பாரதிய ஜனதா கட்சி தன்னைத்தானே வித்தியாசமான கட்சி என்று அழைத்துக் கொள்வது உண்டு. ஆனால், அந்த கட்சி எந்த வகையில் வித்தியாசமானது என்பது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு கூட லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் வெளி வந்து 6 மாதத்திற்குள் குஜராத்தை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பாபுபாய் கடரா கனடாவுக்கு ஆள் கடத்த முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தனது மனைவி மற்றும் மகள் பெயர்களில் உள்ள பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி ஒரு பெண்ணையும், பதினோரு வயது சிறுவனை யும் கனடாவுக்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முயன்ற போது பாஜக எம்.பி. பிடிபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்யும் குடியேற்ற அதிகாரிகளிடமிருந்து அதிக விசாரணை இருக்காது என்பதை பயன்படுத்தி இவ்வாறு இவர் சட்டவிரோதமாக பலரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இவரது இந்த வித்தியாசமான தொழிலுக்கு பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் பலரையும் புரோக்கர்களாக பயன்படுத்தி வந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.பாபுபாய் கடரா பாஜக எம்பி மட்டுமல்ல. குஜராத் மாநில விஸ்வ இந்து பரிஷத் தலைவராகவும் இருக்கிறார். குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்களை நரவேட்டையாடியதில் விஎச்பிக்கு முக்கிய பங்கு உண்டு. எத்தகைய கிரிமினல் பேர்வழிகளால் மதவெறி அமைப்புகள் நடத்தப்படுகின்றன என்பதற்கு கடரா ஒரு சமீபத்திய உதாரணமாகும்.
ஹவாலா ஊழலில் சிக்கியவர்தான் பாஜக-வின் தலைவர் எல்.கே.அத்வானி. இந்த விவகாரம் அம்பலமானவுடன் பதவியை ராஜினாமா செய்வதாக நாடகமாடினார். பின்னர் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்று தனக்குத் தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டு வெட்கமின்றி மீண்டும் பதவிக்கு வந்தார். இப்போது கடராவை பாஜகவிலிருந்து நீக்கியிருப்பதாக அவசர அவசரமாக அறிவித்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை தவறு செய்பவர்கள் அந்த கட்சியில் இருக்க முடியாது என்பதல்ல. விபரம் இல்லாமல் மாட்டிக் கொண்டவர்கள் நீக்கப்படுவார்கள் என்பதுதான் பாஜக-வின் நடைமுறை தர்மமாக உள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக வீடியோ கேமராவால் பிடிபட்டார். வெங்கையா நாயுடு நில மோசடி ஊழலில் சிக்கினார். பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற ஊழல்கள் எண்ணிலடங்கா. அந்த கட்சி மோசடி பேர்வழிகளின் பாதுகாப்பு மையமாகவே செயல்பட்டு வருகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. பாபுபாய் கடராவின் மோசடிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது வெளிநாட்டு பயணங்கள் முழுவதையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே இத்தகைய இழி செயல்களில் ஈடுபடுகிறார் என்றால் பாஜகவில் எத்தகைய நபர்களுக்கு பதவி தரப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். பாஜக ஒரு வித்தியாசமான கட்சிதான். விதவிதமாக மோசடி செய்து பணம் சம்பாதிப்பது எப்படி என்பதில்தான் அந்த கட்சி வித்தியாசம் காட்டி வருகிறது.
Thanks:Theekkathir Editorial
5 comments:
காங்கிரஸ் செய்யாத ஊழலா இல்லை கருணாநிதி செய்யாத ஊழலா. இவர்களை ஆதரித்துக் கொண்டிருக்கும் சிபிஎம் முதலில் இந்த ஊழல் கட்சிகளை ஆதரிப்பதை நிறுத்தத்ட்டும். 2001ல்
அதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது யார் - இதே கம்யுனிஸ்ட் கட்சிகள்தானே.1991- 96ல்
ஜெயலலிதா ஆட்சி செய்தது எப்படி என்று தெரிந்திருந்தும் மீண்டும் 2001ல் அவரை ஆட்சியில்
அமர்த்தியது யார்.பிஜேபி
யோக்கியமான கட்சி அல்லதான். ஆனால் காங்கிரஸ், திமுக,அதிமுக, தெலுங்கு தேசம் போன்ற
கட்சிகளுக்கு ஆதரவு தரும்/தந்த கம்யுனிஸ்ட்கள் பாஜகை மட்டும் ஏன் குறை கூறுகிறார்கள்.இப்போதும் காங்கிரஸ் முதல்வர்கள், அரசுகள் மீது அதிகார முறைகேடு, ஊழல்
புகார்கள் இல்லையா.ஆதரவினை விலக்கிக் கொண்டு அரசியலில் நேர்மைதான் முக்கியம்,
ஊழல் கூடாது என்று கம்யுனிஸ்ட்கள் கூறமாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க
எந்த கழிசடைகளுடனும் கூட்டு சேர்வார்கள். இதுதானய்யா உங்களது அரசியல் கொள்கை.
கேரளாவில் இடதுசாரி முண்ணனி நாறிக்கொண்டிருக்கிறது.முதலில் அதை சரி செய்யுங்கள்.
நல்ல பதிவு
பா.ஜ.க.வின் ஊழல், ஆள் கடத்தல், ஒழுங்கீனம், மதவெறி பாசிச கொலைகள் போன்ற கழிசடைத்தனங்கள் அம்பலப்பட்டு விட்டதே என்ற கவலை அனானிக்கு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஊழலை யார் செய்தாலும் குற்றம் குற்றம்தான்! இதனை எப்போதும் சி.பி.எம். எதிர்க்க தயங்கியதில்லை. பாபு பாய் கட்டாரி தற்போது சீனில் இருக்கிறார். மேலும், பா.ஜ.க.வும் - சங்பரிவாரும் தன்னை புனித பிம்பமாக காட்டிக் கொள்ளை முனைவதும், ஒரு மதவெறி அமைப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்திய மண்ணில் வேர் பதிப்பதை அனுமதிக்க கூடாது. அதனை அம்பலப்படுத்துவதற்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அந்த விஷப் பாம்பை அடித்து மாய்க்க வேண்டியுள்ளது.
மேலும், தாங்கள் கூறியிருப்பது போல் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக எந்த கழிசடையுடன் இப்போதும் கூட்டுச் சேரத் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் கழிசடைகளை சுத்திகரித்து விடலாம். சமூகத்தை விஷமாக்கும் கருத்துக்களைக் கொண்ட சங்பரிவார விஷக் கிருமிகளை கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
//பாரதிய ஜனதா கட்சி தன்னைத்தானே வித்தியாசமான கட்சி என்று அழைத்துக் கொள்வது உண்டு//
இங்கே விவாதம் இந்த பதிவின் முதல் வரியை அடிப்படையாக கொண்டது. பா.ஜ.க. என்றுமே வித்தியாசமான கட்சி இல்லை என்பது தான் உடன்பிறப்பு சந்திப்புவின் வாதம் கூட. அனானியின் வாதங்களும் அதை வழிமொழிகின்றன
நன்றி உடன்பிறப்பு
Post a Comment