குறிப்பாக அறிவியல் கருத்துக்களை - சுடச் சுட பரவலான தமிழ் வாசகர்களிடையே கொண்டுச் சென்ற பெருமை சுஜாதாவை சேரும். இவரது அறிவியல் கருத்துக்களின் பால் மாணவர்கள் - இளைஞர்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். அதேபோல் இவரது சிறுகதை - நாவல் - தமிழிலக்கியம் போன்ற அம்சங்கள் வெகுஜனங்களை ஈர்க்கக்கூடியதாக இருந்தது.
இவரது எழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து அவரது காலத்திலேயே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் இவையனைத்தையும் தாண்டிச் சென்று பார்க்கும் போது ஒரு படைப்பாளியை தமிழகம் இழந்து விட்டது.
இவரது புத்தகமான "கடவுள் இருக்கிறாரா?" புத்தகத்தை கடைசியாக நான் வாசித்தேன். அது ஒரு தொகுப்புதான். அந்த புத்தகத்தை படித்து முடித்தபோது எந்த முடிவுக்கும் வரமுடியாமல் முடித்திருப்பார். அதற்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது அனைத்தையும் கடந்து கடவுள் இருக்கிறார் என்பதையே மறைமுகமாக நிறுவியிருப்பார். விஞ்ஞான கருத்துக்களை மக்களிடம் கொண்டுச் செல்லும் அதே நேரத்தில் - ஒரு கருத்து முதல்வாதியாகவே இவரது சிந்தனைகள் இருந்ததை பார்க்க முடியும். இந்த விமர்சனத்தை இந்த நேரத்தில் வைப்பது சரியா? என்று பலரும் கேள்வி எழுப்பலாம். இந்த நேரத்தில் நினைவு கூறும் போது அவரது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் இரண்டையும் சமமாக பார்க்க வேண்டியுள்ளது.
மொத்தத்தில் ஒரு நல்ல படைப்பாளியான சுஜாதாவிற்கு தமிழகம் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளது. சந்திப்பு தன்னுடைய அஞ்சலியை இங்கே பதிவு செய்கிறது.
அவரது படைப்புகளில் சிறந்தவற்றை அடையாளம் காணுவோம். அந்த வழியில் இளம் படைப்பாளர்களை பயணிக்கச் செய்வோம்.!
சுஜாதாவின் முதல் கதை:1953ம் ஆண்டு சிவாஜி என்ற வார இதழில் சுஜாதாவின் முதல் கதை வெளியானது. அதன் பின்னர் அவரது கதைகள் பெரிய அளவில் வரவில்லை. ஆனால் 1962ம் ஆண்டு முதல் அவரது கதைகளும், படைப்புகளும் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. அன்று முதல்அவரது இறுதி மூச்சு வரை எழுதிக் கொண்டே இருந்தார் சுஜாதா.சுஜாதாவின் படைப்புகளில் 10 அறிவியல் நூல்களும், 10 நாடகங்களும் அடங்கும்.கனையாழியில் இடம் பெற்ற சுஜாதாவின் கடைசிப் பக்கம், மிகவும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் சுஜாதாவின் பக்கங்கள் இடம் பெற்றன.அறிவியலை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அழகாக விளக்கி பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் சுஜாதா. அவரது அறிவியல் கேள்வி-பதில் பகுதிகள் ரொம்பப் பிரசித்தமானவை.கம்ப்யூட்டர்கள் குறித்தும், மனித மூளை குறித்தும் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். தகவல் தொழில்நுட்பம், தமிழ் எழுத்துருக்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஏராளமாக எழுதியுள்ளார். இவரது ஆலோசனையைக் கேட்டு பயன் அடைந்த தகவல் தொழில்நுட்பத் துறையினர் பலர். இவரது ஆலோசனையின் பேரில் உருவான எழுத்துருக்களும் கணிசமானவை.ஆங்கில கம்ப்யூட்டர் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் ஏராளமானவற்றை தொகுத்து வைத்துள்ளார் சுஜாதா.எழுத்துத் துறையில் சகலகலா வல்லவனாக, சகல பிரிவினருக்கும் தோழமையாக திகழ்ந்த சூப்பர் எழுத்தாளர்தான் சுஜாதா.கட் அவுட்:எழுத்தாளர் ஒருவருக்கு முதன் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது சுஜாதாவுக்குத்தான். ஆனந்த விகடனில் வெளியான அவரது நாவல்களான கனவு தொழிற்சாலை மற்றும் பிரிவோம் சந்திப்போம் பாகம்1, 2 ஆகியவற்றுக்காக விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், சுஜாதாவுக்கு அண்ணா சாலையில் கட் அவுட் வைத்துப் பெருமைப்படுத்தினார்.
7 comments:
/ஆங்கில கம்ப்யூட்டர் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் ஏராளமானவற்றை தொகுத்து வைத்துள்ளார் சுஜாதா/
அப்படியா? :-(
எங்கே அவர் தொகுத்து வைத்தார் என்று காட்டினால், எல்லோருக்கும் பயனாகாவிருக்குமே??
மிக நல்ல கட்டுரைஇது. இரங்கல் செய்தியையும் சிரித்துக் கொண்டே படிக்கலாம் என்று வாசகருக்கு நிறுவிய இந்த உங்களது எழுத்து, சுஜாதா விட்ட பணியை தொடர மிகவும் தகுதியானது.அது கிடக்கட்டும் சென்றவாரம் அண்ணாசாலையின் நடுவில் இறந்து கிடந்த சொரிநாய்க்கு, ஏன் இரங்கல் எழுதவில்லை?
பெயரிலி உங்கள் எதிர்பார்ப்பு நியாயமானது! விரைவில் அது குறித்து பத்திரிகைகளில் வெளிவரும் என எதிர்பாருங்கள்....
சொரிநாய்க்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலி! மடிந்துபோன காட்டுப்பூச்சி தத்துவவாதிகளுக்கும் சேர்த்தே!
/இவரது ஆலோசனையின் பேரில் உருவான எழுத்துருக்களும் கணிசமானவை./
hopefully we see some light on this too.
சுஜாதாவின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக்
மெக்ஸிகோவில் ஒரு சலவைக்காரி ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் போன ஆண்கள் அவளின் பின்பக்கமாக வந்து அவளை ஓத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவளின் செல்லக் கழுதைக்கும் ஓக்க ஆசை வந்தது. எனவே கழுதையும் அவளை பின்பக்கமாக வந்து ஓத்துச் சென்றது. சிறிது நேரம் கழித்து சலவைக்காரி சொன்னாளாம்,
"அந்த ஏழாவது ஆள், மறுபடியும் வாங்க!"
தீவிர இலக்கியம் படைத்த சுஜாதாவை நாம் பாராட்டியே ஆகவேண்டும்!
பெயரிலிக்கு நன்றி.
கீழ்க்கண்ட ஜோக்கை சுஜாதா கூறினாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஜோக்கை அனானிமசாக போட்டிருப்பது வேறு யாருன்னு நினைக்கிறீங்க... நம்ம காட்டுப்பூச்சி சகாக்கள்தான்.
விவாத புலி சந்திப்பு அய்யா அவர்களுக்கு வணக்கம். என்னுடைய வளைதளம் இதுதான் விருப்பப்பட்டால் இணைப்பு கொடுக்கவும். இல்லையென்றால் பார்வையாளராகவாவது வந்து போகவும்.
நன்றி.
பகத்
Post a Comment