December 07, 2006

பெரியார் சிலையும்! பாசிச சிந்தனையும்!!

திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரெங்கநாதர் கோவில் அருகில் 100 அடி தூரத்தில் பெரியாருக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டது. இச்சிலை திறப்பு விழா வருகிற 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநில அமைச்சர் கே.என். நேரு தலைமையில், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சிலையை திறந்துவைக்கவுள்ளார். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பாசி°ட்டுகள் இன்றைக்கு அதிகாலையில் சிலையை உடைத்துள்ளனர். இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகாமையில்தான் காவல்நிலையம் உள்ளது என்பது குறிப்படத்தக்கது.
பெரியார் என்ன சவர்க்கரைப் போல் தேசத் தூரோகியா? அல்லது இந்த தேசத்தின் ஆத்மாவாக திகழ்ந்த மகாத்மாவை கொலை செய்த கோட்சேவைப்போல், யாரையாவது கொலை செய்தவரா? தமிழகத்தில் சுயமரியாதை தழைக்க வேண்டும். பார்ப்பனீயத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து மனிதனை சுயமரியாதையோடு நிமிரச் செய்ய வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் போராடியவர். மேலும், தீண்டாமை கொடுமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஓயாது குரல் கொடுத்தவர். தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே சுயமரியாதையின் சிகரமாக போற்றப்படுபவர். இத்தகைய உயர்ந்த மனிதரின் சிலை இருப்பது என்ன ஸ்ரீ ரங்கத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியதா?
இந்துத்துவவாதிகளின் சிந்தனை நரகல் சிந்தனை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மனிதனை மனிதன் தீண்டக்கூடாது என்ற சிந்தனைக்கு சொந்தக்காரர்கள்தான் இந்துத்துவ பாசி°ட்டுகள். அதன் விளைவுதான் தமிழகத்தில் சுயமரியாதை சுடரொளியாக திகழ்ந்த பெரியாரின் சிலை இருக்கக்கூடாது என்று உடைத்துள்ள கயவர்களின் கைகள் உடைக்கப்பட வேண்டியதே! பெரியாரின் சிலையை உடைக்கலாம்! ஆனால், அவர் விதைத்த கொள்கைகள் இந்த தமிழ் மண்ணிலும், இந்திய மண்ணிலும் வேர் பிடித்து ஆலவிருட்சமாய் ஓங்கி எழும்.
ஏ பாசி°ட்டுகளே! மகாத்மாவை கொன்ற கொலையாளிகள் பட்டியலில் இருந்தவன்தான் சவர்க்கார் என்ற ஆர்.எ°.எ°. பாசி°ட். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்ட அவனது சிலையை பாராளுமன்றத்தில், அதுவும் காந்தியின் படத்திற்கு நேர் எதிரே வைத்தபோதே இந்த தேசத்தில் பெரும் கொந்தளிப்பு நடந்திருக்க வேண்டும். ஏதோ மக்களின் சகிப்புத்தன்மையால் அவ்வாறு நடைபெறாமலிருந்து விட்டது. இனியும் அனுமதிக்கலாமா? காந்தியை சுட்டுக் கொன்ற சதித்திட்டத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும், சுதந்திரப்போராட்ட தூரோகியுமான சவர்க்கரின் படத்தை பாராளுமன்றத்தில் இருந்து மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விண்ணை முட்டவேண்டும்.
அம்பேத்கர் சிலைகளை உடைத்ததால் ஏற்பட்டதுதான் மகாராஷ்டிரத்தில் தலித் எழுச்சி. பெரியார் சிலையை உடைத்ததால் இன்னும் தமிழகம் முழுவதும் அதிகமான பெரியார் சிலைகள் தோன்றுவதையும், அவரது சிந்தனைகள் முன்னைவிட வீரியமாக விதைக்கப்படுவதையும் யாராலும் தடுக்க முடியாது!

December 04, 2006

சங்பரிவாரமும், சிவனின் சித்து விளையாட்டும்!

இந்துமத கொண்டாட்டங்களில் கார்த்திகை தீபமும் முக்கியமான ஒன்று. கார்த்திகை தீபத்தை வீடுகளிலும், கோவில்களிலும் மூன்று நாட்களுக்கு மாலை நேரங்களில் அகல் விளக்கை ஏற்றி வைத்து சிறப்பாக கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீபத்திற்கு பின்னால் இருக்கும் மத நம்பிக்கைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இதன் அழகே தனியழகுதான். தெருக்கள் அனைத்தும் வரிசையாக தீப ஒளியில் மிளரச் செய்யும். இந்த தீப ஒளியில் கூட, வீடுகளில் வைக்கப்படும் அகல் விளக்கை வைத்து செல்வத்தின் ஏற்றத்தாழ்வை உணர்ந்து கொள்ள முடியும். அடடா, ஒளியில் கூட வறுமையை காண முடியுமா என்ன என்று வியக்காதீர்கள்!

கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று நான் அலுவலுகத்தில் தோழியர் ஒருவரிடம் கேட்க, அவர் 'நீயே சொல்லேன் என்று கூற, நானும், பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் ஏற்பட்ட அகங்காரத்தை அடக்க ஓங்காரமாக நின்ற சிவன் கதையைக் சொன்னேன், உடனே முகத்தில் அறைந்தார்போல் அவர் என்னை திருப்பிக் கேட்டதற்கு விளக்கம் தெரியாமல் நான் பேந்த, பேந்த முழித்ததுதான் மிச்சம். சரி, அவர் என்ன கேட்டார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. “அவர் என்ன அமெரிக்காவா? யாருமே தொட முடியாத அளவிற்கு இருக்க” என்று வினவினார்! (மன்னிக்கவும், சிவனை விட அமெரிக்கா பெரியதா என்று எனக்குத் தெரியாது? ஆனா, அமெரிக்கா மாதிரியே பெரியண்ணன் பாணியில் நடந்துக் கொண்ட சிவனை என்னச் சொல்லுவது!)

சரி விடுவோம்! சப்ஜெக்ட்டுக்கு வருவோம்! திருப்பரங்குன்றத்தில் தடைச் செய்யப்பட்ட இடத்தில்தான் தீபம் ஏற்றுவோம் என்று மதக் கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு செயல்படும் இந்துத்துவாதிகள் - சங்பரிவார கூட்டங்களின் சித்து வேலைக்கு இந்த ஆண்டும் முற்று புள்ளி வைத்தது நம்முடைய சமயோஜித காவல்துறை.

அதே சமயம் எங்கள் ஊரியில், பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நண்பர் அலி பாஷா, தான் நடத்தி வரும் டியூஷன் சென்டரில் ஒவ்வொரு வருடமும் மக்கள் ஒற்றுமை கார்திகை தீபத்தை நடத்தி வருகிறார். இந்த விழாவில் அந்த பயிலகத்தில் பயிலும் மாணவர்கள் ஜாதி, மதம், இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டு பல வண்ணங்களில் கோலங்களை வரைந்தும், அவைகளுக்கு அழகிய வண்ணங்களை இட்டும், அதேபோன்று மலர்களால் அலங்கரித்தும் 500க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாடுகின்றனர். இந்த காட்சியை பார்க்க வரும் அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கேசரி போன்றவைகளையும் மறக்காமல் வழங்குகின்றனர். வீடுகளில் மட்டுமே தீபத்தை ஏற்றி வைத்ததை இதுவரை கண்டு வந்த எனக்கு ஒரே இடத்தில் இதுபோன்று அதுவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவர்கள் ஈடுபட்ட விழா கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த முயற்சி சிவனின் சித்து விளையாட்டை விட பெரியதாகபட்டது!

November 28, 2006

இந்தியா 126 : மனித வளத்தில் நாம் எங்கேயிருக்கிறோம்!

மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2006-யை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை உலக நாடுகளின் மனிதவளம் குறித்து ஆராய்ந்து, அதன் தற்போதைய நிலையை ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிட்டு வெளியிடுகிறது.
இவ்வாண்டு மனிதவள மேம்பாட்டு அறிக்கை தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காக தற்போது போரிடும் ஏகாதிபத்தியங்கள், அடுத்து தண்ணீருக்காக இதனை செய்யலாம்! உலகம் முழுவதிலும் தண்ணீருக்கான பற்றாக்குறை அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக, தூய்மையான குடிநீரின்மையால் ஆண்டுதோறும் 20 லட்சம் குழந்தைகள் மடிவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் 100 கோடி மக்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் 260 கோடி மக்களுக்கு சுகாதார வசதி கிடைக்கவில்லை குட்டியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில், ஆண்டுக்கு 4,50,000 குழந்தைகள் டயோரியாவால் இறப்பதாக இவ்வாய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. எல்லைத்தாண்டும் பயங்கரவாதத்திற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் இந்திய அரசு, அத்தகைய பயங்கரவாதிகளின் நாசச் செயல்களால் ஏற்படும் இறப்புகளைவிட நூறு மடங்கு மரணத்தை உண்டாக்கும் டயோரியாவை கட்டுப்படுத்த செலவிடவில்லை என்பது முரண்பாடான விஷயமே!
மும்பை, சென்னை, கல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களில் மக்கள் தொகை பிதுங்கி வழிகிறது. இவர்கள் பெரும் சுகாதார சீர்கேட்டிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர். அதே கிராமப்புறங்களிலும் ஊட்டச்சத்துக் குறைவு, சுகாதாரமின்மை, தூய்மையான குடிநீரின்மை போன்ற காரணங்களுக்களை ஒழிப்பதற்hக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. 2020இல் இந்தியா வல்லரசு கனவை சுமந்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் இந்த அறிக்கை வெளிச்சத்தை தருமா?
156 நாடுகளைக் கொண்ட பட்டியலில் மனிதவள மேம்பாட்டில் இந்தியாவுக்கு 126வது இடம் கிடைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு இந்தியா 127வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஒரு இலக்கம் முன்னுக்கு வந்திருப்பது பெருமைப்படத்தக்க விஷயமா? ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்! நம்மைவிட சிறிய நாடு இலங்கை 93வது இடத்திலும், மக்கள் தொகை அதிகம் கொண்டு சீனா 81வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிரிக்க நாடுகள் என்றாலே அதன் கறுப்பு நிறைந்த அளவிற்கு வறுமையும் நீடித்திருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா கூட 121வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஜமைய்கா, அல்ஜீரியா போன்ற நாடுகள் நம்மைவிட முன்னணியில் உள்ளது. முதல் இடத்தை நார்வே பிடித்துள்ளது. உலகின் செல்வத்தை தன்னகத்தே குவித்து வைத்துள்ள அமெரிக்காவிற்கு 8வது இடமே கிடைத்துள்ளது.
மேலும் இந்தியாவில் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவாக பெறுபவர்கள் 79.9 சதவீதம் உள்ளதாக அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய அரசு வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் எண்ணிக்கையை 28.6 சதவீதம் என்று கூறுகிறது.
மேலும் 102 நாடுகளைக் கொண்ட மனித வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவுக்கு 55 இடம் கிடைத்துள்ளது. அறிக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தியாவில் ஜி.டி.பி. வளர்ச்சி 8 சதவீதம் என்றுச் சொல்லிக் கொண்டாலும் கூட, அது அம்மக்களுக்கு பயன்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இந்திய மக்களை உண்மையிலேயே மேம்படுத்த வெளிப்படையான மைக்ரோ பைனான்° நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் இந்தியாவில் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதாக கூறுகிறது. இந்திய அரசின் கொள்கை ஏழைகளை வாழ்விப்பதற்காக அல்ல; மாறாக மில்லினியர்களை பில்லினியர்களாக்கவும், பில்லினியர்களை டிரில்லினியர்களாக்கவும்தான் என்றுத் தெரிகிறது.
(குறிப்பு : பத்திரிகைகளில் வந்த செய்திவை வைத்து மட்டுமே இங்கு எழுதப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மேலும் விமர்சன ரீதியாக அணுக வேண்டியுள்ளது.)
Read Blelow:

November 24, 2006

சென்னை ஐ.டி. சிட்டியா? அழுக்கு சிட்டியா?

தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதுவும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய தென்மாநிலங்களில் ஐ.டி.த்துறை அசுர வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் புதிய வசதிப்படைத்த - நவீன நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது. சென்னையில் இதற்கான வாய்ப்புகள் மேலும், மேலும் பெருகி வருகிறது. நாளொரு திட்டங்களை நமது தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தமிழகத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார் இதனால் தமிழகமே தலைகீழாக மாறப்போகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியப்போகிறது என்றெல்லாம் கதைக்கிறார்கள். சரி இருக்கட்டும்.
சென்னையில் ஐ.டி. சிட்டியின் ஆரம்பமே டைடல் பார்க்கிலிருந்துதான், தரமணியில் ஆரம்பித்து பெருங்குடி சாலைகள் எங்கும் பளபளக்கும் கட்டிடங்கள், நவீன தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் சாதாரண மனிதர்களுக்கு ஏதோ வேற்று நாட்டிற்குள் புகுந்துவிட்ட எண்ணம்தான் தோன்றும். ஆனால், அந்த எண்ணத்தை, கற்பனையை குண்டும், குழியுமான, அதாள - பாதாளமான அழுக்கடைந்த, தூசிகள் சுதந்திரமாக பறப்பதும், சாலைகளில் மோட்டார் பைக்குகளின் இறைச்சல், கடுமையான டிராபிக் நெருக்கடியும் கலைத்துவிடுகிறது. அடடா, நாம் தப்பாக எண்ணி விட்டோம். நாம் இருப்பது அதே அழுக்கடைந்த சிட்டியில்தான் என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடுகிறது.
ஐ.டி. சிட்டியில் கட்டிடங்கள் பளபளக்கும் அளவிற்கு நமது சாலைகள் பளபளக்க வேண்டாம். குறைந்தபட்சம் தரமான சாலையாவது போட வேண்டாமா? இந்த வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சியாகத் தெரியவில்லை. எப்படி துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகள், குண்டு குழந்தைகளாக வளர்க்கிறதோ அதுபோலத்தான் இருக்கிறது. இந்தச் சாலையில் செல்லும் புதிய நடுத்தர வர்க்க ஜீவிகள் இது குறித்து ஏதாவது சிந்திக்கிறார்களா? என்றும் தெரியவில்லை? இந்த சாலையில் ஒரு மாதத்திற்கு பைக்கில் பயணிக்கும் எந்த ஆரோக்கிய மனிதனுக்கும் கடுமையான - சொல்ல முடியாத நோய்கள் தாக்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது.
ஐ.டி.யில் வளம் வரும் கம்ப்யூட்டர் ஜாம்பவான்கள் சமூகத்தைப் பற்றி கவலைப்படா விட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் தாங்கள் செல்லும் சாலையையாவது சுத்தமாக - தரமாக பராமரித்திட கவனம் செலுத்தலாமே! இவ்வளவு மோசமான சாலைகளை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருக்கும் பீலிங் எப்படி ஏற்படுகிறது என்றுத் தெரியவில்லை. மேலும், இந்த அடிப்படை கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தொழில் ஆரம்பிக்கிறார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் தெரிவது ஒன்றுதான் இந்திய ரத்தத்தை உறிஞ்சுவதைத் தவிர வேறு என்னவாக இருக்கும்!

November 23, 2006

அடங்கித்தான் போகவேண்டும்!

இந்திய பொருளாதாரத்தின் தலைநகரமாகத் திகழும் மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில்தான் இந்த கொலைபாதகம் நடந்தேறியுள்ளது.தீண்டாமை கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்காத நம்நாட்டில்தான், இந்தியா ஒளிர்கிறது! 2020-ல் இந்தியா வல்லரசு நாடு! ஐ.டி. உலகில் ஜாம்பவான் என்றெல்லாம் புளகாங்கிதம் அடைகிறது ஆளும் வர்க்கம்!
தலித் என்றாலே அடங்கித்தான் போகவேண்டும்! அவன் பிறருக்கு அடிமை சேவகம் புரியவே பிறப்பெடுத்தவன் என்ற மேல்ஜாதி - வர்ணாசிரம ஆதிக்கவெறி எங்கும் வியாபித்து - தொடர்கிறது. அதன் தற்போதைய உதாரணம்தான் கயர்லாஞ்சி!
கயர்லாஞ்சி கிராமத்தில் மூன்று தலித் குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தை தழுவியவர்கள். தமிழகத்தில் சிங்காரவேலர் - பெரியார் வலியுறுத்திய சுயமரியாதையோடு வாழ்ந்து வருபவர்கள். இத்தகைய சுயமரியாதையை ஏற்குமா ஆதிக்கஜாதி!பையாலால் போட்மாங்கேவின் மனைவி சுரேகா, மகள் பிரியங்கா மகன்கள் சுதிர், ரோஷன் ஆகியோரைக் கொண்ட சிறிய குடும்பம் வெறும் செங்கற்களால் அடுக்கப்பட்ட ஓலை வீட்டில் வசித்து வந்தது. இவர்களுக்கென்று இருக்கும் 2.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். இந்த நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டது ஆதிக்கஜாதி வர்க்கம். அத்துடன் சாலை போடுவதற்கு இவர்களது நிலத்தை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.விவசாய கூலி சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை காரணமாக வைத்துக் கொண்டு 40க்கும் மேற்பட்ட ஜாதியாதிக்க சக்திகள் செப்டம்பர் 29, 2006 அன்று விடியற்காலையில் பையாலால் போட்மாங்கே வீட்டிற்குள் நுழைந்து தாய், மகள், மகன்கள் என நான்கு பேரையும் அடித்து, உதைத்து நிர்வானமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கிராமத்தின் மையத்தில் நிற்க வைத்து சகோதரனை - சகோதரரியோடு உடலுறவு கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளனர். இந்த மனித அரக்கர்கள் அத்துடன் நிற்கவில்லை. இந்த இளம் சகோதரிகளை மிருகத்தனமாக கும்பலாக கற்பழித்ததோடு, சின்னபின்னமாக்கியதோடு, சைக்கிள் செயின்களாலும், பயங்கரமான அயுதங்களாலும் தாக்கி கொலை செய்து விட்டு, அந்த ஊரிலிருந்து தொலைவில் இருக்கும் ஏரியருகே வீசியெறிந்து விட்டுச் சென்று விட்டனர்.
உயர் ஜாதி அடையாளம் ஒன்றே இவையெல்லாவற்றையும் செய்வதற்கு வழங்கப்பட்ட லைசன்சு போல நடந்துக் கொண்டுள்ளன இந்த மனித மிருகங்கள். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில வாரங்கள் கழித்தே வெளியுலகிற்கு தெரியவந்தது. அந்த அளவிற்கு அங்குள்ள காவல்துறையும், அதிகார வர்க்கமும் இந்த கொலைபாதக செயலை மூடிமறைத்துள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூட ஆதிக்கவெறியர்களின் பக்கமே நின்று பொய் சான்றிதழ் வழங்கியுள்ளனர். மொத்தத்தில் நாகரீக சமூகம் வெட்கித் தலைக்குனியும் அளவிற்கு ஜாதி ஆதிக்கவெறியர்களோடு கைகோர்த்துள்ளது அரசு நிர்வாகம்.
இது ஏதோ, எங்கோ நடைபெற்ற சம்பவம் அல்ல! நம் இந்தியாவில்தான்!! பா.ஜ.க. ஆட்சியின் போது ஹாரியானாவில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த நான்கு தலித்துக்களை கல்லால் அடித்தே கொன்றது சங்பரிவார - சன்னியாசிக் கூட்டம். வெண்மணி, சுண்டூர், கொடியங்குளம், மாஞ்சோலை தோட்டம், கயர்லாஞ்சி என தொடரும் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக ஜோதிபாபூலே, அம்பேத்கர், சிங்காரவேலர், பி. சீனிவாசராவ், பெரியார், பகத்சிங், பாரதியார் காட்டிய வழியில் சகோதரத்துவத்தோடு வர்ணாசிரம - ஜாதி ஆதிக்க சிந்தனைக்கு முடிவு கட்டிட கிளர்ந்தெழுவோம்! தீண்டாமைக்கு தீ வைப்போம்!!

November 08, 2006

மக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்!

உலகமயப் பொருளாதாரம் பல்வேறு நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய வடிவம்தான் “சிறப்பு பொருளாதார மண்டலம்” (Special Economic Zone - SEZs) ‘இன்னொரு உலகம் சாத்தியமே!’ என்று போராடி வரும் வேளையில், உலகமயமும் அதன் பாணியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை (SEZ) புதிய உலகமாக சித்தரிக்கிறது. இத்தகைய மண்டலங்கள் யாருடைய நலனுக்காக அமைக்கப்படுகிறது? இதனால் பாதிக்கப்படும் வர்க்கம் எது? சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை இம்மண்டலங்கள் ஏற்படுத்தப்போகிறது?சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சட்டத்தை 2005 நவம்பரில் மன்மோகன் அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் அடிப்படையான நோக்கம் நேரடி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது. அதற்காக சர்வதேச தரத்தில் இம்மண்டலங்களை உருவாக்குவது என்பதுதான்.இந்திய வர்த்தகத்துறை அமைச்சகம் மிக வேகமாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இதுவரை 181 மண்டலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 128க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. கிட்டத்திட்ட நாடு முழுவதும் 309 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.SEZசின் புதிய ஆட்சியாளர்கள்இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கப்போவது யார் என்பதை அறிந்தாலே அதன் மர்மங்கள் துலங்கிவிடும், ரிலையன்°, டாடா, சகாரா, யூனிடெக், வீடியோகான், மகேந்திரா குழுமம், கல்யாணி குழுமம்... என உள்நாட்டு பெரு முதலாளிகளும், அந்நிய நாட்டு பெரு முதலாளிகளும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சுதந்திரமாக அமைத்துக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது மன்மோகன் சிங் அரசு. இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட குறைந்தபட்சம் 10,000 ஏக்கரில் இருந்து 35,000 ஏக்கர் அளவில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஹரியானாவில் ரிலையன்° நிறுவனமும் - ஹரியானா மாநில வளர்ச்சி கார்ப்பரேஷனும் இணைந்து 25,000 ஏக்கர் பரப்பளவில் குர்கான் - ஜாஜர் பகுதியில் SEZ அமைக்க உள்ளனர். அதேபோல் டி.எல்.எப். என்ற நிறுவனம் அதே குர்கானில் 20,000 ஏக்கரிலும், மும்பையில் ரிலையன்° நிறுவனம் 35,000 ஏக்கரிலும் SEZ அமைக்கவுள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய SEZ திட்டம் இதுதான். சென்னையில் மகேந்திர குழுமமும், நான்குநேரி, ஓசூர் உட்பட தமிழகத்தில் ஐந்து இடங்களிலும் SEZ அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விழுங்கப்படும் விவசாய நிலங்கள்‘இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் வாழ்கிறது’ என காந்திஜி கூறினார். மேலும் இந்தியா என்பது வெறும் நகரங்கள் மட்டுமல்ல பல லட்சக்கணக்கான கிராமங்களைக் கொண்டது என மிக ஆழமாக வலியுறுத்தினார். அவரது வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிந்தனைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சமாதி கட்டத் துவங்கி விட்டனர். பன்னெடுங்காலமாக தலைமுறை, தலைமுறையாக கலாச்சார ரீதியாக - பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கிராமப்புற மக்களின் நன்செய் விவசாய விளை நிலங்கள் அடிமாட்டு விலைகொடுத்து வாங்கப்படுகிறது. மார்க்கெட் விலையை விட மிகக் குறைந்த தொகையை கொடுத்து நிலக் கொள்ளை நடைபெற்று வருகிறது. நிலங்களை பறிக்கொடுத்த கிராமப்புற மக்கள், தங்கள் கிராமங்களை காலி செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியேறும் மக்களுக்கு மாற்று இடங்களோ அல்லது அவர்களது வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான சூழலை, அடிப்படைத் தேவைகள் பற்றி எந்தவிதமான சிரத்தையையோ மாநில அரசுகளும், இந்திய அரசும் அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களோ மேற்கொள்வதில்லை. இத்தகைய செயல் மூலம் சமூகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாக்கி வருகிறது ஆளும் வர்க்கம். இது குறித்து முன்னாள் பிரதமர் வி.பி. சிங் கூறும் போது, “மக்களை ஆயுதம் ஏந்துவதற்கு தள்ளி விடாதீர்கள்” என எச்சரித்துள்ளார். இந்திய நகர்ப்புறங்கள் பிதுங்கி வழிந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரசின் இத்தகைய போக்கு நகரங்களில் மேலும் நெருக்கடியை உண்டாக்குவதோடு, சமூகத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்திட செய்யும்.இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ள 67 SEZ திட்டங்களுக்காக மட்டும் 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள திட்டங்களையும் சேர்த்தால் 2,74,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கஜினி முகமது இந்தியாவை 17 முறை கொள்ளையடித்ததை வைத்து அரசியல் நடத்தும், சங்பரிவாரக் கூட்டங்களுக்கு பல லட்சக்கணக்கான மக்களின் நிலம் கண்ணெதிரே கொள்ளையடிக்கப்படுவது ஏனோ தெரியவில்லை! பிரிட்டிஷ் இந்தியாவிற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலக்கொள்ளை நடப்பது நவீன வரலாற்றில் இதுதான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்திய உணவு உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கும் விவசாய நிலங்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவதால் எதிர்காலத்தில் பெரும் உணவு பற்றாக்குறையுடன் கூடிய பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.ஆசிர்வதிக்கப்பட்ட நவீன காலனிஇத்தகைய சிறப்பு பொருளாதார மண்டத்திற்குள் ஏற்றுமதியை நோக்கமாக கொண்டு தொழில் துவங்கும் அந்நிய நிறுவனங்களுக்கு அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டு காலத்திற்கு அவர்களுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி மற்றும் வருமான வரி உட்பட அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 50 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும், அதற்கடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் மறு முதலீடு என்ற பெயரில் இத்தகைய சலுகையை நீட்டிக்க முடியும். இது தவிர இத்தகைய நவீன மண்டலத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகாலத்திற்கு எந்தவிதமான வரியும் இல்லை! மேலும், இம் மண்டலத்திற்கான பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உட்பட 27 வகைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திடவும், காண்ட்டிராக்ட் என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும், 8 மணி நேர வேலை பாதுகாப்பு, இ.எ°.ஐ., மருத்துவம், பனி பாதுகாப்பு என எந்த சட்டரீதியான பாதுகாப்பும் இம்மண்டலத்திற்குள் bல்லுபடியாகாது. மொத்தத்தில் சுதந்திர இந்தியாவிற்குள் ஏகபோக மற்றும் பெரு முதலாளிகளின் நவீன காலனிகளாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன.அரசின் இத்தகைய கொள்கையால் ரூ. 1,75,000 கோடி அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியும், நிதித்துறையும் எச்சரித்துள்ளது. இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மூலம் அரசு எதிர்பார்க்கு மூலதனம் என்பது வெறும் 3,60,000 கோடி ரூபாய் மட்டுமே!இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் SEZ மிகப் பெரிய வேலைவாய்ப்பினை வழங்கும் என்று கதைக்கத்துவங்கியுள்ளார். தற்போது செயல்பட்டு வரும் 28 SEZசில் ஐந்து லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாக 1,00,650 வேலைவாய்ப்பினை மட்டுமே இவைகள் வழங்கியுள்ளன. இன்னும் குறிப்பாக கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் SEZசில் 79 நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்துள்ளன. இவைகளில் வெறும் 7000 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மேலும் SEZ ஆதரவாளர்கள் கூறுவது போல அந்நிய முதலீடும் எதிர்பார்த்த அளவிற்கு வருமா? என்பதுகூட கேள்விக்குறியே!சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முழுமையான வரிகளையும், நிலத்தினையும் வாரி வழங்கும் மத்திய - மாநில அரசுகளின் கொள்கை மாநிலத்தில் செயல்படும் சிறுதொழில் பேட்டைகளை சட்டை செய்வதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் அம்பத்தூர், கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர் போன்ற இடங்களில் செயல்படும் தொழிற்பேட்டைகளுக்கு சாலை, மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட செய்துக் கொடுப்பதில்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் சிறு தொழில் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவானதோடு, மறைமுகமாக மேலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்பை இது வழங்கியது. மத்திய - மாநில அரசின் கொள்கை வேலைவாய்ப்பினை பெருக்கிட இதுபோன்ற முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கு பதிலாக பன்னாட்டு மற்றும் ஏகபோக முதலாளிகளின் நலன் காக்கும் கொள்கைகளைத்தான் வடிவமைக்கின்றனர்.நிலக் கொள்ளையும் - ரியல் எsடேட் பிசினசும்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கும் நிறுவனங்கள் அதன் பரப்பளவில் 25 சதவீத அளவில் தொழிற்சாலைகளுக்கும், மற்ற 25 சதவீதம் சாலை, மின்சாரம், குடிநீர் உட்பட அடிப்படை கட்டமைப்புகளுக்கும் பயன்படுத்திடலாம் மீதம் உள்ள 50 சதவீத நிலத்தில் மிக நவீனமான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி அதன் மூலம் கொழுத்த இலாபத்தை ஈட்டுவதுதான் SEZயை உருவாக்கும் நிறுவனங்களின் அடிப்படை நோக்கம். விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களை குறுகிய காலத்தில் பெரும் லாபமீட்டும் முதலீடாக கருதுகின்றன. உதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10,000 ஆயிரத்திற்கு வாங்கியிருந்தால் பிறகு அதே நிலத்தை 40 இலட்சத்திற்கு விற்பனை செய்வார்கள். சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது தொழிலை வளர்ப்பதை விட ரியல் எ°ட்டேட் பிசினஸை - பெரும் கொள்ளையை உருவாக்க வழிவகுக்கிறது. இவ்வாறான விற்பனைகளுக்கு கூட எந்தவிதமான வரியையும் அவர்கள் செலுத்த வேண்டியதில்லை. மேலும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. மாநில அரசு அதிகாரிகளோ, ஏன் மந்திரிகளோ கூட தங்கள் மூக்கை நுழைக்க முடியாது. இதற்கென இருக்கும் வளர்ச்சி அதிகாரிகள்தான் இதனை கவனிப்பர். SEZயை உருவாக்கிய தனியாரின் சுதந்திரமான ஆட்சியதிகாரத்தின் கீழ்தான் இது செயல்படுத்தப்படும். குறிப்பாக, கூறுவேண்டுமானால் இது “அரசுக்குள் அரசாக அதுவும் செல்வம் விளையாடும் அரசாக” செயல்படும். சிறப்பு பொருளாதார மண்டலம் சுரண்டலின் வேர்காலாக சிறப்பு சுரண்டல் மண்டலமாக உருவாவதற்கே மன்மோகன் அரசு வழிவகுத்துள்ளது.அனைத்து மாநில அரசுகளும் நிலச்சீர்திருத்தம் செய்திட வேண்டும் என்று 50 ஆண்டு காலமாக வலியுறுத்தி வந்தாலும், இந்த விஷயத்தை காதில் போட்டுக் கொள்ளாத மாநில அரசுகள், தற்போது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதன் மூலம் புதிய நவீன ஜமீன்தாரிகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலகமயமாக்கல் ஆட்சியாளர்களின் சிந்தனைகளை எவ்வாறு சீரழித்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.சீனாவில் சிறப்பு பொருளாதார மண்டலம்உலகில் முதன் முதலில் 1986இல் சீனாவில்தான் டெங்சியோ பிங் வழிகாட்டலின் அடிப்படையில் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டது. சீனாவை பொறுத்தவரை “ஒரு தேசத்தில் இரண்டு கொள்கைகள்” என்ற அடிப்படையில் செயல்படும் நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கே சோசலிசம் என்பதை சீனத்தன்மைக்கேற்ப கட்டிட வேண்டும் என்று டெங்சியோ பிங் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த அடிப்படைகளை நம்முடைய இந்திய அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சீனாவில் இயங்கி வரும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சீன மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கு பயன்படும் அளவில் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது வெறும் பெயரில் மட்டும்தான் அவ்வாறு அமைந்துள்ளது. அதன் செயல்பாட்டில் முற்றிலும் மாறுபட்ட நிலையே இங்குள்ளது.சீனாவில் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சீன அரசு மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைத்தது. இம்மண்டலத்திற்கான நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலங்களைத்தான் அரசு தேர்வு செய்கிறது. அனைத்து விதத்திலும் சர்வதேச தரத்துடன் - அடிப்படை கட்டமைப்புகளோடு சீன அரசே இம்மண்டலங்களை உருவாக்குகிறது. நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது; இதில் எந்த தனியாரும் உரிமை கொண்டாட முடியாது. இத்தகைய மண்டலங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக சீனாவின் மற்ற பகுதிகளுக்கு இணையாக இங்கே வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இத்தோடு நில்லாமல், இத்தகைய மண்டலங்களை உருவாக்க நிலங்களை வழங்கிய மக்களை இதில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டுள்ளது. அரசுக்கு வரும் இலாபத்தில் உரிய விகிதத்தை நிலம் வழங்கிய அம்மக்களுக்கு சீன அரசு வழங்கி விடுகிறது. அத்தோடு அவர்களுக்கான வேலைவாய்ப்பும் திறமைக்கு ஏற்ப இத்தகைய நிறுவனங்களுக்கு உள்ளே வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் ஒரு தொழிலாளியை நீக்க நினைத்தால் அத்தகைய தொழிலாளிக்கு மாற்று வேலைவாய்ப்பை அந்நிறுவனங்களே ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள், மருத்துவம், இன்சூரன்° உள்ளிட்ட சமூக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சீன அரசின் ஆரோக்கியமான செயல்பாட்டின் மூலம் இன்றைக்கு இத்தகைய பொருளாதார மண்டலங்களில் 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சிப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மேற்கு வங்கத்தில் SEZஇடது முன்னணி ஆட்சி நடைபெறும் மேற்குவங்க மாநிலத்திலும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட மாநில அரசு நான்கு இடங்களில் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக இந்தோனேசியாவில் உள்ள சலீம் குழுமம் அமைக்கவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் டாடா குழுமம் அமைக்கவுள்ள மண்டலங்களை குறிப்பிடலாம். இத்தகைய மண்டலங்களை பின்தங்கியிருக்கக்கூடிய வடக்கு பர்கானா 24 போன்ற மாவட்டங்களில்தான் அமைக்க அனுமதிக்கின்றனர். இத்தகைய மண்டலங்களை அமைப்பதற்காக வெறும் விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலங்களை மட்டுமே அரசு கையகப்படுத்துகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மிகக் குறைந்த அளவில் மட்டும் ஒரு போகம் விளையக்கூடிய நிலங்களை கையகப்படுத்துகின்றனர். இவ்வாறு பெறப்படும் நிலங்களுக்கு சந்தை விலையில் 152 சதவீதத்தை வழங்குகிறது. அந்த மக்களுக்கான மாற்று இடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. மற்றும் அவர்களுக்கான புனர்வாழ்வாதாரங்களுக்கான ஏற்பாடுகளையும் மேற்குவங்க அரசு செய்துக் கொடுக்கிறது.உருவாகி வரும் கிளர்ச்சிகள்சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அசுரத்தனத்தால் இந்திய கிராமப்புறங்கள் திவாலாகி வருவதையும், விவசாயிகள் நிற்கதிக்கு ஆளாவதையும் எதிர்த்து மும்பை, ஒரிசா போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சிமிக இயக்கங்கள் வலுப்பெற்று வருகின்றன. மற்றொரு புறம் இடதுசாரி அமைப்புகள் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் உருவாக்கத்தில் அரசு பல்வேறு மாற்றங்களை செய்திட வேண்டும் என்று குரலெழுப்பி வருவதோடு, நிலக்கொள்யையையும் தடுத்து நிறுத்த, சிறப்பு பொருளாதார சட்டத்தில் திருத்ததையும் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக, நிலம் கையகப்படுத்துவதற்கான வரையை தீர்மானிக்க வேண்டும். மேலும் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு மார்க்கெட் விலை மற்றும் SEZ அமைக்கப்பட்டதற்கு பின் ஏற்படும் விலை நிலவரத்திற்கு ஏற்ப விலையை கொடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் மட்டுமின்றி நிலமற்ற விவசாயத் தொழிலாளியையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். மற்றும் அவர்களுக்கான மாற்று இடம், கல்வி, சுகாதாம், சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் SEZ அமைக்கும் நிறுவனங்கள் நிலத்தை இழந்த மக்களை பங்குதாரர்களாக சேர்த்திட வேண்டும் என்பதோடு, இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு உட்பட, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசுக்குள் ஒரு அரசாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது மேலும் வரி விலக்கு மிக தாராளமாக வழங்கப்படுவதை பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியுள்ளனர்.மொத்தத்தில் உலகமயம் வழங்கிய நவீன காலனியாக செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிராக பெரும் திரள் கிளர்ச்சிகளை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதில் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.

October 16, 2006

நரகாசுர வதம்

நரகாசுர வதம் நடைபெற்று முடிந்துள்ளது சென்னையில். நடத்தியவர்கள் சாட்சாத் தி.மு.க.வினர்தான். மாநில சுயாட்சி, ஜனநாயகத்தின் தூண்கள் என்றெல்லாம் வீரவசனம் பேசியவர்கள் மக்களின் செல்வாக்கை இழந்து செல்லாகாசாகியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் சென்னை திமுகவின் கோட்டையில் சரிபாதி ஓட்டை விழுந்ததை திமுக இன்னும் மறக்கவில்லை. சட்டமன்றத்தை கைப்பற்றிட இலவச தொலைக்காட்சி, நிலம், எரிவாயு அடுப்பு என மலை, மலையாக வாக்குறுதி அளித்த பின்னும், ஏழு கட்சி கூட்டணி அமைத்த பின்னும் முழுமையான மெஜாரிட்டியோடு ஆட்சிக்கு வர முடியவில்லை திமுகவால். இதனையெல்லாம் மனதில் கொண்டுதான் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற புதிய அணுகுமுறையை அரங்கேற்றியிருக்கிறது திமுக தலைமை. உள்ளாட்சியின் அடித்தளமே மக்களின் பங்கேற்புதான். ஜனநாயக மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம் என்று அடுக்கு மொழியில் பேசும் திமுக தலைவரும், தலைமையும் எடுத்து விட்ட துருப்புச் சீட்டுதான் சினிமா காட்சிகளையும் விஞ்சும் அளவிற்கு சுமோக்களில் ரவுடிகளை கத்தி, கட்டை உட்பட ஏற்றிக் கொண்டு வார்டு வாரியாக பூத்துக்களை கைப்பற்றியுள்ளனர். சில பூத்துக்களில் காலை 8.00 மணிக்கெல்லாம் அரங்கேற்றம் முடிந்து விட்டது. திமுக மாநிலத்தில் மக்கள் ஆதரவை இழந்துள்ளது என்பதை உணராமல், இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதன் மூலம் அண்ணா ஆரம்பித்த திராவிட இயக்கம் தனக்கான சவக்குழியை தோண்டிக் கொண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். நரகாசுர வதத்தை திமுக - அதிமுக மீது செய்யுமோ? அல்லது அதிமுக திமுக மீது செய்யுமோ? நமக்குத் தெரியாது. ஆனால் நரகாசுர வதத்தை திராவிட இயக்கத்தின் தொடுத்திட மக்கள் தயாராகி விட்டனர்.

September 16, 2006

அமெரிக்க சர்வாதிகாரம்: கியூபா கடும் தாக்கு

"பொருளாதார வல்லமையை பயன்படுத்தி உலக நாடுகளின் மீது அமெரிக்கா முழுமையான சர்வாதிகாரம் செலுத்தி வருகிறது,''
என்று அமெரிக்கா மீது கியூபா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அணி சாரா நாடுகள் இயக்கத்தின் ("நாம்') உச்சி மாநாடு கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டை நடத்தும் கியூபா, அமெரிக்காவின் "சர்வாதிகாரப் போக்கை' ஒரு பிடிபிடித்தது.
நாம் வாழும் இன்றைய உலகம் நீதியற்ற, நெறியற்ற, சமத்துவமற்ற நாள்களாக நாளுக்குநாள் மாறிக்கொண்டிருக்கிறது. யுத்தம் மற்றும் பொருளாதார பலத்தைப் பிரயோகித்து உலக நாடுகளின் மீது முழுமையான சர்வாதிகாரம் செலுத்தப்பட்டு வருகிறது என்று கியூபா துணை அதிபர் கார்லோஸ் லாகி கூறினார்.
அணி சாரா நாடுகள் மாநாட்டு பிரதிநிதிகள் கூட்டத்தில் புதன்கிழமை பேசினார் கார்லோஸ் லாகி.
மேலும் அவர் பேசியதாவது: ஒரு நாடு (அமெரிக்கா) மற்றொரு நாட்டின் மீது பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் நெருக்கடி கொடுப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இதனால் எந்த நாட்டின் மீதும் ஊடுருவி தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக எத்தகைய அழிவையும் அந்த நாடு மேற்கொள்ளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய, நியாயமான, பொருளாதார சமத்துவம் ஏற்பட அணி சாரா நாடுகளாகிய "நாம்' பாடுபட வேண்டும். இந்நோக்கில் இன்றைய காலகட்டத்தில் "புதிய உலகம்' அமைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது சாத்தியமும் கூட. சர்வதேச உறவுகளுக்கான புதிய கொள்கைகளை "நாம்' உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
யுத்தம், பயங்கரவாதம், அநீதி, சமத்துவமின்மை, இரட்டை நிலைப்பாடு போன்ற காரணங்களுக்காக "நாம்' இணைந்து செயல்படவில்லை. அமைதி மற்றும் பொதுநீதிக்காக "நாம்' செயல்படுகிறோம்.
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் இழைக்கும் கொடுமைகள் போன்றவற்றை "நாம்' அனுமதிக்கக்கூடாது என்றார் லாகி.
உச்சி மாநாட்டின் தீர்மானங்களை உருவாக்குவதற்காக உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அணி சாரா இயக்க நாடுகளின் ("நாம்') தலைவர்கள் புதன்கிழமை விவாதித்தனர்.
அதன்படி, "நாம்' வெளியிடவுள்ள வரைவு பிரகடனத்தில், "காஸôவில் இருந்து இஸ்ரேல் தனது துருப்புகளை விலக்கிக்கொள்ள வேண்டும்; சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன அதிகாரிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு நாடு அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது; அதேவேளையில், மற்றொரு நாடு அணு ஆயுதங்களை சேகரித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய அநீதியான போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.
நாடுகளிடையே ஒற்றுமையும் சமாதானமும் ஏற்பட உண்மையாக பாடுபடும் அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை மாற வேண்டும்; மாற்றியாக வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு, போதை மருந்து கடத்தலுக்கு எதிரான சர்வதேச சவால்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு, உள்நாட்டு மக்களுக்கான பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் "நாம்' தலைவர் விவாதித்தனர்.
Thanks : Dinamani

September 14, 2006

கல்வியைக் கைவிட்ட மத்திய அரசு

கல்வியைக் கைவிட்ட மத்திய அரசு
வஸந்தா சூரியா

"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!'' என்பதை போல், இன்று நாடெங்கும் "எங்கும் கல்வி! என்பதே பேச்சா''கி விட்டது.

பஸ் ஸ்டாண்டில், ரயில் பெட்டியில், டீக்கடையில், ஆபீஸில், கல்யாண மண்டபத்தில் - ஏன், குழாயடியிலும் கூட - ""உங்க பிள்ளை என்ன படிக்கிறான்?'', ""என் பொண்ணு ஸ்கூல்ல ராங்க் வாங்கியிருக்கா!'' அல்லது ""யாரானாச்சும் ஒரு நல்ல டியூஷன் மாஸ்டர் வேணும் பா... நம்ம பயல் இங்க்லீஷ்ல கொஞ்சம் வீக்!'' - இதேதான் பேச்சு. தேனாய் காதில் பாயும் இந்தப் புதிய கல்விப் பேச்சிலிருந்து சமுதாயத்தில் தோன்றிய மகத்தான மாறுதலைப் புரிந்து கொள்ளலாம். கோடிக்கணக்கான மக்கள், ""படிச்சு கிழிச்சு என்ன ஆகிவிட போவுது!'' என்ற நினைப்பிலிருந்து வெளிவந்து, ஒவ்வொருவரும் தன் குழந்தைக்கு நிச்சயமாகக் கல்வி கிடைத்தாகிவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். பரம்பரை பரம்பரையாகப் படிப்பு வாசனையில்லாதவர்கள் படிப்பை எப்படியாவது எட்டிப்பிடித்து வாழ்க்கையில் நமக்கும் சம பங்குண்டு என்று நிரூபிக்கத் தயாராகி விட்டார்கள். திறமையாகப் பங்கு கொள்வதற்கு கல்வி ஓர் ஆயுதம் என்று நன்கு தெரிந்து கொண்டு, அதை எப்படியாவது தன் வாரிசுகளுக்குக் கொடுக்க பெரும்பாடுபடுகிறார்கள். இதுதான் இந்திய சமுதாயத்தின் இன்றைய ""பிரம்மபிரயத்தனம்'' என்றே சொல்லலாம்.


ஆனால், ""கல்வி இலவசமாக, தரமாக இருக்க வேண்டும். சமநீதிக்கு உட்பட வேண்டும்!'' என்ற அரசியல் சட்ட வாக்குறுதி நிறைவேறாமல் நிற்கிறது. இந்திய அரசாங்கம் இந்தக் கல்வித் தாகத்தை தீர்க்க, ""கல்வி உரிமை''யை வெறும் பேச்சாக்கி, பல மட்டமான திட்டங்களைப் புகட்டிக் கொண்டே வருகிறது. அதற்குப் பதிலாக அரசாங்கப் பள்ளிகளை அமைத்து, பராமரித்து, ஒழுங்காக நடத்தியிருந்தால் கடந்த 60 வருடங்களில் நாட்டில் செழிப்பான முன்னேற்றம் தோன்றியிருக்கும். இன்று அரசாங்கத்தை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த பெற்றோர் தங்கள் வயிற்றைக் கட்டியாவது தம் குழந்தையை ""நல்ல'' பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டு தனியார் பள்ளியை நாடுகிறார்கள். தனியார் பள்ளிகளோ ஒரு கதம்பம்; அந்தப் பட்டியலில் ஒஹோவென்று புகழ சில பள்ளிகள் இருந்தாலும், அவை வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது ஒரு ரகசியமல்ல. அதே தனியார் பட்டியலில் மிக மிக மட்டமானவையும் உண்டு. அந்த ""கல்விக் கடைகளில்'' தங்கள் குழந்தைகளைச் சேர்த்து விட்டு, வாயைக் கட்டிக்கொண்டு, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கிறார்கள் பல பெற்றோர்கள். "தரமான கல்வி வேண்டும்' என்கிற ஏக்கம்தான் மிச்சம். இவர்கள் டொனேஷன் கொடுத்து, பீஸ் கட்டி, அதற்கு மேல் டியூஷனும் வைக்கிறார்கள் - ஏனென்றால், பாடங்களைச் சரியாகச் சொல்லித் தர ஆசிரியர்களுக்குத் திறமையும் பொறுமையும் போதாது, வருமானமோ மிகக் குறைவு. இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் கல்வியின் தரம் ஏது? புகார் சொன்னால் தன் குழந்தைக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்று பயந்து, பெற்றோர்கள் கப்சிப்பென்று சகித்துக் கொள்கிறார்கள்.

பெற்றோரின் தவிப்பு ஒருபுறம் இருக்க, தரமான உபயோகமுள்ள கல்வி இல்லாமலிருந்தால், நாடு உருப்படியான முன்னேற்றத்தை அடையுமா? புள்ளிவிவரங்களை வைத்து ஜாலம் காட்டுகிறார்கள், சிலர்: ""பொருளாதார வளர்ச்சி 8% வரையில் வந்துவிட்டது. இந்தியா விரைவில் செழிப்படைந்து விடும்! உலக சந்தையில் பெரிய இடம் பெற்றால் போதும், பிறகு கல்வி என்ன - எல்லா நன்மைகளும் இங்கு வந்து குவியும்!'' என்று வாய்கிழிய இந்தியாவின் பொன்னான எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார்கள், சிலர். இன்னமும் ஒவ்வொரு மூலை முடுக்கில் நாம் தினமும் பார்க்கும் வறுமையும் கொடுமையும் இந்தப் புள்ளிவிவரத்தில் தெரியவில்லை. அதென்ன, பொருளாதார வளர்ச்சி, பொது மக்களின் நன்மைக்கு அப்பாற்பட்டதா, என்ன? மனித வளர்ச்சி ஓர் அளவுக்கு வந்த பின் அல்லவா, பொருளாதார வளர்ச்சி ஏற்பட முடியும்? குழந்தைக்குக் கல்வியும் உணவும் கொடுத்தால்தானே அது வளர்ந்து பல சாதனைகள் புரிந்து, செல்வத்தை உருவாக்கும்? ஆம், இதெல்லாம் சரி... ஏது பணம், என்று சால்ஜாப் சொல்லிக்கொண்டே வருகிறது, மத்திய அரசாங்கம். இதில் என்ன வேடிக்கை என்றால் எந்தக் கட்சியோ, கூட்டணியோ முதலில் மூக்கால் அழுது, கல்வியின் அவசியத்தை மக்களுக்குப் போதனை செய்து, எல்லோருக்கும் தரமான கல்வியைக் கொண்டு வர உறுதி கூறி, ஆட்சிக்கு வந்த பிறகு---ஏது பணம்? என்று பின்வாங்குகிறது.

இதற்கு, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் விதிவிலக்கல்ல. ""மத்திய கல்வி ஆலோசகர் குழு'' என்ற அமைப்பை 2004-ல், மடஅ ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்தது. இரண்டு வருட காலம் பாடுபட்டு பல பிரச்சினைகளை அலசி, தீர்வுகள் வழங்கிய இந்தக் குழு இப்பொழுது கலைக்கப்பட்டது. முக்கியமாக, "இந்திய அரசியல் சட்டத்தில் 86வது சட்டத்திருத்தலை அமலுக்குக் கொண்டு வர, மத்திய அரசு கணிசமாக உதவ வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என்று CABE ஆலோசனை சொல்லியது.

ஆனால் இப்பொழுது மத்திய அரசு கல்விக் களத்திலிருந்து நாசூக்காக ஒதுங்கிவிட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டிய சட்டம் மாநிலங்களிடம் தள்ளப்பட்டது. ஒரு ‘‘Model Bill’’ முன்மாதிரி சட்ட வடிவு) மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதை அவரவர் சட்டசபையில் கொண்டுவராவிட்டால் மத்திய அரசிலிருந்து சர்வ சிக்ஷா அபியான் பெறும் நிதியுதவி 75 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்படும்!

பள்ளியில் சொல்லிக் கொடுக்காத பாடத்தை மாநிலங்களுக்கு "Homework" சுமையாக ஏற்றிவிட்டது, மத்திய அரசு!
Thanks: Dinamani, September 14, 2006

September 13, 2006

கிட்னி வேணுமா?

இந்தியாவில் வறுமை குறைந்து வருவதாகவும், ஏழ்மை ஒழிக்கப்பட்டு வருவதாகவும் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர் நம்முடைய இணையவாசிகள். முன்பு சங்பரிவாரம் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று கூறியதைத்தான் தற்போது இவர்கள் மீண்டும் வாந்தியெடுக்கத் துவங்கியுள்ளனர். ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்’ என்று கூறும் நம்முடைய தமிழ் பழமொழிகளுக்கு ஒத்தவர்களை இணையத்திலும் காண்பதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. இவர்களது கண்கள் ‘மானிட்டர்’களின் ஒளி வீச்சால் சூழப்பட்டுள்ளதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்திய கிராமப்புறங்களைப் பற்றியோ, ஏன் சென்னை, பெங்களுர் போன்ற பெரு நகரங்களில் பிளாட்பாரத்தில் கந்தல்கோலமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையெல்லாம் இவர்கள் மனிதர்களாகவே நினைப்பதில்லை. அதனால்தான் இவ்வளவு தைரியமாக கூறுகிறார்கள் இந்தியாவில் ஏழ்மை ஒழிந்து வருகிறது என்று.


சரி, சப்ஜெக்ட்டுக்கு வருவோம்! இன்றைய இந்தியன் எக்°பிரசில் (13.06.2006, சென்னை எடிசன்) ஒரு செய்தி வந்துள்ளது. 30 வயது இளைஞன் ஒருவன் தன்னுடைய கிட்னியை விற்பதற்கு விளம்பரம் செய்துள்ளார். அவரை தொடர்பு கொள்வதற்கான செல்போன் உட்பட. பத்திரிகையில் அல்ல; பொது மக்கள் நடமாடும் இடங்களில், அவர் கைப்பட எழுதி, அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். இது குறித்து இந்தியன் எக்°பிர° நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசியதையும் இன்றைக்கு செய்தியாக வெளியிட்டுள்ளார். அவரது கோரிக்கை என்ன? ஏன் அவர் தன்னுடைய கிட்னியை விற்க வேண்டும். அதுவும் இந்த இளம் வயதில்!

வேலையின்மை, வறுமைதான் காரணம். அதிமேதாவிகள் அடிக்கடி கூறுவார்கள் வேலையில்லை என்று நாம் சொல்லக்கூடாது. நாமாக முன்னேறனும்; அரசாங்கமே எல்லாத்தையும் செய்ய முடிமோ... பாருங்க அசிம் பிரேம்ஜியை... என்று அறிவுரையெல்லாம் மிக அழகாக அளிப்பார்கள். இந்த இளைஞரும் அப்படித்தான் சொந்த தொழில் செய்யலாம் என்று ஈடுபட்டு கையை சுட்டுக் கொண்டார். என்ன ஊர் முழுக்க கடன்தான். தனக்கு மூன்று லட்சம் கடன் இருப்பதாக கூறும் இந்த இளைஞன். கடனை அடைப்பதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். அதற்காக இந்திய விவசாயிகள் போல் தற்கொலையா செய்துக் கொள்ள முடியும்? (இந்தியாவில் அப்படியெல்லாம் நடக்கிறதா என்று கேட்பார்கள் டாலர் தேசத்து மக்கள்!) இருக்கவே இருக்கிறது இரண்டு கிட்னி, சரி ஒன்றை விற்று விடலாம் என்று துணிந்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளார். தன்னுடைய கடன் பிரன்னையை தீர்ப்பதற்காக மூன்று லட்சம் தேவைப்படுவதாகவும், அதை யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு கிட்னியை தருவதாக கூறியுள்ளார். இந்திய இளைஞர்களின் வறுமைக்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா? (தயவு செய்து இதில் டாலர் தேசத்து இளைஞர்களை மட்டும் ஒப்பிடாதீர்கள்)


ஏற்கனவே கிராமப்புற ஏழை - எளிய மக்கள் வெறும் ஆயிரம், இரண்டாயிரத்திற்கெல்லாம் கிட்னியை பறிக்கொடுத்த சம்பவங்கள் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வந்தது. இப்படியும் சில மனித பிராணிகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து மாமனிதர்களாக உயர்த்திக் கொண்டு, தங்கள் பிள்ளைகளை டாலர் தேசத்திற்கு அனுப்பி வைத்து சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு சென்று விடுகின்றனர். பாவம்! இந்த கதைகளெல்லாம் நம்முடைய இணையவாசிகளான டாலர் தேசத்து கண்களுக்கு படமாட்டேன் என்கிறதே நாம் என்ன செய்வது! அவர்களுக்கு உலகவங்கியின் ஓலம் (நரியின் ஓலம்) இந்தியாவில் வறுமை குறைந்து விட்டது என்று கூறுவதுதான்படுகிறது! அநேகமாக இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவில் முற்றிலும் வறுமை தீர்ந்து விடும் எப்படி என்றால் வறுமையில் இருக்கும் இளைஞர்கள் தங்களின் கிட்னிகளை விற்பதன் மூலமாகத்தான்!

September 08, 2006

பள்ளிக் கூடம் - சிறுகதை

பள்ளிக் கூடம்
சிறுகதை
முருகனது குடும்பம் நீலகிரியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து 30 வருடமாகி விட்டது. முருகன் மாமா சிவனாண்டி சென்னைக்கு குடியேறியதைத் தொடர்ந்து அவனது தாயாரும் தன்னுடைய குழந்தைகளோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

இன்னும்கூட முருகனுக்கு நீலகிரியின் வாசம் மறையவில்லை. பசுமையான மலைத் தொடர்களும், அடர்ந்த மரங்களும், தெளிந்த நீரோடைகளும் அவனது நெஞ்சத்தில் இடம் பெற்று விட்டது. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டிலேயே முருகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நம் தலைமுறையில் யாருமே படிக்கவில்லை. தன் பிள்ளையை சென்னையில் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணக் கனவு அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

குழந்தையின் வளர்ச்சியின் கூடவே அவனது கனவும் கூடிக் கொண்டே வந்தது. குழந்தைக்கு பெயர் வைப்பது, காது குத்துவது, மொட்டை அடிப்பது என குழந்தையின் முதல் பிறந்த நாள் வரை அத்தனைக்கும் விழா எடுப்பதற்கு தவறவில்லை.

எப்படியோ பையனுக்கு இரண்டரை வயதை தொட்டவுடனேயே அக்கம், பக்கத்தில் விசாரித்து சுமாரான பள்ளிக்கூடத்தில் தன் மகனை சேர்ப்பது என்று முடிவு செய்தான். பள்ளிக்கூடத்திற்கு சென்று பார்ம் வாங்கிக் கொண்டு வந்தான் முருகன். பள்ளி நிர்வாகி பிறந்த சான்றிதழையும், சாதிச் சான்றிதழையும் தவறாமல் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

குழந்தையின் பிறந்த சான்றிதழை வாங்கி வைத்திருந்ததில் மகிழ்ச்சி கொண்ட முருகன், சாதிச் சான்றிதழ் வாங்க வேண்டுமே! இதை எப்படி வாங்குவது, எங்க வாங்குவது என விழிபிதுங்கினான்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த சாமியப்பனிடம் இது பற்றி கேட்க, ‘அட ஜாதி சட்டிபிகேட் தானே’, ‘அது ஒண்ணும் பெரிய விஷயமில்லிங்க, நம்ம டீ கடை கோவிந்தசாமி கிட்ட சொல்லுங்க, ஒரு நூற்றி ஐம்பது ரூபா கொடுத்தா எல்லாத்தையும் அவரே பாத்துப்பாரு...’ என்று கூறினார்.

‘முருகனும் எப்படியோ சர்டிபிகேட் வாங்கியாகணும், வேற வழியில்லை... நமக்கும் அங்கெல்லாம் அலைய முடியாது’ என்று மனதில் எண்ணிக் கொண்டே, டீ கடை கோவிந்தசாமியை பார்த்து விஷயத்தை சொன்னான்.

டீ கடை கோவிந்தசாமி இந்த விஷயத்தில், அந்த ஊர்லலே ரொம்ப பேம°. ‘சரி, சரி என்ன ஜாதின்னு கேட்டார்; ‘நாங்க மலை ஜாதிங்க, குருமன்°’-ன்ன சொல்லுவாங்க’; சரி, இதுக்கு ஏதாவது அத்தாட்சி வைச்சிக்கிறீயா? என்று கேட்டார் டீ கடை கோவிந்தசாமி.

‘எங்க வீட்ல யாரும் படிக்கிலீங்க... எங்கிட்டயும் வேற எந்த சர்டிபிகேட்டும் இல்லீங்க என்றார்... அப்பாவித்தனமாக. ‘என்னய்யா... நீ, சரி, இது இல்லாட்டி போகுது, உங்களுக்கு ஏதாவது இடம், கிடம் இருந்தா அந்த பத்திரத்தில எழுதியிருப்பாங்களே அதாவது இருக்கா?’ என்றார் டீ கடை கோவிந்தசாமி.

‘அண்ணே எங்களுக்கு நிலமிருந்தா நாங்க ஏன்னே சென்னைக்கு வர்றோம். அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்கண்ணே’ என்றான் முருகன்.

‘நல்ல கேஸூயா நீ...’

‘யோவ்... மலை ஜாதின்னா சர்டிபிகேட் தர மாட்டாங்கய்யா’ ஏண்ணே’, ‘நாங்களும் உங்களாட்டும் மனுஷங்கத்தானே!’

‘அது ஒண்ணும் இல்லையா... உங்க ஜாதின்னா கவுருமெண்டுல வேல்யூ அதிகம்... அதான் தர மாட்டங்கா. நீ மலைஜாதின்னு சர்டிபிகேட் வாங்கிட்டினா ஒம் பையனுக்கு படிப்பு, வேலை எல்லாத்துலையும் நிறைய சலுகை கிடைக்கும்...’

‘ஆனா...?’

இன்ண்னாணே! சரி நீ நாளைக்கு வா... ட்ரை பண்ணுவோம்...

‘யோவ் முருகா! இந்த சர்டிபிகேட் வாங்கணும்னா நிறைய காசு செலவாகும்ய்யா...’ ‘இண்னாணே கூட ஒரு நூறு ரூபா ஆவுமா!’

‘மண்ணாங்கட்டி! பத்தாயிரம் ரூபா ஆவும்யா...’

அதிர்ந்து போன முருகனுக்கு, கண்ணில் தண்ணீர் வரவில்லையே தவிர கோபமும், ஏமாற்றமும் முட்டிக் கொண்டு வந்தது.

மறு நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்ட முருகன், டீ கடை கோவிந்தசாமியை பார்க்கப் போனான்.

முதல் நாளே அப்ளிகேஷனையெல்லாம் தயாராக எழுதி வைத்திருந்த டீ கடை கோவிந்தசாமி, முருகனையும் கூட்டிக் கொண்டு வில்லேஜ் ஆபிசரை பார்த்து விஷயத்தை சொன்னார்.

‘ஏம்பா கோவிந்தசாமி! உனக்கு வேற கேஸே கிடைக்கிலியா?’ ‘என் வேலைக்கே உலை வைச்சிடுவ போலீருக்கே’ என்று கடுகடுப்பாக சொன்னார் வில்லேஜ் ஆபிசர்.

முருகனுக்கு ஒண்ணுமே புரியலை! ஜாதி சர்டிபிகேட் வாங்குறதுன்னா அவ்வளவு கஷ்டமா? பக்கத்து வீட்டு சாமியப்பன் நூத்து ஐம்பது ரூவாவுல முடிஞ்சிடும்னு சொன்னான்!

குழம்பிப்போன முருகன், படிக்காமப் போனது எவ்வளவு தப்பா போச்சு! என்று மண்டையில் அடித்துக் கொண்டான். தன்னை படிக்க வைக்காத அப்பா மேலயும் எரிச்சலாய் வந்தது. அவுங்க என்ன பண்ணுவாங்க... அந்த மலையில எங்க பள்ளிக்கூடம் இருந்தது! அரசாங்கமும் அத கண்டுக்கல....

டீ கடை கோவிந்தசாமி, வில்லேஜ் ஆபிசருக்கு ஒரு டீயை வாங்கிக் கொடுத்து, ‘எண்னன்ணே பண்றது? நீங்களே ஒரு வழி சொல்லுங்க... என்னை நாடி வந்தவங்களே நான் கை விட்டது இல்லை..., கையில காசு வாங்குனாலும் நாக்குச் சுத்தமாக இருக்கணும்னு நினைக்கிறவன் நான்.. உங்களுக்கே தெரியும்!’

‘யோவ் கோவிந்தசாமி பழங்குடி சர்டிபிகேட் வாங்குனம்னா குறஞ்சது அஞ்சு வருசம் ஆகும்யா... அதுவும் ஆர்.டி.ஓ., சப்-கலக்டர், கலக்டர்-ன்னு நிறைய என்கொய்ரி எல்லாம் இருக்கும்...’
‘அதுவும் இந்த கேஸூக்கு எந்த ஆதாரமும் இல்லை... சர்டிபிகேட் வாங்கவே முடியாதுய்யா...ன்னுட்டார். சரி! நாளைக்கு வா! ரெவீன்யூ ஆபிஸர பாத்து பேசலாம்... ஆனா... காசு செலவாகும்யா...ன்னார்.’

முருகனுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல! இன்னிக்கே ஒரு நாள் லீவு போட்டாச்சு! அந்த மே°திரி வேற லொள் லொள்ன்னு கத்துவான்... வேலை கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. இந்த நிலையில நாளைக்கு வேற எப்படி லீவு போடறது என்று யோசித்துக் கொண்ட... இருந்தவனுக்கு தலை சுத்தியது...

பையனை படிக்க வைக்கணுமே என்ன பண்றது!

சரி! சாயந்திரம் மே°திரிக்கிட்ட போய் விஷயத்தை சொல்லிட்டு நாளைக்கும் லீவு போட்டுட்டு ரெவின்யூ ஆபிசராம் அவரைப் பார்ப்போம்! என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டான் முருகன்.
யோவ் முருகா, ரொம்ப யோசிக்காத! இந்த பழங்குடி ஜாதில பிறந்தாலே இப்படித்தான் நாய் பொழப்பாயிடும், நீயே பரவால்ல... வேலையில இருக்குற, பல ஆபிஸருங்க கதைய கேட்டீன்னா ரொம்ப சோகமா இருக்கும்மாய்யா...

ஏண்ணே! அவங்கbல்லாம் நல்லா படிச்சிருப்பாங்களேண்ணே... ‘படிப்பாவது, புண்ணாக்காவது, எவனாவது ஆவாதவன் மொட்டை கடுதாசி போட்டான்னா.. அவ்வளவுதான்; என்கொய்ரி, என்கொய்ரின்னு உயிர எடுத்துடுவானுங்க....’

இதற்குள் மே°திரியின் ஞாபகம் வந்த முருகனுக்கு, ‘அந்த ஆள் வேற சாயந்தரத்துல புல்லா தண்ணியடிச்சிட்டு இருப்பான். நல்லா இருக்கும்போதே எரிஞ்சி விழுவான்... தண்ணியடிச்சா சொல்லவே தேவையில்லை...’ என்று நினைத்தவனுக்கு கண் கலங்கியது...

எப்படியோ மே°திரி இல்லாத நேரத்துல போய், வீட்டம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்துட்டான்.
மறுநாள் மாதாகோவில் மணியடிக்கும் சத்தத்தை கேட்டதும் விழித்துக் கொண்ட முருகன், அவசர, அவசரமா ரெடியாகி... ரெவீன்யூ ஆபிஸர பாக்குறதுக்கு டீ கடை கோவிந்தசாமியோட போனான்.
‘ரெவின்யூ ஆபி°ல ரெடியா இருக்கேன்னு சொன்ன வில்லேஜ் ஆபிஸரை காணோமே!’ சுத்தி, முத்தி பாத்த கோவிந்தசாமி, பக்கத்துல இருந்த வாட்ச்மேன் கிட்ட கேட்க!

“ஏம்பா! அவுங்க எல்லாம் இன்னிக்கு காலைலே 7 மணிக்கே கும்மிடிப்பூண்டி போய்ட்டாங்க... அங்க ஏதோ வீடுங்க பத்திக்கிச்சாம், அத விசாரிக்க போயிட்டாங்க....” நீ நாளைக்கு வான்னு... வாட்ச் மேன் கூறியவுடன் இதயமே நொறுங்கிப் போனது முருகனுக்கு.

வீட்டுக்கு போனதும் முருகன் மனைவி கருப்பாயி ‘என்னங்க வாங்கியாச்சான்னு’ கேட்டதும், “பளார்னு ஒன்ணு விடணும் போல தோணுச்சு...” நாமே எரிச்சலா வர்றோம்... உள்ள நுழையறமோ இல்லையோ, அதுக்குள்ள கேள்வி கேக்குறா... வீட்டுக்காரரின் சிடு சிடுப்பை பார்த்ததுமே ஒண்ணும் நடக்கலை என்பதை உணர்ந்து கொண்டாள் கருப்பாயி.

தூங்கிக் கொண்டிருந்த பையன் அப்பாவின் சத்தத்தை கேட்டதும், அரைத் தூக்கத்தில் ஓடி வந்து அப்பாவின் மடிமேல் படுத்துக் கொண்டான். மனைவி போட்ட சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பெண்டாட்டிக்கிட்ட சொன்னான்.

‘ஜாதி சட்டிபிகேட் வாங்குறதுக்கு இவ்வளவு பிரச்சினையா! ஜாதி இல்ல, ஜாதி இல்லங்கறங்க... ஏன், இப்படி சர்டிபிகேட் கேட்டு நம்ம தாழியறுக்கிறானுங்க’ என்று முணுமுனுத்தால் கருப்பாயி.
பள்ளிக்கூடம் சேர்ப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் என்ன செய்வது என்ற யோசனையிலேயே உறங்கிப் போனான்.

மறு நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்று ‘ஜாதி சர்டிபிகேட் கிடைக்க நாளாகுங்க! ஒரு மாசம் கழிச்சு வாங்கித் தறேன்’ என்று முருகன் கூற, பள்ளி நிர்வாகி, ‘ஒரு மாசமெல்லாம் டைம் கிடையாது, இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாந்து சேக்கணும் சரியா!’ என்று மிரட்டல் தொனியில் சொல்லிட்டார் ஹெட் மா°டர்.

முருகன் டீ கடை கோவிந்தசாமியை பார்த்து, பள்ளி நிர்வாகி கூறியதை சொன்னான். ‘ஏம்பா, நீ எந்த தைரியத்துல ஒரு மாசத்துல கிடைக்கும்ன’ அவனவன் ஐஞ்சு வருஷம் லொங்கு, லொங்குன்னு அலையறான் அவனுக்கே கிடைக்க மாட்டங்குது’ நீ என்னடான்னா...

‘வேணும்னா ஒண்ணு பண்ணு, உனக்கு அவசரமாக சட்டிபிகேட் வேணும்னா, நான் வேற எதாவது ஜாதியைப் போட்டு வாங்கித் தரேன் அப்புறம் பாத்துக்கோ...ன்னார்...

பள்ளிக்கூடமும் - பையனும் மட்டுமே கண்ணுல இருந்த முருகனுக்கு ஜாதியை தூக்கி எரிஞ்சான்! ?
- கே. செல்வப்பெருமாள்
நண்பர் யாத்தீரிகன் அவர்கள் ‘பள்ளிக்கூடம்’ என்ற சிறு கதையை மீள் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற அவரது ஆலோசனைக்கேற்ப இதனை இங்கே மீள் பதிவு செய்துள்ளேன். யாத்தீரிகனுக்கு மிக்க நன்றிகள்...

September 07, 2006

விஜயகாந்த் திராவிடரா?

தமிழக அரசியல் களத்தில் தற்போது சூடாக விவாதிக்கப்படும் பொருளாக மாறியுள்ளது விஜயகாந்த் திராவிடரா? நமது பத்திரிகை நன்பர்கள் முதல்வர் கருணாநிதி அவர்களிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளில் ஒன்று இது!

இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் : விஜயகாந்தை நான் எப்போதும் திராவிடர் அல்ல என்று கூறியது கிடையாது. ஆனால், இப்போது எல்லோருக்கும் ‘திராவிர்’ என்ற முத்திரை தேவைப்படுகிறது. என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த விஷயத்தில் விஜயகாந்திற்கு ஏக்கச்சக்க கோபமாம்! அதனால், அவர் போகும் இடமெல்லாம் கருணாநிதியை ஒரு பிடி பிடிக்கிறாராம்!

உண்மையில் விஜயகாந்த் தான் திராவிடர் என்று கருதினால் அவர் என்ன செய்திருக்க வேண்டும் ‘கிண்டி கிங்’ இன்°டிடியூட்டில் தன்னுடைய டி.என்.ஏ.வை கொடுத்து தான் திராவிடர் என்று நிரூபித்திருக்க வேண்டும்! அதை செய்யும் துணிச்சல் அவரிடம் இருக்காது என்று நமக்கு தெரியும்! ஏனென்றால் டி.என்.ஏ. சோதனையில் திராவிடம் என்ற ரிசல்ட் எல்லாம் வராது! அது கற்பனையானது என்று கூறிவிடும். இத்தகைய ஒரு டெ°ட்டை செய்து கொள்ள திராவிடம் என்று முழங்கும் யாரும் முன்வர மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஓ.பி.சி. இடஒதுக்கீடு, சாட்டிலைட் சிட்டி, பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் வேலையின்மை வரை ஏராளமான பிரச்னை இருக்கும் போது அது பற்றியெல்லாம் கவலைப்படாத விஜயகாந்த் திராவிடத்தை பற்றி கவலைப்படுகிறரே அது ஏன்? அரசியலுக்கு திராவிடம் தேவைப்படுகிறதே! அங்கு மட்டுமா?....

August 11, 2006

உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்

‘உலகமயம்’ இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலகமக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி - ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘உலக சமூக மாமன்றம்’ போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று மார்க்சும் - ஏங்கெல்சும் கம்யூனி°ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.ஏகாதிபத்திய - முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.
இந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் - தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.இந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் “நிலச்சீர்திருத்தம்” ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.உலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப் பட்ட நாடு சோசலிச சோவியத்யூனியன்தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ‘நிலச் சீர்திருத்தம்’ என்பது உலகளவில் ‘அரசியல் கோஷமாக’ உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.உலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.
உலக விவசாயிகளின் நிலைஉலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.இவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது ‘நிலம்’. குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகி°தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.அதே சமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக் கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.பிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்உலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களின் கையில்தான் மொத்த விவசாயமும் - விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக - அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.வெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (MST-Movimento dosTrabalhadores Rurais Sem Terra in Portuguese - Landless Workers Movement) 1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எ°.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப் பதித்திருக்கிறது.2003ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் “கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு” பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.பிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000த்துக்கும் மேற்பட்ட எம்.எ°.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.விவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எ°.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் - வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.இது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு “எழுத்தறிவு இயக்கத்தை” தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எ°.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 - 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.இவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம் பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.
சமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எ°.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எ°.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நன்பர் என்றும் எம்.எ°.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.பிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் - பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.நிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதைஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் - பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவே°. உலக எண்ணெய் வளத்தில் 5வது இடத்தை வகிப்பது வெனிசுலா.வெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவே° ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.1999இல் ஆட்சிக்கு வந்த சாவே° “நிலச் சீர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு” என்று அறிவித்தார். “விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம்” என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவே°.அதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவே° அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.வெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர். 1960களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.
வர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.ஒரு பக்கத்தில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.கிராமத்திற்கு திரும்புவோம்!சாவே° ஆட்சிக்கு வந்ததும் “கிராமத்திற்கு திரும்புவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எ°டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவே°.சாவே° ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை. 2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.இத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.வெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹோ பெட்ரன் கூறுகையில், “நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம்” என்று புகழ்ந்துரைத்துள்ளார்.நிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதைலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சே குவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனைகொண்ட ஈவோ மொரேல்° தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஈவோ மொரோல்° மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவே°, மொரோல்° கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.இவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமை யாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாச மானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டா° என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டா° என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.இங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.சின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.பொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்பிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி “பொலிவியன் நிலமற்றோர் இயக்கம்” இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.இந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.அதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.மொரேல்° அரசு “நிலச்சீர்திருத்த நடவடிக்கையை” நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் “நில பாதுகாப்பு கமிட்டி” அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.மொரேல்° அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான “சோசலிசத்தை நோக்கி” (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ - ஆடிஎiஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்இந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெரும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. “பசுமைப்புரட்சி கண்ட இந்தியா” என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார்.
பரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.ஏன் இந்த நிலைமை?இந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா...) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.1987இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது.
அதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. “பணப் பயிர்” (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.இறக்குமதியாகும் உணவு தானியம்தற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆ°திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி! நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (றுகூடீ) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய - உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.வங்கப் பஞ்சம் படிப்பினை!பிரிட்டிஷ் இந்தியாவில் 1943இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம்? இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன? இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:“அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை துவக்கப்பட்டது.”மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் - இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் - நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். “ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.!”வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப - துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி - பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.தமிழகத்தில் நில விநியோகம்சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க் சி°ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய - தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.“தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.”அதே போல்,“தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை”தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும். காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 °டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 °டாண்டர்டு ஏக்கராக மாற்றப் பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிர°டுகள், தர்ம °தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் ‘உச்சரம்பா, மிச்ச வரம்பா’ என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியும், இடதுசாரி - ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.நிலம் - உணவு - வேலைக்கான இயக்கம்ஜூன் 8 - 10, 2006 நடந்து முடிந்த மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆக°ட் மாதத்தில் உணவு - நிலம் - வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை! லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் - கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.“நிலச்சீர்திருத்தம்” உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சி°ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.
தகவல் ஆதாரம்
http://www.venezuelanalysis.com
Rural Development Institute, Land Reform in the 21st Century
http://www.rdiland.org
நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு - 1974.

August 05, 2006

ஏகாதிபத்திய குழந்தைகள் ஏற்படுத்திய அழிவு!

அல்கொய்தா, பின்லேடன், பயங்கரவாதம் ஆகிய சொற்கள் லண்டனையும், வாஷிங்டனையும் மட்டுமின்றி உலக மக்களையே அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளன. பயங்கரவாத பிசாசை ஓட்ட வந்த மந்திரவாதியாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் புனித கூட்டு சேர்ந்து ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் ஏப்பம் விட்டு விட்டன. தற்போது தன்னுடைய சிஷ்யப் பிள்ளை இசுரேலை ஏவி விட்டு பாலஸ்தீனத்தையும், லெபனானையும் சின்னாபின்னமாக்கி வருகின்றனர். அடுத்து ஈரான், சிரியா, வடகொரியா, கியூபா என்று பெரும் பட்டியலை வைத்துள்ளது அமெரிக்கா. ஜார்ஜ் புஷ்தான் இன்றைக்கு உலக ஜனநாயக காவலராக புனிதவேடமிட்டுள்ளார். அமெரிக்கா இன்றைக்கு மட்டுமல்ல அது தோன்றிய நாள் முதலே பூமி பந்திற்கே ஆபத்தை உருவாக்கி வருகிறது. எனவே அமெரிக்காவின் புனித வேடத்தை இந்நாளில் அலச வேண்டியது வரலாற்று கடமையாகிறது.


பயங்கரவாத மந்திரத்தை ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, 60 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகாசாகி மீது அணு குண்டை வீசி 3,50,000 மக்களை கொன்று குவித்த ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அகற்றி விட முடியாது.

ஹிட்லரின் நாஜிப்படைகள் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், ஜப்பானும் போரை முடிவுக்கு கொண்டு வர இசைந்து விட்ட பின்னணியில் 1945 ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, சாதாரண அப்பாவி மக்கள் வசிக்கக்கூடிய ஹிரோஷிமா நகரத்தின் மீது காலை 8.15 மணியளவில் அமெரிக்க விமானப் படையின் “பி-29 விமானம்” சுமந்து வந்த “லிட்டில் பாய்” Little Boy என்று பெயரிடப்பட்ட யுரேனிய அணுகுண்டை நகரத்தின் மையப்பகுதியில் வீசியது. அணுகுண்டு வீசிய சில மணித்துளிகளிலேயே 80,000த்திற்கும் அதிகமான மக்கள் எரிந்து சாம்பலாயினர். பல லட்சக்கணக்கான மக்கள் என்ன நடைபெறுகிறது என்று அறிவதற்கு முன்பே தங்களது தோல்கள் கழண்டு விழுவதையும், கை, கால், முகம் என அனைத்தும் சிதைந்து உருக்குலைந்து போவதைக்கூட உணர முடியாதவர்களாயினர். அணுகுண்டு வீசப்பட்டதால் ஏற்படுத்திய வெப்பம் 5000 டிகிரி செல்ஸியசை விட மிக அதிகம். தொடர்ச்சியாக ஏற்படுத்திய அணுக்கதிர் வீச்சு நகரத்தின் புல், பூண்டுகளையும், காற்று, தண்ணீர் என அனைத்தையும் உருத்தெரியாமல் சிதைத்து விட்டது.

“லிட்டில் பாய்” ஏற்படுத்திய தாக்கத்தில் திருப்தியடையாத அமெரிக்கா மூன்று நாள் கழித்து ஆகஸ்ட் 9 அன்று “பேட் பாய்” Fat Boy (குண்டு பையன்) என்று பெயரிடப்பட்ட புளுட்டோனிய அணுக்குண்டை “நாகாசாகி” நகரின் மீது வீசியது. அங்கும் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட அதே நிலைமை குண்டு வீசப்பட்ட கண்ணிமைக்கும் நேரத்தில் 40,000 பேரை மோட்சத்திற்கு அனுப்பியது அமெரிக்கா.

“ஈராக்கில் பேரழிவு மிக்க ஆயுதங்கள் இல்லாமல் போனாலும், அமெரிக்கா ஈராக் மீது தொடுக்கப்பட்ட போர் நியாயமானதே” என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்ளும் இதே அமெரிக்காதான். ஜப்பான் மீதும் எந்தவிதமான போர்கால நியதிகள் துளியுமின்றி, சாதாரண அப்பாவி மக்கள் வசிக்கக்கூடிய பெரு நகரங்கள் மீது, எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, கோழைத்தனமான தாக்குதலை நடத்தியது.

இது குறித்து அமெரிக்க பல்கலைக் கழகத்தின் நியூக்ளியர் கல்வி மைய இயக்குனர் பீட்டர் குஸ்னிக் கூறும் போது, “அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் இந்த செயல், போர்க்கால குற்றம் மட்டுமல்ல; மனித குலத்திற்கே எதிரான பெருங்குற்றமாகும்” என்று தன்னுடைய மனக் கொதிப்பை வெளிப்படுத்தினார்.

உண்மையில், அமெரிக்காவின் இந்த நீசத்தனமான செயலுக்கு அடிப்படை காரணம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுக்குள் உலகம் இருக்க வேண்டும் என்ற மேலாதிக்க உணர்வு, கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொண்டு பரவுமானால் அணுகுண்டு வீசவும் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கவும் ட்ரூமன் விரும்பினார். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகும் கொரியா, வியட்நாம், பிலிப்பைன்° போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவ முகாமாக்கிட அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய யுத்தத்தை உலகமறியும்; யுத்த சீரழிவுகளில் மாட்டிக் கொண்ட சோவியத் யூனியன் புனர் நிர்மானம் செய்ய மிகவும் சிரமப்பட்டது. பின்னால் உருவான தவறான போக்குகளும் சேர்ந்து சோவியத் பின்னடைவை வேகப்படுத்தி விட்டன.

சோசலிச சோவியத் யூனியனின் பின்னடைவுக்கு பின்னால், இன்றைக்கு தானே நவீன இளவரசன் என வலம் வந்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் இராணுவத் தளங்களை செயல்படுத்திக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஆண்டு இராணுவச் செலவு எவ்வளவுத் தெரியுமா? 455 பில்லியன் டாலர்; இது மட்டுமின்றி ஈராக்கையும் - ஆப்கானி°தானையும் ஒடுக்குவதற்கு தனியாக 82 பில்லியன் டாலர் செலவிடுகிறது. உலகம் முழுவதும் அதனுடைய முதலீடுகளும், பங்கு சந்தை விளையாட்டுக்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ராணுவச் செலவு செய்ய பணத்தை குவிக்கிறது.

தன்னைத் தவிர வேறு யாரும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது, என்பதோடு மின்சார உற்பத்தி போன்றவற்றிற்கு கூட அணு சக்தியை பயன்படுத்துவதை ஆந்தை கண் கொண்டு பார்க்கும் அமெரிக்கா, “புதிய அமெரிக்க நூற்றாண்டு திட்டத்தை”
(PNAC - The Project for the New American Century) விரைந்து செயல்படுத்தி வருகிறது. இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உலக நாடுகளை தன்னுடைய காலுக்கடியில் கொண்டு வருவதே இதன் திட்டம்.

ஏகாதிபத்தியத்தின் மாயவலைகளாக செயல்படும் உலகவங்கி, ஐ.எம்.எப். உலக வர்த்தக ஸ்தாபனம் மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்” என்ற போர்வையில் அரசியல் மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா என பூமிப் பந்து முழுவதும் தனது கழுகுக் கால்களை பரப்பும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகவும், நாடுபிடிக்கும் போர் வெறிக்கு எதிராகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் மக்களை விழிப்புறச் செய்திடுவதே இன்றைய தேவையும், கடமையுமாகும்.

August 03, 2006

உறவுகளின் வேர்!


உறவுகள் மிகப் புனிதமானவை. மனிதகுலம் அறிவு வளர்ச்சிப் பெற்றதிலிருந்து உறவுகள் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்ப வரையறுக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், புராதன காலத்தில் இருந்த மனித உறவுகளுக்கும், தற்போதைய நவீன காலத்தில் இருக்கும் மனித உறவுகளுக்கும் இடையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. சமூக வளர்ச்சிப் போக்கிற்கேற்ப இந்த உறவுகள் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது என்பது வரலாற்று உண்மை. இந்த மாறுதல் உன்னதமான நிலையை நோக்கி பரிணாமடையும்.உறவுகள் என்பது குறித்து ‘கிரியா தமிழ் பேரகராதி’ இவ்வாறு வர்ணிக்கிறது. “தாய்வழியாகவோ, தந்தை வழியாகவோ அல்லது திருமண உறவுகள் மூலமாகவே ஏற்படுவதே உறவுகள்” எனவே இந்த பொருளில் ‘உறவுகள்’ குறித்து விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் நண்பர்களை உறவாக நம் தமிழ் சமூகத்தில் கருதுவதில்லை. இங்கே இரத்த உறவுகள்தான் பிரதானப்படுத்தப்படுகிறது.குறிப்பாக, நம் தமிழ் சமூகத்திலும், இந்திய நிலவுடைமை சமூகத்திலும் இரத்த உறவுகள் என்பது 99 சதவீதம் ஜாதிய ரீதியான உறவாகத்தான் இருக்கிறது. அதாவது, இந்த ஜாதிய சமூக அமைப்பை நீடிக்கும் நிலவுடைமை சிந்தனைக் கொண்ட ஒரு உறவாகத்தான் இது அமைந்துள்ளது. அதே சமயம் மேலை நாடுகளில், ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கட்டமைப்பு இல்லை என்பது இங்கே சுட்ட வேண்டியுள்ளது.
சரி! நம்முடைய தமிழ் சமூகத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி, மாமன், கொழுந்தியா, சித்தப்பா, பெரியப்பா என பலவாறு உறவுகள் மலர்கிறது. உண்மையில் இந்த உறவுகள் எதை ஆதாரமாக கொண்டு இயங்குகிறது? அதனுடைய மூல வேர் எது? என்பதுதான் என்னுடைய பிரதான கேள்வி!நாள்தோறும் செய்தித்தாள்களில் உறவுகள் குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன.
  • சொத்து தகராறு அண்ணனை கொன்ற தம்பி தலைமறைவு!


  • வேலை வாங்கித் தராததால் தந்தை கொலை! மகன் வெறிச் செயல்!!


  • தந்தையின் பிணத்தை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு! பாகப்பிரிவினையில் வஞ்சகம் செய்ததால் மகன் வீட்டைப் பூட்டிச் சென்றார்!


  • கணவனை கொன்ற மனைவி!


  • மனைவியை கொலை செய்த கணவன்!இவ்வாறு பல கோணங்களில் பல செய்திகளை நீங்களும் படித்திருப்பீர்கள்...உறவு என்பது மிகவும் மென்மையானது. அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதில்லை. எனவே, உறவு என்பது இடிக்க முடியாத சுவரும் அல்ல! தகர்க்க முடியாத கோட்டையுமல்ல!!மொத்தத்தில் இந்த உறவுகள் என்பது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது. முறிக்கப்படுகிறது. பல நேரங்களில் இது கொலைகளிலும் சென்று முடிகிறது.இவ்வாறு எழுதுவதால் பலருக்கு முகம் சுளிப்பு வரலாம். இருப்பினும் உறவுகள் குறித்த ஒரு அலசலை இத்தகைய கோணத்தில் செய்யாமல் இருந்தால், அதில் தவறிழைத்து விடுவோம் என்பதற்காகத்தான் இந்த கோணத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.புராதன பொதுவுடைமை சமூகம் என்று அழைக்கப்பட்ட மனித குலத்தின் ஆரம்பகால சமூகத்தில் உறவுகளே இருந்ததில்லை. மனிதர்களில் யாரும், யாருக்கும் வித்தியாசமானவர்களில்லை. ஏன் தாய் - மகன் உறவு கூட மலரவில்லை என்பது குறிப்பிடவேண்டியுள்ளது.பின்னர் இந்த சமூகம் ஆண்டான், அடிமை சமூகமாக மாறியபோது இந்த உறவு முறை அடிமைக்கும், அடிமைகளை ஆளுபவருக்குமான உறவாக மாறியது. இங்கே அடிமைகள் ஒரு சமூகமாகவும், ஆண்டைகள் ஒரு சமூகமாகவும் இருந்தனர். இவர்களுக்கு உள்ள உறவுகளும் அவ்வறே இருந்தன. அப்போது மாமன், மைத்துனி உறவெல்லாம் ஏற்படவில்லை.இந்த சமூகமும் மாற்றமடைந்து நிலவுடைமை சமூகமாக மாறியபோது, நிலத்தை உடமையாக வைத்து உறவுகள் மலர்ந்தது. அதாவது, தங்களுடைய நிலம் யாருக்கும் அல்லது யாருடைய கைகளுக்கும் சென்று விடக்கூடாது; அந்த குடும்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஆணாதிக்க சமூக உறவு ஏற்படுத்தப்பட்டது. இந்த சமூகத்தில் நிலமே உறவை தீர்மானிக்கும் பிரதான கருவியாக மாறியது. இந்த சமூகத்தில்தான் நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் உறவுகள் மலர்ந்தன. சொத்து கைமாறாமல் இருப்பதற்காகத்தான் இந்த ஜாதிய சங்கிலியும் மனிதர்கள் மீது பூட்டப்பட்டது.
அடுத்து, முதலாளித்துவ சமூகம்: இச்சமூகத்தில் உறவுகள் சுதந்திரமானதாக மாறியது. இந்த முதலாளித்துவ அமைப்பு இந்தியாவில் இன்னமும் முழுமையாக மலரவில்லை. எனவே இங்கே இரண்டும் கெட்டான் உறவுகள்தான் இன்னமும் நீடிக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் ஜாதிகளைக் கடந்த உறவுகள் மலர்ந்திருக்க வேண்டும். ஆனால், மலரவில்லை. அதே போல் இங்கே மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் என்பது, ‘பணத்தை பிரதானமாக’ வைத்துதான். எனவேதான் இந்த சமூகத்தில் உறவுகள் வெறும் பண உறவாய் மாறிப்போய் உள்ளது. பணமில்லாத அடித்தட்டு மக்களிடையே இந்த உறவுகள் காலாவதியாகிப்போய் விட்டது. அல்லது காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் எங்கே பணம் இருக்கிறதோ அங்கேதான் இந்த உறவுகள் நிலைநாட்டப்படுகிறது. பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறான். ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பிகள், சகோதர, சகோதரிகள் என யாராக இருந்தாலும் பணம்தான் பெரும்பகுதி மக்களுக்கு உறவை தீர்மானிக்கும் கருவியாக உள்ளது.
இதைத்தான் காரல் மார்க்ஸ் தன்னுடைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.


“இன்றைய குடும்பம், பூர்ஷ்வா குடும்பம், எதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது? மூலதனத்தை; தனிநபரின் லாபத்தை. இத்தகைய குடும்பம், பூர்ண வளர்ச்சி அடைந்த வடிவத்தில் பூர்ஷ்வாக்கள் மத்தியில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இத்தகைய நிலைமைக்கு அனுபந்தமாக நாம் காண்பதென்ன? பாட்டாளிகள் மத்தியில், அநேகமாக, குடும்பம் இல்லாமலிருப்பதும் வெளிப்படையான விபச்சாரமும்தாம்.”
“பூர்ஷ்வா குடும்பத்தின் அனுபந்தம் மறையும்பொழுது, பூர்ஷ்வா குடும்பம் இயல்பாகவே மறைந்து விடும்; மூலதனம் மறையும் பொழுது இரண்டும் மறைந்து விடும்”எனவே, நாம் விரும்புகிற புனிதமான உறவுகள் இன்றைக்கு இல்லை என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
மனித சமூகத்தில் ஒரு மனிதன், இன்னொரு மனிதனை புரிந்து கொண்டு “இயnசு பிரான் கூறுகிறாரே அதுபோல, அதாவது, நீ உன்னைப்போல் பிறரை நேசி” என்ற உறவு உண்மையில் மலர வேண்டும் என்றால், பணத்தை - சுரண்டலை அடிப்படையாக கொண்ட இந்த சமூகத்தை மாற்றியமைப்பதன் மூலம்தான் உண்மையான உறவுகளை நம்முடைய சமூகம் பெற்றிடும். எனவே, இந்த போலி உறவுக்கு முடிவு கட்டுவது என்பது இந்த நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவதோடு பிணைக்கப்பட்டுள்ளது. இந்த கடமையை நிறைவேற்றுவதே, தோழமையான உறவுக்கு உரமூட்டும், உண்மையான உறவுக் கடமையாகும்.