May 17, 2007

மனுவாதி குருமூர்த்தியின் புலம்பலும் மாயாவதியின் மாட்சிமையும்!




உத்திரபிரதேசத்தில் மாயாவதி தலைமையில் மதச்சார்பற்ற அரசு அரியனை ஏறியுள்ளதை சங்பரிவார கூட்டத்தால் ஜீரணிக்க முடியவில்லை; அதுவும் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனிபெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்ததை சங்பரிவார கூட்டத்தை கதிகலங்க வைத்துள்ளது.


இன்றைய (17.5.2007) தினமணியில் ‘மனுவாதி - மாயாவதியுடன் உடன்பாடு’ என்ற தலைப்பில் எஸ். குருமூர்த்தி தீட்டியுள்ள கட்டுரை சங்பரிவாரத்திற்குள் இருக்கும் வெக்கையை உணர முடிகிறது.


பா.ஜ.க.வின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ச்சி செய்வதை விட்டு, விட்டு மாயாவதி எப்படி ஆட்சியைப் பிடித்தார் என்பதை விளக்கெண்ணையை விட்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார் குருமூர்த்தி.


கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது தமிழ் பழமொழி! அதுபோல மாயாவதி கடந்த இரண்டு வருட காலமாக எப்படி பிராமணர்கள் உட்பட உயர்ஜாதியினரோடு உடன்பாடு கண்டு, அவர்களை தன் பக்கம் வளைப்பதில் வெற்றி கண்டு வந்தார் என்பது உலகறிந்த விஷயம். அரசியல் சாணக்கியத்தனம் என்பது சங்பரிவார மனுவாதிகளுக்கு மட்டுமே உரியதாக கருதிக் கொண்டிருக்கையில் அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் மாயாவதி. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத குருமூர்த்தி மனுவாதியோடு கூட்டு என்று குற்றம் சுமத்துகிறார்!


மாயாவதி மனுவாதியோடு கூட்டு வைத்தாரா? அல்லது ஏழ்மையில் உழலும் உயர்ஜாதியினரோடு கூட்டு வைத்தாரா? மனுவாதம் என்றால் என்ன? மனுவாதத்தை இன்றைக்கும் தோளில் போட்டு சுமக்கும் கட்சிதான் பா.ஜ.க.வும் சங்பரிவாரமும்! ஆம்! ஆர்.எஸ்.எஸ்.இல் இன்றைக்கும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதில்லை! மேலும், மக்களின் பிரச்சனைகளை முழுக்க முழுக்க திசை திருப்பி ராமருக்கு கோவில் என்றும், ராமர் பாலம் இடிப்பு என்றும், இசுலாமியருக்கு எதிரான கட்டுக்கதைகளை திரிப்பதும், பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டுவதும், கிறித்துவ கோயில்களை தாக்குவதும், கன்னியாஸ்திரிகளை கற்பழிப்பதும், இந்திய மக்களை இந்தியாவிலேயே அகதிகளாக்குவதும்தான் உண்மையான மனுவாத சிந்தனை.


மனுவாதத்தின் நவீன அடையாளமே சங்பரிவாரம்தான். ஹரியானாவில் செத்த மாட்டை உரித்ததற்காக நான்கு தலித் இளைஞர்களை கல்லால் அடித்தே கொன்ற காட்டுமிராண்டி கூட்டம்தான் பா.ஜ.க.வும் - சங்பரிவாரமும். தலித் மக்களை இன்றைக்கும் தீண்டத்தக்காதவர்களாக பார்க்கும் கூட்டம்தானே சங்பரிவாரம். இத்தகைய கேடு கெட்ட கூட்டம் மாயாவதியை மனுவாதத்தோடு கூட்டு என்று அவரை மனுவாதத்தோடு இணைக்கப் பார்ப்பதே உண்மையான மனுவாத சிந்தனையின் வெளிப்பாடு!


இந்த சீரழிந்த சிந்தனையில் செயல்படும் பா.ஜ.க.வை உ.பி.யில் ராமேரே கைவிட்டு விட்டார் என்பதுதான் உண்மை!


உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவையே ஒரு குஜராத் போல் மாற்றியிருப்பார்கள். அதற்கான வழியை அடைத்து விட்டார்கள் உத்திரபிரசேத மக்கள்! இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தில் குறியாக இருந்தார்கள் அது உ.பி.யில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்பது மட்டும்தான்! இந்தியாவை சூழ்ந்துள்ள பெரும்பான்மை பாசிச மனுவாத சிந்தனைக் கொண்ட இந்துத்துவா ஆபத்தை உணராத காங்கிரசையும் உ.பி. மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளதோடு, பா.ஜ.க. போலி தேச பக்திக்கும் சம்மட்டியடி கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே பெற்ற 43 இடங்களில் பா.ஜ.க. தற்போது துடைத்தெறியப்பட்டுள்ளது.


இதற்கான ஆத்ம பரிசோதனையை குருமூர்த்தி நடத்துவதை விட்டு, விட்டு - புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மாயாவதியின் புதிய சித்தாந்தத்தின் மீது தாக்குதல் தொடுக்கவும், கறையேற்றவும் துடிக்கிறார் குருமூர்த்தி! இவர்களது திசை திருப்பல்களுக்கு தமிழக மக்களும், இந்திய மக்களும் இறையாக மாட்டார்கள்!


இன்றைய தினம் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது போல், சேது - சமுத்திர திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள்தான் என்பது மிக நிதர்சனமான கூற்று. இந்திய மக்களையே கடத்தி வேற்று நாட்டுக்கு விற்கும் தரம் குறைந்த வியாபாரிகள்தான் இந்த சங்பரிவாரத்தினர் என்பதை நாடு உணர்ந்துக் கொண்டது இனியும் எடுபடாது உங்கள் ராமர் அரசியல்!


இந்தியாவின் எதிர்காலம் மதச்சார்பற்ற - கூட்டாட்சி அரசியலே! பா.ஜ.க. - சங்பரிவார - இந்துத்துவ அரசியலால் இந்தியா ஒருபோதும் ஒளிராது.

2 comments:

Anonymous said...

மூட்டை பூச்சி ஒன்று வந்துடாலே பல்கி பெருகி விடும், இதுலே மாயாவதி இத்தனை பார்பான்களை சேத்து இருகாங்கலே என்ன ஆகுமோ, இது மாயாவதியின் முழு வெற்றி அல்ல, அவாள்கள் கலப்படம் இல்லாத வெட்றி எப்போ கிடைகிதோ அப்போதான் அது முழு வெற்றி ஆகும், அமைச்சரவையில் இருக்கும் பார்புகள் ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் BSP will become Brahmin Smajwad party , i m new to this area, thavarugal irunthal mannikavum

சந்திப்பு said...

அனானி தங்களது உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒரு விஷயத்தை நாம் மறக்க கூடாது. மனுநீதியின் அடிப்படையில் பார்த்தால் தலித்துக்கள் தீண்டத்தகாதவர்கள் - பார்க்க கூடாதவர்கள் - பேசக்கூடாதவர்கள், அதிலும் பெண்கள் என்று சொன்னால் அவர்கள் மிருகத்திற்கு இணையானவர்கள் இத்தகைய வர்ணாசிரம சித்தாந்தத்தை மீறித்தான், அதுவும் ஒரு தலித் பெண் மாயாவதியின் கீழ் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆதிக்க ஜாதியினர் அணிதிரண்டிருக்கின்றனர் என்பதை நாம் மறக்ககூடாது. இதுவொரு பிரம்மாண்டமான வெற்றிதான். இதே இடத்தில் பார்ப்பனீயத்தின் இன்றைய நிஜ வடிவமான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருந்தால் நாடு என்ன பாடு பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவும். எனவே, மாயாவதியின் அரசியல் தந்திரம் மிகச் சரியானது. எதிர்காலத்தில் உழைக்கம் மக்களுக்கான நல்ல ஆட்சியை மாயாவதி அளித்தால் அவருக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் உண்டு இல்லையென்றால் அவரும்....