January 07, 2008

மதுரையில் தொழில் வள(ரு)மா?


தமிழகத்தின் பழம் பெருமை நகரங்களில் ஒன்றான மதுரை கோவில்களுக்கு புகழ்பெற்றது. முத்தமிழ் நர்த்தனம் ஆடும் மதுரையில் எங்கெங்கு கானினும் அஞ்சாநெஞ்சர்களின் ஆளுமையே காட்சியளிக்கிறது. ஏன் தென் மாவட்டங்கள் அஞ்சாநெஞ்சரால்தான் ஆளுப்படுவதாகக் கூட கூறப்படுகிறது. இருப்பினும் என்ன?

மதுரைவாசிகள் மதுரையைப் பற்றி கூறுவதென்ன? மதுரையை அவர்கள் நக(ர)மாக கருதுவதில்லை. அது ஒரு பெரிய கிராமம் அவ்வளவுத்தான் என்று பம்முகின்றனர்.

20 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட மதுரையில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை. மதுரா கோட்ஸ் இங்கே வெறும் 200க்கும் குறைவான தொழிலாளர்களே வேலைபார்ப்பதாக கூறப்படுகிறது. அப்புறம் என்ன? டி.வி.எஸ். - மின்சாரவாரியம் - போக்குவரத்து போன்று சொல்லிக்கொள்ளும் சில முக்கியமான தொழில்சார்ந்த தொழில்களே உள்ளன.

தமிழகம் சிங்கப்பூராக மாறப்போவதாக கதைக்கும் நம்மூர் ஆசாமிகள் மதுரை பக்கம்போனால்தான் தெரியும் அங்கே மூன்றடுக்கு மாடிகளைக் காண்பதுகூட அரிதாகத்தான் இருக்கிறது. அவ்வளவுத்தான்?

ஒரு பக்கம் விவசாயம் - அதுவும் இப்போ சரியில்லாத நிலைமை? மறுபக்கம் இட்லி கடைகள்தான் மிகப்பெரிய தொழிலாக காட்சியளிக்கிறது. மதுரையை தலைநகராக மாற்றப்போவதாக ஒரு காலத்தில் பரிசீலிக்கப்பட்டது. அந்த மதுரையில் தற்போது உயர்நீதிமன்றத்தின் கிளை வந்ததே இந்த ஆட்சியாளர்களின் பெரிய சாதனைதான் (மக்களின்) என புளங்காகிதம் அடைந்தாலும் - தங்கள் மாவட்டத்து படித்த பிள்ளைகளுக்கு உள்ளுரிலேயே வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தான் மதுரை வாசிகளிடம் மிஞ்சுகிறது.

அஞ்சாநெஞ்சர்கள் கூட மதுரையை ஒரு தொழில் நகரமாக மாற்றுவதில் அஞ்சுவதாக கூறப்படுகிறது. என்னமோ - மதுரை மக்களுக்கு விடிவு வந்தால் சரி!

எப்படியோ அரசியல் களம் பல கண்ட நமது பேரறிஞரின் வாரிசான கலைஞரின் கடைக்கண் பார்வை மதுரைக்கு விழுமா?

4 comments:

thiagu1973 said...

மதுரையை தொழில் நகரமாக்குவது இருக்கட்டும்

ஏராளனமான சிறு தொழில்கள் அழிந்ததற்கு என்ன காரணம்

பஞ்சாலை தொழில் அழிந்தது ஏன்

ஆடை வடிவமைப்பில் பிரசித்தி பெற்ற

கவுண்ட சாதி தொழில் அதிபர்கள் தங்களது தொழிலை தங்கள் ஊருக்குள்ளேயே வைத்து கொண்டு இருக்கிறார்கள் திருப்பூரில்

சிவகாசியின் பட்டாசு தீப்பெட்டி தொழிலும் அப்படித்தான் இருக்கிறது

நிலபிரபுத்துவத்தின் கூறுகளில் இருந்து

இன்னும் இவர்கள் விடுபடவில்லை

முழுக்க முழுக்க முதலாளித்துவம் வரும்போதுதான்

சாதி இன எல்லைகளை கடந்து தொழில் வளரும்

இல்லையெனில் விவசாயம் இந்தசாதிக்கு
வியாபாரம் இந்த சாதிக்கு

இன்ன தொழில் இந்த சாதிதான் செய்யனும் என்ற எண்ணப்போக்கு தொழில் வளர்ச்சிக்கு முட்டுகட்டை

அதை திருப்பூரில் அனேகமாக காணலாம்

சந்திப்பு said...

தியாகு வணக்கம். தங்களது கருத்துக்களில் நான் முழுமையாக உடன்படுகிறேன்.

இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சாய்ந்த பிறகு ஏற்பட்ட சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவம் இங்கிருந்த நிலப்பிரபுத்துவ - ஜாதியடுக்கு சமூகத்தோடு சமரசம் செய்துக் கொண்டுள்ளது. உலகமயம் பேசி வரும் இவ்வேளையில் கூட- சென்னை உட்பட பெருநகரங்களில் உள்ள பெரும் பகுதி மக்கள் கிராமிய வாழ்க்கையையே மேற்கொண்டு வருகின்றனர். முதலாளித்துவம் தன்னை முழுவதுமாக புனரமைத்துக் கொள்ளாமல் - இந்த அடிப்படையை தகர்ப்பது மிகவும் கடினமான ஒரு பணியே. இதனால்தான் நம்முடைய தமிழ் சமூகச் சிந்தனைகூட பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. எனவே முதலாளித்துவம் நிறைவேற்றாத அந்தப் பணியை மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலமே நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம். அதுவரை மதுரை இட்லித் தொழிலை நம்பித்தான் இருங்கக வேண்டியுள்ளது.

saamakodanki said...

அழகிரிகள் இருக்கும் போது மதுரை எப்படி வளரும்? என்று நினைக்க முடிகிறது என்று தான் தெரியவில்லை. மதுரை என்பது எப்போதும் ரவுடிகளின் கையில தான் இருக்கிறது என்பது இந்திய தொழிற்கூட்டமைப்பு, தமிழ்நாடு தொழிற்வர்த்தக சங்கம் போன்ற அமைப்புகளுக்கு தெரியும். இங்கு யார் தொழில் தொடங்க வந்தாலும் வரும் லாபத்தை ரவுடிகளுக்கு கப்பம் கட்டுவதிலும், அவர்களை சமாளிப்பதையும் விட மதுரையை திரும்பி பார்க்காமல் இருந்து விடுவதே நல்லது என்று தயங்கி வருவதில்லை. தற்போது அழகிரியின் பிடியில் இருக்கும் மதுரை மாநகராட்சி கவுன்சிலர்களும், மண்டல தலைவர்களும் கொள்ளிவாய் பிசாசுகளாக ஊரை சுரண்டிக் கொழுத்துக் கொணடிருப்பது தனிக்கதை.
அழகிரியின் அல்லக்கையும், பிரபல தினகரன் கொலைவழக்கு ரவுடியும், பாரம்பரியமாக பிக்பாக்கெட், வழிப்பறி கொள்ளைக்காரனான அட்டாக் பாண்டி இப்போது மதுரை மண்டல் வேளாண் விற்பனைக்குழு தலைவர். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது? மதுரையின் மேயரான தேன்மொழிக்கு எழுத படிக்கவே தெரியாது. மண்டல் தலைவராக இருக்கும் வி.கே குருசாமி முன்னாள் லோடுமேன், ரவுடியும் கூட. மிசாபாண்டியன் என்ற மதுரை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராக உள்ள ரவுடி, பிரபல கட்டிட காணடிராக்டரிடம் அவர்கள் கட்டும் கட்டிடத்திற்கு போர்வெல் போடும் போது ப்க்கத்து வீடுகளை பாதிக்கிறது என்று சொல்லி, மாநகராட்சி அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மிரட்டி அதே காண்டிராக்டரின் அபார்ட்மெண்டி்ல் ஒரு பிளாட்டை தன் பெயருக்கு வாங்கியவர். பிரபல கொலைகாரனான வரிச்சியூர் செல்வத்தின் உற்ற தோழர் தான் இந்த மிசா. பாண்டியன்.
அழகிரியின் ஆசியுடன் இவர்கள் எல்லாம் மதுரைமாநகராட்சியில் இருக்கும் போது மதுரை எப்படி வளரும்?

Anonymous said...

Mr.saamakodanki what ever you have told is 100 percent correct. Unfortunately this will be the situation as long as madurai is under the control of azhagiri.