December 15, 2005

தோல்வியை நோக்கி WTO மாநாடுஹாங்காங்கில் நடைபெற்றுவரும் உலக வர்த்தக மாநாடு தோல்வியை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறது.


இந்த மாநாட்டில் மூன்றுவிதமான முரண்பாடுகள் நிலவுகிறது.


  1. வளர்ந்த நாடுகளுக்கு இடையிலான முரண்பாடு. (அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்)
  2. வளர்ந்த நாடுகளுக்கும் - வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு.
  3. வளரும் நாடுகளுக்கும் - மிக குறைந்த வளரும் நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு.


மொத்தத்தில் வளரும் நாடுகள் ஒரு புறத்திலும், வளர்ந்த நாடுகள் ஒரு புறத்திலும் அணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன.இந்தியா, சீனா, பிரேசில் என ஜி-20 நாடுகளும், அதேபோல் வளரும் நாடுகளைக் கொண்ட ஜி-90 நாடுகளும் ஒரு குழுவாக செயல்படுகின்றன. இதன் மூலம் அமெரிக்காவின் பெரும் சுரண்டல் கொள்கைக்கு சிறிதளவாவது மூச்சு முட்டத்தான் செய்கிறது.விவசாய சந்தைகளை திறந்து விடுவதில் வளர்ந்த நாடுகளின் கொள்கைகளை ஏற்க மாட்டோம். அதே போல், சேவைத்துறைகளான இன்சூரன்°, வங்கி, மருத்துவம், மின்துறை போன்றவற்றில் முழுமையான திறந்தவெளிக் கொள்கையை அனுமதிப்பது வளரும் நாடுகள் தங்கள் தலையில் தாங்களே கொள்ளியை வைத்துக் கொள்வது போல் உள்ளது என கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.தற்போது அமெரிக்கா தொழில் உற்பத்தியில் வளரும் நாடுகள் 90 சதவீதம் வரி விலக்கு அளிக்கவேண்டும் என்று கூறி வருகிறது. இதை வளரும் நாடுகள் ஏற்கவில்லை. எப்படியிருப்பினும் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளால் ஏழை - எளிய - நடுத்தர மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளே நடைபெற்று வருகின்றன. வளரும் நாடுகளில் உள்ள மக்களிடையேயும் இதற்கெதிரான விழிப்புணர்ச்சி அதிகரித்து வருவதால் விழிபிதுங்கி நிற்கிறது உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் - ஏகாதிபத்திய சக்திகளும்.“உட்டோ” மாநாடு தோல்வியுற வாழ்த்துக்கள்!நீங்களும் வாழ்த்தலாம்!!

5 comments:

Voice on Wings said...

முதலில் யாரும் தொடாத ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, தொடர்ந்து பதிவதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் காண்பித்திருப்பது போல் WTO ஒப்பந்தம் என்பது முற்றிலும் விரும்பத்தகாத ஒரு ஏற்பாடல்ல. இம்மாநாடு தோல்வியுற்றால் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளுக்கு அது பெரும் இழப்பே. WTOவை போன்ற ஒரு பலதரப்பு (multilateral) வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமானால் அது இரு தரப்பு (bilateral) வர்த்தக ஒப்பந்தங்களை விட நியாயமானதொரு தீர்வாகவே அமையும்.

CrazyTennisParent said...

பெருமாள்,

மாநாடு நம் நாட்டுக்கு சாதகமாக முடிவு எடுக்க வாழ்த்துக்கள் என்று போடுங்கள்.

சந்திப்பு said...

இருவருக்கும் எனது நன்றி. தாங்கள் கூறுவதுபோல் “உட்டோ” மாநாட்டில் பலதரப்பு வர்த்தக ஒப்பந்தம் வளரும் நாடுகளும் - வளர்ந்த நாடுகளுக்கும் ஏற்புடைய சரிசமமான ஒப்பந்தம் (எது சரிசமம் என்பதில் முரண்பாடு உள்ளது.) ஏற்பட்டால் இருகரம் நீட்டி வரவேற்கலாம்.
ஆனால், நடைமுறை அனுபவம் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதை நாம் அவதானிக்கலாம்.
மேலும், இம்மாநாட்டில் பிரேசில் வளரும் நாடுகளுக்கு தங்களுடைய சந்தைகளை திறந்துவிடப்போவதாகவும், அதற்கு எந்தவிதமான வரியும் விதிக்கப்போவதிலலை என்று அறிவித்திருப்பதை நாம் வரவேற்றிருப்பதை கடந்த பதிவில் காணலாம்.
தங்கள் விமர்சனத்திற்கு நன்றி!
உலகில் தற்போதைய நிகழ்வில் இது ஒரு முக்கியமான கட்டமாக கருதுவதால்தான் இம்மாநாடு முடியும் வரை தொடர்ந்து பதிவது என முடிவெடுத்துள்ளேன். நீங்களும் உங்கள் கருத்தை உங்களது வலைப்பூவில் வெளியிட்டால் ஒரு பரந்த - ஜனநாயக ரீதியான - ஆழமான விவாதித்தை துவக்கிடவும், அதன் மூலம் முடிவுக்கு வரவும் வலைப்பூ வாசகர்களுக்கு உதவிகரமாக அமையும்.

அன்பு said...

சந்திப்பு,

உங்களின் மூன்று பதிவுக்களையும் தொடர்ந்து வாசித்திருந்தாலும், என்ன பின்னூட்டம் எழுத என்றளவில்கூட தற்குறி நிலை. இருந்தாலும், பொதுநல அக்கறையுள்ள ஒரு பதிவுகளை கொடுத்தமைக்கு நன்றி.

நீங்கள் கூறுவது போல் இது தொடர்பான நல்ல விவாதம் நடந்தால் நல்லாயிருக்கும். நன்றி.

சந்திப்பு said...

நன்றி! அன்பு

சந்திப்பின் மூன்று பதிவுகளையும் வாசித்தமைக்கு. இன்றைய தமிழ் பத்திரிகைகளை நீங்கள் கூர்ந்து கவனித்தால், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த “உலக வர்த்தக மாநாடு” குறித்து பன்முகத்தன்மை கொண்ட கட்டுரைகளையோ, செய்திகளையோ வெளியிடுவதே இல்லை. பெயருக்கு ஏதோ இரண்டு போட்டாக்களை மட்டும் வெளியிடுகின்றனர்.

மீடியா சுதந்திரம் பற்றி வாயளப்பவர்கள் மிக சாமர்த்தியசாலிகள்; எதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், எதை மக்களுக்கு தெரிவிக்க கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றனர். குஷ்பு - சுகாசினி - ராமதா° - திருமா... குறித்து பக்கம், பக்கமாக கருத்தை வெளியிட்டவர்களுக்கு பத்திரிகை வியாபாரமும், மக்களுக்கு மெல்லுவதற்கு அவலும் மட்டும் கிடைத்தால் போதும் என்று கருதுவதாலேதான் இந்நிலை!

மக்களிடையே தற்குறித்தனத்தை உண்டாக்கும் பத்திரிகைகளை விட, சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கும் “வலைப்பதிவே” இன்றைய ஜனநாயக - சுதந்திர மீடியா. வளர்க பிளாக்°....

கே. செல்வப்பெருமாள்