தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதுவும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய தென்மாநிலங்களில் ஐ.டி.த்துறை அசுர வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் புதிய வசதிப்படைத்த - நவீன நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது. சென்னையில் இதற்கான வாய்ப்புகள் மேலும், மேலும் பெருகி வருகிறது. நாளொரு திட்டங்களை நமது தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தமிழகத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார் இதனால் தமிழகமே தலைகீழாக மாறப்போகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியப்போகிறது என்றெல்லாம் கதைக்கிறார்கள். சரி இருக்கட்டும்.
சென்னையில் ஐ.டி. சிட்டியின் ஆரம்பமே டைடல் பார்க்கிலிருந்துதான், தரமணியில் ஆரம்பித்து பெருங்குடி சாலைகள் எங்கும் பளபளக்கும் கட்டிடங்கள், நவீன தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் சாதாரண மனிதர்களுக்கு ஏதோ வேற்று நாட்டிற்குள் புகுந்துவிட்ட எண்ணம்தான் தோன்றும். ஆனால், அந்த எண்ணத்தை, கற்பனையை குண்டும், குழியுமான, அதாள - பாதாளமான அழுக்கடைந்த, தூசிகள் சுதந்திரமாக பறப்பதும், சாலைகளில் மோட்டார் பைக்குகளின் இறைச்சல், கடுமையான டிராபிக் நெருக்கடியும் கலைத்துவிடுகிறது. அடடா, நாம் தப்பாக எண்ணி விட்டோம். நாம் இருப்பது அதே அழுக்கடைந்த சிட்டியில்தான் என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடுகிறது.
ஐ.டி. சிட்டியில் கட்டிடங்கள் பளபளக்கும் அளவிற்கு நமது சாலைகள் பளபளக்க வேண்டாம். குறைந்தபட்சம் தரமான சாலையாவது போட வேண்டாமா? இந்த வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சியாகத் தெரியவில்லை. எப்படி துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகள், குண்டு குழந்தைகளாக வளர்க்கிறதோ அதுபோலத்தான் இருக்கிறது. இந்தச் சாலையில் செல்லும் புதிய நடுத்தர வர்க்க ஜீவிகள் இது குறித்து ஏதாவது சிந்திக்கிறார்களா? என்றும் தெரியவில்லை? இந்த சாலையில் ஒரு மாதத்திற்கு பைக்கில் பயணிக்கும் எந்த ஆரோக்கிய மனிதனுக்கும் கடுமையான - சொல்ல முடியாத நோய்கள் தாக்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது.
ஐ.டி.யில் வளம் வரும் கம்ப்யூட்டர் ஜாம்பவான்கள் சமூகத்தைப் பற்றி கவலைப்படா விட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் தாங்கள் செல்லும் சாலையையாவது சுத்தமாக - தரமாக பராமரித்திட கவனம் செலுத்தலாமே! இவ்வளவு மோசமான சாலைகளை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருக்கும் பீலிங் எப்படி ஏற்படுகிறது என்றுத் தெரியவில்லை. மேலும், இந்த அடிப்படை கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தொழில் ஆரம்பிக்கிறார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் தெரிவது ஒன்றுதான் இந்திய ரத்தத்தை உறிஞ்சுவதைத் தவிர வேறு என்னவாக இருக்கும்!

6 comments:
வாய்யா சந்திப்பு....
கழக ஆட்சி வந்தாத்தான் ஒங்களுக்கு இதெல்லாம் தெரியுதா?....பார்பன ஆட்சி இருந்தப்ப தெரியலயா?....(2001-2006 உள்ளாட்சி தேர்தல் பற்றி தமிழ் பதிவர்களது ஓப்பீடு இங்கும் பொருந்தும்)..
பெரியார் சொன்னத செய்யும் ஆட்சியில், அண்ணா வழிநடக்கும் ஆட்சியில் பார்பன சதி இந்த மாதிரி எழுதுவது....தனியாக பட்டண குழுவில் இது பற்றி பேசப்படும்.
கண்டிப்பாக சென்னை அழுக்கு சிட்டிதான்.....2-3 கோடி மக்கள் வேறு வக்கில்லாம வாழும் இடம். திராவிடமும் சாதீய எதிர்ப்பு(என்ற பெயரில் பார்பனிய எதிர்ப்பு) தவிர என்ன இருக்கு அங்கே?.....
யோவ் அனானி பாப்பான் ஆட்சியோ, திராவிடன் ஆட்சியோ அதுவாய்யா இப்ப பிரச்சினை. நம்ம ஐ.டி. சிட்டி நாறுதுன்னா, அத மாத்துறதுக்கு உருப்படியா ஏதாவது செய்யுறத விட்டுட்டு... இப்படியே பேசிப் பேசி பொழுதக்கழிச்சுடுய்யா....
ஹலோ இரண்டாவது அனானி, முதல் அனானி விரிச்ச வலையிலே விழுந்த விட்டில் பூச்சியே! முதல் அனானி வழியிலேயே நீங்களும் பயனிப்பது சரியா? அதவிடுங்க... இங்க நடப்பதை பார்ப்பன எதிர்ப்புன்னு புரிஞ்சுக்காதீர்! பெரியாரே அதச் செய்யல... இங்க எதிர்ப்பது எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்புதான்... அதாவது பிராமணிய கொள்கைகளை தூக்கிப் பிடிப்பதைத்தான். அதை நிச்சயம் எதிர்த்தே ஆகவேண்டும். மனுசனுக்குள்ள என்ன பிரிவு வேண்டிக்கிடக்கு. 3000 வருஷமா இப்படிச் செய்ததாலதான் நம்ம இந்தியா உருப்படாம போச்சு... தயவு செய்து கீழே இருக்கிற --அடங்கித்தான் போகவேண்டும்!-- பதிவை படியும்... பார்ப்பனீம் உயிரோடு இருப்பதற்கு இதைவிட அத்தாட்சி வேறு வேணுமா?
சூப்பர்ப்ப்ப்ப்ப் தல....
//..என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் தெரிவது ஒன்றுதான் இந்திய ரத்தத்தை உறிஞ்சுவதைத் தவிர வேறு என்னவாக இருக்கும்!//
பதிவின் நோக்கத்தை கடைசி வாக்கியத்தில் நிரூபித்துவிட்டீர்கள்.
சொல்ல வேறொன்றுமில்லை.
நன்றி.
நன்றிகள் சினேகிதனுக்கும், பெத்தராயுடுவுக்கும்.
அன்னே பெத்தராயுடு! ஒரு கல்லுல இரண்டு மாங்காய்ன்னு கேள்விப் பட்டிருப்பீங்க... அது இதுதான்....
Post a Comment