இந்தியாவில் செயல்படும் நக்சல் குழுக்களில் பிரதானமானது புதியதாக ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட் என அழைக்கப்படும் குழுவே. இந்த குழுவின் நடவடிக்கை புரட்சிகரமானதா? பயங்கரவாதமானதா? அராஜகமானதா என்பதை மறைந்த - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அனில் பிஸ்வாஸ் அவர்கள் அலசிய கட்டுரையை இங்கே கொடுத்துள்ளேன். இது பிடிஎப். பார்மெட்டில் உள்ளது. படிக்க விரும்புவோர் இதனை டவுன்லோட் செய்து படிக்கலாம். விவாதம் எதிர்பார்க்கப்படுகிறது.
July 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சந்திப்பு,
இணைக்கப்பட்டுள்ள PDF file நல்ல கட்டுரை. மார்க்ஸிடுகளின் நிலைப்பாடுகளை புரிந்து கொண்டு இன்னும் வீரியமாக விமர்சனங்களை முன்வைக்க இந்த PDF உதவும்.
மாவோயிசம் என்பது நக்சலிசத்தின் அடுத்தக்கட்டம் என்று பார்க்கிறார்கள் மாவொயிஸ்டுகள்.
அது ஒரு வேறுபட்ட வரலாற்றுக் கட்டம். லெனினியம் முடிந்துவிட்டது என்பது மாவோயிஸ்டுகளின் பார்வை.
இது எனது எதிர்வினையை எதிர்பார்த்து எழுதப்பட்ட கட்டுரையெனில் மன்னிக்கவும் மாவோயிசத்தை தற்காப்பது எனது வேலையில்லை. எனக்கு அதில் நம்பிக்கையும் கிடையாது. இன்னும் நமது வரலாற்றுக் கட்டம் லெனின் வரையறுத்த ஏகாதிபத்திய கட்டத்தை தாண்டி சென்று விடவில்லை என்பதுதான் எனது நிலைப்பாடும். அதனால் இந்த கட்டுரையை மாவோயிஸ்டுகள் வந்துதான் விவாதம் செய்ய வேண்டும்.
நக்சலிசம் பற்றி புதிய ஜனநாயக புரட்சி பற்றி ஏதேனும் விமர்சனம், இந்திய நிலைமைகளுக்கான புதிய பார்வை இருந்தால் முன்வைக்கவும்(இந்த கட்டுரையிலும் சில விசயங்கள் உள்ளன), விவாதம் செய்யலாம்.
அப்புறம், ஏற்கனவே நக்சலிசம் பற்றிய தங்களது பதிவில் ஆரம்பித்த விவாதத்தை என்ன செய்ய?
எனது அந்த விவாதத்திலேயே மாவோயிசம் விமர்சனதுக்குட்பட்ட குறைபாடுள்ள ஒரு தத்துவம்தான் என்பதை கோடிட்டு காட்டியிருந்தேனே.
அப்புறம் அந்த பதிலிலேயே ஸ்டாலின் பற்றி, நக்சல் எழுச்சியை CPM அடக்கியது பற்றி, அப்புறம் CPM இன் இந்துத்துவ எதிர்ப்பு நடைமுறை செயல் தந்திரங்கள் பற்றி, இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பியிருந்தேனே?
நன்றி,
அசுரன்
தங்களது கருத்துக்கு நன்றிகள் அசுரன்.
//அப்புறம் அந்த பதிலிலேயே ஸ்டாலின் பற்றி, நக்சல் எழுச்சியை CPM அடக்கியது பற்றி, அப்புறம் CPM இன் இந்துத்துவ எதிர்ப்பு நடைமுறை செயல் தந்திரங்கள் பற்றி, இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பியிருந்தேனே?
நன்றி,
அசுரன்
//
சந்திப்பு இது கருத்து இல்லை கேள்வி
உடனே அசுரனுக்கு நன்றி கேள்வியை கருத்தா மாத்திட்டீங்க
Post a Comment