December 14, 2005

WTO மாநாடும் - ஏகாதிபத்திய சுரண்டலும்

“ஹாங்காங்கில்” நடைபெறும் “உட்டோ” மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 13 அன்று “உலகமய - உட்டோ எதிர்ப்பாளர்கள்” 5000க்கும் மேற்பட்டோர் மிகப் பிரம்மாண்டமான ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். உலகமயம் என்ற பெயரால் எங்களை சாகடிக்காதே! என்ற கோஷம் விண்ணைப் பிளந்துள்ளது. மேலும், கான்கன்னைப் போலவே தென்கொரிய விவசாயிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டடனர். மேலும், சேவைத் துறைகளை தனியார்மயம் ஆக்குவதற்கு கடுமையான எதிர்ப்பினையும் தெரிவித்தனர். இதேபோல் “உட்டோ எதிர்ப்பு மாநாடுகள் உலகம் முழுவதும்” நடத்தியுள்ளது சிறிது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

முதல் நாள் நிகழ்வில் “விவசாயம் சார்ந்த மார்க்கெட்டை” திறந்து விட வளரும் நாடுகளுக்கு சலுகைகள் அளிக்கப்போவதாக அமெரிக்கவும் - ஐரோப்பவும் நீலிக்கண்ணீர் வடித்தன. ஆனால், வளரும் நாடுகள் இதற்கு இணங்குமா? என்பதை போகப்போகத்தான் தெரியும்!பிரேசில் தங்களுடைய விவசாய சந்தையை ஏழை - எளிய - வளரும் நாடுகளுக்கு திறந்து விடுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் வளரும் நாடுகளில் இருந்து வரக்கூடியபொருட்களுக்கு வரி விதிக்கப்போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இத்தகைய வரவேற்பு வரவேற்கத்தக்கதே!

அத்துடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் வளரும் நாடுகளுக்கு விவசாய மானியங்களை வெட்டச் சொல்லிக் கொண்டே, தங்களுடைய நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் அளவில் மானியம் வழங்கி வருவதையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. வளரும் நாடுகளில் மாநிலம் வெட்டப்படுவதால் போட்டியிலிருந்து மிகச் சுலமாக விவசாயிகளை ஓடச் செய்யலாம் என்ற அமெரிக்க-ஐரோப்பாவின் நரித்தந்திரத்திற்கு நிச்சயம் இந்த மாநாட்டில் பதிலடி உண்டு என எதிர்ப்பார்ப்போம்!

வளரும் நாடுகள் தங்களது மார்க்கெட்டை திறந்து விட்டால் அவர்களுக்கு உதவப்போவதாக அமெரிக்க கூறியுள்ளதோடு, ஆண்டொண்டிற்கு 2.7 பில்லியன் டாலர் ஒதுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல் ஜப்பான் ஆண்டொண்டிற்கு 10 பில்லியன் டாலரும், 1.2 பில்லியன் டாலரும் உதவுவதாக அறிவித்துள்ளது.

இத்தகைய அறிவிப்பு வளரும் நாடுகளை கடுமையாக சுரண்டி, அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதிகூட இருக்காது என்பதுதான் உண்மை. ஏகாதிபத்திய சுரண்டலின் கொடூரத்தன்மைக்கு பெயர்தான் உதவி.

இது தவிர “உட்டோ” மாநாட்டில் பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா உட்பட பல 100க்கும் மேற்பட்ட வளரும்நாடுகள் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளது ஏகாதிபத்தியவாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

இவர்களுடன் நாமும் கைக்கோர்த்தால் அமெரிக்க - ஐரோப்பிய - ஏகாதிபத்திய சுரண்டலுக்கு சம்மட்டியடி கொடுக்க முடியும்!

No comments: