July 14, 2006

7/11 - லேட் ரியாக்ஷன்

மும்பை - காஷ்மீர் தொடர் குண்டு வெடிப்பு, அதைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் லஷ்கர் இ தொய்பா - சிமி போன்ற அமைப்புகளின் பயங்கரவாத வெறிச்செயல் சாதாரண சிவிலியன்களை குறிவைத்துள்ள இந்த கொலைவெறிச் சம்பவம் இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கோடு செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
காஷ்மீரில் தங்களது நோக்கம் நிறைவேறாத பயங்கரவாதிகள், தங்களது நெட்ஒர்க்கை விரிவுபடுத்தியுள்ளதையே இது காட்டுகிறது. இந்திய - பாகிசுதான் உறவு பலப்பட்டு வரும் இந்நேரத்தில், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பயங்கரவாதிகள் காஷ்மீர் பிரச்சினையை இத்தகைய கேவலமான பயங்கரவாத தாக்குதல் மூலம் தீவிரமடைய செய்ய முயல்கின்றனர்.
பயங்கரவாதிகளின் கீழ்த்தரமான நோக்கத்திற்கு இந்திய மக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகியிருந்தாலும், இந்திய மக்கள் தங்களது ஒற்றுமையை இந்த நேரத்தில் வெளிப்படுத்தியுள்ளது பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலை விட, பன்மடங்கு பலமானது. அவர்கள் எதிர்பார்த்தது இந்திய நாட்டில் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுததான். பிரதமர் மன்மோகன் சிங் கூறியது போல நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதனை நம் இந்திய மக்கள் வெளிப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.
பயங்கரவாதிகளின் இந்த கொலைவெறித் தாக்குதலை இந்திய மக்கள் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பாகிசுதானில் கூட இதற்கு எதிரான கண்டனக் குரலை எழுப்பியுள்ளனர். பயங்கரவாதிகள் எந்த முகத்தை கொண்டிருந்தாலும், அவர்கள் ஏந்த நோக்கத்தை வைத்திருந்தாலும் பயங்கரவாதச் செயலை உலகம் ஏற்காது.
கடந்த சில வருடங்களாக உலகலாவில் செயல்படும் அல்கய்தா உட்பட லஷ்கர் இ தொய்பா உட்பட பல ரகமான பயங்கரவாதிகள் இந்திய நாட்டை ஒரு குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர். அது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்றத்தை தாக்குதல் உட்பட (அப்போது பொடா சட்டம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.) தற்போதைய தாக்குதல் வரை இது உறுதிப்படுத்துகிறது.
பயங்கரவாதிகளின் இந்த நோக்கத்தை அவ்வப்போது பத்திரிகைகளும், உளவுதுறையும் வெளிப்படுத்தி வந்தாலும், இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதை அவர்களால் மோப்பம் பிடிக்க முடியாதது உளவுத்துறையில் இன்னும் கூடுதல் செயல்திறன் தேவைப்படுவதைத்தான் இது உணர்த்துகிறது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதிகள் நம்முடைய கார்கிலுக்குள் ஊடுருவிதைக்கூட ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் கூறிய பின்புதான் நமக்குத் தெரிந்தது. எனவே உளவுத்துறை மிக பலவீனமாக இருப்பதைத்தான் இது காட்டுகிறது.
அதேபோல் ஒரு இடத்தில் ஒரு குண்டு வெடிப்போ அல்லது வேறு ஏதாவது நிகழ்வோ நடந்து விட்டால், ஆபத்தில் உள்ள மக்களை காப்பாற்றுவதில் போலீசு தரப்பில் பெரும் மெத்தனம்தான் நிலவுகிறது. மும்பையில்கூட நம்முடைய மக்கள்தான் இந்தப் பணிகளில் 98 சதவீதம் ஈடுபட்டார்கள். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கியமான நகரங்களிலும் இதுபோன்ற அவசர கால பணிகளுக்கு துரிதமாக செயல்படும் ஒரு சேவை அமைப்பை அரசு ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக இராணுவத்தில் ஒரு பகுதியை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்தலாம்.
அடுத்து பயங்கரவாதம் குறித்தும், அவர்களது நடவடிக்கை குறித்தும் நம்முடைய சிவில் சமூகத்திடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும். நம்முடைய மீடியாக்களுக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு.
பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய மக்கள் உலக மக்களோடு கரம் சேர்த்திட வேண்டும். அமெரிக்காவோடு அல்ல.

2 comments:

Anonymous said...

உலகம் முழுக்க, அதுவும் பாகிஸ்தானில் கூட, கண்டனம் தெரிவித்து விட்டார்கள். ஆஹா, எல்லாம் சரியாப் போச்சு. அவங்க அவங்க, அவங்க வேலய பார்க்க போங்கப்பா.

அசுரன் said...

அய்யா சந்திப்பு,

தங்களது புத்தியை இப்படியா காட்ட வேண்டும்.

ஏனையா??

இதுதான் CPM தங்களுக்கு சொல்லிக் கொடுத்த வர்க்க பகுப்பாய்வு முறையோ.

அப்படி நக்சலிசம் பற்றி தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் விமர்சனம் இருந்தால் அந்த வலைத்தளத்தில் சென்று பேசலாமே(tamilarangam.blogspot.com).

ஏன் இப்படி ஒரு இந்துத்துவ, அதுவும் நேர்மையின்றி, ரோசவசந்தின் விமர்சனத்தை உண்மையாக்கும் வகையில் செயல்படும் ஒருவரின் வலைத்தளத்தில் போய்......

தயவு செய்து தங்களை கம்யூனிஸ்டு என்று கூறி கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தாதீர்கள்.

CPM, CPI -யைப் பற்றி எனக்கு எழுதத் தெரியாமல் இல்லை.

ஆனால் இங்கு(வலைப்பூவில்) பிரதானமாக முரன்பாடு நிலபிரபுத்துவத்துக்கும் முற்போக்கு சக்திகளுக்குமானதாக இருப்பதால் நமக்குள் இருக்கும் தத்துவ வேறுபாடுகள் அவர்களுக்கு ஆதாயமாக போகக் கூடாது என்று அவற்றை எழுதுவதை தள்ளிப் போட்டு இருந்தேன்(இனிமேலும் கூட எழுதும் எண்ணம் இல்லை). ஆனால் நீங்கள் இப்படி செய்து விட்டேர்களே?...

இது பச்சை துரோகம். தங்களை ஒரு CPM காரராக இதுவரை பார்க்கவில்லை.
ஒரு சக கம்யூனிஸ்டாகத்தான் பார்த்தேன். தங்களது முதிர்ச்சியின்மையை பறைசாற்றிவீட்டீர்கள்.

இதை தங்களுக்கான தனிமடலாகத்தான் அனுப்புகிறேன். பிரசூரிக்க விரும்பினால் தவறில்லை.

நன்றி,
அசுரன்.