December 04, 2006

சங்பரிவாரமும், சிவனின் சித்து விளையாட்டும்!

இந்துமத கொண்டாட்டங்களில் கார்த்திகை தீபமும் முக்கியமான ஒன்று. கார்த்திகை தீபத்தை வீடுகளிலும், கோவில்களிலும் மூன்று நாட்களுக்கு மாலை நேரங்களில் அகல் விளக்கை ஏற்றி வைத்து சிறப்பாக கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீபத்திற்கு பின்னால் இருக்கும் மத நம்பிக்கைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இதன் அழகே தனியழகுதான். தெருக்கள் அனைத்தும் வரிசையாக தீப ஒளியில் மிளரச் செய்யும். இந்த தீப ஒளியில் கூட, வீடுகளில் வைக்கப்படும் அகல் விளக்கை வைத்து செல்வத்தின் ஏற்றத்தாழ்வை உணர்ந்து கொள்ள முடியும். அடடா, ஒளியில் கூட வறுமையை காண முடியுமா என்ன என்று வியக்காதீர்கள்!

கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று நான் அலுவலுகத்தில் தோழியர் ஒருவரிடம் கேட்க, அவர் 'நீயே சொல்லேன் என்று கூற, நானும், பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் ஏற்பட்ட அகங்காரத்தை அடக்க ஓங்காரமாக நின்ற சிவன் கதையைக் சொன்னேன், உடனே முகத்தில் அறைந்தார்போல் அவர் என்னை திருப்பிக் கேட்டதற்கு விளக்கம் தெரியாமல் நான் பேந்த, பேந்த முழித்ததுதான் மிச்சம். சரி, அவர் என்ன கேட்டார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. “அவர் என்ன அமெரிக்காவா? யாருமே தொட முடியாத அளவிற்கு இருக்க” என்று வினவினார்! (மன்னிக்கவும், சிவனை விட அமெரிக்கா பெரியதா என்று எனக்குத் தெரியாது? ஆனா, அமெரிக்கா மாதிரியே பெரியண்ணன் பாணியில் நடந்துக் கொண்ட சிவனை என்னச் சொல்லுவது!)

சரி விடுவோம்! சப்ஜெக்ட்டுக்கு வருவோம்! திருப்பரங்குன்றத்தில் தடைச் செய்யப்பட்ட இடத்தில்தான் தீபம் ஏற்றுவோம் என்று மதக் கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு செயல்படும் இந்துத்துவாதிகள் - சங்பரிவார கூட்டங்களின் சித்து வேலைக்கு இந்த ஆண்டும் முற்று புள்ளி வைத்தது நம்முடைய சமயோஜித காவல்துறை.

அதே சமயம் எங்கள் ஊரியில், பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நண்பர் அலி பாஷா, தான் நடத்தி வரும் டியூஷன் சென்டரில் ஒவ்வொரு வருடமும் மக்கள் ஒற்றுமை கார்திகை தீபத்தை நடத்தி வருகிறார். இந்த விழாவில் அந்த பயிலகத்தில் பயிலும் மாணவர்கள் ஜாதி, மதம், இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டு பல வண்ணங்களில் கோலங்களை வரைந்தும், அவைகளுக்கு அழகிய வண்ணங்களை இட்டும், அதேபோன்று மலர்களால் அலங்கரித்தும் 500க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாடுகின்றனர். இந்த காட்சியை பார்க்க வரும் அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கேசரி போன்றவைகளையும் மறக்காமல் வழங்குகின்றனர். வீடுகளில் மட்டுமே தீபத்தை ஏற்றி வைத்ததை இதுவரை கண்டு வந்த எனக்கு ஒரே இடத்தில் இதுபோன்று அதுவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவர்கள் ஈடுபட்ட விழா கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த முயற்சி சிவனின் சித்து விளையாட்டை விட பெரியதாகபட்டது!

5 comments:

மணியன் said...

சிவனின் சித்து விளையாட்டை அறிய சமய ஆய்வு செய்ய வேண்டும். சமயம் இல்லாத நாம் பண்டிகைகளின் பலனாக சமூக நல்லிணக்கத்தைப் பேணுவது நன்மையில் முடியும். அந்த வகையில் தங்கள் நண்பர் அலி பாஷா ஆற்றிவரும் பணி போற்றற்குறியது.
வாழ்த்துக்கள்!!

Anonymous said...

நண்பர் அலி பாஷாவுக்கு வாழ்த்துக்கள்.

சந்திப்பு said...

நன்றி மணியன், அனானி.

Anonymous said...

இங்கன திரியிற வக்கிரங்களை
அலி பாஷா விடம் டியூசனுக்கு
அனுப்ப வேணும்.

மருதநாயகம் said...

//
இங்கன திரியிற வக்கிரங்களை
அலி பாஷா விடம் டியூசனுக்கு
அனுப்ப வேணும்
//

அதுங்களுக்கு யார் டியூஷன் எடுத்தாலும் திருந்தாது