November 11, 2008

கேரளா இந்து பயங்கரவாதத்தின் கோர முகம்!

இன்றைய தினம் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருப்பது இந்து பயங்கரவாதம். மலேகான் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டன் மூலம் இந்து பயங்கரவாதத்தின் கொடூர முகம் அம்பலப்பட்டது.

தற்போது கேரளாவில், கண்ணூர் மாவட்டம், கூத்துப்பறம்பா அருகில் சிறுவன்சேரியில் இரண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது, அக்குண்டு வெடித்ததால் கே. திலீப், கே. பிரதீப் என்ற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவரும் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவரது உடல் தூக்கியெறியப்பட்டு கிணற்றில் வீசியெறியப்பட்டுள்ளது. தற்போது இந்த இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பில் 8 வயது சிறுமி ஒருவருக்கும் கால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவல் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

கடந்த பல ஆண்டு காலமாக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இதுபோன்ற வெடிகுண்டு தயாரிப்பு போன்ற செயலில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். வன்முறையத் தாக்குதலைத் தொடர்ந்து கேரள முதல்வர் தலைமையில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று. பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க இரு தரப்பினரும் ஒத்துழைப்பது என்று முடிவெடுத்தனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தயாரித்துள்ள வெடிகுண்டு எதற்காக? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, கேரளாவில் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பிற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இந்து பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக எழுவதை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு பன்முக நடவடிக்கையின் வாயிலாக இதனை முறியடிக்க வேண்டியுள்ளது இன்றைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

மேலும் சமீபத்தில் கா"சிபுரத்தில்கூட பாரதிதாசன் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை அங்குள்ள முற்போக்கு சக்திகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த பயிற்சி முகாமில் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையினர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் இந்தியாவின் பல முனைகளில் இருந்தும் வந்துள்ளார்களா? என்ற சந்தேகமும் எழுகிறது. இத்தகைய பயிற்சி முகாம்களில்தான் இவர்கள் வெடிகுண்டு தயாரிப்பது உட்பட பல்வேறு சதித் தீட்டங்களை தீட்டுகின்றனர். இப்படித்தான் தனியாக இராணுவ பள்ளி ஒன்று நடத்தி அதில் பயிற்சி பெற்றவர்களை நமது புகழ்பெற்ற தியாம் மிக்க இராணுவத்தில் நுழைத்து தங்களது மதவாத - பயங்கரவாத காரியங்களுக்கு அந்த இராணு வீரர்களை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசு இயந்திரம் எப்படி பாசிசவாதிகளைக் கொண்ட - பயங்கரவாதிகளைக் கொண்ட இயந்திரமாக மாற்றப்படும் என்பதற்கு இதுவே பெரிய உதாணரம். எனவே. மத்திய அரசு இதில் எந்தவிதமான சமசரசமும் செய்துக் கொள்ளாமல், தற்போது பணியில் இருக்கும் இராணு வீரர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து - ஆர்.எஸ்.எஸ்.-வுடன் தொடர்பு கொண்டுள்ள யாராவது இருந்தால் அவர்களை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி பணி நீக்கம் செய்திட முன்வரவேண்டும். இல்லையென்றால் நமது தாய் நாட்டுக்கு வரும் ஆபத்து கேசர் போல் உள்ளிருந்தே தோண்டத் துவங்கும். மத்திய அரசு விழிக்குமா?

5 comments:

Anonymous said...

அண்ணா..
அமெரிக்க ஏகாதிபத்யம், இந்து வெறி, அதெல்லாம் இருக்கட்டும்னா..
இந்த ஈழப் பிரச்சன அல்லோலகல்லோல படறதே..
அதப் பத்தி ஒண்ணையும் காணேமே.. ஏன்னா..?

சந்திப்பு said...


அண்ணா..
அமெரிக்க ஏகாதிபத்யம், இந்து வெறி, அதெல்லாம் இருக்கட்டும்னா..
இந்த ஈழப் பிரச்சன அல்லோலகல்லோல படறதே..
அதப் பத்தி ஒண்ணையும் காணேமே.. ஏன்னா..?


தம்பி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதலாளித்துவ நெருக்கடியும், அதனால் உலகமே திக்கித் திணறிக் கொண்டிருக்கையில் - இதனால் உழைப்பாளிகளும், தொழிலாளர்களும் தங்களது வாங்கும் சக்தியை இழந்து தெருவில் நின்றுக் கொண்டிருக்கையில் அதுவெல்லாம் கிடக்கட்டும் முதலில் இதைப் பார்! என்று சொல்லும் தங்களது பார்வையில் ஏதோ கோளாறு உள்ளதாகத்தான் தெரிகிறது.

மேலும், இந்து மதவெறி என்பது இன்றைய தினம் இந்து பயங்கரவாதமாகவும், உள்நாட்டு பாதுகாப்பிற்கே பெரும் அபாயமாக உருவெடுத்துள்ள சூழ்நிலையில் இதைவிட்டு விட்டு எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கும் பாம்புக்காக இங்கே தடியெடுத்து தாண்டவம் ஆடச் சொல்வது எதற்கப்பா? பல பேர் இப்படித்தான் தமிழன்... தமிழன்... என்று சொல்லி நீண்ட நாட்களாக குளிர் காய்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, என்னையும், என் வாழ்வையும் பாதிக்கும் விசயத்திற்கு முன்னுரிமைக் கொடுத்துக் கொண்டுதான் பக்கத்து இலைக்கு பாயாசம் அளிக்க முடியும் தம்பி. எனவே, உங்களது எதிர்பார்ப்பில் நியாயம் இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

சரி, இலங்கை பிரச்சனையை இரண்டு வரிகளில் முடித்துக் கொள்ளலாம் என்று கருதுகிறேன். தற்போதைய இலங்கைப் பிரச்சனை என்பது 1983 இல் நடந்தது போன்ற பிரச்சனையல்ல. இரண்டாவது. கிழக்குப் பகுதியில் தமிழர்கள் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். வளர்ச்சியடைந்துக் கொண்டுதான் உள்ளனர். மேலும் இசுலாமிய தமிழர்களும், மலையகத் தமிழர்களுக்கும் தற்போது இந்தப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லை. எனவே தற்போது நடக்கும் போர் இலங்கை அரசிற்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையிலானது மட்டுமே! இந்த இரண்டு பேருமே போர் விரும்பிகள்தான். மேலும் புலிகளைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பதை மருந்திற்கு கூட விரும்பாதவர்கள். தற்போது தமிழ் மக்களை பிணையாக வைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே மக்களை முதலில் இந்த புலி பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்க வேண்டியுள்ளது. அவர்கள் முழுமையாக மற்ற தமிழர் அமைப்புகளையும் அங்கீகரித்துக் கொண்டு ஜனநாயகப் பாதையில் திரும்புவதும், இலங்கை அரசு அதற்கு அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அதிகமான சுயாட்சி அதிகாரம் கொண்ட அரசமைப்பை உருவாக்குவதற்கு எந்தவிதமான முட்டுக்கட்டையும் போடாமல் பேசித் தீர்க்க வேண்டியுள்ளது. இதுதான் தம்பி இலங்கையின் உண்மையான முகம். மேலும் பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பும் - நிவாரண உதவிகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு இப்பிரச்சனையை ராஜ தந்திர ரீதியில் அணுக வேண்டியுள்ளது தம்பி. எனவே, இங்கே உள்ள பிரச்சனைகளை திசைத் திருப்புவதற்காக சிலர் வெற்று ஆரவாரக் கூச்சல்களை எழுப்புவார்கள் அது உங்களையும் - என்னையும் ஏமாற்றுவதற்காக என்று புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது. நன்றி.

Anonymous said...

சந்திப்பு, JVP என்ற சிங்கள பேரினவாதக் கட்சி உங்களைப் பொருத்தவரை இடதுசாரி கட்சியா
இல்லையா?.
இந்தியாவில் இந்த்துவா மோசம்,
இலங்கையில் பெளத்த-சிங்கள
பேரினவாதம் நட்புசக்தி.இதுதானே
உங்கள் அரசியல்.இலங்கை சிங்கள
நாடு என்று அந்தநாட்டுத் தளபதி
சொல்கிறார்.புலிகளை ஒழிப்போம்
என்கிறார் மகிந்த.அவர்களிடமிருந்து
தமிழர்களுக்கு என்ன கிடைக்கும்.
போர் நிறுத்தம் செல்லாது என்று
போரில் இறங்கியது மகிந்தவின்
ஆட்சி.

“இரண்டாவது. கிழக்குப் பகுதியில் தமிழர்கள் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். வளர்ச்சியடைந்துக் கொண்டுதான் உள்ளனர்.”

இது போதும் உங்கள் திமிரைக் காட்ட.
கிழக்கில் நடப்பது பொம்மை ஆட்சி.
மகிந்தவின் அடிவருடிகளின் (கருணா/பிள்ளையான்) ஆட்சி,
அதிகாரமில்லாத ஆட்சி. அனைத்திற்கும் பிச்சை கேட்கும்
‘சுயாட்சி' அது. தமிழர்களுக்கு
துரோகம் செய்யும் மகிந்தவை
விட மோசமான துரோகிகள்
சிபிஎம் கட்சியினர்.இவ்ர்களை
தமிழ் மண்ணிலிருந்து துடைத்தெறிய
வேண்டும்.

Anonymous said...

தமிழ்நாட்டு 'செக்யுலர்' பாசிஸ்ட்கள்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு பள்ளியில் இரு நாள் கூட்டம் நடத்துவதை இ.கம்யுனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மற்றும் தமுமுகவினர் ஆட்சேபித்து அது வன்முறைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனியார் இடத்தில் கூட்டம்
நடத்துவதை தடுக்க இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டங்கள் பொது இடத்தில் நடப்பதை காவல் துறை அனுமதிக்கும் போது இவர்கள் தடுக்க உரிமை கிடையாது. ஒரு தனியார் பள்ளியில் நடப்பதில் தலையிட இவர்களுக்கு
உரிமை இல்லை. ஆர்.எஸ்.எஸ் வன்முறையைத் தூண்டினால் காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றத்திற்கு சென்று வழக்குத் தொடர வேண்டும். அதை விடுத்து இவர்கள் கூட்டம் நடத்தக்கூடாது என்று கூற உரிமை இல்லை. தமுமுகவிற்கு இருக்கும் உரிமைகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், பிற இந்த்துவ அமைப்புகளுக்கும் உண்டு. சேலத்தில் பாஜக பொதுக்குழுக் கூட்டம் நடந்த போதும் அதை தடுப்போம் என்று பெரியார் தி.கவும், சில அமைப்புகளும் அதை நடத்த விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவிக்க முயன்றுள்ளனர். பாஜகவை குறை கூறும் பெரியார் தி.க தஸ்லீமாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, ஆதரவு தெரித்து எதுவும் செய்யவில்லை. மாறாக பெரியார் முழக்கம் இந்து-இந்திய விரோத இதழாக இருக்கிறது. இந்த தேச விரோதிகளுக்கு இருக்கும் உரிமை பிறருக்கு கிடையாதா. முன்பு சமண மதத்துறவிகள் ஆடையின்றி செல்லும் போது பிரச்சினை ஏற்படுத்தியது பெரியார் தி.க. பின்னர் ஜைனர்கள் குறித்து விடுதலை ராஜேந்திரன் விமர்சனம் செய்தார். ஜைனர்கள் இந்த்துவாவிற்கு
ஆதரவாக இருப்பதாக பெரியார் தி.க நம்பலாம், அதற்காக அவர்களுக்கு இடையூறு செய்ய பெரியார் தி.க விற்கு எந்த உரிமையும் இல்லை.

தஸ்லீமாவை இந்தியாவிற்குள் விடாதே, ருஷ்டி இந்தியாவிற்குள் வரக்கூடாது என்று குரல் கொடுக்கும் பாசிச அமைப்பு தமுமுக. ஒளரங்கசீப் குறித்த ஒவியக்ககண்காட்சியை நடக்க விடாமல் தடுத்ததிலும் தமுமுகவிற்கு பங்குண்டு. இதன் தலைவர் இந்தியாவே காஷ்மீரில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று பேசும் ‘தேச பக்தர்'. சதாம் ஹூசைனின் படுகொலைகளை நியாயப்படுத்திய அமைப்பு தமுமுக. இன்றும் 9/11 தாக்குதலை நடத்தியது இஸ்ரேலின் மோசாத்தும், யூதர்களும் என்று பொய்களை
பரப்பும் அமைப்பு தமுமுக. இவர்கள் சுதந்திரமாக கூட்டம் போடுவார்கள், இந்தியாவை விமர்சிப்பார்கள், ஆனால் ஆர்.எஸ்.எஸ், பாஜக தமிழ்நாட்டில் அறைக்கூட்டம் கூட நடத்தக் கூடாதா?.

இந்திய தேசவிரோதமே உருவான தமிழ் தேசியர்கள், அவர்களுக்கு துணை போகும் அமைப்புகள், பாகிஸ்தானிய விசுவாசியான அ. மார்க்ஸ் உட்பட இந்திய-இந்து விரோதிகளை உள்ளடக்கிய ஒரு கும்பல் தமிழ் நாட்டில் உலவுகிறது. பெரியார் பிறந்த மண்,
அமைதிப் பூங்கா என்று சொல்லிக் கொண்டு மனித உரிமை விரோதமாக செயல்படுகிறது.

இந்த்துவ அமைப்புகளின் கொள்கைகளை நான் ஏற்கவில்லை. அவற்றிற்கும் அடிப்படை உரிமைகள் உண்டு. அதற்கு தடையாக இருக்கும் 'செக்யுலர்' பாசிஸ்ட்களை நான் எதிர்க்கிறேன். மோடி குறித்து எழுதியதுதான் இதற்கும்- மோடிக்கு நான் பூச்செண்டும்
கொடுக்க மாட்டேன், கருப்புக் கொடியும் காட்ட மாட்டேன். ஒரு மாநில முதல்வர், இந்திய குடிமகன் என்ற முறையில் தமிழ் நாட்டிற்கு வந்து செல்லும் அவர் உரிமையை ஆதரிப்பேன். அதே போல்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு இருக்கும் சட்டபூர்வமான உரிமைகளை
அங்கீகரித்து அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதை எதிர்க்க மாட்டேன்.

ஹிந்த்துவ அமைப்புகள் இந்த எதிர்ப்புகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.
அறைக்கூட்டங்களுக்கு பாதுகாப்புக் கோர வேண்டும். அதையெல்லாம் விட முக்கியமான வேலையாக இந்த தேச விரோத, இந்து விரோத கும்பல்களை, அவற்றின் ஆதரவாளர்களை
அம்பலப்படுத்த வேண்டும்.

பாசிசம் என்ற சொல்லை சகட்டு மேனிக்கு பயன்படுத்துதை நான் விரும்பவில்லை.ஆனால் இந்த கும்பல் இதை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் போது இந்த கும்பலை எதிர்க்க அதை பயன்படுத்துவது தேவையாகிறது.
http://ravisrinivas.blogspot.com/2008/11/blog-post_11.html

Anonymous said...

//இரண்டாவது. கிழக்குப் பகுதியில் தமிழர்கள் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். வளர்ச்சியடைந்துக் கொண்டுதான் உள்ளனர்...//
நேககு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...
என்னது தமிழா எல்லாரும் செளக்கியமா இருக்காளா..?
அட கஷ்டகாலமே.. பின்ன ஏன் இந்த அராத்துகள் சும்மா
காள் காள்னு கத்தறா.. நீங்க நன்ன கேக்கப் படாதோ..
என்னமோ வீடியோ போட்டுக் காமிச்சாளே.. அப்போ அவாள்ளாம் யாரு..
போதாகொறக்கு , இந்த சினிமாக்காரா வேற அவா எல்லாரும் சாகறான்னு சொல்ல
ஆரம்பிச்சுட்டா.. கேக்கணுமா.. இப்போ நா யாரு பேச்ச கேக்கறது..?
நேககு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... சொல்லிப்பிட்டேன்..