February 28, 2008

படைப்பாளியை இழந்த தமிழுலகம்!

எழுத்தாளர் சுஜாதா மறைவு தமிழக எழுத்துலகிற்கு ஒரு இழப்பே. தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமான இடத்தை வகித்தவர் சுஜாதா. தன்னுடைய இறுதிக்காலம் வரை தன்னுடைய எழுத்தை தமிழ் மக்களிடையே கொண்டுச் சென்றவர்.
குறிப்பாக அறிவியல் கருத்துக்களை - சுடச் சுட பரவலான தமிழ் வாசகர்களிடையே கொண்டுச் சென்ற பெருமை சுஜாதாவை சேரும். இவரது அறிவியல் கருத்துக்களின் பால் மாணவர்கள் - இளைஞர்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். அதேபோல் இவரது சிறுகதை - நாவல் - தமிழிலக்கியம் போன்ற அம்சங்கள் வெகுஜனங்களை ஈர்க்கக்கூடியதாக இருந்தது.
இவரது எழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து அவரது காலத்திலேயே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் இவையனைத்தையும் தாண்டிச் சென்று பார்க்கும் போது ஒரு படைப்பாளியை தமிழகம் இழந்து விட்டது.
இவரது புத்தகமான "கடவுள் இருக்கிறாரா?" புத்தகத்தை கடைசியாக நான் வாசித்தேன். அது ஒரு தொகுப்புதான். அந்த புத்தகத்தை படித்து முடித்தபோது எந்த முடிவுக்கும் வரமுடியாமல் முடித்திருப்பார். அதற்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது அனைத்தையும் கடந்து கடவுள் இருக்கிறார் என்பதையே மறைமுகமாக நிறுவியிருப்பார். விஞ்ஞான கருத்துக்களை மக்களிடம் கொண்டுச் செல்லும் அதே நேரத்தில் - ஒரு கருத்து முதல்வாதியாகவே இவரது சிந்தனைகள் இருந்ததை பார்க்க முடியும். இந்த விமர்சனத்தை இந்த நேரத்தில் வைப்பது சரியா? என்று பலரும் கேள்வி எழுப்பலாம். இந்த நேரத்தில் நினைவு கூறும் போது அவரது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் இரண்டையும் சமமாக பார்க்க வேண்டியுள்ளது.
மொத்தத்தில் ஒரு நல்ல படைப்பாளியான சுஜாதாவிற்கு தமிழகம் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளது. சந்திப்பு தன்னுடைய அஞ்சலியை இங்கே பதிவு செய்கிறது.
அவரது படைப்புகளில் சிறந்தவற்றை அடையாளம் காணுவோம். அந்த வழியில் இளம் படைப்பாளர்களை பயணிக்கச் செய்வோம்.!


அவரது படைப்புகள்

சுஜாதாவின் முதல் கதை:1953ம் ஆண்டு சிவாஜி என்ற வார இதழில் சுஜாதாவின் முதல் கதை வெளியானது. அதன் பின்னர் அவரது கதைகள் பெரிய அளவில் வரவில்லை. ஆனால் 1962ம் ஆண்டு முதல் அவரது கதைகளும், படைப்புகளும் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. அன்று முதல்அவரது இறுதி மூச்சு வரை எழுதிக் கொண்டே இருந்தார் சுஜாதா.சுஜாதாவின் படைப்புகளில் 10 அறிவியல் நூல்களும், 10 நாடகங்களும் அடங்கும்.கனையாழியில் இடம் பெற்ற சுஜாதாவின் கடைசிப் பக்கம், மிகவும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் சுஜாதாவின் பக்கங்கள் இடம் பெற்றன.அறிவியலை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அழகாக விளக்கி பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் சுஜாதா. அவரது அறிவியல் கேள்வி-பதில் பகுதிகள் ரொம்பப் பிரசித்தமானவை.கம்ப்யூட்டர்கள் குறித்தும், மனித மூளை குறித்தும் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். தகவல் தொழில்நுட்பம், தமிழ் எழுத்துருக்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஏராளமாக எழுதியுள்ளார். இவரது ஆலோசனையைக் கேட்டு பயன் அடைந்த தகவல் தொழில்நுட்பத் துறையினர் பலர். இவரது ஆலோசனையின் பேரில் உருவான எழுத்துருக்களும் கணிசமானவை.ஆங்கில கம்ப்யூட்டர் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் ஏராளமானவற்றை தொகுத்து வைத்துள்ளார் சுஜாதா.எழுத்துத் துறையில் சகலகலா வல்லவனாக, சகல பிரிவினருக்கும் தோழமையாக திகழ்ந்த சூப்பர் எழுத்தாளர்தான் சுஜாதா.கட் அவுட்:எழுத்தாளர் ஒருவருக்கு முதன் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது சுஜாதாவுக்குத்தான். ஆனந்த விகடனில் வெளியான அவரது நாவல்களான கனவு தொழிற்சாலை மற்றும் பிரிவோம் சந்திப்போம் பாகம்1, 2 ஆகியவற்றுக்காக விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், சுஜாதாவுக்கு அண்ணா சாலையில் கட் அவுட் வைத்துப் பெருமைப்படுத்தினார்.

நன்றி : தட்ஸ் தமிழ்

February 27, 2008

அசுரனும் - பகத்தும் ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்!


இணையத்தில் பல நேரங்களில் சுடான விவாதங்கள் ஆரோக்கியமாக நடைபெறுவதுண்டு. இதைவிட கூடுதலாக தனிநபர் தாக்குதல் - ஜாதி அடிப்படையிலான இழி தாக்குதல் வெகுஜோராக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் அசுரனும் பகத்தும்.
முதலில் ஒரு விசயத்தை தெளிவுபடுத்திட வேண்டியுள்ளது. அசுரனும் அவரது தோழர்களும் யாரும் ஒரிஜினல் பெயரைப் பயன்படுத்துவதில்லை. எல்லாம் அனானி முகமூடிகளே... சொல்லப்போனால் ஒருவரே பல முகமூடிகளை அணிந்துக் கொண்டு வேட்டையாடும் நரித்தனமே இவர்களிடம் மிஞ்சுகிறது.
இவர்களது கடைச் சரக்கு மார்க்கெட்டில் வியாபாரமாகவில்லை என்ற (மக்களுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை) ஒரே நோக்கத்திற்காக எப்போதும் சி.பி.எம். வாலைச் சுற்றி வருவதுதான் இவர்களது வழக்கம். (ஒரு சி.பி.எம். தோழர் இவர்களிடம் மாட்டினால் போதும் அதுவே இவர்களின் மகத்தான புரட்சி என்று மனதிற்குள் கொக்கரித்துக் கொள்வார்கள்.)
தொடர்ந்து நான் முன்வைக்கும் விமர்சனங்களில் ஒன்று: இவர்களது கட்சியின் பெயரை எங்கும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. இவர்களது கொள்கை இதுதான் என்று வெளிப்படையாக அறிவிப்பதில்லை. இவர்கள் பேசும் மார்க்சியம் என்பது நாட்டில் உழைக்கும் மக்களின் காவலனாக குரல் கொடுத்து வரும் - போராடி வரும் சி.பி.எம். மற்றும் இதர இடதுசாரிகளைத் தாக்குவதுதான் இவர்களது முதன்மையான நோக்கம். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் பாசையில் முதல் வர்க்க எதிரி சி.பி.எம். (இதனால்தான் இவர்கள் பச்சையாக ஏகாதிபத்தியத்திற்கு கூலியாளாக செயல்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.)
இவர்கள் முன்வைக்கும் விமர்சனம் என்பது ஆரோக்கியமான சுழலை கெடுப்பதாகவே அனைத்து இடத்திலும் காண முடிகிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இழிவுபடுத்திப் பேசுவது. நாகரிகமற்றுப் பேசுவது என்பது இவர்களத வாடிக்கை. இவர்களைப் பொறுத்தவரை எப்போதும் விவாதம் இணையத்தில் நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இவர்களை புரட்சிகரமானவர்கள் - இவர்களே மக்களைக் காக்க வந்த கையாலாகத - நடைமுறையற்ற அசுரர்கள் என்பதை அறிந்துக் கொள்வதற்காக.
அடுத்து இவர்கள் தங்களை மார்க்சிய மேதைகளாக காட்டிக் கொள்வதற்கு - லெனின் - மார்க்சு - எங்கெல்ஸ் - மாவோ... என்று மேற்கோள் காட்டி அனைவரையும் திக்குமுக்காடச் செய்வார்கள். ஆனால் மருந்திற்கு கூட மார்க்சியத்தை நடைமுறையில் பரிட்சித்துப் பார்கக் மாட்டர்கள். அனுபவத்தில் இருந்தும் எதையும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். குருட்டு மார்க்சியர்கள்.
உதாரணமாக ரஷ்ய சமூக நிலைமையும் - சீன சமூக நிலைமையையும் அப்படியே இந்தியாவில் நிலவுவதாக கருதுவார்கள். அதனாலேயே லெனின் - மாவோ அந்தந்த நாடுகளின் நிலைமைக்கேற்ப கூறப்பட்ட தத்துவங்களை இந்தியாவிற்கும் அப்படியே பொருத்துப் பார்ப்பார்கள். அந்த பொருத்துதலில் யாரும் பிட்டாக வில்லையென்றால் அவர்கள் முதலாளித்துவவாதிகளாக இவர்கள் கண்ணில் தெரிவார்கள்!
ரஷ்ய டூமா என்பதே ஜாரின் வெறும் கைப்பொன்மையாக இருந்த ஒன்று. இந்த டூமா என்ற ஏற்பாட்டை கொண்டுவதற்கே நீண்ட நெடிய போராட்டம் அங்கே நடைபெற்றது. இந்த டூமாவையும் இந்திய பாராளுமன்றத்தையேயும் ஒன்றுபோல் சித்தரிப்பார்கள்.
ரஷ்யாவில் சமூக ஜனநாயக கட்சி பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சமயத்தில் - வலுக்குறைந்து இருந்த சமயத்தில் லெனின் வழிகாட்டுதலில் அங்கு நடைபெற்ற தேர்தலில் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி பங்கெடுத்தது. வேறொரு சமயத்தில் இயக்கமும் - சமூகமும் எழுச்சிக் கொண்டிருந்த சமயத்தில் தேர்தல் நடைபெற்றபோது அதனை லெனின் புறக்கணித்தார். அவரைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதும் - பங்கெடுக்காததும் தொழிலாளி வர்க்கத்தின் நன்மையின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். நமது மஞ்சள் காமாலை கண்ணர்களுக்கு இந்த நடைமுறை எப்பவும் புரியவே புரியாது. மேலும் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பது என்பது ஜர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்க்ம மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என்பதை மறைப்பதுதான் இவர்களது தந்திரம்.
அடுத்து 1917 - 1940 காலகட்டங்களில் நிலவிய சமூக அமைப்பு - நிலவிய ஜனநாயகத் தன்மை இவைகள் குறித்தெல்லாம் வறட்டுத்தனமான பார்வையை செலுத்துவதால் இப்போதும் கூட அதையே அமலாக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர் நமது துடியாடிகள்.
மொத்தத்தில் இவர்களது நடவடிக்கை புரட்சிகர சீர்குலைவுவாதமே இவர்களது மார்க்சியம். அதன் இணைய வாயாடிகளே அசுரனும்.....

February 17, 2008

கம்யூனிஸ்டுகளும், முதலாளித்துவ கட்டுமானமும்

பிரபாத் பட்நாயக்
கம்யூனிஸ்ட்டுகள் சோசலிசத்தை கைவிட்டுவிட்டதாக பத்திரிகைகள் தயக்கமற்று எழுதுகின்றன. மேற்குவங்க கம்யூனிஸ்ட் தலைவர்கள் தனியார் மூலதனத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பேசிய பேச்சுக்களுக்கான எதிர்வினை இது. முதலாளித்துவ அமைப்பிற்குள் செயல்படும் ஒரு மாநில அரசை தலைமை தாங்கி நடத்தும்போது இது தவிர்க்க முடியாததாகும். எனவே கம்யூனிஸ்ட்டுகள் சோசலிசத்தைக் கைவிட்டுவிட்டதாக எழுதுவதும் பேசுவதும் தவறான புரிதலிலிருந்து எழுந்த கருத்துக்களாகும். இப்பிரச்சனையை சித்தாந்த ரீதியாக ஆய்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திற்கான நோக்கமே சோசலிசத்திற்காக போராடத்தான். ஆனால் சோசலிசத்தை அடைய ஒரு சமூகப் புரட்சி தேவை. அப்புரட்சி தனியுடமையாக உள்ள உற்பத்திக்கருவிகளை சமூக உடைமையாக்கும். தனியுடைமையை பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசை அகற்றும். அந்த இடத்தில் பாட்டாளிகளின் அரசை ஏற்படுத்தும். அந்த அரசு இதுநாள் வரை கண்ட அரசுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். தான் உருவாகும் போதே குறிப்பிட்ட காலத்தில் “உலர்ந்து உதிர்ந்து” போவதற்கான தன்மையுடன் அது தோன்றும். இத்தகைய சமூகப்புரட்சிக்கான சூழல் கனிந்துவர காலமாகலாம். எனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ அமைப்பிற்குள் நீண்ட காலம் பணியாற்ற வேண்டியிருக்கும். இந்தப்புரட்சிக்கு தலைமை தாங்குகிறவர்கள் பாட்டாளிகள். எனவே பாட்டாளிகளை தத்துவார்த்த ரீதியாக கம்யூனிஸ்ட்டுகள் செழுமைப்படுத்துகிறார்கள். போராட்டங்களின் ஊடாக கற்றுக் கொடுக்கிறார்கள். அதன் மூலம் புரட்சியை தலைமை தாங்கும் வர்க்கமாக தயார் செய்கிறார்கள். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உடனடிக் கடமை சோசலிசத்திற்காக போராடுவதுதான் என்பதும் தவறு. சோசலிசத்திற்காக போராடுவதில் மட்டும் அது ஒரே கவனமாக இருக்க வேண்டும் என்பதும் தவறு. ஜனநாயகப் புரட்சி முழுமையடையாத சமூகங் களில் உடனடியாக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை நடத்த முடியாது என்பது மட்டுமல்ல நிலச்சீர் திருத்தத்தை பின்னோக்கித் தள்ளுவது, முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துவது, ஏகாதிபத்தியத்துடன் இன்னும் கூடுதலாக இயைந்து போவது என்பதும் நடைபெறும். சோசலிசப் புரட்சி ஒருபுறம் இருக்கட்டும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான சூழலை கனிய வைப்பதற்காக கம்யூனிஸ்ட்டுகள் முதலாளித்துவ அமைப்பின் உள்ளிருந்து பணியாற்ற வேண் டியிருக்கும். இந்தப் பணி என்பது தொழிற்சங்கங்களில் பணியாற்றுவது, விவசாயிகளுக்கு மத்தியில் வேலை செய்வது, பல்வேறு வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களில் பணியாற்றுவது, சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சியாக பணியாற்றுவது என்பது மட்டுமல்ல தாங்கள் பலமாக உள்ள மாநிலங்களில் அரசாங்கங்களை தலைமை தாங்கி நடத்துவதும் அத்தகைய பணிகளில் ஒன்றுதான். மாநில அரசாங்கங்களை தலைமை தாங்கி நடத்துவது என்பது இதர தளங்களில் பணிபுரிவதிலிருந்து வேறுபட்டதல்ல. ஆனால் இந்தத் தளம் புதியது. அரசியல் சட்டத்தின் குறிப்பானதும் வெளிப்படையானதுமான சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டியது. இதர தளங்களில் பணிபுரியும் நோக்கம் வர்க்க பலாபலங்களில் மாற்றம் கொண்டுவருவதே. மாநில அரசாங்கங்களை தலைமை தாங்கி நடத்துவதும் வர்க்க பலாபலங்களில் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவே. அதாவது, இந்த மாற்றம் என்பது மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு ஆதரவான வர்க்கங்களைத் திரட்டுவதாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகவும், பெற்ற முன்னேற்றங்களை பின்னுக்கு இழுப்பதை முறியடிப்ப தாகவும், எதிர்ப்புரட்சி சக்திகளை முறியடிப்பதாகவும் அமைய வேண்டும். அதன்மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதாக அமையும். கம்யூனிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்படும் மாநில அரசாங்கங்களின் கொள்கைகள் கீழ்க்கண்டவற்றை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
  1. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
  2. மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
  3. வர்க்க சேர்க்கையை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
  4. வர்க்க உணர்வை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
  5. பாட்டாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
பொதுவான தேக்கம் என்பதல்லாமல் இந்த மாநிலங்களில் மட்டும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டால் அது வேலை வாய்ப்பைச் சுருக்கும். அதன் காரணமாக மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் தனிமைப்பட நேரிடும். கடந்த காலத்தில் பொருளாதார தடை விதித்ததைப் போன்று முதலாளிகள் இந்த மாநிலங்களில் முதலீடு செய்யாமல் தவிர்த்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். அதே நேரத்தில் ஒரு துறையில் ஏற்படும் வேலைவாய்ப்பு வளர்ச்சி என்பது இதர துறைகளில் வேலை வாய்ப்பை அழித்துவிடுவதாக மாறிவிடக்கூடாது. நிலப்பயன்பாட்டு முறையில் ஏற்படும் மாற்றமும் கூட வேலைவாய்ப்பை பாதிக்கும். இதுவும் கூட, நோக்கத்தை நிறைவேற்ற உதவாது. அடிப்படை வர்க்கங்களுக்கும் (தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்) கட்சிக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தும். அதே நேரத்தில் முதலாளிகளின் அதீதமான கோரிக்கைகளை முதலீடுகளை ஈர்க்க வேண் டும் என்பதற்காக ஏற்றுக்கொள்வதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இத்தகைய பாதகமான விளைவுகளை தடுக்க
  1. சூழ்நிலை மைகளின் முழு பரிமாணத்தையும் கணக்கில் கொண்டு சரியான வழி முறையை தீர்மானிப்பது,
  2. முதலாளிகளுக்கிடையேயான போட்டியை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது.
  3. தனியார் மூலதனத்திற்கு இணையாகவும், அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அரசு முதலீட்டைப் பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்து சூழல்களிலும் எளிதான தல்ல. எனவே எந்த ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கும் குறிப்பான உத்தி கள் கடைப்பிடிக்கப்படவேண்டும். இந்த உத்தியை தீர்மானிக்கிறபோது அது ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதா என்பதே உரைகல்லாக இருக்க வேண்டும். பலமுனைகளில் போராட்டம் இதுதான் உரைகல் என்றவுடன் தனியார் முதலீட்டை மறுதலிப்பதற்கான நியாயம் ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால் முதலாளித்துவ சமூக அமைப்பில் முதலீட்டிற்கான சொத்து முழுவதும் முதலாளிகளின் கையில்தான் குவிந்திருக்கிறது. அதே நேரத்தில் இத்தகைய முதலீடுகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இந்த முதலீடுகள் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறுவதை தடுக்காத முறையில் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். அந்த நோக்கத்தோடு கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கப்படும் மாநில அரசாங்கங்கள் முதலாளிகளின் அதீத கோரிக்கைகளை சமாளிக்கும் ஏற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். மூலதனத்தை விரட்டிவிடுவதும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு பாதகத்தையே விளைவிக்கும்.இந்த புரிதலானது சோசலிஸத்தை கைவிட்டு விடுவதல்ல அல்லது முதலாளித்துவத்தை ஏற்றுக்கொள்வதல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மாறாக இறுதி லட்சியமான சோசலிசத்தை அடைவதற்காக மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த போராட்டம் பல முனைகளில் நடத்தப்பட வேண்டும். சிக்கலானகள நிலைமைகளில் நடத்தப்பட வேண்டும். இப்போராட்டம் ஒருவருடைய விருப்பத்தின்பாற்பட்டதல்ல. ஆகிய யதார்த்தங்களை கவனத்தில் கொண்ட தாகும். இந்த சிக்கல்களை கவனத்தில் கொள்கிறபோது இறுதி லட்சியம் கவனத்திலிருந்து தப்பிவிடக்கூடாது என்பது முக்கியம். இந்தச் சிக்கல்களை கவனத்தில் கொள்ளவில்லை யெனில் இறுதி லட்சியத்தையடைவதென்பது நடைமுறையில் இன்னும் கடினமாகி விடும். கட்சியும் அரசாங்கமும் கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்வோர் மக்கள் ஜனநாயகப் புரட்சி குறித்த இந்தப்புரிதலை பெற்றிராததாலும் புரட்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கும் பணியில் சிக்கலான தன்மையை புரிந்துகொள்ளாததாலும் தவறு செய்கிறார்கள். தவிரவும் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையி லான வேறுபாட்டை புரிந்து கொள்வதிலும் அவர்கள் தவறுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கும் அரசாங்கங்களும் கட்சியும் ஒன்றல்ல. கட்சிக்கு ஒரு கருத்திருக்கிறது. அந்தக் கட்சியால் தலைமை தாங்கப்படும் அரசாங்கத்திற்கு அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கட்சி புரட்சிக்காக பலவழிகளில், முனைகளில் உழைக்கிறது. அதில் ஒன்றுதான் மாநில அரசாங்கங்களை தலைமை தாங்குவதும், கட்சிக்கும் அதன் வெகுஜன ஸ்தாபனங்களுக்கும் வித்தியாசம் இருப்பது போலவே கட்சிக்கும் அது வழிநடத்தும் அரசாங்கங்களுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த அரசாங்கங்கள் அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டே அமைக்கப்படுகின்றன. அரசிய லமைப்பு சட்டமோ முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசு அமைப்பை தாங்கிப்பிடிக்கும் தூணாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில் அவர்கள் எடுக்கும் நிலைபாடுகளில் பல கட்சியின் கருத்துரீதியான புரிதலுக்கு ஒத்திசைந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அரசாங்கத்தின் நடைமுறை கொள்கைகளிலிருந்து ஒரு கட்சியின் தத்துவார்த்த நிலைபாட்டை வடித்தெடுக்க முயற்சிப்பது விஷயத்தை தலைகீழாக பார்ப்பதாகும். இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசாங்கங்கள் கடைப்பிடிக்கும் சில கொள்கை கள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும். ஆனால் அவற்றை கருத்து ரீதியான புரிதலோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. மாறாக, இத்தகைய கருத்து வேறுபாடுகளை புரிந்து கொள்ள சித்தாந்த ரீதியான தெளிவு அவசியம்.
தமிழில் : க.கனகராஜ்
‘எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி’
பிப்.2, 2008