July 01, 2008

உலகமயத்தின் ஊளைச் சதையே பணவீக்கம்!

உலகமயமாக்கல் பந்தயத்தில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தொடையை தட்டி பங்கேற்ற நாடு இந்தியா. அதன் ஏகப் பிரதிநிதிகளாக பிரதமர் மன்மோகன்சிங், ப. சிதம்பரம், திட்ட கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் செயலாற்றி வருகின்றனர்.


ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் கூட பொருளாதார வளர்ச்சியில் தட்டுத், தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் இந்தியா 8 சதவிகித வளர்ச்சியையும் தாண்டி நடைபோட்டது. பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 8 சதவிகித வளர்ச்சியே தங்களது நோக்கம் என்று மார்தட்டிக் கொண்டதையும் - இந்தியா ஒளிர்கிறது என்று புளகாங்கிதம் அடைந்ததையும் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதே பாதையில் நாங்களும் இன்னும் வேகமாகக் சென்று சீனாவை எட்டிப் பிடித்து விடுவோம் என்று அலறினர் மன்மோகன் சிங்கும் - சிதம்பரமும்.


அந்நிய முதலீட்டிற்கு தங்கள் கதவை மிக விசாலமாக திறந்து விட்டதோடு, குப்பை கூளங்களைக் கூட இறக்குமதி செய்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்; எதையும் விட்டு வைக்கப் போவதில்லை என்று இரு கரம் கூப்பி வரவேற்றனர். அதன் விளைவு என்ன? நாளுக்கு நாள் இராக்கெட்டின் உயரத்தை விட சென்செக்ஸ் விண்ணை தாண்டிச் சென்றது. 5000 புள்ளிகளைத் தாண்டியபோது நமது மகாத்மாக்களின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அப்புறம் என்ன 8000 புள்ளியைத் தாண்டி விட்டபோது உற்சாக பெரு வெள்ளத்தில் நீந்தினர்... பின்னர் 10,000 புள்ளியை சென்செக்ஸ் தொட்டபோது எங்கள் ஆட்சியின் சாதனையைப் பார்த்தீர்களா? நாங்கள்தான் உலகின் முன்னணியில் இருக்கிறோம் என்று ஆர்ப்பாட்டம் போட்டனர்.


இந்திய பொருளாதார ராக்கெட் செல்லும் வேகத்தை பார்த்த நமது பொருளாதார விஞ்ஞானிகள்கூட அய்யா கொஞ்சம் பிரேக் போட்டு போங்கள் இல்லையென்றால் அது கண்தெரியாத கிரகத்திற்குப் போய்விடும் என்று கூறியதையெல்லாம் வெறும் பிதற்றல் என்று ஒதுக்கித் தள்ளினர்; இந்த வேகம் தற்போது 15,000 புள்ளியைத் தொட்டு விட்டது. இந்த வளர்ச்சியை நிதியமைச்சர் சிதம்பரத்தாலேயேக் கூட நம்ப முடியவில்லை; அய்யோ இந்த ராக்கெட்டை நாம்தான் ஏவுகிறோமோ? அல்லது வேறு யாருடைய கட்டுப்பாட்டிலாவது இயங்குகிறதா என்று சின்ன சஞ்சலம் கூட அவருக்கு இருக்கலாம். இருந்தாலும் என்ன? இது குறித்து நாங்கள் மிகவும் உஷாரா செயல்படுகிறோம், பங்குச் சந்தையை கவணித்து வருகிறோம் என்றார் சிதம்பரம்.தற்போது ராக்கெட் கட்டுப்பாட்டு எல்லையை மீறி விட்டது!


விளைவு சென்செக்ஸ் தலை கீழாக வீழ்ந்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பங்குச் சந்தையை இரண்டு மணி நேரத்திற்கு நிறுத்தி வைத்தனர். இப்போது ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தை சரிந்து வருகிறது. மிக உயரமாக எழுப்பப்பட்ட கண்ணாடி மாளிகை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கி வருகிறது.



மத்திய அரசின் அரசியல் தடுமாற்றமும், முரட்டுக் காளைளும், கரடிகளுமே மார்க்கெட் சரிந்து விழுவதற்கு அடிப்படையான காரணம். இப்போது திருவாளர்கள் மன்மோகன்சிங் - சிதம்பரத்தின் கவலைகள் எல்லாம் இந்த கண்ணாடி மாளிகையை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்! அதற்காக ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க முற்படுகிறார்கள். அரசியல் சித்து விளையாட்டை துவக்கியிருக்கிறார்கள்! இடதுசாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றி மார்தட்டிக் கொள்வது; இன்னொன்று சரிந்துக் கொண்டிருக்கும் கண்ணாடி மாளிகைக்கு தற்காலிகமாக முட்டுக் கொடுப்பது!உண்மையில் இப்போது நடப்பதென்ன கடந்த மூன்று மாதத்தில் பண வீக்க விகிதம் 8 சதவிகிதத்திலிருந்து 11.42 சதவிதத்திற்கு எகிறி விட்டது. குறிப்பாக ஒரே மாதத்தில் பாய்ச்சல் வேகத்தில் எகிறி சென் செக்ஸ் ராக்கெட்டை விட நான் மிகவும் வேகமாக போகும் சக்தி படைத்தவன் என்று நிரூபித்து விட்டது பண வீக்கம்! இதன் விளைவு சாதாரண - ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டதோடு, விலைவாசி விண்ணுக்கு ஏறிக் கொண்டிருக்கிறது. வரலாறு காணாத பண வீக்க விகிதமாக இது மாறிவிடும் ஆபத்துள்ளது; பண வீக்கம் 13 சதவிகிதம் அளவிற்கு உயரும் என்று பொருளாதார நிபுனர்களால் ஆரூடம் கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துங்கள் என்று சிதம்பரத்தை பார்த்துக் கேட்டால்! எண்ணெய் விலை உயர்வால்தான் இப்படி நடக்கிறது; உலகம் முழுவதுமே பொருளாதார நெருக்கடி நிலவுகிறது என்று மழுப்புகிறார். விளைவு பணவீக்கம் இப்போது ஊளைச் சதையாக பலூன் போன்று ஊதி பெருகிக் கொண்டிருக்கிறது. பொருளாதார வல்லுனர்களோ 1929 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஏற்பட்டதைப் போன்று இப்போது ஏற்படுமா? என்றெல்லாம் கூட அச்சப்படுகின்றனர்.



இந்தப் பணவீக்கத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் உலக செல்வந்தர்கள் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், செல்வந்தர்களை உருவாக்குவதில் உலகளவில் முன்னணியில் இருப்பது இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. 22.7 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ளோம். குறிப்பாக 2007 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் புதிதாக 23,000 கோட்டீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள். கேட்டீஸ்வரர்கள் என்றால் அமெரிக்க அளவுகோள்படி ரூ. நான்கு கோடி வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம். இதில் அவர்களது வீட்டு மதிப்பு சேராது. ஏற்கனவே இந்தியாவில் ஒரு லட்சம் கோட்டீஸ்வரர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மறுபுறத்தில் ஒரு நாளைக்கு ரூ. 40க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 35 கோடி பேரும், ரூ. 80க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 70 கோடி பேரும் உள்ள நாட்டில்தான் இந்த ராக்கெட்வேக கோட்டீஸ்வரர்கள் உருவாகி வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.



இந்தப் பின்னணியில் பண வீக்கம் எனும் பூதத்தை கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன தெரியுமா? சி.ஆர்.ஆர். என்று சொல்லப்படும் வங்கிகளின் இருப்பி விகிதத்தை கூட்டுவது. இந்த ஒரே ஒரு வழிதான் பணவீக்கம் எனும் பூதத்தை கட்டுப்படுத்தும் மந்திரகோல் என்று பொருளாதார புலிகளான மன்மோகனும் - சிதம்பரமும் நாட்டு மக்களிடம் கூறுகின்றனர். சரி, இதன் மூலம் இவர்கள் கட்டுப்படுத்தும் தொகை எவ்வளவு என்றால் வெறும் 20,000 கோடி ரூபாய் மட்டும்தான். அதாவது நாட்டு மக்களிடம் கிட்டத்தட்ட 10 இலட்சம் கோடி ரூபாய் பணப் புழக்கம் இருப்பதாகவும் இதில் ஒரு 20,000 கோடியை கட்டுப்படுத்தினால் பண வீக்கம் என்ற பூதம் மாயமாய் மறைந்து விடும் என்று கதை கட்டுகிறார் சிதம்பரம்.



உண்மை என்ன? பண வீக்கம் என்ற பூதத்தின் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மந்திர சக்தி எது என்றால் இந்திய நாட்டில் போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் கருப்பு பணமும், ஆன் லைன் வர்த்தகமும் என்பதை மூடி மறைக்கின்றனர். இந்தியாவின் ஜி.டி.பி.யில் (மொத்த உற்பத்தியில்) 20 முதல் 60 சதவிகிதம் அளவிற்கு கருப்பு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் உருவாகிறது. 2006 ஆம் ஆண்டு உலக வங்கி கணக்குப் படி 10,2000 கோடி டாலர் கருப்பு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. இந்த கருப்பு பணச் சந்தையுடன் ஒப்பிடும் போது வங்கி இருப்பி விகிதத்தை கட்டுப்படுத்துவதாக கூறப்படும் தொகை கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் பேகும். மொத்தத்தில் இந்த கருப்பு பணம் தான் நம் நாட்டின் பங்கு மார்கெட்டில் புகுந்து விளையாடுவதற்கும், ஆன் லைன் வர்த்தகத்தக சூதாட்டத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.



மேலும், மத்திய அரசாங்கம் உணவு பொருட்கள் உட்பட 25 அத்தியாவசிய பொருட்களை ஆன் - லைன் வர்த்தகத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இது வர்த்தக சூதாடிகளுக்கும், கள்ளச் சந்தை பதுக்கல் பேர்வழிகளுக்கும் வசதியாக மாறியுள்ளது. இதன் விளைவே இன்றைய விலை உயர்விற்கும் - பண வீக்கத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பெருகி வரும் விலை உயர்வை கட்டுப்படுத்த 25 பொருட்களை ஆன் - லைன் வர்த்தகத்திலிருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரியதோடு, 15 அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும்; இதன் மூலம் விலை உயர்விலிருந்து சாதாரண ஏழை எளிய மக்களை பாதுகாக்க முடியும் என்று கோரியது. ஆனால், மத்திய அரசோ செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்ற மவுனம் சாதித்து வருகிறது.



அதே போல் பெட்ரோலிய பொருட்களின் மீதான விலை உயர்வை பயன்படுத்திக் கொண்டு பெரும் இலாபம் ஈட்டிய ரிலையன்ஸ், கெயின்ஸ் உட்பட உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது வரி (றுனேகயடட கூயஒ) விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அத்துடன் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த 5 சதவிகித இறக்குமதி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீது அரசு விதிக்கும் 7.5 சதவிகித வரியை 2.5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கண்டுக் கொள்ளவே இல்லை. இடதுசாரிகள் முன்வைத்த மேற்கண்ட மாற்று நடவடிக்கைகள் எதனையும் செய்ய முன்வராமல் பண வீக்கம் ஏதோ தன்னால் ஏற்படுவது போன்ற மாயையை தோற்றுகிறது மத்திய அரசு. மொத்தத்தில் உலகமய ஆதரவு பொருளாதார புலிகளான மன்மோகனும் - சிதம்பரமும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறும் நடவடிக்கை தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போன்றே! எனவேதான் தற்போதைய பண வீக்கத்திற்கு ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையின் சீரழிவின் மறுபக்கமே என்று அறுதியிட்டுக் கூறலாம்.

17 comments:

Anonymous said...

ஹலோ சந்திப்பு சார் மக்கள் எல்லாம் பெட்ரோல் கிடைக்காம தவிக்குறாங்க. பணவீக்கத்தை பத்தி பேசுறீங்க... அது சரி மன்மோகன் சிங்குதான் உங்களை கண்டுக்கவே மாட்டேங்குறாரே? வாபஸ் வாங்க வேண்டியதுதானே

சந்திப்பு said...

அனானி நன்பரே ஒருபுறம் சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தக சூதாடிகள் நாளுக்கு நாள் விலையை உயர்த்தி வருகின்றனர். இதனை காரணம் காட்டி மத்திய மன்மோகன் அரசு மக்கள் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு புறத்தில் விலையை உயர்த்திக் கொண்டே மார்க்கெட்டில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. இதுதான் மத்திய அரசின் பெட்ரோல் கண்ணீர்! (நீலி கண்ணீர்) என்பது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை இடதுசாரிகள் நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதர ஜனநாயக சக்திகள் இதுபோன்ற விசயங்களில் மவுனம் சாதிக்கின்றன. ஒரு மக்கள் எழுச்சியை நோக்கி இந்திய சமூகம் சென்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் மன்மோகன் சிங்கிற்கு எஜமான் ஜார்ஜ் புஷ். அப்படியிருக்கையில் அவர் எப்படி இடதுசாரிகளை மதிப்பார்! போகப் போக புரியும் இந்த அரசியல் விளையாட்டு.

Anonymous said...

*****மத்திய மன்மோகன் அரசு மக்கள் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறது. *****

அதாவது நீங்கள் முட்டுக் கொடுத்து தாங்கிப்பிடித்திருக்கும் மத்திய அரசு. சரிதானே நண்பர் சந்திப்பு?

****இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை இடதுசாரிகள் நடத்தி வருகின்றனர்.****

அப்படியா? இதுபற்றிக் கொஞ்சம் விரிவாக சில வார்த்தைகள் சொல்லலாமே நண்பரே. சமீபத்தில் இரயில் மறியல் நடத்தினீர்களே சென்னையில் அதுவும் அந்த 'பல்வேறு போராட்டங்களில்' அடங்குமா? அரசின் செலவில் மதிய உணவை ஏதாவது ஒரு மண்டபத்தில் கும்பலாக உட்கார்ந்து தின்றுவிட்டு வருவதற்குப் பெயர்தான் போராட்டமா?

பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் பிரணாப் முகர்ஜி "தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயார் உங்களின் ஆதரவோ தயவோ தேவையில்லை" என்று முகத்திலறைந்தாற்போல் சொல்கிறாரே, உங்கள் போராட்ட குணத்தை அங்கே கொஞ்சம் காட்டலாமே நண்பரே.

****இருப்பினும் இதர ஜனநாயக சக்திகள் இதுபோன்ற விசயங்களில் மவுனம் சாதிக்கின்றன***

இந்த லட்சனத்துல இப்படிப்பட்ட வியாக்கியானங்கள் வேற!

****ஒரு மக்கள் எழுச்சியை நோக்கி இந்திய சமூகம் சென்றுக் கொண்டிருக்கிறது.******

கோவாவிலிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அடித்து விரட்டி அம்மாநில அரசைப் பணியவைத்த மக்களின் தன்னெழுச்சியைப் போன்று நாடு முழுவதும் மக்கள் ஆங்காங்கே போராட்டக்களத்தில் நின்றூகொண்டிருக்கின்றனர். அவ்வாறு போராடுகின்ற மக்கள் சிங்கூர், நந்திகிராம மக்களைப் போன்று துயரங்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

மக்கள் எழுச்சியை ஒடுக்குவதும் தடுப்பதும்தானே உங்களது கம்யூனிசக் கொள்கை, இதுல மக்கள் எழுச்சியை நோக்கி நம் சமூகம் சென்று கொண்டிருப்பதாக நீங்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது நண்பரே.

நேர்மையான களப்போராட்டத்திற்கு உங்களது கட்சியையே அனுமதிக்காத நீங்கள் மக்களையா அனுமதிக்கப் போகிறீர்கள்?

மக்கள் நலம் விரும்பி.

ராஜ நடராஜன் said...

பதிவும் அனானியின் பின்னூட்டமும் நன்றாகவே உள்ளது.ஆனால் அரசியல் சாயமில்லாமல் பதிவு இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.உலக மயமாக்கல் இன்னும் விரிவாகும் காலகட்டத்தில்தான் உலகம் சுழல்கிறது.உலகமயமாக்கலின் பக்கவிளைவுகளை களைவது எப்படி என்று மட்டுமே சிந்திக்க வேண்டும்.

சந்திப்பு said...

அதாவது நீங்கள் முட்டுக் கொடுத்து தாங்கிப்பிடித்திருக்கும் மத்திய அரசு. சரிதானே நண்பர் சந்திப்பு?


நாங்கள் எதற்காக இந்த அரசிற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தும் அறியாதவர் போல் இருப்பதுதான் வேதனையானது. இது கொச்சையான பார்வை. மதவாத சக்திகள் இந்திய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் இந்த நாட்டின் ஒற்றுமைக்கு பெரும் ஆபத்து உள்ளது. இதனை தடுப்பதுதான் முதன்மையானது. அந்த அடிப்படையில்தான் இந்த அரசிற்கு இவ்வளவு நாள் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நாட்டின் இறையாண்மை உட்பட்ட கொள்கைக்கு பாதிப்பு வருவதை இடதுசாரிகள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். தத்துவத்தை எழுத்தில் எழுதினால் மட்டும் போதாது. அதற்காக எதாவது மெனக்கெட வேண்டும்.

அரசின் செலவில் மதிய உணவை ஏதாவது ஒரு மண்டபத்தில் கும்பலாக உட்கார்ந்து தின்றுவிட்டு வருவதற்குப் பெயர்தான் போராட்டமா?

அனானி நன்பரே நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சற்று சிந்தித்துதான் இதனை எழுதுகிறீர்களா? தெரியவில்லை. ஒதுக்கித் தள்ள வேண்டிய விமர்சனம் இது.


இந்த லட்சனத்துல இப்படிப்பட்ட வியாக்கியானங்கள் வேற!
எதைப் பற்றியும் கவலைப்படாத அனானி நன்பரே உங்களுக்கு ஜனநாயகம் என்றால் என்ன தெரியுமா? அல்லது இதர அமைப்புகளுடன் குறைந்த பட்சம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற நோக்கமாகவது உங்களுக்கு உண்டா? சேற்றை அள்ளித் தெளிப்பது ஒன்றே உங்கள் நோக்கத்தில் உள்ளது. பாவம் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் அப்படி!

கோவாவிலிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அடித்து விரட்டி அம்மாநில அரசைப் பணியவைத்த மக்களின் தன்னெழுச்சியைப் போன்று நாடு முழுவதும் மக்கள் ஆங்காங்கே போராட்டக்களத்தில் நின்றூகொண்டிருக்கின்றனர். அவ்வாறு போராடுகின்ற மக்கள் சிங்கூர், நந்திகிராம மக்களைப் போன்று துயரங்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

யாராவது போராடினால் அதனை தங்களோடு இணைத்துக் கொண்டு நீங்கள்தான் சாதித்ததாக கதைவிடுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை! தமிழகத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இங்கு ஒரு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கூட இல்லையா என்ன?
வெறும் பிதற்றல்...


மக்கள் எழுச்சியை ஒடுக்குவதும் தடுப்பதும்தானே உங்களது கம்யூனிசக் கொள்கை, இதுல மக்கள் எழுச்சியை நோக்கி நம் சமூகம் சென்று கொண்டிருப்பதாக நீங்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது நண்பரே.


கம்யூனிச கொள்கை ஒடுக்குமுறை என்றால் உங்களது என்ன பாசிச கொள்கையா? அப்படியிருந்தால் தான் இப்படி எழுத முடியும். சரி அதை விடுவோம். அடுத்து நீங்கள் கூறியிருப்பததன் மூலம் என்ன அர்த்தத்தை கண்டுப்பிடித்தீர்கள் என்றாவது உணர்ந்திர்களா? மேலே கோவாவிலும் - வங்கத்திலும் மக்கள் எழுச்சியடைந்ததாக கூறி விட்டு. கீழே ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல் எழுதுகிறீர்களே இதைத்தான் அரை வேக்காடு என்று கூறுவது.

நேர்மையான களப்போராட்டம் - அநியாயமான களப்போராட்டம் என்ன வித்தியாசம் விளக்கவும்.

சந்திப்பு said...

நன்றி ராஜ நடராஜன். அரசியல் இல்லாமல் அணுவும் அசையாது. பணம் மற்றும் பணத்தின் செயல்பாடு இவைகள் அனைத்தும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு உட்பட்டதே. இதனை அரசியலிலிருந்து வேறுபடுத்தி பார்த்தால் ஏமாறப்போவது பணம் அல்ல. நாம்தான். எனவே அரசியல் ரீதியாக சரியானது எது என்று என்பதை நோக்கி தேடுதலை மேற்கொள்வது பொருத்தமாக இக்கும் என்று கருதுகிறேன். நன்றி.

இரா.சுகுமாரன் said...

//சி.ஆர்.ஆர். என்று சொல்லப்படும் வங்கிகளின் இருப்பி விகிதத்தை கூட்டுவது. இந்த ஒரே ஒரு வழிதான் பணவீக்கம் எனும் பூதத்தை கட்டுப்படுத்தும் மந்திரகோல் என்று பொருளாதார புலிகளான மன்மோகனும் - சிதம்பரமும் நாட்டு மக்களிடம் கூறுகின்றனர்.//

வங்கி வட்டிவிகித்ததை உயர்த்தினால் வீட்டுக்கடன் உள்ளிட்டவைகளுக்கு வட்டி விகிதம் உயர்ந்து நடுத்தர மக்களை மேலும் வங்கிகள் கொள்ளை அடிக்க வழி செய்துள்ளார் சிதம்பரம்.

சிதம்பரம் - மன்மோகன் அமெரிக்க கைகூலிகளால் என்ன செய்ய முடியும் பெருமுதலாளிகள் கூட்டத்திற்கு ஆதரவாக இருந்தால் தான் ஆட்சி நடத்தமுடியும் அவர்களால் விலைவாசி உயர்வு பணவீக்க உயர்வு சாதாரண அரிசி விலை 10 ரூபாய்லிருந்து இன்று 19 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவெல்லாம் மன்மோகனுக்கு தெரியவில்லை ஆனால் அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றாமல் விடமாட்டோம் என்று பேசி வருகிறார் மன்மோகன் ஏனெனில் அமெரிக்க எசமான வேலைதான் அவருக்கு அதிகம் மக்கள் பிரச்சனை பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை. எப்படியும் வரும் தேர்தலில் வெற்றி பெற போவதில்லை எனவே உடனே அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றிவிட துடிக்கிறார் அவர் பொதுவுடைக் கட்சிகள் ஆதரவை விலக்கி கொள்வோம் என்று தெரிவித்தாலும் அதைவிட ஆட்சி போனாலும் பரவாயில்லை ஆனால் அணுசக்தியை விடத்தயாரில்லை என்பதிலேயே இவரின் அமெரிக்க விசுவாசம் வெளிப்படுகிறது.

இரா.சுகுமாரன் said...

//Anonymous said...

ஹலோ சந்திப்பு சார் மக்கள் எல்லாம் பெட்ரோல் கிடைக்காம தவிக்குறாங்க. பணவீக்கத்தை பத்தி பேசுறீங்க... அது சரி மன்மோகன் சிங்குதான் உங்களை கண்டுக்கவே மாட்டேங்குறாரே? வாபஸ் வாங்க வேண்டியதுதானே//

அநானி சார்

இடது சாரிகள் மிரட்டிக்கொண்டே இல்லையென்றால் இந்தியாவை இன்னும் எளிமையாக விற்றுவிடுவார்கள். இப்போது கொஞ்சம் குறைவாகவே அந்த வேலை நடக்கிறது ஆதரவை விலக்கிக் கொண்டால் என்ன பி.ஜெ.பி அந்த வேலையை செய்யப்போகிறது.

இன்றைய நிலையில் ஆதரவு விலக்கிக் கொள்வது சரியானதல்ல.

Anonymous said...

//கோவாவிலிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அடித்து விரட்டி அம்மாநில அரசைப் பணியவைத்த மக்களின் தன்னெழுச்சியைப் போன்று நாடு முழுவதும் மக்கள் ஆங்காங்கே போராட்டக்களத்தில் நின்றூகொண்டிருக்கின்றனர். அவ்வாறு போராடுகின்ற மக்கள் சிங்கூர், நந்திகிராம மக்களைப் போன்று துயரங்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.//


இரா.சுகுமாரன் can answer this also....

சந்திப்பு said...

நன்றி தோழர் சுகுமாரன்.

தங்களது கருத்து மிகச் சரியானது. மத்திய அரசு தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையிலும் இப்போது அம்பலப்பட்டது போன்று அம்பலப்படவில்லை. குறிப்பாக இந்த அரசு எப்படியெல்லாம் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சாதாரண மக்கள் மீது பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்துவம் இவர்கள். ரிலையன்ஸ் போன்ற கொள்ளையர்கள் மீது வரி போடுவதற்கே பயப்படுகின்றனர். இதுதான் முதலாளித்துவ ஆதரவு கொள்கையின் பட்டவர்த்தனமான வெளிப்பாடு.

மத்திய அரசை தற்போது கவிழ்க்கக் கூடாது என்ற தங்களது உணர்வு நியாயமானது. இது பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே முடியும் ஆபத்துள்ளது. இருப்பினும் தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கத் துணியும் இந்த காந்தியவாதிகளின் செய்கை நம்மை வெட்கப்பட வைக்கிறது. நன்றி சுகுமாறன்.

சந்திப்பு said...

4th July Dinamani Editorial

இந்த நடவடிக்கைகள் போதாது!


பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தைத் தாண்டியிருப்பதால் எதிர்பார்த்த நடவடிக்கைகளையே மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்துள்ளன. வங்கிகளுக்குத் தரும் கடன் மீதான வட்டி வீதத்தில் அரை சதவீதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் வைத்திருக்க வேண்டிய கட்டாய ரொக்க கையிருப்பை மேலும் சிறிது அதிகரித்துள்ளது.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொருளாதார அரிச்சுவடியின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நடவடிக்கைகள் இப்போதைய சூழலுக்குப் பொருத்தமானவையோ, போதுமானவையோ அல்ல.
கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 9% ஆக இருந்ததற்குக் காரணமே உள்நாட்டில் பொருள்களுக்கு இருந்த தேவைகளும், வங்கிகளில் குறைந்த வட்டிக்கு தாராளமாகக் கடன் கிடைத்ததும்தான்.

அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களின் விலையும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் அதிகரித்ததால்தான் பணவீக்க விகிதம் படுவேகமாக உயர்ந்திருக்கிறது.
நம் நாட்டில் உணவு தானியத்தில் பற்றாக்குறை என்று சொல்லும் நிலைமை இல்லை என்றாலும், முன்பேர வர்த்தகத்தை "ஆன்-லைன்' மூலம் நடத்த ஊக வியாபாரிகளை அனுமதித்ததாலும், அரசின் கண்காணிப்பு இல்லாமல் பதுக்கல் அதிகரித்ததாலும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

ஏழைகள் மட்டும் அல்லாது நடுத்தர வர்க்கமும் பயன்பெறக்கூடிய பொது விநியோக முறையைத் திட்டமிட்டே மத்திய அரசு தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது. உலக வங்கியும் பன்னாட்டுச் செலாவணி நிதியமும் மானியச் செலவுகளைக் குறைக்க வேண்டும், உணவு தானியங்களுக்குத் தரும் மானியம் அனைத்தும் வீண் என்று தொடர்ந்து கூறி வருவதைக் கேட்டு அதன் பரிந்துரைப்படியே செயல்பட்டுவருகிறது. உயர் வருவாய்ப் பிரிவினருக்குப் பொது விநியோகத்தில் உணவு தானியம், கெரசின் இல்லை என்று ஒதுக்கியதே அந்த அடிப்படையில்தான். பிறகு நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் தாங்களாகவே ஒதுங்கிக் கொள்ளும் தரத்தில் அரிசி போன்றவை விநியோகம் செய்யப்பட்டன.

கட்டுமானத்துறையில் வேலைகள் நின்றுபோகும் அளவுக்கு சிமென்ட், உருக்குக் கம்பி, மணல், ஜல்லி, நிலத்தின் விலை போன்றவை பல மடங்காக உயர்ந்துவிட்டது.

நகர்ப்புறங்களில் வீடு, வீட்டுமனை போன்றவற்றின் விலையும் திடீரென பலமடங்கு உயர்ந்துவிட்டது.

இதனால் தொழில்துறையினர் மட்டும் அல்ல, தனி மனிதர்களும் கட்டுமானத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு நிலைமை கையைமீறிப் போய்விட்டது. வங்கிகளும் வீட்டுவசதி கடன் சங்கங்களும் தங்கள் பங்குக்கு வீட்டுக்கடன்கள் மீதான வட்டியையும் உயர்த்தி ""சேவை'' புரிந்துள்ளன.

மும்பையில் லட்ச ரூபாய்க்கு அடுக்கு மனை கட்டித் தருகிறோம் என்று முன்வந்த அமைப்பிடம் பதிவு செய்துகொண்டு முன் பணம் செலுத்த ஆயிரக்கணக்கில் மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். சொந்தமாக ஒரு குடியிருப்பு தேவை என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்திருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்றித்தரும் ஆற்றலோ, முனைப்போ மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. இந்த ஒரு துறையில் அரசு தீவிரம் காட்டினால்கூட பொருளாதாரம் அற்புதமாக மீட்சி பெறும்.

தாராளமயம், உலகமயம் என்ற வார்த்தைகளின் மயக்கத்தில் சிக்கியுள்ள மத்திய ஆட்சியாளர்கள், மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முயல்வதே பாவம் என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டதைப்போலத் தெரிகிறது. அவர்கள் கவலை எல்லாம் அணு சக்தி ஒப்பந்தம், அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டப்படாமல் லாபம் சம்பாதிப்பது போன்றவைதான்.
""உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைக் காசுள்ளவர்கள் மட்டுமே பெறக்கடவது'' என்ற முதலாளித்துவ அரசுகளின் சித்தாந்தமே இப்போது நம்மை ஆள்கிறது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அல்ல என்பதை மக்கள் உணர்ந்தால் சரி.

K.R.அதியமான் said...

Excess speculation or excess money?
By Swaminathan S. Anklesaria Aiyar

From ancient times, Indian rulers have always blamed inflation on the
perfidious bania. That is happening globally today. Politicians everywhere are blaming speculators for high inflation.

Actually, inflation occurs when too much money chases too few goods. Today, no great shortfall in goods is evident. World oil production is rising, though slowly. Mineral and metal production is up. The FAO predicts a record global harvest in 2008.

But the world has long been awash in money. The US kept interest rates at just 1% for years after the 2001 recession. This encouraged
Americans to spend more than they earned, creating a huge US trade
deficit and corresponding trade surpluses in China and other Third
World exporters. Initially, this flood of dollars lifted all global
boats — world GDP grew at record rates in 2004-08. Inflation was kept down by rising productivity, and by outsourcing manufacturing and services respectively to low-wage centres in China and India.

Money supply expanded fast in Third World countries too (including India). This was partly because central banks bought up dollars in forex markets rather than let their currencies appreciate.

Alas, a flood of money cannot for long lift production alone. Soon it
starts raising prices. First the excess money raised housing prices,
and everybody was happy. Then it raised stock market prices, and
people were very happy. Finally, the flood of money raised consumer
prices, and suddenly people are very unhappy.

When world growth is so high that spending outpaces commodity
production, commodity prices will rise to signal that growth needs to
slow down. But this is politically unpalatable. Slower growth hits
jobs and incomes. Rather than permit this, governments everywhere try to stimulate the economy with even more money.

The US Fed has not only slashed interest rates to 2% but provided
hundreds of billions of dollars to the stricken financial sector to
help it escape the consequences of its excesses. This new dollar flood
has worsened inflation.

World commodity prices have shot up in the last two years, spilling
over into higher consumer prices. Politicians globally are looking for culprits, and finding them in speculators. Hundreds of billions of dollars have gone in recent years into two investment areas. First, purchases in forward commodity markets — contracts for delivery of commodities at specified future dates. Second, commodity index funds — mutual funds that mimic the price of a group of commodities by buying
and selling futures. Such funds have attracted $240 billion in recent times.

Has this sent commodity prices skyrocketing? Very doubtful. Yes,
investors are buying forward contracts worth billions. But for every buyer of contracts, hoping for rising prices, there has to be a seller, hoping for falling prices. Speculation is necessarily a two-way street. Besides, every contract expires and is settled at the due date, so such speculation is self-terminating.

Forward trading is mostly paper trading, and must not be mistaken for hoarding. World commodity stocks today are generally low by historical standards. Massive forward trading has not translated into hoarding.

Academic studies have long attempted to find whether forward trading causes a rise in current prices. No clear link has ever been
established. Price manipulation is possible in thin, weakly regulated
markets. It is not evident in big commodity markets. The US has just
enacted legislation limiting the size and financing of forward trades in oil. Past experience suggests this will have a marginal impact at best.

There is hardly any forward trading in iron ore, yet its price is up 76-95% in new contracts. By contrast, huge forward trading in sugar has left world prices low. Nickel futures are down from a peak of $60,000/tonne last year to just $22,000. Wheat futures once spiked to $13/bushel but are now down to $9/bushel. There is no clear link between forward trading and skyrocketing prices.

When the interest rate is lower than the inflation rate — economists call this a negative real interest rate — money supply is definitely excessive. India, the US and many other countries have negative real interest rates today. A recent Merrill Lynch study suggests that a 1%
fall in the real interest rate increases commodity prices by 17% in 10 months. If this is even partially true, the main culprits have been not speculators but governments printing excess money. Worse, this excess money was often used to subsidise oil prices, stoking demand further.

Today, at last, governments across the globe are reluctantly reducing
oil subsidies and starting to fight inflation through a monetary
squeeze, even if it means slowing growth. Squeezing money in India
alone will produce only limited results. For good results, central
bankers of the world should get together for coordinated action. But no such initiative is in sight.

Politicians are quick to take the credit when the economy does well,
and to blame others when things go wrong. They must take the
responsibility for bad as well as good policies. Banias may be quick
to grasp the inflationary potential of bad policies, and profit fromit. But the root cause of rising prices lies elsewhere.

http://www.swaminomics.org/

சந்திப்பு said...

நன்றி திரு. அதியமான் அவர்களே

திரு. சுவாமிநாதன் அவர்களது கட்டுரையை இன்னும் படிக்கவில்லை. படித்து முடித்த பின் அது குறித்த என்னுடைய பதிலையும் போடுகிறேன்.

Unknown said...

Inflation is there in China too.
It is there in most countries,
Who is responsible- USA or Chidambaram.OPEC makes the
most of the oil price hike.
Countries like Iran,Venezuela
are major oil exporting countries.
Why cant the left which always speaks for them in India ask them
to reduce the price so that poor
countries are spared from effects of oil price hike.Chavez is laughing all the way to bank
as his public sector oil cos
gain from the increase in global oil price.And you oppose USA and
blame USA for everything.You
support muslim countries but no
muslim country is willing to
lose the super profit they make
because of spurt in oil prices.
They all want their share in the
pound of flesh.

To reduce the dependency on oil
we can go for nuclear power. You
oppose the 123 agreement that
will help in generating nuclear
power.Govt. can reduce taxes on petroluem but revenue will be
affected. You want govt. to spend money for this and that and also want the govt. to earn less from
petro products. what can the govt.
do. Print more notes and indulge in deficit financing
and that will result in inflation.
Again you will complain that inflation is affecting common
man.
China too increased price of
petro products as prices
zoomed in international market.
Can anyone oppose that move
in China and still be alive or free. China prospers because of
globalisation. Go and lecture them
on merits of anti-globalisation and you will spend the rest of your life in jail.
All said and done during 1998-2003
inflation was under control. NDA
govt. ensured that even as the
economy grew faster. Are comrades
ready to accept this and concede that NDA did manage the economy well.

சந்திப்பு said...

நன்றி தமிழ் பையன். தாங்கள் கூறியது போல் தமிலிஷ் தளத்தில் பதவு செய்துள்ளேன். தகவலுக்கு நன்றி.

சந்திப்பு said...

நீங்கள் பெரியாரை விமர்சிப்பவர் என்ற பெயரை வைத்திருப்பதன் மூலமே நீங்கள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதி என்பதை உணர முடிகிறது. இருப்பினும் ஒருசிலவற்றை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.

1. உலகம் முழுவதும் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்? அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய வல்லரசுகளும் அதன் பன்னாட்டு நிறுவனங்களுமே காரணம். மேலும் எண்ணெய் வர்த்தகத்தை இந்த பன்னாட்டு நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. ஆன் லைன் வர்த்தகம் என்ற பெயரில் எண்ணெய் விற்கும் நாடுகளை விட அதனை வாங்கும் நிறுவனங்களும் - நாடுகளுமே பயனடைகின்றன என்று குற்றம் சுமத்தப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் பண வீக்கம் இருந்தாலும் இந்தியாவில் அதனை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை என்பதை கேட்க வேண்டாமா? அல்லது இவர்கள் எடுக்கும் நடவடிக்கை பண வீக்கத்தை கட்டுப்படுத்த உதவுமா? என்பதை விமர்சிக்க வேண்டாமா?

2. 123 அணு சக்தி உடன்பாட்டின் முலம் ஆதாயம் அடையப் போவது அமெரிக்காவே. அதை விடுவோம் ஏதோ அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரித்தால் விலை குறைவாக கிடைப்பது போல் பேசுவதுதான் வேடிக்கையானது. உண்மை என்ன? அணு மின்சாரம் என்பது தற்போதைய விலையை விட அதிகமாக இருக்கும். மேலும் தற்போதைய தேவையை உடனடியாகவோ அல்லது நீண்ட காலத்திலோ அணு சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அளவிற்கு நமது பொருளாதார பலம் இல்லை. இதற்காக அமெரிக்காவின் அனைத்து நிப்நதனைகளுக்கும் நாம் அடிமைப்ட்டுக் கிடக்க வேண்டும். அத்துடன் இந்த அணு மின்சாரம் மேலும் இந்தியாவில் பண வீக்கத்தை ஏற்படுத்தவே உதவிடும்.

எனவே நன்பரே கொ;"சமாவது மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

Sindhan R said...

தோழரே இடதுசாரிகள்க்கான ஒரு பொது வலைப்பூ உருவாக்கும் முயர்ச்சியில்ருக்கும் எங்களோடு இணைந்து செயல்பட முடியுமா? - உங்கள் மின்அஞ்சம் முகவரியை தந்து உதவுங்கள்.

newindiamovement@gmail.com