January 21, 2008

திராவிட இயக்க முகமூடி!


பசுவின் புனிதம் அரசியலின் அங்கமாகியுள்ளது. அது பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளோடு ஒன்றுவதாக அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த வழியில் அம்மாவின் கருணை இன்றைக்கு பசுவின் மேல் வெளிப்பட்டுள்ளது ஆச்சரியப்படுவதற்கில்லை.
இராமேஸ்வரத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 55 பசுக்களில் 15 பசுக்கள் இறந்துவிட்டதாகவும்இ மேலும் சில பசுக்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் வருத்தப்பட்டு - ஆழ்ந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.
வாயில்லா பிராணியான பசுவின் மீதான கருணை புள்ளிலரிக்கச் செய்கிறது. கோவில்களுக்கு நேர்ந்து விடும் இதுபோன்ற பசுக்களை பராமரிப்பதற்காக நாளொன்றுக்கு :ரு. 900 (900 ரூபாயா? 90 ரூபாயா? என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்)வழங்கப்படுவதாகவும். இது முழுமையாக செலவிடப்படுவதில்லை என்று குறைப்பட்டுள்ளதோடு. அறநிலையத்துறை அமைச்சர் பசுவின் மீது எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை என்றும் கண்டித்துள்ளார்.
அம்மாத்துவா தலைவர் சொல்லித்தான் ஒரு பசுவின் பராமரிப்புக்கு நாளொன்றுக்கு ரூ. 900 வழங்கப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தில் மாடு வைத்துக் கொண்டுள்ள யாரையாவது கேட்டுப் பாருங்கள். ஒரு பசுவிற்கு ஒரு நாளைக்கு பராமரிப்புச் செலவிற்காக எவ்வளவு ஆகிறது என்று? மிக அதிகப்பட்சமாக போனால் ரூ. 100 கூட ஆகாது என்பதுதான் உண்மை.
அது சரி சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வான விளைவுகளால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் கைதிகளாக ஆயிரக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பராமரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? நாள் ஒன்றுக்கு ரூ. 50 கூட ஒதுக்கப்படுவதில்லை. இதனால் பல்வேறு கைதிகளுக்கு தேவையான அடிப்படை ஊட்டச் சத்துக்கள் கூட கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம்.
மேலும் தமிழகத்தில் வறுமையால் உழலக்கூடிய மக்கள் தொகை ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது. நாளென்றுக்கு ரூ. 20க்கும் குறைவான வருமானமுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாலும் - நோய் - நொடிகளாலும் - சத்துணவுப்பற்றாக்குறையாலும் நாள்தோறும் இறந்து வருகின்றனர். இத்தகைய வறுமைப்பட்ட மக்கள் மீதெல்லாம் அம்மாவிற்கு கருணை ஏற்படாதது ஏனோ?
பசுவைப் பேசினால் அரசியலாக்கலாம்... வறுமைப் பேசினால் அரசியலாக்க முடியுமா? இதுதானே அம்மாவின் லாஜிக்.
அம்மாவின் அதிமுக - கருப்பு - சிவப்பு வண்ணத்தை காவியிடம் படிப்படியாக அடகு வைத்து வருகிறது. திராவிட இயக்கப் போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கும் தமிழக இந்துத்துவ இயக்கமாக அதிமுக மாறி வருவதைத்தான் இவையெல்லாம் காட்டுகிறது.
அம்மாவின் இந்துத்துவ அரசியல் பெரியார் மண்ணில் எடுபடாது என்று சொல்லிக் கொண்டு ஏமாறாமல் இருப்பார்களா? நமது திராவிட இயக்க கண்மணிகள் என்பதே நமது கவலையாக உள்ளது.

7 comments:

Anonymous said...

வாயில்லா ஜீவன்களை பட்டினியால் சாகடிப்பது என்பது மிகப் பெரிய பாவச் செயல். பசுக்களின் பராமரிப்பு செலவிற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 900 மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதுவும் முழுமையாக அவைகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை என்றும் தெரியவருகிறது.

Rs 900 for all cows, not per cow.
Since this is a Hindu temple and only Hindus donate cows you are
writing like this. If a similar things happens in an institution
under Wakf board of Tamilnadu CPI(M) politbureau
would have come out with a statement blaming BJP for this.
Your hatred for anything that is related to Hindus is well known.
Dont prove it again and again.

சந்திப்பு said...

நன்பரே சரியான தகவலுக்கு நன்றி. தங்களைப் போன்ற சாதாரண இந்து மக்களின் உணர்வுகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டியுள்ளது. இதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால். இந்துக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் மதவாத சக்திகளுக்கு எதிராகவும் - அந்த வழியில் பயணித்து அரசியல் அதிகாரம் என்ற கனியைப் பறிக்கலாம் என்ற நம்பாசையோடுத் திரியும் திராவிட முகமூடிகளையும்தான் விமர்சிக்கிறோம். மற்றபடி தங்களைப் போன்றவர்களின் புனித உணர்வுகளுக்கு நான் மட்டுமல்ல... என்னைப் போன்ற பலரும் உள்ளார்ந்த மதிப்பை வழங்குகிறோம். அதே சமயம் மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் மதவெறி எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அதனோடு சமரசம் செய்ய முடியாது நன்பரே. எனவே தங்களத தவறான புரிதலை மாற்றிக் கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் said...

//அம்மாவின் அதிமுக - கருப்பு - சிவப்பு வண்ணத்தை காவியிடம் படிப்படியாக அடகு வைத்து வருகிறது.//


பிஜேபி தயவில் தான் பிரதமர் ஆக முடியும் என்று அம்மா கனவு காணுது போல. தமிழகத்தில் பிஜேபி பூஜ்யம் என்பது தெரியும், வலிய சென்று ஆதரிப்பதற்கு வேறு என்ன காரணமாக இருக்கமுடியும் ?

ஐயங்கார் said...

சந்திப்பு,

ஜெயலலிதா அம்மையாருக்கு வாய்போடும் ச்சேச்சே வாயில்லாத ஜீவன்களிடம் தனி பாசம் உண்டு. ஏற்கெனவே அதன் வீட்டில் சசிகலா என்று ஒன்றை பார்த்துமா இப்படி ஒரு பதிவு?

செந்தழல் ரவி said...

//நன்பரே சரியான தகவலுக்கு நன்றி. தங்களைப் போன்ற சாதாரண இந்து மக்களின் உணர்வுகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டியுள்ளது. இதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால். இந்துக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் மதவாத சக்திகளுக்கு எதிராகவும் - அந்த வழியில் பயணித்து அரசியல் அதிகாரம் என்ற கனியைப் பறிக்கலாம் என்ற நம்பாசையோடுத் திரியும் திராவிட முகமூடிகளையும்தான் விமர்சிக்கிறோம். மற்றபடி தங்களைப் போன்றவர்களின் புனித உணர்வுகளுக்கு நான் மட்டுமல்ல... என்னைப் போன்ற பலரும் உள்ளார்ந்த மதிப்பை வழங்குகிறோம். அதே சமயம் மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் மதவெறி எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அதனோடு சமரசம் செய்ய முடியாது நன்பரே. எனவே தங்களத தவறான புரிதலை மாற்றிக் கொள்ளுங்கள்.///

இந்த பதிலின் மூலம் உங்கள் உயர்ந்த பண்பை காட்டுகிறீர் சந்திப்பு அவர்களே...இந்த பதிவின் கோணத்தையும் சரியாக விளக்கும் வகையில் அமைந்துள்ள மறுமொழி..!!! வெரிகுட்...!!!

சந்திப்பு said...

நன்றி கோவி. கண்ணன்.

நன்றி செந்தழல் ரவி.

சந்திப்பு said...

செந்தழல் ரவி தங்களது கருத்தை வெளியிடவில்லை. மன்னிக்கவும். ஏனென்றால் அது உங்களுடைய சொந்த விசயத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. மேலும் நாம் எதிர்ப்பது பிராமணர்களை அல்ல. பிராமணீய தத்துவார்த்தத்தையும் - அதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்துத்துவ மதவெறித்தனத்தையுமே. எனவே இப்படிப்பட்ட விசயங்களை நாம் கொள்கை ரீதியாக அணுகுவதே சரியாக இருக்கும் என கருதுகிறேன்.
நன்றி செந்தழல் ரவி.