"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு" என்பது தமிழ் சொல்வழக்கு. அதுபோல ஆளும் திமுக அரசு எதைத் தின்றாவது பித்தம் தெளிய வேண்டும் என்பது போல், எதைச் செய்தாவது தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தில்லு முல்லுகளை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் மூன்று முன்னர் மாநகர பேருந்துகளின் கட்டம் குறைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறய திமுக மீது அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக உள்ளங்களும் கடுமையாக கண்டித்தன. தமிழக தேர்தல் கமிஷனும் இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்று தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இது குறித்து புகார் செய்தது.
மறுபுறத்தில் இது குறித்து கருணாநிதியும், கே.என். நேருவும் ஆளுக்கு ஆள் மாறி, மாறி "நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை" என்று லாலி பாடியதோடு 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த நடைமுறையைத்தான் கடைப்பிடிக்கிறோம் என்று அபாண்டமான பொய்யை சுமத்தினார்கள்.
மறுபுறத்தில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் இது குறித்து வலுவான கண்டனத்தை தெரிவித்ததோடு, இவ்வளவு நாள் ஏற்றிய கட்டணங்களை திமுகவினர் கொள்ளையடிப்பதற்கும், பொய் கணக்கு எழுதி அந்தப் பணத்தை சுருட்டிக் கொள்வதற்கும் செய்யப்பட்ட சதி வேலை என்பதை அம்பலப்படுத்தினார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் மே தினக் கூட்டத்தில் சென்னையில் உரையாற்றியபோது, சென்னை மாநகரத்தில் மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு நாளைய வருமானம் 1.75 கோடி என்றும், தற்போது கட்டணம் குறைக்கப்பட்ட பின்னர் அது 1.25 கோடி மட்டுமே வருமானமாக உள்ளது என்று கூறியதோடு சென்னை மாநகரத்தில் மட்டும் நாள்ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்படுவதாக அம்பலப்படுத்தினார்.
இதன் மீது மத்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளரை அழைத்து விசாரித்தது. தற்போது இன்று காலை முதல் திடீரென்று ஏற்கனவே இருந்த அதே நிலைக்கு பேருந்து கட்டணங்கள் உயர்ந்து விட்டது. டீலக்ஸ் பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்றும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய் என்றும், எம். சர்வீசில் குறைந்தபட்ச கட்டணம் 2.50 ரூபாய் என்றும் மாறிவிட்டது. நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை என்று வசனம் பேசியவர்கள் தற்போது முகத்தில் கரியை பூசிக் கொண்டுள்ளனர். இது யாரை ஏமாற்றுவதற்காக இந்த நடவடிக்கை. அதுவும் போக்குவரத்து மந்திரி நேரு கூறும்போது, பேருந்துகளை தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அதிகப்படுத்தி பயன்படுத்தினோம் என்று வினோதமான விளக்கம் கூறினார். அது சரி தற்போது ஏன் அதைச் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் வெள்ளை கலர் போர்டு பேருந்துகளையாவது அதிகமாக இயக்கலாமே! ஏன் முடியவில்லை. கொள்ளைக்காரன் புத்தி கொள்ளையடிக்கத்தான் போகும் என்பதுபோல தமிழக அரசு மறைமுகாக பிக்பாக்கெட் அடிக்கத் துணிந்து விட்டது. மக்கள் உங்கள் முகத்தில் கரியை பூச காத்திருக்கிறார்கள்.
கால் முளைத்து, சிறகு முளைத்து பறக்கும் பேருந்து கட்டணம் தமிழக அரசின் சாதனைகளிலேயே தலயாய சாதனைதான்! யாருமே ஏற்றாமலேயே தானாக ஏறிக் கொள்ளும் அதிசயம் தமிழகத்தில் மட்டும்தான் - அதுவும் கருணாநிதி ஆட்சியில் மட்டும்தான் நடக்கக்கூடியது.

9 comments:
mUik
mUik
ஆமா நண்பரே !!
இது குறித்து கேள்வி எழுப்பினால் நாம் எதிர் கட்சி காரர்கள் ஆவோம் !!! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!!
மிகச்சரியாகக் குறிபிட்டுள்ளீர்கள்." ஆளும் திமுக அரசு எதைத் தின்றாவது பித்தம் தெளிய வேண்டும்" என்று கருணாநிதி கும்பல் அலைந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் அறிவித்தவுடன் ஜரூராக களத்தில் இறங்கி வெற்றிக் கூட்டணி தமது கூட்டணிதான் என்று மாயத் தோற்றத்தை காட்டினார். மக்கள் ஏமாறவில்லை. மு.க. பின்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்று வேலை நிறுத்தம் அறிவித்து அரசு எந்திரத்தை தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தினார். ( இப்பொழுது பயன்படும் ராஜிய ரீதியான முயற்சிகள் ஒரு மாதத்திற்கு முன் பயன் படவில்லை). முயற்சி தோல்வி. பின்னர் உண்டுவிட்டு வந்து உண்ணாவிரதம் இருந்தார். முயற்சி மீண்டும் தோல்வி. பஸ் கட்டணத்தை குறைத்து தமிழ் மக்கள் மீது தனது திடீர் பாசத்தை வெளிப்படுத்தினார். தேர்தல் கமிசனிடம் மாட்டிக்கொண்டார். இப்படி ஒவ்வொரு முயற்சியிலும் இரண்டு சதம் வாக்குகளை இழந்து மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார் மு.க.மதுரையில் கடைசி ஆயுதம் பணத்தையும் எடுத்துள்ளார் மு.க.அழகிரி. என்னதான் இருந்தாலும் தி.மு.க.மக்களுக்கு இத்தனை டெஸ்ட்கள் வைக்கக் கூடாது.
நேருவின் விளக்கம் சிறிதும் ஏர்ப்பதர்க்கில்லை.
அம்பத்தூர் கள்ளிகுப்பம் முதல் வண்டலூர் வரை செல்வதற்கு ஒரே ஒரு பேருந்துதான் இயங்கி வருகிறது. அதுவும் விரைவு பேருந்துதான். அதிலே பயணிப்பதற்கு 15 ரூபாய் கட்டமாக இருந்தது. நேற்று முன்தினம் அதே தூரம் பயணிப்பதற்கு 7 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது.
பேருந்தில் ஏறியபோது நடத்துனர் சொல்கிறார், "ஏறு ஏறு சீக்கிரம் ஏறு. கம்மி காசுதான் ஏறு!".
ஒரு பயணி 10 ரூபாயை நீட்டினார். உடனே நடத்துனர், "அய்யா! ஏன் இவ்ளோ காசு குடுக்குறீங்க. அம்பத்தூர் போறதுக்கு வெறும் ரெண்டு ரூபாதான். எல்லாம் கொரஞ்சிபோச்சி."
பயணச்சீட்டை வாங்கிய பயணி முணுமுணுத்தார், '13 ஆம் தேதிக்குள் நிறையதடவை வண்டலூர் போயிட்டு வரணும். ஏன்னா கண்டிப்பா அதுக்கு அப்புறோம் திரும்ப டிக்கெட்டு வெலய ஏத்திருவானுங்க'.
அதற்குள் அடுத்த பேருந்து நிறுத்தம் வந்தது. நடத்துனர் மீண்டும் சொல்கிறார், "ஏறு ஏறு சீக்கிரம் ஏறு. கம்மி காசுதான் ஏறு!".
புரட்சி தலைவி அம்மா வாழ்க !
புரட்சி தலைவியின் ஆசி பெற்ற இந்திய கம்ம்யூனிச்ட் கட்சி வாழ்க !
புரட்சி தலைவியின் ஆசி பெற்ற இந்திய கம்ம்யூனிச்ட் கட்சி (மார்க்சிச்ட்) வாழ்க !
அம்மாவின் ஆசி பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் !
அம்மாவின் ஆசி பெற்ற சின்னம் கதிர் - அரிவாள் !
santhipu,
Good post.Will you stop writing blogs if CPM joins congress in govt formation without cancelling nuclear deal? ( chumma tamash)
Fact is CPM does not have any moral rights to criticize others.
அனானி நண்பரே,
வெறும் வாய்ச்சவடால் செய்வதை விட்டுவிட்டு,
நீங்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்?
உங்கள் இயக்கத்தின் கொள்கை என்ன?
நீங்களும் உங்கள் இயக்கமும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதற்கு ஏதேனும் உருப்படியாய் செய்திருக்கிறீர்களா?
என்று கொஞ்சம் சொல்லுங்களேன். இதுவரை செய்யவில்லை என்றாலும் ஏதேனும் மாற்றுத்திட்டம் நீங்கள் வைத்திருந்தால் அதனையாவது சொல்லுங்களேன்.
வணக்கம் அலசல் அண்ணாச்சி,எப்படி இருந்தாலும் காங்கிரஸோடு சேரப் போறீங்க அப்புறம் என்ன அலசல் வேண்டியிருக்கு. CPM காங்கிரஸோடு சேர்ந்தா நீங்க என்ன நாண்டுக்கவா போறீங்க, மானமிருந்தா ஜெயா கூட சேர்ந்தப்பவே அதைப் பண்ணீயிருப்பீங்களே.
பி.கு. நான் எந்த அரசியல் கட்சியையும் சேராதவன். ரொம்ப ரொம்ப சாதாரணமானவன். நான் இதுவரை இந்த சமூகத்துக்கு எதுவும் செய்ததில்லை அதனால எனக்கு சொத்து கூடக் கம்மியாதான் இருக்கு. உங்க கூட பேச இந்தத் தகுதி பத்தாதுனா சமூக சேவையில் ஏதாவது பட்டம் வாங்கியாருட்டுமா.
Post a Comment