May 28, 2007

குருமூர்த்தியின் கவலை இந்துக்களின் கவலையா?

இந்து தெய்வங்கள் மட்டும் ஆபாச கலைக்கு இலக்காவது ஏன்? - என்ற தலைப்பில் சங்பரிவார் குருமூர்த்தி இன்றைய தினமணியில் நடுப்பக்க கட்டுரையொன்று எழுதியுள்ளார்.

முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் கலையை பழுதறக் கற்றவர்கள் பாசிசவாதிகள் என்பதற்கு இந்த கட்டுரையொன்றே முழு சாட்சி. இதனை இப்படியும் கூறலாம். இட்லரின் மந்திரி சபையில் இருந்த கோயபல்சு - ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் அது மெய்யாகும் என்பான். இது பாசிசத்தின் அடிப்படைகளில் ஒன்று. இதனை தற்போது மீண்டும் நிரூபித்துள்ளார் குருமூர்த்தி.


எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாககமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள்கட்டுரையின் துவக்கத்திலேயே இப்படி ஆரம்பிக்கிறார். அதாவது முழுநிறை கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் கருகை கிழித்து எடுத்து தாயையும். குழந்தையையும் கொல்லும் காட்டுமிராண்டிகள் தற்போது நாகரீக வேடம் போட துணிந்து விட்டனர். சங்பரிவாரம் தன்னைத்தானே நாகரீகவாதிகளாக முத்திரைக் குத்திக் கொள்வதன் மூலம் - மதச்சார்பற்ற சனநாயக விரும்பிகளை காட்டுமிராண்டிகளாக சித்தரிக்க முயல்கின்றார் குருமூர்த்தி.

இவர்களைப் பொறுத்தவரை கருநாடக பா.ச.க. எம்.எல்.ஏ. நர்சுடன் சல்லாபம் புரிவதும். குஜராத் பா.ச.க. பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோசியின் சல்லாபமெல்லாம் பெரும் நல்லொழுக்க சிந்தனையாகத்தான் சங்பரிவாரம் தங்களது தொண்டர்களுக்கு போதிக்கிறது. இத்தகைய தொண்டர்களின் நல்லொழுக்கத்தால்தான் ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்களை உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. நல்லகாலம் தப்பாத்தார்கள் நம் இந்திய பெண்மணிகள். பெண்களை இவர்கள் ஒருபோதும் மதித்ததேயில்லையே ஏன் தாய்நாட்டைக்கூட 'பித்ரு பூமி' தந்தை பூமி என்றுத்தானே அழைக்கின்றனர். சாத்தான் வேதம் ஓதுகிறது. ஹி... ஹி... ஹி...


இந்த இரண்டு கீழ்த்தரமான ஓவியங்கள் மட்டுமல்ல; சிவ பெருமான் மற்றும் விஷ்ணுபகவான் போன்று ந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் இதுபோலவே வக்கிரமாகச் சித்திக்கப்பட்டு அந்த ஓவியங்கள் குஜராத்தில் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த அநாககமான ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் ஆட்சேபித்தனர்; ஆர்ப்பாட்டமும் செய்தனர்; போலீஸôடம் புகார் செய்தனர்; அதன்மேல் போலீஸôர் நடவடிக்கையும் எடுத்து அந்த ஓவியரைக் கைதும் செய்தன.


குருமூர்த்தியின் அடுத்த பொய் இங்கேதான் ஆரம்பமாகிறது. மிகவும் புத்திசாரித்தனமாக அவர் குறிப்பிட்டுள்ளபடி படம் வரைந்த ஓவியரின் பெயரைக்கூட விட்டார். அவரது பெயரை கூறினால் அது அவர்களது இந்துத்துவ அரசியலுக்கு எதிரானதாக அமைந்துவிடுமே என்பதற்காகத்தான்.

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் ஓவியம் மற்றும் நுண்கலையில் பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களின் இறுதி தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வின் ஒரு பகுதியாக அவர்கள் வரைந்த ஓவியம் அல்லது கலைப் படைப்புகள் தேர்வுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டு பின்னர் தேர்வுக்குழுவின் மதிப்பீடுக்கு செல்லும். இது காலாகாலமாக இருந்துவரும் நடைமுறை. இந்தத் தேர்வில்தான் சந்திரமோகன் (இவரும் இந்துதான்) என்ற மாணவன் தன்னுடைய படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தார். குறிப்பாக சந்திரமோகன் கடந்த ஆண்டு சிறந்த ஓவியருக்கான லலித்கலா அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சி என்பது பொதுமக்களுக்கானது அல்ல. அது ஒரு இன்டர்னல் தேர்வு. அப்படியிருக்கும் போது அங்கே எப்படி பொதுமக்கள் வந்தார்கள். எப்படி அதனை ஆட்சேபித்தார்கள்.

உண்மையில் நடந்தது என்ன? கல்லூரிக்கு உள்ளேயே இருக்கும் சங்பரிவார கலாச்சார காவலர்கள் தங்களது குருபீடத்துக்கு தகவல் சொல்லியுள்ளனர். அதன் பின் விசுவ இந்து பரிசத்தின் லோக்கல் தலைவரும் - பா.ஜ.க.வின் செயலாளருமான நிராஜ் செயின் தலைமயில் கல்லூரிக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஓவியக் கல்லூரிக்குள் புகுந்த காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்களை சூறையாடியதோடு கல்லூரியில் இருந்த அரிய கலைப் நுட்பமான படைப்புகளையெல்லாம் வன்முறைக்கு இறையாக்கியது. அத்துடன் சந்திரமோகன் என்ற மாணவனையும் தாக்கிய காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு ஐந்து நாட்கள் சிறையில் அடைத்தது. இந்த சம்பவத்தை கல்லூரி முதல்வர் டாக்டர் பனிக்கர் வன்மையாக கண்டித்ததோடு மாணவருக்கு ஆதரவாக குரலெழுப்பினார் என்ற காணரத்திற்காக அவரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து விட்டது கல்லூரி நிர்வாகம். கல்லூரிக்குள் புகுந்து அராஜக வெறியாட்டம் போட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்த மாணவன் வரைந்த ஓவியம் உங்கள் பார்வையில் தவறானதாகவே இருந்தாலும் கூட அதற்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்? சங்பரிவார சீரழிந்த சிந்தனைதான் இதற்கு அடிப்படை. இந்த விசயங்களையெல்லாம் அடியோடு மறைத்து விட்ட குருமூர்த்தி பசுத்தோல் போர்த்திய புலியாக வேடம் போடுகிறார். இவர்களது தோலை உரிக்க வேண்டிய கடமை மதச்சார்பற்ற சக்திகளின் தலையாய பணி.

அது சரி இரண்டு நாளைக்கு முன்னாள் பா.ஓ.க. எம்.எல்.ஏ. ராஜஸ்தானில் அத்வானி. வாஜ்பாய். ராஜ்நாத் சிங் ஆகியோரை கடவுளாக சித்தரித்தார்களே அப்போது இந்துத்துவ காவலர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை. அல்லது இந்துத்துவத்தை காக்கும் கடவுள்கேள இவர்கள்தான் என்பதாலா? அஜால் குஜால் பேர்வழிகள் புனிதத்தைப் பற்றியெல்லாம் இனியும் எழுவது நகைப்பாக இல்லையா?


இந்துக்கள் வழிபடும் ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் ஆபாசமாகச் சித்திப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்ட ஓவியர்கள் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இவர்களில் தலைசிறந்து விளங்குபவர், பலராலும் பாராட்டப்படுகிற எம்.எஃப். உசேன்தான்.


இந்து தெய்வங்களை ஆபாசமாக சித்தரிப்பதையே தங்கள் கொள்கையாக கொண்ட ஓவியர்கள் என்று இவர் யாரைக் கூறுகிறார்? சந்திரமோகன் உங்கள் பார்வையில் பார்த்தால்கூட ஏசுநாதனையும் சேர்த்துத்தானே வரைந்துள்ளார். எனவே சந்திரமோகனின் நோக்கம் இந்து தெய்வத்தை ஆபாசமாக வரைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட உள்நோக்கம் கொண்டதாக இருந்திருந்தால் அவர் ஏன் இயேசுநாதனை அவ்வாறு வரைந்திருக்க வேண்டும்? எனவே. உங்களைப் பொறுத்தவரை குட்டு வெளிப்பட்டவுடன் அதனை பூசி மெழுகி - ஓவியர் உசோனோ சேர்த்து ஒரு இசுலாமிய எதிர்ரப்பு உணர்வை தூண்டுவதுதானே குருமூர்த்தியின் நோக்கம்.

ஒரு கலைப் படைப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். அது விமர்சன உரிமை. அதற்காக கலையென்றால் நான் விரும்புகிற மாதிரித்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது பாசிச சிந்தனையின் வெளிப்பாடு. எந்த இந்துக் கோவிலில் ஆபாசம் இல்லாத சித்தரங்கள் வரையப்பட்டுள்ளது. வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்து கோவிலின் தேர்க்காலில் இருந்து கோபுரம் வரை ஆபாச கலையின் லீலைகள்தானே சித்தரமாக்கப்பட்டுள்ளது இந்துத்துவ சக்திகள் இதனையெல்லாம் அழித்துவிடப் போகிறதா என்று கலைஞர்கள் எழுப்பும் கேள்விக்கு கோயாபல்சுகளிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.


இந்து தெய்வங்களை எப்படிக் கேவலமாகச் சித்தித்தாலும் அதைத் தட்டிக் கேட்கவோ, அதற்காகக் கோபப்பட்டு வெகுண்டு எழுந்து பஸ்களைக் கொளுத்துவோர் அப்படிச் செய்கிறவர்களை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டு மதக்கட்டளை பிறப்பிக்கவோ ந்து மதத்தில் வழியில்லை. வேறுமத நம்பிக்கையை இப்படி ஆபாசமாக்க முடியுமா?


நீதிபதி கபூர் இப்படி கூறியிருப்பாரா என்று தெரியவில்லை. குருமூர்த்தி இவ்வாறு சுட்டுவதன் மூலம் இத்தகைய வன்முறை நடைபெற வேண்டும் என்ற தன்விருப்பத்தை இங்கே பதிவு செய்கிறார். சங்பரிவார கூட்டத்திற்கு வன்முறையைப் பற்றி சொல்லியா தரவேண்டும். குஜராத்தில் இப்படி நடந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று வாஜ்பாயின் முகமூடி கூறுமளவுக்குதானே குஜராத் வன்முறைகள் நடந்தேறியது. சொந்த நாட்டிலேயே இசுலாமியர்கள் 3000 பேர் அகதிகளாக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட மனிதர்களை கொள்ளும் வன்முறை ஆபாசத்தைவிட சந்திரமோகனின் படைப்பு ஒன்றும் ஆபாசமானதில்லையே.

குருமூர்த்தி அவர்களே ஐயப்பன் எப்படி பிறந்தான் என்று உங்கள் வீட்டுக் குழந்தைக்கு பாடம் நடத்த உங்களால் முடியுமா? அல்லது அதனை நவீன விஞ்ஞானத்தை பயிலும் உங்கள் வீட்டுக் குழந்தைதான் ஏற்குமா? இதிலெல்லாம் ஆபாயம் இல்லையா?

இந்துக் கடவுள்களின் படைப்புகளை விட ஆபாசம் நிறைந்த காவியங்கள் உலகில் வேறு எந்த மூலையிலாவது உண்டா? ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன்தானே ஐயப்பன்....

அழுக்கில் பிறந்து பிள்ளைதானே பிள்ளையார்.... இன்னும் எத்தனை... எத்தனை... ஆபாசங்கள்...


இந்துத்துவ சித்தாந்தம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமல்ல அது இந்துக்களுக்கே எதிரானது. மனுதர்மத்தின் பெயரால் இந்தியாவின் கோடிக்கணக்கான இந்துக்கள் சொந்த மண்ணிலேயே தீண்டாதவர்களாக போயுள்ளதற்கு காரணம் இந்து சனாதனமே. அத்தகைய இந்து மதத்தின் காப்பாளர்களாக கூறிக்கொள்ளும் இந்துத்துவ - சங்பரிவார கூட்டம் இட்லரின் இந்திய வாரிசுகள் என்பதை நாம் இன்னும் வலுவாக கொண்டுச் செல்ல வேண்டியுள்ளது. இது மதச்சார்பற்ற உள்ளங்களின் மகத்தான கடமை. சமீப காலமாக தினமணியும் குருமூர்த்தி போன்றவர்களின் கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் இந்துத்துவ கருத்தாக்கத்திற்கு இரையாகி வருகிறதோ என்ற சந்தேகம் ஜனநாயக உள்ளங்களுக்கு ஏற்படுகிறது.

இன்றைக்கும் கோடிக்கணக்கான இந்துக்கள் மற்றும் இந்தியர்களின் கவலையெல்லாம் விலைவாசி உயர்வு. வேலையின்மை. கல்வி கட்டண உயர்வு. வாழ்க்கை பிரச்சினைகள்தான். இதைபற்றியெல்லாம் கவலை கொள்ளாத குருமூர்த்திகள் தங்களின் பாசிச இந்துத்துவ சிந்தனையை இந்துக்களின் கவலையாக்க முயல்வது வேடிக்கையானது.

15 comments:

Anonymous said...

குருமூர்த்தியின் கவலை இட்லிவடையின் கவலை.இட்லிவடை இந்து தானே

ச்சி மானங் கெட்டதுகள்.

Anonymous said...

மால்லாக்க படுத்துக்கிட்டு துப்பாதயா...

Anonymous said...

தினமணிக்கு அனுப்பிட்டீங்களா?

Anonymous said...

உங்க புலம்பல படிச்சதும் ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுதுங்க.

நீங்களும் நம்மாலுதான்.
நாகூர் ஹனிபா.

Anonymous said...

Soon, We can release Maniammai nude picture soon "with kalai kan"

koothanalluran said...

சென்னையிலிருந்து வெளிவரும் மாலை ஆங்கில் நாளேட்டில் வி.சுந்தரம் என்பவர் தொடர்ந்து பினாத்தி வருகிறார். அதில் ஒன்று சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட இரண்டு ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் 'சிலுவைக் குறி' வரையப்பட்டிருக்கிறதாம் இது சோனியா காந்தியின் மறைமுக கிறித்துவ பிரச்சாரம் என எழுதியுள்ளார்.

சட்னிவடை said...

இந்துக் கோவில்களில் ஆபாசமாக சிலைகள் வடிக்கச் சொன்னது யார்? ஏன் வடித்தார்கள்?

இதற்கெல்லாம் பதில் கூறுவானா குருமூர்த்தி?

சந்திப்பு said...


-----------------------------------
ஐய்யா அனானி இட்லி வடையெல்லாம் தமிழர் உணவு. தயவு செய்து அதற்கு இந்து அடையாளத்தை குத்தாதீர்.
-----------------------------------
வோய் உம் மீது எச்சில் விழாமல் பார்த்துக்கும் வோய்...
-----------------------------------
ராசா அதுதான் நம்முடைய முதல் வேலையே. அப்படியே குருமூர்த்தி இமெயில் இருந்தா அவருக்கும் அனுப்பிரலாம் யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...
-----------------------------------
நம்மாளா?.... )...
-----------------------------------
யோகன் முதல்ல கருத்த சுதந்திரமா சொல்ல விடுங்க... அப்புறம் அத சப்போர்ட் பன்றதா இல்லையான்னு விவாதிப்போம்... தேங்க்யூ..
-----------------------------------
நல்ல காலம் அவ்வையாரை வரைவேன்னு சொல்லாமல் விட்டதற்கு. ஒரு மிஸ் யூனிவர்ஸ்... வேண்டாம்பா... மிஸ் சென்னையாவவது....?
-----------------------------------
வி. சுந்தரத்துக்கு எப்பவுமே (+) பாசிட்டிவ்-ஆக சிந்திக்க தெரியாது!
-----------------------------------

உடன்பிறப்பு said...

இப்போ இப்படி தான் பேசுவானுக அவா ஆட்சிக்கு வந்தா இந்த குருமூர்த்தி மாதிரி ஆளுக அடக்கி வாசிப்பானுக

Anonymous said...

இந்துக் கடவுள்களின் படைப்புகளை விட ஆபாசம் நிறைந்த காவியங்கள் உலகில் வேறு எந்த மூலையிலாவது உண்டா? ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன்தானே ஐயப்பன்....

அழுக்கில் பிறந்து பிள்ளைதானே பிள்ளையார்.... இன்னும் எத்தனை... எத்தனை... ஆபாசங்கள்...

How about immaculate conception
and birth of Jesus.Will you dare
to write about that like this.You are against Hinduism and Hindus.Commies like you will
lick the boots of muslims and
christians for votes and will mock at Hindus.This is a typical pseudo-secular attitude.
இன்றைக்கும் கோடிக்கணக்கான இந்துக்கள் மற்றும் இந்தியர்களின் கவலையெல்லாம் விலைவாசி உயர்வு. வேலையின்மை. கல்வி கட்டண உயர்வு. வாழ்க்கை பிரச்சினைகள்தான். இதைபற்றியெல்லாம் கவலை கொள்ளாத குருமூர்த்திகள் தங்களின் பாசிச இந்துத்துவ சிந்தனையை இந்துக்களின் கவலையாக்க முயல்வது வேடிக்கையானது

Gurumurthy has written on many issues including economic issues,
WTO etc.
See his articles in New Indian
Express and at
http://gurumurthy.net

Anonymous said...

ஒரு கலைப் படைப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். அது விமர்சன உரிமை. அதற்காக கலையென்றால் நான் விரும்புகிற மாதிரித்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது பாசிச சிந்தனையின் வெளிப்பாடு.

Is this not applicable to muslims.
You commies joined hands with
muslims in opposing danish cartoons
and condemned them as sacrilage.
Your left leaders addressed rally
of muslims and condemned the cartoons. You have two scales -
one for hindus, one for non-hindus.
Commies like you better stop behaving as guardians of freedom of expression.It reads like devil quoting scripture.

Anonymous said...

இவர்களைப் பொறுத்தவரை கருநாடக பா.ச.க. எம்.எல்.ஏ. நர்சுடன் சல்லாபம் புரிவதும். குஜராத் பா.ச.க. பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோசியின் சல்லாபமெல்லாம் பெரும் நல்லொழுக்க சிந்தனையாகத்தான் சங்பரிவாரம் தங்களது தொண்டர்களுக்கு போதிக்கிறது

Shall we talk about the personal
lives of Karl Marx and Mao.Was it
not a fact that Marx had sexual
relationship with his servant
maid and she bore a child through
him.The sexual 'adventures' and marriages of Mao are very well known.When did RSS defend such
actions by its cadres.How about
the personal life of the CM
your party supports in your
state.

Anonymous said...

Dear Mr.Anony,

Your aligations against Marx and Mao is nothing but kumutham brand gossips.. And I pitty for you guys.. because you can satisfy your 'pocharippu' only by spreading this kind of baseless gossips..

Apart from this... they never projected themselfs as holy monks as your RSS/ hinduthva goons did. They worked for the improvement of society through revolution..
For communists it is the Social being which reflected in individuals life

It is otherway around as per hinduthva ideology..

your hinduthva leaders preach about the change of social structure through the enlightment of individuals.. So, you cannot escape from the questions thrown on the personal lifes of your leaders.

Dear Santhipu, I beg you to be sensitive towards these kind of questions..Please dont give chance to these creeps..

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ்.சின் காம லீலைகள்

கோவிந்தாச்சார்யா-உமா பாரதி
வாஜ்பாயி வளர்ப்பு மகள்
சஞ்சய் ஜோஷி
ரேணுகாச்சார்யா-ஜெயலட்சுமி
சங்கராச்சாரியார்-உஷா

வெட்கங் கெட்டவனுகளா இன்னும் எப்படி டா உங்களால வாதாட முடிகிறது

சந்திப்பு said...

அனானி இந்துக் கடவுளான ஐயப்பன் மட்டுமல்ல. அது இயேசுவாக இருந்தாலும். அல்லாவாக இருந்தாலும் விமர்சனத்தில் இருந்த தப்ப முடியாது. இப்போது நடைபெறும் விவாதம் இந்துத்துவா பற்றியது எனவே குருமூர்த்தியின் வாதமும் இந்துக் கடவுளை மட்டுமே ஓவியர்கள் இதுபோல் சித்தரிக்கிறார் என்பதுதான். ஆனால் ஓவியர் சந்திரமோகன் இயேசுவையும் அவர் கோணத்தில் சித்திரம் தீட்டியிருக்கும் போது இவர்களது வாதம் சொத்தையானதாக மாறி விடுகிறது. ஏன் இயேசுவும் கூட தந்தையில்லாமல் பிறந்தவர்தான் என்பதை தாங்கள் உட்பட அனைவரும் அறிந்ததே.எனவே விஞ்ஞானத்திற்கு புறம்பான எதையும் நாம் ஏற்க முடியாது.

குரூமூர்த்தி பல தலைப்புகளில் கட்டுரை எழுதி வருகிறார் என்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்துமே உழைக்கும் மக்களுக்கு ஆதரவானதல்ல. ஆளும் பெரு முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாகவே அவரது வாதம் அமைந்திருக்கும்.
மார்க்சு மீது தாங்கள் வீசும் அவதூறுகளால் ஒன்றும் நிகழப் போவதில்லை. முதலாளித்துவவாதிகள் இவ்வாறான கட்டுக்கதைகளை எப்போதும் தேடிக் கொண்டே யிருப்பார்கள். மேலும் பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒவ்வொரு தனி நநபரும் முன்னுதாரணமிக்கவர்களாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுங்கீனமாக இருக்கும் எவருமே பொது வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் அது ஏற்ககத்தக்கதல்ல. மாவோவின் வாழ்க்கையும் வெளிப்படையானதே. இவையனைத்தும் சட்டப் பூர்வமானதே. கள்ள உறவுகள் எல்லாம் இல்லை. இது பா.ச.க. தலைவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை.