July 03, 2007

திரும்பிப் போடா நிமிட்டே

திரும்பிப் போடா நிமிட்டே

எவன்டா கொடுத்தான் பர்மிட்டு

ஹார்பார விட்டு வெக்கேட்டு

இல்லனா உடுவோம் ராக்கெட்டு



என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது நேற்று மாலை. யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் அணு ஆயுத கப்பல் வருகைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள். வாலிபர்கள். பெண்கள். குழந்தைகள். தொழிலாளர்கள். நடுத்தர வர்க்கத்தினர். பத்திரிகையாளர்கள். அறிவு ஜிவிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அமெரிக்க போர் வெறிக்கு எதிராகவும். உலக ரவுடித்தனத்திற்கு எதிராகவும் போர் முழக்கமிட்டனர். 1500 பேருக்கு மேல் இவ்வார்பாட்டத்தில் கலந்து கொண்டது முத்தாய்ப்பானது. அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராகவும். ஈராக் மக்களையும். ஆப்கன் மக்களையும். பனாமா மக்களையும் கொன்றொழித்து அந்நாடுகளை பிடித்துக் கொண்ட நாட்டாண்மைத்தனத்துக்கு எதிராகவும். வளரும் நாடுகளையும். தனக்கு போட்டியான நாடுகளையும் அரசியல் மற்றும் பொருளாதார - இராணுவ ரீதியாக பந்தாடும் ஏகாதிபத்திய போர் வெறித்தனத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பினர். இந்தியாவிற்கு எதிராக 7ஆம் படை கப்பலை அனுப்பிய அமெரிக்கா இன்றைக்கு உலகை ஆக்கிரமிக்கும் கப்பலை வரவேற்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கடும் கண்டனத்துடன் கோஷங்கள் முழங்கப்பட்டன. தலைவர்களின் பேச்சும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுக்கு உரமூட்டுவதாக அமைந்தது.
தங்களது ஆவேசமூட்டும் எதிர்ப்புணர்வை மாணவர்கள் ராக்கெட்டுக்களை விட்டு வெளிப்படுத்தியது ஆரவாரமூட்டியது। அத்துடன் இரண்டு போர் வெறி நிமிட்ஸ் கப்பல் அடையாளமாக கொண்டு வரப்பட்டு செருப்படி கொடுத்து - தீக்கிரையாக்கி தங்கள் எதிர்ப்புணர்வை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்சியாளர்கள் உங்களை வரவேற்கலாம். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் - இந்திய மக்கள் உங்களை ஒரு போதும் வரவேற்க மாட்டோம் என அற்புதமாக வெளிப்படுத்தினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் உரை

ஆஸ்திரேலியாவிலும், ஆப்பி ரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அனுமதி மறுக் கப்பட்டு விரட்டப்பட்ட கப்பல் இது என்பதை சுட்டிக்காட் டினார்। இராக் மக்களை கொன்று குவித்து ஈரான் நாட்டை அச்சுறுத்தி வருகிற இந்த கொடூரமான கப்பலை இந்திய அரசு ஏன் அனுமதிக் கிறது என்று அவர் வினவினார்। இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி உடன் பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து இத்தகைய சீரழிவு கள் ஏற்படும் என இடதுசாரி கட்சிகள் அன்றிலிருந்தே எச்சரித்து வந்துள்ளன। அந்த சீர்கேட்டின் அடையாளமா கவே சென்னைக்கு நிமிட்ஸ் கப்பல் வந்துள்ளது என்றார் அவர்। இதைத் தாங்கி நிற்பது நாட்டின் பெரு முதலாளித் துவக் கூட்டம்। உலகமய, தாராளமய, தனியார்மய ஒப் பந்தங்கள் நாட்டை சீரழிக் கின்றன। அதற்கான ஒரு எச்ச ரிக்கைதான் நிமிட்ஸ் வருகை என்றும் அவர் கூறினார். இந்திய அரசின் பொரு ளாதாரக் கொள்கைகளோடு இக்கப்பலின் வருகை இணைந் திருக்கிறது. இந்தப் போக்கு தொடருமானால் அரசியல் ரீதியாக மக்கள் பாடம் கற்றுக் கொடுப்பார்கள். இந்த ஆர்ப் பாட்டம் அந்த கப்பலிலிருந்து அணுக்கதிர் விஷ வாயு வெளியேறும் என்ற அச்சத்தால் நடைபெறுவது அல்ல. ஏக போக கூட்டங்கள் ஏகாதிபத்தி யத்திற்கு அடிபணிந்து சீர் குலைவுக் கொள்கைகளை செயல்படுத்த அனுமதிக்க மாட் டோம் என்று இடதுசாரி இயக் கங்களின் ஒற்றுமை அடையா ளமே இந்த ஆர்ப்பாட்டம் என்றார் அவர். அமெரிக்க அரசு கப்பலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்திய அரசு அதனை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் வரதராஜன் குறிப்பிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உரை

"வந் திருப்பது சரக்கு கப்பலோ, மருத்துவ உதவி கப்பலோ அல்ல. ஒரு ரவுடி தனது ரவுடித் தனத்தை காட்டுவதற்காக அனுப்பப்பட்டிருக்கிற கப்பல் தான். அதை மன்மோகன் சிங் அரசு இலைப்போட்டு வரவேற் பது மானக்கேடு," என்றார். பல நெருக்கடியான பிரச் சனைகள் வந்தபோது உலக விவகாரங்களில் நடுநிலை யான நிலையை மேற்கொண்டு புகழ்பெற்ற நாடு இந்தியா. இப்போது இடதுசாரிகளின் ஆத ரவோடு அமைந்திருக்கிற ஒரு அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் கப்பலை வரவேற்கிறது என்றால் அந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.அமெரிக்காவிலேயே ஏழு மாநிலங்களின் அரசுகள் தங் களது துறைமுகங்களில் அந்த கப்பலை அனுமதிக்க மறுத்து விட்டன. ஏமாந்தவர் யார் என்று பார்த்து இந்தியாவிற்கு அது அனுப்பப்பட்டுள்ளது. நிமிட்ஸ் கப்பலின் கேப்டனுக்கு, இந்தி யாவில் யார் என்ன கேட்டாலும் எதுவும் சொல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு உத்தரவு போட்டிருக்கிறது. அதனால் தான் அந்த கேப்டன், கப்பலில் அணு ஆயுதம் இருக்கிறதா என்பது பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறான். ஆனால் இங்குள்ள துறைமுகத் தலைவரும் இந்திய கப்பற் படைத் தளபதியும் அந்த கப்ப லில் அப்படி எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள். இதை விட அவமானம் என்ன இருக்க முடியும் என்றும் அவர் கேட் டார்.


2 comments:

Anonymous said...

அறிக்கை விட்டதோடு நில்லாமல் ஆட்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி

Anonymous said...

hai tataist,
pls visit my new blog
and leave your commens.

paalveli.blogspot.com