November 23, 2007

கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு! கோயபல்ஸ் புளுகு?


நந்திகிராம் தொடர்பாக நவம்பர் 22 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘நந்திகிராம் கலவரங்களுக்கு திரிணமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகள், பா.ஜ.க.வினரின் கூட்டு நடவடிக்கைள்தான் காரணம்' என்று குற்றம் சாட்டியிருந்தது.
இதற்கு பதிலளித்த பா.ஜ.க. எம்.பி.யும், எதிர்க் கட்சி துணைத் தலைவருமான சுஸ்மா சுவராஜ், ‘வன்முறை சம்பங்களைக் கண்டிக்காமல் வன்முறைகளுக்கு மாவோயிஸ்ட்டு நக்ஸல்கள்தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சாக்குப் போக்கு சொல்கிறது. ஆனால் அங்கு மாவோயிஸ்ட் இல்லை என்று மாநில உள்துறை செயலர் சொல்லியிருக்கிறார்" என்று மாவோயிஸ்ட்டுகளுக்கு வக்காலத்து வாங்கினார். மாவோயிஸ்ட்டு பயங்கரவாதிகளின் குரலை பாராளுமன்றத்திலேயே ஒலித்தார்.
இதற்கு விரிவாக பதிலளித்த மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. சீத்தாராம் யெச்சூரி, "மாநில உள்துறை செயலர் அவ்வாறு கூறவில்லை என்று கூறியதோடு, நந்திகிராமத்தில் மாவோயிஸ்ட் இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூட சொல்லியிருக்கிறார் அத்துடன், மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்கள், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. நந்திகிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவியுள்ளனர். நந்திகிராமத்தில் இயங்கும் பூமி பாதுகாப்புக் குழுவினருக்கு ஆயுதங்களும், வெடிமருந்துப் பொருட்களும் ஏராளமாக அனுப்பப்பட்டிருக்கின்றன.''
மத்திய உளவு ஸ்தாபனத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்துகின்றது. தேவையானால், மத்திய உள்துறை அமைச்சர் இங்கு அமர்ந்திருக்கிறார், அவரிடம் எவர் வேண்டுமானாலும் தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று குட்டினார்.
சரி, இது குறித்து மாவோயிஸ்ட்டுகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி வரவரராவ் என்ன கூறினார் என்பதை பார்ப்போம்!
நவம்பர் 22 அன்று என்.டி.டி.வி.யில் பேட்டியளித்த மாவோயிஸ்டுகளின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி வரவரராவ், ‘மாவோயிஸ்ட்டுகள் நந்திகிராமத்தில் தீவிரமாக செயல்படுகிறார்கள் அவர்கள் சி.பி.ஐ.(எம்)-யை கடுமையன எதிர்க்கிறார்கள், நான் நந்திகிராமத்திற்கு மே மாதத்திலும், ஜூன் மாதத்திலும் சென்றிருந்தபோது, அங்கிருந்த மக்களும், அறிவாளிகளும் ஆதரவளித்தனர், நந்திகிராம் நிகழ்வுகள் 60களில் நடந்த நக்சல்பாரி நிகழ்வுகளைப் போல் மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவி செய்கிறது. எனவே நந்திகிராமில் மாவோயிஸ்ட்டு தொண்டர்கள் இருக்கிறார்கள்." என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின், பயங்கரவாத செயல்களுக்கு வக்காலத்து வாங்கும் மோடித்துவ பா.ஜ.க.வினர், மார்க்சிஸ்ட்டுகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பயங்கரவாத மாவோயிஸ்ட்டுகளோடு புனிதக் கூட்டுச் சேர்ந்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளும் - பெரும்பான்மை - சிறுபான்மை மதவெறியர்களோடு அணிவகுத்துள்ளனர்.
மொத்தத்தில் சுஸ்மா சுவராஜின் கெட்டிக்காரத்தனமான புளுகு ஒரே நாளில் அம்பலப்பட்டு விட்டது!
- நடராஜன்

4 comments:

Anonymous said...

Your LF government is sending Taslima out of West Bengal.Are you not ashamed of accepting the demands of communal elements. The statement by Biman Bose only shows that CPI(M) is a communalist part that supports communalism by muslims.Shame on you and your party.

சந்திப்பு said...

அனானி நன்பரே! வணக்கம். இங்கே விவாதிக்கப்படும் பொருள் நந்திகிராம் குறித்து.இருப்பினும் தங்களது கேள்வி நியாயமானதே. மேற்குவங்கத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை தாங்கள் நிச்சயம் அறிவீர்கள் என்று நம்புகிறேன். மதவாதிகள் - நக்சலைட்டுகள் - மத அடிப்படைவாதிகள் என அனைவரும் சந்தர்ப்பவாத கூட்டை அமைத்துள்ளனர். எதற்காக ஒரே நோக்கம் நந்திகிராம் மக்களுக்கு ஆதரவாக அல்ல. மேற்குவங்க 30 ஆண்டு அரசை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக. அதனால்தான் நந்திகிராம் பிரச்சனைகள் வெடித்துச்ச சுழலில் மதவாதிகள் இசுலாமிய மத அடிப்பைடவாதிகள் நந்திகிராம் பிரச்சனையையும் - தஸ்லீமாக விவகாரத்தை ஒன்றாக இணைத்து ஊர்வலம் நடத்தினர் கொல்கட்டாவில். மாநில அரசு அதனை அனுமதிததது ஜனநாயகபுர்வமாக.
ஆனால் என்ன நடந்தது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்கள் கட்டுப்பாட்டை இழந்து கொல்கட்டா நகரத்தையே தங்கள் கையில் எடுத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். மாநில போலீசார் மீது ஆத்திரமூட்டும் வகையில் கற்கள் - கத்திகள் - பெட்ரோல் குண்டுகள் போன்றவற்றை கொண்டு வீசினர். மேலும் அங்கிருந்து பேருந்துகள் - கட்சி அலுவலகங்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினர். மொத்தத்தில் வன்முறையில் உச்சம் அவர்கள் கையில் சென்றது. எதற்காக.

நந்திகிராம் அமைதியாகி விட்டது. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தஸ்லீமா பிரச்சனையை கொண்டு இத்தகைய வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இதில் மத அடிப்படைவாதிகள் மட்டுமல்ல. மாவோயிஸ்ட்டுகளும் இந்த ஊர்வலத்தில் புகுந்து சட்டம் - ஒழுங்கை அப்பட்டமாக கையில் எடுத்துக் கொண்டனர். மொத்தத்தில் மேற்குவங்க அரசிற்கு எதிராக சர்வதேச அளவில் சதி திட்டம் தீட்டப்படுவதைதான் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்த சதி திட்டத்தை கண்டிப்பதற்கு மாறாக. நியாயம் பேசுகிறீர்கள்!

நாங்கள் கேட்கிறோம். தஸ்லீமாவை இவ்வளவு நாள் பாதுகாத்தது யார்? மேற்கு வங்க அரசு தானே!. இந்திய ஒரு மதச்சார்பற்ற நாடு. தஸ்லீமாவை இந்தியாவிற்குள் அனுமதித்தது மேற்கு வங்க அரசு அல்ல. மத்திய அரசுதான். அவரை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இல்லையா? உங்களது பார்வை ஏன் அவ்வாறு செல்லவில்லை. மேற்குவங்கத்தை தஸ்லீமா - வை பயன்படுத்தி கலவர பூமியாக மாற்றிட துடித்துக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு இடம் அளிக்கச் சொல்கிறீர்கள். இதுதான் உங்களது வாதம் அல்லவா? தயவு செய்து உங்கள் பார்வையை இன்னும் கொஞ்சம் நடுநிலைமையோடு தீட்டுங்கள்... வாழ்த்துக்கள்

Anonymous said...

பாச மலரே.. அன்பில் விளைந்த வாச மலரே..

நெஞ்ச நக்கி பிட்டீங்களே பெருமாளு!

இரா.சிந்தன் said...

நந்திகிராமம் குஜராத உதந் இநைது பேசப் படுவதை கவணித்தீரா?