நோவார்ட்டிஸ் (Novartis) எனும் பன்னாட்டு மருந்து நிறுவனம் சுவிஸ் நாட்டை சேர்ந்தது. மருந்து உலகில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வருட வருமானம் 1,60,000 கோடி ரூபாய். மருந்து உலகின் பகாசூர நிறுவனமான நோவார்ட்டிஸ் இரத்த புற்று நோயாளிகளுக்கான க்ளிவாக் (Glivec) மருந்து ஒன்றினை உற்பத்தி செய்கிறது. இம்மருந்திற்கு 60 நாடுகளில் காப்புரிமை பெற்று தன்னுடைய ஆக்டோபஸ் கரத்தை நீட்டியுள்ளது.
தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள காப்புரிமை அலுவலகத்தில், க்ளீவாக் மருந்திற்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருந்தது.நம்முடைய காப்புரிமை அதிகாரிகள் இம்மருந்து புதிய கண்டுபிடிப்பல்ல; மேலும் இந்திய காப்புரிமை சட்டம் 3ன பிரிவின் படி இதனை புதிய கண்டுப்பிடிப்பாக அங்கீகரிக்க முடியாது என்று சான்று வழங்கி விட்டது. இது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கக்கூடிய மருந்துகளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளை வெறுமனே இரசாயன மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.
நோவார்ட்டிஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசிற்கு எதிராக ஒரு வழக்கினை தொடுத்துள்ளது. என்ன வழக்கு தெரியுமா? இந்திய அரசின் காப்புரிமை சட்டம் 3ன பிரிவை நீக்க வேண்டும். இது காட் (GATT) ஒப்பந்தம் வகுத்துள்ள வர்த்தகம் சார்ந்த அறிவுச்சார் சொத்துரிமை சட்டத்திற்கு எதிரானது என்று இந்திய பாராளுமன்றத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய காப்புரிமை சட்டத்திற்கு வேட்டு வைக்க துணிந்து விட்டது. உண்மையில் இந்த நிறுவனம் தன்னுடைய மருந்து புதிய கண்டு பிடிப்புதான் என்று நிறுவுவதற்கு மாறாக, குறுக்கு வழியில் தன்னுடைய வியாபார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது. மக்களின் உயிருக்கு வேட்டு வைக்கும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக வழக்காடுபவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் அட்டர்னி ஜெனரலாக இருந்த சோலி சொராப்ஜி மற்றும் நம்முடைய மாஜி சட்டமந்திரி ஒருவர். இவர்கள் யாருக்கு காவலானர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
சரி, இந்த மருந்துக்கு பின் உள்ள ரகசியம் என்ன என்று பார்த்தால் மிக சுவரா°யமாக இருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்களே, அதுபோலதான் நோவார்ட்டிஸ் தற்போது ஆடிக் கொண்டிருப்பதன் மர்மம் புரிய வரும். இரத்த புற்று நோய்க்கான மருந்துகளை இந்தியாவில் ஏற்கனவே ரான்பேக்ஸ்சி போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இம்மருந்துகளின் விலை ஒரு மாதத்திற்கு ரூ. 8000 முதல் ரூ. 12,000 மட்டுமே. ஆனால், இதே வகை மருந்தான நோவார்ட்டிஸின் க்ளீவாக் ஒரு மாதத்திற்கு ரூ. 1,20,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒருவேளை இந்த மருந்திற்கு இந்தியாவில் காப்புரிமை வழங்கப்பட்டால் இந்திய மற்றும் மூன்றாம் உலக நோயாளிகளுக்கு இருக்கும் ஒரே வழி மரணம்தான்.
ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு வளரும் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்துதான் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் AIDS நோயாளிகளின் பெருக்கத்தால் அந்நாட்டு மக்கள் பெரும் அவதியில் இருக்கிறார்கள். இந்நிலையில் நோவார்ட்டிஸ் போன்ற நிறுவனங்களின் சதித் திட்டத்திற்கு இரையானால் உலக மக்களின் நிலை என்னவாகும்? கொலைக்காரன் கையில் கத்தியை கொடுத்த கதையாகி விடும். எனவே ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் நோவார்ட்டிஸின் இந்த வழக்குக்கு எதிரான குரல் ஓங்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள பத்திரிகை அறிவு ஜீவிகள் இது சம்பந்தமான விஷயம் குறித்து மூச்சே விடுவதில்லை. இதுதான் வர்க்க பாசம் என்பது.
காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதால் இந்திய காப்புரிமை சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் ஏகபோக மற்றும் பகாசூர நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். வளர்ந்த வரும் அல்லது புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பவர்களுக்கு ஏற்கனவே சமாதி கட்டப்பட்டு விட்டது உலக வர்த்தக நிறுவனத்தால். அதாவது, ஏற்கனவே இந்திய காப்புரிமை சட்டம் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கியது. ஆனால், புதிய சட்டப்படி இது 20 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய சட்டத்தில் ஒரு பொருளை செய்யும் முறைக்குதான் காப்புரிமை வழங்கப்பட்டது. இதனால் பல்வேறு செய்முறைகளை கையாண்டு கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மார்க்கெட் ஏகபோகங்களின் பிடிக்குள் செல்லாமல் இருப்பதில் ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பு இருந்தது. தற்போதை சட்டத்தில், பொருளுக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. அதாவது இங்கே செய்முறை என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் ஒரு பார்முலாவை பயன்படுத்தி புதிய மருந்து கண்டுப்பிடித்திருந்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதுபோன்ற மருந்து கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கப்படாது. இத்தகைய சட்டத்தைத்தான் தீவிரமாக அமலாக்க வேண்டும் என்று வாதிடுகிறது நோவார்ட்டிஸ்.
இன்றைக்கு இந்தியாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். இது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. மேலும் பல புதிய பெயர்த் தெரியாத நோய்களெல்லாம் நம்மை பயமுறுத்திக் கொண்டு வரும் சூழலில் நோவார்ட்டிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் சதி வலைகளுக்கு நம்முடைய சட்டம் எந்த விதத்திலும் வளைந்து கொடுக்காமல் இந்திய நாட்டின் இறையான்மையை காக்க வேண்டும். ஏனென்றால் சமீப காலத்தில், இந்திய நீதித்துறை ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே தன்னுடைய தீர்ப்பை வழங்கி வருகிறது. எனவே, தற்போதைய காப்புரிமை சட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் வலுவான போராட்டத்தின் பின்னணியில் ஒரு குறைந்தபட்ச வலைப் பாதுகாப்பை உருவாக்கி வைத்துள்ளோம். இதனை இழப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மேலும், இதனை பாதுகாக்க வேண்டும் என்றால், அது இந்திய மக்களின் கைகளிலேயே உள்ளது. விரட்டியடிப்போம் நோவார்ட்டிசை!
16 comments:
இது உண்மையென்றால் மிக அதிர்ச்சியான செய்திதான்... :(
சென்ஷி
உண்மையிலேயே அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்.. 'கழுகாரையும்', 'ஆந்தை'யாரையும்விட அதி பயங்கர 'கருடன்'கள் வலைப்பூக்களில் உள்ளார்கள் என்பதில் எனக்கு ரொம்ப ஆச்சரியம்.. நாட்டில் இப்போது நிலவி வரும் சூழ்நிலையில் இது போன்ற பிரச்சினைகள் வெளிவராமலேயே இருப்பது மிகவும் ஆபத்தானது. நமது அரசியல்வாதிகளுக்கு இதையெல்லாம்விட வேறுவேறு வேலைகள் இருப்பதால் எங்கே இதை கண்டுகொள்ளப் போகிறார்கள். ஓத வேண்டியது நமது கடமை. நாம் ஓதிவிட்டோம்.. நன்றிகள் நண்பரே..
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி
பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் அட்டர்னி ஜெனரலாக இருந்த சோலி சொராப்ஜி மற்றும் நம்முடைய மாஜி சட்டமந்திரி ஒருவர். இவர்கள் யாருக்கு காவலானர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
Soli Sorabjee and Shanthi Bushan
(he was law minisiter in Janata
Party government) had appeared
in their professional capacity
as advocates.Sorabjee has appeared
in reservation case defending TN
govt.Vijayan who has argued against
69% reservation is appearing against Novartis on behalf of an
indian company. As professional
they have right and freedom to
practise their profession and to
represent their clients' interest.
(Late) N.T.Vanamamalai a leftist lawyer had defended many a 'criminal' including M.R.Radha.So your point is irrelevant.
இந்தியாவில் உள்ள பத்திரிகை அறிவு ஜீவிகள் இது சம்பந்தமான விஷயம் குறித்து மூச்சே விடுவதில்லை. இதுதான் வர்க்க பாசம் என்பது.
Nonsense, all the major newspapers
and business press and magazines in English have written extensively
about it. Those who read that weekly rag Peoples Democracy or the daily nonsense Theekathir only
may not realise this.Nothing prevented your great Theekathir
in publishing the news on the case
on a day to day basis.Lawyers Collective reported this case
on a day to day basis.
நம் தேசியவாதிகள் சோலி சோப்ரஜி பற்றி என்ன சொல்ல போகிறார்கள்
அற்புதமான பதிவு... விழிப்புணர்வுப் பணி தொடரட்டும்
அருமையான பதிவு. மேலும் இது போல விளிப்புணர்வு பதிவுகளை எதிர் பார்கிறேன். தங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்.
சென்ஷி இந்த செய்தி முற்றிலும் உண்மையானது. உட்டோ உடன்பாடுகள் எப்படியெல்லாம் நம்மையும், ஏழை நாடுகளையும் ஆட்டி வைக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
நன்றி உண்மைத் தமிழன்... நம்மை தீண்ட வரும் விஷப் பாம்புகளின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமானது. இந்தப் பதிவே கூட மிகத் தாமதமானது என்பதை உணர்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி.
நன்றி சுரேஷ்
அனானி இது குறித்து உங்கள் கருத்து என்ன? நோவார்டிசை வரவேற்கிறீர்களா? அல்லது அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு ஒத்து ஊதுகிறீர்களா? அவர்களுக்கு அது தொழில் என்றால் உங்களது தொழில் அவர்களை நியாயப்படுத்துவதா?
அனானி தீக்கதிரும், பீப்பிள்° டெமாக்ரசியும் இது குறித்து செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது. சி.பி.எம். மத்தியக்குழு இது குறித்து வெளியிட்ட கருத்தையும் இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். இதையும் படியுங்கள்...
-----------------------------------
இந்திய காப்புரிமைச்சட்டத்தின் மீது பன்னாட்டு நிறுவனத்தின் தாக்குதல்
புதுடில்லி, பிப். 3-
ஸ்விட்சர்லாந்து நாட்டின் பன்னாட்டு மருந்து நிறுவனம் இந்திய காப்புரிமைச்சட்டத்தின் மீது நடத்திவரும் தாக்குதல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
‘க்ளீவெக்’ மருந்துப்பிரச்சனையில் ஸ்விஸ்நாட் டின் பன்னாட்டு நிறுவனம் நோவார்டிஸ் இந்திய காப்புரிமைச்சட்டம் குறித்து இந்திய நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை இந்திய அரசு முறையாக வும் தீவிரமாகவும் வாதிட வேண்டுமென மத்திய அரசை சிபிஎம் வலியுறுத்துகிறது.
“டிரிப்ஸ்” விதிமுறைகளைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்திய அரசு காப்புரிமைச்சட்டத்தை நிறைவேற்றுமாறு வற்புறுத்தப்பட்டதைத்தொடர்ந்து அச்சட்டம் 2005ம் ஆண்டில் நிறைவேற்றியது. திருத்தப்பட்ட அச்சட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளை அறிமுகப்படுத்த சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளால் முடிந்தது. இடதுசாரிக் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட பொது சுகாதார பாதுகாப்பு பிரிவுகள்தான் இப்போது பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் இலக்குகளாக மாறியுள்ளன.
திருத்தப்பட்ட காப்புரிமைச்சட்டத்தில் உள்ள ஒரு பிரிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் நோவார்டிஸ் வழக்கு தொடுத்துள்ளது. க்ளீவெக் மருந்து குறித்த இந்த வழக்கு எதிர் காலத்தில் எழக்கூடிய வழக்குகளின் முன்னோடி யாகும். இந்திய காப்புரிமைச்சட்டப்படி பல்வேறு நிறுவனங்களின் காப்புரிமை கோரிக்கை நிராகரிக் கப்படுவதால் இன்னும் பல வழக்குகள் வருங்காலத் தில் தொடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
க்ளீவெக் ரத்தப்புற்றுநோயாளிக்கு அளிக்கப் படும் மிக முக்கியமான புற்றுநோய் எதிர்ப்பு மருந் தாகும். இதுகுறித்த வழக்கு இந்திய காப்புரிமைச் சட்டத்திற்கு விடப்பட்ட சோதனையாகும். க்ளீவெக் மருந்தின் காப்புரிமை ஏற்கப்பட்டால், நோயாளியின் மாதாந்திர மருத்துவச்செலவு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக மாறும். உள்நாட்டில் தயாராகும் மருந் தால் ஏற்படும் மாதச்செலவு ரூ.8 ஆயிரமே. க்ளீவெக் மருந்து விவகாரத்தில், 1993ம் ஆண்டில் ஸ்விஸ் பன்னாட்டு நிறுவனம் காப்புரிமை பெற்ற மருந்தில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய காப்புரிமை பெற நோவார்டிஸ் முயல்கிறது. தற் போதைய தயாரிப்பு முறையில் உருவாகும் மூலக் கூறுகளை மாற்றி அமைத்து மோசடியாக காப்பு ரிமை பெறுவதைத் தடுக்கும் இந்தியக் காப்புரிமைச் சட்டப்பிரிவு 3(டி)ஐ எதிர்த்து சென்னை உயர்நீதிமன் றத்தில் நோவார்டிஸ் வழக்கு தொடுத்துள்ளது. இதேபோல் 1995ம் ஆண்டுக்கு முன் அறியப்பட்ட இரண்டாம் வரிசை எய்ட்ஸ் மருந்துகளுக்கும் இப் போது இந்தியாவில் காப்புரிமை வழங்க முடியாது. இரண்டு மருந்துகளைக் கலப்பது அல்லது அவற்றை புதிய வடிவம் எனக்கூறுவது அல்லது அவற்றுக்கு புதிய பலன்களைக் கூறுவது ஆகியவற்றின் மூலம் அம்மருந்துகளின் காப்புரிமைகளுக்கு புதிய வர்ணம் பூசி புதிய காப்புரிமை பெற பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.
எனவேதான் பன்னாட்டு நிறுவனங்கள் சட்டப் பிரிவு 3(டி)யை நீக்குமாறு அல்லது நீர்த்துப் போகச்செய்யுமாறு கேட்கின்றன. இந்த தந்திரம் பலித்துவிட்டால் மிகப்பெரும் பொதுச்சுகாதாரப் பாதுகாப்பு முறை தகர்க்கப்படும். இதனுடைய மோசமான விளைவாக, இரண்டாம் வரிசை எய்ட்ஸ் மருந்துகளுக்கு கூடுதலான எய்ட்ஸ் நோயாளிகள் செல்வதால் பல எய்ட்ஸ் மருந்துகளின் விலைகள் தற்போதைய விலைகளைப் போல் 20 முதல் 50 மடங்கு உயரும். தற்போது எய்ட்ஸ் மருந்துகளுக்கு பெரும் ஆதாரமாக இந்தியா விளங்குவதால் இது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதிய மருந்துகள் அல்லது ரசாயன வடிவங்கள் குறித்த மாஷேல்கர் குழு அறிக்கையுடன் காப்புரி மைச்சட்டப்பிரிவு 3(டி)யை இணைத்து தவறான குழப்பத்தை உருவாக்க பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயல்கின்றன. சட்டப்பிரிவு 3(டி) உடன் கூடுதலாக புதிய ரசாயனங்கள் அல்லது மருந்து வடிவங்களுக்கு மட்டுமே காப்புரிமை வழங் கப்படும் என்று வரையறுக்கப்பட வேண்டுமென்று இடதுசாரிக்கட்சிகள் கூறுகின்றன. இதுகுறித்த மாஷேல்கர் குழு பரிந்துரைகள் மற்றும் நுண்ணுயிர் அமைப்புகள் ஆகியவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு முழு உடன்பாடில்லை என்பதுடன் இவற்றுக்கும் நடப்பில் உள்ள சட்டத்தின் 3(டி) பிரிவுக்கும் எவ்வித தொடர்பில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது.
இந்திய நீதிமன்றங்களிலும், சர்வதேச மேடை களிலும் இந்திய அரசு இந்திய காப்புரிமைச் சட்டத்தை பாதுகாக்க இந்திய அரசு தீவிரமாக வாதிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. ரத்தப் புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய் களுடன் போராடிவரும் நோயாளிகள் விஷயத்தில் பன்னாட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளக்கூடாது. இந்திய நீதிமன் றங்களில் காப்புரிமைச்சட்டத்தைக் காக்க போராடு வதுடன், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாப வெறிக்கு எதிரான கருத்துக்களைத் திரட்ட மத்திய அரசு சர்வதேச மேடைகளையும் பயன் படுத்த வேண்டும் என்று அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.
(ஐஎன்என்)
நன்றி சேவியர், அறிவழகன்.
சென்ஷி This is from Frontline Magazine. Please read this also.
Thanks lo
Santhipu.
Patent trouble
SARAH HIDDLESTON
The Madras High Court is set to resume hearing arguments in the case on Novartis' patent application for its cancer drug Gleevec.
VINCENT KESSLER/REUTERS
Daniel vasella, Novartis AG chief executive.
ON January 29, the Madras High Court began hearing arguments on a series of writ petitions filed by the Swiss pharmaceutical multinational Novartis AG and its Indian subsidiary Novartis India against the Indian government, the Cancer Patients Aid Association (CPAA) and four Indian generic drug manufacturers: Natco, Cipla, Hetero and Ranbaxy. The petitions plead against the rejection by the Chennai Patent Office last year of a patent application for Novartis' anti-cancer drug Gleevec and submit that Section 3(d) of the Indian patents Act, Patents Act, 1970, which provided one of several grounds for rejecting the patent application, is invalid, illegal and unconstitutional.
In March 2005, India amended its Patents Act to comply with the 1995 World Trade Organisation's (WTO) Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) agreement, which requires 20-year patent protection for innovative medicines while allowing for public health safeguards. This included Section 3(d), a provision that is unique to Indian law and was included to protect public health. It states that patents would not be given for new forms, uses or minor modifications of existing drugs unless they differ significantly with regard to efficacy.
Between the signing of the 1995 TRIPS agreement and the amendment of the Act, patent applications were collected in a mailbox, to be reviewed once the agreement came into force. One of these was the 1997 application filed by Novartis AG in the Chennai Patent Office for imatinib mesylate, brand-named Gleevec, on the grounds that the beta crystalline salt form (mesylate) of the base imatinib was a new invention. Rights for exclusive access to the Indian market were obtained in 2003, and on that basis manufacturers of generic drugs were forced to withdraw their product from the market.
In 2005, the CPAA and the generic drug companies filed an opposition to the application before the patent was granted. Under Section 3(d) of the Act, they argued, the drug was not patentable because it was actually a salt form of an already known substance and did not display any enhanced efficacy. This substance was the active molecule imatinib, patented in 1993 before the 1995 TRIPS agreement.
In January 2006, the Assistant Controller Patents and Designs (Chennai) held that since imatinib existed naturally in a stable salt form, the 1993 patent covered both the free base imatinib and its salt form mesylate. The ruling was that Novartis failed to prove increased efficacy and, therefore, Gleevec was not patentable under Section 3(d) of the Patents Act.
On the basis of this ruling, generic drug companies resumed manufacturing the drug and selling it in the world market at a tenth of the price that Novartis was charging. In May 2006, Novartis filed the affidavits for the case that is currently being heard.
In the challenge to the Assistant Controller's order, Novartis argued that he did not give sufficient weight to the fact that patents for imatinib mesylate had been granted in 35 other countries, that the case law placed before him was ignored and that an in-house laboratory test performed by Novartis scientists on rats showed the 30 per cent increase in efficacy necessary for patents under Section 3(d).
The CPAA and the generic drug companies responded that each country was free to determine its own criteria for patentability and that the findings of patent offices in one country had no relevance in another as stated under Article 4 bis of the WTO Paris Convention. They also argued that Novartis failed to show that imatinib mesylate differed significantly from other forms of imatinib and questioned the independence of the investigation undertaken to show 30 per cent efficacy. They submitted that Novartis provided only 10 per cent of the research funding necessary to develop the drug. Dr. Brian Drucker of Oregon Health and Science University, whose laboratory identified the compound, received 50 per cent of his funding from the National Cancer Institute (of the U.S. government), 30 per cent from the Leukemia and Lymphoma Society (a U.S. non-governmental organisation), and 10 per cent from Oregon Health and Science Institute.
In the challenge to Section 3(d), Novartis argued that this aspect of the Indian patent law is arbitrary and illogical because it is not in compliance with the TRIPS agreement, particularly Article 27. It argued that this would undermine incentives for pharmaceutical innovation and that Section 3(d) was introduced in the Indian Parliament with the intent to disqualify Gleevec. Although Novartis recognised that TRIPS was a non-enforceable agreement and the Indian government was therefore free to repudiate its obligations under TRIPS, Novartis claimed that it was invalid and unconstitutional for Parliament to otherwise comply to all but one provision. It further claimed that the term efficacy was vague and discriminatory. It placed on record that it had a charitable programme Glivec International Patient Assistance Program (GIPAP), which disseminates medicines free of charge to those who were unable to afford them.
The CPAA and generic drug companies responded that it was not open to private companies or Indian courts to decide whether Indian patent laws were compliant with TRIPS. They contended that it did not violate the Indian Constitution and was passed by a competent legislature (the only two grounds for amending a statute in Indian law). They also argued that Section 3(d) was not vague and did comply with TRIPS. With regard to Article 27 they countered that Section 3d was valid because it did not discriminate as to the field of technology. They further made the case that 3(d) was a bona fide Act introduced to combat the problem of "evergreening". This, they argued, was an abuse of the spirit of TRIPS, which sought to balance public health and intellectual property rights. Evergreening is a technique companies use to stagger patent applications so as to extend market monopoly and prevent the entry of generic drug competitors. This keeps medicines out of reach for the vast majority of Indians. Such a result would be in contravention of Article 21 of the Constitution and other international conventions on the right to health.
ADNAN ABIDI/REUTERS
Transgendered people suffering from HIV/AIDS protest against Novartis, in New Delhi on January 29.
Although Novartis initially alleged violation of Article 19(1)(g) of the Constitution (the right to carry on any business), that claim was dropped in the January 29 hearing. Instead, it alleged that Section 3(d) violated Article 14 of the Constitution, which promotes equality before the law and prohibits arbitrary statute. Novartis wanted to place on record the recently released report of the Mashelkar Technical Expert Group on Patent Issues. The High Court case was adjourned for counsel for the Government of India to submit a response. It will be resumed on February 15, 16 and 19.
Reactions to the case have not been indifferent. This is not surprising as there is much at stake on several counts. Novartis will want to make the most of its blockbuster drug and may file for more patents under the same criteria. Other multinational companies are waiting in the wings for their cue. According to V. Rangaswamy, Assistant Controller Patents and Designs, who spoke to Frontline, patent applications for some 9,000 substances are in the 1995-2005 mailbox. The Communist Party of India (Marxist), public health organisations and patients' groups are concerned that the sale of life-saving drugs, not only for a particular type of leukaemia but for a range of diseases, including tuberculosis, HIV/AIDS, asthma and diabetes, will be restricted. They fear that not only will the case set a precedent for the approval of drugs with these sorts of modifications but also a ruling that overturns Section 3(d) will mean that patents will be granted more widely. Since India produces many generic medicines at affordable prices, this will restrict access not just to the man on the street on India but to many patients across the developing world. They also fear that a precedent could be set for multinational companies to change drug laws in other countries. As Y.K. Sapru, Chairman of the CPAA told Frontline, "this is a global issue that will affect millions of people." The Indian Network for People with HIV/AIDS (INP+), the People's Health Movement, the Centre for Trade and Development (CENTAD) and Medicines Sans Frontiers (MSF) called on the company to cease immediately its legal action. Nearly a quarter of a million people from over 150 countries have signed a petition expressing their concern about the negative impact the company's actions could have on the developing world. The CPI(M) issued a statement calling on the government to defend the Patents Act and use international platforms to "mobilise opinion against the greed for profit".
Caught in the glare of publicity, Novartis put out a public statement addressing three points. These bring out the relevance to the case of long-standing issues surrounding liberal patentability.
First, Novartis sees India as a global competitor. Therefore, "[p]rotecting innovation is the foundation for massive R&D investments made by the pharmaceuticals industry that are vital to medical progress. Companies can continue to bring improvements and innovations to patients and societies only with effective patent laws. For a research-based company such as Novartis, patents are not negotiable."
According to Leena Menghaney, campaign manager, MSF, Delhi, excessive patenting creates a patent thicket and can prevent one company from investing in research and development in an area that another company's patent may improperly cover. Also, allowing patents on minor modifications such as these acts as a disincentive for companies to address new medical challenges; it is more cost effective for them to work on minor changes for patents on the same drug. She cites two studies, one by the MSF's Drugs for Neglected Diseases Initiative and one by the World Health Organisation's (WHO) Commission on Intellectual Property, Innovation and Public Health, whose report came out in April 2006, that found that since private pharmaceutical companies are driven by market potential, people in developing countries do not have the purchasing power to attract research and development for medicines for the diseases that most affect them. Instead, these companies are driven by the purchasing power for drugs for cosmetic changes and lifestyle diseases, such as anti-wrinkle creams, anti-obesity drugs and so on.
Second, Novartis has secured access to Gleevec in India and globally: "In 2006, our access-to-medicines programme reached 33.6 million patients. Novartis spent $ 755 million last year alone. ... The Glivec International Patient Assistance Program (GIPAP) is one of the most far-reaching patient assistance programmes ever implemented on a global scale. In India, 99 per cent of patients who receive Gleevec receive it free from Novartis [6,600 people]."
However, a response by Professor Brook K. Baker of the Northeastern University, School of Law, Program on Human Rights and the Global Economy, states that: "Corporate donations are not a sustainable solution: (1) they are frequently hard to access, (2) they are revocable, (3) they are not offered across the broad spectrum of patented medicines that poor people need, and (4) they are designed primarily to forestall generic competition by removing market incentives."
Third, Novartis states that its actions in India do not hinder the supply of medicines to the poor: "Our case does not challenge provisions that provide for access under international trade agreements, specifically the TRIPS and the Doha Declaration. These flexibilities allow production for export under compulsory licences that have been issued for public health reasons. They have been put in place to allow poor countries to safeguard access to medicines that do not have sufficient local production capacity."
But, according to D.G. Shah, secretary-general of the Indian Pharmaceutical Alliance, who spoke to Frontline from Spain, the functionality of such a provision relies on there being a cheaper alternative to buy. He cites the example of the compulsory licence the Thai government granted in November 2006 for import and production of efavirenz, a second-line HIV/AIDS drug, to deal with stock outs and high prices charged by the patent owner. Without cheaper alternatives from India, there would be nowhere else to go to buy medicines. According to a study conducted by MSF, 67 per cent of the medicines produced in India are exported to developing countries; approximately 50 per cent of the medicines distributed by the United Nations Children's Fund in developing countries come from India; in Zimbabwe, 75 per cent of the tenders for medicines for all public sector health facilities come from Indian manufacturers; the state procurement agency of Lesotho, the National Drug Supply Organisation, states that it buys nearly 95 per cent of all antiretrovirals (ARVs) from India. Even countries that manufacture their own medicines rely on imports of active pharmaceutical ingredients from India.
Dr. Yusuf Hamied, chairman and managing director, Cipla Ltd., points out that India and many developing countries are in a permanent state of crisis. And this requires a permanent compulsory licensing system. "India," he told Frontline, "cannot afford a monopoly. Any drug required in India should be allowed to be manufactured on payment of a 4 per cent royalty. I have never grudged the inventor a reward, but you cannot have a monopoly in a country like India." He points to the case of ARV treatment for HIV/AIDS. "They [multinational drug companies] were charging $12,000 a year until Cipla came along and started making them for a dollar a day."
The well-fed debate about intellectual property rights versus rights to public health has found fresh pastures to graze on. As arguments intensify, it remains to be seen to what extent the government will stand by the amendments it made two years ago to the Patents Act.
இந்த இடுகை திண்ணையில் வெளியாகியிருக்கிறது. இதை பூங்காவிலும் வெளியிட எப்படி சம்மதம் தெரிவீத்திற்கள். இணையத்தில் வேறொரு இதழில் வெளியானதை வெளியிடமாட்டோம் என்று பூங்கா அறிவிதத்து உங்களுக்குத் தெரியாதா இல்லை திண்ணையில் இது வெளியானது பூன்காவிற்குத்
தெரியாதா இல்லை உங்களுக்கும், பூங்காவிற்கு விதிவிலக்கு பற்றி ரகசிய ஓப்பந்தாம் இருக்கிரதா?
நன்றி சந்திப்பு...
The msg is more important and so the style of expression.Avoid quoting such outdated,meaningless quotes viz. PATTAI NAAMAM, SOZHIYAN KUDUMI ...
Thanks Anony. I realise your feelings. In future I will correct such quotes.
Post a Comment