத்தனம் உரிமை மறுப்புன்னு பேசரதெல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் ஒம்மைப் போன்ற முற்போக்கு முட்டாள்களின் வேலை...இது போன்ற மூடநம்பிக்கைகள் மற்ற மதத்தில இல்லையாக்கும் அதையெல்லாம் நீர் தட்டிக் கேட்பீரோ?...

இப்படி அர்த்தம் வரும் வகையில் இந்த ஜெயமலா ஐயப்பன் கள்ளத் தொடர்பு பற்றி ஒரு புனித அறிவு ஜீவி பொலிடிகலி இன்கரெக்டு ஆசாமி கட்டுரை எழுதியுள்ளார்.

அவருக்கு பதில் இதுதான். அய்யா பொலிடிகலி இன்க்ரக்டுகளே... இந்து மதம் எனப்படும் சனதான தர்ம பண்பாட்டை இந்திய பண்பாடாக சித்திரிக்கும் உங்களது முயற்சி நிற்க்காத வரை இந்து மதத்தின் தவறுகளை பொதுமைப் படுத்தி அம்பலப்படுத்தும் எம்மை போன்ற முற்போக்கு முட்டாள்களின் குட்டை குழப்ஸ் மின் பிடிக்ஸ் நடவடிக்கைகள் நிற்க்காது..

அருமையான கட்டுரை சந்திப்பு.... மனு தர்மம் என்பதே யார் எந்த அளவு மொள்ளமாறித்தனம் செய்யலாம் என்பதன் தொகுப்புதான். இதை புரிந்து கொண்டுதான் அந்த ஆசாமி நடந்திருக்கிறார்.

நம்மைப் போன்ற அரைகுறைகள்தான் இதெல்லாம் புரியாம குத்தம் சொல்லுறோம் :-)).

//இந்து மதத்தில் உள்ள தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்து மதத்தை மீட்டெடுக்கும் முயற்சியை எதிர்பார்க்க முடியுமா? நிச்சயம் முடியாது. //

இந்து மதத்தை(எந்த மதமும்) மீட்டெடுப்பது பற்றி நாம ஏன் கவலைப்பட வேண்டும்? அது எக்கேடும் கெட்டு நாசாமா போகட்டும்.

நன்றி,
அசுரன்.

VSK said...

இது ஒரு தனி மனிதனின் அவலம்; சபலம்!
சோரம் போன அற்ப ஆசைகள்!
அவ்வளவுதான்!
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க ஏன் உங்களால் முடியவில்லை!?

ஐயப்பன் இவரால் வாழவில்லை!
இதற்கு வந்து பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லைதான்!
இருந்தாலும், தவிர்க்க முடியாமல் எழுதுகிறேன்.


நான்கு விரல்கள் உன்னைச் சுட்டிக் காட்டுவதை எண்ணிப்பார் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்து தொலைக்கிறது!

அது எனக்கும்தான்!
நன்றி!

ஏதோ இப்படியாவது மகிழ்ந்தீர்களே!
அதுவரையில் எனக்கும் மகிழ்ச்சியே!