July 22, 2006

திராவிட (இனத்)தின் மூலம்?

Guest Column: சஹஸ்
மனித சமூகத்தை வகைப்படுத்த ‘இனம்’ என்ற சொல் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மொழி, கலாச்சாரம் மற்றும் வாழ்விடத்தைக் கொண்ட மக்களை தேசிய இனம் என அடையாளப்படுத்துகிறோம். நிறம் மற்றும் முக அமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு இனங்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். சாதி என்பதற்குப் பதிலாக இனம் என்று கூறுவதும் உண்டு. மானுடம் முழுவதும் ஓர் இனம் என்று நவீன அறிவியல் இன்று மெய்ப்பித்துள்ளது. அனைத்து மக்களும் ஆப்பிரிக்காவிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று குடியேறியவர்கள் என்பதை மரபணுச் சோதனைகள் உறுதி செய்கின்றன. ஆயினும், இன்று வரை நிற அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், மனித இனத்தை வேறுபடுத்தி அதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பேதம் கற்பிக்கும் போக்கு தொடர்கிறது. அத்தகைய வாதங்களுக்குத் துணையாக அறிவியலை ஆதாரமாகக் காட்டுகிற முயற்சிகளும் உள்ளன.

முதலில் மனித இனத்தை உயிரியல் ரீதியாக வகைப்படுத்துவது சரிதானா என்று பார்க்க வேண்டும். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மனித இனத்தை காகசாய்ட், மாங்கலாய்ட், நீக்ராய்ட் மற்றும் ஆஸ்ட்ரலாய்ட் என்று நான்கு வகையாகப் பிரித்துப் பார்த்தது மானிடவியல். ஆனால், இத்தகைய பிரிவினை தோலின் நிறம், முக அமைப்பு, தலைமுடியின் நிறம், கண்களின் நிறம் ஆகிய புறத் தோற்றங்களை வைத்துச் செய்யப்பட்டது. இத்தகைய வகைப்படுத்தல் நிறவெறி மற்றும் இனவெறி வேறுபாடுகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரே அளவு உயரமுள்ள வெவ்வேறு (இன) வகையைச் சேர்ந்த பிணங்களை அவற்றின் தோல், முடி, ஆகியவற்றை நீக்கிவிட்டு அவற்றை இனவாரியாக வகைப்படுத்தச் சொன்னால் எது எந்தவகையைச் சேர்ந்தது என வகைப்படுத்துவது மிகச் சிரமமான காரியம் என்கிறார் சோம்நாத் சுஷ்டி என்னும் எழுத்தாளர்.

மனித வரலாற்றில் இன அடிப்படையிலான ஒடுக்குமுறை கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான ஒன்றே. அதற்கு முன்பு மனித இனத்தில் ஒடுக்கு முறையும், அதன் விளைவாக அடிமைச் சமூகமும் ஏற்பட்டிருந்தாலும், அத்தகைய ஒடுக்கு முறைகளுக்கு இனவேற்றுமையோ, நிற வேற்றுமையோ காரணமாக அமையவில்லை. பழங்காலத்தில் அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து மட்டுமே பிடித்து வரப்படவில்லை. உதாரணமாக, 13ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், ஸ்பெயின் நாட்டிற்கு கிரீஸ், ரஷ்யா, சார்டானியா, துருக்கி, ஆர்மீனியா மற்றும் கானரித் தீவுகளிலிருந்து அடிமைகள் பிடித்து வரப்பட்டனர். ஐரோப்பியர் களிடையே ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை அடிமைப் படுத்தும் பழக்கம் இருந்தது. அமெரிக்காவில் கூட அடிமைகளைப் பயன்படுத்தும் அதன் துவக்க காலத்தில் கரும்புத் தோட்டங்களில் வெள்ளை அடிமைகள் இருந்தனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதன் பூர்வ குடிகளை அடிமைப்படுத்தும் முயற்சி வெற்றியடைய வில்லை. பூர்வகுடி இந்தியர்கள் அடிமைகளாக இருப்பதைவிட, மரணத்தை தழுவலே விரும்பினர். கரிபியன் தீவுகளின் பூர்வகுடி மக்கள் முழுவதும் இவ்வகையில் அழிந்து போயினர். கியூபாவின் பூர்வ குடிமக்களின் மக்கட் தொகை 17 லட்சத்திலிருந்து, பத்தாயிர மாக 10 வருடங்களுக்குள் குறைந்தது. இத்தகைய சூழலில் தான், அன்றைய தினம் பிரதான தொழிலாக விளங்கிய சர்க்கரை உற்பத்திக்கு, கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய ஏராளமான அடிமைகள் தேவைப்பட்டனர். ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து மக்களை வேட்டையாடி சந்தைக்கு கொண்டு வந்து அடிமை வியாபாரம் துவங்கியது. கி.பி. 1600 முதல் 1870 வரையில் லட்சக் கணக்கான கறுப்பர்கள் அடிமைகளாகக் கடத்தி வரப்பட்டனர். இவ்வாறு கடத்தி வரப்பட்டவர்களில் மூன்று பேருக்கு ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருந்தது என்ற ஒரு கணக்கின் அடிப்படையில், சுமார் மூன்றரைக்கோடி ஆப்பிரிக்கர்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கைதிகளைப் போல் பிணைத்து, ஆடு, மாடு போல் கடத்திச் செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே மடிந்து போயினர்.

ஆங்கில மொழியில் ரே° (சுயஉந) என்ற வார்த்தை இனம் என்ற தற்போதைய பொருளில் சமீபகாலத்தில் தான் வழங்கப் படுகிறது. அரி°டாட்டில் காலத்தில் பிறப்பின் அடிப்படையில் அடிமைகள் யார், சுதந்திரக் குடிமக்கள் யார் என்பது தீர்மானிக்கப் பட்டாலும், அது இனவாரியாக வகைப்படுத்தப் படவில்லை. மனிதர்களுக்கிடையிலான வேறுபாடு கலாச்சார ரீதியாக அமைந்த ஒன்றாக இருந்ததேயன்றி, உயிரியல் பண்பாக இருக்கவில்லை. உண்மையில், உயிரியல் அடிப்படையில் மனிதர்களை இனரீதியாக வேறுபடுத்திப் பார்க்கும் போக்கு முதலாளித்துவம் தோன்றிய பிறகு உருவானதாகும். இந்திய சமூகத்தில் ஒருவர் பிறந்த சாதியின் அடிப்படையில் சமூக ஏற்றத்தாழ்வுகள் அமைந்திருந்தபோதிலும், நிற உருவ வேற்றுமைகள் ஒரு பிரச்சனையாக எழவில்லை. அப்படி இருந்திருந்தால் கிருஷ்ணணும், வியாசரும் கறுப்பு நிறத்தோடு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருக்க முடியாது.

அமெரிக்க கண்டத்தை முழுவதுமாக ஐரோப்பியர்கள் தங்களது வசப்படுத்திய பிறகு கரும்புத் தோட்டங்களில் உழைக்க அடிமைகள் தேவைப்பட்டனர். பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பிய சமூகத்தில் ஜனநாயகம் மற்றும் மனித இனத்திற்குள் சமத்துவம் ஆகியவற்றுக்கான விதைகளை ஊன்றியிருந்தது. இதனால், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை காலனிகளாக மாற்றி அந்த மக்களை ஒடுக்கி வருவதை நியாயப்படுத்த வேண்டிய தேவை முதலாளித் துவத்திற்கு இருந்தது. 19ம் நூற்றாண்டில் தோன்றிய குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவனே மனிதன் என்ற டார்வினின் கோட்பாடு மனித இனத்தின் தோற்றம் பற்றிய பல்வேறு யூகங்களுக்கும் வழி வகுத்தது. பரிணாமத்தில் முழுமையடைந்த மனித இனம் வெள்ளை இனம் என்றும், கறுப்பர்கள் இன்னும் முழுமையான மனிதர்களாக பரிணாமம் அடையவில்லை என்றும் சில ஐரோப்பிய விஞ்ஞானிகள் அன்றைய தினம் கூறினர். மேலும், டார்வினது இயற்கைத் தேர்வுக்கு “தகுதியானது நிலைத்து வாழும் (Survival of the Fittest) என்ற சொற்றொடர் புதிய விளக்கம் அளித்தது. இதைச் சொன்னவர் டார்வினல்ல ஹெர்பர்ட் பென்சர் என்ற விஞ்ஞானியாவார். இதன் மூலம் இயற்கைத் தேர்வு என்பது தகுதியான உயிரினங்கள் தாங்கள் நிலைத்து இருப்பதற்கான போராட்டமாகும் எனக் கூறப்பட்டது. இதில் தகுதியற்றவை அழியும். இந்த வகையில் தனிநபர்கள், வர்க்கங்கள் மற்றும் நாடுகள் இவற்றுக்கிடையிலான போராட்டங்களில் தகுதியானது வாழும் என்ற கோட்பாட்டின்படி, ஒடுக்கு முறையும், அநீதியும் நியாயப் படுத்தப்பட்டன. ஐரோப்பியர்களின் காலனியாதிக்கச் சுரண்டலுக்கு டார்வினின் கோட்பாட்டை நியோ டார்வினிசம் என்ற பெயரில் திரித்துப் பயன்படுத்திக்கொண்டனர்.

இனம் பற்றிய கோட்பாடு முதலாளித்துவம், பாராளுமன்ற ஜனநாயகம், தொழில் மயமாதல் ஆகியவற்றோடு சேர்த்து உலகின் பிற பகுதிகளுக்கு ஐரோப்பியரால் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பியரல்லாத மக்கள் வாழும் பகுதியிலும், அதற்கு ஆதரவு கிடைத்து. நவீன தேசிய அரசுகளின் தோற்றத்தின் போது, ‘நாம் யார்?’ என்ற கேள்விக்கு இக்கோட்பாடு மூலம் விடைகிடைத்தது. ஆனால், அந்த விடை உண்மையல்ல. ஒருகாலத்தில் இழந்த தங்களுடைய பொற்கால சமூகத்தை மீண்டும் கட்டியமைக்க இனப் பெருமையை மீட்டமைக்க வேண்டிய தேவை நவீன தேசியத்திற்கு இருந்தது.

நமது இந்திய நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வர்ண சாதியமைப்பு பல்வேறு வகையில் இனக் கொள்கையோடு இணக்கம் பெற்றிருந்தது. இனக்கோட்பாடும், சாதியக் கோட்பாடும் அடிப்படையில் வேறு வேறு என்றாலும் அவற்றிடையிலான ஒற்றுமைகள் இந்திய நாட்டின் பண்பாட்டுச் சூழலில் புதிய தாக்கத்தை உருவாக்கியது. சாதி என்பது ஓர் உயர்ந்த சாதி அடிப்படையில், பிற சாதிகளை தனக்குக் கீழ் நிலையில் வைத்துப் பார்ப்பதாகும். ஒரு சாதிக்கும், மற்றொரு சாதிக்கும் இடையிலான இடைவெளிக்கு ஏற்ப கீழ் நிலையில் இருக்கும் சாதியின் பாதகமான அம்சங்கள் அதிகரிக்கும். சாதி பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக் கப்படுவதால், அது ஓர் உயிரியல் பண்புமாகும். சாதிக்கலப்பு கண்டனத்திற்குரியதானது. ஒட்டு மொத்த சமூகமும், சாதியமைப் பிற்கு ஏற்ப, உயர்ந்த சாதியினர் செல்வமும், அதிகாரமும் படைத் தவராகவும், தாழ்ந்த சாதியினர் வறுமையும், சமூகத்தில் உரிமைகள் ஏதுமற்றும் இருக்குமாறு இயங்குகிறது. மேற்குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தும் இன அடிப்படைக் கோட்பாட்டிற்கும் பொருந்தும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலெழுந்த இன அடிப்படைக் கொள்கை பல நாடுகளிலும் ஆழ்ந்த தாக்கத்தை விளைவித்தது. உதாரணமாக ஆரியஇனக் கொள்கையை எடுத்துக் கொள்வோம். ஆரியன் என்ற சொல் முதலில் ஜெர்மன் மொழியில் உருவாகியது. பெரிசிய மக்களைக் குறிக்க அச்சொல் பயன்படுத்தப் பட்டது. பின்னர் பாரி° நகரில் 1854ம் ஆண்டு காம்டே டி கோபி நியூ என்பவர் ‘மனித இனங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகள்’ என்ற 4 தொகுதிகள் அடங்கிய நூலை எழுதினார். பிரெஞ்சுப் புரட்சிக்கு எதிரான கருத்துக்களையும், அரச குடும்பத்திற்கு ஆதரவான கருத்துக்களையும் கொண்டிருந்த இவர் ஆரிய இனத்தின் தூய்மை குறித்தும், மேன்மை குறித்தும் இதில் குறிப்பிட்டுள்ளார். இனத் தூய்மையை பாதுகாத்து வந்த வரையிலும் ஐரோப்பியர்கள் (ஆரியர்கள்) உயர்ந்த பண்பாட்டு நாகரீகத்தைப் பெற்றிருந்தனர் எனவும், இனக் கலப்பு அவர்களது நாகரீகத்தை அழிவுக்கு கொண்டு சென்று விட்டது என்றும் கூறினார். மேலும், மனித குலம் மூன்று இனங்களை உடையது அவை கறுப்பு, மஞ்சள், வெள்ளை இனங்கள் எனவும், இதில் கறுப்பு மக்கள் குறைந்த அறிவும், முரட்டு சுபாவமும் உடையவர்கள் எனவும், மஞ்சள் நிறத்தினர் வியாபா ரத்தில் கெட்டிக்காரர்களாக இருந்தபோதிலும் நுண்ணறிவு இல்லாதவர்கள் எனவும், இதில் வெள்ளை இனமே நற்குணங்கள் பொருந்தியது எனவும் கூறினார். சுத்தமான வெள்ளை இனமே ஆரியர்கள் என்ற இவரது கருத்தை ஹிட்லர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தி லட்சக்கணக்கான யூதர்களை இனப்படுகொலை செய்தான். ஆரியர்கள் உலகெங்கிலும் பரவி தரக்குறைவான மனித இனங்களை அழிக்க வேண்டும்; இதற்கு யூதர்கள் எதிரிகள்; எனவே முதலில் அவர்களை ஒழிக்க வேண்டும் என்று பேசினான். அதற்கு ஆதாரமாக, இவரது கருத்தை ஹிட்லர் முன்வைத்தான். தனது ஜெர்மானிய ஏகாதிபத்திய அரசியலுக்கு இனவாதங்களை ஹிட்லர் பயன்படுத்தினான். ஐரோப்பாவில் உருவான இத்தகைய இனக் கோட்பாடுகள் இந்திய மண்ணிலும் தாக்கத்தைச் செலுத்தியது.

இந்திய வரலாற்றில் ஆரியர்கள், திராவிடர்கள் என இனக்கோட்பாட்டை இந்த அடிப்படையிலேயே உருவாக் கினார்கள். மாக்° முல்லர் என்ற ஜெர்மானிய அறிஞர் முதன் முதலாக வேதங்களை ஆய்வு செய்து அதை ஆரிய இனத்தோடு தொடர்பு படுத்தினார். வில்லியம் ஜோன்° என்பவர் கிரேக்க, லத்தீன் மொழிகளுக்கும், சம°கிருதத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து இவையனைத்தும் ஒரு பொதுவான மொழியிலிருந்து உருவானவை என்கிற முடிவுக்கு வருகிறார். நடப்பில் உள்ள ஒரு சில மொழிகளை வைத்து இந்தோ ஐரோப்பிய மொழி ஒன்று இருந்தது என்ற கற்பிதம் செய்து பின்னால் இந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசியவர்கள் அனைவரும் ஆரியர் என்ற கருத்து உருவாக்கப்பட்டதாக பிரபல வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். இதைப்போலவே, நடப்பில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒரு தொல் திராவிட மொழியிலிருந்து உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. ஆரியர்கள் இங்கு வருவதற்கு முன்பே திராவிடர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் 1920 களில் சிந்து சமவெளியில் அங்கு வேதகாலத்திற்கு முற்பட்ட ஒரு நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. பண்பாடும் மற்றும் மொழி அடிப்படையில் அமைந்திருக்க வேண்டிய ஆய்வுகள் ஆரிய இனம் எனவும், திராவிட இனம் எனவும் இனரீதியாக இந்திய சமூகத்தைப் பிரித்துப் பார்ப்பதற்கு கொண்டு சென்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரிய இனத்தின் மேன்மையையும், தூய்மையையும் புனரமைக்கும் பணியைஆரிய சமாஜ் போன்ற அமைப்புகள் துவங்கின. சத்தியப்பிரகாஷ் என்ற ஆரிய சமாஜத்தின் நிறுவனர் சுவாமி தயானந்த சர°வதி தன்னுடைய நூலில் இனங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

“ஆரிய வர்க்கத்திற்கு வடகிழக்கிலும், வடக்கிலும், வட மேற்கிலும், மேற்கிலும் வாழ்கிறவர்கள் த°யூக்கள், அசுரர்கள் மற்றும் மிலேச்சர்கள் ஆவர். அதுபோல தெற்கிலும், தென்கிழக்கிலும், தென் மேற்கிலும் வாழ்கிறவர்கள் ராட்சதர்கள் என அழைக்கப்பட்டனர். ராட்சதர்கள் எப்படி இருப்பார்கள் என இன்றைக்கிருக்கும் அருவப்பான தோற்றமுடைய நீக்ரோக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆர்ய வர்க்கத்திற்கு மறுபுறம் வாழும் மக்கள் நாகர்கள் எனப்பட்டனர். அவர்கள் நாடு ஆர்யவர்த்ததில் வாழ்ந்தவர்களின் பாதங்களுககு கீழ்ப்பகுதியில் அமைந்ததால் பாதாளம் எனப்பட்டது... இஷ்வாகு காலம் துவங்கி கவுரவர் மற்றும் பாண்டவர் காலம் வரை ஆரியர்களே உலகம் முழுவதையும் ஆட்சி செய்தார்கள். வேதங்களை ஆர்யவர்த்தம் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பிரச்சாரம் செய்யவும், கற்றுக் கொள்ளவும் செய்தார்கள்”.

இதே போல், ஆரிய மேன்மையை வலியுறுத்தும் இத்தகைய கருத்துக்களுக்கு மாற்றாக திராவிட மேன்மையை வலியுறுத்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாத்மா ஜோதிபா பூலே சம°கிருதம் பேசும் பிராமணர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள்; எனவே அவர்கள் இந்த நாட்டிற்கு அந்நியமானவர்கள்; தாழ்ந்த சாதியைச் சேர்ந்த மக்களே இந்த நாட்டிற்குச் சொந்தக் காரர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வெளியி லிருந்து வந்தவர்களல்ல, சிந்து சமவெளி நாகரீகமே ஆரிய நாகரீகம்தான் என்கிற கருத்தை இந்துத்துவ சக்திகள் முன் வைக்கின்றன. மொத்தத்தில் இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், வரலாற்றை அறிவியல் பூர்வமாக அணுகவும், இத்தகைய இன அடிப்படையிலான கோட்பாடுகள் பயனளிக்காது என்பதே உண்மை.

இந்தியத் துணைக்கண்டத்தில் வெவ்வேறு காலக்கட்டங் களில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர். முதற் குடியேற்றம் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து புறப்பட்டு ஆ°திரேலியா வரை சென்ற ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் நாற்பது அல்லது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என்று மரபணு ஆய்வுகள் காட்டுகின்றன. பிறகு தெற்கு ஈரானிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் வடமேற்குப் பகுதி வழியாக சுமார் முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியா வரை ஒரு மக்கள் கூட்டம் வந்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து பல்வேறு குடியேற்றங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்துள்ளன. இதில் ஒரு சில பழங்குடி மக்கள் சமூகம் தவிர்த்து, மற்ற பகுதிகளில் ஒன்றாகக் கலந்து ஒரு தனி இனம் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு இந்திய சமூகம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு சாதிப் பிரிவுகளிடையே பண்பாட்டுத் தொகுதி வாரியாக மரபணுப் பாங்கு அமைகிறதா என்ற ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஸீஸந்தராய் சவுத்திரி, சங்கீதா ராய், பாரத் தாபி மஜூம்தார் அடங்கிய அறிஞர் குழு இத்தகைய ஆய்வினை மேற் கொண்டது. அதில் கிடைத்த முடிவு இந்தியர் அனைவரிடமும் மரபணு ரீதியாக ஒரு குறிப்பிட்ட பொதுவான அம்சம் அனைவரிடமும் விரவியிருந்தது. அடிப்படையில் அனைவரும் ஆசிய பூர்வீகர்களின் சந்ததியினரே என்பது உறுதி செய்யப்பட்டது.

சமீபத்தில் மறைந்த மானுடவியல் அறிஞர் கே.என்.சிங், எந்த ஒரு தேசமும், அரசும் அல்லது மக்கள் சமூகமும் தங்களை சுத்தமான இனம் என்றோ, முழுமையானவர்கள் என்றோ, மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்றோ கூறிக் கொள்ள முடியாது என்று ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். அவருடைய ‘இந்தியாவின் மக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூலில் சில சுவையான தகவல்களைத் தருகிறார்.

“ இந்து மற்றும் இ°லாமியக் கோட்பாடுகள் ஆகிய இரண்டையும் ஒரே சேரக் கடைபிடிக்கும் 35 சமூகங்கள் இங்கு உள்ளன; கிறி°தவ மற்றும் இந்துக் கோட்பாடுகளை ஒரு சேரக் கடைக்கிடிப்பவர்கள் 116 சமூகங்கள், 16 சமூகங்கள் இந்து, இ°லாமிய, சீக்கியக் கோட்பாடுகளை ஒன்று சேர்த்துக் கடைபிடிக்கின்றன; 94 சமூகங்கள் பழங்குடி மத வழிபாடு மற்றும் கிறி°துவ நம்பிக்கைகளை இணைத்துக் கொண்டுள்ளன; மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடைப்பிடிக்கும் பழக்கவ ழக்கங்கள், அவர்கள் தங்களுக்குள் கடைப்பிடிக்காத பழக்க வழக்கங்களை விட அதிகம். சைவ உணவுப் பழக்கத்திற்கு உயர்ந்த மதிப்பு அளிக்கப் பட்ட போதிலும் 20 சதவீத சமூகங்களே சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். முட்டைகளை சைவ உணவாக எண்ணி சாப்பிடுகிறவர்கள் உள்ளனர். வெங்காயத்தையும், பூண்டையும் விலக்கி வைக்கிற சைவ உணவுக்காரர்களும் உள்ளனர். தனியாகப் பார்க்கும் போது ஆண்கள் பெரும்பாலும் அசைவ உணவைச் சாப்பிடுகிறார்கள்”.

இந்திய மக்கள் இவ்வாறு பல்வேறு ஒத்த பண்புகளையும், வேற்றுமைகளையும் தங்களிடத்தே கொண்டுள்ளார்கள். இவர்களை இன ரீதியாக ஆரிய இனம் என்றோ, திராவிட இனம் என்றோ தனித்தனி இனங்களாகப் பார்க்கும் அரசியலுக்கு துணை போவது இனக் கொள்கையை தனது சுரண்டலுக்காக தோற்றுவித்த முதலாளித்துவத்திற்கு துணை போவதாகும்.

ஆதாரம்

1. Biology as Politics - Somnath Zutshi - Seagull Books
2. Early India - Romila Thapper -Penguin Books
3. Front Line June30, 2006
4. கருவாச்சி - த.வி.வெங்கடேஸ்வரன் - பாரதி புத்தகாலயம்

6 comments:

S.L said...

excellllllant

சந்திப்பு said...

Thankyou Lakshmanan

Vajra said...

..
ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வெளியி லிருந்து வந்தவர்களல்ல, சிந்து சமவெளி நாகரீகமே ஆரிய நாகரீகம்தான் என்கிற கருத்தை இந்துத்துவ சக்திகள் முன் வைக்கின்றன. மொத்தத்தில் இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், வரலாற்றை அறிவியல் பூர்வமாக அணுகவும், இத்தகைய இன அடிப்படையிலான கோட்பாடுகள் பயனளிக்காது என்பதே உண்மை.
..


இந்துத்வாவாதிகள் சொல்வது...ஒன்றே ஒன்று தான்...

சிந்து சம வெளி நாகரீகம் ஆரியமோ, திராவிடமோ அல்ல....அது இந்தியாவின் (உலகிலேயே) பழமையான நாகரீகம் என்று. அதில் ஆரியம் என்பதை இந்துத்வாவாதிகள் இன அடிப்படையில் பயன் படுத்துவதும் இல்லை. அவர்களுக்கு இந்தியா (Greater India) தான் மாத்ர பூமி, பித்ரு பூமி எல்லாமே...ஆரியர் என்ற இனமும் இல்லை, திராவிடர் என்ற இனமும் இல்லை. ஆரிய என்பதை உயரிய பண்பு கொண்டவன் என்ற ரீதியி தான் இன்றும் பயன் படுத்துகிறார்கள்...திராவிடம் என்பது Land of Hot sun என்று பொருள் படும் படி ஆதி சங்கரர் பயன் படுத்திய பதத்தில் பயன் படுத்துகிறார்கள்...

அவர்களை, தயவு செய்து இனவாதிகள் ஆக்காதீர்கள்...அவர்கள் மதவாதிகள் மட்டுமே.

ஹிட்லரின் ஆரிய உயரிய இன வாதத்திற்கு இந்துத்வாவாதிகள் பரம எதிரிகள். ஹிட்லரை முன்பு ஆதரித்திருந்த்தால் அதற்கு முக்கிய காரணம் ஹிட்லர் போன்ற ஒரு மிருகத்தைப் பயன் படுத்தி வெள்ளைப் பன்றிகளை விரட்டத்தான். இந்துத்வா வாதிகள் பிரப்பிடமான மஹராஷ்டிரத்தில் அதிக யூதர்கள் இருந்தனர், இருக்கின்றனர்...ஆனால் என்றுமே, யூதர்களை விரட்டியது இல்லை...இந்தியா...!!

..
இவர்களை இன ரீதியாக ஆரிய இனம் என்றோ, திராவிட இனம் என்றோ தனித்தனி இனங்களாகப் பார்க்கும் அரசியலுக்கு துணை போவது இனக் கொள்கையை தனது சுரண்டலுக்காக தோற்றுவித்த முதலாளித்துவத்திற்கு துணை போவதாகும்.
..

எந்த முதலாளித்துவத்தைச் சொல்கிறீர்கள்....? அமேரிக்காவா?

பேனா பழமைவாதிகளான இந்திய மார்க்ஸ்வாதிகள் தான் இன்று ஆரியம், திராவிடம், இனம் என்று பிரிவினை பாராட்டி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குறிய உண்மை நிலை.

மற்றபடி, ஆரியம் என்றோ, திராவிடம் என்றோ முழுமனதுடன் தெள்ளத்தெளிவாக இல்லை என்று சொன்னதற்கு முதலில் என் பாராட்டுக்கள்... மிக்க நன்றி.

"அடி வாங்க வந்தவன்" said...

ஆரியரா? மண்ணாங்கட்டி!
நாங்கள் இந்த பாப்பான்களை வந்தேறிகள் என்றும்,அவர்களை விரட்ட வேண்டும் அல்லது ஒடுக்கவேண்டும் என்றுதான் கூறுகின்றோம்.
முன்பு முஸ்லீம் இந்தியாவாக இருந்தது,நேற்று பிரிட்டிஷ் இந்தியா மாறியது, நாளை பாப்பான் இல்லாத இந்தியாவாக மாறும்:மாற்றுவோம்.
இதுதான் எங்கள் கனவு.
மேற்கத்தியர் ஆராய்ச்சியல்லாம் இருக்கட்டும்,இந்திய சமூகத்தில் ஒட்டாமலிருக்கும் இந்த பாப்பான்களை வேரறுப்பதே எங்கள் குறிக்கோள்.
பாப்பான்களை வேரறுத்தவுடன் இந்த முஸ்லீம் மற்றும் கிறித்தவர்கள் துண்டைக்காணோம்,துணியைக் காணோமென்று ஓடிவிடுவாரக்ள்.

சந்திப்பு said...

நன்பரே தங்களிடம் திராவிட சிந்தனை இருப்பதாக தெரியவில்லை. மாறாக இந்துத்துவ சிந்தனைகன்தான் மண்டியிருக்கிறது. ஆரிய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என்ற உணர்ச்சியின் உந்துதல் இசுலாமிய - கிறித்துவர்கள் உட்பட அவர்களையும் எதிர்ப்பது என்ற போக்கு சரியான சிந்தனையும் அல்ல நடைமுறையும் அல்ல. இந்துத்துவவாதிகள்தான் இந்தியாவை இந்து மயமாக்க முயற்சிக்கிறார்கள். இந்த இந்து மயமாதல் என்பது முழுக்க முழுக்க பார்ப்பனமயமாக்கல்தான். உங்களது சிந்தனை தலைகீழாக இருப்பதாக தெரிகிறது. எதையும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல் தயவு செய்து சிந்தனைப்பூர்வமாக அணுகிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி நண்பரே.

சந்திப்பு said...

சங்கர் இந்துத்துவாதிகள் மதவாதிகள் மட்டுமல்ல. மதவெறியர்கள் - பாசி°ட்டுகள் என்பதை குறிப்பிட்டிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும். அடுத்து இந்துத்துவாதிகள் இந்தியாவை பித்ரு பூமி என்று கூறுவது (அதாவது, தந்தை பூமி) உலகில் அனைவரும் தங்களது நாட்டை தாய்நாடு என்றுதான் கூறுவார்கள். ஆனால் சங்பரிவாரங்கள் தந்தை நாடு என்று அழைப்பதன் நோக்கமே அவர்களது சனாதன ஆணாதிக்க சிந்தனையின் விளைவுதான். இதனுள்ளும் மனு(அ)தர்மம் எட்டிப்பார்ப்பதுதான் தெரிகிறது. ஏன், இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட சுளுளு-இல் பெண்களை உறுப்பினர்களாக சேர்ப்பதில்லையே... வருகைக்கு நன்றிகள்..