January 19, 2008

பாரத ரத்னா விருதும் பாசிஸ்ட்டுகளின் தாக்குதலும்!

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. தேசத்தின் நலனிற்காக தன்னலம் கருதாமல் சேவை புரிபவர்களை கவுரவிக்கும் முகமாகவே இந்த விருது வழங்கப்படுகிறது. நெல்சன் மண்டேலா, டாக்டர் அம்பேத்கர், அன்னை தெரேசா, ஜவஹர்லால் நேரு, பொருளாதார நிபுனர் அமர்த்தியா சென், தத்துவாசிரியர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், லதா மங்கேஷ்கர், டாக்டர் அப்துல் கலாம் என நாடு முழுவதும் சேவை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2001இல் லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டதற்கு பின் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வருடம் பாரத ரத்னா விருது வழங்குவதற்காக மத்திய அரசு பலரது பெயர்களை பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி - வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதி ஆட்டத்தை துவக்கி வைத்தார்.


அடுத்து, இந்த வரிசையில் உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி தன்னுடைய குருவான கன்சிராமுக்கு வழங்க வேண்டும் என்று அவரும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்.


காங்கிரஸ் கட்சியோ ஜோதிபாசுவின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக கூறி அவரையும் இந்தப் போட்டியில் தானே சேர்த்துக் கொண்டது.


சி.பி.எம். பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உடனடியாக இதற்கு பதிலடியும் கொடுத்து விட்டார். தேசியத்தின் மிக உயரிய - நாணயமான விருது விஷயத்தை அரசியலாக்கக்கூடாது என்றதோடு, மார்க்சிஸ்ட்டுகள் இதுபோன்ற விருதுகளை விரும்புவதில்லை என்பதைம் தெளிவுபடுத்தி விட்டார்.


பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காலத்தில் 2001க்கு பிறகு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து எந்தவிதமான பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை. அவர்களது பார்வையில் சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் அதற்கு பொருத்தமானவர்கள் இல்லை என்று கருதியிருக்கலாம். ஒருவேளை இப்போது பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால் மோடிக்கே கூட அந்த விருதை வழங்கியிருக்கலாம்.


இவர்களால் யாரையும் தேசத்திற்கு சேவை செய்தவர்களாக அடையாளம் காண முடியாத நிலையில், இப்போது வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அரசியலாக்கி வருகிறார்கள்.


விருது படும் பாட்டைக் கண்ட என்.டி. டி.வி. இது குறித்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இதில் ஓவியர் உசைனின் பெயரும் பரிசீலிக்கப்பட்டதாம். பொறுத்துக்கொள்வார்களா வானரப் படைகள் (சங்பரிவார பாசிச படைகள் - காவிச்சட்டைக்காரர்கள்) அவ்வளவுதான்; அகமதாபாத்தில் உள்ள என்.டி. டி.வி. அலுவலகத்தை 20 பேர் கொண்ட இந்து சாம்ராஜ்ய சேனா படையினர் சூறையாடி விட்டனர்.
பாசிஸ்ட்டுகளுக்கு எப்போதும் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், விஞ்ஞானம், சகிப்புத்தன்மை... என்பதெல்லாம் படுவிரோதமானது. அவர்களது அகராதியிலேயே அதுவெல்லாம் கிடையாது. அதுவும் ஓவியர் உசைன் பெயரை பரிசீலிக்கலாமா? இவர் இந்து மதத்தையே அழிக்கப் புறப்பட்ட சாத்தானல்லவா?...


அதுவும் அடுத்த பிரதமர் அத்வானியால் வாஜ்பாய் பெயரை பரிந்துரைக்கப்பட்ட பின்னணியில் உசைனின் பெயரை சேர்த்தால் அவர்களது ரத்தம் உறைந்துப் போகாதா?


பா.ஜ.க.வின் இந்து பாசிச சிந்தனை இந்தியாவின் உயரிய விருதைக் கூட களங்கப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது. தங்களது அரசியலுக்கு ஆதரவாக எதையெல்லாம் பிரச்சனையாக்க முடியுமோ அதையெல்லாம் பிரச்சனையாக்குவதுதான் பாசிச சிந்தனை.


பாரத ரத்னா விருதை எம்.ஜி.ஆருக்கு கூட ஒரு முறை வழங்கப்பட்டுள்ளது. அவரின் வாரிசு... அண்ணா - பெரியாரின் வழிவந்தவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இந்த நரமாமிசக்காரர்களுக்கு விருந்துப் படைத்து கௌரவிப்பதும் - பாராட்டுவதும் - அவர்களோடு அரசியல் உறவுக் கொள்ள துடிப்பதும் பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி.ஆருக்கு செய்யும் தொண்டாகுமா?


ஒருவேளை இந்த விருது வாஜ்பாய்க்கு வழங்கப்படுமானால், ஏற்கனவே அந்த விருதைப் பெற்றவர்கள் அரசுக்கு திருப்பியளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். வாஜ்பாய் ஆட்சியிலிருக்கும் போது, நரேந்திர மோடியின் பாசிச வெறியாட்டத்தால் 3000 சிறுபான்மையினர் நரவேட்டையாடப்பட்டதும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு சூறையாடப்பட்டதையும் கைகட்டி வேடிக்கை பார்த்த சங்பரிவார மனசாட்சி! இத்தகைய செயல்படாத பிரதமராக இருந்த வாஜ்பாய் இந்த விருதுக்கு எந்த வகையில் பொருத்தமானவர்? என்பது அவர்களுக்கே வெளிச்சம்!


நம்மைப் பொருத்தவரை இந்த விருதை களங்கப்படுத்தும் சங்பரிவாரத்தின் சிந்தனையோட்டத்திற்கு எதிராகவும், பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் சங்பரிவார பாசிசத்திற்கும் எதிராகவும் குரல் எழுப்புவதே பாரத ரத்னாவுக்கு செய்யும் தொண்டாகும்.

7 comments:

Anonymous said...

தாக்கியவர்கள் ஆர்.எஸ்.எஸ்/வி.இ.ப அமைப்பைப் சேர்ந்தவர்கள் அல்ல.
ஊடகங்கள் கூட அவ்வாறு கூறவில்லை.ஆனால் உங்களால் பாஜகவை திட்டாமல்
ஒரு நாள் கூட இருக்க முடியாது எனவே பொய்யைப் பரப்பத் ஆரம்பித்துவிட்டேர்கள்.
தஸ்லிமாவை கல்காத்தாவில் இருக்கக கூடாது என்று மிரட்டி வெளியேற்றிய
சிபிம்மும் பாசிஸ்ட் கட்சிதானே. நந்திகிராமில் நீங்கள் செய்யாத அட்டகாசமா.
பாசிச கம்யுனிஸ்ட்கள் முதலில் தஸ்லிமா கொல்காத்தாவில் அமைதியாக
வாழ விட்டடும், பிறகு பாஜகை விமர்சிக்கட்டும்.

Anonymous said...

பாசிஸ்ட்டுகளுக்கு எப்போதும் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், விஞ்ஞானம், சகிப்புத்தன்மை... என்பதெல்லாம் படுவிரோதமானது. அவர்களது அகராதியிலேயே அதுவெல்லாம் கிடையாது.

Yes, see what happened in Russia.
See what is happening in China.Commies are the real fascists
today. Compared to them BJP is nothing.BJP is no match for the killing and disinformation skills
of the commies.

சந்திப்பு said...

அன்பு நன்பரே பா.ஜ.க.வை திட்டவேண்டும் என்பது நான் பிறக்கும்போதே எடுத்த முடிவுவல்ல. நாம் சமூகத்தின் மனிதர்கள். நாம் வாழும் இந்த பூமிப் பந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும். அதுதான் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும். ஆனால். பா.ஜ.க. போன்ற சங்பரிவார - பாசிச இயக்கங்கள் சமூகத்தின் அமைதியை கெடுப்பதையே தொழிலாக கொண்டிருக்கும் போது - அதாவது. மனிதகுலத்திற்கே அவர்கள் சவாலாக விளங்கும்போது அவர்களை எதிர்த்த போராட்டத்தை நடத்தாமல் இருப்பதுதான் கோழைத்தனம். எனவே நான் மனிதகுலத்தை காப்பதற்கான என்னுடைய கடமையை தினந்தோறும் செய்து வருகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

என்.டி. டி.வி. அலுவலகத்தை பா.ஜ.க. தாக்கியதாக கூறவில்லை என்று பா.ஜ.க.வின் வழக்கறிஞராக வாதாட முன்வந்துள்ளீர்கள். சங்பரிவார இயக்கங்கள் எப்போதும் ஒரே பெயரில்தான் இயங்குவார்கள் என்பது என்பது உங்களைப் போன்றவர்களின் மனக்கோட்டையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படியில்லை. பெயரைப் பார்த்தீர்களா? இந்து சாம்ராஜ்ய சேனா - குழந்தைக் கூட சொல்லிவிடும் இதற்கு பின் யார் ஒளிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்? சரி அதை விடுவோம்.

பாரத ரத்னா விருதை வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்ற அரசியல் சதிராடும் சங்பரிவார கருத்து பற்றி எதையும் சொல்லலாமல் ஓடுவதன் மர்மம்தான் புரியவில்லை.

தஸ்லீமாவை நாங்கள் மிரட்டவில்லை. தஸ்லீமா இந்திய அரசின் அனுமதி பெற்று கல்கத்தாவில் தங்கியிருக்கும் பிரஜை. அவருக்கு வேண்டிய அத்துணை பாதுகாப்பையும் இதுவரை மேற்குவங்க அரசு வழங்கி வந்தது. மதவாதிகள் மற்றும் பிற்போக்கு சக்திகள் (சிறுபான்மை - பெரும்பான்மை - நக்சலிசம் - மமதா) ஆகியோரின் புனிதக் கூட்டு மேற்குவங்கத்தை கலவர பூமியாக மாற்றத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். நந்திகிராமில் தோல்வியுற்றவர்கள் - தஸ்லீமாவை அடுத்த கட்டமாக பயன்படுத்தினர். இந்த நிலையில் தஸ்லீமாவை யாரும் வெளியேறச் சொல்லவில்லை. வெளியேற்றவும் இல்லை. மத்திய அரசின் ஏற்பாடுகள் தான் அவரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச் சென்றது. அது சரி? அவரை குஜராத்திற்கு கொண்டுச் சென்றபோது எதற்காக திருப்பியனுப்பினார்கள்? இதைப் பற்றி மவுனம் சாதிப்பது ஏன்?

நந்திகிரமில் அட்டகாசம் செய்தவர்கள் யார்? என்பதை நந்திகிராம மக்கள் நன்கு அறிவார்கள். யாரெல்லாம் கலவரத்தை ஏற்படுத்த நந்தியாக இருந்தார்களோ அவர்களெல்லாம் தற்போது துண்டைக் காணோம் - துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்கள். பாவம் அவர்களை நம்பியிருந்த மக்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள்? ஆனால் மேற்குவங்க அரசு பாரபட்சமின்றி அவர்களையும் சேர்த்தே பாதுகாத்து வருகிறது. இது வரலாறு.

சந்திப்பு said...

ரஷ்யாவிலும் - சீனாவிலும் என்ன நடந்தது. நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சுரண்டல் பிடியிலிருந்து கோடிக்கணக்கான மக்களை பசியிலிருந்தும். பட்டினியிலுந்தும் - நோய் நொடியிலிருந்தும் - விடுவித்து அவர்களுக்க கல்வியளித்து - வேலைகொடுத்து - பெரும்பகுதி உழைக்கும் மக்களை சுரண்டலிலிருந்து விடுவித்தனர். மேலும் உலகையே கபளிகரம் செய்யத் துடித்த பாசிச வெறியன் இட்லரின் அரக்கத்தனத்திற்கு தியாகங்கள் பல புரிந்து அவனுக்கு சமாதி கட்டினர். பாசிசம் மனித குலத்தின் விரோதி என்பதை உலகிற்கு காட்டினர். மேலும் 100 ஆண்டுகாலத்திற்கும் மேலாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு நிகராக மிகச் சில ஆண்டுகளிலேயே அந்த வளர்ச்சியை எட்டினர். இருப்பினும் என்ன? சோசலிச அரசு ஒன்று இருப்பதை ஏகாதிபத்திய வல்லுறுகள் விட்டு வைக்குமா? அவர்களை ஆசை ரஷ்யாவில் நிறைவேறியது. இது தற்காலிகமானதே! உலகம் முழுவதும் கம்யூனிசம் வெல்லும். ஏனெனில் அது உலகம் முழுமையிலும் உள்ள சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களின் நலனுக்காக பாடுபடக் கூடியது. அவர்களை விடுவிக்கப் பிறந்த தத்துவமே கம்யூனிசம். எனவே பாசிசவாதிகளின் கனவுகள் எழுந்தவுடன் கலையக் கூடியது என்பதை மட்டும் மனதில் இருத்தினால் போதும். கண்ணெதிரே நடக்கும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்காத மவுனிகளாலேயே பாசிஸ்ட்டுகள் வலுப்பெறுகிறார்கள். பாரத ரத்னா விருது அரசியலாக்கப்படுவது குறித்து ஏதும் சொல்லாமல்.... புறம் பேசுவது நல்ல அரசியலாகுமா நன்பரே!

Anonymous said...

modiyin nallatchiyil idhellam sagajamdhaane

Anonymous said...

இந்த நிலையில் தஸ்லீமாவை யாரும் வெளியேறச் சொல்லவில்லை. வெளியேற்றவும் இல்லை.

You can repeat this lie thousand times. You cannot hide truth by this. Taslima herself had spoken that she was forcibly sent out from Kolkatta by west bengal govt.
She was sent to Jaipur, not Gujrat.
Modi will give her security and she can be there. To appease muslims the shameless leftists
decided to send her out. You support minority communalism
and talk of secularism.

Anonymous said...

என்.டி. டி.வி. அலுவலகத்தை பா.ஜ.க. தாக்கியதாக கூறவில்லை என்று பா.ஜ.க.வின் வழக்கறிஞராக வாதாட முன்வந்துள்ளீர்கள்

BJP has condemned the attack.
I think you read that rag, theekkathir
only. Theekathir wrote that Taslima
went on her own. You repeat that lie.