உலகமயமாக்கல் - நவீனமயமாக்கல், நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக சாதாரண தொழிலாளர்களுக்கு கிடைத்த பேராயுதம்தான் பிளாகர். இன்றைய மீடியாக்கள் அனைத்தும் ஒரு சார்போடு செயல்படும் நேரத்தில், சுதந்திரமாக தங்களது கருத்துக்களை உலக மக்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது பிளாகர். இந்த பிளாகர் உலக மக்களை ஒரு கயிற்றில் இணைத்தது. பல்வேறு தத்துவங்கள், பல்வேறு பிரிவுகள், வர்க்க பேதங்கள், இனபேதங்கள் என பல கருத்துக்கள் இந்த பிளாகருக்குள் உலாவந்தாலும், ஒவ்வொரு கருத்துக்கு எதிராகவும் மற்றொரு கருத்தை வைத்து சுதந்திரமாக விவாதித்தல் என்ற நடைமுறை மூலம் உலகளவில் நல்லதொரு சமூகத்தை அமைத்திட பிளாகர் உதவி வருகிறது என்றால் அது மிகையல்ல.
உலகமயமாக்கலுக்கு எல்லையுண்டு. அது வெறும் பெயரில்தான் உலகமயமாக்கல்; ஆனால் அதன் பலனை அனுபவிப்பது உலகளவில் உள்ள டிரில்லினியர்களும், பில்லினியர்களும், மில்லினியர்களும்தான் - ஏகாதிபத்திய பகாசூர நிறுவனங்கள்தான் இதன் மூலம் பயனடைகின்றது. பிளாகர் அப்படியல்ல அது எல்லையற்ற சுதந்திரத்தை அதன் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கி வருகிறது. தங்களது சிந்தனைகளை மிக உயரே கொண்டுச் சென்றதில் பிளாகருக்கு மிக முக்கியமான பங்குண்டு.
இந்த பின்னணியில் பிளாகரின் செயல்பாடு இந்தியாவில் உள்ள ஆளும் வர்க்கங்களை நடுநடுங்கச் செய்துள்ளது. அதன் விளைவாகத்தான், இந்த கருத்துரிமைக்கு தடைபோடு துணிந்துள்ளனர். தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திற்கு மூடத்தனமான, மூடப்பழக்கங்களை விதைக்கும் கருத்துக்கள்தான் தேவை - சன் டி.வி.யில் அதைத்தான் நாம் பார்க்க முடியும். எனவே தகவல் தொழில்நுட்பத்தின் ஒரு அங்கமாக செயல்படும் பிளாகர் அரசியல் முதல் ஆட்சியாளர்கள் வரை சுதந்திரமாக உடனுக்குடன், சூடாக கருத்துக்களை பரிமாறிக் கொள்வது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பிடிக்கவில்லை. எனவேதான் அவர்கள் இந்த சுதந்திர மீடியாவை பொடா என்னும் கொடிய சட்டம் செய்வதை விட மிக மோசமான - சதி செயல்மூலம் அதனை தடை செய்து வருகின்றனர். எனவே, இதற்கு எதிரான போராட்டத்தை நாம் அடையாளம் காண வேண்டும். சுதந்திரமாக கருத்தை கூறியவர்கள், அந்த சுதந்திர காற்றை சுவாசிக்க யாரரெல்லாம் தடை செய்தார்களோ, அது ஏர்டெல், சிபி, ரிலையன்°... அவர்களது பொருட்களை சேவைகளை நாம் ரத்து செய்ய வேண்டும். இப்படிப்பட்ட அடையாளப்பூர்வமான போராட்டத்தை நாம் நடத்துவதன் மூலம்தான் இதனை மீண்டும் வென்றெடுக்க முடியும்.
4 comments:
கண்டிப்பாக ப்ளாக்கர் வலைத்தளங்கள் படித்த இந்தியர்களிடையே மாற்று சிந்தனைகளை அரசியல்வாதிகளின் சுய நல கலப்பை, அரசியல் தாக்கங்களை குறிப்பிடத் தக்க அளவில் வடிகட்டி பல்வேறு மாற்றுக் கருத்துச் "சந்திப்பு"களை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
மக்களின் விழிப்புணர்வு என்பது ஆளும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு என்றுமே ஆகாத ஒவ்வாமை தானே!
இதைப் பற்றி வந்த bbc செய்தி.
தடை செய்யப்பட்ட வலைத்தளங்கள்.
SOME BANNED SITES
www.hinduunity.org
exposingtheleft.blogspot.com
pajamaeditors.blogspot.com
commonfolkcommonsense.blogspot.com
www.hinduhumanrights.org/hindufocus.html
princesskimberley.blogspot.com
வந்திடுச்சிங்க வந்திடுச்சிங்க...
செந்தழல் ரவி
எங்க ரவி வந்திடுச்சு இன்னமும் வரவில்லையே.
Post a Comment