July 02, 2007

மீடியா ஏகபோகமும், துணை போன திராவிட இயக்கமும்!

நூல் விமர்சனம்
திரு।சாவித்திரி கண்ணன் எழுதிய ‘சன் குழுமச் சதிகளும் தி.மு.க.வின் திசைமாற்றமும்’ என்ற நீண்ட கட்டுரை முதலில் அவரது இன்டர்நெட் - வலைப்பதிவில் பதிவிடப்பட்டு, தற்போது தமிழர் கண்ணோட்ட வெளியீடாக புத்தக வடிவம் பெற்று வெளிவந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பும், அதனைத் தொடர்ந்து மதுரையில் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களும், அதன் தொடர்ச்சியாக மூன்று உயிர்கள் பலி, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தயாநிதி மாறன் பதவிப் பறிப்பு, கட்சியிலிருந்து வெளியேற்றம், மு.க. அழகிரிக்கு அரசியல் அந்த°து என ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வாக தி.மு.க.வுக்குள் நடைபெறும் வாரிசு அரசியல் போட்டியும் - வியாபார போட்டியும் வெளியுலகிற்கு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இதனைப் பின்னணியாக வைத்தே சாவித்திரி கண்ணன் சன் டி.வி. குழுமத்தின் அசுர வளர்ச்சியையும், அதற்காக பின்னிய சதிவலைகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
மாறன் குழுமத்திற்கு 14 தொலைகாட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 வானொலி நிலையங்கள், 2 ஜெட் விமானங்கள், 40,000 கோடிகளுக்கு அதிபதிகள் என மீடியா ஜாம்பவானாக வலம் வரும் மாறன் குழுமம், இந்தியாவில் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதி மாறன் மாறிய அசுர வளர்ச்சியை அற்புதமாக படம் பிடித்துள்ளார்.
1989இல் பூமாலை என்ற வீடியோ இதழ் மூலம் மீடியா உலகில் தடம் பதித்த மாறன் குடும்பம், தன்னுடைய தொழில் வளர்ச்சிக்காக எப்படியெல்லாம் ஆக்டோப° கரங்களை விரித்தது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அதே சமயம், இவர்களது வளர்ச்சி திறமையின் மீதான வளர்ச்சியும் இல்லை என்பதை சுட்டவும் தவறவில்லை. பூமாலை வீடியோ இதழ் யாரும் விரும்பாத, மணம் வீசாத பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக மண்ணோடு, மண்ணானதோடு, அது கலை நேர்த்தியற்று தொடுக்கப்பட்ட மாலையாக - உதிர்ந்தது கண்டு வீடியோ வியாபாரிகள் மகிழ்ச்சியுற்றதையும் பதிவு செய்துள்ளார்.
கருவின் குற்றத்தையும், கர்த்தாவின் குற்றத்தையும் நன்கு உணர்ந்தவர்கள் மாறன் குடும்பத்தினர். அதனால்தானோ என்னவோ, சன் டி.வி. யின் துவக்கம்கூட அப்படியே அமைந்து விட்டதை இந்நூலில் நன்கு விளக்கியுள்ளார்; ஜீ டி.வி.யின் வருகைத் தொடர்ந்து, மாறன் குடும்பத்திற்கு அதன் மேல் ஏற்பட்ட மோகமும், பத்திரிக்கையளர் சசிகுமார் மேனன் கூறிய தகவலை வைத்துக் கொண்டு, அவருக்கே தெரியாமல் அந்த வாய்ப்புகளை எப்படி உருவாக்கிக் கொண்டனர் என்பதை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
1993இல் துவக்கப்பட்ட சன் டி.வி.யின் சேட்டிலைட் ஒளிபரப்பிற்கு செலுத்த வேண்டிய தொகை நாளுக்கு நாள் அதிகரித்தக் கொண்டே சென்ற நிலையில், ஆபத்பாந்தவனாக உதவியது தி.மு.க.வின் கட்சிப் பணம். இலட்சியத்திற்காக இலட்சங்களை வழங்கிய உடன்பிறப்புகளின் கட்சி நிதி, கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் போடப்பட்டு, அதே வங்கியிலிருந்து சன் டி.வி.க்கு நிதியுதவி பெற்ற கதை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இப்படியாக துவங்கிய அவர்களது பயணம், மேக்னம் டாட்டியா என்ற தொழிலதிபருக்கு புருனே சுல்தான் வழங்கிய ரஷ்ய சேட்டிலைட் - டிரான்°பாண்டரை முரசொலி மாறன் எப்படி இறைஞ்சிக் கேட்டுப் பெற்று தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற ரகசியத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
அது மட்டுமல்ல; மீடியா கார்ப்பரேட் தாதாவான சன் குழுமம் கட்சியை மட்டுமல்ல கட்சிப் பத்திரிகையான முரசொலி மற்றும் குங்குமத்தில் பணியற்றிய ஊழியர்களையும் மிகக் குறைந்த ஊதியத்தை கொடுத்து தங்களது தொலைக்காட்சி வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் சுரண்டிக் கொண்டனர் என்பதையும் சுட்டத் தவறவில்லை.
மாறன் குடும்ப வளர்ச்சிக்கு கட்சி மட்டுமா பயன்பட்டது ஆட்சியும் தான்! முரசறைந்துள்ளார் சாவித்திரி கண்ணன். வெகுஜனங்களை கவர்ந்த ஊடகமாக தூர்தர்ஷனே கொடிகட்டி பறந்த காலத்தில் சன் டி.வி.யால் அதன் தாக்கத்தை சமாளிக்க முடியவில்லை. அப்புறம் என்ன? இருக்கவே இருக்கிறது அய்யாவின் ஆட்சி 1996 இல் அமைந்தவுடன் முதலில் செய்த காரியமே தூர்தர்ஷனின் தமிழ் ஒளிபரப்பை சீர்குலைப்பதுதான் அதற்கு துணை நின்றவர் அப்போதைய தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜன். மக்கள் பங்கேற்ற வெகுஜன நிகழ்ச்சிகளையெல்லாம் எப்படியெல்லாம் சீர்குலைத்தார்கள் அதன் மூலம் தனது பார்வையாளர்களை சன் தொலைக்காட்சி பக்கம் விரட்டியடித்த கதையெல்லாம் விலாவாரியாக விளக்கியுள்ளார்.
இது மட்டுமா? சென்னை மாநகரில் உள்ள 60 சதவீத கேபிள் நெட்வொர்க்கை தன்வசம் வைத்திருந்த ‘ஹாத்வே’ நிறுவத்தை எப்படியெல்லாம் மிரட்டினார்கள். அவர்களது கேபிள் ஒயர்களை ஆங்காங்கே வெட்டியெறிந்ததையும், அதன் மூலம் மாநகர கேபிள் நெட்வொர்க்கை சுமங்கலி கேபிள் விஷன் எனும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்ததையும், அதற்கு அடிபணியாத கேபிள் ஆப்பரேட்டர்களை மிரட்டி பணிய வைத்ததையும், சுமங்கலி கேபிள் ஏகபோகத்திற்கு மாநகர °டாலின் நிர்வாகம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை புட்டுப் புட்டு வைத்துள்ளார் நூலாசிரியர். இவர்களது ஆதிக்கத்தால் புதிதாக தோன்றி தமிழன் டி.வி., பாரதி டி.வி., தினத்தந்தியின் செய்தி சேனல் என பல தொலைக்காட்சி சேனல்கள் தொல்லைக்கு உள்ளாக்கி தொலைக்கப்பட்டதையும் துழாவியுள்ளார்.
பொதுத்துறையை சீரழித்த தயாநிதி
முரசொலி மாறனுக்கு பின் அரியணை ஏறிய தயாநிதி மாறன் தாத்தாவின் நிர்ப்பந்தத்தால் கேட்டுப் பெற்ற தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை பயன்படுத்தி தன்னுடைய தொலைக்காட்சி தொழிலை மேம்படுத்திக் கொண்டதையும், பன்னாட்டு ஏகபோகத்திற்கு சேவை செய்த தயாநிதியை தூக்கிப் பிடித்த பத்திரிகைகளையும் சாட்டையடி தந்துள்ளதோடு, தயாநிதி அமைச்சகத்தின் கீழிருந்த பி.எ°.என்.எல். ரிலையன்° போன்ற ஏகபோக நிறுவனங்களுக்கு ஆதரவாக சீரழிக்கப்பட்டதையும் அம்பலப்படுத்தியுள்ளார். தயாநிதி மாறனின் திறமை பி.எ°.என்.எல். வளர்ச்சிக்கு பயன்பட்டதா? வீழ்ச்சிக்கு பயன்பட்டதா என பட்டிமன்றமே நடத்தியுள்ளார், ஓரிடத்தில் 50,000 கோடிக்கு மேல் கையிருப்புள்ள பி.எ°.என்.எல். நிறுவனம், “கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய நான்கு மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்புகளை தந்துள்ள நிலையில் பி.எ°.என்.எல். வெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது” என வலுவான ஆதாரத்தை கொண்டு அம்பலப்படுத்தியுள்ளதோடு தயாநிதியின் திறமை குறித்து வலுவான கேள்வி எழுப்பியுள்ளார்!கட்சிக்கும் - ஆட்சிக்கும் காவலாக அடையாளப்படுத்திய தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான சேனலாக வலம் வந்த சன் டி.வி. பெரியார் - அண்ணா கொள்கைகளையும் எப்படி புதை குழிக்கு அனுப்பியது என்பதையும், பில்லி, சூனியம், ஜோசியம், மாயாவாதம், மந்திரவாதம், தந்திரவாதம், வேப்பில்லைக்காரி முதல் கோட்டை மாரியம்மன் வரை தன்னுடைய திராவிட பரிணாம வளர்ச்சியை எப்படியெல்லாம் மாய்ந்து மாய்ந்து தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற சேவையையும் மறக்காமல் குட்டியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர்கள், பிரபல திரைப்பட இயக்குநர்கள் உட்பட சன் டி.வி.யின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார்கள், வெளியேற்றினார்கள், இவர்களது ஊழலும், ஊதாரித்தனமும், ஆடம்பர தம்பட்டங்களும் ஊரறியாத ரகசியங்களாக வைக்கப்பட்டிருந்ததை ஊரறிய பறைசாற்றியுள்ளார் சாவித்திரி கண்ணன்.
மாறன் குடும்பத்தின் அசுர வளர்ச்சியும் - அரசியல் வளர்ச்சியும் கழக குடும்பத்திற்குள் ஏற்படுத்திய சலசலப்பும் சன் குழும சொத்துப் பிரிப்புக்களுக்கு பின்னால் உள்ள ரகசியங்களையும் தொட்டுக் காட்டியுள்ள ஆசிரியர்। மாறன் குடும்பத்தின் இத்தனை அராஜகங்களையும் பொறுத்துக் கொண்ட கலைஞர் இப்போது ஏன் பொங்கி எழுந்தார் என்று கேள்வி எழுப்புவதோடு நிற்காமல் வாரிசு அரசியலின் உற்றுகண்ணே இதற்கு அடிப்படை என்று ஆணித்தரமாக வாதம் செய்யும் ஆசிரியர் ஊடக ஏகபோகத்தை உடைத் தெறிய அரசியலையும் - ஊடகத்தையும் தனித்தனியே நிற்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் நெட்வொர்க்கை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்று அக்கறையோடு சுட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான கலாச்சார, பண்பாட்டுத் தளங்களுக்கு வித்திடும் ஊடக போக்குகளை ஊக்குவிக்கும் முகமாகவே இந்நூலை கொண்டு வந்துள்ள ஆசிரியரின் துணிச்சலை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்நூலை வண்ண அட்டைப்படத்தோடு மிகச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்ட தமிழர் கண்ணோட்டமும் பாராட்டுக்குரியது. ஊடக ஏகபோகத்திற்கு எதிரான சவுக்கடியாக பயன்படும் இந்நூல், எதிர் கால வெளிச்சத்திற்காக பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் வாங்கிப் பயன்படுத்திட வேண்டும். இது சன்குழும ஏகபோகத்திற்கு எதிரான நூல் மட்டுமல்ல; அதற்கு துணை போன திராவிட இயக்க சீரழிவுக்கும் எதிரானது!
புத்தகம் பேசுது இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரையே இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

5 comments:

Anonymous said...

சந்திப்பு,
உங்கள் தோழர் லங்காரத்ன தேஸாபிமான நரஸிம்ம ராமரும் அவருடைய சகோதரரும் ஏதோ திருமணக்கொடுக்கல்வாங்கல் முறையிலே "நிதி" சகோதரர்களுக்கு உறவாமே? கண்டுகொள்வீர்களா?
ஆங்கில பத்திரிகைத்துறைமீடியாவிலே ரிப்ளிகேன் பப்ளிகேஸன்ஸ் மீடியா ஈழத்தமிழருக்கெதிராகப் பண்ணும் அடாவடித்தனமும் ஒரு விதமான மீடியா அராஜகம் அல்லவா? ஜேவிபியினைச் சகோதர இயக்கமாகக் கருதும் சந்திப்பு கவனிப்பாரா?

அதெப்படி ஐயா, உங்கள் தோழருக்கு ஜெயுடனும் ஜாதி உறவு வைத்துக்கொண்டு கருணாவுடனும் மணவுறவு வைத்துக்கொண்டு மார்க்ஸியத்தோடும் தோழமை கொண்டாட முடிகிறது?

இப்படிய்யானவர்களைக் கட்சி முன்னணியிலே வைத்துக்கொண்டு மற்றவர்களைத் திட்ட இந்திய கம்யூனிட்டி கட்சிக்குமட்டுமேதான் ஆகிறது.

வெற்றி said...

புத்தக அறிமுகத்திற்கு நன்றி.
விமர்சனத்தைப் படித்ததும் புத்தகத்தைப் படிக்க வேணும் எனும் ஆவல் அதிகரிக்கிறது.

/* பெரியார் - அண்ணா கொள்கைகளையும் எப்படி புதை குழிக்கு அனுப்பியது என்பதையும்,*/

ம்ம்ம்ம்...

Anonymous said...

கருத்து கணிப்பு என்ப்து அறிவியல் பூர்வமாக கூறப்படும் பொய் என்று யாரொ சொல்ல கேட்டது தினகரன் வெளியிட்ட சர்வே முடிவு களை பார்க்கும் போது நினைவிற்க்கு வந்தது,அந்த பத்திரிகை முதலாளிகளுக்கு உள்ள விருப்பத்தை கருத்து கனிப்பு என்ற பேரில் மக்கள் மூலையில் தினிக்க முயன்றுள்ளது தெள்ள தெளிவாக புரியும்.ஆரம்ப காலத்தில், அரசின் செயல் பாடு குறித்து மக்களின் கருத்தறிய இத்தகைய சர்வேக்கள் உதவியது. தற்போதும் கூட பல்வேறு வனிக நிறுவணங்கள் தங்களின் சந்தை நிலவரத்தை அறிய இத்தகைய சரிவேக்களை நிகழ்த்து கின்றன,அதன் மூலம் தங்களின் தொழில் முன்னேற்றத்தை
திட்ட மிடுகின்றன.மேலும் பல்வேறு தன்னர்வ அமைப்புகளும்,மாணவர் குழுக்களும் சர்வேக்கள் நடத்தி சமூக பிரச்சனைகளை வெளிகொணற உதவு கின்றனர்.ஆனால் இழவு வீட்டில் கூட அரசியல் லாபம் தேடும் கேடு கெட்ட அரசியல் வாதிகள் இந்த சர்வே முறையை கூட தங்களின் சுய தம்பட்டத்திற்க்கு பயன் படுத்தி கொள்கின்றனர்.
தினகரன் தனது சர்வேவை ஒரு பிரபல மான சர்வே நிருவணத்தின் மூலம் நடத்தி யுள்ளது, இந்நிறுவணம் போன்றே பல நிறுவணங்கள் சர்வதேச அளவில் பேரும் தரமும் கொண்டிருந்தாலும் உள்ளூர் அளவில் அப்படி இல்லையெண்றே தோண்றுகிறது, ஏனென்றால் அவை மேற்கோள்ளும் சர்வெக்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர் விருப்பத்தை , எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமான முடிவை கொண்ட தாக இருக்க நிர்பந்திக்க படுகிறார்கள், மேலும் இந்த நிறுவணங்கள்
கள ஆய்விற்கு அனுப்பும் பணியாளர்கள் அக் கம்பெனியின் நிரந்தர பணியாளராக இருப்பத்தில்லை,ஊதியத்தை பொறுத்தவரை எந்த ஒரு நிர்ணயிப்பும் இல்லை,அந்த ஊதியமும் குறிப்பிட்ட கால கெடுவில் வழங்க படுவதில்லை,எனவே களப்பணியளர்களில் பலர் ஒரே நேரத்தில் பல நிறுவணத்தில் பணி புரியும் நிலையும் உள்ளது,இந் நிலையில் இப்பணியாளரிடம் இருந்து எப்படி தரமான விவரங்களை எதிர் பார்க்க முடியும்.
இந்த லட்சணத்தில் மேற்க்கோள்ளப்பட்ட சர்வெ முடிவின் காரண மாக எத்தணை கொண்டாடம், ஆர்பாட்டம் ஒரு பக்கம் ,கோவாவேசம்,
படுகொலைகள் மறு பக்கம்.

புகைந்து கொண்டுறிந்த தொழில் தகறாரை ,பங்காளி சண்டையை பட்டவர்த்தன மாக்கியது ஒரு சர்வே முடிவு. ....
இந்த ஒரு விசயத்தை தவிர தினகரன் சர்வே வினால் யாதொண்றும் பயணில்லை நண்பர்களே...

சிந்திப்போம் நண்பர்களே...

சுய விளம்பரம்,பண பலம்,பிரசார ஊடகம்,சாதி,சந்தர்ப்ப வாத அரசியல் இன்றி, மக்கள் நலனுக்காக் உழைக்கும் அரசியல் சக்திகள் இருக்கின்றார்கள்,

அவர்கள் யாரெண்று கண்டறியும் திசை வழியில். .

சிந்திப்போம் நண்பர்களே...
-அறிவியல் பார்வை

Anonymous said...

அறிவியல் பார்வை

poodaa thakaraththai kantu pidiththu indiyavai kevalappaduthiya untiyal kulukkum naayee.