தமிழக அரசியல் களத்தில் தற்போது சூடாக விவாதிக்கப்படும் பொருளாக மாறியுள்ளது விஜயகாந்த் திராவிடரா? நமது பத்திரிகை நன்பர்கள் முதல்வர் கருணாநிதி அவர்களிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளில் ஒன்று இது!
இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் : விஜயகாந்தை நான் எப்போதும் திராவிடர் அல்ல என்று கூறியது கிடையாது. ஆனால், இப்போது எல்லோருக்கும் ‘திராவிர்’ என்ற முத்திரை தேவைப்படுகிறது. என்று விளக்கமளித்துள்ளார்.
இந்த விஷயத்தில் விஜயகாந்திற்கு ஏக்கச்சக்க கோபமாம்! அதனால், அவர் போகும் இடமெல்லாம் கருணாநிதியை ஒரு பிடி பிடிக்கிறாராம்!
உண்மையில் விஜயகாந்த் தான் திராவிடர் என்று கருதினால் அவர் என்ன செய்திருக்க வேண்டும் ‘கிண்டி கிங்’ இன்°டிடியூட்டில் தன்னுடைய டி.என்.ஏ.வை கொடுத்து தான் திராவிடர் என்று நிரூபித்திருக்க வேண்டும்! அதை செய்யும் துணிச்சல் அவரிடம் இருக்காது என்று நமக்கு தெரியும்! ஏனென்றால் டி.என்.ஏ. சோதனையில் திராவிடம் என்ற ரிசல்ட் எல்லாம் வராது! அது கற்பனையானது என்று கூறிவிடும். இத்தகைய ஒரு டெ°ட்டை செய்து கொள்ள திராவிடம் என்று முழங்கும் யாரும் முன்வர மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
ஓ.பி.சி. இடஒதுக்கீடு, சாட்டிலைட் சிட்டி, பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் வேலையின்மை வரை ஏராளமான பிரச்னை இருக்கும் போது அது பற்றியெல்லாம் கவலைப்படாத விஜயகாந்த் திராவிடத்தை பற்றி கவலைப்படுகிறரே அது ஏன்? அரசியலுக்கு திராவிடம் தேவைப்படுகிறதே! அங்கு மட்டுமா?....
7 comments:
சந்திப்பு,
நீங்க சென்னைவாசி தானே?
எதேனும் ஒரு நாள் கடற்கரைக்கு சென்றால் அப்படியே சென்னை பல்கலைகழக publication departmentக்கு போங்கள்.
அங்கே Bishop.Robert Caldwell எழுதிய Comparative Grammar of Dravidian or South Indian Family of Languages என்ற புத்தகம் விலைக்கு கிடைக்கிறது.
இந்த புத்தகத்தின் மூலம் தான் "திராவிட" என்ற (சமஸ்கிரத) சொல் தமிழுக்கு அறிமுகம் ஆனது.
குமரிலா என்ற எட்டாம் நூற்றாண்டு எழுத்தாளன் ஒருவன் ஆந்திரதிராவிடபாஷா என்று தெனிந்திய மொழிகளை அழைத்ததை வைத்து பிஷப் "திராவிட" என்று தென் இந்திய மொழிகளை அழைத்தார்.
விஜயகாந்த தெலுங்கு மொழி பேசுபவர் என்பதால் அவரும் திராவிடர் தான்.என்ன இது ஒரு lingual identity.
கருனாநிதி அதை ethnic identity என்பார்.
விந்திய மலைக்கு கீழே எல்லோரும் திராவிடர் தான்.
அருமையான புத்தகம்.விலையும் ரொம்ப கம்மி.அப்புறம் அந்த புத்தகம் வைத்துள்ள Rackஇல் மேல் அடுக்கில் தான் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய "Cholas" புத்தகமும் இருக்கிறது...அதை வாங்க போன போது தான் பிஷப் எழுதிய புத்தகம் கிடைத்தது.
ஒரு முறை போய் வாருங்கள் அங்கே...பழைய தமிழ் மொழி masterpiecesகளை மொழிபெயர்ப்பு தரமான புத்தகங்களாக விற்பனைக்கு கிடைக்கின்றன. :)
சமுத்ரா
தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்!
சந்திப்பு அவர்களே,
சமுத்ரா சொன்னது சரியென்றே தோன்றுகிறது.
ஏனென்றால் திராவிட ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஆந்திராவில் தான். அது இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
திருமொழியான்.
//திராவிட ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஆந்திராவில் தான்.//
இந்த விஷயத்தில் இதுவும் புதுத் தகவல்தான். நன்றி திருமொழியான்
கேள்வி: தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் தொடங்கி உள்ள விஜயகாந்த் "திராவிடர் அல்ல'' என்று தாங்கள் கூறியதாகவும், அதற்கு பதில் அளிக்கும் முறையில் அவர் தங்களை ஒவ்வொரு மேடையிலும் ஆவேசமாகத்திட்டி பேசி வருகிறாரே. அவர் பதில் அளித்துப்பேசும் வார்த்தை களைப் பத்திரிகைகளில் படிக்கும்போது "இவரா இப்படிப'' என்று நினைக்கத் தோன்றுகிறதே! முன்பு எப்படியெல்லாம் உங்களோடு நட்பு கொண்டு பழகியவர்கள் இன்று நச்சு மொழிகளால் அர்ச்சிப்பது வேடிக்கையா, வேதனையா?
பதில்:- என் செய்வது, நட்பாக இருந்தவர்கள் முன்பு நம்மை மதித்துப்புகழ்ந்தவர்கள், எப்படியோ ஒரு கால கட்டத்தில் நட்பு முறிந்துவிடும் போது நச்சுமொழி தூவி அர்ச்சிக்கிறார்கள். இப் பொழுது தான் எண்ணி வேதனைப்படுகிறேன், எண்பது வயது வரையில் ஆயுள் நீண்டிருக்கக்கூடாது என்று பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருந்தால், பழைய நண்பர்களின் நாராச வார்த்தைகளையும் நன்றி மறந்த செயல்பாடுகளையும் படிக்கவோ, கேட்கவோ வாய்ப்பு இல்லாமல் போயிருக்குமல்லவா?
உண்மை என்னவென்றால் நான் எந்த ஒரு கூட்டத்திலும் நிகழ்ச்சியிலும் அல்லது கட்டுரையிலும் விஜயகாந்தை "திராவிடன் அல்ல'' என்ற சொன்னதே கிடையாது. பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 500 பேர் கழகத்தில் இணைந்த நிகழ்ச்சியில் பின் வருமாறு குறிப்பிட்டேன்.
"காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிபவர்கள் எல்லாம் "தேசிய காங்கிரஸ்'', "ஜனநாயகக் காங்கிரஸ்'', "மக்கள் காங்கிரஸ்'' என்றெல்லாம் பெயர் வைத்துக்கொண்டார்கள் அல்லவா, அதைப்போல இப்போது எல்லோருக்கும் "திராவிட'' என்ற முத்திரை தேவைப்படுகிறது. அதை வைத்துக்கொண்டு சில பேர் நல்ல உணர்வுகளையும் பரப்பு கிறார்கள். நல்ல வாழ்வையும் அமைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் அவர்களையெல் லாம் அடையாளம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டுதான் உண்மையான இயக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள்'' இப்படித்தான் அந்த நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்டேன். இதை ஒரு சில பத்திரிகைகள் தவறான தலைப்பிட்டு, "விஜயகாந்த் அவர்களையே திராவிடன் அல்ல'' என்று நான் பேசியதாக வெளியிட்டுவிட்டன.
அதை தெளிவுப்படுத்திக் கொள்ளாமல் அவர் கடுமையாகப் கண்டனம் தெரிவித்துப் பேசி வருகிறார். உண்மை என்ன? என்பது உள்ளத்துக்கு தெரியுமாதலால் நான் அதற்காக வருத்தப்படவில்லை. என்னையும் தி.மு.கழகத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசுவதற்கு எதுவாக அவர்களே கற்பனையாக ஒரு கதையைக் கட்டிக் கொண்டால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
கலைஞர் தான் விஜயகாந்தை சொல்லவில்லை என்று சொல்லிவிட்டாரே ?
ரவி நன்றி
கேப்டன் விட மாட்டேன்ங்குறாரே....
அது சரி! ஏற்கனவே கலைஞர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
தமிழ்நாட்டுல திராவிட இயக்கம் என்றால் அது திமுகவும் - திராவிடர் கழகமும்தான் மற்றவைகள் எல்லாம் வெறும் லேபிள்கள்தான். அதாவது சத்தில்லாத சொத்தைங்கறார்.... அப்பல்லாம் கேப்டனுக்கு கோபமே வரவில்லை. பாவம் அவர் என்ன செய்வார் கொள்கை கொழுந்தாச்சே!
Post a Comment