June 21, 2007

அணு குண்டு வெடித்து மகிழ்ந்த அகிம்சாவாதியே கலாம்!

கலாம் மீண்டு(ம்) வருவாரா?
எதிர்கால ஜனாதிபதிக்கான போட்டியில் குதிக்கத் தயாராகி விட்டார் தற்போதைய ஜனாதிபதி கலாம். கலாம் ஒரு சிறந்த விஞ்ஞானி. அதற்கும் மேலாக குழந்தைகளுக்கு இன்னொரு மாமா. தமிழ் ஆர்வலர். கட்ட பிரம்மாச்சாரி. இதுதான் அவருடைய ஒட்டுமொத்த பலம்.
இதையும் தாண்டி கலாமுக்கும் - பொதுவாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? அவருக்கும் அரசியலுக்கும் உள்ள நட்புறவு என்ன? தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் ஏதாவது ஒன்றில் பணியாற்றிய அனுபவம் உண்டா? மேலும் மதச்சார்பற்ற இந்தியாவில் செயல்படும் கட்சிகளின் கொள்கைகள். செயல்பாடுகள் பற்றி அவரது மதிப்பீடு என்ன? என்ற கேள்விகளை இந்த நேரத்தில் முன்வைக்காமல் வேறு சமயத்தில் விவாதிக்க முடியாது?
ஜனாதிபதி பதவி என்பது அரசு - ஆட்சி இவற்றோடு தொடர்புடைய மிக முக்கியமான உயர்ந்த பதவி. இத்தகைய பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதும். யார் பொருத்தமானவர் என்பதும் மிக முக்கியமான ஒரு கேள்வி!
உதாரணமாக இஸ்ரோவின் தலைவராக அம்மா ஜயலலிதாவையோ அல்லது சந்திரபாபு நாயுடுவையோ தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் கலாமின் தேர்வும்!
காந்திய கொள்கைகளை கடைப்பிடிக்கும் கட்ட பிரம்மச்சாரி கலாமை யாருடைய வேட்பாளராக முன்மொழியப்பட்டார். யார் காந்தியை கொன்றார்களோ - ஆர்.எஸ்.எஸ். மதவெறியன் கோட்சேவின் தற்போதைய வாரிசுகளான பா.ஜ.க.வின் வேட்பாளர்தான் கலாம் என்பதை மறப்பதற்கு இல்லை.
இந்திய நாட்டில் மதவெறியைத் தூண்டிவிட்டு பல ஆயிரக்கணக்கான மக்களை உயிர்ப்பலி வாங்கிய இந்து மதவெறி - பாசிஸ்டுகளின் வேட்பாளராகவே கலாம் களம் இறங்கினார். இந்துத்துவ பாசிசம் குறித்து கலாமின் பார்வை என்ன?
மூச்சு 30 தடவை இந்தியா வல்லரசாக வேண்டும் என்றும் முழங்கும் கலாம். இந்து மதவெறி பாசிசம் குறித்து கண்டித்ததுண்டா? இவ்வளவு ஏன் இராமர் பாலம் என்ற பெயரில் பொய்யை பரப்பும் இந்துத்துவ சக்திகளின் சதிச் செயலுக்கு எதிராக இந்த சுத்து சுயம்புவான விஞ்ஞானியின் பதில் என்ன? அது வெறும் மணல் மேடு என்று கூறுவாரா? அல்லது இராமர் பாலம்தான் என்று முழங்குவாரா?
இந்தியாவில் 32 கோடி பேர் கடுமையான வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்துக் கொண்டிருக்கையில் - தங்களது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் பா.ஜ.க. ஆட்சியில் அணு குண்டு வெடித்து மகிழ்ந்த அகிம்சாவாதியே கலாம்! என்ன இந்தியா வல்லரசாகி விட்டதா?
இந்தியா 2020 என்று கனா காணும் கலாம். இந்தியாவுக்கு இரு கட்சி ஆட்சி முறை வேண்டும் என்று கூறி தற்போதைய ஜனநாயக வடிவத்தை கேலிக்கூலித்தாக்கும் இவர் அரசியல் கடமையை நிறைவேற்றும் உயர் பொறுப்புக்கு பொருந்துவாரா?
நாள்தோறும் வல்லரசு கூச்சல் போடும் இவர் 30 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைத்திட என்ன செய்தார்? இவரது வல்லரசு கனவுகள் எல்லாம் கார்ப்பரேட்டுகளின் - பெரும் நிறுவனங்கள் கனவுதானேயொழி சாதாரண குடிமகனின் கனவல்ல!
தற்போது நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறது. தன்னுடைய வேட்பாளர் இவர்தான் என்று உறுதியாக கூறுவதற்கு மாறாக இழிவான செயலில் இறங்கியிருக்கிறது. ஒரு கொள்கை போட்டியைக் கூட நடத்த முடியாத கேடுகெட்ட நிலையில் இருக்கிறது பா.ஜ.க. மற்றும் ஜோக்கர் கூட்டணி. (ஜயலலிதா - சந்திரபாபு கூட்டணி). எப்படி சிவாஜி பற்றி பிரம்மை உருவாக்கி வியாபாரம் நடைபெறுகிறதோ அதேபோல்தான் கலாம் பற்றிய பிரம்மை உருவாக்கப்படுகிறது.
எனவேதான் இடதுசாரிகள் மிகத் தெளிவாக கூறிய கருத்து இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர் அரசியல் பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும். மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். பொதுவாழ்வில் தூய்மையானவராக இருக்க வேண்டும். இத்தகைய அம்சங்களை ஒருங்கே கொண்டிருப்பவர்தான் திருமதி பிரதீபா பாட்டில்.
கலாமின் கனவு கரையேறுமா? கரையொதுங்குமா? என கேள்வி எழுப்புவது பொறுத்தமாக இருக்காது. கலாமின் கனவு கலைய வேண்டும் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
இது தொடர்பான மற்ற பதிவுகள்:

20 comments:

Anonymous said...

அரை வேக்காட்டுத்தனாமா விவாதம் பண்றதுன்னா இதுதான்.

அப்போ வீட்லே அடுப்பெறிக்கரவங்களெல்லாம் தீவிரவாதியா?

துப்பாக்கி வச்சுக்கிட்டு இருக்கிற ராணுவமும், போலீசும் பிரிவினை வாதியா?

ஜனாதிபதவிக்கு எதுக்கு அரசியல்? அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிதானே அது?

கொள்ளையடிக்கிறவனுக்கு கூட்டு போறவனத்தானே தேர்ந்தெடுப்பீங்க.

சந்திப்பு said...

அனானி வானத்திற்கு கீழே உள்ள எதுவும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. அனைத்திற்கும் அரசியல்தான் அடிப்படை. இங்கே பிரச்சினை என்னவென்றால் அரசியலுக்கு நீங்கள் உட்படுவது அல்ல. இந்தியா என்பது 120 கோடி மக்கள் கொண்ட பலதரப்பட்ட கலாச்சாரம். மொழி. இனம். பல வர்க்கங்கள் கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எழுந்துள்ள அரசியல் சிக்கல்கள். எதிர்காலத்தில் இந்தியா செல்ல வேண்டிய பாதை போன்றவற்றை தீர்மானிக்க வேண்டியுள்ளது. எனவே இதற்கு அடிப்படையான அரசியல் பார்வை இல்லை யென்றால் பொம்மலாட்டம் ஆட வேண்டியதுதான். நரு நல்லவரை தேர்ந்தெடுப்பது என்பதல்ல பிரச்சினை. ஒரு வல்லவரை தேர்ந்தெடுக்க வேண்டும். கலாம் பா.ஜ.க. எனும் மதவெறிச் சக்திகளின் அரசியல் ஏவுகணை என்பதை அவரே கூட உணராதவர். எனவேதான் இத்தகைய பொறுப்புக்கு கலாம் போன்ற அப்பழுக்கற்ற அரசியலற்றவர்கள் பொருந்த மாட்டார்கள். ஜனாதிபதி பதவி என்பது அரசியல் முடிவு எடுக்க வேண்டிய ஒரு உயர்ந்த பாடி என்பதை அனானி மறக்காமல் இருந்தால் சரி.


இறுதியாக கடந்த முறை ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணன் அனைத்து தரப்பாலும் இரண்டாவது முறை முன்மொழிந்த போது பா.ஜ.க. அவரை ஏற்றுக் கொள்ள வில்லை. அதற்கு ஒரே காரணம். அவர்களது மதவெறி அரசியலுக்கு அவர் துணை போக மாட்டார் என்பதுதான். கலாம் பா.ஜ..கவின் கைப்பாவை.

Anonymous said...

//கலாம் பா.ஜ.க. எனும் மதவெறிச் சக்திகளின் அரசியல் ஏவுகணை என்பதை அவரே கூட உணராதவர். ///

சரியான கருத்து!
பீகார் ச.பேரவையை கலைக்க கண்மூடி கையெழுத்திட்டவர், குஜராத் பற்றி பலவீனமாகவும் குரலெழுப்பவில்லை.

அவருக்கு விஞ்ஞானம் கல்வி, பயிற்சி, இராணுவ விஞ்ஞானஆலோசனை நன்றாகத்தெரியும். ஆதலால் அதனை அதனால் அவர் நன்கு செய்வார் என்றாய்ந்து அதனை மட்டும் அவரிடம் விடுவோம்.

முத்து

Anonymous said...

One cannot expect sane arguments from a left lunatic like you.Time and again you are proving it.

Kalam was supported by Congress also apart from NDA.Your present allies supported him last time and left fielded Lakshmi Shegal.Left and Congress want a puppet as president as the outcome of 2009
elections is likely to be against
congress led UPA.Prathibha is well
suited for that. Kalam was a scientist since 1960s. He had no
personal agenda and executed the agenda of the government of the day.To potray him as a puppet of BJP is nonsense.He retuned the POTA bill and only later it was
passed.

இந்தியாவில் 32 கோடி பேர் கடுமையான வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்துக் கொண்டிருக்கையில் - தங்களது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் பா.ஜ.க. ஆட்சியில் அணு குண்டு வெடித்து மகிழ்ந்த அகிம்சாவாதியே கலாம்! என்ன இந்தியா வல்லரசாகி விட்டதா?

Your ignorance is amazing.The move to produce and test a bomb was made during the congress rule.
Successive PMs supported it but
were reluctant to publicly test
it.In fact the technical capability was available during
the rule of Naramsimha Rao.
BJP ignited the fuse.So you
should blame congress also.
But left has tied itself to the
apron strings of Sonia.
If China can equip itself with all sorts of weapons and missiles what is wrong if India also equips itself. Left never objects to China emerging as a military super power but want to stop India from equipping itself for self-defense. They are more loyal to China than
India.

kumaresan said...

அரசியல் என்பதை அருவருக்கத்தக்க விசயமாகக் கருத வைத்து மக்களை ஒரு இருளில் கிடத்தி வைக்க விரும்புது உலக நிதி மூலதனம். அதற்கான ஒரு லேபிள் போல் கிடைத்தவர்தான் அப்துல் கலாம். தனது இஸ்லாமியப் பெயரை பாரதிய ஜனதா கட்சிக்கு வியாபாரம் செய்து அவர்களது முகமூடிக்குப் பசை தடவ உதவியவர்.
மதவெறியர்களை மருந்துக்கும் விமர்சிக்காதவர். தொழில் நுட்பம் கனவு என்றெல்லாம் பிரமைகளை விதைத்து வளரும் தலைமுறைகளை சமூகக் கவலைகள் அற்றவர்களாகத் திசை திருப்ப முயன்றவர். அதன் மூலம் சுரண்டல் கூட்டத்தின் கொள்ளைகலில் இருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப உததவியவர். ராமர் பால மோசடியைக் கண்டிக்காத அறிவியல் மேதை.

இவரைப்பற்றி சிவாஜி-ரஜினிக்கு ஈடாகக் கிளப்பட்டுள்ள மாயத்தோற்றங்களை உடைத்தாக வேண்டும். நீங்கள் எழுதியது போன்ற கட்டுரைகள் நிறைய வரவேண்டும். அந்த மாயத்தோற்றங்களைக் கலைத்துக் காட்டும் கட்டுரைகளை பெரும் ஊடக ஏகபோகங்கள் வெளியிட மாட்டார்கள். எனவே எந்தெந்த வழிகளில் முடியுமோ அந்தந்த வழிகளில் - பிளாக் ஏடு போன்ற முயற்சிகள் உட்பட - விரிவாகச் செய்திட வேண்டும்.

பாராட்டுக்கள்.

அ.குமரேசன்
22-38 21-6-2007

Anonymous said...

In my view, the best choice for president is Mr.Cho. He is very patoritic and has the courage to make decisions in difficult situations. I don't know if he would ever win, if he ran, but he deifnitely deserves that title.

Anonymous said...

ahaha..man o man.....had a good laugh!
Thank you...

Anonymous said...

//They are more loyal to China than
India.//100% Truth

சீனு said...

//அரை வேக்காட்டுத்தனாமா விவாதம் பண்றதுன்னா இதுதான்.//

அதே தான்.

சந்திப்பு said...

அனானி உங்கள் கருத்தை கொஞ்சம் தலைகீழாக புரட்டிப் போட்டால் உண்மை என்னவென்று விளங்கும்.

சீனாவின் வளர்ச்சியை கண்டும். எதிர்காலத்தில் உலகில் பலம் பொருந்திய சக்தியாக சீனா மாறுவதைக் கண்டு அலறும் அமெரிக்கா இந்தியாவை நல்ல பார்ட்னராக நம்புகிறது. இது இந்தியாவை சீனாவிற்கு எதிராக நிறுத்தும் முயற்சி. நம்மைப் பொறுத்தவரை இந்தியாவும் - சீனாவும் இணைந்து நின்றால் அமெரிக்காவை ஊதி தள்ளி விடலாம். நீங்கள் ரெடியா?

சீனு சூப்பருங்க...

Anonymous said...

சீனு மாதிரியான மொத்தைங்களுக்கெல்லாம் அரசியல் ஏதாவது தெரியுமா? கும்பலோட கோவிந்தா போட தான் இவனுங்க லாயக்கு?

ஒளி said...

அய்யா சந்தி(த)ப்பு அவர்களே
உங்க ஆசைப்படி அம்மா பிரதீபா பாட்டீல் முதல் குடிமகளாவதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லைங்கய்யா, அதற்காக 49 வருசம் தன்னுடைய வாழ்க்கைய நாட்டுக்காக செலவிட்ட நம்ம விஞ்ஞானிய, அவரு முழுநேர அரசியல்வாதி இல்லைங்கற ஒரே காரணுத்துக்காக அவர தப்பா பேசாதீங்கய்யா. நம்ம நாட்டு ஜனாதிபதி ஆவனும்னா நாட்டுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிற ஒரு நல்ல குடிமகனா இருந்தா போதும்யா மற்றது எல்லாம் தானா வரும்யா. காசுக்காக தேசத்துரோகம் செய்யற கீழ்தரமான "அரசியல்" அறிவுள்ள அரசியல்வாதியவிட நம்ம அய்யா தங்கம்யா. அப்புறம் ஏதோ சொன்னீங்களே "பாஜக ஆட்சியில் அணுகுண்டு வெடித்து மகிழ்ந்த அகிம்சாவாதி"ன்னு, அவரு அணுகுண்டு வெடிச்சு யாரையும் கொலை பண்ணலீங்கய்யா, நம்ம நாட்டு பாதுகாப்புக்காக நம்ம விஞ்ஞானிங்க எல்லாரும் சேர்ந்துதான்யா செய்தாங்க. நீங்க சொல்ரபடி பாத்தா அணுகுண்டு சோதனை நடத்துற நாட்டுக்கு முதல்குடிமகனாக இருக்கறது தப்பாய்யா? அப்படீன்னா எல்லைல இருக்கிற நம்ம ராணுவ வீரர்களுக்கெல்லாம் வாளும் கேடயமும்தான்யா கொடுக்கனும். அய்யா எனக்கு ஒரு சந்தெகம் உங்களுக்கு பாஜக மீது கோபமா? அல்லது நம்ம அப்துல கலாம் அய்யா மீது கோபமா? அல்லது முஸ்லிம்கள் மீது கோபமா? நான் ஏன் கேட்கிரேன்னா, நீங்க ஆஹா ஓஹோன்னு சொல்ற அந்த அம்மா சமீபத்தில் "முஸ்லிம் பெண்கள் மட்டுமே அணியக்கூடிய பர்தாவை ஒளித்துக்கட்டவேண்டும்னு சொல்லி” எல்லாருக்கும் அதிர்ச்சி கொடுத்தாங்களே, அத மட்டும் சொல்லாம விட்டுட்டீங்களேய்யா. நீங்க அரசியலை தலைகீழாக கரைத்துக்குடித்தவர்னு சொன்ன அந்த அம்மா “முகலாயர்களிடம் இருந்து இந்திய பெண்களை பாதுகாப்பதற்குத்தான் பர்தா அணியும் பழக்கம் ஏர்படுதப்பட்டதுன்னு” சொல்றதப்பார்த்தா அவங்க இந்திய வரலாறு சரியா படிக்கலையோன்னு சின்ன சந்தேகமுங்கைய்யா.ஆனா சங்பரிவாரின் திரிக்கப்பட்ட வரலாறு நல்லாவே படிச்சிருக்காங்க. அரசியல்ல கத்துக்குட்டீன்னு நீங்க சொல்ற நம்ம அப்துல் கலாம் அய்யாகூட இப்படி எந்த ஒரு அறிக்கையும் விடலீங்கய்யா. கடைசியா ஒன்னு சொல்ரேங்கய்யா, நம்ம அப்துல் கலாம் அய்யா இந்திய ஜனாதிபதி ஆகறுதுக்கு பிரதீபா பாட்டீலுக்கு எந்த விதத்துலயும் குறஞ்சவரு இல்லீங்கய்யோவ்!!

சந்திப்பு said...

மாயக்கண்ணாடி. நீங்கள் மாயக்கண்ணாடி அல்ல நிலைக்கண்ணாடி - காலக்கண்ணாடி. நன்றாக தங்கள் உணர்வுகளை பிரதிபலித்துள்ளீர்கள். உங்களது உணர்வுகளை முழுமையாக ஏற்கிறேன். நம்முடைய விஞ்ஞானி அப்துல் கலாம் மீது எந்தவிதமான கோபமோ. தாபமோ இல்லவே இல்லை. அவரது சேவையை முழுமனதோடு ஏற்கிறேன். அவரது விஞ்ஞானத்துறையில் அவர்தான் ஜனாதிபதி. அவரது சேவை மேலும். மேலும் நாட்டுக்குத் தேவை. அதே சமயம் ஒரு விஞ்ஞானிக்கு சேதத்தைப் பற்றிய கண்ணோட்டமும். அரசியலைப் பற்றிய புரிதலும் இல்லாமல் போனால் அவரது விஞ்ஞானம் இந்த உலகிற்கு பயன்படவே படாது. வாய்ப்பிருந்தால் நீங்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டினீன் வரலாற்றை படித்துப் பாருங்கள். அதிலும் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாரு:ஙகள். விஞ்ஞானிகளுக்கு எல்லாம் தலைமகனாக திகழும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இட்லரின் பாசிச அபாயமத்தால் எத்தகைய துன்பத்திற்கும் - இன்னலுக்கும் ஆளானார் என்பதை அவரது இளமைக் காலம் தொட்டு உணர முடியும். பா.ஜ.க. தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக கலாமை இந்த பதவியில் அமர்த்தியது. தற்போதும் இத்தகைய சாணக்கியத்தனத்தை அரங்கேற்றுகிறது. இதற்கு கலாம் இறையாகக்கூடாது என்பதுதான் நம்முடைய தாழ்மையான வேண்டுகோள். மற்றபடி கலாம் ஒரு சிறந்த முன்னுதாரணமான மனிதர் என்பதில் எள் அளவும் மாற்றுக் கருத்து இல்லை. அவரது அரசியல் பார்வையைத் தவிர. இது பாசிச தந்திரத்திற்கு பலியாகும் அரசியலாக இருப்பதால் மட்டுமே நான் இதனை எதிர்க்கிறேன். மற்றபடி தங்களது உணர்வோடு ஒன்றிள நிற்கிறேன். வாழ்த்துக்கள்.

சந்திப்பு said...

மாயக்கண்ணாடி - அடுத்து நீங்கள் கேட்ட பிரதீபா பாட்டிலின் பர்தா விசயம் குறித்து:

பர்தாவைப் பொறுத்தவரை இசுலாமிய பெண்ணடிமைத்தனத்தின் ஒரு பகுதிதான் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. ஏன் தற்போது கூட இசுலாமிய அடிப்படைவாதிகள் தங்கள் பெண்களை முழு முகத்தை மறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதோடு அவர்கள் டி.வி. - சினிமா கூட பார்க்கக் கூடாது வெறும் பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார்கள்.

மேலும் பர்தாவின் வரலாறு இதுதான் என்று வரலாற்று அடித்தளத்தை தேட ஆரம்பித்தால் அதற்கு ஏராளமான கதைகள் கூடவே வரும். உதாரணமாக அரபு நாடுகளில் மண் புழுதிகளில் இருந்து தங்களை காப்பதற்ககாகத்தான் பர்தா என ஒரு கதை இருக்கிறது. எனவே அதில் நம்முடைய வராலற்று ஆராய்ச்சியை செலுத்த வேண்டாம். திருமதி பிரதீபா பாட்டிலின் வெளிப்பாடு என்பது இசுலாமிய பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு உண்டு? தற்போது இசுலாமிய ஆட்சி எதுவும் இந்தியாவில் இல்லை எனவே உங்களுக்கு பர்தா தேவையில்லை என்று கூறுகிறார். அவர் முக்காடு அணிந்திருப்பது ஒரு எதிர்மறை! அவர் ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு எதிர் கருத்துக்கள் தெரிவிப்பதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அப்துல்கலாமை கம்யூனிஸ்டுகள் ஏன் ஏற்கவில்லை? கம்யூனிஸ்டுகள் குலுக்கும் உண்டியில் துட்டு போடவில்லை என்பதாலா? இல்லை மேற்கு வங்க நந்திகிராமத்தில் கம்யூனிஸ்டுகள் செய்த அக்கிரமத்துக்கு துணைபோகவில்லை என்பதாலா? கேரளாவில் பாலியல் குற்றங்கள் செய்த கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு விளக்கு பிடிக்காததாலா?

கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் சாபக்கேடுகள்!

சந்திப்பு said...

உண்மைத் தமிழன்(15270788164745573644)

சாட்சாட் அரசியல் காரணம்தான். ஆனால் நீங்கள் கூறியிருக்கிற காரணங்கள் அல்ல.

கம்யூனிஸ்டுகள் வங்கிகளில் கொள்ளையடிப்பவர்கள் அல்ல. அல்லது வழிபறி செய்து பிழைப்பவர்களும் அல்ல. நாங்கள் உண்டி ஏந்துவது கலாம்களை நம்பியல்ல. உங்களைப் போன்ற உழைப்பாளிகளை நம்பித்தான் நன்பரே!

நந்திகிராம் கலவரத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் அல்ல; கம்யூனிசம் பேசும் நக்சலி பயங்கரவாதிகளும் - மமதாவும்தான்.

கம்யூனிஸ்டுகளை சாபக்கேடாக நினைத்தவர்கள் எல்லோரும் பாசிசத்திற்கு பலிகடாவாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சமீபத்தில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் 5 பேர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஜெயா டிவியின் உலக செய்திகளில் காட்டியதை மறுக்க முடியுமா?

கம்யூனிஸ்டுகள் இங்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் கொள்ளைகாரர்களாகவே இருக்கிறார்கள். என்ன இங்கே உண்டியல் ஏந்துகிறார்கள். அங்கே துப்பாக்கி ஏந்துகிறார்கள்.

நான் 1987ல் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அந்த நிறுவனம் நன்றாக நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்கள் சந்தோஷமாக வேலை பார்த்தோம். கம்யூனிஸ்டு இயக்கம் ஒன்று உள்ளே நுழைந்து தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைத்து அந்த கம்பெனியையே மூடிவிட்டது.

கம்யூனிஸ்டுகளில் லட்சணம் இதுதான். உலகின் உண்மையான பாசிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள்.

Anonymous said...

சீனாவின் வளர்ச்சியை கண்டும். எதிர்காலத்தில் உலகில் பலம் பொருந்திய சக்தியாக சீனா மாறுவதைக் கண்டு அலறும் அமெரிக்கா இந்தியாவை நல்ல பார்ட்னராக நம்புகிறது. இது இந்தியாவை சீனாவிற்கு எதிராக நிறுத்தும் முயற்சி. நம்மைப் பொறுத்தவரை இந்தியாவும் - சீனாவும் இணைந்து நின்றால் அமெரிக்காவை ஊதி தள்ளி விடலாம். நீங்கள் ரெடியா?

China is clainming Arunachal
Pradesh is part of China.
In 1962 a section of the
commies in india supported
China when there was Ind-China
war. Why should we join hands
with China, that too against
USA.It amounts to suicide.

Anonymous said...

கலாம் ஐயர் என்று தான் அழைக்கப்படுவதை பெருமையாக கருதும் திரு.அப்துல் கலாம் ஒரு மதச்சார்ப்பற்றவர் என்று நினைக்க எந்த காரணமும் இருக்க முடியாது. இவர் தான் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இன்னும் அறிவிக்காதது அவர் மேல் இருக்கும் மதிப்பை அவரே குறைத்து கொள்வதாக இருக்கிறது

ஒளி said...

அய்யா சந்திப்பு அவர்களே
நீங்கள் பர்தா அணிவது இஸ்லாமிய பெண்ணடிமைத்தனத்தின் ஒரு பகுதி என்று கூறுவது, இஸ்லாத்தைப் பற்றியும், பர்தாவை பற்றியும் உங்கள் அறியாமையைத்தான் காட்டுகிறது. முஸ்லிம் பெண்களின் அடக்குமுறைகளைப் பற்றி கவலைப்படுகின்ற அனைவரும் இஸ்லாத்தைப் பற்றியும் அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும், கண்ணியத்தைப்பற்றியும் ஒன்றுமே அறியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.இதில் நீங்கள் விதிவிலக்கல்ல.
முஸ்லிம் பெண்கள் கண்ணியமாக உடை உடுத்தவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.அதாவது தங்களுடைய உடலை மறைத்து பிறருடைய கவனத்தை ஈர்க்காதவாறு உடையணிய வேன்டும். அத்தகைய கண்ணியத்தை பர்தா கொடுக்கிறது.எனவே முஸ்லிம் பெண் கண்ணியத்திற்க்காக மட்டுமே பர்தா அணிகிறாள்.
இன்னும் சொல்லப்போனால் மற்ற மதங்களைவிட இஸ்லாம் பெண்களுக்கு ஆன்மீகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகராக எல்லா உரிமைகளையும் தந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உலகளவில் மதம், மொழி, இனம், கலாச்சாரத்திற்க்கு அப்பாற்பட்ட பிரச்சினையாக இருக்கும்பட்சத்தில், பர்தாவிற்க்கு மட்டும் ஏன் மதச்சாயம் பூசி நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டும் என்று தெரியவில்லை.