February 27, 2008

அசுரனும் - பகத்தும் ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்!


இணையத்தில் பல நேரங்களில் சுடான விவாதங்கள் ஆரோக்கியமாக நடைபெறுவதுண்டு. இதைவிட கூடுதலாக தனிநபர் தாக்குதல் - ஜாதி அடிப்படையிலான இழி தாக்குதல் வெகுஜோராக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் அசுரனும் பகத்தும்.
முதலில் ஒரு விசயத்தை தெளிவுபடுத்திட வேண்டியுள்ளது. அசுரனும் அவரது தோழர்களும் யாரும் ஒரிஜினல் பெயரைப் பயன்படுத்துவதில்லை. எல்லாம் அனானி முகமூடிகளே... சொல்லப்போனால் ஒருவரே பல முகமூடிகளை அணிந்துக் கொண்டு வேட்டையாடும் நரித்தனமே இவர்களிடம் மிஞ்சுகிறது.
இவர்களது கடைச் சரக்கு மார்க்கெட்டில் வியாபாரமாகவில்லை என்ற (மக்களுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை) ஒரே நோக்கத்திற்காக எப்போதும் சி.பி.எம். வாலைச் சுற்றி வருவதுதான் இவர்களது வழக்கம். (ஒரு சி.பி.எம். தோழர் இவர்களிடம் மாட்டினால் போதும் அதுவே இவர்களின் மகத்தான புரட்சி என்று மனதிற்குள் கொக்கரித்துக் கொள்வார்கள்.)
தொடர்ந்து நான் முன்வைக்கும் விமர்சனங்களில் ஒன்று: இவர்களது கட்சியின் பெயரை எங்கும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. இவர்களது கொள்கை இதுதான் என்று வெளிப்படையாக அறிவிப்பதில்லை. இவர்கள் பேசும் மார்க்சியம் என்பது நாட்டில் உழைக்கும் மக்களின் காவலனாக குரல் கொடுத்து வரும் - போராடி வரும் சி.பி.எம். மற்றும் இதர இடதுசாரிகளைத் தாக்குவதுதான் இவர்களது முதன்மையான நோக்கம். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் பாசையில் முதல் வர்க்க எதிரி சி.பி.எம். (இதனால்தான் இவர்கள் பச்சையாக ஏகாதிபத்தியத்திற்கு கூலியாளாக செயல்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.)
இவர்கள் முன்வைக்கும் விமர்சனம் என்பது ஆரோக்கியமான சுழலை கெடுப்பதாகவே அனைத்து இடத்திலும் காண முடிகிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இழிவுபடுத்திப் பேசுவது. நாகரிகமற்றுப் பேசுவது என்பது இவர்களத வாடிக்கை. இவர்களைப் பொறுத்தவரை எப்போதும் விவாதம் இணையத்தில் நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இவர்களை புரட்சிகரமானவர்கள் - இவர்களே மக்களைக் காக்க வந்த கையாலாகத - நடைமுறையற்ற அசுரர்கள் என்பதை அறிந்துக் கொள்வதற்காக.
அடுத்து இவர்கள் தங்களை மார்க்சிய மேதைகளாக காட்டிக் கொள்வதற்கு - லெனின் - மார்க்சு - எங்கெல்ஸ் - மாவோ... என்று மேற்கோள் காட்டி அனைவரையும் திக்குமுக்காடச் செய்வார்கள். ஆனால் மருந்திற்கு கூட மார்க்சியத்தை நடைமுறையில் பரிட்சித்துப் பார்கக் மாட்டர்கள். அனுபவத்தில் இருந்தும் எதையும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். குருட்டு மார்க்சியர்கள்.
உதாரணமாக ரஷ்ய சமூக நிலைமையும் - சீன சமூக நிலைமையையும் அப்படியே இந்தியாவில் நிலவுவதாக கருதுவார்கள். அதனாலேயே லெனின் - மாவோ அந்தந்த நாடுகளின் நிலைமைக்கேற்ப கூறப்பட்ட தத்துவங்களை இந்தியாவிற்கும் அப்படியே பொருத்துப் பார்ப்பார்கள். அந்த பொருத்துதலில் யாரும் பிட்டாக வில்லையென்றால் அவர்கள் முதலாளித்துவவாதிகளாக இவர்கள் கண்ணில் தெரிவார்கள்!
ரஷ்ய டூமா என்பதே ஜாரின் வெறும் கைப்பொன்மையாக இருந்த ஒன்று. இந்த டூமா என்ற ஏற்பாட்டை கொண்டுவதற்கே நீண்ட நெடிய போராட்டம் அங்கே நடைபெற்றது. இந்த டூமாவையும் இந்திய பாராளுமன்றத்தையேயும் ஒன்றுபோல் சித்தரிப்பார்கள்.
ரஷ்யாவில் சமூக ஜனநாயக கட்சி பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சமயத்தில் - வலுக்குறைந்து இருந்த சமயத்தில் லெனின் வழிகாட்டுதலில் அங்கு நடைபெற்ற தேர்தலில் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி பங்கெடுத்தது. வேறொரு சமயத்தில் இயக்கமும் - சமூகமும் எழுச்சிக் கொண்டிருந்த சமயத்தில் தேர்தல் நடைபெற்றபோது அதனை லெனின் புறக்கணித்தார். அவரைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதும் - பங்கெடுக்காததும் தொழிலாளி வர்க்கத்தின் நன்மையின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். நமது மஞ்சள் காமாலை கண்ணர்களுக்கு இந்த நடைமுறை எப்பவும் புரியவே புரியாது. மேலும் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பது என்பது ஜர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்க்ம மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என்பதை மறைப்பதுதான் இவர்களது தந்திரம்.
அடுத்து 1917 - 1940 காலகட்டங்களில் நிலவிய சமூக அமைப்பு - நிலவிய ஜனநாயகத் தன்மை இவைகள் குறித்தெல்லாம் வறட்டுத்தனமான பார்வையை செலுத்துவதால் இப்போதும் கூட அதையே அமலாக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர் நமது துடியாடிகள்.
மொத்தத்தில் இவர்களது நடவடிக்கை புரட்சிகர சீர்குலைவுவாதமே இவர்களது மார்க்சியம். அதன் இணைய வாயாடிகளே அசுரனும்.....

4 comments:

Anonymous said...

இந்தப் பதிவில் உங்களின் பரிதாப,பதட்டநிலை தெளிவாகப் புரிகிறது. அனேகமாக இது உங்களுடைய இறுதி முயற்சியாகக் கூட இருக்கலாம். இவ்வளவு வீரவசனம் பேசுவதெல்லாம் கிடக்கட்டும், நீங்கள் நேர்மையான முறையில் அனைத்து விமர்சனங்களையும் ஏன் பிரசுரிப்பதில்லை.

உங்களுக்கு என்னதான் வேண்டும், நாங்கள் உங்களுடைய எல்லா செயல்களையுமே ஆமோதிக்கவேண்டுமா?.

டாட்டா என்ற வறுமையில் உழலும் 'பாட்டாளி'க்கு (அவன் வறுமையை போக்க) 1000 ஏக்கர் நிலங்களை மேற்குவங்க சிங்கூர் 'செல்வந்தர்'களிடமிருந்து பிடுங்கித் தந்தீர்களே அதை மிகமிக சரியென்று ஏற்றுக் கொள்ளவேண்டுமா?
நீங்கள் பின்பற்றும் இதைத்தான் நிலச்சீர்திருத்த நடவடிக்கையாகவும், வர்க்க கண்ணோட்டமாகவும் ஏற்று
நாங்களும் செயல்பட‌வேண்டுமா?


பார்ப்பன பாசிச மதவெறித் துரோகி அத்வானியை விருந்துபசரிக்க அழைத்தீர்களே, நாங்களும் உங்களுடன் சேர்ந்து பந்திபரிமாற வேண்டுமா?

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்களத்துக்கு உண்மை கண்டறியும் குழு மூலம் சென்றுவந்த, 'இந்தியாவுக்கான தனிப்பட்ட‌ மார்க்சி'யத்தை படைக்கும் எழுத்தாளர் மேலாண்மை பொண்ணுசாமியின் வாயால் "அங்கேயுள்ள மேற்சாதி (அதாவது அதிக்கவெறி சாதி) மக்களின் நியாயமான (சாதிவெறி)உணர்வுகளையும் நாம் மதிக்க‌வேண்டும்" என்று சொல்லியதை மகிழ்ச்சியுடன் நாங்களும் ஏற்றுக்கொள்ளவேண்டுமா?


இதனினும் கீழான‌ (சில தலைவர்களின்) தனிமனித ஒழுங்கீனங்கள் வரை ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அது விவாதத்திற்கு சிறிதும் பயன்படாது.


ஏகாதிபத்திய கைக்கூலி என்ற ஏச்சுக்களெல்லாம் கேட்டுக்கேட்டு புளித்துப் போனவை. ஆனால் சொச்சமிச்சமிருக்கும் நாட்டு இறையாண்மையை கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கும் இன்றைய அரசின், நாலு கால்களில் 'ஒருகால்' உங்களுடையது என்பதும், பட்டவர்த்தனமான 'கைக்கூலி' காங்கிரசின் 'நிழல்' நீங்கள்தான் என்பதும் நாட்டுமக்களுக்கு நிச்சயமாக புரியும். இவற்றை பொதுமக்களுடன் சேர்ந்து கட்சியின் உறுப்பினர்களும் உங்களைப் புறம்தள்ளிவிடாமல் இருக்கத்தான் 'இந்தியாவுக்கான மார்க்சியம்' என்ற புளுகுமூட்டைகளெல்லாம்.


நேர்மையான முறையில் பிரசுரித்து விவாதத்தை தொடருவீர்கள் என்ற எதிர்பார்ப்போடுதான் இதனை பதிந்திருக்கிறேன்.

///தனிநபர் தாக்குதல் - ஜாதி அடிப்படையிலான இழி தாக்குதல்//// இவர்கள் முன்வைக்கும் விமர்சனம் என்பது ஆரோக்கியமான சுழலை கெடுப்பதாகவே அனைத்து இடத்திலும் காண முடிகிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இழிவுபடுத்திப் பேசுவது. நாகரிகமற்றுப் பேசுவது என்பது இவர்களத வாடிக்கை.////


இவ்வாறாக பொதுப்படையாக சொல்லாமல் குறிப்பிட்டுக் காட்டவும்.

நன்றி!.

பகத்.

சந்திப்பு said...

பகத் நீங்கள் ஒருபோதும் எங்களுடைய அனைத்து செயல்களையும் ஆதரிக்க வேண்டும் என்று எப்போதும், எந்தக் காலத்திலும் எதிர்பார்த்ததில்லை. எதிர்பார்க்கவும் முடியாது. அதை நீங்களும் செய்ய வேண்டும்.

எந்த விசயமாக இருந்தாலும் அதனை விமர்சனக் கண்ணோட்டத்தோடு உங்கள் பார்வையில் நீங்கள் அணுகுங்கள். ஆனால், ஒரே விசயம் என்னவென்றால் உங்களது அன்றாட அரசியல் எதைச் சுற்றி கட்டமைக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி? மார்க்சிணுட் கம்யூனிசுட் கட்சி எதிர்ப்பு என்பதைத்தான் நீங்கள் பிரதானமாக முன்வைக்கிறீர்கள். இதுதான் உங்களது வர்க்கப் பார்வையா? உங்களது எதிரி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதை விட சி.பி.எம். எதிர்ப்புக்கே முக்கியத்துவம் அளிப்பதுதான் பிரச்சினை. ஏகாதிபத்திய - பெரு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சக்திகள் செய்ய வேண்டியதை நீங்கள் செய்யும் போதுதான் உங்களது வர்க்க சார்பு எது என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

அடுத்து, டாடாவிற்கு 1000 ஏக்கர் நிலம் கொடுத்தது குறித்து விரிவான பல பதிவுகள் போடப்பட்டுள்ளது. முதலில் அதனை படித்து உள்வாங்குகங்கள். ஒரே விசயத்தை மீண்டும் மீண்டும் வாந்தியெடுக்க வேண்டாம். மேற்குவங்க அரசாங்கம் என்பது முதலாளித்துவ அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு அரசு அமைப்பு என்பதை நீங்கள் உணராத வரை இதனை உங்களுக்கு புரிய வைக்க முடியாது. தற்போதைய ஆளும் வர்க்க சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு உழைக்கும் மக்களுக்கு எதைச் அதிகபட்சமாக எதைச் செய்ய வேண்டுமோ அதனை மேற்குவங்க அரசு செய்து வருகிறது. அதற்கான சான்றிதழை அநேகமாக உங்களிடம் பெறவேண்டிய அவசியம் எதுவும் எங்களுக்கு எழவில்லை.

ஏனென்றால் மேற்குவங்க மக்கள் உங்களைப் போன்றவர்களை (நக்சலிசவாதிகளை) முழுமையாக நிராகரித்துள்ளனர். உங்களது பயங்கரவாதச் செயல்கள் மேற்குவங்கத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து அங்கும் கூட சி.பி.எம். தோழர்களை வேட்டையாடுவதைதான் உங்களது பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகிறீர்கள். அத்தோடு உங்களது கூட்டாளி அத்வானியும் - மமதாவும்தா என மேற்குவங்க மக்கள் மிக நன்றாகவே உணர்ந்துள்ளனர். மேற்குவங்கத்தில் உள்ள அனைத்துவிதமான பிற்போக்கு சக்திகளோடும் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள நீங்கள் எங்களைப் பார்த்து விமர்சிப்பதற்கு எந்தவிதமான தகுதியும் அற்றவர்கள்.

மேற்குவங்க அரசு ஒரு அரசு என்ற முறையில் அதன் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரமான வாழ்க்கை வசதி போன்ற விசயங்களை நிறைவேற்ற வேண்டியது அடிப்படையானது. இன்றைய முதலாளித்துவ அரசு கட்டமைப்பில் ஒரு மாநில அரசே இதனை முழுமையாக நிறைவேற்ற முடியாது. எனவேதான் தொழில் வளர்ச்சி என்பது இந்தியாவில் பெரும் முதலாளிகளையும் சார்ந்தே உள்ளது. அதற்காக உழைக்கும் மக்களை அவர்களிடம் பலி கொடுத்து விட்டோம் என்று நீங்கள் வீராவேசம் பேசலாம்... அதனால் ஒன்றும் விளையப்போவதில்லை. மேற்குவங்கத்தில் நில விநியோகம் என்பது 1970களிலேயே முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. கேரளத்திலும் இதே நிலைமைதான். தற்போதைய சூழல் அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது அந்த அரசின் கடமை. அதனை நிறைவேற்ற உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளை மேற்குவங்க அரசு பயன்படுத்துகிறது. பயன்படுத்தும். உங்களைப் போன்று கட்சியின் பெயரை வெளியில் சொல்வதற்கே அஞ்சிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டில்லை. (இவ்வாறு கேட்டால் நீங்கள் போலீசு உளவாளியா?) என்ற கேள்விதான் உங்களிடம் மிஞ்சும். மாவோயிணுட்டுகள் கூட தங்களது திட்டத்தை இணையத்தில் வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். அவர்களது செயல்பாட்டை அவர்களது பாதையில் செய்கிறார்கள். (விமர்சனத்திற்கு உட்பட்டதே) ஆனால் இந்தியாவில் பெயரைக் கூட சொல்லாமல் ஒரு இயக்கம் இருக்கிறது என்றால் அது உங்களுடைய அமைப்பாகத்தான் இருக்கும்.

கட்சிக்கான திட்டமோ? நடைமுறை தந்திரமோ? ஒன்றும் இல்லாமல் எல்லாம் வாய்ஜாலத்திலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் பழைய சிந்தாந்தவாதிகளின் சீர்குலைவுவாதம்தான் உங்களிடம் மிஞ்சுகிறது.

இடஒதுக்கீடு விசயத்தில் நீங்கள் யார் பக்கம் என்பதை? பலமுறை அம்பலப்பட்டுப் போயுள்ளீர்கள். உங்களது அமைப்பும் இடஒதுக்கீட்டையே ஏற்காத அமைப்பு. இத்தகைய பார்வை உயர்ஜாதி ஆதிக்கவாதிகளுக்கானது என்ற விமர்சனத்திற்கு மழுப்பல்தான் உங்களிடம் இதுவரை மிஞ்சுகிறது.

இறுதியாக, நான் இதுவரை சந்திப்பு என்ற பெயரில் மட்டுமே இயங்கி வருகிறேன். நான் சார்ந்த கொள்கையில் நின்று குறைந்தபட்சம் பதிலளித்துள்ளேன். நீங்கள் நவகிரகமாக செயல்பட்டு வருகிறீர்கள்.... அனைத்தும் முகமூடிதான்...

நான் உங்களிடம் கேட்கிறேன். சென்னை மாநகரில் நீங்கள் செயல்படும் தளம் எங்காவது உண்டா? ஒரு கோடி பேர் வாழும் சென்னை மாநகரில் எந்த மக்களிடம் உங்களுக்கு தொடர்பு இருக்கிறது. வெறும் பிரச்சார நெடியைத்தவிர வேறு என்ன சாதித்தீர்கள்? சில கும்பமேளா இயக்கங்களைத் தவிர. பாசிச எதிர்ப்பு என்பது வெறும் பிரச்சார அளவில் மட்டுமே! உங்களுடைய பாணியாக இருக்கிறது.

மேலும் எல்லா பின்னூட்டங்களையும் வெளியிட வேண்டிய அவசியம் இல்லையென்றே கருதுகிறேன். தேவைப்பட்டால் இது குறித்து உங்களது வலைத்தளங்களில் நீங்கள் விரும்பும்படி அவதூறு பிரச்சாரத்தை பரப்பிக் கொள்ளலாம். சீர்குலைவு நடவடிக்கைகளை தொடரலாம்

சந்திப்பு said...

Please Reade this link matter on TATA Industry in Singur.

http://santhipu.blogspot.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE

நட்புடன் ரமேஷ் said...

இந்தியாவில் புரட்சியை மொத்தமாக குத்தைகக்கு எடுத்திருக்கும் த நா மா லெ க (இதன் விரிவாக்கத்தை பகத்திடமும், அசுரனிடமும் கேட்கவும்) தோழர்களை வாழ்த்துகிறேன்.
பாவம் மாவோ, லெனின், மார்க்ஸ். எங்கல்ஸ் அவர்கள் எழுத்தை இப்படி கைமா செய்து யாரும் கந்தலாக்கியதில்லை.