July 17, 2006

பயங்கரவாதம் : ஓநாயின் அலறல்

7/11 மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதச் செயலை தொடர்ந்து இந்துத்துவ பயங்கரவாதிகள் அரசியல் ரீதியாக இதனை பயன்படுத்திக் கொண்டு அறுவடைச் செய்ய துடித்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்துத்துவ இட்லர் ‘அத்வானி’ கூறுகிறார். பயங்கரவாத்தை ஒடுக்க முடியாவிட்டால் ஆட்சியை விட்டு ஓடுங்கள் என்று:


அத்வானி இவ்வாறு கூறுவதற்கு கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா? இவர்களது நாக்கில் நரம்பு இருக்கிறதா இல்லையா? பா.ஜ.க. ஆட்சி செய்த ஐந்தாண்டு காலத்தில், அதுவும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ‘பொடா’ என்ற பேய் சட்டத்தை கொண்டு வந்த பிறகு பாராளுமன்றத்திற்கு உள்ளேயே பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தார்களே? இதனை மறந்து விட்டாரா அத்வானி! அத்வானி மறக்கலாம், உலகம் மறக்காது! இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள்.


ஜிகாத் பயங்கரவாதத்தை இந்திய மக்கள் ஒரு சேர கண்டிக்கிறார்கள். பயங்கரவாதம் வேறோடும், வேறடி மண்ணோடும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பயங்கரவாதிகள் இந்திய நாட்டின் ஒற்றுமையை சிதைப்பதற்காகவே இத்தகைய ஈனத்தனமான செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய மக்கள் இவர்களது நோக்கத்தை சிதறடித்து விட்டனர். இவர்களது நோக்கத்தில் மண்ணைத் தூவி விட்டனர். இந்திய மக்களின் பாரம்பரியமான ஒற்றுமை இந்த நேரத்தில் வெளிப்பட்டுள்ளது. இந்திய மக்களிடம் காணப்படும் இத்தகைய ஒற்றுமையைத்தான் பா.ஜ.க.வும் - சங்பரிவார ஓநாய்களும் விரும்பவில்லை.


இந்த நேரத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகள் ஆட்சியில் இருந்திருந்தால், 7/11 யை பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாக வேட்டையாடியிருப்பார்கள். மத்தியில் மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால், இவர்களது கனவு நிறைவேறவில்லை. அதனால்தான் அத்வானியின் ஓலம் ஓங்கி ஒலிக்கிறது.


இன்றைக்கு 7/11யை எதிர்த்த மோடி முழங்கப்போகிறாராம் மும்பையில்! மும்பை மக்களே உஷார்! உங்களிடையே விஷ விதைத் தூவுவதற்கு வருகிறார் மோடி. மோடியின் முகம் அருவருக்கத்தக்க இந்துத்துவ பயங்கரவாதத்தின் அடையாளம்! குஜராத்தில் கோத்ரா இரயில் எரிப்பு விபத்தை பயன்படுத்தியே 2000த்துக்கும் மேற்பட்ட குஜராத் சிறுபான்மை - இசுலாமிய மக்களை நரவேட்டையாடினானே மோடி இதற்கு பெயர் என்ன! தேச பக்தியா? பயங்கரவாதமா? திவிரவாதமா? கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை வெட்டிக் கொன்ற பயங்கரவாதிகள் யார்? உலகில் இவர்களை விட கீழ்த்தரமான பயங்கரவாத செயலை நிறைவேற்றுபவர்கள் யாராவது உண்டா? பெ°ட் பேக்கரியில் 14 பேரை உயிரோடு கொளுத்திய பயங்கரவாதிகள் யார்? இந்துத்துவ வேடிமிட்டிருக்கும் உள்நாட்டு பயங்கரவாதிகள் மோடியின் நிழலில்தானே உலா வருகிறார்கள்...


மோடி முழங்குகிறராம் பயங்கரவாதத்தை எதிர்த்து, மும்பை மக்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும், அவர்களிடம் மதகுரோதத்தை தூண்டுவதற்கும்தான் மோடியை இந்துத்துவவாதிகள் பயன்படுத்துகிறார்கள்.


மீண்டும் ஒரு 7/11 நடக்காமல் இருக்க வேண்டுமானால் பொடாவை கொண்டு வரவேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள் இந்துத்துவவாதிகள், இவர்களது குரலையே ஒலிக்கிறார் ஜெயலலிதா. இவர் மட்டும் என்ன? 2000 பேரை கொன்று குவித்த குஜராத் பாசிசவாதி மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சென்று மோடித்துவ பயங்கரவாதத்திற்கு துணை நின்றவர்தானே... இவரிடம் இருந்து வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்!


நேற்று (16.07.2006) இந்தியன் எக்°பிர° நாளிதழில் வெளியான கட்டுரை மிக அற்புதமாக இருந்தது. அந்த கட்டுரையின் முக்கியமான அம்சம் என்னவென்றால், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்பி! இந்தியாவில் 25 கோடி பேர் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கிறார்கள், அவர்களுக்கு வேலையில்லை, உணவு இல்லை, பாதுகாப்பான வாழ்க்கை இல்லை. இத்தகைய மக்களைத்தான் பயங்கரவாதிகள் கவர்ந்திழுக்கிறார்கள்... எனவே இன்னொரு 7/11 நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் வறுமைக்கும், வேலையின்மைக்கும், கல்வியின்மைக்கும் தீர்வுகாண வேண்டும் என முடித்திருக்கிறார்.


பா.ஜ.க.வுக்கும், சங்பரிவாரத்திற்கும் இத்தகைய அக்கறை உண்டா? இல்லையே! அவர்களது அக்கறையெல்லாம் அமெரிக்கா மீதும், பன்னாட்டு முதலாளிகள் மீதும்தான்... பயங்கரவாதத்தின் வேர்களை நாம் வெளிநாட்டில் தேடுவதற்கு முன்னால் உள்நாட்டில் - புனித வேடமிட்டிற்கும் பயங்கரவாதிகளின் வேர்களை அடையாளம் காணவேண்டும். இந்த வேர்களை நம்மால் அழிக்க முடிந்தால், வெளியில் இருந்து நம் எல்லைக்குள் வரும் வேர்களை எளிதில் அடையாளம் காண முடியும்!


எழுக இந்திய மக்களே! போற்றுவோம் இந்திய மக்களின் ஒற்றுமையை!! வேறறுப்போம் உள்நாட்டு - வெளிநாட்டு பயங்கரவாதிகளை!!!

11 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
இந்துத்துவ இட்லர்
///

அதாவதுங்க இந்த ஹிந்து முஸ்லீம் பிரச்சனையை யாரு ஆரம்பிச்சு வைச்சாங்கன்னு பார்த்தீங்கன்னா ஆங்கிலேயர் பிரித்தாள்வோம்ன்னு ( divide and rule ) ஆரம்பிச்சாங்கன்னுதான் நாம் கண்டு கொள்ளலாம். அவர்கள் வரும் வரை புகைந்து கொண்டிருந்ததை ஊதி ஊதி கொளுந்து விட்டெரியும் நெருப்பாக மாற்றி விட்டது ஆங்கிலேயர்கள். அவங்க ஆரம்பிச்சு வைச்ச பிரச்சனை இன்னைக்கும் தொடர்ந்துக்கிட்டு இருக்கு. காந்தி அவர்கள் இந்தப் பிரச்சனையை சாத்வீக முறையில் தீர்க்க எண்ணிணார். அவருடைய குறுக்கீடு இல்லையென்றால் பிரிவினையின் போது இன்னும் பல முஸ்லீம்கள் கொல்லபட்டிருப்பார்கள்.

உங்களுக்கு இதெல்லாம் தெரியும் என்பது எனக்கும் தெரியும் ஏன் இதனை திரும்பவும் சொல்கிறேன் என்றால் நாம் காந்தி வழியில் சென்றால்தான் இதற்கு தீர்வு காண முடியும். இதற்கு தீர்வு அமைதியான புரிய வைத்தலிலேயே இருக்கிறது. இந்த பதிவின் நோக்கம் காந்தி அவர்களின் நோக்கம் போன்றதுதான் சிறுபான்மையினருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுதான். ஆனால் உங்கள் குரலில் உள்ள கோபத்தை சரியான முறையில் சாந்தமாக மாற்றினால் இது அதிக நபர்களைச் சென்றடையும் வாய்ப்பாக அமையும் என்று கருதுகிறேன்.

எதோ எனக்கு தோணிணதைச் சொன்னேன். சரியாகப் பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்.

தவறாகத் தெரிந்தால் விட்டுவிடுங்கள்.

அப்துல் குத்தூஸ் said...

நெருப்புப் பொறி பறக்கின்றது உங்களின் கட்டுரையில். உண்மையை உலகுக்கு உரைத்த உங்களுக்கு என்னுடைய நன்றி.

வஜ்ரா said...

சந்திப்பு,
..
அதுவும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ‘பொடா’ என்ற பேய் சட்டத்தை கொண்டு வந்த பிறகு பாராளுமன்றத்திற்கு உள்ளேயே பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தார்களே? இதனை மறந்து விட்டாரா அத்வானி! அத்வானி மறக்கலாம், உலகம் மறக்காது! இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள்.
..

போடா சட்டத்தை பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு தான் NDA அரசு கொண்டுவந்ததாக நினைவு.

..
இந்த நேரத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகள் ஆட்சியில் இருந்திருந்தால், 7/11 யை பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாக வேட்டையாடியிருப்பார்கள். மத்தியில் மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால், இவர்களது கனவு நிறைவேறவில்லை. அதனால்தான் அத்வானியின் ஓலம் ஓங்கி ஒலிக்கிறது.
..

1993ல் மும்பயில் தொடர் குண்டுவெடிப்பு நடந்ததே..அதை மறந்து விட்டீரா...? அதைத் தொடர்ந்து எந்த மதக்கலவரமும் நடக்கவில்லை. சிறுபான்மையினரை வேட்டையாடும் கனவு ஒன்றும் ப.ஜ.க வுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கி, காம்ரேடுகளுக்குத்தான் சிறுபான்மையினர் மீது எக்கச்செக்க அக்கறை (ஆடு நனைகிறது என்று ஓனாய் கவலைபடுவது போல்!!)

இந்த மதச்சார்பற்ற என்றால் என்ன அர்த்தம்...தயவு செய்து இந்த மரமண்டைக்கு விளக்குங்களேன்...!!?

..
உலகில் இவர்களை விட கீழ்த்தரமான பயங்கரவாத செயலை நிறைவேற்றுபவர்கள் யாராவது உண்டா?
..

மாவோ சே துங், ஸ்டாலின்

..
பா.ஜ.க.வுக்கும், சங்பரிவாரத்திற்கும் இத்தகைய அக்கறை உண்டா? இல்லையே! அவர்களது அக்கறையெல்லாம் அமெரிக்கா மீதும், பன்னாட்டு முதலாளிகள் மீதும்தான்... பயங்கரவாதத்தின் வேர்களை நாம் வெளிநாட்டில் தேடுவதற்கு முன்னால் உள்நாட்டில் - புனித வேடமிட்டிற்கும் பயங்கரவாதிகளின் வேர்களை அடையாளம் காணவேண்டும்.
..
முதலில், தில்லி ஜுமா மஸ்ஜித் இமாம் ஐ "மதச்சார்பற்ற" ஐக்கிய மு(வயி)ற்போக்குக் கூட்டணி கைது செய்யவேணுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

நீங்கள் சொல்வது சரி. உள் நாட்டுத் துரோகிகளைத்தான் முதலில் களைய வேண்டும்...

இந்த குண்டுவெடிப்பு பற்றி இப்படி சிறுபான்மையினர் மீது பொதுப்படையான கோபம் வர உங்கள் கருத்துக்கள் இடமளிப்பதாகவே நான் கருதுகிறேன்...இங்கே, பிரச்சனை இந்துத்வா அல்ல....

ஜிஹாத் பற்றி தெளிவான விளக்கம் கொடுத்து, அனைத்து சிறுபான்மையினரும் (SIC) தீவிரவாதத்தை ஆதரிக்கும் மக்கள் அல்லர் என்பதைச் செய்யவேண்டியவர்கள். இப்படி மதச்சார்பற்ற வேடம் போட்டு, இந்துக்களை மேலும் கோபமுரச் செய்து, இஸ்லாமியர்கள் மீது காழ்புணர்ச்சி வர மூல காரணமாக இருக்கிறீர்கள்.

..
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்பி! இந்தியாவில் 25 கோடி பேர் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கிறார்கள், அவர்களுக்கு வேலையில்லை, உணவு இல்லை, பாதுகாப்பான வாழ்க்கை இல்லை. இத்தகைய மக்களைத்தான் பயங்கரவாதிகள் கவர்ந்திழுக்கிறார்கள்... எனவே இன்னொரு 7/11 நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் வறுமைக்கும், வேலையின்மைக்கும், கல்வியின்மைக்கும் தீர்வுகாண வேண்டும் என முடித்திருக்கிறார்.
..

முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்...இது சோத்துக்கு லாட்டரி அடிக்கும் அன்னடங்காச்சிகள் வேலையல்ல....அந்த எண்ணத்தில் நோக்கினால் எல்லாமே இப்படி தவறாகவே தெரியும்...மௌலானா "முல்லா"யம் சிங் சொல்வது கூட சரி என்று படும்..!!

சந்திப்பு said...

குமரன் தங்கள் கருத்துக்கு நன்றி. கோபம் கொஞ்சம் அதிகம்தான். இதை நானும் உணர்ந்தேன். வேறு வழித் தெரியவில்லை. தாங்கள் சொல்லியிருக்கிற காந்திய வழி சரியா என்று சோதனை செய்ய வேண்டியுள்ளது! இருப்பினும் அதுவும் கையாளப்பட வேண்டிய ஒருவழிதான் என்பதை ஒத்துக் கொள்கிறேன். மகாத்மாவின் தேசப் பிரிவினையின் போது கூறியது இந்திய மக்கள் அனைவரின் நெஞ்சிலும் பதியப்பட வேண்டிய ஒன்று : இந்தியா - பாகிசுதான் பிரிவினை எனது இதயத்தை பிளப்பது போல் என்று கூறியுள்ளார். இந்திய மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்தவர்கள் பிராமணீய சனாதன பிற்போக்குவாதிகளும் - இந்துத்துவவாதிகளும்தான். முதன்முதலில் பிரிவினை எண்ணத்தை தூண்டியவர்கள் இந்துத்துவவாதிகள்தான். அனைத்துவிதமான மதஅடிப்படைவாதங்களும் முறியடிக்கப்பட வேண்டிய ஒன்றே! மக்கள் ஒற்றுமைக்கான தொடர் நடவடிக்கைகளை நாம் மிக கவனத்தோடு கையாளப்படவேண்டியுள்ளது. நன்றி குமரன்.

சந்திப்பு said...

நன்றி அப்துல், நெருப்புத்தான்... இது பரப்பப்படவேண்டிய கருத்து ரீதியான நெருப்பு... இந்துத்துவவாதிகள் விஷத்தை கக்குகிறார்கள். நாமோ அதனை முறிப்பதற்காக நெருப்பை கக்கவேண்டியுள்ளது.

சந்திப்பு said...

ஷங்கர் தங்களிடம் இந்துத்துவ பாதுகாப்பு குரலைத்தான் காண முடிகிறது. இது தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவிடாது. அடுத்து மாவோ, °டாலின் இவர்கள் இருவருமே பாசிச வாதிகளை முறியடித்தவர்கள் எனவே உங்களிடம் இருந்து வரும் கருத்தை நான் மாறுபாடாக பார்க்க முடியாது. நான் இரண்டு பயங்கரவாதத்தையும் முறியடிக்க வேண்டும் என்று கூறுகிறேன். ஆனால், நீங்கள்?

Anonymous said...

Thanks ,
You said in right time and right way.

Izzath said...

Mr.Sandippu,
THank you for your unbiased view.
You have the guts,courage and honesty to write this article.
PLease read my blog regarding this issue. GREAT!!

izzath.blogspot.com

Regards
Izzath (aizzath@hotmail.com)

வஜ்ரா said...

//
அடுத்து மாவோ, °டாலின் இவர்கள் இருவருமே பாசிச வாதிகளை முறியடித்தவர்கள் எனவே உங்களிடம் இருந்து வரும் கருத்தை நான் மாறுபாடாக பார்க்க முடியாது.
//

என்ன சொல்கிறீர்கள், மாவோ, ஸ்டாலின் இருவரும் மிகப்பெறும் பாசிஸ்டுகள்...ஹிட்லருக்கு தகப்பன்கள். ஹிட்லர் இனவாத வெறியன் என்றால் மாவோ, ஸ்டாலின் தத்துவ வெறியர்கள்...தம் மக்களையே ஈவு இறக்கமின்றி கொன்று தீர்த்தவர்கள்...இந்த கருத்தில் உங்களுக்கு மாற்றுகருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

இந்துத்வா தவறு தான்...இந்து சனாதன தர்மத்தை ஆபிரஹாமிய மதங்கள் கோட்பாட்டிற்கு கொண்டுவரும் கொள்கை இந்துத்வா கொள்கை....ஆனால் இந்த சனாதன தர்மமே காணாமல் போகவேண்டும் என்று எண்ணுபவர்களுடன்(மார்க்ஸிஸ்டுகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், கிறுத்தவ மதப் போதகர்கள்) கூட்டு சேர்வதைவிட இந்துத்வாவாதிகள் பரவா இல்லை. சனாதன தர்மத்திற்கு வேறு வழியுமில்லை.

அப்துல் குத்தூஸ் said...

வஜ்ரா,

சனாதன தர்மம் இப்ப எங்க சார் இருக்கு? உங்களின் புரட்டுக்கள் தானே அதிகமா அங்கு ஊடுருவி இருக்கு. ஆபிரஹாமிய மதத்திற்காண காரணகர்த்தாக்களை வரலாறுகளில் தெளிவாக காண முடியும். ஆனால், உங்க சனாதன தர்மத்திறகாண காரணகர்த்தாக்கள் யாருங்க சார்? அது எந்தவித மாற்றத்திற்கும் உட்படாமல் இருப்பதற்காண ஆதாரத்தை உங்களால் தர இயலுமா?

வஜ்ரா said...

அப்துல் குத்தூஸ்,

எந்த வித மாற்றத்திற்கும் உட்படாமல் இருப்பதற்கு சனாதன தர்மம் ஆபிரஹாமிய மதம் அல்ல. இந்த விஷயத்தில் சந்திப்பின் இந்த பதிவில் மேலும் விவாதிப்பது சரியானதும் அல்ல.