July 17, 2007

அமைதியிழந்த அமெரிக்காவும்! அமைதியின் எதிரிகளும்!!


உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அமைதி குறித்து முதன் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. இவ்வாய்வினை
எகனாமிSட் பத்திரிகை குழுமம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற வல்லுனர்களை கொண்டு நடத்தியது. இதன் மூலம் 121 நாடுகள் பட்டியலிடப்பட்டு, அவற்றிற்கான சர்வதேச அமைதி குறியீட்டு எண் (Global Peace Index Ranks) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வல்லரசு நாடுகள் முதல் - வலுவிழந்த நாடுகள் வரை செல்ல வேண்டிய தூரத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டியுள்ளது.
உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றிருப்பது நார்வே, அதைத் தொடர்ந்து நியூசிலாந்து (2), டென்மார்க் (3), ஐயர்லாந்து (4), ஜப்பான் (5).
உலகில் அமைதியிழந்த நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தை வகிப்பது ஈராக் (121 வது இடம்). அதைத் தொடர்ந்து சூடான் (120), இ°ரேல் (119), ரஷ்யா (118), நைஜீரியா (117) என அவ்வரிசை தொடர்கிறது.
இவ்வரிசையில் இந்தியாவிற்கு 109 வது இடமே கிடைத்துள்ளது. உலக நாடுகளின் ஜாம்பவான் அமெரிக்கா 96 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வினை மேற்கொண்ட எகனாமி°ட் இன்டிலிஜன்° குழு, நாடுகளின் அமைதி குறித்து அளவிடுவதற்கு 24 கூறுகளை உள்ளடக்கி ஆய்வினை மேற்கொண்டது. இதில், மனித உரிமை, வறுமை, கல்வி, உள்நாட்டு கலவரம் மற்றும் குற்றச்செயல்கள், இராணுவச் செலவுகள், அண்டை நாடுகளுடனான உறவு, அண்டை நாடுகளில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் மரணம், ஊழல், வெளிப்படையான அரசு நிர்வாகம் மற்றும் ஜனநாயக பரவலாக்கம் போன்று பல்வேறு அடிப்படையான முக்கிய அளவீடுகளை உள்ளடக்கி, நடைபெற்ற இவ்வாய்வின் மூலம் 121 நாடுகளில் நிலவும் அமைதி குறித்து பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உலகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்க கூடிய மக்கள் தொகை பெருக்கம், தட்ப வெப்ப நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் மிக முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.இதன் மூலம், “உலக அமைதிக்கான அர்த்தம் மிக விரிவான பொருள் கொண்டதாக மாறியுள்ளதாகவும், அதனை எவ்வாறு அடைவது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. போரின்மை என்பது மட்டும் அமைதியல்ல; வன்முறையின்மை என்பதே அமைதி” என இவ்வமைப்பின் தலைவர் திரு. கிளைடு மெக்காங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனித குலத்தின் சீரான வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் அமைதி மிக முக்கியமானது. அதே சமயம், உலகமயமாக்கல், ஓர் உலக கோட்பாடு பின்னணியில் இவற்றை நாம் அலசும் போது, உலக அமைதி குறியீட்டில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஈராக்கின் இந்நிலைக்கான காரணம் யார்? அம்மக்களின் அமைதியை அழித்தவர்கள் யார்? என்பது குறித்து அலசாமல் இருக்க முடியாது. பேரழிவு மிக்க ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான குற்றம் சுமத்தி, அந்நாட்டை ஆக்கிரமித்து அதனை சின்னாபின்னமாக்கியது அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளுமே! மேலும் அம்மக்களுக்கு உள்ளே ஷியா, சன்னி, குர்து என பிரிவினையை உண்டாக்கி, மோதலை ஏற்படுத்தி, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்து நிலைகுலைய செய்து, அதன் அமைதியை அழித்தது ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட அமெரிக்கா என்பதை இந்நேரத்தில் பரிசீலிக்காமல் இருக்க முடியாது.
அதே போல் அணு சக்தியை காரணம் காட்டி, தற்போது ஈரானையும், வடகொரியாவையும் மிரட்டி வரும் அமெரிக்கா, ரவுடி நாடுகள் - மூர்க்க நாடுகள் என சோசலிச கியூபா, சிரியா, வெனிசுலா என பட்டியலிட்டு தன்னுடைய அடுத்த கட்ட ஆக்கிரமிப்பு நோக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ள எந்தவிதமான தயக்கத்தையும் அமெரிக்கா காட்டியதில்லை. மொத்தத்தில் பனிப்போர் ஒய்ந்து விட்டாலும், அமெரிக்கா தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான ஆக்கிரமிப்புகளை விடுவதாக இல்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் ஏவுகணை தடுப்பு திட்டம் என்ற பெயரில் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக தன்னுடைய களத்தை தயார் படுத்துகிறது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்துள்ளது. அதேபோல், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகி°தான் என பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் மூக்கை நுழைத்து தன்னுடைய பெரியண்ணன் தனத்தை காட்டும் அமெரிக்காவே உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், பின்லேடன் தேடுதல் வேட்டை என்று ஆப்கானி°தானின் அமைதியை அழித்த அமெரிக்கா, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்று பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் வாலை நுழைத்து வருகிறது. அமெரிக்காவின் இத்தகைய கொள்கையின் விளைவாக தலையெடுக்கும் இசுலாமிய அடிப்படைவாதத்தை பின்னணியாக கொண்ட பின்லேடனிசம், ஜிகாத்திசம் போன்றவை எல்லாம் அமெரிக்க கொள்கையின் செல்ல குழந்தைகளே என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.
உலக அமைதிக் குறியீட்டு பட்டியலில் 96வது இடத்தை பிடித்துள்ள அமெரிக்கா உலக அமைதிக்கு எதிராக இருக்கும் அதே சமயம், தன்னுடைய நாட்டு மக்களுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது என்பதே இந்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது. சீனாவில் மனித உரிமை மீறல் என ஊளையிடும் அமெரிக்கா இந்த அறிக்கையின் மூலம் அதனுடை கொடூமையான மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக பள்ளிகளிலேயே துப்பாக்கி கலாச்சாரம் - அதன் மூலம் படுகொலைகள் நடைபெறுவது அமெரிக்காவின் சீரழிந்த ஆயுத கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி உலகிலேயே மிகஅதிகமானோர் உள்நாட்டு சிறைகளில் வாடும் நாடுகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது அமெரிக்கா. இது தவிர தன்னுடைய ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிட, நாடு பிடிக்கும் ஆசைக்கு தன்சொந்த நாட்டு இராணுவ வீரர்களை மிக அதிகமாக பலிகொடுத்து வருகிறது. அத்தோடு சொர்க்கபுரி அமெரிக்கா என்று கூறிக் கொண்டாலும், அங்கே நிலவும் இன வேற்றுமை, வேலையின்மை, மனித உரிமை மீறல், கருப்பின மக்கள் வசிக்கும் மாநிலங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு போன்றவை அமெரிக்க சமூகம் உள்ளூர நாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சீரழிந்த முகத்தையே இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
இதேபோல்தான் சூடானில் ஏகாதிபத்தியவதிகள் டர்புரில் நடத்தும் உள்நாட்டு ஆக்கிரமிப்பு கலவரத்தின் விளைவாக உலகிலேயே மிகப்பெரும் அளவில் அமைதியிழந்த நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முரட்டு நாடுகள் என பட்டியலிடும் அமெரிக்கா வளர்க்கும் முரட்டு குழந்தையான இ°ரேல் இவ்வரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இ°ரேலின் பிரதான தொழிலே பால°தீனத்தை நிர்மூலமாக்குவதும், அரபு நாடுகளை மிரட்டும் பேட்டை ரவுடித்தனம் செய்வதே பெரும் தொழிலாய் போயுள்ளது.
இந்த வரிசையில் 106வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அமைதியிழப்பிற்கு 2020 தீர்வாகுமா? பெரும் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 60 ஆண்டு சுதந்திற்கு பின்னும் 35 சதவீத மக்கள் எழுத்தறிவு பெறாதது, கிராமப்புறத்தில் நிலவும் வறுமை, தீண்டாமை கொடுமை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், நிலவுடைமை ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருப்பது, சுகாதாரமின்மை, முறையான ஆரம்ப பள்ளிக்கூடங்கள் இன்மை, நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், இதனால் மக்கள் நலத் திட்டங்கள் உரிய பலனை கொடுப்பதில்லை என்பன போன்று பல விஷயங்களை பட்டிலியட முடியும். இவ்வரிசையில் இந்துத்துவ பாசிச கொள்கை இந்திய மக்களின் அமைதிக்கு எதிரானது என்பதையும் இந்நேரத்தில் சுட்டாமல் இருக்க முடியவில்லை. சங்பரிவாரம் குஜராத்தில் நிகழ்த்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாசிச கோரத்தாண்டவம் சிறுபான்மை மக்களை அச்சத்தின் பிடிக்குள் தள்ளியுள்ளது என்பதை மறுக்க முடியாது. மத அடிப்படைவாதம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மக்களின் அமைதிக்கு எதிரானதே! இது மட்டுமின்றி மத்திய அரசு பின்பற்றும் உலகமயக் கொள்கை அதன் விளைவாக எழும் வேலையிழப்புகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் நிகழும் ஏகபோக நிலக் கொள்ளை, கிராமப்புற விவசாயம் பாதிப்பு போன்ற சீர்கேடுகளாலும் இந்தியா அமைதியை இழக்க நேர்ந்துள்ளது என்பதை பார்க்கத் தவற கூடாது. இதற்கான மாற்றை இந்திய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? அமைதிக்கான மாற்றை மக்களிடம் கொண்டுச் செல்வதே அமைதிக்கு அடிப்படையாகும்.
மேலும், இந்த வரிசையில் உலகில் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீனா 60வது இடத்திலும், பாகி°தான் 115 வது இடத்திலும், இலங்கை 111வது இடத்திலும் இருக்கின்றன. சோசலிச கியூபா 59 வது இடத்திலும், வியட்நாம் 35 இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ள சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது. கல்வியிலும், சுகாதாரத்திலும், வேலையின்மையை தீர்ப்பதிலும் அவர்கள் வெகுவாக முன்னேறியுள்ளனர். கியூபா மருத்துவத்துறையில் உலகிற்கே முன்னோடியாக திகழ்கிறது. நமது ஆட்சியாளர்களோ 2020 என பேசி பொழுதை கழிக்கிறார்கள்! ஆரோக்கியமான மக்கள் நல அரசியலே அமைதிக்கான மாற்று வழி என்பதை உலகம் உணர வேண்டும்.

2 comments:

சந்திப்பு said...

At 10:18 PM, Anonymous said...
அமெரிக்கா பாசிசக் கொள்கையின் விளைவு இஸ்லாமிய தீவிரவாதம். ஆனால் சுதந்திரத்திற்க்கு முன் ஆரம்பித்த இஸ்லாமிய பாசிசம்தானே இந்துத்துவ பாசிசம் வளரக் காரணம்.


சீனாவில் நடக்கும் ஊழல் மற்றும் அடக்குமுறை பற்றி இங்கு அமெரிக்காவில் வசிக்கும் சைனாகாரர்களை கேட்டுப் பாருங்கள்.அங்கு பணக்காரனாக ஆக ஒரே தகுதி கம்யூனிஸ்டு கட்சியில் தலைவானாவது தானாமே!!!!!


At 11:49 PM, லொடுக்கு said...
//அமெரிக்காவின் இத்தகைய கொள்கையின் விளைவாக தலையெடுக்கும் இசுலாமிய அடிப்படைவாதத்தை பின்னணியாக கொண்ட பின்லேடனிசம், ஜிகாத்திசம் போன்றவை எல்லாம் அமெரிக்க கொள்கையின் செல்ல குழந்தைகளே என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.
//

//அத்தோடு சொர்க்கபுரி அமெரிக்கா என்று கூறிக் கொண்டாலும், அங்கே நிலவும் இன வேற்றுமை, வேலையின்மை, மனித உரிமை மீறல், கருப்பின மக்கள் வசிக்கும் மாநிலங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு போன்றவை அமெரிக்க சமூகம் உள்ளூர நாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சீரழிந்த முகத்தையே இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
//

//இ°ரேலின் பிரதான தொழிலே பால°தீனத்தை நிர்மூலமாக்குவதும், அரபு நாடுகளை மிரட்டும் பேட்டை ரவுடித்தனம் செய்வதே பெரும் தொழிலாய் போயுள்ளது.
//

//இதற்கான மாற்றை இந்திய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? அமைதிக்கான மாற்றை மக்களிடம் கொண்டுச் செல்வதே அமைதிக்கு அடிப்படையாகும்.
//

100% well said.


At 6:14 PM, சந்திப்பு said...
நன்பரே தாங்கள் கூறியுள்ளது போல் கண்ணை மூடிக் கொண்டு பார்த்தால்கூட சீனாவின் மிகப் பெரிய பணக்காரராக அந்நாட்டு ஜனாதிபதி ஹூஜின்டாவ்தான் இருக்க வேண்டும். அமெரிக்காவில் இருக்கும் சீனர்களிடம் வேறு எதை பார்க்க முடியும். சீனாவில் மனித உரிமை மீறுவதாக ஓயாது குரல் கொடுக்கும். அமெரிக்காவின் அமைதியிழப்பிலிருந்து தாங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். சீனாவிடம் உள்ள நல்ல விசயங்களை கற்றுக் கொள்ள முயலுங்கள். அமெரிக்காவில் இருக்கும் கெட்ட விசயங்களை சீனாவிலும் இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். அது எதற்கும் உதவாது.

மேலும் அமெரிக்க கலாச்சாரம் என்பது பணத்தை தேடுவது மட்டும்தான் அறிவைத் தேடுவது இல்லை. எனவே அந்த வலையில் நிங்கள் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இந்தியாவில் முதன் முதலில் தோன்றியது இந்துத்துவ பாசிசம்தான் என்பதற்கு ஏராளமான வரலாற்று உதாரணங்கள உள்ளது. இசுலாமியர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தியவர்கள். இன்றைய சங்பரிவாரத்தின் முன்னோடி இந்து மகா சபை. இவர்களின் முதாதையர்கள் ஆரம்பித்து வைத்ததே பிரிவினைவாதம். வரலாற்றை சரியாக படிப்பது உதவிகரமாக இருக்கும்.


At 6:14 PM, சந்திப்பு said...
லொடுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறுவோம்.

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)