November 28, 2006

இந்தியா 126 : மனித வளத்தில் நாம் எங்கேயிருக்கிறோம்!

மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2006-யை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை உலக நாடுகளின் மனிதவளம் குறித்து ஆராய்ந்து, அதன் தற்போதைய நிலையை ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிட்டு வெளியிடுகிறது.
இவ்வாண்டு மனிதவள மேம்பாட்டு அறிக்கை தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காக தற்போது போரிடும் ஏகாதிபத்தியங்கள், அடுத்து தண்ணீருக்காக இதனை செய்யலாம்! உலகம் முழுவதிலும் தண்ணீருக்கான பற்றாக்குறை அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக, தூய்மையான குடிநீரின்மையால் ஆண்டுதோறும் 20 லட்சம் குழந்தைகள் மடிவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் 100 கோடி மக்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் 260 கோடி மக்களுக்கு சுகாதார வசதி கிடைக்கவில்லை குட்டியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில், ஆண்டுக்கு 4,50,000 குழந்தைகள் டயோரியாவால் இறப்பதாக இவ்வாய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. எல்லைத்தாண்டும் பயங்கரவாதத்திற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் இந்திய அரசு, அத்தகைய பயங்கரவாதிகளின் நாசச் செயல்களால் ஏற்படும் இறப்புகளைவிட நூறு மடங்கு மரணத்தை உண்டாக்கும் டயோரியாவை கட்டுப்படுத்த செலவிடவில்லை என்பது முரண்பாடான விஷயமே!
மும்பை, சென்னை, கல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களில் மக்கள் தொகை பிதுங்கி வழிகிறது. இவர்கள் பெரும் சுகாதார சீர்கேட்டிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர். அதே கிராமப்புறங்களிலும் ஊட்டச்சத்துக் குறைவு, சுகாதாரமின்மை, தூய்மையான குடிநீரின்மை போன்ற காரணங்களுக்களை ஒழிப்பதற்hக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. 2020இல் இந்தியா வல்லரசு கனவை சுமந்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் இந்த அறிக்கை வெளிச்சத்தை தருமா?
156 நாடுகளைக் கொண்ட பட்டியலில் மனிதவள மேம்பாட்டில் இந்தியாவுக்கு 126வது இடம் கிடைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு இந்தியா 127வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஒரு இலக்கம் முன்னுக்கு வந்திருப்பது பெருமைப்படத்தக்க விஷயமா? ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்! நம்மைவிட சிறிய நாடு இலங்கை 93வது இடத்திலும், மக்கள் தொகை அதிகம் கொண்டு சீனா 81வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிரிக்க நாடுகள் என்றாலே அதன் கறுப்பு நிறைந்த அளவிற்கு வறுமையும் நீடித்திருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா கூட 121வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஜமைய்கா, அல்ஜீரியா போன்ற நாடுகள் நம்மைவிட முன்னணியில் உள்ளது. முதல் இடத்தை நார்வே பிடித்துள்ளது. உலகின் செல்வத்தை தன்னகத்தே குவித்து வைத்துள்ள அமெரிக்காவிற்கு 8வது இடமே கிடைத்துள்ளது.
மேலும் இந்தியாவில் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவாக பெறுபவர்கள் 79.9 சதவீதம் உள்ளதாக அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய அரசு வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் எண்ணிக்கையை 28.6 சதவீதம் என்று கூறுகிறது.
மேலும் 102 நாடுகளைக் கொண்ட மனித வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவுக்கு 55 இடம் கிடைத்துள்ளது. அறிக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தியாவில் ஜி.டி.பி. வளர்ச்சி 8 சதவீதம் என்றுச் சொல்லிக் கொண்டாலும் கூட, அது அம்மக்களுக்கு பயன்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இந்திய மக்களை உண்மையிலேயே மேம்படுத்த வெளிப்படையான மைக்ரோ பைனான்° நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் இந்தியாவில் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதாக கூறுகிறது. இந்திய அரசின் கொள்கை ஏழைகளை வாழ்விப்பதற்காக அல்ல; மாறாக மில்லினியர்களை பில்லினியர்களாக்கவும், பில்லினியர்களை டிரில்லினியர்களாக்கவும்தான் என்றுத் தெரிகிறது.
(குறிப்பு : பத்திரிகைகளில் வந்த செய்திவை வைத்து மட்டுமே இங்கு எழுதப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மேலும் விமர்சன ரீதியாக அணுக வேண்டியுள்ளது.)
Read Blelow:

5 comments:

அசுரன் said...

சந்திப்பு,

அருமையான தகவல்களுடன் இந்த போலி வளர்ச்சி பொருளாதாரத்தின் மனித வள மேம்பாட்டு சா(சோ)தனைகளை அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.

ஏழை பணக்காரர்களுக்கு இடையேயுள்ள இடைவேளி அதிகமாகியிருப்பதாக சமீபத்தில் பிரிட்டன் சென்ற பிரதமரும் கூட திருவாய் மலர்ந்துள்ளார்.

அசுரன்

மாசிலா said...

நல்ல பதிவு.
விவாத மேடைக்கு ஏற்ற நல்ல தலைப்பு.
நிற்க.

இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற தண்ணீர், சுகாதர, அடிப்படை வசதி என்று கணக்கெடுப்பு நடத்தும்போது, ஏழை; எளிய, முக்கியாமாக கிராமத்தில், ஒதுக்குப்புறத்தில் மேலும் மிகப்பெரிய நகரங்களின் புற நகரங்களில் (எ.கா : சென்னை, மும்பை இதர...) வாழும் மக்களால்தான் அட்டவணையின் அடிமட்டத்திற்கு
தள்ளப்படுகிறோம்.

இப்போது அந்த வகையான மக்களையே இல்லாமல் அழித்துவிட்டால், அட்டவணையின் மேல் பகுதிக்கு வந்துவிட வாய்ப்புகள் உண்டு. உலகத்தில் நல்ல பெயர் வாங்கிவிடலாம். வெளிநாட்டவரை நன்றாக கவரலாம்.
நிறைய பணம் கொழிக்கலாம். இதைதானைய்யா இப்போது நாம் செய்துகொண்டிருக்கிறோம். உலக வங்கியும் இதைத்தானய்யா இந்தியாவிடம் எதிர்பார்க்கிறது.

*சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் வயக்காடுகளையும், கிராமங்களையும் அழித்துவிடு!
*விவசாயிகளை ஏமாற்றி வஞ்சகம், சூழ்ச்சி செய்தி தொழிலை கெடுத்து, தண்ணீரை உறிந்து, நிலங்களை வற்றவிட்டு தற்கொலைககு வித்திட்டு அனைவரையும் அழி!
*தலித், ஆதிவாசிகளை மதத்தின் பெயரில் அழி!
*வருமானத்துக்கு மீறிய கடன்களை குடும்பங்களுக்கு கொடுத்து கந்துவட்டி முறையில் தலைமுறை தலைமுறையாக அவர்களை பொருளாதார அடிமையாக வைத்திரு!
*ஊடகங்களின் மூலம் மக்களை முட்டாலாக்கு!
*கண்ட தீனிகளை, பானங்களை உட்கொள்ள வைத்து நோய்வாய்ப்படுத்தி அழி!
*போதை, மது குறை விலையில் கொடுத்து அடிமையாக்கி அழி!
*கலாச்சாரங்க்களை அழி!
*கலைகளை அழி!

இப்படியெல்லாம் செய்தால் அடுத்த ஆண்டு கணக்கெடுப்பில், சீனைவை கூட தள்ளிவிட்டு முன்னுக்கும்
வந்துவிடலாம்.

பிறகு என்ன?
இந்தியா ஏழைகள் இல்லாத நாடு ஆகிவிடும். பணக்கார நடுகளின் வரிசையில் சேர்ந்துகொண்டு கும்மாலமோ கும்மாலம்!
வல்லரசுதான்.
ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினர்தான்.

இதன் பிறகு, நாட்டில் இருக்கும் எச்சிலைகளும், கூட்டிக்கொடுத்த சாதிகளும் எல்லாம் கையில் கூஜா ஒன்றை தூக்கிகொண்டு விளக்கு பிடிக்க வேண்டியதுதான் பாக்கி!

இதுபோன்ற விளக்குகளின் ஒலியில்தான் இந்தியா மிளிரப்போகுதய்யா!

நன்றி.
வணக்கம்.

மாசிலா said...

நல்ல பதிவு.
விவாத மேடைக்கு ஏற்ற நல்ல தலைப்பு.
நிற்க.

இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற தண்ணீர், சுகாதர, அடிப்படை வசதி என்று கணக்கெடுப்பு நடத்தும்போது, ஏழை; எளிய, முக்கியாமாக கிராமத்தில், ஒதுக்குப்புறத்தில் மேலும் மிகப்பெரிய நகரங்களின் புற நகரங்களில் (எ.கா : சென்னை, மும்பை இதர...) வாழும் மக்களால்தான் அட்டவணையின் அடிமட்டத்திற்கு
தள்ளப்படுகிறோம்.

இப்போது அந்த வகையான மக்களையே இல்லாமல் அழித்துவிட்டால், அட்டவணையின் மேல் பகுதிக்கு வந்துவிட வாய்ப்புகள் உண்டு. உலகத்தில் நல்ல பெயர் வாங்கிவிடலாம். வெளிநாட்டவரை நன்றாக கவரலாம்.
நிறைய பணம் கொழிக்கலாம். இதைதானைய்யா இப்போது நாம் செய்துகொண்டிருக்கிறோம். உலக வங்கியும் இதைத்தானய்யா இந்தியாவிடம் எதிர்பார்க்கிறது.

*சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் வயக்காடுகளையும், கிராமங்களையும் அழித்துவிடு!
விவசாயிகளை ஏமாற்றி வஞ்சகம், சூழ்ச்சி செய்தி தொழிலை கெடுத்து, தண்ணீரை உறிந்து, நிலங்களை
*வற்றவிட்டு தற்கொலைககு வித்திட்டு அனைவரையும் அழி!
*தலித், ஆதிவாசிகளை மதத்தின் பெயரில் அழி!
*வருமானத்துக்கு மீறிய கடன்களை குடும்பங்களுக்கு கொடுத்து கந்துவட்டி முறையில் தலைமுறை
தலைமுறையாக அவர்களை பொருளாதார அடிமையாக வைத்திரு!
*ஊடகங்களின் மூலம் மக்களை முட்டாலாக்கு!
*கண்ட தீனிகளை, பானங்களை உட்கொள்ள வைத்து நோய்வாய்ப்படுத்தி அழி!
*போதை, மது குறை விலையில் கொடுத்து அடிமையாக்கி அழி!
*கலாச்சாரங்க்களை அழி!
*கலைகளை அழி!

இப்படியெல்லாம் செய்தால் அடுத்த ஆண்டு கணக்கெடுப்பில், சீனைவை கூட தள்ளிவிட்டு முன்னுக்கும்
வந்துவிடலாம்.

பிறகு என்ன?
இந்தியா ஏழைகள் இல்லாத நாடு ஆகிவிடும். பணக்கார நடுகளின் வரிசையில் சேர்ந்துகொண்டு கும்மாலமோ கும்மாலம்!
வல்லரசுதான்.
ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினர்தான்.

நன்றி.
வணக்கம்.

வெளிகண்ட நாதர் said...

//இவ்வாண்டு மனிதவள மேம்பாட்டு அறிக்கை தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.//நானும் இதை படிச்சு தான், அதுக்காக எழுதனது தண்ணீர்... தண்ணீர்....! பதிவு, படிச்சீங்களா?

சந்திப்பு said...

நன்றி அசுரன்.

நம்முடைய தமிழ் ஊடகங்கள் இது குறித்து நீண்ட மவுனம் சாதிக்கிறது. அவர்களுக்கு என்ன? பத்திரிகை வியாபாரத்திற்கு ஏதாவது பரபரப்பு செய்தி கிடைத்தால் போதும்!

நன்றி மாசிலா

நம்முடைய இந்திய மற்றும் ஏகாதிபத்திய சதிகளை கோஷமாகவே முன்வைத்துள்ளீர்கள். நல்ல புரிதல்கள். இத்தகைய விஷயங்கள் குறித்து ஓங்கி பேச வேண்டிய அறிவு ஜீவிகள் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ?

நன்றி வெளிகண்ட நாதர்.

தங்களின் தண்ணீர், தண்ணீரை படித்து விட்டேன். நல்ல தகவல்கள்.