June 15, 2007

சென்னை ஐ.ஐ.டி.யில் தொடரும் வர்ணாசிரம அதர்மம்


மத்திய அரசு நிதியில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் வடக்கில் தலித்துகள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்பது அநேகமாக அனை வரும் அறிந்த உண்மை. ஆனால், இட ஒதுக்கீட் டுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்ற தமிழகத் தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.-யிலும் தலித்துகள் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் மிகவும் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதை இவ்வார ‘டெகல்கா’ வார இதழ் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர் களில் தலித்துகள் 11.9 சதவீதத்தினர் மட்டுமே யாவர். உயர்கல்வி பயில்வோரில் இந்த சதவீதம் இன்னும் குறைவாகும். உதாரணமாக எம்.எஸ். (ஆய்வு) மாணவர்களில் 2.3 சதவீதமும், பி.எச்டி. மாணவர்களில் 5.89 சதவீதமுமே தலித்துகளாவர். மொத்தம் இந்நிறுவனத்தில் பயிலும் 4687 மாண வர்களில் 559 பேர்கள் மட்டுமே - அதாவது 8.3 சதவீதத்தினரே - தலித்துகள் ஆவார்கள். சுமார் 250 ஹெக்டேர் நிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இக்கல்வி நிறுவனத்தின் துறை களில் ஆசிரியர்களும் மாணவர்களும் பிரா மணர்களே ஆவார்கள். தலித்துகளின் உரிமைக ளுக்காகக் கடுமையாகப் போராடுபவரும் இந் நிறுவனத்தில் கணிதத்துறையில் உதவிப் பேரா சிரியராகப் பணியாற்றுபவருமான வசந்தா கந்த சாமி என்பவர், இங்குள்ள அனைத்துத்துறைகளி லும் பணியாற்றும் ஆசிரியர்களில் வெறும் நால்வர் மட்டுமே தலித்துகள் என்றும், இது மொத்த எண் ணிக்கையில் 0.86 சதவீதம் மட்டுமே என்றும் கூறுகிறார்.
அதேபோன்று பி.எச்டி. பட்டத்திற்குப் பதிவு செய் யப்பட்டுள்ள தலித் மாணவர்கள் மிகவும் கொடு மையாக நடத்தப்படுவதாகவும் வசந்தா கூறுகிறார். ஆராய்ச்சிப் படிப்பை அவர்கள் தொடர்ந்து கொண் டிருக்கும் போது திடீரென்று இடைநிலையில் ஆராய்ச்சிப் பாடத்தின் தலைப்பை மாற்றக் கட் டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களை ஒழுங்காக முடிக்க விடுவதில்லை என்றும், எழுத் துத் தேர்வுகள் மற்றும் வாய்மொழித் தேர்வுகளி லும் அவர்களைத் தோல்வியடையச் செய்து விடு கிறார்கள். தலித் மாணவர்களைப் பொறுத்தவரைக் கும் ஐஐடி சூழல் மிகக் கொடுமையானதாகும் என்று வசந்தா மேலும் கூறுகிறார். இவ்வாறு வசந்தா தலித் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதால் நிர்வாகத்திற்கு அவரைப் பார்த்தாலே கசப்பாக இருக்கிறது.
எனவேதான் கடந்த பதினேழு ஆண்டுகளாக எவ் வித பதவி உயர்வும் இன்றி உதவிப் பேராசிரிய ராகவே அவர் உழன்று வருகிறார். சர்வதேச அள வில் அவர் பல சாதனைகளைப் படைத்திருந்த போதிலும், அவர் இதுவரை 640 ஆய்வுத் தாள்களை வெளியிட்டிருந்தபோதிலும் அதுபற்றியெல்லாம் நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. சுஜி தெப்பால் என்ற ஒரு மாணவி. இண்டர் மீடியட் தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதி யியல் பாடங்களில் 94 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ராஞ்சியில் உள்ள பிட்ஸ் நிறுவனத்திலும், பிலானி யில் உள்ள பிட்ஸ் நிறுவனத்திலும் கூட இவருக்கு இடம் கிடைத்தது. ஆயினும் இவர் சென்னை ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்ததால் அங்கு மட்டும் விண்ணப் பித்தார்.
ஆயினும் அவர் அந்த அளவிற்கு மதிப் பெண்களைப் பெற்றிருந்தும், அவர் தலித் என் பதால், தலித் மாணவர்களுக்கான “முற்பயிற்சி வகுப்பில்” (“யீசநயீயசயவடிசல உடிரசளந”) சேர்ந்து ஓராண்டு படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டார். பயிற்சியின் முடிவில் வைக்கப்பட்ட தேர்வில் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக் கப்பட்டிருக்கிறார். என்னே கொடுமை!ஐஐடி இயக்குநரான எம்.எஸ். ஆனந்த் ஒரு பிராமணர் என்றும் ஐஐடி-யில் துறைகளுக்கான தலைவர்களைத் தேர்வு செய்யும்போது தன் சொந்த சாதியிலிருந்தே தேர்வு செய்வார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. அன்பரசு குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்நிறுவனத் தின் மொத்தம் உள்ள ஆறு முதல்வர்களில் நால்வர் பிராமணர்கள் என்றும் அனைத்து விதி முறைகளையும் மீறி இவ்வாறு ஆனந்த் இவர்களை நியமனம் செய்திருக்கிறார் என்றும் அன்பரசு குற் றச்சாட்டில் மேலும் குறிப்பிட்டிருக்கிறார். தன் குற் றச்சாட்டை மத்திய மனிதவள அமைச்சர் அர் ஜூன் சிங்கை சந்தித்தபோது இரா.அன்பரசு தெரி வித்திருக்கிறார். அர்ஜூன் சிங் கும் இது குறித்து புலனாய்வுக்கு உத்தரவிடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால் எதுவுமே நடைபெற வில்லை.அன்பரசு குற்றச்சாட்டு குறித்து என்ன சொல் கிறீர்கள் என்று கேட்பதற்காக ‘டெகல்கா’ நிருபர் எம்.எஸ்.ஆனந்தையும் அவரது செயலாளரையும் சந்திக்க முயற் சித்திருக்கிறார். ஆயினும், இவை குறித்து கருத்துக் கூற இயக்குநர் கிடைக்க வில்லை என்று செயலாளர், நிருபரிடம் தெரிவித் துள்ளார்.


-ச. வீரமணி


9 comments:

டண்டணக்கா said...

Frustrating news to read, should be a hell to the ones going through this discrimination. IIT's need to reformed for diversity, the sooner the better. Unfortunaetly, cases like these justifies the violence sometimes. Ashamed it's happening in my state.

Anonymous said...

69% இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில், அதை 70% ஆக்க வேண்டும் என்கிறது உங்கள் கட்சி. ஜாதி அடிப்படையில் இப்படி கல்வி,வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகளை மறுப்பதா மார்க்சியம். ஐஐடியைக் குறை கூறுபவர்கள் தமிழக பல்கலைகழகங்களில் ஒபிசி ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதை குறித்து வாயைப் திறப்பதில்லை. ஒபிசி,முஸ்லீம் ஜால்ராக் கட்சி சிபிஎம் அங்கெல்லாம் தலித்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக செய்யப்படுகிறதா என்பதை முதலில் ஆராயட்டும்.
பார்பனர்களுக்கு தமிழக பல்கலைகழகங்களில் உயர் படிப்பு, வேலை மறுக்கப்படும் போது அவர்கள்
ஐஐடி போன்றவற்றை நாடுவது இயற்கை. ஐஐடிகளில் இந்தியர் யார் வேண்டுமானாலும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.ஐஐடி சென்னையில் தமிழர் அல்லதோரும் இருக்கின்றனர். ஐஐடி குறித்த போலி புகார்களை,வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரித்து அங்கு நடப்பது சரியில்லை என்று சொல்லட்டும். மேற்கு வங்கத்தில் கட்சி அரசியலை புகுத்தி உயர்கல்வி நிலையங்களை குட்டிச்சுவராக்கிய பெருமை இடதுகளைச் சாரும்.தமிழ் நாட்டில் நிலவும் சாதி அரசியலுக்கு
துணை போகும் இடதுகள் ஐஐடி போன்றவற்றில் அந்த அரசியல் செய்ய முடியாது என்பதால்
எரிச்சல் அடைகின்றனர்.அங்கு மாணவர்கள், ஆசிரியரைகளை வைத்து தொழிறசங்கப் பிழைப்பு நடத்த முடியாத ஆத்திரத்தில் ஐஐடியை தூற்றுவோருடன் கை கோர்க்கின்றனர். ஜுவியில்,ரிப்போட்ட்ரில் தமிழக பல்கலைகழகங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றி எழுதுவதெல்லாம்
தீக்கதிருக்குத் தெரியதோ. சிபிம் இன்னொரு பார்ப்பன எதிர்ப்புக் கட்சி என்பதைத் தான் இந்தக்
கட்டுரை காட்டுகிறது. மதவாத அமைப்புகள், சாதிக்கட்சிகளுடன் கை கோர்த்துக் கொண்டிருக்கும் சிபிஎம் மின் நாளிதழ் வேறு எப்படி எழுதும்.

சந்திப்பு said...

டண்டணக்கா தங்களது நியாயமான உணர்வுகளை சமூகத்தில் பதட்டமும் கொந்தளிப்பும் ஏற்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளீர்கள். மிகச் சரியானது. சமூகத்தின் முக்கிய துறைகளில் இன்னமும் ஜாதிய மேலாதிக்கம் நிலவுவதை ஏற்க முடியாது. நன்றி.

சந்திப்பு said...

அனானி தங்களது கோபம் இருக்கும் அளவிற்கு சமூகத்தை புரிந்து கொள்ளாத தன்மையைக் கண்டு நகைப்புத்தான் வருகிறது. 3000 ஆண்டுகளாக இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களான தலித்துக்களை அடிமைகளை விட கேவலமானவர்களாக தீண்டத்தகாதவர்களாக மாற்றியதோடு அவர்களை கல்வியிலும். வேலைவாய்பிலும் பின்னுக்குத் தள்ளிய ஜாதிய சமூகத்தில் இன்னும் சமத்தன்மை ஏற்படவில்லை. அத்தகைய சமத்தன்மைக்கான ஒரு சிறிய வாய்ப்புதான் இடஒதுக்கீடு. நீங்கள் அதனையும் தட்டிப் பறிக்க வேண்டும் என்று விரும்புவது ஆதிக்க மனோபாவத்தைத்தான் காட்டுகிறது. மேலும் இடஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநில அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும். அது தேவைக்கேற்ப இருக்க வேண்டும். அடுத்து ஓ.பி.சி.க்கள் பல்கலைக்கழகங்களில் தலித்துக்களை மேம்படுத்தி விட்டார்களா என்று கேள்வி எழுப்பினால் போதாது? ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று நீங்களே ஆராய்ந்து சமூகத்திற்கு வெளிப்படுத்தலாம் அதுதான் நீங்கள் செய்யும் சிறந்த சேவை. அதை விட்டு விட்டு புலம்புவதும் பிரச்சினையை திசை திருப்புவதும் புத்திசாலித்தனமல்ல.

ஐ.ஐ.டி.யில் நடக்கும் அநியாயத்தை அதற்குள்ளே பணிபுரியும் பேராசிரியர் வசந்தாதான் வெளிப்படுத்துகிறார். எனவே கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை நன்பரே!


தொழிற்சங்கத்தை வைத்து பிழைப்பு நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அது சுயநல பிழைப்பை மட்டுமே எண்ணியிருக்கம் உங்களைப் போன்றவர்களின் பிதற்றல். மேலும் சி.பி.எம். எந்த சாதிக்கும் எதிரான கட்சியும் அல்ல.

ஆனால் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிரான கட்சிதான் என்பதை உறுதியாக கூலிக் கொள்கிறேன்.

தவறான கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேற என்ன செய்யலாம் என்ற எண்ணமாவது தோன்றும்.

Anonymous said...

When hindutva fascists write in Thinnai against entry of other religion members, should not you write something against it?http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706072&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706142&format=html

Anonymous said...

முஸ்லீம்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை தர வேண்டும், வங்கி கடனின் 15% முஸ்லீம்களுக்குத் தர வேண்டும், அனைத்து முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும், அரசு வேலைகளில் அவர்களுக்கு அதிக இடம் வேண்டும் - இப்படிச் சொல்லும் மார்க்சிச்ட் கட்சி எப்படி மத சார்பற்ற கட்சியாகும். அது பிழைப்புவாத ஒட்டுக் கட்சி, போலி மதசார்ப்பின்மைக் கட்சி

Anonymous said...

Marxist fascists will oppose it and will support muslim fascists and fundamentalists.They shed copiuos tear for Saddam when Iraqi communist party welcomed his execution.

சந்திப்பு said...

அனானி ராஜிந்தர் சச்சார் கமிட்டி அறிக்கை இந்திய இசுலாமியர்களின் நிலை குறித்து தெளிவாக விளக்கியுள்ளது. தயவு செய்து அவற்றை தேடிப் படிக்கவும். இந்திய நாட்டில் பிற்நது இந்தியனாக இருக்கும் இசுலாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற தங்களது சிந்தனை இன்னொரு பாகிசுதானை உருவாக்குவதற்குதான் பயன்படும். இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு அனைத்து விதத்திலும் பாதுகாப்பு தரவேண்டியது அடிப்படையானது. முதன்மையானது. இந்தக் கடமையில் இருந்து தவறுவது தற்கொலைக்கு ஒப்பானது. அதே போல் இசுலாமிய மதஅடிப்படைவாதத்தை சி.பி.எம். ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. மதவெறி எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அதனை வலுவாக எதிர்த்திட வேண்டும். இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. மேலும் இந்திய பாசிசம் என்பது இந்துத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே இயங்கி வருகிறது. இதுதான் சிறுபான்மை மக்களை அயலானைப் போல் பாவிக்கிறது. இந்தியாவில் நீடிக்கும் மொத்த முரண்பாடுகளுக்கும் அடிப்படை காரணம் இந்துத்தவ சக்திகளே.

Anonymous said...

முஸ்லீம்களுக்கு இந்தியாவில் என்ன உரிமைகள் இல்லை,அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக யாரும் நடத்தவில்லை.ஏழைகள் எல்லா மதத்திலும்தான் இருக்கிறார்கள். ஒரு இந்து எழைக்கு கடன் கொடுக்காதே, அதைவிட பணக்கார முஸ்லிமிற்கு கொடு என்றுதானே நீங்கள் சொல்கிறீர்கள். முஸ்லீம்கள் குடும்பக் கட்டுப்பாட்டினை ஏற்கமாட்டார்கள், பெண்களுக்கு உரிமைகள் தரமாட்டார்கள், மக்கள் தொகையைக் கூட்டுவார்கள்.அப்புறம் எண்ணிகையை வைத்து சலுகைகள் கேட்பார்கள். சச்சார் கமிட்டி ஒரு கண் துடைப்பு. முஸ்லீம்களின் பிற்போக்கான கோட்பாடுகள் குறித்து ஒன்றும் சொல்லாது. பொதுப்பணத்தில் அவர்களுக்கு வாரி வழங்கச் சொல்லும். அதையே நீங்களும் சொல்வீர்கள். பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசு உதவ வேண்டும், சாதி, மத பாகுபாடின்றி. ஆனால் மார்க்சிச்ட்கள் சாதி,மத அடிப்படையில்தான் அரசு சலுகை தர வேண்டும், இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்துக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். கோடிஸ்வர முஸ்லீம்களுக்கு இன்னும் அதிகம் கடன் கொடு என்கிறார்கள்.இதை வெட்கம் கெட்டு நியாயப்படுத்துகிறார்கள். இந்துக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று இந்து விரோத , மைனாரிட்டி எடுபிடிகளாஅன இடதுகளை, காங்கிரசை குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். 2009ல் எறிவார்கள்.