July 24, 2006

தலித் மக்கள் நிலமும் சிறுதாவூர் பங்களாவும்

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூரில் 1967இல் அண்ணாதுரை அவர்கள் முதல்வராக இருந்தபோது, 20 தலித் குடும்பங்களுக்கு தலா 2.5 ஏக்கர் வீதம் விவசாய நிலமும், 10 சென்ட் வீதம் குடியிருப்பு மனையும் சட்டப்பூர்வமாக வழங்கினார்.

இந்த நிலத்தில் 1980-85 வரையில் அம்மக்கள் விவசாயம் செய்து வந்தனர். இடையில் மழை பொய்த்து - வறட்சி ஏற்பட்டதால் அந்நிலங்கள் தரிசாக விடப்பட்டது. சில வருடங்கள் கழித்து அம்மக்கள் மீண்டும் தங்களது நிலத்தில் விவசாயம் செய்யச் சென்றபோது, இந்த நிலம் உங்களுடையதில்லை என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். செய்வதறியாத தலித் மக்கள் தங்களுக்கு கிடைத்த நிலம் யாரால் அபகரிக்கப்பட்டுள்ளது என்பதைக்கூட அறியாத நிலையில் இருந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் போன்றவர்களிடம் மனு கொடுத்து எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை.

சிறுதாவூர் தமிழக ஊர்களில் பிரபலமான ஊராக மாறியது ஜெயலலிதா அங்கே குடியேறி பின்தான். ஜெயலலிதாவின் சொகுசு பங்களா உள்ள இடத்தில்தான் தலித்துக்களின் இந்த நிலமும் இருக்கின்றது.

நிலத்தை இழந்த தலித் மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி. நிலமற்ற ஏழை - தலித் மக்கள் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியிடம் தங்களது சோகத்தை கூறினர். இதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய மார்க்சி°ட் கட்சி மேற்கூறப்பட்ட பல அதிகாரிகளிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னாள் மனு கொடுத்து, அம்மக்களுக்கு நிலத்தை மீட்டுக்கொடுக்குமாறு கோரிக்கை வைத்தது. ஆட்சியாளர்கள் மசியவில்லை. தற்போது இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக எழுப்பிய மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.

தமிழக அரசும் இந்த நில விவகாரத்தில் உரியவர்களுக்கு நிலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயம். மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி இந்த மக்களுக்கு நிலம் கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்று கூறியுள்ளது.

தலித் மக்களின் நில விவகாரம் இப்படிப் போய்கொண்டிருக்க முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஒரு நீண்ட தன்னிலை விளக்கத்தை அளித்துள்ளார். அதாவது, தலித் நிலத்தை தாங்கள் ஆக்கிரமிக்கவில்லை; அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம்தான் கேட்க வேண்டும். இந்த நில விவகாரத்தை பயன்படுத்தி பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள விடாமல் செய்கின்றார் கலைஞர் என்று கூறியதோடு, நிற்காமல், தாங்கள் தங்கியிருக்கும் சிறுதாவூர் பங்காள எனக்கோ, சசிக்கலாவுக்கோ சொந்தமானதில்லை. நாங்கள் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி இந்த தலித் நில விவகாரத்தில் எங்கள் மீது அவதூறு சுமத்துபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்று வழக்கம்போல் முழங்கியுள்ளார். தலித் மக்களின் நில மீட்புக்காக போராடிய மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் அவர்களுக்கும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார். சிறுதாவூர் பங்களா யாருடையது? உங்களுக்கான வாடகையை எப்படி செலுத்துகிறீர்கள்? செக்காகவா, அல்லது பணமாகவா? யாருடைய பெயருக்கு இதனை கொடுக்கிறீர்கள் என்று பல கேள்விகளை அவருக்கே உரித்தான பாணியில் கேட்டிருக்கிறார்...

கிணறு தோண்ட பூதம் வந்த கதையாக இது நீண்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த விவகாரத்தை கடந்த இரண்டு மாத காலமாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிற பொது மக்கள், அபகரிக்கப்பட்ட தலித் மக்களின் நிலம் அவர்களுக்கே திரும்ப கிடைக்க அண்ணாவின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்த, ஆட்சி செய்துக் கொண்டிருக்கிற திராவிட கட்சிகள் இதற்கு நடவடிக்கை எடுக்குமா என்பதே!

ஜெயலலிதாவின் நீண்ட தன்னிலை விளக்கத்தில்கூட தலித் மக்களுக்கு நிலம் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. மாறாக, இதுவொரு புது பூதமாக கிளம்பி விடுமோ என்ற பதட்டம்தான் காணப்படுகிறது.

இறுதியாக தலித் மக்களின் உயிர் மூச்சாக, உயிர் காற்றாக தன்னை அறிவித்துக் கொண்டா திருமாவளவன் இந்த விஷயத்தில் மூச்சே விடவில்லை! எல்லாம் அம்மாவின் பக்தி பரவசம்தான் காரணமோ?

11 comments:

Anonymous said...

If the land was in the name of dalits and if they had evidence they could have approached the court for relief.Is the bunglow
occupying 50 acres of land.If not who are the other enroachers.

Muthu said...

திருமாவளவன் வாய் திறக்கலாம் என்பதுதான் என் தாழ்மையான கருத்தும்...

(அண்ணா அறிவாலயமே பஞ்சமி நிலத்தில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?:)

சந்திப்பு said...

நன்பர் அனானி, தங்களது வருகைக்கு நன்றி.
இந்த 50 ஏக்கர் நிலமும் தலித் மக்களுக்கானதுதான். அந்த 20 குடும்பங்களுக்கும் - அவரவர்கள் பேரில் பட்டாக்களை வழங்கியுள்ளது தமிழக அரசு. தலித் மக்கள் ஏழைகள் - அப்பாவிகள் என்பதால் அவர்களது நிலம் அதிகாரத்தை பயன்படுத்தி அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். இவர்கள் கோர்ட்டுக்கு போய் எப்ப நிலத்தை வாங்குவது? அதற்காக செலவு செய்ய இவர்களால் முடியுமா? எல்லா விஷத்தையும் கோர்ட்க்கு போய்தான் தீர்க்க வேண்டும் என்றால், தீர்வே கிடைக்காது. வேண்டும் என்றால், இந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் தன்னார்வமிக்க வழக்கறிஞர்கள் தலித் மக்களுக்காக இலவசமாக வழக்குத் தொடுக்க முன்வரலாம் என்பது என்னுடைய கருத்து. தலித் மக்களின் பினாமி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பதை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள்தான் இதனை அம்பலப்படுத்திட வேண்டும். அதற்கான கடமை தற்போது அவரிடம் உள்ளது என நினைக்கிறேன்.

சந்திப்பு said...

அண்ணா அறிவாலயம் பற்றி புதுத் தகவல் கொடுத்துள்ளீர்கள். இது பற்றிய மேல் விபரம் ஏதாவது இருந்தால் கொடுத்தால் நல்லது. புதிய தமிழகம் உட்பட பல தலித் இயக்கங்கள் இந்த விஷயத்தில் தங்களது எதிர்ப்பை பதிந்துள்ளனர். திருமா வாய்த்திறக்கவில்லை. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? பார்ப்போம்...

மணியன் said...

அரசியல் சதுரங்கத்தில் மக்கள் பகடைக் காய்களே என்பதற்கு இன்னுமொரு அத்தாட்சி.

Anonymous said...

ஜெயலலிதாவின் சொகுசு பங்களா உள்ள இடத்தில்தான் தலித்துக்களின் இந்த நிலமும் இருக்கின்றது.

has all land of the dalits been enroached.if you claim ownership it is your duty to prove that.
enroachment is a criminal act.
if dalits were deprived by enroachment why neither CPIM
nor dmk did not take up their
cause earlier.dmk was ruling
in the state between 89-91,
again from 96-2001.what were
these parties doing then.

சந்திப்பு said...

உழைக்கும் மக்களுக்கான அரசியல் மட்டுமே இவ்வாறு ஒடுக்கப்படும், பாதிக்கப்படும், சுரண்டப்படும் மக்களுக்கு பயன்படும். அத்தகைய அரசியலை நோக்கி தமிழகத்தை இட்டுச் செல்வோம்.

சந்திப்பு said...

அனானி, சி.பி.எம். பூதக் கண்ணாடி எதையும் வைத்துக் கொண்டிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு வரும்போது அதுகுறித்து உறுதியான போராட்டத்தை நடத்துகிறது. உழைக்கும் மக்கள் பக்கம் நின்று.

லக்கிலுக் said...

/////(அண்ணா அறிவாலயமே பஞ்சமி நிலத்தில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?:)///////

தவறான தகவல்.... அண்ணா அறிவாலயம் இருப்பது பஞ்சமி நிலம் அல்ல... அறிவாலயத்துக்கு பின்னால் போஸ்டல் ஒர்க்கர்ஸ் குவார்ட்டர்ஸ் இருப்பதில் இருந்தே இதை அறியலாம்.....

அறிவாலயம் இருக்கும் நிலம் முறைப்படி விலைகொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.... இதற்கான தஸ்தாவேஜுகள் 'பூங்கா'ப் பிரச்சினையின் போது மாநகராட்சி அலுவலகத்துக்கும், கோர்ட்டுக்கும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.....

ஆனாலும் நீங்கள் குறிப்பிடும்படி ஒரு வதந்தி உண்டு.... அதாவது குடிசைமாற்றுவாரியத்தின் மூலமாக அந்த இடத்தை சுருட்டிக் கொண்டதாக.... அது முற்றிலும் புறம்பான தகவல்.... அண்ணா அறிவாலயம் இருக்கும் இடம் குடியிருப்புப் பகுதி அல்ல.... அதற்கு வலதுபுறம் கோ-ஆப்டெக்ஸின் வானவில்லும், இடதுபுறம் ஓபராய் ஓட்டலும் (எத்தனை வருஷமாகதான் கட்டுவாங்களோ) இருக்கின்றன....

குடிசை மாற்றுவாரியத்தின் குடியிருப்புகள் அறிவாலயத்துக்கு எதிர்புறமாக அதாவது விஜயராகவா சாலையை ஒட்டி தான் இருக்கிறது....

சந்திப்பு said...

ஒரு வழியா அறிவாலய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த லக்கி லுக்கிற்கு நன்றிகள். எனக்கு இது குறித்து விபரம் தெரியாததால் மறுமொழி கூறமுடியவில்லை. நன்றிகள்.

We The People said...

//*முதல்வர் கருணாநிதி ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார். சிறுதாவூர் பங்களா யாருடையது? உங்களுக்கான வாடகையை எப்படி செலுத்துகிறீர்கள்? செக்காகவா, அல்லது பணமாகவா? யாருடைய பெயருக்கு இதனை கொடுக்கிறீர்கள் என்று பல கேள்விகளை அவருக்கே உரித்தான பாணியில் கேட்டிருக்கிறார்*//

இந்த கேள்விகளை கேட்பதை விட்டுவிட்டு... இதற்கான விடையை உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய இன்றைய முதல்வர் தன் கட்டுப்பாட்டுக்குள் வரும் Revenue Dept.,மிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாமே! ஏன் அதை செய்யாமல் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கிறார்!!!