July 27, 2006
மாவோயிசம் அராஜகத்திற்கான ஒரு பயிற்சி!
July 25, 2006
சபரிமலை சாமியாரின் அயோக்கியத்தனம்!
ஐயப்பன் கோவில் கருவறைக்குள் நடிகை ஜெயமாலா நுழைந்தது தொடர்பாக உன்னி கிருஷ்ண பணிக்கர் கிளப்பிய சர்ச்சைக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு ஏற்பட்டு வருகிறது. அதற்காக தென் கேரளா முழுவதும் பரிகார பூஜைகளை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
மேலும் கண்டரருவின் கார் நம்பரையும் கொடுத்தார். கண்டரருவுடன் புகைப்படத்தில் இருக்கும் பெண் விபச்சாரம் செய்ததற்காக ஏற்கனவே தண்டனை பெற்றவர் என்றார் பத்மகுமார். கண்டரரு மோகனரு மீதான இந்தப் புகார் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐயப்பன் கோவில் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கண்டரரு மீதான புகாரைத் தொடர்ந்து அவரை உடனடியாக தந்திரி பொறுப்பிலிருந்து நீக்கி திருவாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டது. அவர் கோவிலுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய தந்திரியாக மோகனருவின் தந்தை கண்டரரு மகேஸ்வரரை நியமித்துள்ளது. அவர் உடனடியாக பொறுப்பேற்க மறுத்துள்ளார். மோகனரு மீதான விவகாரத்தில் முடிவு தெரிந்த பின்னரே தந்திரியாக பொறுப்பேற்பேன் என்று கூறிவிட்டார்.
இதற்கிடையே தன்னை தந்திரி பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லாது என்று மோகனரு கூறியுள்ளார். கொச்சி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட அவரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது அவர் கூறுகையில், எனக்கு எதிராக சதி நடக்கிறது. பாரம்பரியமாக வகித்து வரும் பதவி தந்திரி பதவி. அந்த உரிமையைப் பறிக்க தேவசம் போர்டால் முடியாது என்றார்.
ஜெயமாலா விவகாரத்தில் உன்னி கிருஷ்ண பணிக்கருடன் தந்திரி மோகனரு கடுமையாக மோதியது குறிப்பிடத்தக்கது. பணிக்கரும் ஜெயமாலாவும் சேர்ந்து கோவில் பூசாரிகள், நிர்வாகத்துக்கு எதிராக நாடாகமாடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில் விபச்சார சிக்கலில் மாட்டியுள்ளார் மோகனரு.
ஒரு பெண் ஐயப்பனை தொட்டுவிட்டார் என்பதற்காக பரிகார பூஜைகளை நடத்தும் தேவசம் போர்டு. இவ்வளவு நாளாக பல பெண்களுடன் விபச்சார தொடர்பு இந்த அயோக்கியருக்காக எத்தனை முறை பரிகார பூஜை நடத்தும்?
இந்து சனாதனம் - மனுதர்மம் பெண்ணை மனித பிறவியாகவே கருதவில்லை. அவர்களை நாயினும் கீழாகத்தான் பார்க்கிறது. சுத்த சுயம்புவாக ஆண்களை கருதும் ஆணாதிக்க மனோபாவம்தான் இந்து மதத்தில் தொடர்கிறது. அதிலும் பல அயோக்கித்தனங்களை செய்யும் பூஜாரிகளை வைத்திருப்பது புனிதமாக கருதப்படுகிறது. இதற்காக வக்காலத்து வாங்கும் இந்துத்துவவாதிகளிடம் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்து மதத்தை மீட்டெடுக்கும் முயற்சியை எதிர்பார்க்க முடியுமா? நிச்சயம் முடியாது. அவர்களது நோக்கமெல்லாம் இந்தியாவை மீண்டும் மனுவின் காலடியில் வைப்பதுதான். ஆனால், கோடிக்கணக்கான இந்துக்கள் - அந்த மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும், தீண்டாமையையும் தங்களது அனுபவத்தில் உடைத்தெறிந்து மீண்டு வருகின்றனர் புதிய மாற்றங்களை நோக்கி. இதில் குழப்பத்தை விளைவிப்பதுதான் இந்துத்துவவாதிகளின் கொடூர புத்தி.
July 24, 2006
தலித் மக்கள் நிலமும் சிறுதாவூர் பங்களாவும்
இந்த நிலத்தில் 1980-85 வரையில் அம்மக்கள் விவசாயம் செய்து வந்தனர். இடையில் மழை பொய்த்து - வறட்சி ஏற்பட்டதால் அந்நிலங்கள் தரிசாக விடப்பட்டது. சில வருடங்கள் கழித்து அம்மக்கள் மீண்டும் தங்களது நிலத்தில் விவசாயம் செய்யச் சென்றபோது, இந்த நிலம் உங்களுடையதில்லை என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். செய்வதறியாத தலித் மக்கள் தங்களுக்கு கிடைத்த நிலம் யாரால் அபகரிக்கப்பட்டுள்ளது என்பதைக்கூட அறியாத நிலையில் இருந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் போன்றவர்களிடம் மனு கொடுத்து எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை.
சிறுதாவூர் தமிழக ஊர்களில் பிரபலமான ஊராக மாறியது ஜெயலலிதா அங்கே குடியேறி பின்தான். ஜெயலலிதாவின் சொகுசு பங்களா உள்ள இடத்தில்தான் தலித்துக்களின் இந்த நிலமும் இருக்கின்றது.
நிலத்தை இழந்த தலித் மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி. நிலமற்ற ஏழை - தலித் மக்கள் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியிடம் தங்களது சோகத்தை கூறினர். இதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய மார்க்சி°ட் கட்சி மேற்கூறப்பட்ட பல அதிகாரிகளிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னாள் மனு கொடுத்து, அம்மக்களுக்கு நிலத்தை மீட்டுக்கொடுக்குமாறு கோரிக்கை வைத்தது. ஆட்சியாளர்கள் மசியவில்லை. தற்போது இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக எழுப்பிய மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.
தமிழக அரசும் இந்த நில விவகாரத்தில் உரியவர்களுக்கு நிலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயம். மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி இந்த மக்களுக்கு நிலம் கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்று கூறியுள்ளது.
தலித் மக்களின் நில விவகாரம் இப்படிப் போய்கொண்டிருக்க முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஒரு நீண்ட தன்னிலை விளக்கத்தை அளித்துள்ளார். அதாவது, தலித் நிலத்தை தாங்கள் ஆக்கிரமிக்கவில்லை; அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம்தான் கேட்க வேண்டும். இந்த நில விவகாரத்தை பயன்படுத்தி பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள விடாமல் செய்கின்றார் கலைஞர் என்று கூறியதோடு, நிற்காமல், தாங்கள் தங்கியிருக்கும் சிறுதாவூர் பங்காள எனக்கோ, சசிக்கலாவுக்கோ சொந்தமானதில்லை. நாங்கள் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி இந்த தலித் நில விவகாரத்தில் எங்கள் மீது அவதூறு சுமத்துபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்று வழக்கம்போல் முழங்கியுள்ளார். தலித் மக்களின் நில மீட்புக்காக போராடிய மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் அவர்களுக்கும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார். சிறுதாவூர் பங்களா யாருடையது? உங்களுக்கான வாடகையை எப்படி செலுத்துகிறீர்கள்? செக்காகவா, அல்லது பணமாகவா? யாருடைய பெயருக்கு இதனை கொடுக்கிறீர்கள் என்று பல கேள்விகளை அவருக்கே உரித்தான பாணியில் கேட்டிருக்கிறார்...
கிணறு தோண்ட பூதம் வந்த கதையாக இது நீண்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த விவகாரத்தை கடந்த இரண்டு மாத காலமாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிற பொது மக்கள், அபகரிக்கப்பட்ட தலித் மக்களின் நிலம் அவர்களுக்கே திரும்ப கிடைக்க அண்ணாவின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்த, ஆட்சி செய்துக் கொண்டிருக்கிற திராவிட கட்சிகள் இதற்கு நடவடிக்கை எடுக்குமா என்பதே!
ஜெயலலிதாவின் நீண்ட தன்னிலை விளக்கத்தில்கூட தலித் மக்களுக்கு நிலம் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. மாறாக, இதுவொரு புது பூதமாக கிளம்பி விடுமோ என்ற பதட்டம்தான் காணப்படுகிறது.
இறுதியாக தலித் மக்களின் உயிர் மூச்சாக, உயிர் காற்றாக தன்னை அறிவித்துக் கொண்டா திருமாவளவன் இந்த விஷயத்தில் மூச்சே விடவில்லை! எல்லாம் அம்மாவின் பக்தி பரவசம்தான் காரணமோ?
July 22, 2006
திராவிட (இனத்)தின் மூலம்?
முதலில் மனித இனத்தை உயிரியல் ரீதியாக வகைப்படுத்துவது சரிதானா என்று பார்க்க வேண்டும். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மனித இனத்தை காகசாய்ட், மாங்கலாய்ட், நீக்ராய்ட் மற்றும் ஆஸ்ட்ரலாய்ட் என்று நான்கு வகையாகப் பிரித்துப் பார்த்தது மானிடவியல். ஆனால், இத்தகைய பிரிவினை தோலின் நிறம், முக அமைப்பு, தலைமுடியின் நிறம், கண்களின் நிறம் ஆகிய புறத் தோற்றங்களை வைத்துச் செய்யப்பட்டது. இத்தகைய வகைப்படுத்தல் நிறவெறி மற்றும் இனவெறி வேறுபாடுகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரே அளவு உயரமுள்ள வெவ்வேறு (இன) வகையைச் சேர்ந்த பிணங்களை அவற்றின் தோல், முடி, ஆகியவற்றை நீக்கிவிட்டு அவற்றை இனவாரியாக வகைப்படுத்தச் சொன்னால் எது எந்தவகையைச் சேர்ந்தது என வகைப்படுத்துவது மிகச் சிரமமான காரியம் என்கிறார் சோம்நாத் சுஷ்டி என்னும் எழுத்தாளர்.
மனித வரலாற்றில் இன அடிப்படையிலான ஒடுக்குமுறை கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான ஒன்றே. அதற்கு முன்பு மனித இனத்தில் ஒடுக்கு முறையும், அதன் விளைவாக அடிமைச் சமூகமும் ஏற்பட்டிருந்தாலும், அத்தகைய ஒடுக்கு முறைகளுக்கு இனவேற்றுமையோ, நிற வேற்றுமையோ காரணமாக அமையவில்லை. பழங்காலத்தில் அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து மட்டுமே பிடித்து வரப்படவில்லை. உதாரணமாக, 13ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், ஸ்பெயின் நாட்டிற்கு கிரீஸ், ரஷ்யா, சார்டானியா, துருக்கி, ஆர்மீனியா மற்றும் கானரித் தீவுகளிலிருந்து அடிமைகள் பிடித்து வரப்பட்டனர். ஐரோப்பியர் களிடையே ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை அடிமைப் படுத்தும் பழக்கம் இருந்தது. அமெரிக்காவில் கூட அடிமைகளைப் பயன்படுத்தும் அதன் துவக்க காலத்தில் கரும்புத் தோட்டங்களில் வெள்ளை அடிமைகள் இருந்தனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதன் பூர்வ குடிகளை அடிமைப்படுத்தும் முயற்சி வெற்றியடைய வில்லை. பூர்வகுடி இந்தியர்கள் அடிமைகளாக இருப்பதைவிட, மரணத்தை தழுவலே விரும்பினர். கரிபியன் தீவுகளின் பூர்வகுடி மக்கள் முழுவதும் இவ்வகையில் அழிந்து போயினர். கியூபாவின் பூர்வ குடிமக்களின் மக்கட் தொகை 17 லட்சத்திலிருந்து, பத்தாயிர மாக 10 வருடங்களுக்குள் குறைந்தது. இத்தகைய சூழலில் தான், அன்றைய தினம் பிரதான தொழிலாக விளங்கிய சர்க்கரை உற்பத்திக்கு, கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய ஏராளமான அடிமைகள் தேவைப்பட்டனர். ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து மக்களை வேட்டையாடி சந்தைக்கு கொண்டு வந்து அடிமை வியாபாரம் துவங்கியது. கி.பி. 1600 முதல் 1870 வரையில் லட்சக் கணக்கான கறுப்பர்கள் அடிமைகளாகக் கடத்தி வரப்பட்டனர். இவ்வாறு கடத்தி வரப்பட்டவர்களில் மூன்று பேருக்கு ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருந்தது என்ற ஒரு கணக்கின் அடிப்படையில், சுமார் மூன்றரைக்கோடி ஆப்பிரிக்கர்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கைதிகளைப் போல் பிணைத்து, ஆடு, மாடு போல் கடத்திச் செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே மடிந்து போயினர்.
ஆங்கில மொழியில் ரே° (சுயஉந) என்ற வார்த்தை இனம் என்ற தற்போதைய பொருளில் சமீபகாலத்தில் தான் வழங்கப் படுகிறது. அரி°டாட்டில் காலத்தில் பிறப்பின் அடிப்படையில் அடிமைகள் யார், சுதந்திரக் குடிமக்கள் யார் என்பது தீர்மானிக்கப் பட்டாலும், அது இனவாரியாக வகைப்படுத்தப் படவில்லை. மனிதர்களுக்கிடையிலான வேறுபாடு கலாச்சார ரீதியாக அமைந்த ஒன்றாக இருந்ததேயன்றி, உயிரியல் பண்பாக இருக்கவில்லை. உண்மையில், உயிரியல் அடிப்படையில் மனிதர்களை இனரீதியாக வேறுபடுத்திப் பார்க்கும் போக்கு முதலாளித்துவம் தோன்றிய பிறகு உருவானதாகும். இந்திய சமூகத்தில் ஒருவர் பிறந்த சாதியின் அடிப்படையில் சமூக ஏற்றத்தாழ்வுகள் அமைந்திருந்தபோதிலும், நிற உருவ வேற்றுமைகள் ஒரு பிரச்சனையாக எழவில்லை. அப்படி இருந்திருந்தால் கிருஷ்ணணும், வியாசரும் கறுப்பு நிறத்தோடு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருக்க முடியாது.
அமெரிக்க கண்டத்தை முழுவதுமாக ஐரோப்பியர்கள் தங்களது வசப்படுத்திய பிறகு கரும்புத் தோட்டங்களில் உழைக்க அடிமைகள் தேவைப்பட்டனர். பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பிய சமூகத்தில் ஜனநாயகம் மற்றும் மனித இனத்திற்குள் சமத்துவம் ஆகியவற்றுக்கான விதைகளை ஊன்றியிருந்தது. இதனால், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை காலனிகளாக மாற்றி அந்த மக்களை ஒடுக்கி வருவதை நியாயப்படுத்த வேண்டிய தேவை முதலாளித் துவத்திற்கு இருந்தது. 19ம் நூற்றாண்டில் தோன்றிய குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவனே மனிதன் என்ற டார்வினின் கோட்பாடு மனித இனத்தின் தோற்றம் பற்றிய பல்வேறு யூகங்களுக்கும் வழி வகுத்தது. பரிணாமத்தில் முழுமையடைந்த மனித இனம் வெள்ளை இனம் என்றும், கறுப்பர்கள் இன்னும் முழுமையான மனிதர்களாக பரிணாமம் அடையவில்லை என்றும் சில ஐரோப்பிய விஞ்ஞானிகள் அன்றைய தினம் கூறினர். மேலும், டார்வினது இயற்கைத் தேர்வுக்கு “தகுதியானது நிலைத்து வாழும் (Survival of the Fittest) என்ற சொற்றொடர் புதிய விளக்கம் அளித்தது. இதைச் சொன்னவர் டார்வினல்ல ஹெர்பர்ட் பென்சர் என்ற விஞ்ஞானியாவார். இதன் மூலம் இயற்கைத் தேர்வு என்பது தகுதியான உயிரினங்கள் தாங்கள் நிலைத்து இருப்பதற்கான போராட்டமாகும் எனக் கூறப்பட்டது. இதில் தகுதியற்றவை அழியும். இந்த வகையில் தனிநபர்கள், வர்க்கங்கள் மற்றும் நாடுகள் இவற்றுக்கிடையிலான போராட்டங்களில் தகுதியானது வாழும் என்ற கோட்பாட்டின்படி, ஒடுக்கு முறையும், அநீதியும் நியாயப் படுத்தப்பட்டன. ஐரோப்பியர்களின் காலனியாதிக்கச் சுரண்டலுக்கு டார்வினின் கோட்பாட்டை நியோ டார்வினிசம் என்ற பெயரில் திரித்துப் பயன்படுத்திக்கொண்டனர்.
இனம் பற்றிய கோட்பாடு முதலாளித்துவம், பாராளுமன்ற ஜனநாயகம், தொழில் மயமாதல் ஆகியவற்றோடு சேர்த்து உலகின் பிற பகுதிகளுக்கு ஐரோப்பியரால் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பியரல்லாத மக்கள் வாழும் பகுதியிலும், அதற்கு ஆதரவு கிடைத்து. நவீன தேசிய அரசுகளின் தோற்றத்தின் போது, ‘நாம் யார்?’ என்ற கேள்விக்கு இக்கோட்பாடு மூலம் விடைகிடைத்தது. ஆனால், அந்த விடை உண்மையல்ல. ஒருகாலத்தில் இழந்த தங்களுடைய பொற்கால சமூகத்தை மீண்டும் கட்டியமைக்க இனப் பெருமையை மீட்டமைக்க வேண்டிய தேவை நவீன தேசியத்திற்கு இருந்தது.
நமது இந்திய நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வர்ண சாதியமைப்பு பல்வேறு வகையில் இனக் கொள்கையோடு இணக்கம் பெற்றிருந்தது. இனக்கோட்பாடும், சாதியக் கோட்பாடும் அடிப்படையில் வேறு வேறு என்றாலும் அவற்றிடையிலான ஒற்றுமைகள் இந்திய நாட்டின் பண்பாட்டுச் சூழலில் புதிய தாக்கத்தை உருவாக்கியது. சாதி என்பது ஓர் உயர்ந்த சாதி அடிப்படையில், பிற சாதிகளை தனக்குக் கீழ் நிலையில் வைத்துப் பார்ப்பதாகும். ஒரு சாதிக்கும், மற்றொரு சாதிக்கும் இடையிலான இடைவெளிக்கு ஏற்ப கீழ் நிலையில் இருக்கும் சாதியின் பாதகமான அம்சங்கள் அதிகரிக்கும். சாதி பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக் கப்படுவதால், அது ஓர் உயிரியல் பண்புமாகும். சாதிக்கலப்பு கண்டனத்திற்குரியதானது. ஒட்டு மொத்த சமூகமும், சாதியமைப் பிற்கு ஏற்ப, உயர்ந்த சாதியினர் செல்வமும், அதிகாரமும் படைத் தவராகவும், தாழ்ந்த சாதியினர் வறுமையும், சமூகத்தில் உரிமைகள் ஏதுமற்றும் இருக்குமாறு இயங்குகிறது. மேற்குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தும் இன அடிப்படைக் கோட்பாட்டிற்கும் பொருந்தும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலெழுந்த இன அடிப்படைக் கொள்கை பல நாடுகளிலும் ஆழ்ந்த தாக்கத்தை விளைவித்தது. உதாரணமாக ஆரியஇனக் கொள்கையை எடுத்துக் கொள்வோம். ஆரியன் என்ற சொல் முதலில் ஜெர்மன் மொழியில் உருவாகியது. பெரிசிய மக்களைக் குறிக்க அச்சொல் பயன்படுத்தப் பட்டது. பின்னர் பாரி° நகரில் 1854ம் ஆண்டு காம்டே டி கோபி நியூ என்பவர் ‘மனித இனங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகள்’ என்ற 4 தொகுதிகள் அடங்கிய நூலை எழுதினார். பிரெஞ்சுப் புரட்சிக்கு எதிரான கருத்துக்களையும், அரச குடும்பத்திற்கு ஆதரவான கருத்துக்களையும் கொண்டிருந்த இவர் ஆரிய இனத்தின் தூய்மை குறித்தும், மேன்மை குறித்தும் இதில் குறிப்பிட்டுள்ளார். இனத் தூய்மையை பாதுகாத்து வந்த வரையிலும் ஐரோப்பியர்கள் (ஆரியர்கள்) உயர்ந்த பண்பாட்டு நாகரீகத்தைப் பெற்றிருந்தனர் எனவும், இனக் கலப்பு அவர்களது நாகரீகத்தை அழிவுக்கு கொண்டு சென்று விட்டது என்றும் கூறினார். மேலும், மனித குலம் மூன்று இனங்களை உடையது அவை கறுப்பு, மஞ்சள், வெள்ளை இனங்கள் எனவும், இதில் கறுப்பு மக்கள் குறைந்த அறிவும், முரட்டு சுபாவமும் உடையவர்கள் எனவும், மஞ்சள் நிறத்தினர் வியாபா ரத்தில் கெட்டிக்காரர்களாக இருந்தபோதிலும் நுண்ணறிவு இல்லாதவர்கள் எனவும், இதில் வெள்ளை இனமே நற்குணங்கள் பொருந்தியது எனவும் கூறினார். சுத்தமான வெள்ளை இனமே ஆரியர்கள் என்ற இவரது கருத்தை ஹிட்லர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தி லட்சக்கணக்கான யூதர்களை இனப்படுகொலை செய்தான். ஆரியர்கள் உலகெங்கிலும் பரவி தரக்குறைவான மனித இனங்களை அழிக்க வேண்டும்; இதற்கு யூதர்கள் எதிரிகள்; எனவே முதலில் அவர்களை ஒழிக்க வேண்டும் என்று பேசினான். அதற்கு ஆதாரமாக, இவரது கருத்தை ஹிட்லர் முன்வைத்தான். தனது ஜெர்மானிய ஏகாதிபத்திய அரசியலுக்கு இனவாதங்களை ஹிட்லர் பயன்படுத்தினான். ஐரோப்பாவில் உருவான இத்தகைய இனக் கோட்பாடுகள் இந்திய மண்ணிலும் தாக்கத்தைச் செலுத்தியது.
இந்திய வரலாற்றில் ஆரியர்கள், திராவிடர்கள் என இனக்கோட்பாட்டை இந்த அடிப்படையிலேயே உருவாக் கினார்கள். மாக்° முல்லர் என்ற ஜெர்மானிய அறிஞர் முதன் முதலாக வேதங்களை ஆய்வு செய்து அதை ஆரிய இனத்தோடு தொடர்பு படுத்தினார். வில்லியம் ஜோன்° என்பவர் கிரேக்க, லத்தீன் மொழிகளுக்கும், சம°கிருதத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து இவையனைத்தும் ஒரு பொதுவான மொழியிலிருந்து உருவானவை என்கிற முடிவுக்கு வருகிறார். நடப்பில் உள்ள ஒரு சில மொழிகளை வைத்து இந்தோ ஐரோப்பிய மொழி ஒன்று இருந்தது என்ற கற்பிதம் செய்து பின்னால் இந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசியவர்கள் அனைவரும் ஆரியர் என்ற கருத்து உருவாக்கப்பட்டதாக பிரபல வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். இதைப்போலவே, நடப்பில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒரு தொல் திராவிட மொழியிலிருந்து உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. ஆரியர்கள் இங்கு வருவதற்கு முன்பே திராவிடர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் 1920 களில் சிந்து சமவெளியில் அங்கு வேதகாலத்திற்கு முற்பட்ட ஒரு நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. பண்பாடும் மற்றும் மொழி அடிப்படையில் அமைந்திருக்க வேண்டிய ஆய்வுகள் ஆரிய இனம் எனவும், திராவிட இனம் எனவும் இனரீதியாக இந்திய சமூகத்தைப் பிரித்துப் பார்ப்பதற்கு கொண்டு சென்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரிய இனத்தின் மேன்மையையும், தூய்மையையும் புனரமைக்கும் பணியைஆரிய சமாஜ் போன்ற அமைப்புகள் துவங்கின. சத்தியப்பிரகாஷ் என்ற ஆரிய சமாஜத்தின் நிறுவனர் சுவாமி தயானந்த சர°வதி தன்னுடைய நூலில் இனங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
“ஆரிய வர்க்கத்திற்கு வடகிழக்கிலும், வடக்கிலும், வட மேற்கிலும், மேற்கிலும் வாழ்கிறவர்கள் த°யூக்கள், அசுரர்கள் மற்றும் மிலேச்சர்கள் ஆவர். அதுபோல தெற்கிலும், தென்கிழக்கிலும், தென் மேற்கிலும் வாழ்கிறவர்கள் ராட்சதர்கள் என அழைக்கப்பட்டனர். ராட்சதர்கள் எப்படி இருப்பார்கள் என இன்றைக்கிருக்கும் அருவப்பான தோற்றமுடைய நீக்ரோக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆர்ய வர்க்கத்திற்கு மறுபுறம் வாழும் மக்கள் நாகர்கள் எனப்பட்டனர். அவர்கள் நாடு ஆர்யவர்த்ததில் வாழ்ந்தவர்களின் பாதங்களுககு கீழ்ப்பகுதியில் அமைந்ததால் பாதாளம் எனப்பட்டது... இஷ்வாகு காலம் துவங்கி கவுரவர் மற்றும் பாண்டவர் காலம் வரை ஆரியர்களே உலகம் முழுவதையும் ஆட்சி செய்தார்கள். வேதங்களை ஆர்யவர்த்தம் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பிரச்சாரம் செய்யவும், கற்றுக் கொள்ளவும் செய்தார்கள்”.
இதே போல், ஆரிய மேன்மையை வலியுறுத்தும் இத்தகைய கருத்துக்களுக்கு மாற்றாக திராவிட மேன்மையை வலியுறுத்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாத்மா ஜோதிபா பூலே சம°கிருதம் பேசும் பிராமணர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள்; எனவே அவர்கள் இந்த நாட்டிற்கு அந்நியமானவர்கள்; தாழ்ந்த சாதியைச் சேர்ந்த மக்களே இந்த நாட்டிற்குச் சொந்தக் காரர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வெளியி லிருந்து வந்தவர்களல்ல, சிந்து சமவெளி நாகரீகமே ஆரிய நாகரீகம்தான் என்கிற கருத்தை இந்துத்துவ சக்திகள் முன் வைக்கின்றன. மொத்தத்தில் இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், வரலாற்றை அறிவியல் பூர்வமாக அணுகவும், இத்தகைய இன அடிப்படையிலான கோட்பாடுகள் பயனளிக்காது என்பதே உண்மை.
இந்தியத் துணைக்கண்டத்தில் வெவ்வேறு காலக்கட்டங் களில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர். முதற் குடியேற்றம் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து புறப்பட்டு ஆ°திரேலியா வரை சென்ற ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் நாற்பது அல்லது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என்று மரபணு ஆய்வுகள் காட்டுகின்றன. பிறகு தெற்கு ஈரானிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் வடமேற்குப் பகுதி வழியாக சுமார் முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியா வரை ஒரு மக்கள் கூட்டம் வந்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து பல்வேறு குடியேற்றங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்துள்ளன. இதில் ஒரு சில பழங்குடி மக்கள் சமூகம் தவிர்த்து, மற்ற பகுதிகளில் ஒன்றாகக் கலந்து ஒரு தனி இனம் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு இந்திய சமூகம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு சாதிப் பிரிவுகளிடையே பண்பாட்டுத் தொகுதி வாரியாக மரபணுப் பாங்கு அமைகிறதா என்ற ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஸீஸந்தராய் சவுத்திரி, சங்கீதா ராய், பாரத் தாபி மஜூம்தார் அடங்கிய அறிஞர் குழு இத்தகைய ஆய்வினை மேற் கொண்டது. அதில் கிடைத்த முடிவு இந்தியர் அனைவரிடமும் மரபணு ரீதியாக ஒரு குறிப்பிட்ட பொதுவான அம்சம் அனைவரிடமும் விரவியிருந்தது. அடிப்படையில் அனைவரும் ஆசிய பூர்வீகர்களின் சந்ததியினரே என்பது உறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் மறைந்த மானுடவியல் அறிஞர் கே.என்.சிங், எந்த ஒரு தேசமும், அரசும் அல்லது மக்கள் சமூகமும் தங்களை சுத்தமான இனம் என்றோ, முழுமையானவர்கள் என்றோ, மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்றோ கூறிக் கொள்ள முடியாது என்று ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். அவருடைய ‘இந்தியாவின் மக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூலில் சில சுவையான தகவல்களைத் தருகிறார்.
“ இந்து மற்றும் இ°லாமியக் கோட்பாடுகள் ஆகிய இரண்டையும் ஒரே சேரக் கடைபிடிக்கும் 35 சமூகங்கள் இங்கு உள்ளன; கிறி°தவ மற்றும் இந்துக் கோட்பாடுகளை ஒரு சேரக் கடைக்கிடிப்பவர்கள் 116 சமூகங்கள், 16 சமூகங்கள் இந்து, இ°லாமிய, சீக்கியக் கோட்பாடுகளை ஒன்று சேர்த்துக் கடைபிடிக்கின்றன; 94 சமூகங்கள் பழங்குடி மத வழிபாடு மற்றும் கிறி°துவ நம்பிக்கைகளை இணைத்துக் கொண்டுள்ளன; மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடைப்பிடிக்கும் பழக்கவ ழக்கங்கள், அவர்கள் தங்களுக்குள் கடைப்பிடிக்காத பழக்க வழக்கங்களை விட அதிகம். சைவ உணவுப் பழக்கத்திற்கு உயர்ந்த மதிப்பு அளிக்கப் பட்ட போதிலும் 20 சதவீத சமூகங்களே சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். முட்டைகளை சைவ உணவாக எண்ணி சாப்பிடுகிறவர்கள் உள்ளனர். வெங்காயத்தையும், பூண்டையும் விலக்கி வைக்கிற சைவ உணவுக்காரர்களும் உள்ளனர். தனியாகப் பார்க்கும் போது ஆண்கள் பெரும்பாலும் அசைவ உணவைச் சாப்பிடுகிறார்கள்”.
இந்திய மக்கள் இவ்வாறு பல்வேறு ஒத்த பண்புகளையும், வேற்றுமைகளையும் தங்களிடத்தே கொண்டுள்ளார்கள். இவர்களை இன ரீதியாக ஆரிய இனம் என்றோ, திராவிட இனம் என்றோ தனித்தனி இனங்களாகப் பார்க்கும் அரசியலுக்கு துணை போவது இனக் கொள்கையை தனது சுரண்டலுக்காக தோற்றுவித்த முதலாளித்துவத்திற்கு துணை போவதாகும்.
ஆதாரம்
1. Biology as Politics - Somnath Zutshi - Seagull Books
2. Early India - Romila Thapper -Penguin Books
3. Front Line June30, 2006
July 20, 2006
நக்சலிசம் வர்க்கப் போராட்டமா? பயங்கரவாதமா?
இந்த இரண்டு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்கள் சாதாரண அப்பாவி மக்கள். மும்பை குண்டு வெடிப்புக்கு காரணம் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்றால், சத்தீஸ்கர் சம்பவத்திற்கு உள்நாட்டு நக்சலிசவாதிகள் காரணம்.
நக்சலிசம், தற்போது மாவோயிஸ்ட்டுகள் என்று அழைக்கப்படுகிறது. நக்சல் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமற்றும் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரிய குழுவாக இருப்பது மாவோயிஸ்ட்டுகள். இவர்கள்தான் சத்தீஸ்கர் சம்பவத்திற்கு காரணமானவர்கள்.
நக்சலிசம் இந்திய மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்து, புதிய ஜனநாயக புரட்சியை நடத்தப்போவதாக கூறிக்கொள்கிறது. இதற்காக கிராமப்புறங்களை மையமாக வைத்து ஆயுதப்போராட்டங்கள் மூலம் புரட்சிகர விடுதலை மையங்களை உருவாக்குவது என்பது அவர்களது திட்டம். இது 1969இல் இருந்து நடைபெற்று வருகிறது. தற்போது நக்சலிசவாதிகள் இந்தியாவில் வடமாநிலங்களிலும், தென் மாநிலத்தில் ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ளனர். தங்களது செயல்பாட்டை நேபாளம் வரை நீட்டி செயல்பட்டு வருகின்றனர்.
ஆயுதபாணியாக நக்சலிசவாதிகளிடம் நவீன ஆயுதங்களை செயல்படுத்தும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதனை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் கூட தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் தங்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு யாரையும் பயன்படுத்திக் கொள்வது அவர்களது நோக்கமாகத் தெரிகிறது.
இந்தியாவில் புதிய ஜனநாயகம், சோசலிசத்தை கொண்டு வருவோம் என்று கூறிக்கொண்டிருக்கிற நக்சலிசவாதிகள் இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் (அவர்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை) நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதாக கூறிக் கொண்டு, நடைமுறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டிய சரியான தருணம் இது. கடந்த 35 ஆண்டு காலமாக அவர்கள் சாதித்தது என்ன? இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்கள் இன்றைக்கும் யாருக்கு பின்னால் அணிதிரண்டு வருகிறார்கள். அதேபோல் மதச்சார்பற்ற இந்தியாவில் சங்பரிவார மற்றும் இதர மத அடிப்படைவாதிகள் மதக்கலரத்தை தூண்டுவதும், மக்களை ஜனநாயக ரீதியாக - வெளிப்படையாக படுகொலை செய்வதற்கு எதிராக நக்சலிசவாதிகளின் போராட்டம் ஏதாவது நடைபெறுவதுண்டா? அவர்களுக்கும் வெகுஜனங்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
அதேபோல் வர்க்கப்போராட்டம் என்ற பெயரில் எந்த உழைப்பாளி வர்க்கத்தை திரட்ட வேண்டுமோ, அடிப்படையில் அவர்களைத் திரட்டாமல் அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்தான் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சத்தீ°கரில் பழங்குடியின மக்களையும், அவர்களது உடைமைகளையும், உரிமைகளையும் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அவர்கள் திரட்டினால், அதே பழங்குடி மக்களை ஆளும் வர்க்கம் நக்சலிசவாதிகளுக்கு எதிராக திரட்டுகிறது. சல்வா ஜூடு இது முழுக்க, முழுக்க நக்சலிசவாதிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு படையே! இந்த படையில் இருப்பவர்கள் யார்? இவர்கள் உழைப்பாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இல்லையா? நக்சலிசவாதிகளின் தவறான நடைமுறை தந்திரத்தால், சத்தீஸ்கரில் உள்ள அனைத்து தரப்பு மக்கைளயும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக களம் இறக்குவதற்கு மாறாக, பழங்குடி மக்களுக்கு உள்ளேயே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களது வர்க்கப் போராட்டத்திற்கு அவர்களே முட்டுக்கட்டை போடும் நிலைதான் சத்தீ°கரில் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னால் மேத்தா பட்கர் அவர்கள் சர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டத்தால் பழங்குடி மக்கள் எவ்வாறு அவர்களது வாழ்விடத்தை விட்டு அகற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கி, அதற்கு எதிராக இயக்கம் கண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவரது போராட்டம் இந்தியா முழுவதும் உள்ள உழைப்பாளி மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் இதன் முடிவு என்னவாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். இதுவொரு வெகுஜன அரசியல் போராட்டமாக வடிவெடுத்தது. ஆனால் நக்சலிசவாதிகள் சல்வா ஜூடு இயக்கத்திற்கு எதிராக ஆயுதம்தாங்கி போராடுகிறோம் என்ற பெயரால் 31 அப்பாவி மக்களை கொலை செய்தது பயங்கரவாதமில்லையா? இதுதான் வர்க்கப்போராட்டமா? பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமற்று இருந்த இடத்தையும் விட்டு தலைமறைவாகியுள்ளார்களே இது என்ன வெகுஜன போராட்டமா? இதைத்தான் மார்க்சிசம் போதிக்கிறதா? யாரிடம் இருந்து கற்றார்கள் இந்த நடைமுறையை, மாவோ இப்படித்தான் செயல்படச் சொல்லியிருக்கிறாரா?
இந்த இடத்தில் இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். கேரளாவில் சி.கே. ஜானுவின் போராட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், கேரளாவில் உள்ள பழங்குடி மக்களின் நிலவுரிமையை பாதுகாக்க விரிந்த - வெகுஜன போராட்டத்தை நடத்தவில்லையா? இவர் நடத்திய போராட்டத்தின் மூலமாக குறைந்தபட்ச வாழ்விடங்களையாவது அந்த பழங்குடி மக்களால் மீட்கப்பட்டுள்ளதே? நக்சலிவாதிகள் கிராமங்களிலும், மலைகளிலும் உள்ள கிராமங்களில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்ற பெயரில் ஒரு சர்வாதிரத்தையல்லவா நடத்தி வருகிறார்கள்? இவர்களுக்கு எதிராக யாராவது குரல் கொடுத்தல் அவர்களை வர்க்க எதிரிகளாக பார்த்து கொலை செய்யும் போக்குத்தானே நடைபெற்று வருகிறது.
புரட்சி என்பது மக்களின் திருவிழா என்று கூறுவார்கள். இந்தியா முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள் புரட்சியை தங்கள் சொந்த குழந்தையை பெற்றெடுப்பதுபோல் பெற்றெடுப்பார்கள். அந்த நேரத்தில் ஆளும் வர்க்கம் என்ன நடைமுறையை கையாள்கிறதோ, அதையே உழைக்கும் வர்க்கம் கையாளும். ஆயுதம் எடுத்தால், அதற்கெதிராக ஆயுதம் எடுப்பார்கள். ஆனால் தற்போது நக்சலிச வாதிகள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் இறுதியாக செய்ய வேண்டியதை தாங்கள் செய்வதாக கூறிக் கொண்டு உழைக்கும் மக்கள் தத்துவத்திற்கு குழிதோண்டி வருகின்றனர்.
இறுதியாக அரசியல் ரீதியாக இன்றைக்கு இந்தியாவில் உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் கொள்கையால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைப்பாளி மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் வெகுஜன போராட்டங்களில் நக்சலிவாதிகளின் பங்களிப்பு என்ன? மொத்தத்தில் வர்க்கப்போராட்டம் என்ற பெயரில் பெரும்பாலான உழைப்பாளி மக்களிடம் இருந்து பிரிந்து, தனிமைப்பட்டு, குறுங்குழுவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர் நக்சலிவாதிகள். இதன் மூலம் இவர்கள் சாதிப்பது இடதுசாரி சிந்தனைக்கு எதிரான கருத்தாக்கத்தை உருவாக்குவதுதான். மேலும் புரட்சி என்ற பெயரால் தலித் மற்றும் பழங்குடி மக்களையும், இதர பகுதி உழைப்பாளி மக்களையும் வேட்டையாடும் செயலில்தான் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது செயல் எந்தவிதத்திலும் பயங்கரவாதிகளிடம் இருந்து வேறுபட்டு நிற்கவில்லை. எனவே தங்களது நடைமுறை கொள்கையில் உள்ள கோளாறை சரி செய்யாமல், ஒரு பரந்துபட்ட வெகுஜன இயக்கத்தை கட்டுவதற்கு ஜனநாயக பூர்வமாக முன்வராமல் ஆயுதப்போராட்டம் என மாவோயிஸ்ட்டுகள் பேசிக் கொண்டிருந்தால் சல்வா ஜூடு போன்ற இயக்கங்களையும் அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்.
July 19, 2006
பிளாகருக்கு பொடா! கருத்துரிமை சிறைவைப்பு!!
உலகமயமாக்கல் - நவீனமயமாக்கல், நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக சாதாரண தொழிலாளர்களுக்கு கிடைத்த பேராயுதம்தான் பிளாகர். இன்றைய மீடியாக்கள் அனைத்தும் ஒரு சார்போடு செயல்படும் நேரத்தில், சுதந்திரமாக தங்களது கருத்துக்களை உலக மக்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது பிளாகர். இந்த பிளாகர் உலக மக்களை ஒரு கயிற்றில் இணைத்தது. பல்வேறு தத்துவங்கள், பல்வேறு பிரிவுகள், வர்க்க பேதங்கள், இனபேதங்கள் என பல கருத்துக்கள் இந்த பிளாகருக்குள் உலாவந்தாலும், ஒவ்வொரு கருத்துக்கு எதிராகவும் மற்றொரு கருத்தை வைத்து சுதந்திரமாக விவாதித்தல் என்ற நடைமுறை மூலம் உலகளவில் நல்லதொரு சமூகத்தை அமைத்திட பிளாகர் உதவி வருகிறது என்றால் அது மிகையல்ல.
உலகமயமாக்கலுக்கு எல்லையுண்டு. அது வெறும் பெயரில்தான் உலகமயமாக்கல்; ஆனால் அதன் பலனை அனுபவிப்பது உலகளவில் உள்ள டிரில்லினியர்களும், பில்லினியர்களும், மில்லினியர்களும்தான் - ஏகாதிபத்திய பகாசூர நிறுவனங்கள்தான் இதன் மூலம் பயனடைகின்றது. பிளாகர் அப்படியல்ல அது எல்லையற்ற சுதந்திரத்தை அதன் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கி வருகிறது. தங்களது சிந்தனைகளை மிக உயரே கொண்டுச் சென்றதில் பிளாகருக்கு மிக முக்கியமான பங்குண்டு.
இந்த பின்னணியில் பிளாகரின் செயல்பாடு இந்தியாவில் உள்ள ஆளும் வர்க்கங்களை நடுநடுங்கச் செய்துள்ளது. அதன் விளைவாகத்தான், இந்த கருத்துரிமைக்கு தடைபோடு துணிந்துள்ளனர். தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திற்கு மூடத்தனமான, மூடப்பழக்கங்களை விதைக்கும் கருத்துக்கள்தான் தேவை - சன் டி.வி.யில் அதைத்தான் நாம் பார்க்க முடியும். எனவே தகவல் தொழில்நுட்பத்தின் ஒரு அங்கமாக செயல்படும் பிளாகர் அரசியல் முதல் ஆட்சியாளர்கள் வரை சுதந்திரமாக உடனுக்குடன், சூடாக கருத்துக்களை பரிமாறிக் கொள்வது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பிடிக்கவில்லை. எனவேதான் அவர்கள் இந்த சுதந்திர மீடியாவை பொடா என்னும் கொடிய சட்டம் செய்வதை விட மிக மோசமான - சதி செயல்மூலம் அதனை தடை செய்து வருகின்றனர். எனவே, இதற்கு எதிரான போராட்டத்தை நாம் அடையாளம் காண வேண்டும். சுதந்திரமாக கருத்தை கூறியவர்கள், அந்த சுதந்திர காற்றை சுவாசிக்க யாரரெல்லாம் தடை செய்தார்களோ, அது ஏர்டெல், சிபி, ரிலையன்°... அவர்களது பொருட்களை சேவைகளை நாம் ரத்து செய்ய வேண்டும். இப்படிப்பட்ட அடையாளப்பூர்வமான போராட்டத்தை நாம் நடத்துவதன் மூலம்தான் இதனை மீண்டும் வென்றெடுக்க முடியும்.
July 17, 2006
பயங்கரவாதம் : ஓநாயின் அலறல்
இந்துத்துவ இட்லர் ‘அத்வானி’ கூறுகிறார். பயங்கரவாத்தை ஒடுக்க முடியாவிட்டால் ஆட்சியை விட்டு ஓடுங்கள் என்று:
அத்வானி இவ்வாறு கூறுவதற்கு கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா? இவர்களது நாக்கில் நரம்பு இருக்கிறதா இல்லையா? பா.ஜ.க. ஆட்சி செய்த ஐந்தாண்டு காலத்தில், அதுவும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ‘பொடா’ என்ற பேய் சட்டத்தை கொண்டு வந்த பிறகு பாராளுமன்றத்திற்கு உள்ளேயே பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தார்களே? இதனை மறந்து விட்டாரா அத்வானி! அத்வானி மறக்கலாம், உலகம் மறக்காது! இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள்.
ஜிகாத் பயங்கரவாதத்தை இந்திய மக்கள் ஒரு சேர கண்டிக்கிறார்கள். பயங்கரவாதம் வேறோடும், வேறடி மண்ணோடும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பயங்கரவாதிகள் இந்திய நாட்டின் ஒற்றுமையை சிதைப்பதற்காகவே இத்தகைய ஈனத்தனமான செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய மக்கள் இவர்களது நோக்கத்தை சிதறடித்து விட்டனர். இவர்களது நோக்கத்தில் மண்ணைத் தூவி விட்டனர். இந்திய மக்களின் பாரம்பரியமான ஒற்றுமை இந்த நேரத்தில் வெளிப்பட்டுள்ளது. இந்திய மக்களிடம் காணப்படும் இத்தகைய ஒற்றுமையைத்தான் பா.ஜ.க.வும் - சங்பரிவார ஓநாய்களும் விரும்பவில்லை.
இந்த நேரத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகள் ஆட்சியில் இருந்திருந்தால், 7/11 யை பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாக வேட்டையாடியிருப்பார்கள். மத்தியில் மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால், இவர்களது கனவு நிறைவேறவில்லை. அதனால்தான் அத்வானியின் ஓலம் ஓங்கி ஒலிக்கிறது.
இன்றைக்கு 7/11யை எதிர்த்த மோடி முழங்கப்போகிறாராம் மும்பையில்! மும்பை மக்களே உஷார்! உங்களிடையே விஷ விதைத் தூவுவதற்கு வருகிறார் மோடி. மோடியின் முகம் அருவருக்கத்தக்க இந்துத்துவ பயங்கரவாதத்தின் அடையாளம்! குஜராத்தில் கோத்ரா இரயில் எரிப்பு விபத்தை பயன்படுத்தியே 2000த்துக்கும் மேற்பட்ட குஜராத் சிறுபான்மை - இசுலாமிய மக்களை நரவேட்டையாடினானே மோடி இதற்கு பெயர் என்ன! தேச பக்தியா? பயங்கரவாதமா? திவிரவாதமா? கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை வெட்டிக் கொன்ற பயங்கரவாதிகள் யார்? உலகில் இவர்களை விட கீழ்த்தரமான பயங்கரவாத செயலை நிறைவேற்றுபவர்கள் யாராவது உண்டா? பெ°ட் பேக்கரியில் 14 பேரை உயிரோடு கொளுத்திய பயங்கரவாதிகள் யார்? இந்துத்துவ வேடிமிட்டிருக்கும் உள்நாட்டு பயங்கரவாதிகள் மோடியின் நிழலில்தானே உலா வருகிறார்கள்...
மோடி முழங்குகிறராம் பயங்கரவாதத்தை எதிர்த்து, மும்பை மக்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும், அவர்களிடம் மதகுரோதத்தை தூண்டுவதற்கும்தான் மோடியை இந்துத்துவவாதிகள் பயன்படுத்துகிறார்கள்.
மீண்டும் ஒரு 7/11 நடக்காமல் இருக்க வேண்டுமானால் பொடாவை கொண்டு வரவேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள் இந்துத்துவவாதிகள், இவர்களது குரலையே ஒலிக்கிறார் ஜெயலலிதா. இவர் மட்டும் என்ன? 2000 பேரை கொன்று குவித்த குஜராத் பாசிசவாதி மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சென்று மோடித்துவ பயங்கரவாதத்திற்கு துணை நின்றவர்தானே... இவரிடம் இருந்து வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்!
நேற்று (16.07.2006) இந்தியன் எக்°பிர° நாளிதழில் வெளியான கட்டுரை மிக அற்புதமாக இருந்தது. அந்த கட்டுரையின் முக்கியமான அம்சம் என்னவென்றால், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்பி! இந்தியாவில் 25 கோடி பேர் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கிறார்கள், அவர்களுக்கு வேலையில்லை, உணவு இல்லை, பாதுகாப்பான வாழ்க்கை இல்லை. இத்தகைய மக்களைத்தான் பயங்கரவாதிகள் கவர்ந்திழுக்கிறார்கள்... எனவே இன்னொரு 7/11 நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் வறுமைக்கும், வேலையின்மைக்கும், கல்வியின்மைக்கும் தீர்வுகாண வேண்டும் என முடித்திருக்கிறார்.
பா.ஜ.க.வுக்கும், சங்பரிவாரத்திற்கும் இத்தகைய அக்கறை உண்டா? இல்லையே! அவர்களது அக்கறையெல்லாம் அமெரிக்கா மீதும், பன்னாட்டு முதலாளிகள் மீதும்தான்... பயங்கரவாதத்தின் வேர்களை நாம் வெளிநாட்டில் தேடுவதற்கு முன்னால் உள்நாட்டில் - புனித வேடமிட்டிற்கும் பயங்கரவாதிகளின் வேர்களை அடையாளம் காணவேண்டும். இந்த வேர்களை நம்மால் அழிக்க முடிந்தால், வெளியில் இருந்து நம் எல்லைக்குள் வரும் வேர்களை எளிதில் அடையாளம் காண முடியும்!
எழுக இந்திய மக்களே! போற்றுவோம் இந்திய மக்களின் ஒற்றுமையை!! வேறறுப்போம் உள்நாட்டு - வெளிநாட்டு பயங்கரவாதிகளை!!!
July 14, 2006
7/11 - லேட் ரியாக்ஷன்
காஷ்மீரில் தங்களது நோக்கம் நிறைவேறாத பயங்கரவாதிகள், தங்களது நெட்ஒர்க்கை விரிவுபடுத்தியுள்ளதையே இது காட்டுகிறது. இந்திய - பாகிசுதான் உறவு பலப்பட்டு வரும் இந்நேரத்தில், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பயங்கரவாதிகள் காஷ்மீர் பிரச்சினையை இத்தகைய கேவலமான பயங்கரவாத தாக்குதல் மூலம் தீவிரமடைய செய்ய முயல்கின்றனர்.
பயங்கரவாதிகளின் கீழ்த்தரமான நோக்கத்திற்கு இந்திய மக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகியிருந்தாலும், இந்திய மக்கள் தங்களது ஒற்றுமையை இந்த நேரத்தில் வெளிப்படுத்தியுள்ளது பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலை விட, பன்மடங்கு பலமானது. அவர்கள் எதிர்பார்த்தது இந்திய நாட்டில் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுததான். பிரதமர் மன்மோகன் சிங் கூறியது போல நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதனை நம் இந்திய மக்கள் வெளிப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.
பயங்கரவாதிகளின் இந்த கொலைவெறித் தாக்குதலை இந்திய மக்கள் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பாகிசுதானில் கூட இதற்கு எதிரான கண்டனக் குரலை எழுப்பியுள்ளனர். பயங்கரவாதிகள் எந்த முகத்தை கொண்டிருந்தாலும், அவர்கள் ஏந்த நோக்கத்தை வைத்திருந்தாலும் பயங்கரவாதச் செயலை உலகம் ஏற்காது.
கடந்த சில வருடங்களாக உலகலாவில் செயல்படும் அல்கய்தா உட்பட லஷ்கர் இ தொய்பா உட்பட பல ரகமான பயங்கரவாதிகள் இந்திய நாட்டை ஒரு குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர். அது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்றத்தை தாக்குதல் உட்பட (அப்போது பொடா சட்டம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.) தற்போதைய தாக்குதல் வரை இது உறுதிப்படுத்துகிறது.
பயங்கரவாதிகளின் இந்த நோக்கத்தை அவ்வப்போது பத்திரிகைகளும், உளவுதுறையும் வெளிப்படுத்தி வந்தாலும், இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதை அவர்களால் மோப்பம் பிடிக்க முடியாதது உளவுத்துறையில் இன்னும் கூடுதல் செயல்திறன் தேவைப்படுவதைத்தான் இது உணர்த்துகிறது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதிகள் நம்முடைய கார்கிலுக்குள் ஊடுருவிதைக்கூட ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் கூறிய பின்புதான் நமக்குத் தெரிந்தது. எனவே உளவுத்துறை மிக பலவீனமாக இருப்பதைத்தான் இது காட்டுகிறது.
அதேபோல் ஒரு இடத்தில் ஒரு குண்டு வெடிப்போ அல்லது வேறு ஏதாவது நிகழ்வோ நடந்து விட்டால், ஆபத்தில் உள்ள மக்களை காப்பாற்றுவதில் போலீசு தரப்பில் பெரும் மெத்தனம்தான் நிலவுகிறது. மும்பையில்கூட நம்முடைய மக்கள்தான் இந்தப் பணிகளில் 98 சதவீதம் ஈடுபட்டார்கள். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கியமான நகரங்களிலும் இதுபோன்ற அவசர கால பணிகளுக்கு துரிதமாக செயல்படும் ஒரு சேவை அமைப்பை அரசு ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக இராணுவத்தில் ஒரு பகுதியை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்தலாம்.
அடுத்து பயங்கரவாதம் குறித்தும், அவர்களது நடவடிக்கை குறித்தும் நம்முடைய சிவில் சமூகத்திடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும். நம்முடைய மீடியாக்களுக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு.
பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய மக்கள் உலக மக்களோடு கரம் சேர்த்திட வேண்டும். அமெரிக்காவோடு அல்ல.
இலங்கைப் பிரச்னை:அர்த்தமுள்ள அமைதிக்காக..
July 04, 2006
ஜெயமாலாவும் - மீரா ஜாஸ்மீனும்
சரி! இது ஏதோ பத்தோடு ஒன்று என்று விட்டு விடலாம் என்று பார்த்தால், இது அவ்வளவு சீக்கிரம் விடக்கூடிய பிரச்னையாக தெரியவில்லை.? என்ன காரணம் இந்து மதம் பெண்களை தீண்டத்தகாதவர்களாக கருதுகிறது; மனு தர்மம் பெண்களையும் தீண்டத்தகாதவர்கள் என்று கூறுகிறது. அந்த அடிப்படையைத்தான் தற்போதும் இந்து சனாதனவாதிகள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கடவுளின் முன் அனைவரும் சமம்! என்பதெல்லாம் வெறும் வெற்று பேச்சுக்கள்தான். கடவுளின் சிலையை தொடுவது முதல் அதன் வெளி வாசலில் நின்று தரிசிப்பது வதை மனிதர்களுக்கு அளவுகோலை நிர்ணயித்துள்ளது இந்து மதம். அதிலும் இன்னும் கொடுமை என்ன வென்றால், பகலில் ஒரு சில ஜாதிகளைச் சேர்ந்த மனிதர்களை வெளியிலேயே வரக்கூடாது என்பதும் இந்திய மண்ணில் இருக்கிறது.
எனவே இந்து மதம் என்பது பார்ப்பன மேல்ஜாதி ஆதிக்கத்தோடு கட்டுண்டு கிடக்கிறது. இது கோடிக்கணக்கான மக்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியுள்ளது. ஜெயமாலாவின் செயலில் என்ன தவறு உள்ளது? அதுவும் இது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்; அப்படியிருக்கையில் இதற்காக தற்போது உயிர் கொடுப்பதன் நோக்கம் என்ன? குறிப்பாக ஐயப்பன் கோவிலில் பனிக்கர்கள் என்ற உயர்ஜாதி பிராமணர்களின் ஆதிக்கமே நிலவுகிறது. அதேபோல் இதர பார்ப்பன ஜாதிகளும் அங்கே பணிபுரிகின்றனர். இந்த விஷயத்தில் இதர பார்ப்பன ஜாதிகளின் மேல் குற்றம் சுமத்தி, அவர்களை விலக்கி வைக்கும் முயற்சியும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் ஜெயமாலா ஐயப்பனை தொட்டு விட்டதால் ஐயப்பனுக்கு கோபம் வந்து விட்டதாம், என்ன கதை இது! ஐயப்பனின் பிறப்பு குறித்தே சர்ச்சை உள்ளது. ஐயப்பன் ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவன் இது விஞ்ஞானத்திற்கு பொருந்தக் கூடியதா? ஏன் இந்து பக்தர்களாலேயே இதை நம்ப முடியுமா? இப்படி அருவருக்கத்தக்க வரலாறை கொண்டு ஐயப்பன் சிலையை (கல் சித்திரத்தை) ஜெயமாலா தொட்டு விட்டாராம், அதனால் ஐயப்பனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டதாம்? உலகில் இதைவிட வேறு ஏதாவது படு கேவலமான மூடநம்பிக்கை இருக்க முடியுமா? இந்த விஷயத்தில் ஐயப்பனை விட ஜெயமாலா விஞ்ஞானப்பூர்வமான பிறப்பை கொண்டுள்ளார். எனவே அவருக்கு இயல்பாகவே மனிதனுக்குரிய இயல்பான உயர்வு உண்டு. நம் பக்தர்கள் இதனை நம்பிக்கை என்று கூறலாம். சரி இது பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கமல்ல. இது கடவுள் பெயரால் நடத்தப்படும் மனிதர்களுக்கு எதிரான மனித உரிமை மறுப்பு குறித்த அரசியல். ஜாதிய சனாதனவாதிகளின் ஆதிக்க அரசியல் இதனுள் புதைந்து கொண்டிருப்பதை பார்க்காமல் யாராவது இதனை இந்து மதத்தை புண்டுத்தும் நோக்கம் என்று குறிப்பிட்டால் அவர்கள் குறித்தும் நாம் வருந்துவதற்கு ஒன்றுமில்லை.
அடுத்து, மீரா ஜாஸ்மின் இவர் கிறித்துவர், இந்து என்று சொல்லிக் கொண்டு கோவிலுக்குள் சென்று விட்டார். இதனால் என்ன நேர்ந்து விட்டது? அந்த கோவிலுக்குள் இருக்கும் சிலை கண்ணீர் விடித்ததா? அல்லது அந்த பகுதியே பற்றி எரிந்து விட்டதா? ஒன்றும் நேரவில்லை. கடவுளுக்கு கூட இந்தியாவில் இருக்கும் மத அரசியல் தெரியுமா? புரியவில்லை! சரி அவர்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி விட்டால் தீட்டு ஒழிந்து விடுமா? அப்படியென்றால் ஒரு தலித், தான் 10 ஆயிரம் ரூபாய் கட்டத் தயாராக இருப்பதாக கூறிக் கொண்டு அந்த சிலைக்கு பூஜை செய்ய முன்வந்தால், அதை நீங்கள் அனுமதிப்பீர்களா? இப்படி வாதிடுவதே கூட மனித உரிமை மீறல்தான். மனிதர்களுக்குள் என்ன வேற்றுமை இருக்கிறது.
கடவுளுக்கும், அதனை வழிபடும் மக்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்படும் ஜாதிய ஆதிக்கவாதிகளை அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டால் இந்தியாவில் உள்ள 75 சதவீத பிரச்சினைகள் தீர்ந்து விடும். இடஒதுக்கீடு உட்படத்தான்.
இறுதியாக கூறவேண்டுமானல் இந்த பிரச்சினைகளுக்கு பின் சில மறைந்த பிற்போக்கு கைகள் இருக்கின்றன இவர்களின் நோக்கம் குறிப்பாக கேரளத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியைத் தரவேண்டும் என்பதுதான். கேரள மக்கள் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள் அது குஜராத் அல்ல என்று!