December 07, 2006

பெரியார் சிலையும்! பாசிச சிந்தனையும்!!

திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரெங்கநாதர் கோவில் அருகில் 100 அடி தூரத்தில் பெரியாருக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டது. இச்சிலை திறப்பு விழா வருகிற 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநில அமைச்சர் கே.என். நேரு தலைமையில், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சிலையை திறந்துவைக்கவுள்ளார். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பாசி°ட்டுகள் இன்றைக்கு அதிகாலையில் சிலையை உடைத்துள்ளனர். இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகாமையில்தான் காவல்நிலையம் உள்ளது என்பது குறிப்படத்தக்கது.
பெரியார் என்ன சவர்க்கரைப் போல் தேசத் தூரோகியா? அல்லது இந்த தேசத்தின் ஆத்மாவாக திகழ்ந்த மகாத்மாவை கொலை செய்த கோட்சேவைப்போல், யாரையாவது கொலை செய்தவரா? தமிழகத்தில் சுயமரியாதை தழைக்க வேண்டும். பார்ப்பனீயத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து மனிதனை சுயமரியாதையோடு நிமிரச் செய்ய வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் போராடியவர். மேலும், தீண்டாமை கொடுமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஓயாது குரல் கொடுத்தவர். தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே சுயமரியாதையின் சிகரமாக போற்றப்படுபவர். இத்தகைய உயர்ந்த மனிதரின் சிலை இருப்பது என்ன ஸ்ரீ ரங்கத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியதா?
இந்துத்துவவாதிகளின் சிந்தனை நரகல் சிந்தனை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மனிதனை மனிதன் தீண்டக்கூடாது என்ற சிந்தனைக்கு சொந்தக்காரர்கள்தான் இந்துத்துவ பாசி°ட்டுகள். அதன் விளைவுதான் தமிழகத்தில் சுயமரியாதை சுடரொளியாக திகழ்ந்த பெரியாரின் சிலை இருக்கக்கூடாது என்று உடைத்துள்ள கயவர்களின் கைகள் உடைக்கப்பட வேண்டியதே! பெரியாரின் சிலையை உடைக்கலாம்! ஆனால், அவர் விதைத்த கொள்கைகள் இந்த தமிழ் மண்ணிலும், இந்திய மண்ணிலும் வேர் பிடித்து ஆலவிருட்சமாய் ஓங்கி எழும்.
ஏ பாசி°ட்டுகளே! மகாத்மாவை கொன்ற கொலையாளிகள் பட்டியலில் இருந்தவன்தான் சவர்க்கார் என்ற ஆர்.எ°.எ°. பாசி°ட். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்ட அவனது சிலையை பாராளுமன்றத்தில், அதுவும் காந்தியின் படத்திற்கு நேர் எதிரே வைத்தபோதே இந்த தேசத்தில் பெரும் கொந்தளிப்பு நடந்திருக்க வேண்டும். ஏதோ மக்களின் சகிப்புத்தன்மையால் அவ்வாறு நடைபெறாமலிருந்து விட்டது. இனியும் அனுமதிக்கலாமா? காந்தியை சுட்டுக் கொன்ற சதித்திட்டத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும், சுதந்திரப்போராட்ட தூரோகியுமான சவர்க்கரின் படத்தை பாராளுமன்றத்தில் இருந்து மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விண்ணை முட்டவேண்டும்.
அம்பேத்கர் சிலைகளை உடைத்ததால் ஏற்பட்டதுதான் மகாராஷ்டிரத்தில் தலித் எழுச்சி. பெரியார் சிலையை உடைத்ததால் இன்னும் தமிழகம் முழுவதும் அதிகமான பெரியார் சிலைகள் தோன்றுவதையும், அவரது சிந்தனைகள் முன்னைவிட வீரியமாக விதைக்கப்படுவதையும் யாராலும் தடுக்க முடியாது!

22 comments:

அசுரன் said...

இதத்தான் சொந்த செலவில சூனியம்னு வலையுலகில் வழமையாக சொல்வார்கள்.

பெரியாரை சிலையாக வழிபடும் தேவை நமக்கு இல்லை என்பதிருக்கட்டும். இன்னும் சொன்னால் சிலையாக வழிபட்ட கூட்டத்தினர் அவரது சிந்தனைகள் சமூகத்தில் பரவச் செய்யும் கடமையிலிருந்து வழுவினார்கள்.

ஆனால் இந்த சிலை உடைப்பின் மூலமாக அவர்கள் என்ன உணர்த்த விரும்புகிறார்கள்?

பெரியாரும் சிலைகளை உடைத்தார் காரணம் தமிழகத்தின் அடிமை சிந்தனையை உடைப்பதற்க்காக.

இவர்கள் உடைப்பது? முஸ்லீம்களை ஊரை விட்டு விரட்ட ஆள கிடைக்கவில்லை என்ற கோபத்தை தவிர்த்து வேறு எதுவும் உடுப்படியாக தெரியவில்லை.

அதிலும் பாருஙகள் உடைத்து விட்டு அதை ஒத்துக் கொள்ளும் பண்பு கூட இன்றி, ஓடி ஒளீந்து கொள்ள் முயற்சி செய்துள்ளனர். சரிதான் அமைப்பின் கொள்கைக்கேற்ற கோழைகள்தான் அந்த அமைப்புகளில் சேர்கிறார்கள் போலும்(பிரிட்டிஸ்க்காரனின் அடி வயிறை கோழைத்தனமாக நக்கி மண்டியிட்ட சவர்ககார் என்ற சொறி நாயைப் போல).

தமிழகத்தின் சுயமரியாதையை அவர்கள் விரும்பவில்லை என்பதை இதை விட தெளிவாக அவர்கள் சொல்ல முடியாது.

அடே பன்றிகளே!!!

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம் என்ற புரட்சிகர அமைப்புகளின் முழக்கம் வெற்றி பெறும் என்பதைத்தான் இந்த சிலை உடைப்பு காட்டுகிறது.

உங்களது மண்டை உடையும் காலம் இது. ஆகவே ஜாக்கிரதை!!!


சந்திப்பு, நாடாளூமன்றத்தில் சவர்க்காரின் படமும், காந்தியின் படமும்தான் வைக்க தகுதியான படங்கள் ஆகவே அவற்றை எடுக்கச் சொல்லும் கோரிக்கையில் எனக்கு ஒப்புதல் இல்லை. பின்னே தூரோகிகளின் கூடாரத்தில் அவர்களின் படத்தை வைத்து அலங்கரிப்பதுதானே சரி..

அதை விட இந்துத்துவ அமைப்புகளின் அலுவலகங்களையும் வாய்ப்பிருந்தால் அவர்களின் மண்டைகளையும் உடைத்தெறிய கோரிக்கை வைப்பதே சாலச் சிறந்தது....

அசுரன்

விடாதுகருப்பு said...

அருமையான பதிவு செல்வா.

சிலையை ரோட்டில் தானே வைத்தோம். பார்ப்பனர் வீட்டிலா சென்று வைத்தார்கள்? ஏன் இந்த கொலைவெறி அவர்களுக்கு?

baratharasu said...

///சிலையை ரோட்டில் தானே வைத்தோம். பார்ப்பனர் வீட்டிலா சென்று வைத்தார்கள்? ஏன் இந்த கொலைவெறி அவர்களுக்கு///

உங்கள் வீட்டில் அசிங்கம் செய்தவர்களைத்தான் திட்டுவீர்களா ? ரோட்டிலும் செய்ய கூடாது என்றுதானே நினைப்பீர்கள் ?

sevvinthian said...

//
உங்கள் வீட்டில் அசிங்கம் செய்தவர்களைத்தான் திட்டுவீர்களா ? ரோட்டிலும் செய்ய கூடாது என்றுதானே நினைப்பீர்கள் ?//

பெரியார் சிலை அசிங்கமல்ல பரதரசு, எங்கள் சுயமரியாதையை மீட்டுத்தந்த எங்களுக்கு பகுத்தறிவு பாடம் நடத்திய ஒரு மாமனிதனின் குறியீடு.. எங்கள் மக்களின் மறதியை சுட்டுப் பொசுக்கும் நெருப்பு.

அசிங்கம் சிலையல்ல நன்பா! உன் புத்தியில் உள்ளது தான் அசிங்கம்.. உன் ஆழ்மன அசிங்கம் இங்கே வெளிப்பட்டுள்ளது.

Anonymous said...

அதன் விளைவுதான் தமிழகத்தில் சுயமரியாதை சுடரொளியாக திகழ்ந்த பெரியாரின் சிலை இருக்கக்கூடாது என்று உடைத்துள்ள கயவர்களின் கைகள் உடைக்கப்பட வேண்டியதே!

What they have done is a criminal act and deserves to be condemned.
You are using it as an excuse to show your anti-Hindutva feelings.You want their hands to be broken. Such is the level of your response.
ஏ பாசி°ட்டுகளே! மகாத்மாவை கொன்ற கொலையாளிகள் பட்டியலில் இருந்தவன்தான் சவர்க்கார் என்ற ஆர்.எ°.எ°. பாசி°ட். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்ட அவனது சிலையை பாராளுமன்றத்தில், அதுவும் காந்தியின் படத்திற்கு நேர் எதிரே வைத்தபோதே இந்த தேசத்தில் பெரும் கொந்தளிப்பு நடந்திருக்க வேண்டும்.
The potrait was placed after approval given by a committee.
Representatives of the left
and other parties were members
in that committee.So first you
should blame them. Was Savarkar
convicted of assasinating Gandhi.

First learn to know the facts.
Your cannot salvage your leftist rubbish by telling lies.Criticise
Hinduvta with facts not with lies
and half truths.

Anonymous said...

சிலையை உடைத்தவர்களை கண்டிக்கிறேன். அதே நேரத்தில் பெரியாரின் கொள்கைக்கெதிராக அவரது சிலையை தகாத இடத்தில் வைத்த இந்த அரசையும் கண்டிக்கிறேன். வீட்டிற்குள் வந்த நாயை அடித்தால் அது 'அது' போகத்தான் செய்யும். அள்ளுவது யார்? இளிச்சவாய் தமிழர்கள் தானே.

அசுரன் said...

Dear Sandhippu,

I think you missed my earlier comment. Please find below..

*********
இதத்தான் சொந்த செலவில சூனியம்னு வலையுலகில் வழமையாக சொல்வார்கள்.

பெரியாரை சிலையாக வழிபடும் தேவை நமக்கு இல்லை என்பதிருக்கட்டும். இன்னும் சொன்னால் சிலையாக வழிபட்ட கூட்டத்தினர் அவரது சிந்தனைகள் சமூகத்தில் பரவச் செய்யும் கடமையிலிருந்து வழுவினார்கள்.

ஆனால் இந்த சிலை உடைப்பின் மூலமாக அவர்கள் என்ன உணர்த்த விரும்புகிறார்கள்?

பெரியாரும் சிலைகளை உடைத்தார் காரணம் தமிழகத்தின் அடிமை சிந்தனையை உடைப்பதற்க்காக.

இவர்கள் உடைப்பது? முஸ்லீம்களை ஊரை விட்டு விரட்ட ஆள கிடைக்கவில்லை என்ற கோபத்தை தவிர்த்து வேறு எதுவும் உடுப்படியாக தெரியவில்லை.

அதிலும் பாருஙகள் உடைத்து விட்டு அதை ஒத்துக் கொள்ளும் பண்பு கூட இன்றி, ஓடி ஒளீந்து கொள்ள் முயற்சி செய்துள்ளனர். சரிதான் அமைப்பின் கொள்கைக்கேற்ற கோழைகள்தான் அந்த அமைப்புகளில் சேர்கிறார்கள் போலும்(பிரிட்டிஸ்க்காரனின் அடி வயிறை கோழைத்தனமாக நக்கி மண்டியிட்ட சவர்ககார் என்ற சொறி நாயைப் போல).

தமிழகத்தின் சுயமரியாதையை அவர்கள் விரும்பவில்லை என்பதை இதை விட தெளிவாக அவர்கள் சொல்ல முடியாது.

அடே பன்றிகளே!!!

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம் என்ற புரட்சிகர அமைப்புகளின் முழக்கம் வெற்றி பெறும் என்பதைத்தான் இந்த சிலை உடைப்பு காட்டுகிறது.

உங்களது மண்டை உடையும் காலம் இது. ஆகவே ஜாக்கிரதை!!!


சந்திப்பு, நாடாளூமன்றத்தில் சவர்க்காரின் படமும், காந்தியின் படமும்தான் வைக்க தகுதியான படங்கள் ஆகவே அவற்றை எடுக்கச் சொல்லும் கோரிக்கையில் எனக்கு ஒப்புதல் இல்லை. பின்னே தூரோகிகளின் கூடாரத்தில் அவர்களின் படத்தை வைத்து அலங்கரிப்பதுதானே சரி..

அதை விட இந்துத்துவ அமைப்புகளின் அலுவலகங்களையும் வாய்ப்பிருந்தால் அவர்களின் மண்டைகளையும் உடைத்தெறிய கோரிக்கை வைப்பதே சாலச் சிறந்தது....

அசுரன்

Vajra said...

காந்தி உயிருடன் இருந்த போது அவரை தூற்றிய வாயெல்லாம் காந்தியைக் கொன்றான் என்று RSS மீது பழி போடுவது வழக்கமாகிவிட்டது.

அன்றைய சுப்ரீம் கோர்ட் முதல் home minister வல்லப் பாய் படேல் வரை RSS கொலைச்சதியின் பின்னால் இல்லை என்று எழுதிக் கொடுத்தாலும் பொய்யைய் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மையாக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இயங்குவதாக தெரிகிறது.

RSS மீது எனக்கு தனிப்பட்ட அபிமானம் இல்லை என்ற போதிலும், ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கையை எதிர்கொள்ளத் தெரியாமல் திக்கித் திணருகிறது இடதிசார்க் கொள்கை என்பது என் எண்ணம்.


மேலோ வந்து கேட்டுள்ள அனானிபோல், உங்களை இந்து சிந்தனையையும் அதன் சிந்தனையாளர்களையும் எதிர்கொள்ளவேண்டுமென்றால் விபரங்களுடன், சரியான முறையில் செய்யுங்கள்.

அதற்கு துணிவு இல்லையெனில் "மூடிக்கொண்டு" எங்காவது போய் இடித்துக் கொண்டு உங்கள் அத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளவும்.

Samudra said...

//பெரியார் என்ன சவர்க்கரைப் போல் தேசத் தூரோகியா?//

Selvaperumal,

கம்யூனிஸ்ட்டுக்கு எப்போது தேசத் தூரோகத்தை பற்றி பேசும் தகுதி வந்தது ?

"இரண்டாம் ஹிடலர்" ஸ்டாலினுக்கும், பின்னர் கே.ஜி.பி கொடுத்த பனத்துக்கும் (இப்போது சீனா வீசும் எலும்புகளுக்கும்) மனியாட்டிவர்களின் கட்சியில் இருந்து கொண்டு தேசத்தை பற்றியும், துரோகத்தை பற்றியும் நீங்கள் பேசக்கூடாது.

bala said...

உண்மையான பெரியார் கொள்கை:

பெரியார் இல்லவே இல்லை.
பெரியாரை நம்புபவன் முட்டாள்.
பெரியார் பெயரில் வியாபாரம் செய்பவன் அயோக்யன்.
பெரியாருக்கு சிலை வைத்து மாலை போடுபவன் காட்டுமிராண்டி.

பாலா

Thamizhan said...

Anbu Nanbareer Nandri.I have written in the other blogs.
The guy calling himself Dayananda Saraswathi had condemned the statue the day before in Coimbatore..Then 4 of our idiots had been dispatched from Coimbatore.They never do it themslves.It is always baktha kedigal,a pity our people.Sounds like the same story like Kancheevaram!The facts will come out soon.
In all those years and the number of protests by Periyar not one paisa worth of private or public property had been damaged.Even when they broke pillaiyar statue Periyar made sure that the cadre bought the statues with their own money.Not one pillaiyar belonging to anyone was broken.They should remember if Periyar had ordered there wont be one agraharam standing in Tamilnadu.
Fools you are giving good advertisement for an event which would have gone unnoticed.Thank you.

Anonymous said...

If we leave today to unevil the statue of periyar near temple, then after somedays definetely they built the statue within the temple.
Hence the activists of Hindu is right(very right).
All of us know the damaged cause to periyar statue.
But how many of us know damages caused to pappanaar's poonal?
Don't think that we are sleeping?
If we arise a disaster greater than tsunami will occur!!!

ravi srinivas said...

"அடே பன்றிகளே!!!

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம் என்ற புரட்சிகர அமைப்புகளின் முழக்கம் வெற்றி பெறும் என்பதைத்தான் இந்த சிலை உடைப்பு காட்டுகிறது.

உங்களது மண்டை உடையும் காலம் இது. ஆகவே ஜாக்கிரதை!!!

அதை விட இந்துத்துவ அமைப்புகளின் அலுவலகங்களையும் வாய்ப்பிருந்தால் அவர்களின் மண்டைகளையும் உடைத்தெறிய கோரிக்கை வைப்பதே சாலச் சிறந்தது...."

"அதன் விளைவுதான் தமிழகத்தில் சுயமரியாதை சுடரொளியாக திகழ்ந்த பெரியாரின் சிலை இருக்கக்கூடாது என்று உடைத்துள்ள கயவர்களின் கைகள் உடைக்கப்பட வேண்டியதே! "

சிலையை உடைத்தவர்கள் செய்தது தவறுதான். அதைக் கண்டிக்கும் நீங்கள் வன்முறையை அல்லவா தூண்டி விடுகிறீர்கள். சேலத்தில் சங்கர மடத்தில் நுழைந்து சேதம் விளைவித்துள்ள
'புரட்சிகர' அமைப்புகள் எவை என்பதும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளதே. சிலையை உடைத்தால் கையை உடை, மண்டையை உடை, சூறையாடு என்பதுதான் எதிர்வினையா.
இப்படி சொல்பவர்கள் பகுத்தறிவாளர்கள் என்றால் அது பகுத்தறிவிற்கு ஒவ்வாத ஒன்று.

ravi srinivas said...

பெரியார் என்ன சவர்க்கரைப் போல் தேசத் தூரோகியா?
What was the role of Periyar in
freedom struggle after he quit
congress. How did communists
react to Quit India movement in 1942.

Anonymous said...

என்னப்பா எல்லாரும் ஒடச்ச சில பத்தி பேசுரீங்க தொறந்து வச்ச சிலை பத்தி பேசுங்கப்பா.

இப்படிக்கு,
கழகங்கள்.

Anonymous said...

பெரியார் ஒரு வரலாற்று விளைநிலம்.
அவரது ஒவ்வொரு மூச்சும் தமிழரின் வளர்ச்சி.
அந்த கைத்தடி பார்ப்பண வர்ணாஸ்ரமத்திற்கு செருப்படி.
இன்னும் கேட்கிறது காதுகளில்,அந்த வெங்காயம் பார்ப்பண அகங்காரத்திற்கு விட்ட அறையின் ரீங்காரம்.
அந்த வெண்தாடி உழைக்காமல் வயிரு வளர்த்தவர்களுக்கு கொடுத்தது சவுக்கடி.
வீழ்ந்தது பார்ப்பண சூழ்ச்சி வீழ்த்தியது அவரது முயற்சி.
பெரியாரின் அஸ்திரம் சாத்திரம் கூறி சூத்திரர் ஆக்கியவர்களுக்கு ஏற்படுத்துவது ஆத்திரம்.
இளைய மக்களுக்கு பெரியாரின் செய்திகளை கொண்டுசேருங்கள்.

naathigan said...

From Where paarpanar rise ??

Will they leave the temples (from begging ) and go to work ?

Will they allow others to think rationally by not doing the pujas, karmas and so on ?

History says they are sakunis.They will remain so through out

Anonymous said...

பெரியார் சிலை மூலம் விஷம் விதைக்கும் கூட்டமே, இனியாவது கோயில்,குளம்,பக்தி,தெய்வகுத்தம்,பரிகாரம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என ஓசியில் வாங்கித்தின்று வயிரு வளர்ப்பதை விட்டொழித்து உழைத்து வாழலாமே! இப்படி சோறு தின்பதற்கு பதில் வேறு எதையோ சாப்பிடலாம்.

அசுரன் said...

இரவி சிரினிவாஸ்,

சிலையை உடைத்ததை நான் தவறு என்றூ சொல்லவே இல்லை. இன்னும் சொன்னால் அவர்கள் இழி பிறவிகள் கோழைகள். தவறு சரி என்று பகுத்துப் பார்க்கும் தேவையற்ற சம்பவம் இது. விசயம் ஆளும் வர்க்க பார்ப்பினியத்தின் திமிர்த்தனம்தான். அதை மண்டையை உடைத்து அனுப்பாமல், சீவி சிங்காரித்து, பூவும் பொட்டும் வைத்து அனுப்பச் சொல்கிறீர்களா?

அசுரன்

அசுரன் said...

யாரது தேச்த் தூரோகம் பற்றி பேசுவது..... அட நம்ம சமுத்ரா....

ராணுவம் அமெரிக்க கூலிப்படையாக மாற்றியதை ஊரே கண்டித்த பொழுது இங்கே உட்கார்ந்து பிடில் வாசித்தவர்ல்லாவா அவர்...

அணூ ஆயுத ஒப்பந்தத்தின் தேசத் தூரொகத்தனத்தை ஊரே ஒப்பாரி வைத்து அழுத பொழுது வேறு ஏதோ ஞாபகத்தில் இருப்பதாக நடித்தவர்லலவா அவர்..

இன்னும் பிற நாட்டின் கேடுகள் பற்றி எழுதிய பொதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் வாழ்ந்தவரல்லவா அவர்...

ஓ.... சமுத்ராவின் நாடு அமெரிக்கா அல்லவா? அதுவும் பார்ப்ப்ன புண்ணிய பூமி அமெரிக்கா.....

அய்யா.... பெரியார் சிலை உடைப்பு குறித்தும் அதை நேரடியாக செய்ய துப்பற்ற சொறிநாயினும்(ராணூவம் ரேஞ்சுக்கு) கேவலமான நபர்கள் குறித்தும் கருத்து தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்....

சொல்வீர்களா அலல்து திசை திருப்பு வாதம்தானா?

அசுரன்

Anonymous said...

சவத்துக்கு சிலை வைக்க கோவில் வாசல் தான் கெடச்சுதா? அண்ணா அறிவாலயம்/கோபாலபுரம் வீட்டிற்கு முன்னால் வைக்க வேண்டியது தான? கழகக் கண்மணிகள் கோபாலபுரம் பிள்ளையார் சிலைமேல் கை வைக்க தில் இருந்தா வைச்சுப் பாருங்களேன்?

பாசிச சிந்தனை சிலையை அந்த இடத்தில் வைக்கச்சொன்னவருக்குத்தான். வாழ்நாள் முழுதும் சாமியப் பாக்க மாட்டேன்னு சொன்னவரை கோவில் வாசலிலேயே 'உக்கார' வைச்சு, அவரோட நினைவு நாள்ல திதி கொடுத்து, அவரோட ஆத்மா சாந்தியடைய பிண்டம் கொடுத்து, அவரோட கொளுகையை காப்பாத்துற பகுத்தறிவ என்னன்னு சொல்ல?

We The People said...

சந்திப்பு & அசுரன்,

சிலை உடைத்தது கண்டிக்கதக்கது தான், ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் காரணம் என்று சொல்லுவது ஏற்கமுடியவில்லை, இந்துத்துவாதிகள் எல்லாவரும் அந்த இனத்தவர் இல்லை, உடைத்தவர்களை சட்டம் தண்டிக்கும். அது போல வண்முறையை தூண்டும் விதமாக எழுதுவதும் தவறு தான், வண்முறை செய்வதும் வண்மையாக கண்டிக்கப்படவேண்டியதே. இந்த வண்முறையால் பாதிக்கப்படப்போவது மக்கள், அந்த சிலை உடைத்தவர்கள் இல்லை. அதை நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்.

சமுதாய சேவை செய்யவந்த நீங்கள் இது போல் ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒரு சமுதாயத்தின் அத்துனைப்பேரின் மேலும் குற்றம் சாற்றுவது சரியாக படவில்லை. நீங்களே தீர்மாணித்துக்கொள்ளுங்கள். அது போல அசுரன் அவர்கள் பிரச்சனைகளை களைவதை விட்டு புது சாயம் வேறு பூசுகிறார்

//இவர்கள் உடைப்பது? முஸ்லீம்களை ஊரை விட்டு விரட்ட ஆள கிடைக்கவில்லை என்ற கோபத்தை தவிர்த்து வேறு எதுவும் உடுப்படியாக தெரியவில்லை.//

இங்கே இந்த சிலை உடைப்புக்கும் முஸ்லீம்களுக்கும் என்ன சம்மந்தம், எந்த இடத்தில் முஸ்லீம்கள் வந்தார்கள் அசுரன் சார்?? ஏன் இந்த கலகம்??

தவறை தவறுகளால் திருத்தமுடியாது என்பது என் கருத்து.

சிந்தித்து எழுதுங்கள் சந்திப்பு மற்றும் அசுரன்.