July 24, 2007

இந்திய புரட்சியும் முப்பெரும் எதிரிகளும்!

ஸ்டாலின் விடுத்த அழைப்பும் அவரது கேள்வியும் மிக முக்கியமானது என்பதால் இதனை உடனடியாக பதிவிட்டுள்ளேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அவரது ஒரே ஒரு கேள்வியும் எனது பதிலும்!

//மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள், நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்?//


மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள்?


இனியும் நடப்பில் இருக்கும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அமைப்பில் தங்களுடைய வாழ்க்கையை தொடர முடியாது என்ற நிலை வரும்போது மக்கள் புரட்சிக்கு தயாராவார்கள்.


நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா? அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா? நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்?


நீங்கள் என்ற பொருளை தாங்கள் எந்த அர்த்த்தில் குறித்துள்ளீர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் நீங்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற பொருளில் நான் புரிந்து கொள்கிறேன். அதையே இங்கு உபயோகப்படுத்துகிறேன்.
சமூகத்தில் பல்வேறு முரண்பட்ட கூறுகள் மோதிக் கொண்டுள்ளன. குறிப்பாக தொழிலாளிக்கும் - முதலாளிக்குமான முரண்பாடு. விவசாய தொழிலாளிக்கும் - நிலப்பிரபுவுக்கும் உள்ள முரண்பாடு. சிறு முதலாளிகளுக்கும் - பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு. பெரும் முதலாளிக்கும் - அந்நிய முதலாளிக்கும் உள்ள முரண்பாடு. இப்படி இன்னும் பல்வேறு முரண்பாடுகள் சமூகத்தில் நிலவுகிறது. இந்த முரண்பாடுகளில் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக இருந்தாலும் - அடித்தட்டு மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் - நடுத்தர மற்றும் சிறு - குறு முதலாளிக்கும் இடையில் முரண்பாடுகளுக்கு முதன்மையான எதிரியாக இருப்பது. அதாவது. அவர்களது தலைவிதியை தீர்மானிக்கும் பொது எதிரியாக இருப்பது அந்நிய ஏகபோக முதலாளிகளும். இந்திய பெரும் முதலாளிகளும் - நிலப்பிரபுக்களும் இந்த எதிரி வர்க்கங்களின் ஏஜண்டுகளாக - காவல் புரியும் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அல்லது இன்னபிற முதலாளித்துவ கட்சிகள் ஏவல் நாய்களாக செயல்பட்டு இறுதியில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். இத்தகைய முப்பெரும் பொது எதிரியை வீழ்த்துவதற்கு தொழிலாளிகள் - விவசாயிகள் - நடுத்தர வர்க்கம் - சிறு முதலாளிகள் என பலதரப்பட்ட வர்க்கங்களின் கூட்டு செயல்பாடுகளாலும். போராட்டங்களாலும் ஒற்றுமையாலுமே இவை சாதிக்கப்படும்.

அந்த அடிப்படையில் மக்களின் பொது எதிரியாக இருக்கும் அந்த முப்பெரும் சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதி கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் இத்தகைய எதிரிகளை முறியடிப்பதற்கு விரிந்த அளவிலான நட்பு சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி அந்த முப்பெரும் சக்திகளை இறுதியில் உறுதியாக வீழ்த்தும்.இத்தகைய ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது ஜி... பூம்பா என்றால் ஒரே நாளில் உருவாகி விடாது. அது நடப்பில் உள்ள காலத்திலும் அதற்கான வேலைகளை செய்ய வேண்டும். அதனை சி.பி.ஐ.(எம்) செய்து வருகிறது.

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளிகளை தொழிற்சங்கத்திலும். விவசாயிகள் - விவசாய தொழிலாளர்களை அந்தந்த சங்கத்திலும். பெண்கள்.வாலிபர்கள். மாணவர்கள். நடுத்தர வர்க்கம். அறிவு ஜிவிகள் என சமூகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையின் அடிப்படையில் கோடிக்கணக்கில் வெகுஜன இயக்கத்தில் திரட்டிட வேண்டும். இவ்வாறு திரளும் மக்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி. அதிலிருந்து வரும் சக்திகளை தொழிலாளி வர்க்கத்தின; தளகர்த்தர்களாக போராட்ட தளபதிககளாக உயர்த்திட வேண்டும். இவ்வாறு ஒரு வெகுஜன பிரளயத்தையே ஏற்படுத்திட வேண்டும். அத்தோடு நட்பு சக்திகளான இடதுசாரிகளோடும். இதர ஜனநாயக சக்திகளோடும் இணைந்து இயக்கம் காண்பதும் அவர்களுக்க பின்னால் உள்ள மக்களையும் புரட்சிக்கு ஆதரவாக திரட்டுவதும் அடிப்படையானது. அந்த அடிப்படையில் சி.பி.ஐ.(எம்) தன்னுடைய பாதையில் உறுதியாக முன்னேறி வருகிறது.

முப்பெரும் எதிரி சக்திகளுக்கு வேட்டு வைத்து மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்தவும் உறுதி கொண்டுள்ளது.


மேலும் இந்திய ஆளும் வர்க்கம் தன்னுடைய அதிகாரத்தை தானாக விட்டுக் கொடுக்காது. எனவே தன்னுடைய அதிகாரத்தை - எமர்ஜன்சியைப் போர் சர்வாதிகாரமாக எடுத்துக் கொள்ள அனைத்து விதமான ஜனநாயக அடக்குமுறைகளையும் அது மேற்கொள்ளும். அத்தகைய அடக்குமுறைகளை ஒடுக்கி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அதிகாரத்தை பெறுவதற்கும் அதனை முறியடிப்பதற்கும் அது எத்தகைய ஆயுதத்தை எடுக்கிறதோ அதே ஆயுதத்தை தொழிலாளி வர்க்கமும் ஏந்தும்.

இவைகள் எல்லாம் ஹாரி பாட்டர் கதை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. உலக புரட்சிகளின் அனுபவம் மற்றும் இந்திய நிலைமைக்கு ஏற்ப இந்திய விடிவிலான மக்கள் ஜனநாயக புரட்சியை தெழிலாளி வர்க்கம் எதிர் காலத்தில் நடத்தும்.

இந்திய புரட்சிக்கான சி.பி.ஐ.(எம்) திட்டம் - ஆங்கிலத்தில்

14 comments:

லக்கிலுக் said...

தோழரே!

இது ஒன்று விளையாட்டு மூலமாக உங்களுக்கு வந்த கேள்வி. இந்த விளையாட்டின் விதி என்னவெனில் நீங்கள் ஒரு பதிவருக்கு கேள்வி எதையாவது பாஸ் செய்யவேண்டும்.

நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு உங்கள் பதிலோடு பதிவை முடித்து விட்டீர்கள் போலிருக்கிறது. யாருக்காவது ஏதாவது கேள்வியை பாஸ் செய்யுங்கள்.

Anonymous said...

அடுத்த பதிவர் யாருக்காவது கேள்வியை பாஸ் செய்யுங்கள். அப்போது தான் ஆட்டம் சுவரஸ்யமாகப்போகும்.

குரல்கள் said...

அன்புள்ள சந்திப்பு,

நீங்கள் முப்பெரும் எதிரிகளாக குறிப்பிட்டுள்ளவற்றில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. அவ்வாறிருக்க, தங்களது கட்சி காங்கிரஸுக்கு ஆதரவாகத் தானே நடைமுறையில் இருக்கிறது? மதவாத சக்தியான பா.ஜ.கவுக்கு எதிராக நாங்கள் காங்கிரஸுடன் சேர்ந்துள்ளோம் என்று சொல்வீர்களானால்.. காங்கிரஸ் இந்துத்துவ கட்சியில்லையா? நீங்கள் கூட்டனி வைத்திருந்த அ.தி.மு.க இந்துத்துவ கட்சியில்லையா?( ஜெயா மாமியின் செயல்பாடுகளை வைத்துக் கேட்கிறேன்)..

நீங்கள் சொல்லியிருக்கும் சிறு முதலாளி, பெரு முதலாளி, அந்நிய முதலாளி என்னும் வகைப் படுத்தலுக்கு சில உதாரணங்கள் தர முடியுமா?

நீங்கள் எதிரிகளாகக் குறிப்பிட்டுள்ள அந்நிய முதலாளிகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் சாதகமாய்த் தானே உங்கள் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில் செயல்படுகிறீர்கள்? ( கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டிய மலேசிய சலீம் குழுமம் / மற்றும் டாடா ).. நீங்கள் எதிரிகளாய் அறிவித்துக் கொண்டுள்ளவர்களோடு உறவாடுவது / சமரசமாய்ப் போவது என்னவகை போர்தந்திரம்?


//முப்பெரும் எதிரி சக்திகளுக்கு வேட்டு வைத்து மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்தவும் உறுதி கொண்டுள்ளது//

இதில் நீங்கள் குறிப்பிடும் "மக்கள் ஜனநாயகப் புரட்சி" என்பது என்ன? இது சோசலிசப் புரட்சியா? முதலாளித்துவப் புரட்சியா? ( ஜனநாயகப் புரட்சி என்பது மேற்குலகில் பரவலாக முதலாளித்துவ சக்திகளால் நடத்தப்பட்டது என்பதன் அடிப்படையில் கேட்கிறேன்)
இந்தப் புரட்சியின் அம்சம் என்ன? இதன் பின் அமையும் சமூகத்தின் பொருளாதார அம்சம் என்னவாய் இருக்கும்?


தங்களது விளக்கங்கள் தேவை!

அன்புடன்
குரல்கள்

சந்திப்பு said...

லக்கி உண்மைதான்... கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். மிக அவசர அவசரமாக இதனை வெளியிட வேண்டிய சுழலில் நான் இருந்தேன். இல்லையென்றால் 24 மணி நேரத்திற்குள் பிரச்சினை திசை திரும்பி விடும் என்பதால்.... ஓகே.

என்னுடைய கேள்வியை தமிழினி முத்துவுக்கே சமர்ப்பிக்கிறேன்.

பெரியாரின் வழிவரும் திராவிட இயக்கம் அல்லது திராவிட இயக்கத்தவர்கள் செல்ல வேண்டிய இலக்கு எது? சுயமரியாதை - சமர்தமர்ம இயக்கம் கண்ட பெரியார் - பெரியாரின் கொள்கைகளை பொதுவுடைமை நோக்கி கொண்டுச் செல்ல தடையாக இருப்பது எது?

குரல்கள் said...

ஐயா,

புரட்சியின் மூலம் நடைமுறையில் இருக்கும் சமூக அமைப்பும், அரசும் வீசியெறியப்பட்டு விடும். எனில், நீங்கள் புரட்சிக்கான தயாரிப்பில் இருந்தால் நடப்பில் இருக்கும் அரசு வடிவத்துக்கு அந்நடவடிக்கை ஏற்புடையதாக இருக்காது.. ஆனால் உங்கள் கட்சி தனது புரட்சிக்கான திட்டத்தை இனையத்தில் பகிரங்கமாக வைத்துள்ளதே எப்படி?

லெனின் புரட்சிக்கு முன் ஜார் அரசாங்கத்துக்கும் அதன் பின் இருந்த மென்ஷ்விக் அரசுக்கும் வக்கீல் நோட்டிஸ் அனுப்பி, நான் இப்படித்தான் அடிப்பேன் என்றூ சொல்லி விட்டா செய்தார்?

ஆச்சர்யமாக இருக்கிறது ஐயா!

Anonymous said...

அதாவது ஆட்டையில் நான் அவனும் சேர்ந்து மூனாவதா இருக்க்கிறவன முடிச்சுடுவோம் ,

பிறகு இரண்டாவது இருக்கிற இவனையும் முடிச்சுட்டா நான் மட்டுமே இருப்பேன் .

இதான் விதி

இந்த ஆட்டையில என்ன பெரிய சவுகரியம்னா ,

ஆட்டை எப்போ முடியும்னு எவனுக்கும் தெரியாது ,
சும்மாகாச்சும் நண்பன் என காங்கிரஸை சொல்லி அவனோடு சேர்ந்து கொள்ளை அடிச்சுக்கலாம்

காங்கிரஸ்கிட்ட நண்பன்னும் தோழன்கிட்ட காங்கிரஸ் இரண்டாவது எதிரின்னும் ஒரே நேரத்தில் இரட்டை கேம் ஆடனும் ...........

சரியா சந்திப்பு ..

ஒன்னு தெரியுமா இதே கேமை காங்கிரசும் ஆடுதாம் முதல்ல பஜகவை போட்டு தள்ளிட்டு பிறகு கம்யூனிஸ்டுகளை போட்டுதாக்கும் .
ஐடியா உள்ளதாம் .

அதாவது 68 நேரு போட்டு தாக்குனாரே
"அரசும் புரட்சியும் புத்தகம்"வச்சு இருப்பவனெல்லாம் நக்சல்னு
அம்மாதிரி .

சரி வீட்டுல அம்மாதிரி புக்கெல்லாம் இல்லையே

Anonymous said...

//போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.

சந்திப்பு said...

ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் --கம்யூனிசம் என்னும் பூதம். என்று தொடங்கும் கம்யூனி°ட் கட்சி அறிக்கையில் காரல் மார்க்° - பிரெடரிக் ஏங்கெல்° கம்யூனி°ட்டுகளின் நோக்கத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள்.



"பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது."


அதாவது, கம்யூனி°ட்டுகள் தங்களது நோக்கத்தை எப்போதும் ஒளிவு, மறைவாக வைத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவர்கள் சமூகத்தின் விடுதலைக்காக நிற்பவர்கள். ஏதோ சில தனிநபர்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்கள் அல்ல.



//ஆனால் உங்கள் கட்சி தனது புரட்சிக்கான திட்டத்தை இனையத்தில் பகிரங்கமாக வைத்துள்ளதே எப்படி?//



என்று குரல்கள் ஆச்சரியப்படுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.



குரல்கள் இங்கே எழுப்பியிருக்கிற அனைத்து விசயங்களும் விவாதத்துக்கு உரியவையே. அதே சமயம் இது யாருடைய குரல், இந்த குரலின் பின் எந்த வர்க்கத்தின் விசுவாசம் ஒலிக்கிறது? வெளிப்படையான - அடிப்படையான விவாதத்திற்கு நான் எப்பவுமே தயார்! குரல்கள் முதல் அசுரன் வரை தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் திட்டத்தை வெளிப்படையாக முன்வைத்து விவாதிக்க தயாராக இருந்தால்!

மாறாக, இவர்களது தவறான நிர்ணயிப்புகளின் அடிப்படையே அனைத்தையும் குழப்புவது, அதன் மூலம் மீனைப் பிடிப்பது என்பதுதான். முதல் கோளாறு முற்றும் கோளாறு என்பார்களே அது இவர்களுக்கு உள்ளே ஆழமாக பொதிந்துள்ளது. இவர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் ஆளும் வர்க்கம் என்பது தரகு முதலாளித்துவம்... அதாவது அந்நிய முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் முதுகெலும்பி இல்லாத ஒரு பிராணி... இன்னும் ஒருபடி மேலேச் சென்று அதன் அர்த்தத்தை தேட முயன்றால் இந்தியா இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்று பொருள் படும். இவர்கள் மறுகாலனி ஆதிக்கம் என்று கூச்சல் போடுவது ரொம்ப நகைப்புக்குரியதாக போய் விடுகிறது.

எனவே, இது குறித்தெல்லாம் விவாதிப்பதற்கு முன் யாராக இருந்தாலும் தன்னுடைய அடையாளத்தை - நிழலையல்ல நிஜத்தை இங்கே ஒலித்தால் இந்த விவாதம் சிறப்புக்குரியதாக மாறும்...



ஐயா குரல்கள், தாங்கள் குறிப்பிட்டுள்ள போல்°விக் - மென்°விக் ஆகிய இரு கட்சிகளின் பிரிவினை கூட கட்சி திட்டம் - மற்றும் கட்சி அமைப்பு விதி போன்ற அடிப்படையான விஷயங்களை கொண்டே பிரிந்தது. மேலும் ரஷ்ய சோஷல் டெமாக்ரடிக் கட்சி - அதாவது லெனின் தலைமை தாங்கிய கட்சி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படையாக செயல்பட்டது? தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெறும் வரையில் பாராளுமன்றத்திலும் பங்கெடுத்தது? மேலும் மெ°விக்குகள் - டிராட்க்°கி°ட்டுகள் உட்பட பல அமைப்புகளோடு கூட்டாகவும் செயல்பட்டது. உங்களது விஷயம் அப்படியா? குழப்படி வித்தையைத் தவிர உருப்படியாக நீங்கள் ஏதாவது செய்வதுண்டா? உங்களுக்கும் எதிரியும் இல்லை நன்பனும் இல்லை. நீங்கள் ஒரு புரட்சிகர குழப்பல்வாதி. உங்களிடம் வாய்ச் சவடால்கள் நிறைய இருக்கும். மேலும் மக்களே இல்லாமல் புரட்சி செய்ய வேண்டும் என்று ஓயாது கத்திக் கொண்டே இருப்பது உங்களது உயர்ந்த தத்துவ மரபு...

Anonymous said...

தோழர் சந்திப்பு மற்றும் ம க இ க குஞ்சுகளுக்கு:

தோழர்களே, அமெரிக்காவில், என்று புரட்சி வெடிக்கும் என்று கணித்து சொல்லுங்களேன்.மேலும் மறுகாலனி ஆதிக்க மோகினி ஆட்டத்தில் எந்த அமெரிக்க வர்க்கத்தினர் மயங்கி பாடு படுகின்றனர் என்று அறிய ஆவலாக உள்ளது.

குரல்கள் said...

அன்புள்ள சந்திப்பு, வசதியாக என்னுடைய முதல் பின்னூட்டத்தின் கேள்வியை மறந்து விட்டீர்கள்.

இரண்டாவது பின்னூட்டத்திற்கு நீங்களாக ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டு பதில் சொல்லி இருக்கிறீர்கள்..

இரண்டாம் பின்னூட்டத்தின் அடிநாதமாக நான் கேட்டதை மறந்து விட்டீர்கள்

சரி விடுங்கள்... நீங்க என்னா சொல்ல வர்ரீங்க? - "சி.பி.எம் என்னும் புரட்சிகர(!?) கட்சி, புரட்சிக்கான தனது முழுமையான வழிமுறையை இந்தளவு வெளிப்படையாக வைத்திருப்பார்கள்.. அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்காமல் இந்த அரசும் அதன் ஒடுக்குமுறைக் கருவிகளும் லாலி பாப் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள்" என்கிறீர்கள்..

ஓக்கே.. நான் கேட்ட முந்தைய கேள்விகளுக்கும் இதே பாணியில் ஏதாவது பதில் இருந்தால் சொல்லுங்க, நாங்கள் கேட்டு பலனடைந்து கொள்கிறோம்.

//மக்களே இல்லாமல் புரட்சி செய்ய வேண்டும் என்று ஓயாது கத்திக் கொண்டே இருப்பது உங்களது உயர்ந்த தத்துவ மரபு...//

இப்படி உண்மையற்ற வாதத்தை முன் வைத்துக் கொண்டிருப்பது உங்கள் தத்துவ மரபா?

இந்தியாவை ஆள்வது தரகு கும்பல் இல்லை என்கிறீர்கள். இந்திய சுதந்திரம் முழுமையானது என்கிறீர்கள்.. இது இரண்டும் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

சந்திப்பு said...

குரல்கள் பா.ஜ.க.வும் - காங்கிரசும் - அ.தி.மு.க.வும் ஒரே மாதிரியான மதஅடிப்படையில் இயங்கும் மதவாத கட்சிகள் அல்ல. தாங்கள் இவ்வாறு பா.ஜ.க.வோடு ஒரே மாதிரி அர்த்தப்படுத்துவது தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும். இவைகள் சங்பரிவார பாசிசத்திற்கே உதவி செய்யும்.

காங்கிரசு மற்றும் அதிமுக இரண்டும் மதச்சார்பற்ற கட்சிகளே. அதே சமயம் தங்களது நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்ள சிறுபான்மை - பெரும்பான்மை மத அடிப்படைவாதிகளோடு சமசரசம் செய்துக் கொள்ளக்கூடிய சக்திகளே. இதன் தொண்டர்கள் மதவாத சிந்தனை கொண்ட தொண்டர்கள் அல்ல. இத்தகைய தொண்டர்களை விழிப்படையச் செய்வதன் மூலம் இவர்களை சங்பரிவார பாசிசத்திற்கு எதிராக களம் காணச் செய்யலாம். உங்களது தவறான நிர்ணயிப்பு அந்த அடிமட்டத் தொண்டர்களை கேவலப்படுத்துவதோடு. பா.ஜ.க.வின் பாசிசத்தை மிகக் கீழிக்கிற பார்க்கிற தொனிதான் தெரிகிறது. நாங்கள் பா.ஜ.க.வை இந்துமத அடிப்படைவாத பாசிசமாக - பெரு:ம அபாயமாக கருதுவதால்தான் அதனை முறியடிப்பதற்கு அதிமுக - காங்கிரசு - திமுக உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளையும் பயன்படுத்துகிறோம். உங்களுக்கு வாய் வலிக்க கத்துவதும். இதுபோன்ற குழப்பமான முடிவுகளை எடுத்து மற்றவர்களை குழப்புவதே புரட்சிகர வேலையாக மாறிப் போய்விட்டது. இதனால்தான் தங்களது அமைப்பை மக்கள் யுத்தக் குழு அமெரிக்காவின் ஏஜன்சியாக குற்றம் சாட்டியுள்ளது.


கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அதுபோலத்தான் இந்த பெரு முதலாளிகள் கதையும். உங்களைப் பொறுத்தவரை அவர்கள் தரகர்கள். அதவாது அந்நிய சக்திகளால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகள். அவர்கள் நினைத்தால் இவர்களை எப்ப வேண்டும் என்றாலும் தூக்கிப் போட்டு விடலாம் என்று மிக குறைத்து மதிப்புடும் வகையறாக்களைச் சார்ந்தவர்கள். இந்திய பெரு முதலாளிகளான டாடா. பிர்லா. அம்பானி. அசிம் பிரேம்ஜி... வகையறாக்கள் உலக முதலாளிகளோடு போட்டிப் போடும் அளவிற்கும் வேற்று நாடுகளில் முதலீடுகளை செய்யும் அளவிற்கும் வளர்ந்து உலக முதலாளிகளின் பட்டியலில் இடம் பெற்று விட்டதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.

மேற்கு வங்கத்தில் நாங்கள் சோசலிச ஆட்சி நடத்த வில்லை நன்பரே. இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட முதலாளித்துவ வகையிலான அரசை நாங்கள் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பிற்குள் மக்களுக்கு அதிக பட்சமாக எதைச் செய்ய முடியுமோ அதனைச் செய்கிறோம். இந்தியாவிலேயே நிலச் சீர்திருத்தத்தில் முதலிடம் வகிப்பது மேற்கு வங்கம். இன்னும் பல சாதனைகள் உள்ளது. உழைப்பாளி மக்களுக்கு உடனடி நிவாரணங்களும். அவர்களது வாழ்க்கைக்கான தேவைகளுக்கான போராட்டத்தை ஒருங்கே நடத்தி வருகிறோம். உங்கள் கொள்கையால் தமிழக - இந்திய மக்கள் ஏதாவது பயன் பெற்றிருக்கிறார்களா? சில வம்பளப்புகளைத் தவிர.

டாடா முதல் சலிம் வரை நாங்கள் அவர்களை பயன்படுத்துகிறோம். அந்த மாநில மக்களின் ஆட்சியாளர்கள் என்ற முறையில் அந்த மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இத்தகைய முடிவுகள் மிக முக்கியமானது. (நந்தி கிராம் படுகொலைக்கு காரணம் நக்சலிசம் - மமதாயிசம் நாங்கள் அல்ல)

முதலில் நீங்கள் குறிப்பிடும் புதிய ஜனநாயக புரட்சிக்கான அர்த்தத்தை தேடிப் பிடியுங்கள். அது என்ன சோசலிச புரட்சியா? கம்யூனிச புரட்சியா?

சந்திப்பு said...

பூச்சாண்டி இந்த நக்சல் பூச்சாண்டிதான் கம்யூனிசத்தை தற்போதைக்கு சீர்குலைத்து வருகிறது. அதனுடைய தனிநபர் பயங்கரவாத செயல்கள் பின்லேடனிசத்தோடு மக்கள் ஒப்பிட்டு பார்க்கும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. தற்போது தேனி வேட்டையும் இந்த அடிப்படையில்தான் நடக்குது. மொத்தத்துல மக்களுக்கு கம்யூனிசம் என்ற வார்த்தை கூட பதியக்கூடாதுன்னு திட்டமிட்டு செயல்படறதுக்குன்னு ஒரு கம்யூனிச ஏஜன்சி கும்பலே செயல்படுது. பூச்சாண்டி காட்டி குழந்தைகளை பயம் முறுத்தாதப்பா.

சந்திப்பு said...

அமெரிக்காவில், என்று புரட்சி வெடிக்கும் என்று கணித்து சொல்லுங்களேன்.

புரட்சி எப்ப வரும் என்று ஆரூடம் பார்ப்பதா? குட் ஜோக்....

குரல்கள் said...

அன்புள்ள சந்திப்பு,

பதில்களுக்கு நன்றி!

//அதிமுக - காங்கிரசு - திமுக உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளையும் பயன்படுத்துகிறோம்.//

இதில் இரண்டு Factual errors உள்ளது. ஒன்று - நீங்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்வது. இரண்டு - காங்கிரஸையும், அ.தி.மு.கவையும், திமுகவையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது. முதலில் தி.மு.க ஒரு முதலாளித்துவ கட்சியாக இருந்த அமைப்பு. அதன் தலைமை இன்றைக்கு தரகு முதலாளிகளாக திரிந்து போயிருந்தாலும், அதன் தொண்டர்களில் பெரும்பான்மையாக இன்னும் ஜனநாயத்தன்மையுடன் இருக்கிறார்கள். வோட்டரசியலில் இருக்கும் திராவிட இயக்கங்களில் ஓரளவு உருப்படியான தொண்டர்களைக் கொண்ட கட்சியும் ஆகும்.

மறுபுறம் காங்கிரஸ் ஒரு நிலப்பிரபுத்துவ / தரகுவர்க்கத்தின் கட்சியாகவே ஆரம்பித்தது. அடிப்படையாகவே அது நிலப்பிரபுத்துவ கருத்தியல்களுக்கு ஆதரவான கட்சிதான். இன்றக்கு பா.ஜ.காவின் உயிராதாரமான வோட்டு பொறுக்கும் வழிமுறையான ராமன் கோயில் பிரச்சினையில் கூட கோயிலுக்கு ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டினார் என்பதை மறந்து விடாதீர்கள். காந்தியின் ராம ராஜ்ஜியத்திற்கும் பா.ஜ.கவின் ராம ராஜ்ஜியத்திற்கும் அடையும் வழிமுறை தவிர உள்ள ஒரே ஒரு வித்தியாசம் கூட உங்களால் சொல்ல முடியுமா?

அடுத்து அ.தி.மு.க ஒரு ஜனநாயக இயக்கம் என்று சொல்லி இருக்கிறீர்கள். முதலில் நீங்கள் அரசியலை பகுத்தாயும் முறையில் எங்கோ கோளாறு இருக்கிறது :) . ஜெயா ஆட்சியில் இந்துத்துவத்துக்கு ஆதரவாக நடைபெற்ற சம்பவங்களை மறந்து விட்டீர்களா? ஆடு கோழி பலி தடை சட்டத்தில் இருந்து, கரசேவைக்கு ஆள் அனுப்பியது.. பா.ஜ.கவே தொடத்தயங்கிய மதமாற்ற தடை சட்டம், குஜராத் நடவேட்டை நாயகன் மோடியை அவர்கள் கட்சி வாஜ்பாயே ஆதரக்கத்தயங்கிய வேளையில் ஆதரித்தது.. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பா.ஜ.க வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட பாசிஸ்டுகல் என்றால் அ.தி.மு.க "திராவிட" என்னும் பெயர் தாங்கி வலம் வரும் இந்து பாசிஸ்ட் கட்சி.

//இந்திய பெரு முதலாளிகளான டாடா. பிர்லா. அம்பானி. அசிம் பிரேம்ஜி... வகையறாக்கள் உலக முதலாளிகளோடு போட்டிப் போடும் அளவிற்கும் வேற்று நாடுகளில் முதலீடுகளை செய்யும் அளவிற்கும் வளர்ந்து உலக முதலாளிகளின் பட்டியலில் இடம் பெற்று விட்டதெல்லாம் கண்ணுக்கு தெரியாது//

ஐயா... இவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் உலக நாடுகளான ப்ரேசில், மெக்சிகோ மற்றும் தென்னமெரிக்க நாடுகள் ஆப்ரிக்க நாடுகள் ஆகியவற்றில் செய்துள்ள முதலீடுகளைக் குறிப்பிட்டு இதைச் சொல்லி இருந்தீர்களானால் அது தவறு. முதலாளித்துவ மூலதனம் உள்நாட்டுச் சந்தையை முழுதும் கைப்பற்றி விட்டு அயல் தேச சந்தைகளுக்கு விரிவடையும் என்று படித்துள்ளேன். நீங்கள் பெரு முதலாளிகள் என்று வகைப்படுத்தியுள்ள முதலாளிகள் எவரேனும் இந்நாட்டு சந்தையில் முழு வீச்சுடன் ஆதிக்கம் செலுத்துகிறார்களா? இங்கே அவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் போட்டி உள்ளது. எனவே அவர்கள் நுழைய முடியாத இடங்களில் இவர்கள் நுழைகிறார்கள். அவ்வளவு தான். இவர்கள் எங்காவது முதல் உலக நாடுகளில் வீச்சாக முதலீடு செய்திருக்கிறார்களா? ஒன்றிரண்டு கம்பெனிகளை வாங்குவதை வைத்துக் கொண்டு பன்னாட்டு முதலாளிகளையும் இவர்களையும் ஒப்பிட்டு விடாதீர்கள். டி.சி.எஸும் ஐ.பிஎமும் எந்தக்காலத்திலும் சரிநிகரான நிறுவனங்களாக முடியாது. மேலும் இது போன்ற நிறுவனங்களின் இயங்கியலே முதல் உலக நாடுகளுக்கு சேவை செய்வதாகவே இருக்கிறது. அவனுக்கு அங்கே மனித உழைப்பின் விலை அதிகம் இருப்பதால் குறைந்த விலையில் இங்கே இருக்கும் உழைப்பை சுரண்டுகிறான். அதற்கு துனைபோவது தான் இந்தத் தரகு முதலாளிகளின் வளர்ச்சிக்கு காரணம். இந்த வளர்ச்சி தன்முனைப்பனதல்ல என்பதைக் கவனியுங்கள்.

//மேற்கு வங்கத்தில் நாங்கள் சோசலிச ஆட்சி நடத்த வில்லை நன்பரே//

:)

//இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட முதலாளித்துவ வகையிலான அரசை நாங்கள் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பிற்குள் மக்களுக்கு அதிக பட்சமாக எதைச் செய்ய முடியுமோ அதனைச் செய்கிறோம். இந்தியாவிலேயே நிலச் சீர்திருத்தத்தில் முதலிடம் வகிப்பது மேற்கு வங்கம்//

நீங்கள் எதையும் ஊதிப் பருக்க வைப்பதில் வல்லவர் என்பதை நிரூபிக்கிறீர்கள். அங்கே நாளுக்கு ஒரு பட்டினிச் சாவு என்னும் அளவில் கடந்த சில வருடங்களாக நூற்றுக்கனக்கானவர்கள் இறந்து கொண்டுள்ளனர். நீங்கள் அங்கே நிலச்சீர்திருத்தத்தை எல்லா மாவட்டங்களிலும் அமுல் படுத்தி விட்டதாக சொல்வதும் தவறானது. 70களில் நக்சல்பாரி எழுச்சிக்குப் பின் அதன் தாக்கம் இருந்த சில பல மாவட்டங்கள் தவிர்த்து வேறெங்கும் விரிவான அளவில் நிலச்சீர்திருத்தம் நடைபெறவில்லை என்று படித்துள்ளேன்.

//டாடா முதல் சலிம் வரை நாங்கள் அவர்களை பயன்படுத்துகிறோம்.//

அப்படியே ஜார்ஜ் புஷையும் நீங்கள் பயன்படுத்தலாமே? உங்க காமெடிக்கு ஒரு எல்லையே இல்லையா சந்திப்பு சார்?

நீங்கள் என்னிடம் சில கேள்விகளை வைத்திருக்கிறீர்கள். அவைகளுக்கான விளக்கங்கள் எங்கள் தோழர்களின் தளங்களில் நிறையவே உள்ளது. நீங்களும் படித்திருப்பீர்கள். மேலும் அவை பற்றி ஆரோக்கியமான விவாதங்கள் செய்ய விருப்பமிருந்தால் அது தொடர்பான தளங்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நட்புடன்,

குரல்கள்