July 20, 2007

பயங்கரவாத ஆய்வுக்கூடம்!


சமீபத்தில் லண்டன் மற்றும் கிளாஸ்கோவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பங்களூரைச் சேர்ந்த மருத்துவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நம் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன்னுடைய மனைவிக்கு அறிமுகப்படுத்தும் சமயத்தில், ‘‘20 கோடி முஸ்லீம்களைக் கொண்டுள்ள நாடாக இருந்தாலும் அதில் ஒ ருவர் கூட அல்குவைதா இயக்கத்தைச் சேர்ந்தவர் இல்லாத நாட்டின் பிரதமர்’’ என்று கூறியதாகச் சொல்லப்பட்டதை நாமும் நம்பி, இதுநாள்வரை, நாட்டில் அல்குவைதா போராளிகள் எவரும் இல்லை என்று தவறாக நம்பிக்கொண்டிருந்திருக்கிறோம். அதிபர் புஷ் அவ்வாறு சொன்னாரா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே இரு ஆண்டுகளுக்கு முன் சிஎன்என் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டி ஒன்றின்போது, ‘‘அல்குவைதா இயக்கத்தில் எந்த இந்தியரும் சேரவில்லை’’ என்றும், ‘‘ஏனெனில் இந்தியா ஒரு செயல்பூர்வமான ஜனநாயகத்தைக் (கரnஉவiடிniபே னநஅடிஉசயஉல)க் கொண்டிருக்கிறது’’ என்றார்.
ஆயினும், ‘இந்தியா பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறது’ அல்லது ‘இம்மண்ணில் பயங்கரவாதிகள் உருவாகும் சூழல் இல்லை’ என்று பலரால் கூறப்படும் கூற்றுக்களால் அவ்வாறு முடிவுக்கு வருவதென்பது, தவறு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கானவர்களைப் பறிகொடுத்து, பாதுகாப்பான சூழ்நிலையில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய துயரார்ந்த சொந்த அனுபவங்களுக்கும் எதிரானதாகும். இந்தியாவில், எவ்விதமான பகுப்பாய்வுக்கும் உட்படாத வகையில் பல்வேறு விதமான பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம்முடைய விரிந்தகன்ற சமூக அமைப்பின் விளைவாகக் கூட அது இருக்கலாம்.
இந்தியாவில் அல்குவைதா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற இத்தகைய தாக்குதல்களில் இந்தியர்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி, நம்முடைய நாட்டில் சென்ற ஆண்டு ஜூலை 11 அன்று மும்பையில் ரயில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு, 187 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட மற்றும் 817 பேர் ஊனமாக்கப் பட்ட நிகழ்ச்சியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரிக்கும் சமயத்தில் வந்துள்ளது என்பது உண்மை. இதுநாள்வரை, அந்தச் சம்பவத்திற்குக் காரணமான வர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய வகையில் ஒரு துப்பும் கிடைத்திடவில்லை.
நாடு, ஓர் இந்து பயங்கரவாதியின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நாட்டின் தந்தை மகாத்மா காந்தியைப் பலிகொடுத்தது. சீக்கிய தீவிரவாதிகளால் நம் பிரதமர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு பிரதமர் (அவரது மகன்) எல்டிடிஇ-இனரால் படுகொலை செய்யப்பட்டார். ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்களின் விளைவாக நூற்றுக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உல்பா மற்றும் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் வட கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பேரழிவு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவையல்லாமல், நாடு முழுதும், குஜராத் மாநிலத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர் இனப்படுகொலைகளுக்காளானது போல, மதவெறியர்களும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கும் மதமோதல்களில் ஈடுபடுவது தொடர்கிறது. நாடாளுமன்றம், செங்கோட்டை, அக்சர்தம் கோவில், ரகுநாதர் கோவில் (இருமுறை) முதலானவற்றில் ஏற்கனவே நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களன்னியில், இந்த ஆண்டும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி, கோரக்பூர் முதலான இடங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை இதுவரைப் பார்த்திருக்கிறோம்.
நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், சட்டீஸ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளால் 24 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டிருக் கிறார்கள். இந்தியாவும் பல்வேறு பயங்காவாதக்குழுக்களின் தளங்களாக மாறியிருக்கிறதென்கிற உண்மையை அழுத்தத்துடன் குறிப்பிடுவதற்காகவும், அல்குவைதாவின் உறுப்பினர்கள் இங்கு இல்லை என்ற மாயையுடன் ஆறுதல் பெற்று நாம் வாளாவிருந்திட முடியாது என்பதற்காகவும்தான் இவை அனைத்தையும் இங்கு குறிப்பிடவேண்டிய தேவை ஏற்பட்டது. இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள சமீபத்திய பயங்காரவாதத் தாக்குதல்களில் இந்தியர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது இப்போது நம்முன் வந்திருக்கிறது.
இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் உறுதிபடக் கண்டிக்கப்படத்தக்கது, அதில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுமட்டுமல்ல, இத்தகைய பயங்கரவாதத்தைச் சமாளிப்பதற்குச் சரியான உபாயங்களைக் கையாளுவதும் இவை வெற்றிபெற அனுமதிக்கப்படக்கூடாது என்பதும் அவை விட மிக முக்கியமாகும். அரசு பயங்கரவாதமும் தனிநபர் பயங்கரவாதமும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க்கின்றன என்று பலமுறை நாம் இப்பகுதியில் கடந்த காலங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். இத்தகைய தனிநபர் பயங்கரவாதத் தாக்குதல்களை உக்கிரமான அரசு பயங்கரவாதத்தின் மூலமாக சமாளிப்பதென்பது எதிர்விளைவையே கொடுக்கும் என்பதுமட்டுமல்ல, தனிநபர் பயங்கரவாதத்தையும் செயலூக்கமானதாக மாற்றிடும். உலகம் பூராவும் நடைபெறும் வளர்ச்சிப் போக்குகள் இன்றைய தினம் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. லண்டனில் இருந்து வெளிவரும் ‘எகனாமிஸ்ட்’ இதழ் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘பயங்கரவாதத்திற்கெதிரான உலக அளவிலான யுத்தம்’ (ழுறுடீகூ - படடியெட றயச டிn வநசசடிச), உலகில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி அதனைத் தொடர்ந்து மரணங்களையும் விளைவித்திருக்கின்றன என்று இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அது மேலும், ‘‘குவாட் அல்குவைதாவுக்கு எதிராக ராணுவப் பிரச்சாரத்தைப் பற்ற வைத்திருக்கிறது. பின்னர் இரு ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய எதிரியான, சதாம் உசேனேத் தூக்கி எறிந்திருக்கிறது. உண்மையில் செப்டம்பர் 11 சம்பவத்திற்கும் இவருக்கும் நிச்சயமாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஈராக்கிற்குள் அத்துமீறி அமெரிக்கா நுழைந்ததன் காரணமாகவே, ஈராக் அல்குவைதாவின் ஈர்ப்பு மையமாக மாறியிருக்கிறது.’’
உண்மையில், ஒரு நோக்கத்துடன் பயங்கரவாதத்தை ஏதேனும் ஒரு மதத்துடன் தொடர்புபடுத்த முயற்சிப்பது அல்லது நம்புவது, பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தை மேலும் சிரமத்திற்குள்ளதாக்கிவிடும். ‘பயங்கரவாதம் என்பது ஒரு குற்றச்செயல், இதற்கு மதமோ நாடோ கிடையாது’ என்பதைத் திரும்பத் திரும்பக் கூற வேண்டியது அவசியமாகிறது. ஏகாதிபத்தியத்தின் சித்தாந்தக் குறிக்கோள்கள் மற்றும் உலக அளவிலான பொருளாதார மேலாதிக்கத்தைப் பெற வேண்டும் என்கிற அதன் தாகம் குறித்து ஏற்கனவே பலமுறை இங்கே நாம் விவாதித்திருக்கிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியமும் பிரிட்டன் போன்ற அதன் நேச நாடுகளும் உலக அளவிலான பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கான முக்கிய காரணிகள் என்கிற உண்மை நீடிக்கிறது.
இந்தியாவில் உள்ள பலர், லண்டன் மற்றும் கிளாஸ்கோ தாக்குதல்கள் சம்பந்தமாக வந்துகொண்டிருக்கும் செய்திகளைக் கேட்டு மிகவும் திகிலடைந்துபோயிருக்கிறார்கள். ‘எப்படி இருந்த பங்களூரு இப்படி ஆகிவிட்டதே’ என்று சிலர் புலம்புகிறார்கள். நன்கு மேல்நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் இந்திய மத்திய வர்க்கம், அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள், எவ்வாறு பயங்கரவாதிகளாக மாறிப்போனார்கள் என்று சிலர் ஆச்சர்யப்படுகிறார்கள். உயிர்களைக் காக்க வேண்டிய டாக்டர்கள், உயிர்களைக் கொல்பவர்களாக மாற எப்படி முடிந்தது? இவ்வாறு அவநம்பிக்கை மக்கள் மத்தியிலிருந்து பல்வேறு விதங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
1993க்கும் 2005க்கும் இடையில் சர்வதேச அளவில் நடைபெற்றுள்ள ஐந்து பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து மதிநுட்பத்துடன் செயல்பட்டவர்கள் அனைவருமே பல்கலைக் கழக அளவில் படித்தவர்கள் என்பதும் அவர்களில் எவருமே மதராசாக்களில் படித்தவர்கள் அல்ல என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே, பயங்கரவாதிகளை சமூகத்தின் பிற்பட்ட பகுதிகளிலும் சேரிகளிலும் தேடுவதென்பது ஒருவரின் கருணையற்ற வர்க்க சார்பேயாகும். உண்மையில், மதராசாக்களை விட நவீன மேற்கத்திய பல்கலைக் கழகங்களே பயங்கரவாதத்துடன் ஜீவனுள்ள தொடர்பு கொண்டிருந்திருக்கின்றன.
தொழில்நுட்ப வல்லுநர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பதைப் பொறுத்தவரை, அதிர்ச்சியடையக் கூடிய ஒன்றல்ல. கில்லட்டின் எந்திரத்தைக் கண்டுபிடித்தவரே மிக உயர்படிப்பு படித்திருந்த ஒரு டாக்டர்தான் என்பதை நினைத்துப்பாருங்கள். (அவர் பெயரால்தான் அந்த எந்திரத்திற்கு கில்லட்டின் என்று பெயர் வைக்கப்பட்டது.) மனதில் கிலி ஏற்படுவது என்பது ஒரு மனநிலை. பயங்கரவாதம் அத்தகைய மனநிலையை உருவாக்குவதற்கான உத்தியாகும். அதிக அளவில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உத்திகளை வகுக்கும்போது, மனத்தளவில் கிலி உண்டாக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிறது.
சரி, அப்படியானால் பயங்கரவாதத்தை எப்படி ஒழிக்கப்போகிறோம்? பயங்கரவாதத்திற்கெதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிச்சயம் நாம் குறைத்திட முடியாது. இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் ஏற்படாமல் தடுத்திட, அனைத்துத் தேவையான துப்பறியும் நடவடிக்கைகளையும் மேலும் தீவிரமாக்குவது அவசியம். நம் பிரதமர் சென்ற வாரம் கூறியிருப்பதைப்போல, ‘‘பயங்கரவாதம் உருவாவதற்கான சூழ்நிலையை உருவாக்கக் கூடாது’’ என்பதும் மிக முக்கியமாகும்.
இதைத்தான் நாம் அடிக்கடி இப்பகுதியில் திரும்பத் திரும்ப விவாதித்து வந்திருக்கிறோம். சமூகத்தில் நடைமுறையில் உள்ள ஒடுக்குமுறையும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள அநீதிகளும் மறையும்போதுதான், இறுதிக் கட்டமாக, பயங்கரவாதத்திற்கான அடிப்படையையும் சமூகத்திலிருந்து நீக்கப்பட முடியும்.
பதிலாக, பிரிட்டனில் குடியேறுபவர்கள் குறித்து அதிகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கு அழைப்பு விடுத்தல் அல்லது அங்கள்ள அப்பாவி மக்களைத் தொல்லைக்காளாக்குதல் நிலைமையை மேலும் மோசமாக்கத்தான் இட்டுச் செல்லுமேயொழிய எதிர்காலத்தில் ஆற்றல்வாய்ந்த பயங்கரவாதிகள் உருவாவதைத் தடுத்திடாது. (இப்போது ஃபைசா (குணைய) போன்ற இந்தியப் படங்கள் எப்படி பயங்கரவாதம் உருவாகிறது என்பதை நன்கு ஆவணப்படுத்தி இருக்கிறது.) இத்தகைய கெடுபிடியான பரிசோதனைகள் எதுவும் கிளாஸ்கோ தாக்குதலைத் தடுத்திருக்க முடியாது. ஏனெனில், அத்தகைய பயங்கரவாதச் செயலைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பிரட்டனைச் சேர்ந்தவர்களே.
நாம் இதனை அச்சுக்குக் கொடுக்கும் சமயத்தில், இஸ்லாமாபாத்தில் லால் மசூதி முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த பயங்கரவாதிகளை அப்புறப்படுத்தும் அரசின் தாக்குதலில் 88 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் அண்டை நாடுகளின் வளர்ச்சிப்போக்குகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அவை அளித்துவரும் ஆதரவு காரணமாக, நம் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. சர்வதேச சூழ்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குவாட் மிகவும் மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் நாமும் நம் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதோடு, பயங்கரவாதத்தினைப் பேணி வளர்க்கும் சூழலைத் தடுத்திடக்கூடிய வகையில் அதற்குத் தீனிபோடும் நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கும் நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும்.
உடனடியாகச் செய்யவேண்டியது என்னவெனில், இந்திய அரசாங்கம் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச அதிகாரக்குழுமங்களுக்கு பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும். அதேசமயத்தில் இந்தியப் பிரதமர் சமீபத்தில் கூறியதைப்போல, ஒருசில பயங்கரவாதிகளின் கிரிமினல் நடவடிக்கைகளுக்காக அந்த சமூகம் முழுமையையும் கறைப்படுத்திட முயலக்கூடாது என்பதையும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம்.தமிழில்: ச। வீரமணி

4 comments:

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

டிராஸ்க்கி said...

சந்திப்பு!

அந்த டாக்டர் அப்பாவியா இருந்தால் என்ன சொல்வீர்கள் , இதெல்லலம் உறுதிபடுத்தபடாத தகவல் தானே !

ஏன் ஒரு அப்பாவியை இப்படி அரசும் உங்களமாதிரி ஆட்களும் சேர்ந்து பழிகடா ஆக்குகிறீர்கள்

தமிழவன் said...

சந்திப்பு,
பயங்கரவாதங்களை உலகமுழுதும் அரசாங்கங்களே ஊக்குவித்து வருகின்றன.
இந்தியாவில் நிகழும் பயங்கரவாதங்களில் எப்படி பாகிஸ்தானிய ஐ எஸ் ஐ கரங்கள் இருக்கின்றனவோ, அதுபோலவே.. பாகிஸ்தானில் நிகழும் குண்டுவெடிப்புகளில் நமது 'ரா' கரங்களும்.

நாடுகளுக்கிடையிலான அரசியலில் இவை ராஜதந்திரமாக மெச்சப்படுகின்றன,

அப்படித்தான் அன்றைய ரஷ்யாதிக்க ஆப்கானில் அமெரிக்கா தலையிட்டது.(சுதந்திர உணர்வில் அறியாவண்ணம் தீவிரவாதம் கலப்பது).

இப்போது மத 'லாபி'களின் அரசியலும் சேர்ந்துக்கொள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தை தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்க அரசியலில் மிகுந்த செல்வாக்கு உடைய மத அரசியல் லாபிகளின் கடும் முயற்சியாகவும் இவை வெளிப்படுகின்றன.

Anonymous said...

a question for you sir!

http://kedayam.blogspot.com/2007/07/blog-post_24.html